Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வணக்கம் உறவுகள்

உங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சுமேரியர் ...........உங்கள் பெயரை மாற்றி பாருங்கள் .எல்லோரும் பயப்பிடு கிறார்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நிலாமதி. பெண்களுக்கு இருக்கும் துணிவு தனி தான். நான் என்னை அடையாளம் காட்டாமல் எழுதுவோம் என்றிருந்தேன். ஆனால் இவை பயப்பிடீனம் எண்டதாலை சொல்லுறன் நான் ஒரு பெண். தமிழருக்கும் சுமேரியருக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கு.அதனால்த்தான் அந்தப் பெயரை வைத்தேன்.

Posted

வணக்கம் வாருங்கள் மொசப்பெதேமியா உங்கள் வரவு யாழுக்கு நல்வரவாகட்டும்...........

Posted

நன்றி நிலாமதி. பெண்களுக்கு இருக்கும் துணிவு தனி தான். நான் என்னை அடையாளம் காட்டாமல் எழுதுவோம் என்றிருந்தேன். ஆனால் இவை பயப்பிடீனம் எண்டதாலை சொல்லுறன் நான் ஒரு பெண். தமிழருக்கும் சுமேரியருக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கு.அதனால்த்தான் அந்தப் பெயரை வைத்தேன்.

சகோதரி நீங்கள் ஏன் புதிதாக ஒரு தலைப்பில் உங்கள் அறிமுகத்தை செய்யவில்லை

களஉறவுகள் கவனிக்காமல் விட்டதிற்க்கு அது தான் காரணமாக இருக்கலாம்.

எப்படியோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நவீனனுக்கும் தமிழ்ச்சூரியனுக்கும். அந்நிய நாட்டில தனிய நிற்பதுபோல் இருந்தது. இப்பதான் நின்மதியா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வருக . நீங்கள் பெண் என்று கூறிவிட்டபடியல் இனி வரிசை கட்டி நின்று வரவேற்பார்கள் . :icon_mrgreen:

Posted

வணக்கம் உறவுகள்

உங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.

உங்கள் வரவு நல்வரவாகட்டும். :) நீங்கள் புதிய திரி திறந்து எழுதுங்கள். அப்பொழுது தான் நிர்வாகத்தினர் உங்களை இலகுவாக கண்டுகொள்ள உதவும். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சுண்டல் நந்தன் துளசி. நான் தெரியாததை தெரியாது எண்டு சொல்ல வெட்கப்பட மாட்டேன். எனக்குக் கணினி பற்றிய அறிவு குறைவெண்டு சொல்லுறதைவிட அதில் நாட்டம் இல்லை என்று சொல்லலாம். துளசி சொல்லுற திரி எண்டது என்ன எண்டு விளங்கவே இல்லை. ஆராவது விளங்கப்படுத்துங்கோ தயவுசெய்து.ஒரு வாரமா நானாகக் கண்டுபிடிப்பம் எண்டு முயலுறன் முடியுதில்லை. எழுத வேணும் நினைக்கிற இடத்திலை எழுத முடியவில்லை.அவ்வையின் இந்தப் பாடல்தான் எனக்குத் துணிவு தந்தது.

வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்

எல்லோர்க்கும் ஒவ்வொன்று எழிது.

Posted

துளசி சொல்லுற திரி எண்டது என்ன எண்டு விளங்கவே இல்லை. ஆராவது விளங்கப்படுத்துங்கோ தயவுசெய்து.ஒரு வாரமா நானாகக் கண்டுபிடிப்பம் எண்டு முயலுறன் முடியுதில்லை. எழுத வேணும் நினைக்கிற இடத்திலை எழுத முடியவில்லை.அவ்வையின் இந்தப் பாடல்தான் எனக்குத் துணிவு தந்தது.

ஆம். நீங்களும் வணக்கம் என்று புதிதாக ஒரு தலைப்பு ஆரம்பித்து எழுதுமாறு கூறினேன். தப்பிலி அண்ணா கூறியபடி செய்யுங்கள்.

உங்களுக்கு தற்பொழுது "யாழ் இனிது" பகுதியில் மட்டும் தான் எழுத அனுமதியுள்ளது. புதிய தலைப்பு திறந்து சில கருத்துகள் எழுதிய பின்னர் தான் ஏனைய பகுதிகளில் உங்களுக்கு எழுத அனுமதி கிடைக்கும்.

