Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

நான் ஏன் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்பதன் அடுத்த காரணத்தை முன்வைக்கவே "இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும்" என்று தொடங்கினேன். 

நீங்கள் ஏன் இந்து மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று நான் கேட்கவேயில்லை.

இங்கு பேசுபொருள் -  இந்து மதத்தின் தொன்மைபற்றி.

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
3 minutes ago, மாங்குயில் said:

***கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு மதம் பற்றிய ஆதாரங்களை முழுமையாகக் கண்டறிந்தாலே ஒழிய இந்து மதம் தொடங்கப்பட்ட காலப்பகுதியை நிர்ணயிக்கலாம்***

இதுவும் உங்கள் கூற்று.

கிறிஸ்தவத்திற்கு முன்னுள்ள மதம் புத்த மதம் என்றேன். 

ஆக, இந்து மதத்தின் தொடக்கத்தை இப்போது நிர்ணயிக்கலாம்தானே!

பதில் மேலே தரப்பட்டுள்ளது மாங்குயில்.

3 minutes ago, மல்லிகை வாசம் said:

கண்டிப்பாக பௌத்தமும் கிறிஸ்துவுக்கு முற்பட்டது. புத்தர் வாழ்ந்த காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டளவாகும். ஆனால் புத்தரும் பிறப்பால் ஓர் இந்துவே. எனவே இந்து மதம் பௌத்த்துக்கும் பழமையானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

கண்டிப்பாக பௌத்தமும் கிறிஸ்துவுக்கு முற்பட்டது. புத்தர் வாழ்ந்த காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டளவாகும். ஆனால் புத்தரும் பிறப்பால் ஓர் இந்துவே. எனவே இந்து மதம் பௌத்த்துக்கும் பழமையானது.

Zorastrianism  என்ற மதம், புத்த மதத்திற்கும் முந்திய மதம்.

இப்போது நிர்ணயுங்கள் -  இந்து மதத்தின் தொன்மை, தொடக்கம் பற்றி.

2 minutes ago, மாங்குயில் said:

நீங்கள் ஏன் இந்து மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று நான் கேட்கவேயில்லை.

இங்கு பேசுபொருள் -  இந்து மதத்தின் தொன்மைபற்றி.

எனக்கு எது முக்கியம் என்று குறிப்பிட எழுதினேன். தொன்மை என்பதிலும், இந்து மதம் எனக்கு இன்று எவ்வளவு தூரம் வழிகாட்டியாக இருக்கிறது எனக் குறிப்பிட எழுதினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

எனக்கு எது முக்கியம் என்று குறிப்பிட எழுதினேன். தொன்மை என்பதிலும், இந்து மதம் எனக்கு இன்று எவ்வளவு தூரம் வழிகாட்டியாக இருக்கிறது எனக் குறிப்பிட எழுதினேன்.

நான் இவ்வளவு நேரமும், இந்து மதத்தின் தொன்மை பற்றித்தான் அளவளாவினேன். 

இந்து மதத்தின் பயன், வழிகாட்டிகளைப்பற்றி பேசவில்லை.

57 minutes ago, மல்லிகை வாசம் said:

தொன்மையானது என்பது வேறு; ஆதியில்லை என்பது வேறு. எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் உண்டு.

Zorastrianism  என்ற மதம், புத்த மதத்திற்கும் முந்திய மதம்.

இப்போது நிர்ணயுங்கள் -  இந்து மதத்தின் தொன்மை, தொடக்கம் பற்றி.

4 minutes ago, மாங்குயில் said:

Zorastrianism  என்ற மதம், புத்த மதத்திற்கும் முந்திய மதம்.

இப்போது நிர்ணயுங்கள் -  இந்து மதத்தின் தொன்மை, தொடக்கம் பற்றி.

Zorastrianism பழைமையானது என்பதற்காக இந்து மதத்தின் தொன்மையை குறைத்து எடை போடமுடியாது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த ஆராய்ச்சி சிக்கலானது. எனவே தான் பயனற்ற இந்த ஆராய்ச்சியை விட்டு விட்டு ஒரு மதத்தை ஒழுங்காக பின்பற்றுவது தான் முக்கியம் என்று கூறினேன். தவிரவும் தொன்மையானது என்பதற்காக Zorastrianismஐ நான் பின்பற்ற வேண்டியதில்லை.

Zorastrianismஆ, இந்து மதமா என நிச்சயிக்க கூடுதல் ஆதாரங்கள் தேவை. இது மிகவும் சிக்கலானது. நேரவிரயம் தான் மிச்சம். எனவே என்னைப் பொறுத்தவரை இந்த ஆராய்ச்சி முக்கியமல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

Zorastrianism பழைமையானது என்பதற்காக இந்து மதத்தின் தொன்மையை குறைத்து எடை போடமுடியாது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த ஆராய்ச்சி சிக்கலானது. எனவே தான் பயனற்ற இந்த ஆராய்ச்சியை விட்டு விட்டு ஒரு மதத்தை ஒழுங்காக பின்பற்றுவது தான் முக்கியம் என்று கூறினேன். தவிரவும் தொன்மையானது என்பதற்காக Zorastrianismஐ நான் பின்பற்ற வேண்டியதில்லை.

