Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
1 hour ago, நிழலி said:

மருது, குற்றம் குறை கூற முற்படும் முன்  திரியை மீண்டும் ஒழுங்காக வாசிக்கவும். திரியில் இடப்படும் / இடப்பட்ட கருத்துகளுக்கு விதிகளுக்கு இணங்க எழுதப்பட்ட எந்த பதில் கருத்தும் / விமர்சனமும் நீக்கப்படவில்லை. அத்துடன் ஒரு திரியை திறந்த பின் அதற்கான எதிர் விமர்சனங்கள் எதுவும் வைக்கப்படல் தவிர்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை யாழ் இணையம் ஏற்பதும் இல்லை.

நன்றி

நிழலி,

ஏனைய பல திரிகள் போல இதுவும் வீண் விவாதம் புரியும் இடமாக இருப்பதைத் தவிப்பதற்கே நற்சிந்தனைகளை, யோகர் சுவாமி தொடர்புடைய நல்ல விடயங்களை மட்டுமே பகிரும் திரியாக இதனை ஆரம்பித்தேன்.

எனினும் இங்கு மேலே சில எதிர்மறையான கருத்துக்கள் இத்திரியின் நோக்கத்தை குழப்புவதாக உள்ளன.

இதனை அறிந்தும் நிர்வாகத்தில் உள்ள சிலர் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களை அனுமதிப்பது யாழ்களம் வீண் விவாதங்களை மட்டுமே ஊக்குவிக்கிறது என்றும், நற்சிந்தனைகள் பற்றிய திரியில் கூட எதிர்மறை எண்ணங்களைப் பரப்புவதை தடுக்காது என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இது எந்த அளவுக்கு  ஆரோக்கியமான போக்கு என்று தெரியவில்லை.

  • Replies 75
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

மருது, குற்றம் குறை கூற முற்படும் முன்  திரியை மீண்டும் ஒழுங்காக வாசிக்கவும். திரியில் இடப்படும் / இடப்பட்ட கருத்துகளுக்கு விதிகளுக்கு இணங்க எழுதப்பட்ட எந்த பதில் கருத்தும் / விமர்சனமும் நீக்கப்படவில்லை. அத்துடன் ஒரு திரியை திறந்த பின் அதற்கான எதிர் விமர்சனங்கள் எதுவும் வைக்கப்படல் தவிர்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை யாழ் இணையம் ஏற்பதும் இல்லை.

நன்றி

நீங்கள் தூக்கியது எல்லாம் சரி என்றுதான் நானும் எண்ணுகிறேன் 
கடந்த சில குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்  இந்த மதவாதம் தேவையில்லாத 
பிரிவினைகளை இங்கு உண்டுபண்ணுகிறது என்றுதான் நான் எண்ணுகிறேன். 

நாம் என்ன பேசுகிறோம் என்பதைவிட 
யாரோடு பேசுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
திட்டமிட்டு அழிக்கப்பட்ட சைவமதம் .... ஓரளவு என்றாலும் இலங்கை தீவில் 
தப்பித்து கொண்டது .. அது இன்று வைஸ்ணவ சித்தர்ந்தம்  வைஷ்ணவ கடவுள்களின் இறக்குமதியால் 
எம் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக காவுகொள்ள படுகிறது 

நான் சமகாலத்தில் இன்றைய விஞ்ஞானத்தையும் சைவ மதத்தையும் பற்றி அறியும் ஆவல் 
கொண்டிருப்பாதால்  ... இன்றைய விஞ்ஞான கோட்ப்பாடுகள் எல்லாம் ஏற்கனவே 3000-4000 ஆண்டுகள் முன்பே 
சைவ மதத்தில் கூறப்பட்டு இருக்கிறதே என்று எண்ணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எவ்வாறு அதை அறிந்தார்கள் என்று ... இன்றைய விஞ்ஞானம் விடை சொல்கிறது .. அவர்கள் வைபிரசனை அதிர்வை அதிக கவனத்துடன் அவதானித்து இருக்கிறார்கள் என்று விஞ்ஞானம் சொல்கிறது. அவர்களுடைய அறிவு  எமக்கு  டி என் எ மூலமாக வந்திருக்க வேண்டும் ... ஆனால் நாம் வெறும் மூடர்களாக வாழ்கிறோம் ... ஏன்?
என்றால் எம்மீது திட்டமிட்ட பரப்புரை இன அழிப்பு எல்லாம் நடந்து இருக்கிறது 
இவை பற்றி பேச வேண்டும் நாம் எல்லோரும் கொஞ்சம் விழிப்புணர்வு அடையவேண்டும் என்ற ஆர்வ கோளாறில்  நான் எழுதிக்கொண்டு இருந்தேன் ....
பின்பு உங்கள் நிலைப்பாட்டை பார்க்கும்போது எனக்கு அதுவும் சரி என்று படுகிறது ...
எனக்கு திரிகளை பூட்டுவது ..... விமர்சனம் வேண்டாம் என்பதில் உடன்பாடு இல்லை 
ஆனால் தனிமனித தாக்குதல்கள்  இன்னொருவருவரை மனம் நோக செய்யக்கூடிய சொற்பிரயோகங்கள் 
அநாகரிக சொல் பிரயோகம் போன்றவை இங்கு யாழில் மட்டும் அல்ல .... வெளியிலும் தூக்கப்படுகிறது  
நான் கூட இப்போதுதான் எனது எழுத்த்துகளில் அவற்றை தவிர்த்துக்கொண்டு இருக்கிறேன். 
பதிலுக்கு நன்றி !   நேரிலே சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் ... இந்த திரிகளை பூட்டுவது பற்றி உங்களுடன் பேசுவது என்று இருக்கிறேன். 

திரியை அதன் பாட்டில் விட்டு விட்டு ஒதுங்கி கொள்கிறேன்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, மல்லிகை வாசம் said:

நிழலி,

ஏனைய பல திரிகள் போல இதுவும் வீண் விவாதம் புரியும் இடமாக இருப்பதைத் தவிப்பதற்கே நற்சிந்தனைகளை, யோகர் சுவாமி தொடர்புடைய நல்ல விடயங்களை மட்டுமே பகிரும் திரியாக இதனை ஆரம்பித்தேன்.