திரி என்றால் எப்படி வரைவிலக்கணம் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. :D

ஒவ்வொரு தலைப்பிலும் ஆரம்பிக்கப்படும் அனைத்தையும் திரி என்று சொல்லலாம்.

உதாரணமாக நவீனன் அண்ணா வணக்கம் என்ற தலைப்பில் ஆரம்பித்திருக்கும் இது ஒரு திரி. நீங்கள் இனி ஆரம்பிக்கவிருப்பதும் ஒரு திரி. :)

வேறு ஏதும் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். :)

Posted

நல்வரவு...

வரவு நல்வரவாகட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் !வாங்கோ !!வாழ்த்துகள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ.........

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகத்தினருக்கு நன்றி.

நவீனனின் திரியிலிருந்து எனது பகுதியைப் பிரித்துவிடுமாறு கேட்டிருந்தேன். செய்ய மாட்டார்கள் என்று எண்ணினேன். இப்போது சும்மா தட்டிக்கொண்டு போக தனியான பகுதியாக பிரிந்துள்ளது. நான் வந்த ஆரம்பத்தில் விடயம் ஒன்றும் புரியாமல் நவீனனின் வணக்கம் திரியில் உள்நுழைந்திருந்தேன். இன்றுதான் மனதுக்கு நின்மதியாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹ‌லோ சுமெ அன்ரி அந்த‌ கால‌த்தில் உங்க‌ நானும் வ‌ர‌வேற்று இருக்கிறேன் ஒரு ராங்ஸ் சொல்லுர‌ ப‌ழ‌க்க‌ம் இல்லையா , லொள் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/15/2020 at 1:10 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிர்வாகத்தினருக்கு நன்றி.

நவீனனின் திரியிலிருந்து எனது பகுதியைப் பிரித்துவிடுமாறு கேட்டிருந்தேன். செய்ய மாட்டார்கள் என்று எண்ணினேன். இப்போது சும்மா தட்டிக்கொண்டு போக தனியான பகுதியாக பிரிந்துள்ளது. நான் வந்த ஆரம்பத்தில் விடயம் ஒன்றும் புரியாமல் நவீனனின் வணக்கம் திரியில் உள்நுழைந்திருந்தேன். இன்றுதான் மனதுக்கு நின்மதியாக இருக்கு.

அட இவிங்க முன் கதவாலைதான் வந்திருக்காங்க....நான் நினைச்சன் பின் கதவாலையாக்குமெண்டு...

சரி சரி வாங்கோ...வாங்கோ வணக்கம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

ஹ‌லோ சுமெ அன்ரி அந்த‌ கால‌த்தில் உங்க‌ நானும் வ‌ர‌வேற்று இருக்கிறேன் ஒரு ராங்ஸ் சொல்லுர‌ ப‌ழ‌க்க‌ம் இல்லையா , லொள் 😁

எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே என்னை வரவேற்றமைக்கு நன்றி பையன் 26.😃

2 hours ago, குமாரசாமி said:

அட இவிங்க முன் கதவாலைதான் வந்திருக்காங்க....நான் நினைச்சன் பின் கதவாலையாக்குமெண்டு...

சரி சரி வாங்கோ...வாங்கோ வணக்கம்.😎

நாங்கள் எப்பவும் முன் கதவாலதான் வாறது. ஆனால் ஆர் வீட்டுக் கதவெண்டு மட்டும் கேட்கப்படாது.  😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது யாழுக்கு வராவிட்டாலும் அப்ப என்னை வரவேற்ற தப்பிலி, தமிழ்ச்சூரியன், சுண்டல், நவீனன்,வதா, துளசி ஆகியோரோடு சுவி அண்ணா, நிலாமதி அக்காவுக்கும் மிக்க நன்றி. எட்டு ஆண்டுகளின் பின் கூறுகிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் எல்லாரும் சொல்லிற்றன் 😀😍

  • 2 months later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/6/2020 at 08:32, யாழ் அரியன் said:

வணக்கமுங்கோ.. பிரபலத்துக்கு ஒரு கும்பிடு போட்டு வைப்பம். 

ஆகா வணக்கம். எல்லாருக்கும் கும்பிடு போட்டியளோ அதேகதிதான்.😃

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.