Zorastrianism பழைமையானது என்பதற்காக இந்து மதத்தின் தொன்மையை குறைத்து எடை போடமுடியாது.

உங்கள் கூற்றில் இருந்து,  இந்து மதம் தொன்மையானது அல்ல என்று ஈங்கு நிரூபணமாகியுள்ளது.

13 minutes ago, மல்லிகை வாசம் said:

கண்டிப்பாக பௌத்தமும் கிறிஸ்துவுக்கு முற்பட்டது. புத்தர் வாழ்ந்த காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டளவாகும். ஆனால் புத்தரும் பிறப்பால் ஓர் இந்துவே. எனவே இந்து மதம் பௌத்த்துக்கும் பழமையானது.

“இந்து”என்ற வார்ததையே 1800 களின் பின்னர்  ஆங்கிலேயரால் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது. இது பற்றி சங்கராச்சாரியாரே வெளிப்படையாக கூறி உள்ளார். இந்து என்று இன்று அழைக்கப்படும் மக்களுக்கு பார்பனீயம்  ஆயிரக்கணக்கான வருடங்களாக கல்வியை மறுத்து வந்தது. எல்லோருக்கும் கல்வி என்பதை நடைமுறைப்படுத்தியதே ஆங்கிலேயர்கள் தான். இது தான் வரலாறு.சைவம் என்ற மதத்தை கபளீகரம் செய்து பார்பனம்  அறிமுபடுத்திய மூடத்தனங்களே இன்று  நடைமுறையில் இந்து என்று அழைக்கப்படுகின்றது.  

2 hours ago, மாங்குயில் said:

Zorastrianism பழைமையானது என்பதற்காக இந்து மதத்தின் தொன்மையை குறைத்து எடை போடமுடியாது.

உங்கள் கூற்றில் இருந்து,  இந்து மதம் தொன்மையானது அல்ல என்று ஈங்கு நிரூபணமாகியுள்ளது.

உங்கள் விதண்டாவாதம் எதற்கும் உதவப் போவதில்லை. தவறான தர்க்கம்.

தொன்மையானது என்ற சொல்லின் பொருள் பழைமையானது என்பதே. அத்துடன் இதற்கான ஆராய்ச்சிகள் முடியாமல் எவ்வளவு தொன்மையானது என நிர்ணயிக்க முடியாது. அது தான் விடயம், இந்து மதம் தொன்மையானது அல்ல என்பதை நிரூபிக்க முடியாது. 

கருத்துக்களை சரியாக புரிந்து எழுதுங்கள். அல்லாவிடில் வீண் விவாதமும், நேர விரயமுமே ஏற்படும். யாருக்கும் பிரயோசனம் இல்லை. 

தவிரவும் நீங்கள் நான் எழுதியவற்றை முழுமையாக மேற்கோள் காட்டாதமை அரைகுறையாகத் தான் கருத்துக்களை வாசிக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல.

***

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது. சக கள உறுப்பினர்களோடு நட்பான முறையில் கருத்தாடவேண்டும்

1 hour ago, மாங்குயில் said:

Zorastrianism  என்ற மதம், புத்த மதத்திற்கும் முந்திய மதம்.

இப்போது நிர்ணயுங்கள் -  இந்து மதத்தின் தொன்மை, தொடக்கம் பற்றி.

மாங்குயில்,

உங்கள் மேலதிக வாசிப்பிற்கு கீழுள்ள இணைப்புகளைத் தந்துள்ளேன். இந்து மதம் தான் உலகிலேயே மிகத் தொன்மையான மதம் என்று இவை குறிப்பிடுகின்றன. எனினும் இதன் ஆரம்பம் தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. நான் முன்னர் கூறியது போல அதன் தோற்றத்தை நிர்ணயிக்க தற்போதுள்ள சான்றுகள் போதாது என்பதே இந்த முரண்பாட்டிற்குக் காரணம்.

https://theculturetrip.com/asia/articles/the-8-oldest-religions-in-the-world/

http://www.oldest.org/religion/religions/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

சசி! உங்கட கருத்துக்கள் அத்தனையும் அற்புதமானவை!

மதமாற்ற வெறி கொண்டவர்கள், சைவ சமய விரோதிகள் அவற்றை விளங்கினாலும் எப்பவும் விளங்காத மாதிரித் தான் நடிப்பார்கள்.

4 hours ago, Rajesh said:

ம்ம்.

