Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.

court.jpg

“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்.

இந்த நிலையில் மனு மீதான கட்டளைக்கு மன்று இன்று நியமித்திருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.

https://www.virakesari.lk/

நீதிபதி சமூக நலன் கொண்டவராகவும் தெரிகின்றார் !

“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்."

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனு

"தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்" பாடலைக்கேட்டு கணவன் குளிக்க மறந்து குடித்திருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்

 "நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” 

யாரவது சட்டத்திட்கும் மேற்கூறப்பட்ட வசனத்திட்கும் இடையிலான தொடர்பை விளக்க முடியுமா ??  

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பமில்லாது  வாழமுடியாது

அதிலும்  பிடிக்காத  குளிக்காதவருடன்????🤣

முடிவு  சரி  தான்

வெட்டிவிடவேண்டியது  தான்  இருவருக்கும்   நல்லது😥

"கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்."

"யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார். "

சட்டத்தரணிகள் வீட்டில் காசு மழை 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

விருப்பமில்லாது  வாழமுடியாது

அதிலும்  பிடிக்காத  குளிக்காதவருடன்????🤣

முடிவு  சரி  தான்

வெட்டிவிடவேண்டியது  தான்  இருவருக்கும்   நல்லது😥

சாதாரண வியர்வை நாற்றமே தாங்க முடியாதபோது,  குளிக்காவிட்டால் ? 

வெட்டிவிடவேண்டியதுதான்  !!!!!

1 hour ago, Maharajah said:

 "நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” 

யாரவது சட்டத்திட்கும் மேற்கூறப்பட்ட வசனத்திட்கும் இடையிலான தொடர்பை விளக்க முடியுமா ??  

விவாகரத்து கேட்பதானால் கண்ட கண்ட காரணங்களை கூறி விவாகரத்து கேட்க முடியாது.

வெளிநாடுகளில் குறட்டை விடுவதை முக்கிய காரணமாக காட்டி விவாகரத்து கேட்பது வழமை. குளிக்கவில்லை என்ற காரணத்தை கூறினால் இங்கும் விவாகரத்து கொடுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

விவாகரத்து கேட்பவர்கள் என்னென்ன காரணத்தை கூறினால் விவாகரத்து கொடுப்பார்கள் என்ற விடயத்தை முன்கூட்டியே கேட்டறிந்து அதில் ஒன்றை குறிப்பிட்டு கேட்பது தான் வழமை.

சட்டத்தரணிகளுக்கு இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஊரில் சட்டத்தரணிகளுக்கும் பல விடயங்கள் தெரியாது.

2 hours ago, Paanch said:

"தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்" பாடலைக்கேட்டு கணவன் குளிக்க மறந்து குடித்திருப்பார். 

😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Maharajah said:

சாதாரண வியர்வை நாற்றமே தாங்க முடியாதபோது,  குளிக்காவிட்டால் ? 

வெட்டிவிடவேண்டியதுதான்  !!!!!

அதுவும்  யாழில்

ஒரு நாளைக்கு 2 தரமாவது  குளிக்கணுமே??😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதுவும்  யாழில்

ஒரு நாளைக்கு 2 தரமாவது  குளிக்கணுமே??😀

விசுகு அவர்களே நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்.....? இன்று யாழில் கருத்தெழுதுவோர் சிலர் தண்ணிக்குள் இருந்தே எழுதுவதுபோல் தெரிகிறது.! அவர்களுக்கு எதற்குக் குளியல்...?? 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.

“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்.

இந்த நிலையில் மனு மீதான கட்டளைக்கு மன்று இன்று நியமித்திருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.

https://www.virakesari.lk/

அசுத்தமானவரினால் நோய்கள் தொற்றினால் 
அதுக்கு நீதிபதி பொறுப்பு ஏற்பாரா?

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுக்கு 
சில பழக்கவழக்கங்களை பொதுவாகவே இருவரும் கடைபிடிக்க வேண்டும் 
அவ்வாறு இல்லாதவர்களை நீங்கி வாழ்வதுதான் சரியானது.

மனுவை தள்ளுபடி செய்தது தவறு என்றே நான் கருதுகிறேன் 
வேண்டுமானால் மேற்கொண்டு விசாரணைகள் செய்திருக்கலாம். 

சுகாதாரமற்ற ஒருவருடன் சென்று உடலுறவை வை எனும் நீதிபதியின் போக்கு 
சமூகத்தில் என்ன நீதியை கொண்டு வரும்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இவர் பிற்போக்கான நீதிபதி. கணவனும் விவாகரத்துக்கு ஒத்துக்கொண்டுள்ள நிலையில் இந்த 

தீர்ப்புக்கு எதிராக கணவனும் மனைவியும் ஒற்றுமையாக மேன்முறையீடு செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maharajah said:

சாதாரண வியர்வை நாற்றமே தாங்க முடியாதபோது,  குளிக்காவிட்டால் ? 

