Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்

Featured Replies

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். 

vlcsnap-1914-08-09-17h28m02s438.png

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 

கடந்த ஆட்சியில் 12 போராளிகள் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர். 

இந்த நிலையில் மொட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார். மொட்டுக்கு வாக்களியுங்கள். ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் விமர்சனங்களை முன் வைத்த அவர், எந்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்னத்திற்கு தமது ஆதரவினை வழங்கியது எனவும் வினாவெழுப்பினார். 

எம்மைப் பொறுத்தவரையில் இரு அரசியல் தலைவைர்களும் தராசு போன்றவர்கள். யார் வந்தாலும் எமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68745

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ampanai said:

ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார்

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இது ஒரு உளவியல் போர் யுத்தி 
சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளும் வர்க்கம் உள்ள 
எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது.

தமிழர்களுக்கு  தூரோகத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை என்பதால் 
இந்த பகுதி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. 

  • தொடங்கியவர்
2 hours ago, ampanai said:

இந்த நிலையில் மொட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார். மொட்டுக்கு வாக்களியுங்கள்

இந்த நிலை வர பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானதாக தெரிவது தமிழர் அரசியல் தலைமைகள். இன்றும் கூட அந்த துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது.  

2 hours ago, ampanai said:

ஒன்றில் முழுமையாக எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையில் உள்ள 132ற்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்த வரிகள் என்னை, கையாலாகாத ஒரு சக உறவாக,  வெட்கி வேதனைப்படுத்திய வரிகள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் கோத்தாவுக்கும்,சஜீத்திற்கும் வாக்கு கேட்கும் தமிழர்களை பார்த்து " Masochist " என்று ஒருவர் எழுதி இருந்தார்...உண்மையிலேயே அந்த வார்த்தையை இன்டைக்கு தான் கேள்விப் படுறன்...உண்மையில் இது உளவியல் சம்பந்தமான ஒரு நிலைதான் "Masochism" என்றால் தன்னை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ வேதனைப்படுத்திய ஒருவரை துன்பங்கள் இழைத்த ஒருவரை தொடர்ந்து விரும்புவது அதாவது போட்டு வெளு வெளுனு வெளுத்தவனை சாவடி அடித்தவனை காதலிப்பது வேதனையில் சுகம் காண்பது தொடர்ந்து துன்பத்திலே வாழவிரும்புவது.🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

2009 இல் முற்றாகவே தமிழர்களின் பலமாக இருந்த புலிகளை அழித்துவிட்டார்கள்.  இப்போது முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான் தொடக்கம், சரணடைந்து அரசியலில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் எல்லோரும் புலிகளை அழித்த கோத்தாவின் பின்னால் நிற்கின்றனர். 

பத்து வருடங்களின் தமிழர்களின் நிலை இப்படியாகிவிட்டது. இப்போதெல்லாம் புலிக்கொடியைப் பார்த்தாலே உளச்சோர்வு வருகின்றது.🙁

உங்க‌ளின் வலியும் வேத‌னையும் புரிகிற‌து கிருப‌ன் அண்ணா 😓/

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

இதே கோத்தா.. தமிழ் ஆண்கள்.. இந்து சமுத்திரத்துக்கும்.. தமிழ் பெண் தனது இராணுவத்திற்கும் என்று கொக்கரித்ததை யாரும் இலகுவில் மறக்கக் கூடாது.

எதுஎப்படியோ.. தம் இருப்புக்காக இயக்குபவனுக்கு இசைவாக நடக்க வேண்டியது இவர்களின் இன்றைய காலத் தேவையாகி விட்டது. இதனை மக்கள் செவிமடுக்கனுன்னு அவசியமில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

இதே கோத்தா.. தமிழ் ஆண்கள்.. இந்து சமுத்திரத்துக்கும்.. தமிழ் பெண் தனது இராணுவத்திற்கும் என்று கொக்கரித்ததை யாரும் இலகுவில் மறக்கக் கூடாது.

எதுஎப்படியோ.. தம் இருப்புக்காக இயக்குபவனுக்கு இசைவாக நடக்க வேண்டியது இவர்களின் இன்றைய காலத் தேவையாகி விட்டது. இதனை மக்கள் செவிமடுக்கனுன்னு அவசியமில்லை. 

