Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • Replies 317
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

ரணில், சஜித் ஜனாதிபதியாக வருவதை விட கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை விரும்பியவர். எனவே பாராளுமன்றத்தை கலைத்து உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் சம்மதிக்கலாம்.

தேர்தலின் பின் ரணில் எதிர்க்கட்சி தலைவராவார் என நினைக்கிறேன்.

சஜீத் கூட கோத்தா வருவதையே விரும்பி இருக்க கூடும்😄

Link to comment
Share on other sites

30 minutes ago, ரதி said:

சஜீத் கூட கோத்தா வருவதையே விரும்பி இருக்க கூடும்😄

சஜித் மகிந்த ஆதரவாளர். ஆனாலும் கோத்தாவுடன் உண்மையிலேயே போட்டியிட்டார் என நினைக்கிறேன். 

சஜித்துக்கும் ரணிலுக்கும் பிரச்சினை சஜித்தை வேட்பாளராக அறிவிக்க முன்பிலிருந்தே இருந்தது.

இன்றைய கூட்டத்திலும் சஜித் தரப்பும் ரணில் தரப்பும் முரண்பட்டதாம்.

Link to comment
Share on other sites

Just now, nunavilan said:

 

74602109_2839016296142612_59745518337696

தமிழ் மக்களின் மனோ நிலை மாறிவிட்டது என்பது இவர்களுக்கு புரிந்து விட்டது...... அப்படி இவர் பெறுவதானல் வடக்கின் மீள் நிர்மாணம், மீள் குடியேற்றம் சம்பந்தமான அமைச்சை பெறுவது நன்று....... வடக்கின் அடாவடி மினிஸ்ட்டருக்கு விட்டு குடிக்காமல்.

Link to comment
Share on other sites

சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து பகிரங்கமாக அறிவித்தது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழர் பகுதிகளில் மேடை போட்டு சஜித் பிரேமதாஸ வுக்காகப் பிரசாரமும் செய்தது. தாங்கள் செய்கின்ற பிரசாரம் தென்பகுதி மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் கூட்டமைப்பிடம் இருந்ததை எவரும் அவதானிக்க முடியும்.

இதற்கு மேலாக ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச­வைக் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய் தனர். இந்த விமர்சனங்களைப் பார்த்தவர்கள் கோத்தபாய ராஜபக்­ வென்றால் இவர்களின் கதி என்ன என்று மூக்கில் விரலை வைக்குமளவுக்கு அவர்கள் கோத்தபாய ராஜபக்ச­வை கடுமையாகச் சாடினர்.

தாங்கள் அறிவிக்காமல் விட்டாலும் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கே தங்களின் வாக்குகளை வழங்குவர் என்பதை கூட்ட மைப்பு நன்கு அறிந்திருந்தது.

இதற்கு மேலாக, சஜித் பிரேமதாஸவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால், சிங்கள மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக் களிக்க மாட்டார்கள் என்ற உண்மையையும் கூட்டமைப்பு நன்கு தெரிந்து வைத்திருந்தது.

நிலைமை இதுவாக இருந்தும் தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக கூட்டமைப் பின் முக்கிய புள்ளிகள் சிலர் கண்டபாட்டில் கதைக்க, ஒட்டுமொத்த சிங்கள மக்களும் திரண்டெழுந்து தங்கள் வாக்குகளை கோத்த பாய ராஜபக்சவுக்கு வழங்கினர்.

ஆக, சமபலத்துடன் இருந்த தேர்தல் களத்தை மூன்று நாட்களுக்குள் மாற்றியமைத்து சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கைத் துரோகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்து முடித்தது. கூடவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சஜித்தை வஞ்சித்தார்.
 

http://valampurii.lk/valampurii/content.php?id=19865&ctype=news

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

தாங்கள் அறிவிக்காமல் விட்டாலும் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கே தங்களின் வாக்குகளை வழங்குவர் என்பதை கூட்ட மைப்பு நன்கு அறிந்திருந்தது.

கூட்டமைப்பு அறிவிக்காவிட்டாலும் பலர் தாமாக சஜித்துக்கு போட்டிருப்பார்கள். ஆனாலும் சஜித்துக்கு கிடைத்த வாக்குகள் குறைவாகவே இருந்திருக்கும். கூட்டமைப்பு சொல்வதை கேட்டு வாக்களிக்கும் மக்களும் வடக்கு கிழக்கில் உள்ளார்கள். அவ்வாறானவர்கள் கூட்டமைப்பு சொல்லாமல் விட்டிருந்தால் வாக்களிக்காமல் விட்டிருப்பார்கள் அல்லது சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஆக, சமபலத்துடன் இருந்த தேர்தல் களத்தை மூன்று நாட்களுக்குள் மாற்றியமைத்து சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கைத் துரோகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்து முடித்தது. 

