Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

Featured Replies

இன்று, காஷ்மிர் கொதி நிலையில் உள்ளது. உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், காஷ்மிரியர்களுக்காகத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். காஷ்மிரில் நிகழ்த்தப்பட்டது, மிகப்பெரிய அநியாயம் என்பதை ஒடுக்கப்பட்ட, உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். 

உலகெங்கிலுமிருந்து காஷ்மிரியர்களுக்கு ஆதரவாகக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. ஆனால், உலகில் நீண்ட காலமாக, ஒடுக்கப்பட்ட ஓர் இனமான தமிழ் இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அமர்ந்திருக்கும் தலைமைகள், ஒரு புறமும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதாகச் சொல்வோர்; மறுபுறமுமாக, காஷ்மிர் தொடர்பில், வாய் பொத்தி மௌனம் காக்கிறார்கள்.   

இந்த மௌனம் சொல்லும் செய்தி கனமானது. இது, தங்கள் இந்திய எஜமானர்களுக்கு எதிராக, எந்தக் கணத்திலும் குரல் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை, இன்னொரு முறை ஆணித்தரமாக நிறுவுகிறது. 

இவர்களது அரசியல், மக்கள் நல அரசியலன்று; அதிகார ஆசைக்கான அரசியல் என்பது புலனாகிறது. 

தமிழ்த் தேசியத்தின் பெயரால், வாக்கு வங்கி அரசியலும் உணர்ச்சி அரசியலையும் முன்னெடுக்கும் பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடுதான் இந்த மௌனம்.   

உலகில் நீண்ட காலமாக, ஒடுக்கப்பட்டு வரும் சமூகங்களில் ஒன்றாக, தமிழ்ச் சமூகம், தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால், நமது ஆண்ட பரம்பரைக் கனவுகளில், நாம் ஆழ்ந்து இருக்கிறோம். 

பழைய புண்ணைச் சொறிந்து சொறிந்து, சுகம் காண்பது போல, பழைய கதைகளில் திழைத்துத் திழைத்து, காலத்தைக் கடத்துகிறோம்.   

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற வகையில், நமது நிலை என்ன? 

நம்மையொத்த நிலையில் உள்ள, உலகின் பிற மக்கள் யார்? 

நாம் யாருடன், நம்மை அடையாளப்படுத்துவது? இந்த மாதிரி, விடயங்களில் சரியான தளத்தை வந்தடைய, நமக்கு உலக நிலைமைகள் பற்றிய உண்மைகள், தெரிய வேண்டும்; நமது வரலாறு பற்றிய உண்மைகள், தெரிய வேண்டும். அவை, ஏன் சொல்லப்படுவதில்லை என்பதை, நாம் கவனமாக ஆராய வேண்டும்.   

1950களில், குறிப்பாக, 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் தோல்வியை அடுத்து, ஏற்பட்ட திகைப்பின் தொடர்ச்சியாக, நமக்கு முன்னுதாரணமான ஒரு நாடாக, இஸ்‌ரேல் காட்டப்பட்டது.

இஸ்‌ரேல் அரங்கேற்றி வந்த கொடுமைகள் பற்றிப் பேச, இஸ்‌ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்று நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ‘மீண்டும் ஒருமுறை ஆளுகிறார்கள்’ என்ற அந்தப் ‘பொதுமை’, தமக்குப் போதுமானதாகவே தலைவர்களுக்குத் தெரிந்தது. 

நமது நிலை, பலஸ்தீனத்தின் அராபியர்களது நிலை போன்றது என்பதையும் அந்த ஒற்றுமை, பல வகைகளிலும் பொருந்தி வருகிறது என்பதையும் நாம் உணரவில்லை. 

இன்றும் இஸ்‌ரேலிய உதாரணம் பற்றி மெச்சப்படுகிறது. இஸ்‌ரேல் எவ்வாறு பலஸ்தீனத்தில் குடியேற்றங்களை அமைத்ததோ, அதைப்போன்றே இன்று இலங்கையின் வடக்கு, கிழக்கில் நடக்கிறது. ஆனால் நமக்கு, இஸ்‌ரேல் உதாரணமாகக் காட்டப்படுகிறது.   

கொஞ்சக் காலம், பங்களாதேஷ் விடுதலையை வென்று தந்த இந்தியாவே, தமிழீழ விடுதலையை வென்று தரும் என்ற கனவு, ஊட்டி வளர்க்கப்பட்டது. இந்தியாவின் சேவகன் போன்று செயற்பட்ட முஜிபுர் ரஹ்மான், மக்களின் ஆதரவை இழந்து, இராணுவச் சதியில் உயிரிழந்த நாள் வரை, முஜிபுர் தமிழருக்கு முன்னுதாரணமாகக் காட்டப்பட்டு வந்தார். இவ்வாறு, தவறான உதாரணங்களே நமக்குக் காட்டப்பட்டு வந்துள்ளன.   

இன்று, ஒடுக்கப்படும் காஷ்மிரியர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகிறது. இதை நாம் செய்தாக வேண்டும். 

ஒடுக்கப்பட்ட சமூகமாகிய நாம், ஆதரவை வேண்டி நிற்கவேண்டியது, ஒடுக்கப்பட்ட சமூகங்களிடமே; ஒடுக்குமுறையாளர்களிடம் அல்ல.  

தமது சொந்த மக்களையே ஒடுக்கும், அதிகாரங்களைப் பறிக்கும், வன்முறையை ஏவும் ஒரு நாடு, இன்னொரு நாட்டில், அதே அவலங்களுக்கு உட்படும் ஒரு சமூகத்துக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பச் சொல்வது, அயோக்கியத்தனமானது. 