எனினும் இங்கு மேலே சில எதிர்மறையான கருத்துக்கள் இத்திரியின் நோக்கத்தை குழப்புவதாக உள்ளன.

இதனை அறிந்தும் நிர்வாகத்தில் உள்ள சிலர் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களை அனுமதிப்பது யாழ்களம் வீண் விவாதங்களை மட்டுமே ஊக்குவிக்கிறது என்றும், நற்சிந்தனைகள் பற்றிய திரியில் கூட எதிர்மறை எண்ணங்களைப் பரப்புவதை தடுக்காது என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இது எந்த அளவுக்கு  ஆரோக்கியமான போக்கு என்று தெரியவில்லை.

வணக்கம் மல்லைகை வாசம்!  யாழ்களத்திலிருந்து பலர் ஒதுங்கி விட்டனர்.இன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்களும் வெகு விரைவில் ஒதுக்கப்படுவர். இது நான் கேள்விப்பட்டதிலிருந்து சொல்கிறேன்.
ஒரு காலத்தில் விடுதலைப்போராட்டம் சம்பந்தமாக விலகினர்
இப்போது  மத விவாதம் சம்பந்தமாக பலர் யாழ்களத்தை எட்டிப்பார்ப்பதேயில்லை.
இது நான் யாழ்களத்திற்கு வெளியே பழகியதன் மூலம் தெரிந்து கொண்டது.

1 hour ago, மல்லிகை வாசம் said:

இரும்பைக் காச்சி ஒருவர் குடித்தார் போன்ற கருத்துக்களை ஒருவர் முன்வைக்கும் போது அது தொடர்பாக கேள்விகளும் விமர்சனங்களும் ஒருவருக்கு ஏற்படுகையில் அவற்றை முன்வைக்க இடம் கொடுப்பது தான் சரியானதாக இருக்கும்.  நற்சிந்தனை அல்லது நல்ல விடயம் எனக் குறிப்பிட்டு ஒருவர் எழுதுவது இன்னொருவருக்கு நற்சிந்தனையாக நல்ல விடய்மாக தோன்றாத போது அதையொட்டி கேள்விகள் எழுப்புவது தவறில்லை தானே. 

திரியில் குறிப்பிடப்படாத ஒன்றை. கருத்தாடாத ஒன்றை மேற்கோள் காட்டியோ அல்லது முற்றிலும் சம்பந்தமில்லாத ஒன்றை கொண்டு வந்து இடையில் புகுத்தினாலோ அது அகற்றப்பட வேண்டிய பதிலாக அமையும்.

நன்றி

  • தொடங்கியவர்
2 hours ago, குமாரசாமி said:

வணக்கம் மல்லைகை வாசம்!  யாழ்களத்திலிருந்து பலர் ஒதுங்கி விட்டனர்.இன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்களும் வெகு விரைவில் ஒதுக்கப்படுவர். இது நான் கேள்விப்பட்டதிலிருந்து சொல்கிறேன்.
ஒரு காலத்தில் விடுதலைப்போராட்டம் சம்பந்தமாக விலகினர்
இப்போது  மத விவாதம் சம்பந்தமாக பலர் யாழ்களத்தை எட்டிப்பார்ப்பதேயில்லை.
இது நான் யாழ்களத்திற்கு வெளியே பழகியதன் மூலம் தெரிந்து கொண்டது.

வணக்கம் அண்ணை,

உண்மை, நானும் இதனை உணர்ந்திருக்கிறேன். முகநூல் உறவுகள் சிலரும் தாம் ஒதுங்கிக் கொண்டு விட்டதாகச் சொன்னார்கள். எதற்காக என்று கூறவில்லை. 

நான் கூட அவ்வப்போது தான் எட்டிப்பார்த்திருக்கிறேன், கடந்த 10 வருடங்களாக. அப்படி வரும் போது கூட சில திரிகளில் தோற்றுவிக்கப்படும் எதிர்மறை உணர்வுகளால் அவற்றில் எழுதக் கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்தியிருக்கிறேன். 

மதவாதத்தைத் தூண்டாத நமது பண்பாடு, கலாச்சார விழுமியங்களை சிறந்த முறையில் வளர்க்கக் கூடிய திரிகள் பல அவசியம். ஏற்கனவே அவ்வாறான திரிகள் இங்கு இருக்கலாம். அவை மீண்டும் செயற்பட வேண்டும். 😊

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை:

"ஒருவனிடமுள்ள பத்து நல்ல குணங்களை விட்டு விட்டு இரண்டொரு குறைகளை மாத்திரம் எடுத்துப் பேசுதல் எவ்வளவு பேதைமை!'

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2019 at 4:57 AM, மல்லிகை வாசம் said:

என்னைப் பொறுத்தவரை யோகர் போன்ற சித்தர்கள் ஆன்மீக ஏணியின் உச்சியை எட்டிய பின்னர் மதம் என்ற பாதை தேவையாக இருக்கவில்லை. அதற்காக மதங்களை வெறுத்தார் என்பது அர்த்தமல்ல. உயரிய ஆன்ம ஞானத்தை அடைந்த இவர்கள் விருப்பு வெறுப்புக்களைக் கடந்தவர்கள். மதம் மீதான பற்று இவர்களுக்கு இல்லை; வெறுப்பும் இல்லை. அனைத்தையும் சமமாகப் பார்க்கும் பக்குவ நிலையில் இருந்தார்கள்.

அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள் பலர், நான் உட்பட. ஆன்மீக ஏணியின் உச்சியை நான் அடையவும் இல்லை, அடைவேன் என்று நினைக்கவும் இல்லை, அனைத்து மதங்களையும் மதிக்க அப்படியான நிலை எனக்கு தேவைப்படவும் இல்லை.

  • தொடங்கியவர்
9 minutes ago, Jude said:

அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள் பலர், நான் உட்பட. ஆன்மீக ஏணியின் உச்சியை நான் அடையவும் இல்லை, அடைவேன் என்று நினைக்கவும் இல்லை, அனைத்து மதங்களையும் மதிக்க அப்படியான நிலை எனக்கு தேவைப்படவும் இல்லை.

ஜூட்,

உங்கள் கருத்து சரியானது.

