Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…

November 13, 2019

00-2.jpg?resize=800%2C600

யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான 31 வயதுடைய  நிசாந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

00-1.jpg?resize=800%2C600

ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்

image_65385fc671.jpgரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன. 

இன்று (13) காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையில் ஈடுபட்ட்ட ரயில், யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில்,  ரயில் கடவையை  கடக்க முற்பட்ட நபருடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.

சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன. 

சம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.

 பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.

-எம்.றொசாந்த்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ரயல-கடவய-மறதத-யழல-ஆரபபடடம/71-240990

15 hours ago, ampanai said:

சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அரசுக்கு முண்டு கொடுக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை, சரவணபவன், போன்றவர்களை நம்பிப் பயனில்லை என்ட நிலைல மக்கள் நேரடியாகவே போராடத்  தொடங்கிவிட்டனர்!

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் வீதி புகையிரதக் கடவை.... மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் உள்ளது.
அதற்கு இன்னும், தானியங்கி பாதுகாப்பு  கதவுகளோ...
எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவிகளோ... இல்லாமை மிகவும் வேதனைக்குரியது. 

அதுகும்.... ஒரு இளம் குடும்பத் தலைவரின் இறப்பு,
ஒரு குடும்பத்தை... நிற்கதியாக்கி உள்ளது.
இதுவே... கடைசி இறப்பாக  இருக்கட்டும். 

அடிக்கடி விபத்துக்கள் நடக்குது. ஆனால் அதட்கு பதில் சொல்ல யாருமே இல்லை. அதிகாரிகள் நிச்சயம் இதட்கு பதில் சொல்ல வேண்டும். மேலும் மேலும் அப்பாவி மக்களின் உயிர் பறிபோகாமலிருக்க அரசு எதாவது செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இருந்த பாதுகாப்புக் கடவைகளை எல்லாம் அகற்றிவிட்டு.. இப்போது பாதுகாப்புக் கடவைகளற்ற ரயில் பாதை அமைப்பும்.. மக்கள் அடர்த்தியான இடங்களில் கூட வேகக்கட்டுப்பாடற்ற கடுகதி வேகமும்..  தொடரூந்துத் துறையில் உள்ளோரினது மக்கள் குறித்த அக்கறையின்மையும்.. அரச அதிகாரிகளுக்கு மக்களின் அவலம் குறித்த அக்கறையின்மையும்..  தான் இந்த விபத்துக்கள் திட்டமிட்டு தொடரக் காரணமாகும்.

இன்னொரு அப்பாவி தமிழன் பலி.

ஆனால் தமிழரின் காசில் தான் இந்த தொடரூந்துறையே இப்போ இலாபத்தில் இயங்குவதாக சிங்கள அரசே ஒத்துக் கொண்டுள்ள நிலையில்.. தமிழர்களின் பாதுகாப்புக் குறித்து... பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறை காட்டாமை என்பது.. மிகவும் கண்டிக்கத்தக்கது. 

மீண்டும் மீண்டும் ஒரே தவறிழைக்கப்படுவது விபத்தல்ல.. திட்டமிட்ட செயல் ஆகும்.

வடக்கு ஆளுநர் சென்னைக்கு விமானத்தில் பறக்க முதல்.. இப்படியான அநியாயங்களை தடுக்க தனது புலமையை.. சிங்கள அரசுடனான தொடர்புகளை பயன்படுத்தலாமே..???! 

10 hours ago, nedukkalapoovan said:

வடக்கு ஆளுநர் சென்னைக்கு விமானத்தில் பறக்க முதல்.. இப்படியான அநியாயங்களை தடுக்க தனது புலமையை.. சிங்கள அரசுடனான தொடர்புகளை பயன்படுத்தலாமே..???! 

அவர் புத்த மாநாடு நடத்தினா   சிங்கள அரசு நிதி உதவி முதல் எல்லா ஆதரவு தரும்!

வேற ஏதாவது செய்ய நெச்சா சிங்கள அரசு புலம்பெயர் தமிழர்ட்டை காசை பறிச்சு செய்யச் சொல்லும்.

அதான், அவர் கனடா சென்று தன்ரை சொந்தக்கதை சோகக்கதை சொல்லி காசு பறிக்கப் பாத்தவர்.  வடமாகாண சபை முயற்சில தொடங்கி நிறைவடையும் நிலைல இருக்கும் பல திட்டங்களை தானே செய்தமாதிரி ரீல் விட்டார்.

எல்லாம் ஏமாந்த தமிழனின் தலைல மிளகாய் அரைக்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Image result for fence to railway track"

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிக்கூடாகச் செல்லும் தொடரூந்துப் பாதைக்கு சமாந்திரமாக இப்படியான வேலிகள் அமைப்பது.. கடவைகளில் தானியங்கிப் பாதுகாப்புக் கடவைகள் அமைப்பதும் மட்டுமே இந்த விபத்துக்களை கூடிய அளவில் தடுக்கும். 