இந்த மதவெறிக் கும்பல்கள் போடுற நாடகங்களுக்கும், கட்டுக் கதைகளுக்கும் அளவு கணக்கே கிடையாது. இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு இவங்களுக்கு தேவையா என்டு நான் நினைக்கிறதுண்டு!

4 hours ago, Rajesh said:

கிறிஸ்தவ சமயத்துல நல்ல கருத்துக்கள் உள்ளன. சைவ சமயத்துலையும் நல்ல நல்ல கருத்துக்கள் உள்ளன.

அதை மீறி ஈகோ பிரச்சினையாக இந்த திரியில் தேவையற்ற விதண்டாவாதம் ஒரு அர்த்தமும் இன்றி தொடர்வதாக நினைக்கிறன்.

இதில் உடன்படுபவர்கள் இந்த திரியில் கருத்தெழுவதை நிறுத்தலாமே!

நாங்கள் எங்கட சக்தியை தமிழர் உரிமைகளை வெல்லுறதுக்கு பயன்படுத்துவமே!

ஒரு காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயராக இருந்த தீயோகுபிள்ளை எனது கட்டுரை ஒன்றை படித்துவிட்டு அது கத்தோலிக்க சமய முறைகளை குறைகூறி எழுதியிருப்பது பற்றி என்னோடு பேச விரும்பினார். இவர் விடுதலை புலிகளின் ஆதரவாளர் என்று உலக அளவில் அறியப்பட்டவர். அது பற்றி  நான்  கேட்ட போது தானோ எந்த கத்தோலிக்க மத அமைப்பினரோ என்றுமெ தமிழீழத்தை விரும்பவில்லை என்று சொன்னார். காரணம் கேட்ட போது, புலிகளுக்கு முற்பட்ட காலத்தில் சைவர்களிடம் காணப்பட்ட கத்தோலிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கி பிரபாகரனுக்கு பின்னர் இது மீண்டும் வரும் என்றார். 

இதன் பின்னர் ஒரு மாலைப்பொழுதில் ஒரு கத்தோலிக்கரான ஜனாதிபதியின் ஆலோசகருடன் இலங்கை தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி பேசும் போது, தீயோகுபிள்ளை புலிகளின் பேச்சாளர் போல் பேசுகிறாரே? என்று என்னிடம் கேட்டார். தீயோகுபிள்ளை மக்களின் பிரச்சினைகள் பற்றியே பேசுகிறார் என்றும், சைவர்களின் மததுவேசம் காரணமாக கத்தோலிக்க மத அமைப்பு தமிழீழத்தை விரும்பாது என்றும் அவருக்கு விளக்கினேன்.

கிறீஸ்தவர்களுக்கு மதம் பரப்பும் உரிமை தேவை.
சைவர்களுக்கு மதம் பரப்புவதை தடுக்கும் உரிமை தேவை.

ஆகவே இந்த உரிமைகளுக்காக கிறீஸ்தவர்களும்  சைவர்களும்  பிரிந்து முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. 

மீண்டும் ஒரு முறை தீயோகுப்பிள்ளை சொன்னதை இங்கு உறுதிப்படுத்தியவர்களுக்கு    நன்றி. 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மத ஆதரவாளர் சுயாந்தன் ஓரிடத்தில் சொன்னது இந்தத் திரியில் உள்ள கருத்துகாலைப் பார்த்தால் சரியாகத்தான் உள்ளது.

Quote

நமது தமிழ்ச் சூழலில் ஒவ்வொன்றுக்கும் யாரோ ஒருவர்தான் காரணம் என்று கூறி நமது அடிப்படைப் பிழைகள் ஏற்க மறுக்கப்படுகின்றது என்பதே உண்மை. மதமாற்ற வெறியர்கள் உருவாக்கிய அனைத்துக்கும் பிராமணர்கள் காரணம் என்பது போல ஏதோ ஒன்றைத் தூக்கியபடி வந்துவிடுகின்றனர்.

இந்த இடத்தில் கம்பனின் ராமாயணப் பாடல் ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும்.
 
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம் 
அன்றே என்னின், அன்றே ஆம் 
ஆமே  என்னின் ஆமே ஆம் 
இன்றே என்னின் இன்றே ஆம் 
உளது என்று உரைக்கின் உளதே ஆம் 
நன்றே நம்பிகுடி வாழ்க்கை நமக்கு 
இங்கு என்னோ பிழைப்பு அம்மா!"
 