எனினும் இங்கு சொல்லப்படுகிற விடயம் ஞானிகளின் பற்றற்ற நிலை. அவர்களின் விருப்பு வெறுப்பற்ற சமநிலையான மனநிலையில் அவர்களுக்கு எல்லா மதங்கள் மீதும் பற்றோ, வெறுப்போ இல்லை என்பதைத் தான் எழுதினேன். 😊

3 hours ago, மல்லிகை வாசம் said:

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை:

"ஒருவனிடமுள்ள பத்து நல்ல குணங்களை விட்டு விட்டு இரண்டொரு குறைகளை மாத்திரம் எடுத்துப் பேசுதல் எவ்வளவு பேதைமை!'

 இந்த நற் சிந்தனை தனிநபர்களுக்கு இடையிலான உறவு சம்பந்தப்பட்டது. மனிதர்களுக்கிடையிலான உறவு மேம்பட இப்படியான அணுகுமுறைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் முழுவதும் பாவிக்கப்பட்டு வந்துள்ளதை வரலாறுகள் உணர்ததுகின்றன. ஆனால்  ஆரிய இந்து மதம் எமது சமூகத்தில் விதைத்துவிட்டிருக்கும் எண்ணற்ற மனித அறிவுக்கு ஒவ்வாத எண்ணற்ற முட்டாள் தனங்களை ஆன்மீகம் என்ற அழகான வார்த்தையை உபயோகித்து முட்டுக்கொடுப்பது அல்லது அதை மறைமுகமாக அங்கீகரிப்பது போன்றன என்றுமே விவாதத்துக்குரியவை. இவற்றை விவாத்தித்து களைவது உங்களால் சுட்டிக்காட்டப்பட்டு  மேலே காட்டிய நற்சிந்தனைக்கு போருத்தம் அற்றது.  இவ்வாறனவற்றை விவாதித்து தேவையற்ற மூடத்தனங்களை களைவதன் மூலம் தான் நீங்கள் அடைய விரும்பும் உண்மையான ஆன்மீகத்தை அடைய முடியும். அது தான் நேர்மையானது. சமூகத்திற்கு பொதுவான சமூகத்தை பாதிக்கும் எந்த விடயமும் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கு  உரியவை தான். 

நன்றி

Edited by tulpen

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை:

"விளக்குக் கண்ணாடி புகை பிடித்திருந்தால் வெளிச்சம் எப்படித் தெரியும்? மனம் அழுக்கடைந்திருந்தால் ஆன்மாவின் ஒளி எப்படித் தெரியும்?"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Jude said:

அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள் பலர், நான் உட்பட. ஆன்மீக ஏணியின் உச்சியை நான் அடையவும் இல்லை, அடைவேன் என்று நினைக்கவும் இல்லை, அனைத்து மதங்களையும் மதிக்க அப்படியான நிலை எனக்கு தேவைப்படவும் இல்லை.

நீங்கள் மட்டுமல்ல, ஆன்மீகத்தின் உச்சிக்கு எந்த மனிதனும் செல்ல முடியாது.

ஆன்மீகத்தின் உச்சி என்றொன்றில்லை.  இது இந்து மதத்தவர்களின் ஒரு நம்பிக்கை.

இயேசுவோ, புத்தனோ, முஹம்மது நபி அவர்களோ, ஆன்மீகத்தின் உச்சிக்கு சென்றவர்கள் கிடையாது.

யோகர் சுவாமியோ அல்லது வேறெந்த சுவாமியோ ஆன்மீகத்தின் உச்ச நிலைக்கு சென்றவர்கள் கிடையாது. 

எந்தவொரு மனிதனும், விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

Edited by மாங்குயில்

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை:

"பொன் மண்ணுக்குள் உளது. அதை எடுத்துச் சேகரித்துப் பக்குவம் பண்ணவேண்டும். ஆன்ம சக்தியும் அப்படியே."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

யோகர் சுவாமிகள் நற்சிந்தனை:

"பொன் மண்ணுக்குள் உளது. அதை எடுத்துச் சேகரித்துப் பக்குவம் பண்ணவேண்டும். ஆன்ம சக்தியும் அப்படியே."

பொன் மண்ணிற்குள் இருப்பது எல்லாரும் தெரிந்த விடயம்தான்.  

எல்லா மனிதருக்கும் இயல்பாக, ஆன்ம சக்தியைக் கொடுத்திருக்கிறான் இறைவன். 

நாம் இதை அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, மல்லிகை வாசம் said:

ஜூட்,

உங்கள் கருத்து சரியானது.

எனினும் இங்கு சொல்லப்படுகிற விடயம் ஞானிகளின் பற்றற்ற நிலை. அவர்களின் விருப்பு வெறுப்பற்ற சமநிலையான மனநிலையில் அவர்களுக்கு எல்லா மதங்கள் மீதும் பற்றோ, வெறுப்போ இல்லை என்பதைத் தான் எழுதினேன். 😊

 எதிலும் பற்றற்ற நிலை ஒரு மனிதனுக்கு வருவதென்றால், அவன் புத்தி பேதலித்தவனாக,  பைத்தியம் பிடித்தாலேயொழிய, அந்த நிலை வராது. 

பற்றற்ற நிலை, நடைப்பிணத்தை விட மோசமானது.

ஞானிகளுக்கு விருப்பு, வெறுப்பற்ற சமநிலையான மனநிலை இருக்குமென்று, உங்களுக்கு எப்படித் தெரியும்?

ஒருவனின், முகபாவனை, வெளித்தோற்றம், நடைமுறை வாழ்க்கை போன்றவைகளை வைத்து, அவன் எப்படிப்பட்டவன் என்று ஓரளவு ஊகிக்கலாம்.

ஆனால், ஒருவரின் விருப்பு வெறுப்புகள், உள்ளக்கிடக்கைகள் அவனைத் தவிர, வேறெவராலும்  முழுமையாகக் கண்டறிய முடியாது.

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நற்சிந்தனைகள்:

"தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்வதனால் ஞானம் உண்டாகும்."

"உங்களுடைய வேலைகளைச் செவ்வனே செய்யுங்கள். அதே யோகம்."

"பாடுபடல் வேண்டும். ஒரு சிலர் தான் உண்மையை அறிவார்கள். மற்றவர்கள் அவர்களுக்குப் பின்னால் போகிறது தானே."

