Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கும் இந்த நிலை வரலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

EMOTIONAL: "முதியோர் இல்லம் தான் BEST!" Life Story of Mothers in Old Age Home.

இவையும் பள்ளிகளும் தான் கோயில்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை படிபடி என்று எவ்வளவோ கஸ்டப்பட்டு படிக்க வைத்து உத்தியோகம் பார்க்கும் போது பெற்றோர்களுடன் நேரம் போட முடியாது கூடவே இருந்து பார்க்க முடியாமல் போன பிள்ளைகளும் என்ன தான் செய்யலாம்.

எனக்கும் இந்த நிலை வரலாம்.திடீர்ரென்று கண் மூடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
எந்த வயதுக்காரராக இருந்தாலும் தனது வயதுக்காரருடன் கதைத்து சிரித்து பொழுதை களிப்பதும் ஒரு சுகமே.

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை என்பது ஒரு சுமைதான், அது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. இளமையில் அதை மறந்து விடுகின்றோம் அல்லது நினைக்க பயப்படுகின்றோம் அதுதான் நிஜம்.......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை அடைகிறோம் என உணரும்போதே எதிர்காலம் பற்றிய அங்கலாய்ப்பு  மனதிற்குள் ஆரம்பித்துவிடும். உண்மையில் இந்த முதுமை என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியானதுதான். பொதுவாக ஆண்களுக்கு அநேகமாக துணைவி இருந்து பராமரித்து அவர்கள் கடைசிக்காலம்வரை குழந்தைமாதிரி பாதுகாத்துவிடுவார். பெண்கள்தான் மிகவும் பாவப்பட்டவர்கள் உடல் இயக்கம் உறுதியாக இருக்கும்வரை குடும்பத்திற்காக உழைத்து களைத்தவர்களை அவர்களின் இறுதிகாலத்தில் குழந்தைபோல் கவனிக்க யாருமே இருப்பதில்லை. பிள்ளைகள் வெறுக்கிறார்கள் என்பதல்ல இன்றைய இயந்திரத்தனமான பொருளாதாரத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் சுமையாகும் முதியவர்களை கவனிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இயலாமை, கவனிக்க நேரமில்லாமை ஒருங்கே சேர இயல்பாக கோபத்தை வெறுப்பாக்கி முதியவர்கள் நோக்கி வெளிப்படுத்திவிடுவது சூழலாக இருக்கிறது. அண்மையில் எனக்கு வேண்டப்பட்ட ஒருவர் ஒரு முதியோர் இல்லம் அமைப்பது தொடர்பாக என்னிடம் பேசியபோது தனிய ஆண்களுக்கு மட்டும் தான் அத்தகைய இல்லம் அமைக்க இருப்பதாக தெரிவித்தபோது அவருடைய மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனையை விரிவாக்க பரிந்துரைத்தேன். பெண்கள் தொடர்பான நியாயமான புரிதல்களை அவருக்கு எடுத்துரைத்து பெண்களுக்கும் சேர்த்து அமைக்க கேட்டுக்கொண்டேன். பெண்கள் தொடர்பான இல்லத்திற்கு என்னை வந்து பொறுப்பெடுத்துச் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். காலம் கைகொடுக்கும்போது நிச்சயமாக அப்பொறுப்பை ஏற்று செயற்பட எண்ணியுள்ளேன். எதிர்காலத்தில் இன்றைய "யுத்"களாக தங்களைக் காட்டி தில்லாக உலாவும் யாழ் உறவுகளும் அவ்வில்லத்தில் சேரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதுமை
மனைவி இருக்கும் போதே நான் போய் சேர்ந்திட வேண்டும் என்ற பேராசை எனக்கிருந்தாலும்..
நான் இல்லாத நேரம் என் மனைவி கஷ்ரப்பட்டு விடுவாரோ என்ற பயமும் அச்சமும் தலையில் பாரமாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாயை சாலையில் வீசிச் சென்ற கொடூர மகன்கள்..!

mom.png

ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை கொடூர மனம் படைத்த மகன்கள் சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கம்பர் தெருவை சேர்ந்தவர்  பட்டம்மாள். 95 வயதான இந்த மூதாட்டியின் கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு ஸ்வீட் கடை நடத்தி வரும் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியரான சதாசிவம் என இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தனித் தனியே வசித்து வரும் மகன்கள் இருவரும் சரியாக கவனிக்காததால் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்துள்ளார். அங்கிருந்து மகன்களைப் பார்ப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு வந்த மூதாட்டி பட்டம்மாளை மகன்கள் இருவரும் துரத்தியுள்ளனர். இதன்பின் மகள் சகுந்தலாவின் வீட்டிற்கு மூதாட்டி பட்டம்மாள் சென்றுள்ளார்.