ஒடுக்கப்பட்ட சமூகமொன்றின் பிரதிநிதிகள், ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தவறுவது தற்செயலானதல்ல; அவர்களின் நடத்தை, அவர்களின் நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது.  

‘இந்தியாவை நம்பலாம்’ என்று சொல்லிய, சொல்லி வருகின்ற ஒவ்வொருவரும், காஷ்மிர் விடயத்தில், இந்தியாவின் நடத்தை பற்றி முதலில் வாய்திறக்கட்டும். 

விடுதலை என்பது, அறம் சார்ந்தது என்ற உண்மை, எமக்கு உறைக்கிற வரை, நாம் முன்செல்ல இயலாது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காஷ்மிர்-குறித்து-தமிழ்-தலைமைகளின்-மௌனம்/91-236761

  • Replies 156
  • Views 18.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கூரை  ஏறி.... கோழி பிடிக்க முடியாதவனை, 
வானம் ஏறி... வைகுண்டம் போவான் என்று எதிர்பார்க்கக் கூடாது. 

கூட்டமைப்பு.... உள்ளூர் அரசியலேயே,  உளறிக்  கொட்டிக் கொண்டு  நிற்கும் போது...
காஷ்மீர் பக்கம் போய்... அடி  வாங்கிக் குடுக்காதேங்கோ.....   :grin:

  • தொடங்கியவர்
14 hours ago, ampanai said:

இன்று, ஒடுக்கப்படும் காஷ்மிரியர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகிறது. இதை நாம் செய்தாக வேண்டும். 

ஈழத்தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் நிச்சயம் குரல் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஏன் குரல் கொடுக்க வேண்டும்?

எம் மீது மிகப் பெரும் இனவழிப்பு இடம் பெற்ற போது எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்காது காஷ்மீரிகள், காஷ்மீரத்து முஸ்லிம் தலைவர்கள் தம் எஜமானர்களின் மீதான (பாகிஸ்தானியர்கள் மீதான) விசுவாசத்தை காட்டிக் கொண்ட மாதிரி நாம் மெளனமாக இருப்பதில் தவறில்லை. இது பாலஸ்தீனர்களுக்கும் பொருந்தும்.

விடுதலை என்பது வெறுமனே அறம் சார்ந்தது மட்டுமல்ல, அரசியல் சார்ந்ததும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

இன்று, ஒடுக்கப்படும் காஷ்மிரியர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகிறது. இதை நாம் செய்தாக வேண்டும்.

காஷ்மீரிகள் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெளிவு படுத்தினால், ஆதரவை பற்றி கதைக்கலாம்.

காஷ்மீரிகள் ஒடுக்கப்படவில்லை. அங்கு ஹிந்தியை ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது உண்மை.

ஆட்சிக்கலையில் (statecraft) நான்கு அம்சங்களை, பாதுகாப்பு, வெளிநாட்டுக் அலுவல்கள் , நிதி, தொடர்பாடல் என்பதை தவிர, மிகுதி எல்லாமே காஷ்மீர் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

குடி வரவு குடியகல்வு கூட (உண்மையில் வெளிநாட்டுக்கு கொள்கையின் ஓர் பகுதி), கமீரிகளின் முடிவே இறுதியானது.

காஷ்மீரிகள் போராட்டம் தொடங்கியது, உரிமைகளை கேட்டு அல்ல, பாகிஸ்தானுடன் இணைவதற்கு, நடத்தப்படவேண்டிய சர்வசன வாக்கெடுப்பை வலியுறுத்தி. இப்பொது, தனி நாட்டில் வந்து நிக்கிறது.

அவர்களுடைய குடிப்பரம்பல், கலாசாரம், மதம், நிலம், வளம், மற்றும் எல்லாவற்றையும்  கிந்தியா விரும்பியோ விரும்பாமலோ பாதுகாத்தே வந்துள்ளது.

காஸ்மீரின் இயற்கை சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்படவே இல்லை.

இதுவா, ஈழத்தமிழரின் நிலை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

ஈழத்தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் நிச்சயம் குரல் கொடுக்கப்பட்டிருக்கும்.

இது தெரிந்துதான் இந்தியா அப்படி ஒரு தேசமே வரக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள்.

இந்த வீண் ஜம்பம் எல்லாம் நமக்கு தேவையா?

நமக்கும் கச்மீருக்கும் என்ன உறவு?

நாம் அழிந்த போது பாருக் அப்துல்லா மத்திய அமைச்சர் என்று நினைகிறேன்.

மூஞ்சூறு தான் போகவே வழியில்லையாம், தும்புக் கட்டையையும் தூக்கிச்சாம்.

57 minutes ago, Kadancha said:

காஷ்மீரிகள் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெளிவு படுத்தினால், ஆதரவை பற்றி கதைக்கலாம்.

காஷ்மீரிகள் ஒடுக்கப்படவில்லை. அங்கு ஹிந்தியை ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது உண்மை.

ஆட்சிக்கலையில் (statecraft) நான்கு அம்சங்களை, பாதுகாப்பு, வெளிநாட்டுக் அலுவல்கள் , நிதி, தொடர்பாடல் என்பதை தவிர, மிகுதி எல்லாமே காஷ்மீர் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

குடி வரவு குடியகல்வு கூட (உண்மையில் வெளிநாட்டுக்கு கொள்கையின் ஓர் பகுதி), கமீரிகளின் முடிவே இறுதியானது.

காஷ்மீரிகள் போராட்டம் தொடங்கியது, உரிமைகளை கேட்டு அல்ல, பாகிஸ்தானுடன் இணைவதற்கு, நடத்தப்படவேண்டிய சர்வசன வாக்கெடுப்பை வலியுறுத்தி. இப்பொது, தனி நாட்டில் வந்து நிக்கிறது.