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா..??!

Image result for fence to railway track"

Image result for fence to railway track"

Image result for fence to railway track"

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் வீதி புகையிரதப்  பாதையை... கடந்துதான்,
தினமும்,  ஆயிரக்கணக்கான.. பாடசாலை மாணவர்கள்,
யாழ். இந்துக் கல்லூரிக்கும்,  யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கும்...
துவிக் சக்கர வண்டிகளில்... கூட்டம்  கூட்டமகா கதைத்துக்  கொண்டு போவார்கள்.

மாணவப் பருவத்தில்,  அவர்களின்  கதை பிராக்கில்... 
புகையிரத கடவையையோ...  அது, வரும் சத்தத்தையோ அவதானிக்க மாட்டார்கள். 
அந்த வயதில்... அப்படித்தான் இருப்பார்கள்.  

அதனை... கருத்தில் கொண்டு, சம்பந்தப் பட்ட  இடங்களில்  வாழும் மக்கள் அனைவரும்...
இதனைப் போல, பாதுகாப்பற்ற  புகையிரத கடவைகளுக்கு,
சரியான பாதுகாப்பு கொடுக்கும் படி, 
மாநகர சபை, கிராம சபை,   அரச அதிபர் அலுவலகம் போன்ற...இடங்களுக்கும்,
உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் முன்பும்...
சாத்வீக... மறியல் போராட்டம்  செய்ய வேண்டும்.

ஆனால்... இதற்கு, எல்லோரும் ஒற்றுமையாக...
முன் அறிவித்தல் கொடுத்து, ஒரே நாளில் செய்தால்... பலன் நிச்சயம்  கிடைக்கும்.

இல்லையேல்... இன்னும்  மரணங்கள்  தொடர்வதை, தவிர்க்க முடியாது.
அது.... எமக்கு மிகவும் வேண்டிய, உறவினராகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கவனமில்லாமல் வாகனம் ஓடுவேன்,  அதுவும் பாதுகாப்பற்ற,  சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட பாதையூடாக.  ஆனால் விபத்து ஏற்பட்டவுடன் அரசையும்,  பொது நிறுவனங்களையும் குறை சொல்வேன்.  நானாக ஒன்றும் செய்யமாட்டேன்.  எல்லாவற்றையும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பேன்.  

இந்தப்போக்கு சரியானதுதானா ? 

(புகையிரத பாதையில் விபத்தில் அகப்படும் காட்டு விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையே வேறுபாடு இல்லையா   ????? )

1 hour ago, Maharajah said:

வட மாகாணத்தில் தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றும்  அதனால் தான் அங்கு 95% இடங்களில் பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்படவில்லை என்றும், ஏனைய பிரதேசங்களில் விலங்குகள் இருப்பதால் தான் அங்கு 80% இடங்களில் பாதுகாப்பு கடவைகள் அமைந்துள்ளதாகவும் உங்கள் கருத்து அமைகிறது.

மேலும், பாதுகாப்பான கடவைகள் இல்லை என்று தெரிந்த பின்னரும்கூட  தொடரூந்து பாதையைக் கடப்பவர்கள் பொறுப்புடன் கடக்கவேண்டிய அவசியத்தை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, போல் said:

அப்படியல்ல திருவாளர் போல் அவர்களே,  

நான் கூறியது,  எமக்குள்ள பொறுப்பு பற்றியது.  எல்லாவற்றையும் அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் செய்யவேண்டும் என் எதிர்பார்க்கும் மனநிலை தொடர்பானது.  இங்கே அரசாங்கத்தின் பொறுப்பை குறைத்து கூறவில்லை.  ஆனால் நாடெங்கிலும் நடைபெறும் புகையிரத கடவை அகால மரணங்களை  99.9% நாம் தவிர்க்கமுடியும் என்பது என துணிபு. 

மேலே குறிப்பிட்ட அகால மரணத்தை,  சில கணங்கள் நிதானமாக புகையிரத பாதையை அவதானித்திருந்தால் தவிர்த்திருக்கலாம்  இல்லையா ? 

எமக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு நாம் யாரையும் கைகாட்ட முடியாது.  

Edited by Maharajah
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

நான் கவனமில்லாமல் வாகனம் ஓடுவேன்,  அதுவும் பாதுகாப்பற்ற,  சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட பாதையூடாக.  ஆனால் விபத்து ஏற்பட்டவுடன் அரசையும்,  பொது நிறுவனங்களையும் குறை சொல்வேன்.  நானாக ஒன்றும் செய்யமாட்டேன்.  எல்லாவற்றையும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பேன்.  

இந்தப்போக்கு சரியானதுதானா ? 