'ஒன்று என்றால் ஒன்று. ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. பல என்றால் பல. அல்ல என்றால் அல்ல. உண்டு எனில் உண்டு. இவற்றில் எது நல்லது தருமோ அதை நம்பித்தான் இந்த வாழ்க்கை போகிறது. வேறு வழியுண்டா மனிதனுக்கு' எவ்வளவு அழுத்தமான பன்மைத்துவக் கருத்து இது. யாரும் எப்படியும் கடவுளையோ ஞானத்தையோ அடையலாம். அதில் கட்டுப்பாடுகள் திணிப்புக்கள் ஏதும் இல்லை. அதுதான் மானிட மோட்சம். இதனைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான காலத்தில் கம்பன் கூறியுள்ளான். இந்து தமிழ் ஞான மரபில் உதித்த கம்பனின் இந்த பன்மைத்துவத்தைத்தான் இந்துச் சமூகம் இன்றும் பின்பற்ற முனைகிறது. ஆனால் மதமாற்றம் என்ற பெயரில் பேரழிவுச் சித்தாந்தங்கள் முன்வைக்கப்படும் போது இந்தப் பன்மைத்துவம் அழிந்து போகிறது. அண்மைய காலங்களில் அதிகரித்துள்ள இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மதப் பிரச்சார மதமாற்ற  நோக்குகள் இல்லாது போகும் பட்சத்தில்தான் இந்தப் பன்மைத்துவம் மேலும் வலுப்பெறும். அன்றேல் இங்கிருந்தும் பேரழிவுச் சித்தாந்தங்கள் முன்வைக்கப்படும். அதைத்தான் வரலாறு நமக்கு விட்டுச் சென்றுள்ளது. இந்தியா, இலங்கை போன்ற பழங்குடி மரபிலிருந்து உருவான பன்மைத்துவச் சமூகத்துக்குள் வேறு மதக் கலாசாரங்கள் திணிக்கப்படும் போது அதன் விளைவுகள் எப்போதும் கொடூரமாகவே இருந்துள்ளது.  இதற்கு உதாரணமாக மியன்மாரைக் கூறலாம். அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கியதும் பௌத்த பழங்குடி மரபார்ந்த அரசு செயற்படும் விதம் நல்லதொரு உதாரணம்.
 
இந்து மதம் என்ற ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்பது வெறும் கற்பிதம் என்று குறிப்பிடும் மதமாற்றச் சக்திகளை அடையாளம் காணவேண்டிய கட்டாயம் தற்போதைய காலத்தில் ஏற்பட்டுள்ளது. இவற்றை விடுத்து இந்துமதம் என்பது அடக்குமுறையின் மதம் என்றும், இந்து மதம் மட்டும்தான் அதனைப் போதிக்கிறது என்று யாராவது சொல்வார்கள் என்றால் பிறமதங்கள் மீதுள்ள விமர்சனங்களையும் கொடூரமான வரலாறுகளையும் பன்மைத்துவ அழிப்பையும் கூர்ந்து வாசித்துவிட்டு வருவதுதான் நல்லதொரு விவாதமாக இருக்கும். அத்துடன் மதமாற்ற மதப்பிரச்சார நோக்கங்கள் தவிர்க்கப்படுவதும் நல்லதொரு வழியாகவே இருக்கும்

2 hours ago, Jude said:

ஒரு காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயராக இருந்த தீயோகுபிள்ளை எனது கட்டுரை ஒன்றை படித்துவிட்டு அது கத்தோலிக்க சமய முறைகளை குறைகூறி எழுதியிருப்பது பற்றி என்னோடு பேச விரும்பினார். இவர் விடுதலை புலிகளின் ஆதரவாளர் என்று உலக அளவில் அறியப்பட்டவர். அது பற்றி  நான்  கேட்ட போது தானோ எந்த கத்தோலிக்க மத அமைப்பினரோ என்றுமெ தமிழீழத்தை விரும்பவில்லை என்று சொன்னார். காரணம் கேட்ட போது, புலிகளுக்கு முற்பட்ட காலத்தில் சைவர்களிடம் காணப்பட்ட கத்தோலிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கி பிரபாகரனுக்கு பின்னர் இது மீண்டும் வரும் என்றார். 

இதன் பின்னர் ஒரு மாலைப்பொழுதில் ஒரு கத்தோலிக்கரான ஜனாதிபதியின் ஆலோசகருடன் இலங்கை தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி பேசும் போது, தீயோகுபிள்ளை புலிகளின் பேச்சாளர் போல் பேசுகிறாரே? என்று என்னிடம் கேட்டார். தீயோகுபிள்ளை மக்களின் பிரச்சினைகள் பற்றியே பேசுகிறார் என்றும், சைவர்களின் மததுவேசம் காரணமாக கத்தோலிக்க மத அமைப்பு தமிழீழத்தை விரும்பாது என்றும் அவருக்கு விளக்கினேன்.

கிறீஸ்தவர்களுக்கு மதம் பரப்பும் உரிமை தேவை.
சைவர்களுக்கு மதம் பரப்புவதை தடுக்கும் உரிமை தேவை.

ஆகவே இந்த உரிமைகளுக்காக கிறீஸ்தவர்களும்  சைவர்களும்  பிரிந்து முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. 