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகளால் தொடங்கப்பட்ட சிவதொண்டன் நிலையத்தின் இணையத்தளத்துக்கான இணைப்பு இதோ:

http://www.sivathondan.org

யோகர் சுவாமிகள் பற்றிய குறிப்புகள், நிலையம் பற்றிய விபரங்கள், அவர்களின் வெளியீடுகள், நற்சிந்தனைப் பாடல்கள் போன்ற விடயங்களை இங்கே காணலாம். 

நற்சிந்தனைத் திருத்தாண்டகத்தினை ஒலி வடிவில் கேட்க,

http://www.sivathondan.org/நற்சிந்தனை-திருத்தாண்டக/

15 hours ago, மல்லிகை வாசம் said:

யோகர் சுவாமிகள் நற்சிந்தனைகள்:  

"தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்வதனால் ஞானம் உண்டாகும்."👍👍

"உங்களுடைய வேலைகளைச் செவ்வனே செய்யுங்கள். அதே யோகம்."👍👍

"பாடுபடல் வேண்டும். ஒரு சிலர் தான் உண்மையை அறிவார்கள். மற்றவர்கள் அவர்களுக்குப் பின்னால் போகிறது தானே."

அவ்வாறு மந்தைகள் போல் போக முடியாது. எந்த மனிதனும் உரிய Majuriy வயதை அடைந்த‍தும் பல விடயங்களை கற்று அறிந்து தனது சொந்த மூளையில் செயற்படல் வேண்டும். தன்னை சுற்றிவர நடப்படதை அவதானிக்க வேண்டும். அறிவு கண் கொண்டு தமக்குள் விவாதித்து தம்மை வழி நடத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிங்கோ,

ஓவரா டென்சன் ஆகவேண்டாம்.

கடையிற்சாமி இரும்பை காய்ச்சி குடித்தார் என்றால், அதை நான் ஒரு போதும் நம்ப போவதில்லை.

எனது பாட்டனார் சொன்ன கதைகள் கூட ஆர்வத்தை தூண்டுவனவே ஒழிய அவற்றை உண்மை என நான் நம்பவில்லை.

ஆனால், 100 வருடத்துக்கு முந்திய யாழில் வாழ்ந்த ஒரு நபரிடம் போய், இன்னும் நூறு வருடத்தில், ஒரு கையளவு பெட்டியில், 8000 மைலுக்கு அப்பால் லண்டனில் வாழும் ஒருவருடன் முகம் பார்த்து நேரலையாக பேச முடியும் (FaceTime) எனச் சொன்னால், அவரின் மனநிலை எப்படியாய் இருந்திருக்கும்?

நாம் இப்போ இரும்பை காய்ச்சி குடிப்பதை எப்படி பார்கிறோமோ அதே மனநிலையாய்தானே இருந்திருக்கும்?

சித்தர் என்றால் யார்? சித்துக்கள் அறிந்தவர். சித்து என்றால் என்ன? ஆங்கிலத்தில் சொல்வதானால் supernatural powers. 

supernatural என்றால் என்ன? attributed to some force beyond scientific understanding or the laws of nature. அதாவது - தற்போதைய விஞ்ஞான அறிவால், நாம் விளங்கி வைத்துள்ள இயற்பியல் விதிகளால் விளக்க முடியாததாகச் சொல்லப்படும் ஒரு சக்தி.

சோழனுக்கும் பாண்டியனுக்கும், துப்பாக்கிச் சூடு ஒரு சித்து. அவர்கள் காலத்தில் ஒருவன் துப்பாக்கியால் ஒருவனை சுட்டிருந்தால், இதென்ன ஒரு குழாயில் இருந்து உலோகம் எப்படி இவ்வளவு விரைவாக வருகிறது ? இது தெய்வீக சக்தியா? எனவே எண்ணி இருப்பார்கள்.

இடி, மின்னல் முதல், அம்மை நோய், வரை எம் அப்போதைய விளக்கத்துக்கு அப்பாற்பட்டவையே சித்துக்கள், தெய்வங்கள் ஆகின.

இப்போ மறுபடியும் செல்லப்பரின் இரும்பு கூழுக்கு வருவோம். இரும்பு எனும் ஒரு திண்ம உலோகம், திரவமாக மாற அதி கொதி நிலை வேண்டும் என்பது எமது தற்போதைய அறிவு. ஆனால் இரும்பை திரவ நிலையிலேயே வைத்தபடி, வெப்பநிலைய மட்டும் தணிக்கும் ஒரு முறைய (மறுபடியும் திண்மம் ஆகாமல்) நாளைக்கே விஞ்ஞானம் கண்டுபிடிக்கலாம் அல்லவா? ( மூலக்கூறுகளை மாற்றி மூலங்களின் இயல்பை மாற்றலாம் என்பதுதான் அணுச்சிதைவு, அணு அமைப்பு விஞ்ஞானத்தின் அடிப்படை). 

இப்படி ஒரு முறையை செல்லப்பர் அறிந்து பயன்படுத்தினாரா? 99% இருக்க முடியாது எனவே நானும் நம்புகிறேன் ஆனால் 1% வாய்ப்பு உண்டல்லவா?

எனவே சித்துக்கள் எனச் சொல்லப்படுபவற்றை நாம் நம்ப வேண்டியதில்லை. ஆனால் உண்மையிலேயே நாம் விஞ்ஞானத்தின் பாற்பட்டவர்களாயின் இதை பற்றி ஆர்வமாக (curious) இருப்பது நம் கடமை.

எப்போது, இதுதான் முடிந்த முடிபு என விஞ்ஞானம் சொல்கிறதோ அப்போதே அது விஞ்ஞானம் எனும் பண்பை இழந்து நம்பிக்கை dogma எனும் நிலையை அடைந்துவிடுகிறது. விஞ்ஞானத்தில் dogmatic அணுகுமுறைக்கு இடமே இல்லை.

be curious, be very curious. 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2019 at 11:25 PM, குமாரசாமி said:

வணக்கம் மல்லைகை வாசம்!  யாழ்களத்திலிருந்து பலர் ஒதுங்கி விட்டனர்.இன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்களும் வெகு விரைவில் ஒதுக்கப்படுவர். இது நான் கேள்விப்பட்டதிலிருந்து சொல்கிறேன்.
ஒரு காலத்தில் விடுதலைப்போராட்டம் சம்பந்தமாக விலகினர்
இப்போது  மத விவாதம் சம்பந்தமாக பலர் யாழ்களத்தை எட்டிப்பார்ப்பதேயில்லை.
இது நான் யாழ்களத்திற்கு வெளியே பழகியதன் மூலம் தெரிந்து கொண்டது.