வெட்டிவிடவேண்டியதுதான்  !!!!!

ஒரு பெண்ணிடம்...சில அபூர்வமான ஆயுதங்கள்...படைத்தவனால்...அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன!

அவற்றை அவள் சரியாக உபயோகித்தால்...தண்ணியைக் காணாதவனே....தண்ணீரில் மிதப்பான்!

இவர்களுக்கிடையில்  வேறு பிரச்சனைகள் இருக்க வேண்டும்!

;குளிக்காதது ஒரு வெளிக்காரணமாகக் காட்டப் படுகின்றது எனநினைக்கிறேன்!

மாப்பிள்ளை தண்ணி பாவிப்பவரா,  என்று திருமணத்தின் போது கேட்கப்பட்டு அவர் இல்லை என்று கூறி இருக்கலாம். அந்த நேர்மையை காப்பாற்ற அவர்  அப்படி நடந்திருக்கலாம்.  அல்லது தண்ணி பாவிக்காதீர்கள் என று மனைவி கூறியதை அவர் தப்பாக விளங்கி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maharajah said:

 "நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” 

யாரவது சட்டத்திட்கும் மேற்கூறப்பட்ட வசனத்திட்கும் இடையிலான தொடர்பை விளக்க முடியுமா ??

விவாகரத்து, திருமண உறவை முறித்தல்  மற்றும் கலைத்தல், இவற்றை தவிர்து சட்ட அடிப்படையில் பிரிந்து வாழுதல் (legal separation) என்பவற்றின்  European தலைநகரமாகிய  UK இல் கூட,  5 சட்ட அடிப்படையிலான காரணங்களே (grounds) உள்ளது.

தன் துணை தவிர்ந்து பிறனை நயத்தல் (Adultery) 
நடத்தை (Behaviour), 
கைவிடல் (Desertion), 
2 வருடங்கள் இருவரும் ஒத்து பிரிந்து வாழ்ந்தமை (Separated for 2 years and consent ), 
5 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தமை (Separated for 5 years )

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/800140/d8-eng.pdf

சட்டத்தின் அடிப்படையில், குளிக்காமல் இருப்பது, பொது (common law) சட்டத்தை, வெகுசன சட்டத்தையோ (public law), நீதிமன்ற தீர்ப்பினால் உருவாகும்  சட்டத்தையோ (case law)   மீறவில்லை.

பொது சட்டம் என்பது, கலாசாரம், விழுமியங்கள் மற்றும் அதன் அடிப்படையில் நீதித்துறையால் மாறும் மன்றத்தால் எடுக்கப்படும் முடிவுகளும், தீர்ப்புகளும்.

பொது (common law) சட்டத்தை மூலமாகவே, எமது கோயில்களில் (குறிப்பாக இலங்கையில் உள்ள சைவ கோயில்களில்) நடைபெறும் திருமணம் சட்ட வலுவுடையதாகிறது. UK  யிலும் தேவாலயத்தில் நடந்த விவாகங்கள் ஷட்டவுழுவுடையதாக இருந்தது, ஆனால், அதை UK நீக்கி விட்டது.

(பிறர்) அனுபவத்தில் நான் நேரடியாக அறிந்தது, விவாகரத்து , முறித்தல் அல்லது கலைத்தல் என்பதற்கு, விவாகம் மீட்கப்பட முடியாத அளவிற்கு முறிந்து இருக்க வேண்டும்.

சிலவேளைகளில், உரிய காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவை விவாகத்தை மீட்கப்பட முடியாத அளவிடற்கு இட்டு சென்றுள்ளது  என்பதை நிரூபிக்க வேண்டும். 

மேலே சொல்லப்பட்ட 5 வது காரணத்தை, UK இல் no fault divorce ground என்று, அதாவது இருவரிலும் ஓர் தவறுகளோ அல்லது காரணங்களோ இல்லை. அதில் கூட, விவாகம்  மீட்கப்பட முடியாத அளவிடற்கு இட்டு சென்றுள்ளது  என்பதை நிரூபிக்க வேண்டும். 

முக்கியமான பிரச்னை என்னவென்றால், அவ்வாறு நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பினும், நிரூபணத் தன்மையானது வழக்கை விசாரிக்கும் Judge இன் perception உம் செல்வாக்கு செலுத்தும்.

 இதுவும்,ஒரு காரணம், ஒரே அடிப்படை காரணங்கள்  கொண்ட இரு விவாக இரத்துகள், வெவ்வேறு தீர்ப்பு வருவதற்கு.     

நான் சட்ட வல்லுநர் அல்ல.

Edited by Kadancha
add info

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.