3 நாட்களுக்கு முன் சமபலத்துடன் தேர்தல் களம் இருக்கவில்லை. முன்பே கோத்தாவின் வெற்றி உறுதியாகி விட்டது.

வலம்புரிக்காரர் தெற்கில் முன்னரே நடந்த பிரச்சாரங்களை பற்றி கதையில்லை. 

ஈஸ்டர் குண்டு தாக்குதலை காட்டி கோத்தபாய தான் நாட்டின் பாதுகாவலன் என்பது போன்ற கதை.

கோத்தபாயவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்தியதன் மூலம் கோத்தபாயவை ஜனாதிபதியாக வர விடாமல் செய்ய விளைகிறார்கள், அவரை வெல்ல வைக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கியமை.

2009 போர் வெற்றி.

2015 இல் தமிழர்கள் வாக்குகளால் மகிந்த தோற்கடிக்கப்பட்டதால் இம்முறை கோத்தபாய தோற்கக்கூடாது என நினைத்தமை.

மைத்திரி-ரணில் ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சஜித்தையும் பலர் நம்பாமல் கோத்தபாயவுக்கு வாக்களித்தமை.

அநுர தனிய போட்டியிட்டமை.

பலவேறு வேட்பாளர்கள் வாக்குகளை பிரிக்க களமிறங்கியமை.

5 கட்சிகள், மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய 13 அம்ச கோரிக்கைகள்.

இன்னும் பல காரணங்கள் உள்ளன.

கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவளிக்குமாறு கூறாமல் விட்டிருந்தாலும் கோத்தபாய வென்றிருப்பார்.

1 hour ago, ampanai said:

கூடவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சஜித்தை வஞ்சித்தார்.

ரணிலின் பல நடவடிக்கைகள் அவ்வாறு தான் இருந்தன.

ரணில் தரப்பு சஜித்துக்கான தேர்தல் பிரச்சார நிதிக்கு பங்களிப்பு செய்யவில்லை எனவும் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

நான் (நீங்கள்) ஏமாற்றலாம். (நான்) நீங்கள் தோற்கலாம். ஆனால், நாங்கள் வென்றாகவேண்டும்.

Link to comment
Share on other sites

புதிய அரசில் ஹக்கீம், ரிசாத் இருவருக்கும் இடமில்லை என தினேஷ் குணவர்தன கூறியுள்ளாராம்.

 

Link to comment
Share on other sites

Mano Ganesan - மனோ
< ஏன் பின்னடைவு? பின்னர் நிறைய சொல்லலாம். இப்போது கொஞ்சம் சுருக்கமாக...>

1) சின்னம் ஒரு பிரச்சினை அல்ல. இதற்கு முன்னும் “அன்னம்” சின்னம் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. சிலருக்கு தனிப்பட்ட காரணங்களால், சின்னம் தெரியாமல் இருந்திருக்கலாம். இப்படியான நபர்கள் எப்போதும் இருப்பார்கள். சின்னத்தையும் ஒரு காரணமாக சொல்வது தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பதாகும் என நினைக்கிறேன்.

2) முதல் கோணல், வேட்பாளர் அறிவிப்பின் தாமதம். இதற்குள் நாடு முழுக்க சுமார் ஆறாயிரம் விகாரைகளுக்கு சென்று, ஒரு சிங்கள-பெளத்த வலை பின்னலை ஏற்படுத்த எஸ்எல்பிபி கட்சிக்கு சாவகாசமான அவகாசம் கிடைத்தது.

3) தேர்தலுக்கு நிதி இல்லை. அரசாங்கமானாலும் தேர்தல் நிதி இல்லை. அப்படியானால், இது “நல்லவரா? கெட்டவரா?” (நல்ல அரசாங்கமா? கெட்ட அரசாங்கமா?) என்ற கேள்விக்கு ஒப்பானதாகும். நிதி இல்லாமல் களத்தில் குதித்து விட்டார்கள். இதுதான் உண்மை.

4) முக்கியமாக, 2009 “யுத்த வெற்றி” க்கு பிறகு, ஒரு “அரசியல் வெற்றி” சிங்கள பெளத்த நிறுவனத்துக்கு (Sinhala Buddhist Establishment) தேவைப்பட்டது. அதற்கு வேட்பாளர் கோடாபய ராஜபக்ச மிக சரியாக பொருந்தி வந்தார். இன்று இதுதான் இங்கே தேசிய யதார்த்தம்.