நான் அறிந்த வரையில் மதம் அண்மைகாலம் வரை யாழில் ஒரு மேட்டரே இல்லை. இப்போ செய்தி/ பதிவுகளை இணைபவர்கள் சிலர் தேடித் தேடி தமிழர்கள் மத்தியில் மதகுரோதத்தை தூண்டும் விதமாக செய்திகளை இணைப்பதை நான் முன்பும் ஒரு முறை சுட்டிக் காட்டியுள்ளேன்.

யாழில் இப்படியான திரிகளில் மூன்று பிரிவினர் முட்டி மோதுகிறார்கள். சைவத்தின் சாரணர்கள், விஞ்ஞானத்தின் வீரர்கள், கத்தோலிக்கத்தின் காவலர்கள் 🤦‍♂️, என எதிரெதிர் முகாம்களுக்கு பெயரும் கொடுத்தபடி.

குறிப்பாக சைவம் எதிர் கிறீஸ்தவம் என்ற அருவருப்பான பிடுங்குப்பாடுகள் ஒவ்வொரு திரியிலும் தொடர்வதோடு, சம்பந்தமில்லாத திரிகள், திண்ணைவரை இந்த வன்மம் வளர்கிறது.

குமுதினிப் படகில் மதம் விசாரித்து வெட்டவில்லை.

87 இல் நல்லுர் கோயிலில் அடைகலம் புக நிர்பந்திக்க பட்டவர்களில் எல்லாரும் இந்துக்கள் இல்லை.

நவாலி தேவாலயத்தின் மீது விழுத்தபட்ட குண்டு தமிழ் கிறீஸ்தவர்களை மட்டும் குறிவைத்து வீசப்படவில்லை.

ஆனால் 10 வருடத்தில் இவை எல்லாவறையும் மறந்து விட்டோம்.

இந்த பிளவுகள் ஏற்படுத்தும், பொதுவெளியில் எழுதப்படும் கருத்துக்களின் பாதிப்பை பற்றி யாரும் கருதுவதாகக் தெரியவில்லை.

செய்தி இணைப்பவர்களுக்கு தாம் இணைத்த திரி பற்றி எரிய வேண்டும். கண்டண்ட் வேணும். அது மட்டுமே ஒரே குறி. இன ஒற்றுமையாவது மண்ணாவது.

அவர்கள் இப்படி என்றால் இதை கெட்டித்தனமாக கடந்து போகும் சாதுரியம் பல கருத்தாளர்களுக்கும் இல்லை.

இந்த மூன்று பக்கத்திலும் எழுதுபவர்கள் எழுதி செய்த நன்மையை விட தீமையே அதிகம். ஆகவே என்னை கேட்டால், இப்படியானவர்கள் எழுதாமல் விடுவதும் நல்லதுக்கே.

எழுத ஆளில்லை எண்டால், செய்தி இணைபவர்களும் தம் போக்கை மாற்றக்கூடும்.

  • தொடங்கியவர்
3 hours ago, goshan_che said:

ஆனால், 100 வருடத்துக்கு முந்திய யாழில் வாழ்ந்த ஒரு நபரிடம் போய், இன்னும் நூறு வருடத்தில், ஒரு கையளவு பெட்டியில், 8000 மைலுக்கு அப்பால் லண்டனில் வாழும் ஒருவருடன் முகம் பார்த்து நேரலையாக பேச முடியும் (FaceTime) எனச் சொன்னால், அவரின் மனநிலை எப்படியாய் இருந்திருக்கும்?

நாம் இப்போ இரும்பை காய்ச்சி குடிப்பதை எப்படி பார்கிறோமோ அதே மனநிலையாய்தானே இருந்திருக்கும்?

சித்தர் என்றால் யார்? சித்துக்கள் அறிந்தவர். சித்து என்றால் என்ன? ஆங்கிலத்தில் சொல்வதானால் supernatural powers. 

supernatural என்றால் என்ன? attributed to some force beyond scientific understanding or the laws of nature. அதாவது - தற்போதைய விஞ்ஞான அறிவால், நாம் விளங்கி வைத்துள்ள இயற்பியல் விதிகளால் விளக்க முடியாததாகச் சொல்லப்படும் ஒரு சக்தி.

சோழனுக்கும் பாண்டியனுக்கும், துப்பாக்கிச் சூடு ஒரு சித்து. அவர்கள் காலத்தில் ஒருவன் துப்பாக்கியால் ஒருவனை சுட்டிருந்தால், இதென்ன ஒரு குழாயில் இருந்து உலோகம் எப்படி இவ்வளவு விரைவாக வருகிறது ? இது தெய்வீக சக்தியா? எனவே எண்ணி இருப்பார்கள்.

இடி, மின்னல் முதல், அம்மை நோய், வரை எம் அப்போதைய விளக்கத்துக்கு அப்பாற்பட்டவையே சித்துக்கள், தெய்வங்கள் ஆகின.

இப்போ மறுபடியும் செல்லப்பரின் இரும்பு கூழுக்கு வருவோம். இரும்பு எனும் ஒரு திண்ம உலோகம், திரவமாக மாற அதி கொதி நிலை வேண்டும் என்பது எமது தற்போதைய அறிவு. ஆனால் இரும்பை திரவ நிலையிலேயே வைத்தபடி, வெப்பநிலைய மட்டும் தணிக்கும் ஒரு முறைய (மறுபடியும் திண்மம் ஆகாமல்) நாளைக்கே விஞ்ஞானம் கண்டுபிடிக்கலாம் அல்லவா? ( மூலக்கூறுகளை மாற்றி மூலங்களின் இயல்பை மாற்றலாம் என்பதுதான் அணுச்சிதைவு, அணு அமைப்பு விஞ்ஞானத்தின் அடிப்படை). 