அவர்களுடைய குடிப்பரம்பல், கலாசாரம், மதம், நிலம், வளம், மற்றும் எல்லாவற்றையும்  கிந்தியா விரும்பியோ விரும்பாமலோ பாதுகாத்தே வந்துள்ளது.

காஸ்மீரின் இயற்கை சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்படவே இல்லை.

இதுவா, ஈழத்தமிழரின் நிலை?

இதுவரை கஸ்மீரின் இனப்பரம்பலும் வளங்களும், தனித்துவமும் பேணப்படக் காரணமே 370 மற்றும் 35 சரத்துகள்தாம்.

இனித்தான் இருக்கு விளையாட்டே. பூரா ஹிந்திய மயாமாக்கி, கஸ்மீரில் கஸ்மீரிககளையே சிறுபான்மை ஆக்குவதே மோடியின் திட்டம்.

திட்ட மேல் ஆலோசனை : சாட்சாத் இஸ்ரேல்.

1 hour ago, Kadancha said:

காஷ்மீரிகள் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெளிவு படுத்தினால், ஆதரவை பற்றி கதைக்கலாம்.

காஷ்மீரிகள் ஒடுக்கப்படவில்லை. அங்கு ஹிந்தியை ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது உண்மை.

ஆட்சிக்கலையில் (statecraft) நான்கு அம்சங்களை, பாதுகாப்பு, வெளிநாட்டுக் அலுவல்கள் , நிதி, தொடர்பாடல் என்பதை தவிர, மிகுதி எல்லாமே காஷ்மீர் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

குடி வரவு குடியகல்வு கூட (உண்மையில் வெளிநாட்டுக்கு கொள்கையின் ஓர் பகுதி), கமீரிகளின் முடிவே இறுதியானது.

காஷ்மீரிகள் போராட்டம் தொடங்கியது, உரிமைகளை கேட்டு அல்ல, பாகிஸ்தானுடன் இணைவதற்கு, நடத்தப்படவேண்டிய சர்வசன வாக்கெடுப்பை வலியுறுத்தி. இப்பொது, தனி நாட்டில் வந்து நிக்கிறது.

அவர்களுடைய குடிப்பரம்பல், கலாசாரம், மதம், நிலம், வளம், மற்றும் எல்லாவற்றையும்  கிந்தியா விரும்பியோ விரும்பாமலோ பாதுகாத்தே வந்துள்ளது.

காஸ்மீரின் இயற்கை சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்படவே இல்லை.

இதுவா, ஈழத்தமிழரின் நிலை?

இது 2016 இல் வினவில் வந்தது. 

காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு

ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்ட் 15-இல் மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.

அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் மன்னராக இருந்தார். இவர் இந்து; மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இவர் இந்தியா, பாகிஸ்தான் எதனுடனும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார்கள்.

1947-க்கு முன்பிருந்தே காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து 1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி போராடி வந்தது. இதன் தலைவர்தான் ஷேக் அப்துல்லா.

ஆரம்பத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்தி செல்வாக்கு தேட முயன்ற தேசிய மாநாட்டுக் கட்சி, பின்னர் மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது. 1944-இல் “புதிய காஷ்மீர்” என்ற பெயரில் ஒரு கொள்கை அறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை; கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம்; ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” – போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

ஆரம்பத்திலிருந்தே ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயன்றார் முகமது அலி ஜின்னா. காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த ஜின்னா எண்ணினார். ஊசலாட்டத்தைக் காண்பித்தாலும் ஷேக் அப்துல்லா, ஜின்னாவின் வலையில் விழவில்லை. “எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என அறிவித்து ஷேக் அப்துல்லா மக்களைத் திரட்டினார். காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். 1947 ஆகஸ்டில், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்திருந்தார்.

1947 அக்டோபர் 22-இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் சிறீநகரையே வளைத்துக் கொண்டன பாகிஸ்தான் படைகள். ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்தான் பாக் படையை எதிர்த்து ஆங்காங்கே போராடினர்.

மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைத்தார். 1947 அக்டோபர் 26-இல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உடனே பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறீநகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.

காஷ்மீர் இந்தியாவுடன் இடைக்காலமாகத்தான் (தற்காலிகமாக) இணைக்கப்பட்டது. அதாவது, காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு -ஆகிய மூன்று விசயங்களை மட்டும் இந்தியா கவனித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. மற்றபடி இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை. தற்காலிகமாக காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிவிட்டது என்ற பாத்தியதையை அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அளிக்கவில்லை.

மவுண்ட் பேட்டனின் ஆலோசனையின் பேரில் ஒரு நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது, “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதே அது. ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல், பின்னாளில் ஜனசங்கத் தலைவராக மாறிய ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. (ஆதாரம்: “காஷ்மீர் – உண்மையில் நடந்தது என்ன?” என்ற நூலில் பக்கம் 12-24, ஆசிரியர்: அஜித் பிரசாத் ஜெயின், 1950-இன் ஆரம்ப ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர்.)

இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா.சாசனத்தின் 3-வது விதியைக் காட்டி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரு நாட்டுப் படைகளும் ஆக்கிரமித்திருந்த காஷ்மீரத்தின் பகுதிகள் அந்தந்த அரசின் – படைகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஐ.நா.சபையின் மேற்பார்வையில் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து “காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறுதான் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன.