மீண்டும் ஒரு முறை தீயோகுப்பிள்ளை சொன்னதை இங்கு உறுதிப்படுத்தியவர்களுக்கு    நன்றி. 

கத்தோலிக்க மக்களுக்கும் சைவ மக்களுக்கும் இடையில் மதம் தொடர்பான வெறுப்புணர்வு இருக்கவில்லை என்பதே எனது அனுபவம். எமது கத்தோலிக்க நண்பர்களுக்கும் எமக்கும் மிகச்  சிறந்த நல்லுறவு நிலவியது. பாடசாலை காலத்தில் எமது கல்லூரியில்  மேடையேற்றப்பட்ட திருவிளையாடலில் ஒரு விளையாடல் என்ற நாடகத்தில்  எமது கத்தோலிக்க நண்பர்கள் சைவ மாணவர்களுடன் இணைந்து நடித்து  மிக திறம்பட  அதை நடத்தி இருந்தார்கள்.  அதிலும் மிக முக்கிய நக்கீரர் வேடத்திலும் தருமி வேடத்திலும் கத்தோலிக்க நண்பர்களே நடித்திருந்தார்கள். நல்லூர்கோவில் திருவிழக்களின் போது  வேட்டி அணிந்து எமது கத்தோலிக்க நண்பர்கள் எம்முடன் கலந்து கொண்டது இப்போதும் ஞாபகம் உள்ளது. பாசையூர் அந்தோனியார் ஆலய திருவிழாவில் பல சைவ மக்கள் கலந்து கொண்டதையும் பார்திருக்கிறேன்.

அரசியலில் கூட சைவ மதத்தவாரன ஜி.ஜி.பொன்னம்மபலத்தை புறக்கணித்து கத்தோலிக்கரான தந்தை செல்வாவையே சைவ மக்கள் தலைவராக  ஏற்றனர்.  தமிழ்மக்களாக இணைந்த சைவ கத்தோலிக்க மக்களிடையே  எந்த பிரிவினைகளையும் எனது அனுபவத்தில் நான் காணவில்லை. நான்  இங்கு வலியுறுத்துவதெல்லாம்   சைவ மக்களை ஆக்கிரமித்து இந்து மதம் பரப்பிவிட்ட மூடத்தனங்களால் அதிக பாதிக்கப்பட்டவர்கள்  சதாரண இந்து  மக்களே. மதம் மாற்றும் கும்பல்களுக்கும் இதுவே சாதகமாக அமைந்துள்ளது என்பதனையே.

(நீங்கள் கூறியது போல் இரு பகுதியினரினமும் இருக்கும் மத அடிப்படை வாதிகள் வெறுப்புக்களை வளர்கக முற்பட்டிருகலாம். ஆனால் அது சைவ, கத்தோலிக்க மக்களிடம் எடுபடவில்லை என்பதே உண்மை)

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மாங்குயில் said:

கிறிஸ்தவம் பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான் என்று ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்.

இஸ்ரேலியர்கள் எல்லாரும் யூதர் கிடையாது.

இயேசுவும் யூதர் கிடையாது.

கிறிஸ்தவம் என்ற மதம், இயேசுவிற்குப் பின்னால் தோற்றுவிக்கப்பட்டது.

இயேசுவின் காலத்தில், பைபிளோ கிறிஸ்தவமோ இருக்கவில்லை.

ஜேசுக்கிறிஸ்துவையே,  கிறிஸ்து என்று அழைக்கிறார்கள். நீங்கள் சொல்வது சரி. கிறிஸ்துவுக்கு பிற்பாடு அவருடைய போதனைகளை ஏற்று பின்பற்றியவர்கள்  கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அழைக்கப்பட்டவர் என்றால்  தெரிந்து கொள்ளப்பட்டவர் என்றும் பொருள் கொள்ளலாம். அவருடைய வாழ்க்கை, போதனைகளை கூறுவது, அதாவது அவரைப்பற்றி கூறுவது பைபிள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மாங்குயில் said:

இயேசுவின் ஆடையைத் தொட்டாளாம் - அதுவும் இயேசுவிற்குத் தெரியாமல்.

பன்னிரண்டு வருடங்களாக இரத்தப் போக்காம்.  

இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன்,  இந்த நோய் நிவாரணமானதாம். 

இப்படியான கற்பனைக் கதைகளை சொல்லியே, மக்களை மாக்களாக மாற்றுகிறார்கள் இந்தக்கிறிஸ்தவர்கள்.