(புகையிரத பாதையில் விபத்தில் அகப்படும் காட்டு விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையே வேறுபாடு இல்லையா   ????? )

மகாராஜா அவர்களே..... மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில்,
தினமும், பல  பாடசாலை மாணவர்கள்...  அந்தக் கடவையை,
கடந்து செல்லும் பகுதியிலாவது...  ஒரு அரசாங்கம்  தான்,
தனது நாட்டு  மக்களின் உயிரில், கவனம் செலுத்த வேண்டும்.
இது, ஸ்ரீலங்காவில்... தமிழர் வாழும் பகுதியில்,  சாத்தியமில்லை.

இதனை... முன்பே, அரசின் கவனத்திற்கு.. அழுத்தமாக கொடுக்காமல் விட்டது,
அந்த ஊர் மக்களின்... கவலையீனம்.  கண்டனத்திற்குரியது.
அந்த சோம்பேறித்தனம்... நாளை,  வேறு ஒரு தமிழ் பகுதியிலும் நடக்கலாம்.

இவ்வளவிற்கும்... மரணித்தவர், தனது  கவனக் குறைவால்...
மனைவியையும், சிறிய ஒரு வயதுக் குழந்தையையும்...
சொல்ல முடியாத, துயரத்தில்... விட்டு விட்டுப்  போய் விட்டார்.
அதற்குப் பின்.. அவர்கள் வாழ்வதற்காக, போராட்டங்களை,
நினைத்துப் பார்க்க, மிகவும்  வேதனையானது. 

வாகன ஓட்டிகளே.... 
உங்கள் குடும்பத்தையும்,  நினைத்துக் கொண்டு,  வாகனம்  ஓட்டுங்கள்.

2 minutes ago, Maharajah said:

அப்படியல்ல திருவாளர் போல் அவர்களே,  

நான் கூறியது,  எமக்குள்ள பொறுப்பு பற்றியது.  எல்லாவற்றையும் அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் செய்யவேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தொடர்பானது.  இங்கே அரசாங்கத்தின் பொறுப்பை குறைத்து கூறவில்லை.  ஆனால் நாடெங்கிலும் நடைபெறும் புகையிரத கடவை அகால மரணங்களை  99.9% நாம் தவிர்க்கமுடியும் என்பது என துணிபு. 

மேலே குறிப்பிட்ட அகால மரணத்தை,  சில கணங்கள் நிதானமாக புகையிரத பாதையை அவதானித்திருந்தால் தவிர்த்திருக்கலாம்  இல்லையா ? 

எமக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு நாம் யாரையும் கைகாட்ட முடியாது.  

உண்மை!

மரணப் புதைகுழிகள் இருப்பது தெரிந்தும் பொறுப்பில்லாமல் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maharajah said:

எமக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு நாம் யாரையும் கைகாட்ட முடியாது.  

உலகம் பூராவும் பொதுமக்களில் குற்றம் சொல்ல முதல்.. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தான் வழி செய்வார்கள்.

நீங்கள் என்னடான்னா.. நாங்கள்.. எங்கள் இஸ்டத்துக்கு ஓடுவம்... பொது மக்களுக்கும் வன விலங்குகளும் தான் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்.

இந்தக் கடவையில்.. 1990 இல்.. இந்தியப் படைகள் காலத்தில்.. கடவையும் போட்டு.. கண்காணிப்பு கண்காணிப்பாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது ஒரு விபத்தும் நிகழவில்லை. அதுக்கு முன்னர் பல இடங்களிலும் மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில்.. தொடரூந்தை வேகம் குறைத்துப் பயணிக்கச் செய்தனர். தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு செல்லக் கோரப்பட்டனர். ஆனால்.. இவை எதுவும் இல்லாமல்.. வேகமாக.. தொடரூந்து வருவது தெரியாமல்.. மக்கள்.. வீதிகளை கடக்கும் போது.. விபத்துக்குள்ளாவதற்கு மக்களை விட தொடரூந்து துறையின் கவயீனமே முக்கிய காரணம். 

எல்லாம் மாற்றான் தாய் மனப்பான்மையின் விளைவு.

உங்களின் கதை எப்படி என்றால்.. நீங்கள் போராடினால்.. நாங்கள் செல் அடிச்சு சாகடிப்பும்.. இல்லாட்டி.. எங்களுக்கு அடிமையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்.. சிந்திப்பது.. போல் இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஐயா நெடுக்காலபோவான், 

ஏன் குழந்தைகள் போல குறுக்கால போறீங்கள்,  முதலில் பிறரை முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.  பிறகு நான் எழுதியதை இரண்டுதடவை திருப்பி திருப்பி வாசியுங்கள்.  அப்படியும் விளங்காவிட்டால் திரும்பவும் வாசியுங்கள்.  அப்படியும் விளங்கவில்லை என்றால் திரும்பவும் வாசியுங்கள் விளங்கும்.  அதுக்கும் சரிவரவில்லை என்றால் என்னால் உங்களுக்கு உதவமுடியாது.  ஐ ஆம் வெரி வெரி சோறி. 😃

Edited by Maharajah
எழுத்துப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.