வ‌ண‌க்க‌ம் ச‌கோத‌ரா , த‌மிழீழ‌த்தில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு , பெரிய‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு மாதிரி அண்ணா ,

வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்தை இப்போது உள்ள‌ சூழ் நிலையில் விரும்ப‌ வில்லை , இளைஞ‌ர்க‌ள் அவ‌ங்க‌ளின் ம‌ன‌ நிலை வேறு மாதிரி த‌லைவ‌ரை போராளிக‌ளை நெஞ்சில் சும‌ந்து கொண்டு வாழும் இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம் , 

ஒரு உண்மையை சொல்லுறேன் ம‌ன‌ வேத‌னையுட‌ன் , எங்க‌ட‌ ஊரில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நூற்றுக்கு நூறு புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான், எங்க‌ட‌ ஊரை புலியின் கோட்டை என்று தான் சொல்லுவோம் , அந்த‌ ஊரில் இப்போது ட‌க்கிள‌ஸ்சுக்கு ஆத‌ர‌வு கூடிட்டு போகுது , இது எங்கை போய் முடியுமோ தெரியாது /

எம‌க்காக‌ போராடுகிறோம் என்று சொன்ன‌ ஆட்க‌ள் ப‌ல‌ர் சிங்க‌ள‌வ‌னின் எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்கின‌ம் அண்ணா ,  
இந்த‌ 10வ‌ருட‌ம் எம்ம‌வ‌ர்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டிலும் ச‌ரி த‌மிழீழ‌த்திலும் ச‌ரி பெரிசா ஒன்றையும் சாதிச்சு கிழிக்க‌ல‌ , சும்மா கால‌த்தை ஓட்டின‌து தான் மிச்ச‌ம் , இன்னும் 10 வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்த‌ நில‌மை இத‌ விட‌ மோச‌மாய் இருக்கும் அண்ணா ,

எவ‌ள‌வு உயிர் தியாக‌ம் , எப்ப‌டி எல்லாம் எம் போராட்ட‌த்துக்கு க‌டின‌மாய் பாடு ப‌ட்டோம் , எல்லாம் க‌ண் இமைக்கும் நொடியில் அழிந்து போய் விட்ட‌து , 

யாழில் ம‌ற்றும் முக‌ நூலில் கிறுக்கி நாம் ஒன்றையும் சாதிக்க‌ முடியாது அண்ணா , 
நாடு போர‌ போக்கை பார்த்த‌ மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீனாய் போயிம்மோ என்ற‌ ம‌ன‌ வேத‌னை தான் வ‌ருது 😐/

  • தொடங்கியவர்
4 hours ago, nedukkalapoovan said:

இப்படிப் பேசுவதிலும் பேசாமல் இருப்பது மேல். 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்தவர்களே.. 25 ஆயிரம் போராளிகளையும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். 

வெளியில் இவ்வாறு பேச வேண்டிய தேவை இருக்கலாம். 

ஆனால், வாக்கை வேறு யாருக்கும் கூட போடலாம், அதுதான் சனநாயகத்தில் உள்ள ஒரு அதிசயம். 

இவர்கள் ஒன்று திரண்டு ஒரு கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் அல்லவா? ஊடகவியலாளர் எனச் சொல்லப்படும் வித்தியாதரனும் அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தானே? கடந்த் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பற்றினார்கள் என நினைக்கின்றேன். யாருக்காவது நினைவு இருக்கா?

யாழிலும் ஒருவர் அக் கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து எழுதிக் கொண்டு இருந்தார். அவர் இப்ப கோத்தாவுக்கு ஆதரவு கொடுப்பார் என நினைக்கின்றேன்.

7 hours ago, நிழலி said:

மேலுள்ள செய்தி “புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி” பற்றிய செய்தி.

நீங்கள் கூறுவது “ஜனநாயக போராளிகள் கட்சி” பற்றி என நினைக்கிறேன். அவர்கள் சஜித்துக்கு ஆதரவு.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு

08-11-2019

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார்.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம்.

எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம்.

தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள், அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய,

குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­ பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம். அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.  

அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.

https://www.virakesari.lk/article/68502

16 hours ago, Maruthankerny said:

இது ஒரு உளவியல் போர் யுத்தி 
சிறுபான்மை இனத்தை அடக்கி ஆளும் வர்க்கம் உள்ள 
எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது.

தமிழர்களுக்கு  தூரோகத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை என்பதால் 
இந்த பகுதி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. 

கடந்தாலும் உண்மையான நிலைமை!

