Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு  தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

IMG_6517.jpg

 குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும்  19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை  வழங்கியுள்ளது. 

IMG_6519.jpg

திருக்கேதீஸ்வரம் பகுதியில்  அலங்கார வளைவு அமைத்த போது  கடந்த வருடம்  உள்ளக ரீதியில் இரண்டு மதங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. 

IMG_6518.jpg

கடந்த தவணையின் போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக வளைவு அமைப்பதற்கான அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்ததன் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்திய மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் நல்லிணக்க அடிப்படையில் இரு நிர்வாகத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாகக் குறித்த வளைவை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

IMG_6520.jpg

அதே நேரம் குறித்த அலங்காரவளைவு தொடர்பான  பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பாகக் கட்டளை வழங்குவதற்காகக்  குறித்த வழக்கானது  இம்மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை சார்பாகக் குறித்த வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/75088

  • Replies 60
  • Views 4.6k
  • Created
  • Last Reply

என் அறிவுக்கு எட்டவில்லை அந்த வளைவு ஓர் அடையாளம் திருக்கேதீஸ்வரம் முன்னாள் வத்திக்கான் இல்லையே அவர்கள் சரித்திரம் தொடங்க முதலே பாடல் பெற்ற தலம் 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய இணகங்கள்மூலம் திருகேதீஸ்வர பிரச்சினைக்கு முடிவுகாளும் முயற்சியில் முன்னுதாரணமான வெற்றிபெற்றுள்ள மாந்தை தேவாலய பங்கு தந்தைக்கும் திருகேதீர்வர அறங்காவலர்களுக்கும் நன்றிகளும் நல் வாழ்த்துக்களும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

என் அறிவுக்கு எட்டவில்லை அந்த வளைவு ஓர் அடையாளம் திருக்கேதீஸ்வரம் முன்னாள் வத்திக்கான் இல்லையே அவர்கள் சரித்திரம் தொடங்க முதலே பாடல் பெற்ற தலம் 

என்ன சண்டை போடலாம் என்கிறீர்களா ? 

9 hours ago, Kapithan said:

என்ன சண்டை போடலாம் என்கிறீர்களா ? 

நிறைய பேருக்கு இப்ப அதான்‌ வேணும்..... 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மார்த்தாண்டன் said:

என் அறிவுக்கு எட்டவில்லை அந்த வளைவு ஓர் அடையாளம் திருக்கேதீஸ்வரம் முன்னாள் வத்திக்கான் இல்லையே அவர்கள் சரித்திரம் தொடங்க முதலே பாடல் பெற்ற தலம் 

சரியாக..  சொன்னீர்கள், மார்த்தாண்டான்.
பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

நிறைய பேருக்கு இப்ப அதான்‌ வேணும்..... 

மிஞ்சி இருந்த கோவணமும் காணாமல் போய்க்கொண்டு இருக்கிற நேரத்தில கூட இருக்கிறவனோடதான் எப்பவும் உரஞ்சிறது. 

நாங்கள் சிங்களத்திடம்  அடிமையாய் இருக்கிறதுக்குத்தான் பொருத்தமான இனம்.

5 hours ago, Kapithan said:

மிஞ்சி இருந்த கோவணமும் காணாமல் போய்க்கொண்டு இருக்கிற நேரத்தில கூட இருக்கிறவனோடதான் எப்பவும் உரஞ்சிறது. 

நாங்கள் சிங்களத்திடம்  அடிமையாய் இருக்கிறதுக்குத்தான் பொருத்தமான இனம்.

இதுக்கு பின்னால் இருந்து இயக்குவது சிங்களவன் இல்லை .... ஆனால் வடக்கு மாகாணத்தை கைப்பற்ற நினைக்கும் வடக்கு அடாவடி மினிஸ்ட்ரின் ஆக்கள்.

நண்பர்களே இதில் எதிர்வாதம் செய்ய வரவில்லை முதலில் அந்த இடத்தின் பெயர் மாந்தை சந்தி ( மாதோட்டம் சந்தி)அதில் முதல் இருந்த எரிபொருள் நிலையத்துக்கு எதிரே மடு திரும்ப காட்டும் அடையாளமாக இருந்த ஒரு சிலை தான் இராணுவ முகாம்விஸ்தரிப்புக்காக எதிரே மாற்றபட்டது இப்போது சரித்திரம் திரிபாக்கபட்ட நிலை இங்கே எழுதும் யாரும் பிறந்தாலும் அதை பார்த்திருக்க வாய்ப்பில்லை நிறைய ஆதாரங்கள் உண்டு (தாண்டிகுளமுகாம்) ஆரம்பபுள்ளி தெரிந்தவர் சொல்வார்கள் நெல் கடத்தல் நாடகம்