மதம் என்பதை அறிவியல் கண்ணோடு தேடினால் விடை கிடைக்காது. ஒரு விடயத்தை முழுமையாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதன் சூழ்நிலை தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றிய அனுபவமிருக்க வேண்டும் அல்லது பொறுமையாக முழுவதையும் வாசித்து விளங்க வேண்டும். பெரும்பாடு என்றால் மாதம் 30 நாட்கள் வருடம் 365 நாட்களும் குருதி வெளியேறுவது என்று பொருளல்ல. வெளியேறும் குறிப்பிட்ட நாட்களில் அதிகமாக வெளியேறும் என்பதே பொருள். இதனால் பெண்கள் பல அசவ்கரியங்களை எதிர் நோக்குவர். மனஉளைச்சல், வெளியில் சென்று  அலுவல் பாக்கமுடியாத நிலை, சமுதாய ஏளனம் எனப் பல பிரச்சனைகள். வல்லமை வெளியேறியதை உணர்ந்த ஜேசு தொட்டவர் யார் என அறிந்திருக்க மாட்டாரா, என்ன? இங்கே சொல்லப்படுவது என்னவென்றால், நம்பிக்கை இருந்தால் மட்டுமே அற்புதங்கள் நிகழும். பெரும் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு சென்றது. குணம் பெறுவேன் என்று நம்பியவள் அவள். அதனால் நலமடைந்தாள். இங்கு  நான் விளங்கிக்கொண்டது, கூட்டமாக பின்தொடர்வதால் எந்த மாற்றமும் நிகழாது, நம்பிக்கையே வாழ வைக்கும் என்பதே. அந்தப்பெண் எல்லாவற்றையும் இழந்து, மருத்துவரால் கைவிடப்பட்டு, மனமுடைந்து, அவரே கதி அவராலே சுகம் பெறுவேன் என அவரைப் பின்தொடர்ந்தாள். இதைப் படித்த போது இப்படித்தான் நான் விளங்கிக்கொண்டேன். உங்கள் அறிவியல் இதை பரிகசிக்கலாம். அதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, satan said:

பெரும்பாடு என்றால் மாதம் 30 நாட்கள் வருடம் 365 நாட்களும் குருதி வெளியேறுவது என்று பொருளல்ல. வெளியேறும் குறிப்பிட்ட நாட்களில் அதிகமாக வெளியேறும் என்பதே பொருள். இதனால் பெண்கள் பல அசவ்கரியங்களை எதிர் நோக்குவர். மனஉளைச்சல், வெளியில் சென்று  அலுவல் பாக்கமுடியாத நிலை, சமுதாய ஏளனம் எனப் பல பிரச்சனைகள். வல்லமை வெளியேறியதை உணர்ந்த ஜேசு தொட்டவர் யார் என அறிந்திருக்க மாட்டாரா, என்ன? இங்கே சொல்லப்படுவது என்னவென்றால், நம்பிக்கை இருந்தால் மட்டுமே அற்புதங்கள் நிகழும். 

மாதம் 30 நாட்கள், வருடம் 325 நாட்கள். ஒருவருக்கும் தெரியாது.

இது ஒரு தங்க மலை இரகசியம்.

ஓரிரு நாட்கள் குருதிப்போக்கு இருந்தாலும் ஆள் அவுட். 

12 வருடங்கள் தொடர்ந்து குருதி போக்கு இருந்தால், தொடர்ச்சியாக இடைவிடாமல்  குருதி போக்கு வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது என்று சாதாரணப் பாமரன்கூட நினைப்பதில்லை.

இயேசுவின் ஆடையைத் தொடுவதால், ஒரு போதும் குருதிப்போக்கு நிக்காது.  அவரது ஆடையில் எந்த மகிமையும் இல்லை.

வைத்தியரிடம் போய், அவரிடம் ஆடையைத் தொட்டால் யாரும் குணமடைவதில்லை.

அவர் தரும் மருந்தை சாப்பிட்டால்தான், சுகமடையலாம்.

1 hour ago, satan said:

ஜேசுக்கிறிஸ்துவையே,  கிறிஸ்து என்று அழைக்கிறார்கள். நீங்கள் சொல்வது சரி. கிறிஸ்துவுக்கு பிற்பாடு அவருடைய போதனைகளை ஏற்று பின்பற்றியவர்கள்  கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அழைக்கப்பட்டவர் என்றால்  தெரிந்து கொள்ளப்பட்டவர் என்றும் பொருள் கொள்ளலாம். அவருடைய வாழ்க்கை, போதனைகளை கூறுவது, அதாவது அவரைப்பற்றி கூறுவது பைபிள்.

இயேசு என்பவர், கிறிஸ்து அல்ல.

கிறிஸ்து என்றால் என்னவென்று, இயேசுவிற்கு தெரியாது.

இன்னும் சொல்லப்போனால், இயேசுவைப்பற்றிய பைபிளில் இருக்கும் கதைகள், அவர் சொன்னதாகச் சொல்லும் போதனைகள்  பெரும்பாலும் அவரின் போதனைகள் அல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

இந்து மதம் என்ற ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்பது வெறும் கற்பிதம் என்று குறிப்பிடும் மதமாற்றச் சக்திகளை அடையாளம் காணவேண்டிய கட்டாயம் தற்போதைய காலத்தில் ஏற்பட்டுள்ளது.