13 hours ago, ரதி said:

இந்த தேர்தலில் கோத்தாவுக்கும்,சஜீத்திற்கும் வாக்கு கேட்கும் தமிழர்களை பார்த்து " Masochist " என்று ஒருவர் எழுதி இருந்தார்...உண்மையிலேயே அந்த வார்த்தையை இன்டைக்கு தான் கேள்விப் படுறன்...உண்மையில் இது உளவியல் சம்பந்தமான ஒரு நிலைதான் "Masochism" என்றால் தன்னை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ வேதனைப்படுத்திய ஒருவரை துன்பங்கள் இழைத்த ஒருவரை தொடர்ந்து விரும்புவது அதாவது போட்டு வெளு வெளுனு வெளுத்தவனை சாவடி அடித்தவனை காதலிப்பது வேதனையில் சுகம் காண்பது தொடர்ந்து துன்பத்திலே வாழவிரும்புவது.🤣

கோத்தபாயா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்குப் பிச்சை எடுபவர்கள் மனோநிலையும் "Masochism" மனோநிலைதான்!

73375613_10221106088544649_8945944310906

  • தொடங்கியவர்

கோத்தா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம், இனவழிப்பு என கூறும் எதிர்த்தரப்பு. சஜித் ஆட்சிக்கு வந்தால் அதி உச்ச அரசியல் பகிர்வு என கூறும் கூட்டமைப்பு. 

உண்மை, இரண்டிற்கும் நடுவே தான் இருக்கும்.  

கோத்தா வந்தால் ,மீண்டும் வெள்ளை வான் கலாச்சாரம் தலை தூக்காது. சஜித் வந்தால் அதி உச்ச அதிகார பகிவும் இல்லை. ஆனால், யார் வந்தாலும் இனவழிப்பு தொடரும். 

சிங்களவர்களுக்கு வாக்களித்தால் தமிழர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் சர்வதேசத்திற்கு சிங்களம் கூறும். சிவாஜிக்கு வாக்களித்தால் அது சிங்களத்தை நிராகரிப்பதாகவும் பார்க்கலாம். 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 

6 hours ago, Lara said:

மேலுள்ள செய்தி “புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி” பற்றிய செய்தி.

நீங்கள் கூறுவது “ஜனநாயக போராளிகள் கட்சி” பற்றி என நினைக்கிறேன். அவர்கள் சஜித்துக்கு ஆதரவு.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு

08-11-2019

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அக் கட்­சியின் ஊடக பேச்­சாளர் க.துளசி தெரி­வித்­துள்ளார்.

ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் தலை­மைச்­செ­ய­ல­கத்­தினால் நேற்று  ஊடக பேச்­சாளர் க. துள­சியின் பெய­ரிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யினை தெரி­வு­செய்யும் தேர்தல் ஒன்­றினை நாம் விரைவில் எதிர்­கொள்ள இருக்­கிறோம்.

எமது உற­வு­களே தெற்­கா­சிய பிராந்­திய நலன் சார்ந்து ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முலாம் பூசி இலங்கை தீவின் குடி­க­ளான தமி­ழி­னத்தின் மீது மாபெரும் அழி­வு­களை ஏற்ப்­ப­டுத்தி முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் அனு­கூ­லத்­தினை தமி­ழினம் பயன்­ப­டுத்­தி­கொள்ள வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான தேர்­த­லா­கவே இதனை நாம் கரு­து­கிறோம்.

தமி­ழர்­க­ளது வாக்­கு­களே இது வரையில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் ஆதிக்­க­சக்­தி­யாக இருந்து வந்­துள்­ளது. அது வாக்­க­ளிப்பின் ஊடா­கவும் வாக்­க­ளிப்பை தவிர்ப்­பதன் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வ­கையில் பல வேட்­பா­ளர்கள் இத்­தேர்தல் களத்­திற்கு வந்­தி­ருந்­தாலும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்­டிகள் உச்­சம்­பெ­று­கி­றது.  அவ்­வ­கையில் எமது வாக்­கு­ப­லத்­தினை சரி­யான முறையில் உச்ச அளவில் பிர­யோ­கிப்­பதன் ஊடா­கவே எமது எதிர்­கால நலன்கள், அதி­கா­ரப்­பங்­கீடு, அர­சியல் கைதி­க­ளது விடு­தலை மற்றும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் இயல்பு நிலைமை என்­ப­ன­வற்றை தற்­காத்­து­கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அர­சு­க­ளுடன் இசைந்து செல்­ல­தக்க  சட்­டத்தின் ஆட்­சி­யினை மதித்து. நிலை­நி­றுத்­தக்­கூ­டிய,

குறிப்­பாக குடும்ப ஆட்சி முறைக்கு முற்­று­புள்ளி வைத்து செய­லாற்­ற­கூ­டி­ய­வ­ராக நாங்கள்  சஜித்­ பி­ரே­ம­தா­சாவை கரு­து­கிறோம். அவ்­வ­கையில் ஜன­நா­யக போரா­ளி­கள்­கட்­சி­யினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில்  சஜித்பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.  