இப்படி ஒரு முறையை செல்லப்பர் அறிந்து பயன்படுத்தினாரா? 99% இருக்க முடியாது எனவே நானும் நம்புகிறேன் ஆனால் 1% வாய்ப்பு உண்டல்லவா?

எனவே சித்துக்கள் எனச் சொல்லப்படுபவற்றை நாம் நம்ப வேண்டியதில்லை. ஆனால் உண்மையிலேயே நாம் விஞ்ஞானத்தின் பாற்பட்டவர்களாயின் இதை பற்றி ஆர்வமாக (curious) இருப்பது நம் கடமை.

எப்போது, இதுதான் முடிந்த முடிபு என விஞ்ஞானம் சொல்கிறதோ அப்போதே அது விஞ்ஞானம் எனும் பண்பை இழந்து நம்பிக்கை dogma எனும் நிலையை அடைந்துவிடுகிறது. விஞ்ஞானத்தில் dogmatic அணுகுமுறைக்கு இடமே இல்லை.

be curious, be very curious. 
 
மிகவும் அருமையான சிந்தனை, கோஷன். 😊

நீங்கள் இங்கு பயன்படுத்திய Facetime உதாரணம் போலவே நானும் Email, Fax தொழில்நுட்பங்களை உதாரணமாகப் பயன்படுத்துவதுண்டு. இவை பற்றி எல்லாம் கற்பனையே செய்ய முடியாத ஒரு காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம் supernaturalஆகத் தான் அன்றைய மனிதர்களுக்கு இருந்திருக்கும். 

இன்னும் சில பல மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இன்று supernaturalஆகத் தோன்றுபவை நிஜத்தில் சாத்தியமாகலாம். ஒரு பேச்சுக்கு அப்போது உலகம் பிரளயத்தால் சூழ்ந்து மனிதர்கள் உட்பட உயிரினங்கள் பல அழிந்து உலகின் சில பாகங்களில் அதுவும் சில மனிதர்கள் மட்டுமே எஞ்சுகின்றனர் என்ற நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போதிலிருந்து இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீண்டும் மனித இனம் இவ்வுலகில் வளர்ச்சி பெறும் போது அப்போதிருக்கப் போகும் மனிதருக்கு உலக அழிவுக்கு முன்னர் இருந்த தொழில்நுட்பங்களை நம்ப இயலாமல் இருக்கும் ஒரு நிலை ஏற்படலாம்.

இதே சிந்தனையுடன் தான் நானும் இற்றைக்கு பல ஆயிரம் /லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை அன்றைய மக்கள் பயன்படுத்தி இருக்கலாம். இன்றைய காலத்தில் அவை நம்ப முடியாத புழுகுகளாக நமக்குத் தோன்றலாம் என்பதே எனது கருத்து. 

சித்தர், முனிவர்களின் supernaturalசக்திகள் என்று நாம் கதைகளில் படிப்பதும் இவ்வாறு முன்பு ஒரு காலத்தில் இருந்திருக்கலாம், எதிர்காலத்தில் விஞ்ஞானமும் அவ்வாறான நிகழ்வுகளைச் சாத்தியமாக்கிக்காட்டலாம்.

எனவே சிலர் பாஷையில் அது எல்லாவற்றுக்கும் மேலான சக்தி, ஏனைய சிலர் பார்வையில் அவை சித்து விளையாட்டுகள். பெயர்கள் தான் வெவ்வேறு; விஷயம் ஒன்று தான். 

மதங்களுக்கும் இது பொருந்தும். நம்பிக்கை / செல்லும் மார்க்கம் தான் வேறு; நம் எல்லோருக்கும் மேலான சக்தி ஒன்று தான் - இறைவன் ஒன்று தான். இதை உணர்ந்தோர் தான் யோகர் உட்பட்ட பல மகாஞானியர். 

9 hours ago, goshan_che said:

புள்ளிங்கோ,

ஓவரா டென்சன் ஆகவேண்டாம்.

கடையிற்சாமி இரும்பை காய்ச்சி குடித்தார் என்றால், அதை நான் ஒரு போதும் நம்ப போவதில்லை.

எனது பாட்டனார் சொன்ன கதைகள் கூட ஆர்வத்தை தூண்டுவனவே ஒழிய அவற்றை உண்மை என நான் நம்பவில்லை.

ஆனால், 100 வருடத்துக்கு முந்திய யாழில் வாழ்ந்த ஒரு நபரிடம் போய், இன்னும் நூறு வருடத்தில், ஒரு கையளவு பெட்டியில், 8000 மைலுக்கு அப்பால் லண்டனில் வாழும் ஒருவருடன் முகம் பார்த்து நேரலையாக பேச முடியும் (FaceTime) எனச் சொன்னால், அவரின் மனநிலை எப்படியாய் இருந்திருக்கும்?

நாம் இப்போ இரும்பை காய்ச்சி குடிப்பதை எப்படி பார்கிறோமோ அதே மனநிலையாய்தானே இருந்திருக்கும்?

சித்தர் என்றால் யார்? சித்துக்கள் அறிந்தவர். சித்து என்றால் என்ன? ஆங்கிலத்தில் சொல்வதானால் supernatural powers. 

supernatural என்றால் என்ன? attributed to some force beyond scientific understanding or the laws of nature. அதாவது - தற்போதைய விஞ்ஞான அறிவால், நாம் விளங்கி வைத்துள்ள இயற்பியல் விதிகளால் விளக்க முடியாததாகச் சொல்லப்படும் ஒரு சக்தி.

சோழனுக்கும் பாண்டியனுக்கும், துப்பாக்கிச் சூடு ஒரு சித்து. அவர்கள் காலத்தில் ஒருவன் துப்பாக்கியால் ஒருவனை சுட்டிருந்தால், இதென்ன ஒரு குழாயில் இருந்து உலோகம் எப்படி இவ்வளவு விரைவாக வருகிறது ? இது தெய்வீக சக்தியா? எனவே எண்ணி இருப்பார்கள்.

இடி, மின்னல் முதல், அம்மை நோய், வரை எம் அப்போதைய விளக்கத்துக்கு அப்பாற்பட்டவையே சித்துக்கள், தெய்வங்கள் ஆகின.