5) மேலே சொன்ன தேசிய யதார்த்தத்தை சமாளிக்க எம்மால் இந்நேரம் நியமிக்க கூடிய மிக சிறந்த வேட்பாளர்தான் சஜித். உண்மையில் வேறு எவரும் போட்டியிட்டிருந்தால், இதில் பாதி வாக்குகள்கூட சந்தேகமே. நிறைய யூஎன்பி மற்றும் சிறுபான்மையினர் தேர்தலில் வாக்களிக்க சென்றே இருக்க மாட்டார்கள்.

6) பிரதான விடயமாக ஐஎஸ்ஐஎஸ் சஹரான் குண்டுவெடிப்பு, எமக்கு எதிராக பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அமைச்சர் ரிசாத் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்ற தர்க்கரீதியான உண்மையை ஒரு பொருட்டாகவே “சிங்கள-பெளத்தம்” கணக்கில் எடுக்கவில்லை. அமைச்சர் ரிசாத் மூலம், சஜித்துக்கு வரும் சராசரி முஸ்லிம் வாக்குகளை விட, சஜித்துக்கு வரவிருந்த கணிசமான சிங்கள வாக்குகளை, அமைச்சர் ரிசாத்தின் பெயரை பயன்படுத்தி, எஸ்எல்பிபி கட்சி, கவனமாக திட்டமிட்டு, சமூக ஊடக, நேரடி ஊடக பிரசாரங்கள் மூலம், தடுத்து நிறுத்தியது. இது நான் கண்ட யதார்த்தம்.

7) மேலே சொல்லப்பட்ட உத்தியை அல்லது தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை பயன்படுத்தி, வன்னியிலும், கிழக்கிலும் சஜித்துக்கு வரவிருந்த தமிழ் வாக்குகளை தடுத்து நிறுத்தவும், எஸ்எல்பிபி கட்சி முயன்றது. இந்த திட்டத்துக்கு எதிராக நான் விசேட கவனம் எடுத்து என்னால் இயன்றதை செய்தேன். எப்படி இருந்தாலும் இவையெல்லாம் எஸ்எல்பிபி கட்சியின் “ரியல் பொலிடிகல்” கெட்டிக்காரத்தனம் என்பேன். அவர்கள் எல்லாமே சரியாக திட்டமிட்டு செய்தார்கள்.

😎 மற்றபடி, இந்த “ரணிலை மதிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு எல்லாம் பெரிய விஷயம் அல்ல. ரணிலுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நின்று, நிதானித்து, சிந்திக்க கூட நேரம் இல்லாத, தேர்தல் பரபரப்பிலும், சிங்கள வாக்கை தேடிய ஓட்டத்திலும், ரணிலுக்கு இயற்கையான இடம் கிடைக்கவில்லை என்பதால் அவர் ஒதுக்கப்பட்டார் அல்லது ஒதுங்கினார். இந்த யதார்த்தம், மேலே இரண்டாவதில் சொன்ன, “வேட்பாளர் அறிவிப்பின் தாமதம்” என்பதால் வந்த வினை. இதற்கு யார் பொறுப்பு?

9) ஒருவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, பெருங்கூட்டங்களை அதிகாரபூர்வமாக ஊடக ஒளியொலி வாங்கிகளின் முன் நடத்தாமல், தம் தரைமட்ட கட்சி இயந்திரம் மூலம் பிரச்சாரம் செய்து இருக்கலாமோ என யோசிக்கிறேன். (கூட்டமைப்பு பகிரங்க நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் அது இன்று அவர்களுக்கே நன்மையாக முடிந்திருக்கும் என்பது வேறு விஷயம்!) அதேபோல் அமைச்சர் ரிசாத் வெளியே வராமல், தமது பிரதேசங்களுக்குள் மாத்திரம் செயற்பட்டு இருக்கலாமோ என யோசிக்கிறேன். எஸ்எல்பிபி கட்சி திட்டமிட்டு சாணக்கியமாக செயற்படும் போது, அதற்கு பதில் நாமும் சாணக்கியமாக செயற்பட்டிருக்கவேண்டும். அதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.

10) மேலே சொன்னதில் ஒரு பகுதியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். எமது அணியின் முதலாம் கூட்டம், காலி முக திடலில் நடைபெற்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் அதுவாகும். அதில் சிறுபான்மை கூட்டு கட்சி தலைவர்கள் உரையாற்றவில்லை என்பது ஒரு பெரும் விவாதமாக நீண்டநாள் பேசப்பட்டது. அது இப்படிதான் நடந்தது.