இந்துக்களுக்கு மட்டும்தான் மத சகிப்பு தன்மை உண்டு என்னாலும் நிஐ ஆதாரங்கள் எழுதமுடியும் ஆனால் ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த கூடாரம் ஆவது மட்டும் நிஐம் 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மார்த்தாண்டன் said:

இந்துக்களுக்கு மட்டும்தான் மத சகிப்பு தன்மை உண்டு என்னாலும் நிஐ ஆதாரங்கள் எழுதமுடியும் ஆனால் ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த கூடாரம் ஆவது மட்டும் நிஐம் 

எனக்கென்னவோ நீங்கள் திட்டமிட்டே இங்கே பிரச்சனையை  எழுப்புவதாகப் படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்து என்னவென்றால் எவருக்கும் பிரச்சனை இல்லை வளைவை இனிமேல் வைக்கவேண்டாம் என்பதே ஆனால் வளைவைப்பற்றிய அனைத்து விடையங்களும் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் கத்தோலிக்க மதத்தினரைச்சேர்ந்தவர்களது சந்ததியினர் இப்படி ஒரு பிரச்சனை இருந்தது அதை எமது கடந்தகால கிருஸ்தவர்கள் எப்படிக்கையாண்டார்கள் என்பதைத் தெரியும்வண்ணமாகப் பாதுகாக்கவேண்டும். 

தவிர மடுமாதா கோவிலுக்குச் செல்பவர்களில் சைவசமயத்தவர்களும் அதிகமாகும் உலகத்தில் சைவசமயத்தவர்கள்தான் தங்களது கடவுளர்களை நம்பாது எதுக்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்பதுபோல்  பக்கத்துத் தெருவில் எந்தச்சமயக் கோவிலாக இருந்தாலும் ஒரு கும்புடு போட்டு நேத்திவைச்சு நெய்விளக்கோ மெழுகுதிரியோ கொழுத்துவினம் அட சைவக்காரா உனது கடவுளிலேயே உனக்கு நம்பிக்கை இல்லாமல்தானே இன்னுமொரு கடவுளையும் கும்புடுகிறாய். 

மதங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் அன்பையும் போதிக்கிறது எனக்கூறிக்கொண்டு கலவரத்தை உண்டாக்கினால் அது மதம் இல்லை. அதனால்தாணோ மதம் என்று பெயர்வைத்தார்களோ

37 minutes ago, Kapithan said:

எனக்கென்னவோ நீங்கள் திட்டமிட்டே இங்கே பிரச்சனையை  எழுப்புவதாகப் படுகிறது. 

எனக்கும் தான், சைவ தமிழருக்கும் கத்தோலிக்க தமிழருக்கும் மதன்பிரச்சனை எப்போதுமே இருந்ததில்லை, ஆனால் இவரின் எழுத்துக்களை பார்த்தால் பிரச்சனியை கிளப்ப  வேண்டும் என்றே எழுதுவது போல் உள்ளது.

4 minutes ago, Elugnajiru said:

என்னுடைய கருத்து என்னவென்றால் எவருக்கும் பிரச்சனை இல்லை வளைவை இனிமேல் வைக்கவேண்டாம் என்பதே ஆனால் வளைவைப்பற்றிய அனைத்து விடையங்களும் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் கத்தோலிக்க மதத்தினரைச்சேர்ந்தவர்களது சந்ததியினர் இப்படி ஒரு பிரச்சனை இருந்தது அதை எமது கடந்தகால கிருஸ்தவர்கள் எப்படிக்கையாண்டார்கள் என்பதைத் தெரியும்வண்ணமாகப் பாதுகாக்கவேண்டும். 

தவிர மடுமாதா கோவிலுக்குச் செல்பவர்களில் சைவசமயத்தவர்களும் அதிகமாகும் உலகத்தில் சைவசமயத்தவர்கள்தான் தங்களது கடவுளர்களை நம்பாது எதுக்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்பதுபோல்  பக்கத்துத் தெருவில் எந்தச்சமயக் கோவிலாக இருந்தாலும் ஒரு கும்புடு போட்டு நேத்திவைச்சு நெய்விளக்கோ மெழுகுதிரியோ கொழுத்துவினம் அட சைவக்காரா உனது கடவுளிலேயே உனக்கு நம்பிக்கை இல்லாமல்தானே இன்னுமொரு கடவுளையும் கும்புடுகிறாய். 

