Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்!

Featured Replies

On 12/8/2019 at 5:50 PM, tulpen said:

சட்டம், நீதித்துறை ஆகியவற்றை தவறாக நடத்துபவர்கள் தானே என்கவுண்டரையும் செய்கிறார்கள். சட்டதை தவறாக நடைமுறைப்படுதுபவர்கள் என்கவுண்டரை மட்டும் நியாயமாக சரியாக நடத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்ககிறீர்கள். குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவிகளைப் போட்டுத்தள்ளும் என்கவுண்டரை செய்ய வாய்பபு உள்ளதல்லவா?  

தவறாக புரிந்துவிட்டீர்கள்!
வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை! இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து.
மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும்?

சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா? அப்பாவிகள் பாதிக்கப்பட்டதில்லையா? எதுக்குமே நீதிநியாமில்லை!

சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 8:06 PM, தனிக்காட்டு ராஜா said:

சிறையில் இருக்கும் இவர்களை உள்ளிருக்கும் கைதிகள் நன்றாக கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் சிறைக்காவலர்களை விட கைதிகள் உள்ள வச்சி நல்லா செய்வார்கள் 

எல்லா  சிறைச் சாலைகளிலும்,  ஓரினச்  சேர்க்கை  உடைய, 
கைதிகளின்  தொல்லை, பெரிய தொல்லை... என்று சொல்வார்கள்.

ஐயர்... எக்கச் சக்கமாக, மாட்டுப் பட்டுப் போனார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எல்லா  சிறைச் சாலைகளிலும்,  ஓரினச்  சேர்க்கை  உடைய, 
கைதிகளின்  தொல்லை, பெரிய தொல்லை... என்று சொல்வார்கள்.

ஐயர்... எக்கச் சக்கமாக, மாட்டுப் பட்டுப் போனார். :grin:

எனது நண்பர்கள் பல ர் சிறைச்சாலை காவலர்கள் அவர்கள் சொன்னது நாங்கள் கைவைக்க முதல் கைதிகள் என்ன கேஸ் என்பதைக்கேட்டு முதலில் வெட்சீட் போட்டு மொத்தமாக மொத்துவார்களாம் இரவு 1 ,மணிக்கு ஐயருக்கு சாம பூசை நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனது நண்பர்கள் பல ர் சிறைச்சாலை காவலர்கள் அவர்கள் சொன்னது நாங்கள் கைவைக்க முதல் கைதிகள் என்ன கேஸ் என்பதைக்கேட்டு முதலில் வெட்சீட் போட்டு மொத்தமாக மொத்துவார்களாம் இரவு 1 ,மணிக்கு ஐயருக்கு சாம பூசை நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

மேல் உள்ள படத்தில் உள்ளவர்தான் ஆள் மாறி அடிபோட்டுவிட்டு விடக்கூடாது 😀

8 hours ago, Rajesh said:

தவறாக புரிந்துவிட்டீர்கள்!
வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை! இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து.
மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும்?

சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா? அப்பாவிகள் பாதிக்கப்பட்டதில்லையா? எதுக்குமே நீதிநியாமில்லை!

சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.

ராஜேஸ் நீங்கள் கூறிய  திறமையான நேர்மையான விடுதலை புலிகள் கூட இந்த விடயத்தில் சறுக்கிய தவறாக தீர்ப்பு வழங்கி அதை நிறைவேற்றிய  பல சம்பவங்கள் உண்டு.   இலங்கை இந்திய நாடுகளில் பல என்கவுண்டர்கள் உண்மைக் குற்றவாளியை தப்ப வைப்பதற்காக செய்யப்படுகின்றன. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/6/2019 at 6:03 PM, goshan_che said:

நீதி வழுவி, நீதியை நிலைநாட்டலும் அநீதியே!

நீதி சரியாக இருப்பின் அநீதிக்கு வேலை ஏது? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 6:01 PM, Maruthankerny said:

புரியவில்லை 

 

On 12/9/2019 at 6:20 PM, ரதி said:

கோட் மூலம் தண்டனை கொடுக்காமல் புலிகள் தண்டனை கொடுத்தது சரியில்லை என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன் .

 

அதே

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீதி சரியாக இருப்பின் அநீதிக்கு வேலை ஏது? :cool:

நீதி ஏன் சரியில்லாமல் போகிறது? அதை சரிபடுத்தாமல் ஏன் விடுகிறோம்?