அன்றைய கூட்டம் ஆரம்பமாகும் முன், கூட்ட மேடையில் நாம் சென்று அமர்ந்தோம். இது கொழும்பு என்ற காரணத்தால், முதல் வரவேற்பு உரையை சிங்களத்தில் ரவி கருணாநாயக்கவும், தமிழில் நானும் ஆற்ற இருந்தோம். மேலும் அதன் பின் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரும் உரையாற்ற இருந்தார்கள். எல்லோர் பெயரும் பேச்சாளர் பெயர் பட்டியலில் இருந்தது.

அப்போது அமைச்சர் திகாம்பரம் என்னை தொலைபேசியில் அழைத்து, அமைச்சர் ரிசாத் பேசும் போது கூட்டத்தின் மத்தியில் இருந்து கூச்சல் எழுப்பப்பட இருப்பதாகவும், ஒரு தனியார் ஊடக நிறுவனம் அதை படம் பிடித்து அதிரடி செய்தியாக வெளியிட உள்ளதாகவும், இதுபற்றி சஜித்துக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், எனக்கு சொன்னார். இதன்மூலம் அந்த மாபெரும் கூட்ட செய்தியை தலைகீழாக மாற்றும் உத்தேச சதி திட்டம் அதுவாகும் என தெரிய வந்தது. இதை எப்படி ரிசாத்திடம் சொல்லி, அவரை பேசாமல் இருக்க சொல்வது என சஜித் யோசிப்பதாகவும் சொன்னார்.

உடனே நான்தான், அங்கே மேடையில் இருந்த ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரிடம் இதை கூறினேன். ரவுப் ஹக்கீமும் பேசாவிட்டால், நானும் பேசாமல் இருக்கிறேன் என ரிசாத் என்னிடம் கூறினார். அதன்பிறகு நான்தான் அப்படியானால் சரி, நானும் உரையாற்றாமல் இருக்கிறேன், எந்தவொரு கூட்டு சிறுபான்மை கட்சி தலைவரும் உரையாற்றவில்லை என்று போய் விடட்டும் என்று தீர்மானித்தோம்.

கூட்டம் நடைபெறும், கொழும்பு எனது தேர்தல் மாவட்டம். முழு நாடும் கேட்கும் அந்த மேடையில் பேசும் சந்தர்ப்பம் அரியது. யார் பேசினாலும், பேசாவிட்டாலும் நான் பேசியே ஆக வேண்டும் என்று நான் கூறியிருந்தால், எவரும் என்னை தடுத்திருக்க முடியாது. உண்மையில் நான் பேசுவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாவிட்டாலும் கூட, நான் அன்று ஒரு விட்டுக்கொடுப்பை செய்தேன். பொது நன்மை கருதி இப்படி நடந்து கொள்வது என் இரத்தத்தில் ஊறியது. ஆனால், நமது அணியில் இருக்கும் பலரின் இரத்த குரூப் வேறு.

11) ரணில், சந்திரிகா, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க போன்றோர், பிரசார பயணத்தில் இம்முறை இலகு பரப்பை (Soft Zone) தேடி, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்றார்கள். இவர்கள் சொல்லி தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் நிலையில் இருக்கவில்லை. உண்மையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் சொல்ல முன்பேயே தமிழ், முஸ்லிம் மக்கள் தயாராகி விட்டார்கள். இதுதான் தரை உண்மை (Ground Truth). உங்களுக்கு உசிதமான சிங்கள பிரதேசங்களுக்கு சென்று சிங்கள வாக்கை தேடுங்கள் என்று பலமுறை தகவல் அனுப்பினேன். எவரும் கேட்கவில்லை. இந்த அரசியல்வாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாது என்பதுதான் உண்மை காரணம் என்றால், அவர்கள் இனி அரசியலில் இருக்கவே முடியாதே!

12) உண்மையில் சஜித் மிக கடுமையாக உழைத்தார். ஐதேகவில் ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தேசியரீதியாக உழைத்தார்கள். மற்றோர் தம் வட்டத்துக்குள் நின்று விட்டார்கள். சஜித்தை முன்மொழிந்த அமைச்சர்கள் என்ற பக்கத்தையும் இடையில் காணவில்லை.

13) நானும், ஐ.தே. முன்னணியின் ஏனைய கூட்டு கட்சி தலைவர்களும் மிக கடுமையாக உழைத்தோம். எங்களது சிறுபான்மை கட்சிகளின் எம்பீக்களும் கடுமையாக உழைத்தார்கள். என்னை பொறுத்தவரை நான் நாடோடியாக நாடு முழுக்க ஓடினேன். எனது சொந்த தேர்தலுக்கு கூட நான் இப்படி ஓடவில்லை. எனக்கு அப்போது களைப்பே தெரியவில்லை. இப்போது மிகவும் களைப்பாக இருக்கிறது.