மதங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் அன்பையும் போதிக்கிறது எனக்கூறிக்கொண்டு கலவரத்தை உண்டாக்கினால் அது மதம் இல்லை. அதனால்தாணோ மதம் என்று பெயர்வைத்தார்களோ

இந்த பிரச்சனை மொட்டு கட்சி, வீணை கட்சி மற்றும் வடக்கின் அடாவ்டி அமைச்சரின் துணையுடன் சைவத்தமிழரும் கத்தொலிக்கப்தமிழரும் மோதிக்கொள்ள வைத்த முயற்சியே இது.

நண்பரகளே நான் எதுவுமே திட்டமிடவில்லை ஆனால்திசை திருப்பும் நோக்கம் புரிகிறது புற்றீசல்கள் போல் முளைத்து அவைகளை ஆதாரமாக காட்டும் தந்திரம் மதம் பரப்பும் நுணுக்கத்தை யாரும் புரியாமல் செய்வது ஓர் கலை நான் எழுதியது மாதோட்டம் சந்தி என்ற அர்த்தம் மட்டுமே யாரையும் காயப்படுத்த அல்ல இதை திசை திருப்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் காலத்தில் எம்மினத்துக்கு நீதி தர மறுத்த சிங்களவனுக்கெதிராக  

மத வேறுபாடென்றால் என்னவென்று தெரியாமல் ஒற்றுமையாய்  போராடிய எம்மினம் 

இன்று எமக்குள்ளேயே முட்டிமோதி  , நாங்கள் வேறு மதம் அவர்கள் வேறு மதம் என்று அதே சிங்களவனின் நீதிமன்ற படியேறி   பிரிவினை கோருகின்றன .

தமிழன் என்பவன் ஒரு குப்பை, அந்த குப்பைகளிருந்துகூட தீபங்கள் ஏற்றலாம் என்று அவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்   ,

முடியாமல் போனதால்தான் அவரே எரிந்துபோனார்.

போராட்ட காலங்களுக்கு முன்பிருந்ததைபோல குப்பைகள் மறுபடியும் நாற்றம் வீசுகின்றன, பல்கலைகழக பகடி வதை,வாள்வெட்டு, தெரு சண்டிதனம், சாதி மோதல்,கஞ்சா பாலியல் வக்கிரம்  என்று...

இப்போ யாழில் கருத்து சொல்லும் பலர் இறந்து  நூறு வருடங்களின் பின்னர் மீண்டும் பிறந்து வந்தாலும் இதேபோலதான் தமிழர் தாயக நிலமைகள் இருக்கும்.

அப்போதும் இதே யாழ்களம் இருந்தால்  இதே விரக்தியுடன் யாரும் பேசி கொண்டிருப்பார்கள்.

ஈழ தமிழர்கள், குறிப்பாக வடபகுதி தமிழர்கள் ஒரு துப்புகெட்ட இனம், இந்த இனத்தை கட்டி மேய்க்க இனி யாரும் பிறக்கபோவதில்லை.

13 hours ago, தமிழ் சிறி said:

சரியாக..  சொன்னீர்கள், மார்த்தாண்டான்.
பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

நன்றி தமிழ் சிறி என் ஆதங்கம் புரிந்த உங்கள் எழுத்து

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மார்த்தாண்டன் said:

நண்பரகளே நான் எதுவுமே திட்டமிடவில்லை ஆனால்திசை திருப்பும் நோக்கம் புரிகிறது புற்றீசல்கள் போல் முளைத்து அவைகளை ஆதாரமாக காட்டும் தந்திரம் மதம் பரப்பும் நுணுக்கத்தை யாரும் புரியாமல் செய்வது ஓர் கலை நான் எழுதியது மாதோட்டம் சந்தி என்ற அர்த்தம் மட்டுமே யாரையும் காயப்படுத்த அல்ல இதை திசை திருப்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் 

ஐயா பெரியவரே, 

இங்கு நாங்கள் ஏற்கனவே நொந்து நூலாகிக் கிடக்கிறோம். திரும்பவும் இதனைக் கிளறி புண்ணாக்க வேண்டாம். 

இந்தப் பிரச்சனையை அந்தப் பிரதேசத்திற்குரிய மக்களே பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்.