அதன் பின்னர் நேரு முதல் இன்றைய மோடி வரையிலான எல்லா பிரதமர்களும், எல்லா அரசுகளும் காஷ்மீர் மக்களை முதுகிலும் நெஞ்சிலும் குத்தி வருகின்றனர் என்பதுதான் வரலாறு. 1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இன்று இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் நிரந்தரமாகவே நிலை கொண்டிருக்கிறது.

https://www.vinavu.com/2016/08/18/the-history-of-indian-betrayal-of-kashmir/

பி.கு: இப்பொழுது 370 பிரிவு, 35A பிரிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளும் இனி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திருத்தம், 1947 இல் உள்ளே புகுந்தது பாகிஸ்தான் ராணுவமல்ல, பாகிஸ்தானின் நோர்த் வெஸ்ட் புரொண்டியர் பகுதியில் வாழ்ந்த பதான் இன ஆயுதக் கும்பல். பாகிஸ்தான் அரசின், கீழ் நிலை ராணுவத்தினரின் மறைமுக ஆதரவுடன்.

முதலில் ராணுவத்தை நேரடியாக இறக்க ஜின்னா தயங்கினார், கூடவே அப்போதைய பாகிஸ்தானிய ராணுவத்தின் கட்டளை அதிகாரிகள் ஆங்கிலேயர்கள் - அவர்கள் இந்திய துணைக் கண்ட பாகப் பிரிவினை திட்டத்துக்கு மாறாக எதையும் செய்ய இணங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Lara said:

காஸ்மீரிகள் முதலில் ஆரம்பித்தது முஸ்லீம் என்ற (மத) அடையாளத்துடன். இது நிச்சயமாக, பாகிஸ்தானுடன் இணைவதை (அப்படி இல்ல விட்டாலும்) என்ற புரிதலே. ஏனெனினுள் ஹிந்தியா பன்முகத்தன்மை என்கிறது, பாக்கிதான் முஸ்லீம் என்கிறது.

அதாவது, ஓர் புவி சார்ந்த மக்கள் அடையாளத்தை வைத்து அல்ல.  ஓர் புவி சார்ந்த ஓர் பகுதி மக்கலின் மத  அடையாளத்தை வைத்து.

நீங்கள் தமிழீழம் எனப்துடன் ஒப்பிட்டு பாருங்கள். ஓர் புவி சார்ந்த மக்கள் அடையாளத்தை வைத்து, தமிழீழம் என்ற கோரிக்கை எழுந்தது.

370 ஐ  நீக்கியதி இப்பொது உள்ள பிரச்னை. இது எவ்வளவு நிறு பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

35 ஐ எடுத்தது லடாக்கும் எதிர்க்கிறது.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kadancha said:

1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இன்று இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் நிரந்தரமாகவே நிலை கொண்டிருக்கிறது.

இதை பிரபாகரன், ஏறத்தாழ நிரந்தரமாகவே தடுத்து விட்டார்.

சிங்களம் வேறு எதாவது படைகளை இலங்கைத் தீவில் இடம் கொடுக்காத வரைக்கும், கிந்தியா நேரடியாக படைகளை இறக்குவது மிகவும் கடினம். 

17 hours ago, goshan_che said:

திட்ட மேல் ஆலோசனை : சாட்சாத் இஸ்ரேல்.

ஆலோசனை மட்டுமல்ல, ஆயுதங்களையும் இஸ்ரேல் இந்தியாவுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இஸ்ரேலிடம் வாங்கிய கடுகளவிலான பெல்லட் ரவைகளை கொண்ட துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி பாதிக்கப்பட்ட, கண்பார்வையிழந்த பலர் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் பற்றி எமது நிலையென்பது, காஷ்மீர் போரட்டம்பற்றி பேசும்போது மட்டும் மாறிவிடுவது ஏனென்பது விசித்திரமாக இருக்கிறது. காஷ்மீர் மக்களின் அவலம் பற்றிப் பேசும்போது நாம்கூட சாதாரண இந்தியர்களின் மனநிலைக்கு வந்துவிடுவது விந்தையானது.

இதற்கான காரணம் என்ன?

ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படும்பொழுது காஷ்மீர்களும், அவர்களது அரசியல்த் தலைவர்களும் பேசாமலிருந்தார்கள் என்பதனால், அவர்களது போராட்டம் தவறென்றாகிவிடுமா? பாலஸ்த்தீன அரசியல்;வாதிகளும், பாலஸ்த்தீன மக்களும் எமது அவலங்கள் பற்றிப் பேசாமலிருந்ததினால் எமது போராட்டம் தவறென்றாகிவிடுமா? இல்லையே? 

ஈழமாகவிருந்தாலென்ன, பாலஸ்த்தீனப் போராட்டமாகவிருந்தாலென்ன, காஷ்மீர்ப் போராட்டமாக இருந்தாலென்ன, எல்லாமே அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் தான்.

ஈழத்தமிழர்கள் இலங்கையின் அடக்குமுறையாளர்களிடம் அகப்பட்டுப் படும் அதே அவலங்களைத்தான் காஷ்மீர்களும் இந்திய அடக்குமுறையாளர்களிடம் பட்டுவருகிறார்கள். பாலஸ்த்தீனத்திலும் இதே நிலைதான்.

காஷ்மீரை இந்தியா உள்ளங்கையில் வைத்துப் பாதுகாத்தது என்று இங்கே வந்து வாய்கூசாமல் இந்தியாவிற்குப் பல்லக்குத் தூக்கும் அன்பர்கள், 1989 இலிருந்து இன்றுவரை காஷ்மீர்ல் இந்திய ராணுவம் கொன்ற மக்களின் எண்ணிக்கை குறைந்தது ஒரு லட்சம் என்பதை அறிவீர்களா? 1987 இலிருந்து 1990 வரை இலங்கையின் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் ஆக்கிரமித்து நின்ற இந்திய ராணுவம் எமது பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட பாலியல் வன்கொடுமைகளின் அளவினைக் காட்டிலும் பன்மடங்கு கொடுமைகளை இந்திய ராணுவம் காஷ்மீரத்துப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது தெரியுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பல காஷ்மீரத்துப் பெண்களிடம் பேட்டி கண்டதில், பல பெண்கள் தமது குடும்பத்தில், கணவன், பிள்ளைகளை தம்முன்னே பலவந்தமாக நிறுத்திவைத்துத் தம்மைக் கற்பழித்ததாகக் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தேடுதல் வேட்டை என்று வரும் ராணுவம், வீட்டிலிருக்கும் ஆண்களை ஒன்றில் விரட்டி விட்டோ அல்லது கொன்றுவிட்டோதான் தம்மைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறியிருக்கிறார்கள். 