14) இறுதி இரண்டு வாரத்தில், ஐதேகவின் சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் இரகசிய கள்ள உறவு கொண்டனர். இவர்கள் வெறுக்கத்தக்க கீழ்த்தர மனித மிருகங்கள். ஒருபுறத்தில் உயிரை கொடுத்து நாம் போராடும் போது உள்ளேயே இருந்தபடி துரோகம் செய்பவர்களை என்னவென்று சொல்வது? என்ன இனம், என்ன மதம் என்றாலும் இவர்கள் ஒன்றுதான். இந்த மனிதர்களை, “நாய்கள்” என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால் “நாய்” எனக்கு பிடித்த ஒரு “மனிதன்”.

 
Image may contain: 11 people, people smiling, people standing
Link to comment
Share on other sites

11 minutes ago, nunavilan said:

9) ஒருவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, பெருங்கூட்டங்களை அதிகாரபூர்வமாக ஊடக ஒளியொலி வாங்கிகளின் முன் நடத்தாமல், தம் தரைமட்ட கட்சி இயந்திரம் மூலம் பிரச்சாரம் செய்து இருக்கலாமோ என யோசிக்கிறேன். (கூட்டமைப்பு பகிரங்க நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் அது இன்று அவர்களுக்கே நன்மையாக முடிந்திருக்கும் என்பது வேறு விஷயம்!) அதேபோல் அமைச்சர் ரிசாத் வெளியே வராமல், தமது பிரதேசங்களுக்குள் மாத்திரம் செயற்பட்டு இருக்கலாமோ என யோசிக்கிறேன். எஸ்எல்பிபி கட்சி திட்டமிட்டு சாணக்கியமாக செயற்படும் போது, அதற்கு பதில் நாமும் சாணக்கியமாக செயற்பட்டிருக்கவேண்டும். அதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.

இதை ஒத்த கருத்தையே யாழின் வலம்புரியும் நேற்று கூறி இருந்தது 

12 minutes ago, nunavilan said:

4) முக்கியமாக, 2009 “யுத்த வெற்றி” க்கு பிறகு, ஒரு “அரசியல் வெற்றி” சிங்கள பெளத்த நிறுவனத்துக்கு (Sinhala Buddhist Establishment) தேவைப்பட்டது. அதற்கு வேட்பாளர் கோடாபய ராஜபக்ச மிக சரியாக பொருந்தி வந்தார். இன்று இதுதான் இங்கே தேசிய யதார்த்தம்.

சரத்தும் அதேபோன்ற கருத்துக்களை பிரச்சார மேடைகளில் முன்வைத்தார். எது ஏன் எடுபடவில்லை ? 

இது சிங்கள தேசிய யதார்த்தம் என்றால் அதன் மூலம் சரத்தால் மற்றும் தனியே போட்டியிட்ட மகேசால் அந்த வாக்குகளை 'பிரிக்க' முடியவில்லை ? 

Link to comment
Share on other sites

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

Link to comment
Share on other sites

சஜித் பிரேமதாசாவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி 45 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதமொன்று சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

2019 ஜனாதிபதி தேர்தல் உணர்த்திய – வராற்றுச் சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. விட்டுக் கொடுப்புக்கு இடமில்லாத – அதிகாரப் பகிர்வுக்கு சம்மதிக்காத ஒருவரை சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து எதிர்த்ததன் மூலம் – அடிப்படை அனைவருக்குமான பொதுத் தேவை அதிகாரப் பகிர்வு என்பதையே உணர்த்தியுள்ளது. எனவே, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் தலைமைகளும் தனி நலன்களைத் துறந்து ஒன்றிணைவதன் மூலம், அனைத்து இனங்களும் சரிநிகர் சமானமாக – உரிமைகள் பெற்றவர்களாக தலைநிமிர்ந்து வாழமுடியும்.

இதுபற்றி சாத்தியப்பாடுகள் – ஏற்பாடுகள் உடனடியாக நிகழ்ந்து விட முடியாது என்பது யதார்த்தம். ஆனால், இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால் சிறுபான்மை இனங்கள் எவற்றுக்கும் தீர்வு என்பதே கிடையாது. அரசுக்கு முட்டுக் கொடுக்கும் இனங்கள் – தலைமைகள் சலுகைகளை – சுகபோகங்களை அனுபவிக்க முடியுமே தவிர உரிமைகளையோ – சுதந்திரத்தையோ அனுபவிக்க முடியாது.

இதேபோன்று, இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.

வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…?

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.