யாழ் களம் முன்னர் இருந்ததுபோல் ஏராளமானோர் இப்போது வருவதில்லை. மீதமிருக்கும் கொஞ்சப் பேரையும் வெறுத்து ஒதுங்கிப் போக வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சரியாக..  சொன்னீர்கள், மார்த்தாண்டான்.
பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

ஐயா தமிழ் சிறி அவர்களே,

எப்படியும் உங்களுக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும் என்பது எனது கணிப்பு. 

தவறா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

பிரபாகரன் காலத்தில் எம்மினத்துக்கு நீதி தர மறுத்த சிங்களவனுக்கெதிராக  

மத வேறுபாடென்றால் என்னவென்று தெரியாமல் ஒற்றுமையாய்  போராடிய எம்மினம் 

இன்று எமக்குள்ளேயே முட்டிமோதி  , நாங்கள் வேறு மதம் அவர்கள் வேறு மதம் என்று அதே சிங்களவனின் நீதிமன்ற படியேறி   பிரிவினை கோருகின்றன .

தமிழன் என்பவன் ஒரு குப்பை, அந்த குப்பைகளிருந்துகூட தீபங்கள் ஏற்றலாம் என்று அவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்   ,

முடியாமல் போனதால்தான் அவரே எரிந்துபோனார்.

போராட்ட காலங்களுக்கு முன்பிருந்ததைபோல குப்பைகள் மறுபடியும் நாற்றம் வீசுகின்றன, பல்கலைகழக பகடி வதை,வாள்வெட்டு, தெரு சண்டிதனம், சாதி மோதல்,கஞ்சா பாலியல் வக்கிரம்  என்று...

இப்போ யாழில் கருத்து சொல்லும் பலர் இறந்து  நூறு வருடங்களின் பின்னர் மீண்டும் பிறந்து வந்தாலும் இதேபோலதான் தமிழர் தாயக நிலமைகள் இருக்கும்.

அப்போதும் இதே யாழ்களம் இருந்தால்  இதே விரக்தியுடன் யாரும் பேசி கொண்டிருப்பார்கள்.

ஈழ தமிழர்கள், குறிப்பாக வடபகுதி தமிழர்கள் ஒரு துப்புகெட்ட இனம், இந்த இனத்தை கட்டி மேய்க்க இனி யாரும் பிறக்கபோவதில்லை.

இராச இராச சோழனுக்குப் பின் ஆயிரம் வருடங்கள் கழித்து வந்த பிரபாகரனாலேயே திருத்த முடியாத இனம் பிறகெப்போ திருந்தும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

மதங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் அன்பையும் போதிக்கிறது எனக்கூறிக்கொண்டு கலவரத்தை உண்டாக்கினால் அது மதம் இல்லை. அதனால்தாணோ மதம் என்று பெயர்வைத்தார்களோ

உண்மை தான்  மதம் கொண்டது மதம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

அதிகம் கவலைப்படாதீர்கள் தமிழ் சிறி. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தின் பின் இப்படி கவலைப்படும் தேவையே இருக்காது.

அதற்கு காரணம் இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

***

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

அதிகம் கவலைப்படாதீர்கள் தமிழ் சிறி. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தின் பின் இப்படி கவலைப்படும் தேவையே இருக்காது.

அதற்கு காரணம் இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

***

கற்பனை செய்யவே கடினமாக உள்ளது. ஆனாலும் உண்மையை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கற்பகதரு said:

அதிகம் கவலைப்படாதீர்கள் தமிழ் சிறி. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தின் பின் இப்படி கவலைப்படும் தேவையே இருக்காது.

அதற்கு காரணம் இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

***

இந்த வருட தேர்தலின்பின்,  வட, கிழக்கு முற்றாக ஆக்கிரமிக்கப்படும்.

50 வருடம் செல்ல தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

***

மட்டுறுத்துனருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மார்த்தாண்டன் said:

ஆனால்திசை திருப்பும் நோக்கம் புரிகிறது புற்றீசல்கள் போல் முளைத்து அவைகளை ஆதாரமாக காட்டும் தந்திரம் மதம் பரப்பும் நுணுக்கத்தை யாரும் புரியாமல் செய்வது ஓர் கலை

இன்று தமிழர் தாயகத்தில் விகாரைகள் முளைத்ததை சொல்கிறீர்கள் போலுள்ளது. சிங்களவன் பவுத்தத்தை தூண்டி ஜனாதிபதியானதை பின்பற்றி   இவர்களும் மீன் பிடிக்க குட்டையை குழப்புகிறார்கள். இவர்களுக்கு பதிலிடாமல் கடந்துபோனால் மூடிக்கொண்டு போய்விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.