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லையென்பதும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு ராச்சியத்தின் மன்னர் பிரிவினையின்போது இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைவாகவே இந்தியாவுடன் காஷ்மீர் அன்று இணைக்கப்பட்டதென்றும் வாய்கிழியக் கத்தும் நாங்கள், இன்றுமட்டும் அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஏன்?

பாலியல் வன்கொடுமையினை யுத்தத்தில் ஒரு ஆயுதமாக இந்திய ராணுவம் பாவிப்பதை சாட்சியங்களினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பொன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. சாதாரண சிப்பாய்கள் முதல், உயர் அதிகாரிகள் வரை இந்திய அரசின் சட்டங்களைப் பாவித்து தமது குற்றங்களிலிருந்து தப்பிவருவதாகவும் அது கூறுகிறது. இன்று இலங்கையினை ஈழத்தமிழினம் மீதான கொடுமைகளுக்குக் குற்றம்சாட்டும் நாம், இந்தியா அதே கொடுமைகளை காஷ்மீரிகள் மீது கட்டவிழ்த்துவிடும்போது அது தவறில்லை என்று வாதிடுவது எப்படி? ஏன், நாம் இன்னமும்கூட இந்திய அபிமானிகளாக மனதளவில் இருப்பதாலா? இந்தியா இதுவரையில் எமக்குச் செய்த அனைத்து கொடுமைகளைக் கண்டபின்னருமா இந்தியாவை ஆதரிக்கத் தூண்டுகிறது?

வெறுமனே பாக்கிஸ்த்தான் காரன் உசுப்பேற்றிவிட்டதால்த்தான் காஷ்மீர் பிரச்சினை உருவாகியது என்னும் மிக முட்டாள்த்தனமான உங்களின் இந்திய அபிமான சராசரிக் கருத்துக்களை தூக்கியெறியுங்கள். அங்கே நடப்பது ஒரு திட்டமிட்ட இனக்கொலைதான் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது.

பாக்கிஸ்த்தான் காரன் உதவித்தான் காஷ்மீர் போராட்டம் நடக்கிறது, உண்மையாகவே அங்கு காஷ்மீரிகளுக்கு ஒரு பிரச்சினையுமில்லை என்று நீங்க்கள் நினைத்தால், 1980 களில் என்ன பிரச்சினை இருந்ததென்று இந்தியா வந்து உதவி புரிந்தது என்று சொல்கிறீர்கள்?  ஆக, இந்தியா வந்து நுழைந்ததால்த்தான் ஈழத்தில் பிரச்சினையே ஆரம்பமாகியது, இல்லாவிட்டால் தமிழர்க்கு ஒரு பிரச்சினையுமில்லை என்று சிங்களவன் சொல்வதை நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?

இன்றுவரை, தான் ஆறு லட்சம் ராணுவத்தை (உலகில் அதிக ராணுவ மயமாக்கப்பட்ட பிரதேசம் காஷ்மீர்) நிறுத்திவைத்து, காஷ்மீரத்து மக்களின் அன்றாட வாழ்வினுள் ராணுவத்தை ஒரு அங்கமாக்கி வைத்து முற்றான ஆக்கிரமிப்பினுள் வைத்திருக்கும் இந்தியா, அவர்களின் பிரச்சினை என்னவென்று அறிய சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை இன்றுவரை நடத்துவதை ஏன் நிராகரித்து வருகிறதென்றாவது யோசித்தீர்களா? காஷ்மீரிகளில் ஒரு பகுதியினர்தான் பாக்கிஸ்த்தானுடன் சேர்வதை விரும்புகிறார்கள் என்பதும், பெரும்பாலானவர்கள் இந்தியா, பாக்கிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் இருந்து தம்மை விலக்கி தனியாக வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்களா? 

காஷ்மீரிகள் முஸ்லீம்கள், ஆகவே இந்துக்களுக்கு எதிரானவர்கள், ஆகவே அவர்களை அழிப்பது சரிதான் என்று சொல்லும் நீங்கள், அதே இந்து இந்தியாதான் 2009 இல் எம்மில் ஒன்றரை லட்சம் பேரைக் கொல்லத் துணைபோனதென்பதை எப்படி மறந்தீர்கள்?

எனக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்று சொல்லும் இந்த மூடத்தனத்தை விட்டகலுங்கள். நீங்கள் ஆதரவு கொடுத்தாலென்ன கொடுக்காது விட்டாலென்ன, ஏற்றுக்கொண்டாலென்ன இல்லாவிட்டாலென்ன, காஷ்மீரில் இந்தியா செய்வது ஒரு திட்டமிட்ட இனவழிப்புத்தான். நாம் பட்ட அதே அவலங்களை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள், அது இன்னும் மோசமடையப் போகிறது.  உங்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் அவலங்களைக் கொச்சைப்படுத்தவேண்டாம்.