 

what is Sexual Harassment? ஆண்களும் பெண்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

மேல் உள்ள படத்தில் உள்ளவர்தான் ஆள் மாறி அடிபோட்டுவிட்டு விடக்கூடாது 😀

நானும்... ஏதோ... இளவயது, பூசகர் என நினைத்திருந்தேன். 😡

1 hour ago, ampanai said:

 

what is Sexual Harassment? ஆண்களும் பெண்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 

துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பதின்ம வயதை தாண்டிய பல பெண்கள் தங்கள் காரியம் நடக்க நெருக்கமாக பழகிவிட்டு பிறகு துன்புறுத்தல் என்று நாடகமாடுவதாக பலர் கூறுகிறார்கள்.

இது எந்தளவுக்கு உண்மை?

1 minute ago, Rajesh said:

துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பதின்ம வயதை தாண்டிய பல பெண்கள் தங்கள் காரியம் நடக்க நெருக்கமாக பழகிவிட்டு பிறகு துன்புறுத்தல் என்று நாடகமாடுவதாக பலர் கூறுகிறார்கள்.

இது எந்தளவுக்கு உண்மை?

சட்டம் மூலம் தான் உண்மையை கண்டறிய முடியும். ( கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் போயாயா இருக்கலாம், தீர விசாரித்து அறிவதே மெய் ) 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐயருக்கு ஒரு சட்டத்தரணி ஆஜராகி உள்ளாராம் ஆது சிறிகாந்தாவாம் உன்மையா ?????

9 வயதுச் சிறுமியை 2 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம்  செய்த72 வயது அர்ச்சகர் ; நீதிமன்று அதிரடி உத்தரவு

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பிணை விண்ணப்பம் செய்தபோதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்த நிலையில் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரித்து விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்தது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் சிறுமி தொலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் தொலைபேசி மூலம்  பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து  உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.

அத்துடன், அர்ச்சகரால் வழங்கப்பட்ட பணம் ஒரு தொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுமியின்  தொலைபேசி சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயது அர்ச்சகரும் சிறுமி சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 30ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்று, சந்தேகநபர்கள் இருவரையும் இன்று  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன்சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷும் முன்னிலையானார்கள்.

முதலாவது சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்து மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா சமர்ப்பணம் செய்தார்.

“முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் 72 வயது நிரம்பியவர். அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் சிறுமி தெரிவிக்கவில்லை. அர்ச்சகர் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மன்றுரைத்தார்.

“சிறுமி ஆலய அர்ச்சகரால் 2 வருடங்களாக தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் வழிபடும் ஆலயத்துக்குள் இவ்வாறான சமூகப்பிரள்வு இடம்பெற்றுள்ளமை பாரதூரமான விடயம். இதனை சமூகத்தில் அனுமதிக்கவே முடியாது.

சிறுமி பராயமடையாதவர். அவருக்கு அர்ச்சகரால் தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை விவரிக்க முடியாது. அதனால்தான் சட்ட மருத்துவ அறிக்கையைக் கோருகின்றோம்.

பராயமடையாத சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளது. எனவே முதலாவது சந்தேகநபரான அர்ச்சகரும் அவருக்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் சித்தப்பாவையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று சட்டத்தரணி சுகாஷ் மன்றுரைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவர்களது விளக்கமறியலை வரும் 20ஆம் திகதிவரை நீடித்தார்.

அத்துடன், சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கையையும் அவரது வாக்குமூலத்தையும் வரும் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/70941

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த ஐயருக்கு ஒரு சட்டத்தரணி ஆஜராகி உள்ளாராம் ஆது சிறிகாந்தாவாம் உன்மையா ?????

ஆமாம். இவர் இப்படியான ஆட்களுக்குத்தான் ஆஜர் ஆகுவார். இவரைப்பற்றி நான் முதலும் எழுதி இருந்தேன். நேற்று இவர் இந்த பாலியல் குற்றவாளிகளுக்காக மன்றில் ஆஜராகி பெரும் குழப்பத்தை உருவாக்கி விடடார்.

இவருடைய தொழிலே குழப்பத்தை உருவாக்குவதுதான். இவர் ஒரு கட்சியை ஆரம்பிக்கப்போவதாக கூறி இருந்தார். இவருடைய ஆதரவாளர் யாரெண்டால் கள்ளர், கொலைகாரர், பாலியல் குற்றவாளிகள், குடு காரர் போன்றோரே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.