மேற்படி சொல்வது, நாத்திகவாதிகள், பெரியாரிஸ்ட்டுகள்தான்.

பெரும்பாலான இவர்கள், இந்து மதத்தில் இருந்து வெளியேறியவர்கள்தான்.

அவர்களும்  வெறுமனே சொல்வதில்லை.  ஆய்ந்து, உய்த்துணர்ந்துதான் சொல்கிறார்கள்.  மேலும், இந்து மதம் என்ற பெயரும் பின்னாளில்  வந்தது என்று இந்துப்  பண்டிதர்களே சொல்லும்போது, அதை இந்துக்கள் என்று சொல்வோரும் ஏற்கிறார்கள்.

கிருபன், நீங்கள் சொல்வதுபோல், எந்த கிறிஸ்தவனும் அல்லது எந்த முஸ்லிமும் இந்து மதத்தை குறை காண்பதில்லை.  தூற்றுவதில்லை.

9 hours ago, Jude said:

சைவர்களின் மததுவேசம்

சைவரிகளிடம் என்றுமே இல்லாத ஒன்றை இருப்பதாக கதையளக்கிறீகள்!

நீங்க பிளேட்டை மாத்தி போட்டு முஸ்லிகள் போல கேவலமான தொழிலை செய்கிறீர்கள்.

மதம்மாற்ற வெறியர்களின் காடைத்தனத்தை எதிர்ப்பது மதத்துவேசம் ஆகாது.

உண்மைல மதத்துவேசம் உள்ள மதங்கள் சைவம் தவிர்ந்த பௌத்த, முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களை குறிப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

"சைவரிகளிடம் என்றுமே இல்லாத ஒன்றை இருப்பதாக கதையளக்கிறீகள்"

சைவர்கள் எல்லோரும் துவசிகள் அல்ல.  ஆனால் அவர்களின் சில பிரிவினரிடம்,  குறிப்பாக நல்லூர் மற்றும் வடமராட்ச்சியின் சில குறிப்பிட்டவர்களிடம் உள்ளது.  இதுவே யதார்த்தம்.  இது உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களை குறை சொல்ல முடியாது.  அதற்க்காக 100% துவேசம் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஊர்ப்புதினமா😯.உங்கடை அலப்பறகளை வேறு எங்கையாவது திரி திறந்து புடுங்குப்படுங்கோ.புண்ணியமாகப் போகும்.😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மாங்குயில் said:

மாதம் 30 நாட்கள், வருடம் 325 நாட்கள். ஒருவருக்கும் தெரியாது.

இது ஒரு தங்க மலை இரகசியம்.

ஓரிரு நாட்கள் குருதிப்போக்கு இருந்தாலும் ஆள் அவுட். 

12 வருடங்கள் தொடர்ந்து குருதி போக்கு இருந்தால், தொடர்ச்சியாக இடைவிடாமல்  குருதி போக்கு வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது என்று சாதாரணப் பாமரன்கூட நினைப்பதில்லை.

இயேசுவின் ஆடையைத் தொடுவதால், ஒரு போதும் குருதிப்போக்கு நிக்காது.  அவரது ஆடையில் எந்த மகிமையும் இல்லை.

வைத்தியரிடம் போய், அவரிடம் ஆடையைத் தொட்டால் யாரும் குணமடைவதில்லை.

அவர் தரும் மருந்தை சாப்பிட்டால்தான், சுகமடையலாம்.

இயேசு என்பவர், கிறிஸ்து அல்ல.

கிறிஸ்து என்றால் என்னவென்று, இயேசுவிற்கு தெரியாது.

இன்னும் சொல்லப்போனால், இயேசுவைப்பற்றிய பைபிளில் இருக்கும் கதைகள், அவர் சொன்னதாகச் சொல்லும் போதனைகள்  பெரும்பாலும் அவரின் போதனைகள் அல்ல. 

உங்கள் கருத்துக்களை வாசித்தத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது, உங்களுக்கு ஜேசுகிறிஸ்து என்றால் யார்? பைபிள் என்றால் என்ன? என்பதை நீங்கள் கேள்விப்படவே இல்லை. அதை நீங்கள் வாசிக்க விரும்வில்லை. அது  உங்கள் விருப்பம்  வாசிப்பது என்பது         நம்பிக்கை கொள்வது என்று அர்த்தம் இல்லை. மற்றவர் என்ன சொல்கிறார்கள்  என்பது புரியும். இருக்கும் ஒன்றை இல்லை என்று  அடம் பிடிப்பது தான் வேடிக்கை.   சும்மா விதண்டாவாதம் செய்கிறீர்கள். 