இந்தியாவில்க் கூட பலவிடங்களில் மனித நேயம் உள்ளவர்கள தமது அரசும் ராணுவமும் காஷ்மீரில் செய்துவருவதை வெளிப்படையாகக் கண்டிக்கிறார்கள். அவர்களுக்கில்லாத இந்திய தேசபக்தியும் விசுவாசமுமா உங்களிடம் இருக்கிறது?? 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/16/2019 at 3:22 AM, நிழலி said:

ஏன் குரல் கொடுக்க வேண்டும்?

எம் மீது மிகப் பெரும் இனவழிப்பு இடம் பெற்ற போது எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்காது காஷ்மீரிகள், காஷ்மீரத்து முஸ்லிம் தலைவர்கள் தம் எஜமானர்களின் மீதான (பாகிஸ்தானியர்கள் மீதான) விசுவாசத்தை காட்டிக் கொண்ட மாதிரி நாம் மெளனமாக இருப்பதில் தவறில்லை. இது பாலஸ்தீனர்களுக்கும் பொருந்தும்.

விடுதலை என்பது வெறுமனே அறம் சார்ந்தது மட்டுமல்ல, அரசியல் சார்ந்ததும் ஆகும்.

ஏன் நிழலி, காஷ்மீர்களைத்தவிர மற்ற எல்லாருமே எமக்கெதிரான போருக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்களா? அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பதனால் மட்டும் எமக்கு நடந்த அவலங்கள் பொய்யென்று ஆகிவிடுமா? ஒரு முற்போக்கான நீங்களா இப்படிப் பேசுவது?

  • கருத்துக்கள உறவுகள்

கூல் டவுன் ரஞ்சித்,

இங்கே யாரும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் இல்லை. கஸ்மீரிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தவும் இல்லை. இந்தியா காஸ்மீரை கொள்ளை அடிக்கிறது என்பதே ஈழத்தமிழர் பெரும்பாலானோரின் நிலைப்பாடு. எம்மை அழித்ததில் இந்தியாவே பிரதானம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நாங்கள் ஏற்கனவே இந்தியாவின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இனம்.

இனியும் எம்மக்களுக்கு ஒரு கொஞ்சமேனும் நன்மை நடப்பதாயின், அது இந்திய கயவர்கள் கண் அசைத்தால் மட்டுமே முடியும்.

இப்படி பட்ட நிலையில்,பாகிஸ்தானில் இருந்து எம்மை அழிக்க உதவி பெற்ற இலங்கையே லாவகமா “உள்நாட்டு விசயம்” என ஒதுங்க, எம்மை ஒழிக்க ஆயுதம் வளங்கிய பாகிஸ்தான் பக்கம் நின்று,  நம் தலைமைகள் வெளிப்படையாக இந்திய எதிர் நிலை எடுப்பதை போல ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கவியலாது.

Ethics based foreign policy எல்லாம் நெல்சன் மண்டேலா, அரபாத்தே நம் விடயத்தில் செய்யாத போது, நாம் மட்டும் ஊருக்கு நல்லவர்களாய் இருக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கோஷான், நீங்கள் சொல்வது சரி. காஷ்மீரிகளுக்குச் சார்பான நிலைப்பாட்டினை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் இன்று எடுப்பார்களானால், அது நிச்சயமாக இந்தியாவை ஆத்திரப்படவைக்கும். 

ஆனால், நாம் காஷ்மீர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால்க் கூட இந்தியா எமக்கு சாதகமான தீர்வொன்றினைத் தரும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆக, இந்தியா எனக்கொரு தீர்வைத் தரலாம் என்று நாங்களே நம்புகின்ற ஒரு கனவுநிலைக்கு வேண்டுமென்றால் எமது காஷ்மீர் ஆதரவு நிலைப்பாடு ஒரு பிரச்சனையாகலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 

இங்கே பிரச்சினையென்னவென்றால், காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாட்டினை நாம் ஆதரிப்பதென்பது, இலங்கையில் எமது நிலையினை இன்னும் பலவீனப்படுத்தும் என்பது நாம் பலரும் பார்க்கத் தவறும் ஒரு விடயம். காஷ்மீர் தனக்கான சலுகைகளை இழப்பதையும், பெயரளவிலிலேயே மட்டும் இருக்கும் சிறப்புரிமைகளையும் இழப்பதையும் நாம் ஆதரிப்பதென்பது, எமக்கு வரக்கூடிய (நாம் இன்றுவரை இந்தியா மூலமாகக் கிடைக்கலாம் என்று நம்பும்) ஒரு சில சலுகைகளையும் இல்லாமல் ஆக்கிவிடாதா?

காஷ்மீரிகளுக்குத் தரமறுக்கும் ஒரு உரிமையை, இந்தியா எமக்குத் தருவதற்கான சாத்தியம் என்ன? அப்படி இந்தியாவிற்கு இருக்கும் தேவை என்ன?

ஆனால், இந்த அரசியல் தளம்பற்றி நான் மேலே பேசவில்லை கோஷான். எனது ஆதங்கம் காஷ்மீரத்து மக்களின் போராட்டம் தொடர்பாகவும், அதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அவர்களின் அவலங்கள் தொடர்பாகவும் எமக்கிருக்கும் புரிதலையும், நிலைப்பாட்டையும்தான்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

இன ஒடுக்குதல் போரினால் பாதிக்கபட்ட ஒரு  இனத்தின் இராஜதந்திரத்தின் அடிப்படை 1. முதல் எதிரி யார்? 2. முதல் எதிரியின் அணியில் உள்ளவர்கள் யார்? என்கிற இரண்டு அடிப்படையில் இருந்தே எல்லாவற்றையும் சிந்தித்தலை வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை இனம் எவ்வளவு சிறியதாக  பலகீனாமக இருக்கிறதோ அதற்கேப அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெறும். நம்மைப் பொறுத்து அதன் அர்த்தம் பாகிஸ்தான் சீனா அணி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்பதாகும். நுணி மரத்தில் இருந்துகொண்டு அடி மரத்தை வெட்டாதே என்பது அடிப்படை இராஜதந்திர பாடமாகும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, poet said:

நீங்கள் ஏன் இதை இங்கே சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. சீனாவையும் பாக்கிஸ்த்தானையும் நாம் ஆதரிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்து எமது வாழ்வை மீட்டெடுப்பதற்கு வேறு தெரிவுகள் இருந்தால் அவை பற்றிச் சிந்திப்பதிலும் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆனால், இந்த ராஜதந்திர இடியப்பச் சிக்கல்களுக்கப்பால், காஷ்மீரிகளின் உண்மையான அவலங்கள் அடிபட்டுப் போகின்றன என்பதுதான் எனது கருத்து.