அன்பான எமது மக்களே தேர்தல் தினத்திலன்று  தாயகபிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.

https://www.virakesari.lk/article/68502

முன்னால் போராளிகளுக்கிடையில் கூட இப்படி இரு வேறு கட்சிகளா? அவர்களிடையேயே ஒற்றுமை இல்லையெனில் வேறு எவரிடம் அதை எதிர்பார்க்க முடியும்? கிருபன் சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது.

5 hours ago, ampanai said:

சிங்களவர்களுக்கு வாக்களித்தால் தமிழர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் சர்வதேசத்திற்கு சிங்களம் கூறும். சிவாஜிக்கு வாக்களித்தால் அது சிங்களத்தை நிராகரிப்பதாகவும் பார்க்கலாம். 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 

இலங்கை தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போதே அவர் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்பையும், ஒற்றையாட்சியையும், சட்டங்களையும் ஏற்றுக் கொண்டவராகவே ஆகின்றார். அதனால் தான் அவர் இலங்கை பிரஜையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அங்கு காணப்படுகின்றது. அப்படி போட்டியிடும் எவரை ஆதரித்தாலும் அதை சர்வதேசம் வேறு கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. சர்வதேசம் அதை தானாகவே விளங்கிக் கொள்ளும். அதை சிங்களம் சொன்னால் தான் சர்வதேசம் நம்பும் எனும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக அமையும் என்றால் அந்த மகேசனும் பல தடவைகள் தவறிழைத்தவனாகவே ஆகின்றான். ஏனெனில் மக்களின் தீர்ப்பால் உலகில் பல சர்வாதிகாரிகளும், அழிவை ஏற்படுத்துகின்றவர்களும் உருவானதாகவே வரலாறு சொல்கின்றது.

  • தொடங்கியவர்
1 hour ago, நிழலி said:

Let us agree to disagree 🙂 குறிப்பு : கனடாவில் சுய நிர்ணய உரிமை கொண்ட மாநிலம், நாட்டின் பொது தேர்தலில் பிரிவினை கேட்டு போட்டியிடுகின்றது.

24 minutes ago, ampanai said:

Let us agree to disagree 🙂 குறிப்பு : கனடாவில் சுய நிர்ணய உரிமை கொண்ட மாநிலம், நாட்டின் பொது தேர்தலில் பிரிவினை கேட்டு போட்டியிடுகின்றது.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? கனடா அரசியலமைப்பில் பிரிவினை கோருவது தவறல்ல என இருக்கும் போது அப்படி தேர்தலில் பிரிவினைக்காக போட்டியிட முடியும். ஆனால் இலங்கை / இந்திய அரசியலமைப்பில் அவ்வாறு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு கொடுப்பதென்பதும் வாக்களிப்பதென்பதும் அவரவர் உரிமை  கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு எனும் போது இவர்களும் ஆவர்களுக்கு கொடுக்கத்தானா வேண்டும் 

யார் வென்றாலும் நமக்கு இருபக்கமும் அடிதான் அந்த அடி வேண்டினவனுக்கும் அதில் இருந்து விடுபட்டவனுக்குமே அதன் வலி புரியும்  

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் செயலாளளர் வெல்லக் கூடாதென்பதே நான் கதைத்த பெரும்பாலான சனம் சொல்வது, அதற்காகவே அன்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

முன்னாள் செயலாளளர் வெல்லக் கூடாதென்பதே நான் கதைத்த பெரும்பாலான சனம் சொல்வது, அதற்காகவே அன்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

இவர்கள் தமிழர்கள்தானே. பயம் இருக்கத்தான் செய்யும். 

ஆனால் மத்தியதர வர்க்க சிங்களவர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரிக்கும் நிலை உள்ளதால் கோத்தபாயாவின் வெற்றியை தடுக்கமுடியாது என்றுதான் நினைக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.