 இன்றும் கூட இப்படிப்பட்ட நோயுள்ளவர்கள் இருக்கிறார்கள் பெண் மருத்துவரிடம் கேட்டால் தெரியும். தெய்வம் என்றால் அது தெய்வம். சிலை என்றால் அது வெறும் சிலைதான்.  வீம்புக்காக வாதம் பண்ணி  அடுத்தவரை புண்படுத்தி அவர்கள் நம்பிக்கையை அணைக்கலாம் என்பது வெறும் கனவு. அடுத்தவரை மதிப்பது என்பது பெரிய செயல். ஆகவே உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.  இதன் மூலம் மதம் மாறுவோரை தடுக்க முடியாது. எப்போது அவர்கள் தேவையை உணர்ந்து உதவ முன்வருகிறோமோ, அன்று இந்த மாற்றத்தை தடுக்கலாம் என்பது எனது அசையாத நம்பிக்கை.

பைபிளைப்பற்றிய அறிவு, எனக்கு வெறும்  கேள்வி ஞானம்தான்.

யாரெல்லாம் முழு பைபிளையும் வாசித்து சிந்திக்கிறானோ, ஒரு நிமிடம்கூட கிறிஸ்தவத்தில் அவன் இருக்க மாட்டான். 

இதனால்தான், பைபிளைக் கற்றறிந்தவர்களில் பலர், கிறிஸ்தவத்தில் இருந்து விலகி, நாத்திகத்திற்கும் , தனக்குப் பிடித்த வேறு மதங்களையும் நாடி  ஓடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, மாங்குயில் said:

பைபிளைப்பற்றிய அறிவு, எனக்கு வெறும்  கேள்வி ஞானம்தான்.

யாரெல்லாம் முழு பைபிளையும் வாசித்து சிந்திக்கிறானோ, ஒரு நிமிடம்கூட கிறிஸ்தவத்தில் அவன் இருக்க மாட்டான். 

இதனால்தான், பைபிளைக் கற்றறிந்தவர்களில் பலர், கிறிஸ்தவத்தில் இருந்து விலகி, நாத்திகத்திற்கும் , தனக்குப் பிடித்த வேறு மதங்களையும் நாடி  ஓடுகின்றனர்.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. ஓரிடத்தில்   நிலைத்து நிக்கிறவனே உண்மையான மேய்ச்சலைக் காண்பான். ஆனால்  கிறிஸ்தவத்திலிருந்து விலகி வேறு இடங்களுக்கு நாடிப் போனவர்களை யாரும் குறை கூறவில்லை. குற்றம் சாட்டவில்லை.

அடுத்திருப்பவர்களது வறுமையை தாழ்த்திப் பேசுவதால் நாங்கள் உயர்ந்தவர்களாக மாறுவதில்லை. அவர்களுக்கு கைகொடுத்து உயர்த்தும் போது அவர்களோடு சேர்ந்து  நாமும் உயருகிறோம்.

நன்றி. சரியான இடத்தை அடைந்து விட்டோம் என  நான் நினைக்கிறேன். எனவே   நான் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

பைபிளைப்பற்றிய அறிவு, எனக்கு வெறும்  கேள்வி ஞானம்தான்.

யாரெல்லாம் முழு பைபிளையும் வாசித்து சிந்திக்கிறானோ, ஒரு நிமிடம்கூட கிறிஸ்தவத்தில் அவன் இருக்க மாட்டான். 

இதனால்தான், பைபிளைக் கற்றறிந்தவர்களில் பலர், கிறிஸ்தவத்தில் இருந்து விலகி, நாத்திகத்திற்கும் , தனக்குப் பிடித்த வேறு மதங்களையும் நாடி  ஓடுகின்றனர்.

மன்னிக்கவும்  மாங்குயில்,  தங்களுக்குத்தான் தெரியாதென் கிறீர்களே,  பின் எப்படி தெரியாத ஒன்றைப்பற்றி கருத்து கூறுகிறீர் ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, Maharajah said:

மன்னிக்கவும்  மாங்குயில்,  தங்களுக்குத்தான் தெரியாதென் கிறீர்களே,  பின் எப்படி தெரியாத ஒன்றைப்பற்றி கருத்து கூறுகிறீர் ? 

உண்மைதான். 

அதனால்தான், எனக்குத் தெரிந்தவைகளை மாத்திரம் இங்கு எழுதுகிறேன்.

34 minutes ago, satan said:

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. ஓரிடத்தில்   நிலைத்து நிக்கிறவனே உண்மையான மேய்ச்சலைக் காண்பான். 

இயேசுவின் உண்மையான மேய்ச்சல், காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்குத்தான்.

உங்களை போன்ற புற ஜாதிகளுக்கல்ல.

இதை நான் சொல்லவில்லை.

உங்களின் பைபிள் சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.