இந்தியா மீதான எமது அபிமானமும், விசுவாசமும், நம்பிக்கைகளும் இதுவரையில் எமக்கு எதைக் கொணர்ந்தன என்று பார்த்தால் நாம் ஏறியிருக்கும் மரமே தவறென்று எனக்குப் புரியும். அதுமட்டுமல்லாமல், அது எனக்காக கழுமரம் என்பதும் துலங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ஞ்சித் அண்ணா , உங்க‌ளின் அனைத்து ப‌திவுக‌ளும் அருமை 👏, நிழ‌லி அண்ணா சொல்லுவ‌தும்  ச‌ரி தான் 👏

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நியாயம்  தர்மம்

தோழன் பகைவன்  என்றெல்லாம்   பார்க்கக்கூடாது ராசாக்கள்

இப்ப  காஷ்மீரிகளுக்கு  எப்படி  எண்ணெய்  ஊத்தி  எரிய  விடப்போறம்

இதன்  மூலம்   இந்தியை  எப்படி  துண்டாக்கலாம்

பலவீனப்படுத்தலாம்

அதை   மட்டும்  சிந்தியுங்கள்

ஆனால்   இது இந்திக்கு  தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்

20 hours ago, ரஞ்சித் said:

ஏன் நிழலி, காஷ்மீர்களைத்தவிர மற்ற எல்லாருமே எமக்கெதிரான போருக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்களா? அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பதனால் மட்டும் எமக்கு நடந்த அவலங்கள் பொய்யென்று ஆகிவிடுமா? ஒரு முற்போக்கான நீங்களா இப்படிப் பேசுவது?

தனிப்பட்ட ரீதியில் நானோ நீங்களோ அல்லது குப்பனோ சுப்பனோ காஷ்மீரிகளுக்காக அனுதாபம் கொள்வது வேறு, அரசியல் ரீதியில் காஷ்மீரிகளுக்கு ஆதரவு வழங்குவது வேறு.

அரசியல் என்று வரும் போது வெறுமனே அறத்தில் வழி நின்று மட்டுமே முடிவுகளை எடுக்க முடியாது, இலாப நட்டம் பார்த்து எதில் அதிக அனுகூலம் இருக்கின்றதோ அதை ஒட்டித்தான் முடிவுகளை எடுத்தல் வேண்டும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அதற்கெதிராக போராடும் பாலஸ்தீனமும் , அமெரிக்காவின் அருகில் இருந்து கொண்டு அதன் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய கியூபாவும், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்த வியட்னாமும், காஷ்மீர விடுதலை அமைப்புகளும் இந்த லாப நட்டக் கணக்குகளால் தான் எம்  போராட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் அழித்தொழிக்கப்படும் போது அமைதி காத்தன.

அமெரிக்காவும், சீனாவும், இஸ்லாமிய அரசுகளும், ஏனைய நாட்டும் முஸ்லிம்களும் காஷ்மீர் விடயத்தில் ஒன்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்கவும் என்று ஆலோசனைய் கூறுகின்றனர் அல்லது அமைதியாக இருக்கின்றனர். நிலமை அப்படி இருக்க சுண்டங்காயின் விதை சைசில் இருக்கும் நாங்கள் முந்திக் கொண்டு ஆதரவு கொடுப்பதால் நன்மைக்கு பதிலாக தீமை தான் கிடைக்கும்.

காஷ்மீரிகளுக்காக எம் தமிழ் தலைமைகள் ஆதரித்தால் அதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. அவ்வளவு ஏன் காஷ்மீரிகளே அதை கணக்கெடுக்கப் போவதில்லை. அப்படி இருக்க எதற்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுக்க வேண்டும் என்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

எனது ஆதங்கம் குரல் கொடுக்க வேண்டும் என்பதில்லை நிழலி,

நாங்களும் சாதாரண இந்தியத் தேசியவாதிகள் போல காஷ்மீரத்து மக்களின் விடுதலைப் போராட்டத்தை முஸ்லீம் தீவிரவாதம் என்று சொல்லிவிட்டுப் போவதுதான். காஷ்மீரிகளின் அவலங்களை வெறுமனே பாக்கிஸ்த்தானின் தூண்டுதலால் ஏவிவிடப்பட்ட ட் தீவிரவாதிகளின் செயல்ப்பாடென்றும், காஷ்மீர்களுக்குப் பிரச்சினையென்றும், ஈழத்தமிழரின் பிரச்சினையையும், காஷ்மீரிகளின் பிரச்சினையையும் ஒன்றாகப் பார்க்க முடியாதென்றும் பேசுவதுதான்.

ஒரு முற்றான இனக்கொலையை அனுபவித்த நாமே இன்னொரு இனக்குழுமம் அதை இன்று எதிர்நோக்கும்பொழுது வெறுமனே அதைக் கொச்சைப்படுத்துவது சரியல்ல. 