இப்போ மறுபடியும் செல்லப்பரின் இரும்பு கூழுக்கு வருவோம். இரும்பு எனும் ஒரு திண்ம உலோகம், திரவமாக மாற அதி கொதி நிலை வேண்டும் என்பது எமது தற்போதைய அறிவு. ஆனால் இரும்பை திரவ நிலையிலேயே வைத்தபடி, வெப்பநிலைய மட்டும் தணிக்கும் ஒரு முறைய (மறுபடியும் திண்மம் ஆகாமல்) நாளைக்கே விஞ்ஞானம் கண்டுபிடிக்கலாம் அல்லவா? ( மூலக்கூறுகளை மாற்றி மூலங்களின் இயல்பை மாற்றலாம் என்பதுதான் அணுச்சிதைவு, அணு அமைப்பு விஞ்ஞானத்தின் அடிப்படை). 

இப்படி ஒரு முறையை செல்லப்பர் அறிந்து பயன்படுத்தினாரா? 99% இருக்க முடியாது எனவே நானும் நம்புகிறேன் ஆனால் 1% வாய்ப்பு உண்டல்லவா?

எனவே சித்துக்கள் எனச் சொல்லப்படுபவற்றை நாம் நம்ப வேண்டியதில்லை. ஆனால் உண்மையிலேயே நாம் விஞ்ஞானத்தின் பாற்பட்டவர்களாயின் இதை பற்றி ஆர்வமாக (curious) இருப்பது நம் கடமை.

எப்போது, இதுதான் முடிந்த முடிபு என விஞ்ஞானம் சொல்கிறதோ அப்போதே அது விஞ்ஞானம் எனும் பண்பை இழந்து நம்பிக்கை dogma எனும் நிலையை அடைந்துவிடுகிறது. விஞ்ஞானத்தில் dogmatic அணுகுமுறைக்கு இடமே இல்லை.

be curious, be very curious. 
 
கோஷன் நீங்கள் அறிவியல்  விஞ்ஞானத்தை மதங்கள் பரப்பும் மூடத்தனததுடன் ஒப்பிடுவதே அபத்தமானது.  வெறும் 200 வருடங்களுக்கு முன்பு வாழ்நத கடையுற் சாமியார் என்ற நபரிடம் ஏதோ பெரிய தொழல் நுட்பம் இருத்திருக்கும்  என்ற உங்கள் ஊகம் 100 வீதம்  தவறானது. இங்கு   1 வீத ஊகதிற்கே இடமில்லை. அப்படி அவர்களுக்கு  சக்தி இருந்ததென்றால் அப்படி சக்தியை வைத்து உலக சமுதாயத்திற்கு என்ன செய்து கிழித்தார்கள் இந்த சித்தர்கள். சித்த வைத்தியத்தை கூட தமது எதிர்கால சந்ததிக்கு முறைசார் கல்வியாக வழங்காமல் சென்றவர்கள் தான் இந்த சித்தர்கள். 

விஞ்ஞானிகள் தமது கண்டுபிடிப்புகளை உலக சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார்கள். அவர்களின்  அனைத்து  கண்டுபிடிப்புக்களும் அற்புதங்கள் அல்ல. அவற்றிற்கு ஒரு அடிப்படை இருந்தது. அதனை உலகத்திற்கு தெளிவாக நிருபித்தவர்கள் விஞ்ஞானிகள்.  இப்படியாக சக்தி வாய்ந்த சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் எமது சமுதாயம் எந்த   மனோ சக்தியும் இல்லாமல் வந்த அந்நியருக்கெல்லாம் அடிமைப்பட்டது தான்  மிச்சம்.  கடைசி தாம் வாழ்ந்த  சமுதாயத்திற்காவது தங்கள் ஆன்மீக  சக்தியை வழங்கவில்லை இந்த சித்தர்கள். மாறாக அவர்களை வைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் மூடத்தனங்கள் தான்  விதைக்கப்படுகின்றன. தமது அரசியல் பொருளாதார  தேவைகளுக்கெல்லாம் அடுத்தவனிடம் இரந்து வாழும்  தங்கிவாழும் ஒரு கூட்டதைத்தான்  இந்த மதங்ககளால் உருவாக்க முடிந்துள்ளது என்பது உங்களைப்போன்ற சிந்தனை ஆற்றல் கொண்டவரகளுக்கு தெரியாத விடயமல்ல. உங்களை போன்ற கருத்தளர்களுக்கு இதை கூற உண்மையில் எனக்கு வெட்கமாக உள்ளது

ஆன்மீகம்  என்பது மனித வாழ்வின் ஒரு சிறு பகுதி மட்டும் தான். அதுவே வாழ்க்கைகையாகி விடாது. நாள் முழுவதும் உழைக்கும் உழைப்பாளி ஓய்வெடுப்பது  போல தான் ஆன்மீகம் இருக்க வேண்டும். நாள் முழுக்க ஒய்வில் இருந்தால் அவன் பண்டாரம். மனித வாழ்வின் அர்த்தம் என்பது இந்த உலகில் சுய ஒழுக்கத்துடன் ஒருவரை ஒருவர் சமமாக  மதித்து,   உழைத்து  மகிழ்வாக வாழ்ந்து தன்னால் தனது  அடுத்த தலைமுறைக்கு செய்யக்கூடிய நன்மைகளை செய்துவிட்டு போவதே. தேவையில்லாம் கடவுளை தேடி தனது பொன்னான நேரத்தை waste ஆக்க அல்ல. கடவுளை தேடுவதை விட கடவுள் துகள்களை தேடுவது பயனுள்ளது.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென்,

நம்பிக்கைக்கும் விஞ்ஞானத்துக்கும் எனக்குத்  தெரிந்த வித்தியாசம்: நம்பிக்கை முடிந்த முடிபு என்று ஒன்றை புகுத்தும்.

விஞ்ஞானம் - இப்போதைக்கு இதுதான் எனச்சொல்லி திறந்த மனதுடன் இருக்கும். தவிரவும் ஒருவர் இரும்புக் கூழை குடித்தார் எனச் சொல்லும் போது, விஞ்ஞானம் அதை இருக்கும் தரவுகளை வைத்து உடனடியாக மறுக்காது. மாறாக - இதன் பின்னால் ஏதேனும் விளக்கம் இருக்குமா எனத் தேடும். இல்லை எனும் போது. இப்போதைக்கு இல்லை, எதிர்காலத்தில் இருக்கலாம் (1%) எனப்போட்டு வைக்கும்.