தாயை சில நாட்கள் வைத்திருந்த மகள் சகுந்தலா மீண்டும் சகோதரர் சண்முகத்தின் வீட்டுத் திண்ணையில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்துள்ளார். ஆத்திரமடைந்த சண்முகம் மற்றொரு மகனான சதாசிவம் வீட்டு வாசலில் மூதாட்டி பட்டம்மாளை போட்டுவிட்டு வந்துள்ளார். இதையடுத்து சதாசிவம் தாய் பட்டம்மாளை சாலையில் வீசிச் சென்று விட அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இரு மகன்கள் மீதும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/3/10/2019/sons-left-mother-road?fbclid=IwAR1lbBjHNH8y6fP3o2JGwSACGXgJfbxR_zS6Tr41xailNsTUONhKbdhfXm4

  • கருத்துக்கள உறவுகள்

Image result for ரோபோ

இது நான் தான் என்று சொன்னால் குமார சாமி அண்ண நம்பவா போறார் 

முதுமை என்பது தவிர்க்க முடியாதது மரணம் என்பதை எப்படி மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ அதைப்போலவே முதுமையும் எம்மை ஆட்கொள்ளும் போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ஆடி அடங்கும் வாழ்க்கையும் ஆடிடவும் வேண்டும் அடங்கிடவும் வேண்டும் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

பிள்ளைகள் பெற்றோரை வயதான காலத்தில் தன் வீட்டில் வைத்து பராமரித்துப் பாரக்கவேணும் என்பதை உணர்ச்சிவசமாக அணுகுவது  எம்மில் பலரிடம் காண முடியும்.. நடமுறையில் அது சாத்தியம் இல்லாத போது அது அறம் தவறிய செயலாகாது. நாம் எப்படி குழநதைகளை அதற்கான பராமரிப்பு இடங்களில் கொண்டுபோய் விட்டு வேலைக்கு சென்று மாலையில் வீடு கூட்டி வருகின்றோமோ அதே போல் முதியவர்களை அவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் வைத்து பராமரிப்பதே ஆரோக்கியமானது. குழந்தையானாலும் சரி முதியவரானாலும் சரி என்னுமொருவரை சார்ந்து இருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள சந்தரப்பம் அமையவேண்டும். இந்த இயந்திர உலகில் வேலை வீடு என்று தன்னையே பராமரிக்க முடியாத நிலையில் பலரும் அதை நோக்கி மீதமுள்ளோரும் ஓடுகின்றோம். இதில் எப்படி தன்னை சார்ந்திருபவர்களை பராமரிப்பது என்ற பிரச்சனை உள்ளது. இவை திட்டமிட்டு அறிவு பூர்வமாக அணுகப்படவேண்டும். தரமான முதியோர் இல்லங்களை உருவாக்குவதும் அதற்கான செலவை முன்கூட்டியே சேமிப்பதும். அடிக்கடி போய் வரக் கூடிய தூரத்தில் அமைப்பதும் என இக் கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு நகர்வதே ஆரோக்கியமானது. எமக்கு வயதாகும் போது நாமாகவே பிள்ளைகளை சார்திருக்காமல் நகர்ந்துவிடவேண்டும். அதை எமது பிள்ளைகளும் தெடரவேண்டும்.  இவை எல்லாம் தவறு அறம் கிடையாது. முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடுறவன் எல்லாம் பிள்ளையா என்று உணர்சிவசப்பட்டு கத்திக்கொண்டிருந்தால் அநாதரவாய்  முதேயோர்கள் தெருவில் கிடப்பார்கள் பலர் வாய்கரிசி போட்டுதல் என்ற பெயரில் கொல்லப்படுவார்கள். என்னும் பல வளிகளில் கொல்லப்படுவார்கள். நடமுறைக்கு சாததியமற்ற இடங்களில் கலாச்சாரம் பண்பாடு கௌரவம் அறம் என உணர்சிவசமாக திணிக்கப்படும் விசயங்களுக்கு எதிர்வினை மிக கேவலமாக இருக்கும். 

1 hour ago, சண்டமாருதன் said:

ஜதார்தத பூர்வமான சிந்திக்க வேண்டிய சிறந்த கருத்து. உண்மையில் நடைமுறைச்சாத்தியமற்றது என்று தெரிந்தும் உணர்ச்சி பூர்வமாக பேசுவதே எமது வழமை. 

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் முதியோர்இல்லங்களில் பெற்றோரைக் கொண்டுசென்றது விடுவது அதிகரிக்கத்தான் போகிறது. அதை முற்றுமுழுதாகத் தவறென்று கூற முடியாது. ஆனாலும் நாமும் எம் மனதை இப்போதே தயார்படுத்துவதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். வயதுபோன காலத்தில் கண்ட இடங்களிலும் போய் இருக்காது நாமே கொஞ்சப்பேர் சேர்ந்து எமக்கான இடத்தைத் தயார்படுத்தி மகிழ்வாக்க் கழிக்கலாமே என்னும் ஆதங்கத்தில் எழும் சிந்தனை தொடர்பாக பிள்ளைகளுடன் கதைக்கும்போது நாங்கள் உங்களை அங்கெல்லாம் விடமாட்டோம் என்று அவர்கள் ஆணித்தரமாக்க் கூறினாலும் எம் சமூகத்து முதியோருக்கு ஏற்றதுபோல் எதாவது செய்யவேண்டும் என்ற ஆசை எனக்குள் விழுதுவிட்டபடிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிக்கலான விடயம். எதையும் எதிர்கொள்ள, அதிலும் உள்ள இன்பங்களை துய்க்க பழகிகொள்ள வேண்டியதுதான்.

நான் இப்பவே ஓல்டேஜ் கோமுக்கு போக ரெடி 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.