எவருக்கு எவர் ஆதரவு கொடுத்தார் என்கிற கேள்விகளுக்கு அப்பால், இன்று காஷ்மீரில் நடப்பதுதான் 2009 வரை ஈழத்தில் நடந்தது என்கிற உண்மை எம்மில் பலருக்குத் தெரியாது.

இந்தியாவுக்கு எதிராக, காஷ்மீரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் என்னாகும் என்று தெரியாது. ஆனால், இந்தியாவினால் எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு இன்னும் தந்தை நாடு, தாய்நாடு, நேச நாடென்று சொல்லித்திரியும் எமக்கு என்ன கிடைத்ததென்று பார்த்தால் எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் '09 மட்டும்தான் !

மற்றும்படி, நீங்கள் சொல்லியவாறு சுண்டைக்காய் இனமான எம்மில் இருக்கும் நிழலியோ, ரஞ்சித்தோ, சுப்பனோ குப்பனோ சொல்வதால் மட்டும் எதுவுமே மாறிவிடப்போவதில்லையென்பது உண்மைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

இங்கே நியாயம்  தர்மம்

தோழன் பகைவன்  என்றெல்லாம்   பார்க்கக்கூடாது ராசாக்கள்

இப்ப  காஷ்மீரிகளுக்கு  எப்படி  எண்ணெய்  ஊத்தி  எரிய  விடப்போறம்

இதன்  மூலம்   இந்தியை  எப்படி  துண்டாக்கலாம்

பலவீனப்படுத்தலாம்

அதை   மட்டும்  சிந்தியுங்கள்

ஆனால்   இது இந்திக்கு  தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்

அண்ணோய், நல்லாத்தான் யோசிக்கிறியள் !

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

எவருக்கு எவர் ஆதரவு கொடுத்தார் என்கிற கேள்விகளுக்கு அப்பால், இன்று காஷ்மீரில் நடப்பதுதான் 2009 வரை ஈழத்தில் நடந்தது என்கிற உண்மை எம்மில் பலருக்குத் தெரியாது.

இந்தியாவுக்கு எதிராக, காஷ்மீரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் என்னாகும் என்று தெரியாது. ஆனால், இந்தியாவினால் எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு இன்னும் தந்தை நாடு, தாய்நாடு, நேச நாடென்று சொல்லித்திரியும் எமக்கு என்ன கிடைத்ததென்று பார்த்தால் எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் '09 மட்டும்தான் !

மற்றும்படி, நீங்கள் சொல்லியவாறு சுண்டைக்காய் இனமான எம்மில் இருக்கும் நிழலியோ, ரஞ்சித்தோ, சுப்பனோ குப்பனோ சொல்வதால் மட்டும் எதுவுமே மாறிவிடப்போவதில்லையென்பது உண்மைதான். 

ஆயுதப்போராட்டம்  மூலம்  ஈழம் வெற்றியடைந்தால்????  என்ற   இந்தியர்களின்  கேள்விக்கான  விடையே  முள்ளிவாய்க்கால்

நாம்  அதை  மறக்கலாகாது.

தலைவர்  தனது ஒவ்வொரு  உரையிலும் இந்தியாவுக்கு நட்புக்கரம்  நீட்டிப்பேசியது 

அவர்களின்  இந்த முடிவு  தெரிந்ததால்  தான்.

இதில்  வரலாற்றுப்படி

சுதந்திரத்துக்காக  போராடி அதன்   தார்ப்பரியத்தை உணர்ந்த

அதனை  எட்டிய  தேசங்கள்  கூட

மேலே  நிழலி  குறிப்பிட்டது  போன்று

இன்றைய  கூட்டுப்பொருளாதாரம்  சார்ந்து  சுயநலமாகி  எம்மை  கைவிட்டமை  நாம்  எம் கண்முன்னே அனுபவித்தவை.

இனி  தர்மம் பாவம் அனுதாபம்  அனைத்தையும் களட்டி  வைத்துவிட்டு

நரி  மூளைக்கு முதலிடம் கொடுத்தலே உலக வெற்றிகள்  தரும்  பாடம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே நியாயம்  தர்மம்

தோழன் பகைவன்  என்றெல்லாம்   பார்க்கக்கூடாது ராசாக்கள்

இப்ப  காஷ்மீரிகளுக்கு  எப்படி  எண்ணெய்  ஊத்தி  எரிய  விடப்போறம்

இதன்  மூலம்   இந்தியை  எப்படி  துண்டாக்கலாம்

பலவீனப்படுத்தலாம்

அதை   மட்டும்  சிந்தியுங்கள்

ஆனால்   இது இந்திக்கு  தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்

இந்தியா சுத‌ந்திர‌ தின‌த்தை இப்ப‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் பெரிசா கொண்டாடுவ‌து இல்லை /

இர‌ண்டு தேசிய‌ க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் தான் , சுத‌ந்திர‌ தின‌த்தை த‌மிழ் நாட்டில் கொண்டாடின‌ம் , திராவிட‌ம் ம‌ற்றும் த‌மிழ் தேசிய‌ம் இவ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் வில‌கி நிப்ப‌து வெளிப்ப‌டையாய் தெரியுது /

எப்ப‌டியோ உந்த‌ நாடு நாச‌மாய் போய் இந்த‌ உல‌க‌ வ‌ர‌ ப‌ட‌த்தில் இருந்து இந்தியா என்ர‌ நாடு காணாம‌ல் போக‌னும் /

த‌மிழ் நாட்டில் க‌ஸ்மீர் ம‌க்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு குர‌ல் தான் பெருகுது , 

வைக்கோ சொன்ன‌ மாதிரி நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடு இருக்காது என்று  , 
அது ந‌ட‌ந்தா முத‌ல் ச‌ந்தோச‌ ப‌டுவ‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தான் 😁 /

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

அது  என்   கனவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.