பொதுவாக விஞ்ஞானிகள் யாரும் கடவுள் கொள்கையை அடித்து மறுப்பதில்லை ஏனெனில் அவர்கள் தேடலுக்கு விசுவாசிகள். ஒரு காலத்தில் கடவுள் கொள்கை கூட விஞ்ஞான ரீதியாக நிறுவப்படலாம் என்பதற்கும் ஒரு கதவை அவர்கள் திறந்தே வைப்பார்கள். 

விஞ்ஞானத்தை ஒரு மதம் போல கடைப்பிடிப்பவர்கள்தான் - இது அல்லது அது என கறுப்பு-வெள்ளையாக வாதிடுவர்.

பிரபஞ்சத்தின் ஆக்கம், பிரபஞ்ச சக்திகள்,  என பல விடயங்கள் இன்னும் எமக்கு விளங்காதா grey areas.   பெளதீக விதிகள் பிழைத்துப்போகும் நிலை ஒன்று உளது தெரியுமா ? உலகில் நாம் இரும்பு இன்ன வெப்ப நிலையில் உருகும் என ஒரு பெளதீக விதியை வைத்துள்ளோம். ஆனால் அண்டவெளியில் பெளதீக விதிகள் பிழைக்கும் புள்ளியில் - இரும்பு இன்னோர் வெப்ப நிலையில் உருகக்கூடும்.

இது செல்லப்பா சுவாமிக்கு எப்படி தெரியும்? என்றால் என்னிடம் பதில் இல்லை, ஆனால் இதை ஒரே அடியாக தூக்கி எறியவும் கூடாது என்பதே உண்மையான விஞ்ஞானியின் நிலையாக இருக்க முடியும்.

அடுத்து,

நீங்கள் மதங்களையும் (நம்பிக்கை) கருதுகோள்களையும் போட்டு குழப்புகிறீர்கள்.

கடவுள் உள்ளார் - இது கருதுகோள். 

அவர் யானை முகத்துடன், பானை வயிற்றுடன் உள்ளார், இத்யாதி இத்யாதி - மதம். எனும் நம்பிக்கை.

மதத்தால் விளைந்த இன்னல்கள் எல்லாவறையும் கடவுள் இருக்கிறார் என்ற கருதுகோளின் தலையில் சுமத்த முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

மதங்களுக்கும் இது பொருந்தும். நம்பிக்கை / செல்லும் மார்க்கம் தான் வேறு; நம் எல்லோருக்கும் மேலான சக்தி ஒன்று தான் - இறைவன் ஒன்று தான். இதை உணர்ந்தோர் தான் யோகர் உட்பட்ட பல மகாஞானியர். 

இறைவனை யாரும் உணர்ந்ததில்லை.

இறைவனை யாரும் பார்த்ததுமில்லை.

யோகரோ, ஞானிகளோ உணர்ந்ததுமில்லை.

அப்படி உணர்ந்தார்கள் என்று, என்னமோ யோகரோ, ஞானிகளோ சொன்னால், அவர்கள் மகா பொய்யர்களே.

இப்படிப்பட்ட பொய்யர்களை நம்பும் கூட்டங்கள், அப்பாவி ஏமாளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

பிரபஞ்சத்தின் ஆக்கம், பிரபஞ்ச சக்திகள்,  என பல விடயங்கள் இன்னும் எமக்கு விளங்காதா grey areas.   பெளதீக விதிகள் பிழைத்துப்போகும் நிலை ஒன்று உளது தெரியுமா ? உலகில் நாம் இரும்பு இன்ன வெப்ப நிலையில் உருகும் என ஒரு பெளதீக விதியை வைத்துள்ளோம். ஆனால் அண்டவெளியில் பெளதீக விதிகள் பிழைக்கும் புள்ளியில் - இரும்பு இன்னோர் வெப்ப நிலையில் உருகக்கூடும்.

இது செல்லப்பா சுவாமிக்கு எப்படி தெரியும்? என்றால் என்னிடம் பதில் இல்லை, ஆனால் இதை ஒரே அடியாக தூக்கி எறியவும் கூடாது என்பதே உண்மையான விஞ்ஞானியின் நிலையாக இருக்க முடியும்.

நான் சொல்லியிருக்க வேண்டியதை இலகுவாக கூறி விடீர்கள். நன்றி.

இதை மனதிற்கொண்டே, விஞ்ஞான அறிவு மட்டத்தை சொல்லி இருந்தேன்.

விஞ்ஞானத்தின் தற்போதையா புரிதல் படி, இது போன்ற செயல்கள் நடப்பதற்கு சாத்தியமில்லை. அதாவது, அறிவின் அளவு மட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2019 at 5:04 PM, மாங்குயில் said:

 எதிலும் பற்றற்ற நிலை ஒரு மனிதனுக்கு வருவதென்றால், அவன் புத்தி பேதலித்தவனாக,  பைத்தியம் பிடித்தாலேயொழிய, அந்த நிலை வராது. 

பற்றற்ற நிலை, நடைப்பிணத்தை விட மோசமானது.

ஞானிகளுக்கு விருப்பு, வெறுப்பற்ற சமநிலையான மனநிலை இருக்குமென்று, உங்களுக்கு எப்படித் தெரியும்?

ஒருவனின், முகபாவனை, வெளித்தோற்றம், நடைமுறை வாழ்க்கை போன்றவைகளை வைத்து, அவன் எப்படிப்பட்டவன் என்று ஓரளவு ஊகிக்கலாம்.

ஆனால், ஒருவரின் விருப்பு வெறுப்புகள், உள்ளக்கிடக்கைகள் அவனைத் தவிர, வேறெவராலும்  முழுமையாகக் கண்டறிய முடியாது.

பலரும் தற்போதிருக்கும் சாமியார்களை வைத்து முன்னோர்களை எடைபோடுகிறார்களோ தெரியவில்லை.
செல்லப்பா சுவாமியை விசர்ச் செல்லப்பர் என்றும் மக்கள் அழைத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.