Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இவர்கள் நிறுவியது என்ன...  நாங்க காட்ட விரும்பியதென்ன..

எம்மவர்களுக்குள் இருக்கும் வெட்டிப் பெருமைகளுக்காக அல்ல.. யுனிகள்.

எல்லா யுனியும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானதே. யுனிகளின் தெரிவு அவரவர் தெரிவு செய்யும் பாடப்பரப்பு... சொந்த விருப்பு வெறுப்புக்கு அமைவானதே தவிர வெட்டிப் பெருமைக்கு அல்ல. 

கேம்பிரிஷ்.. ஆக்ஸ்பேட் என்றால்.. அங்கு படிப்பவர்கள் எல்லாம் பெருமை பேசுவதற்கு அல்ல. அவற்றையும் தமது தேவைகளுக்காக நிராகரிக்கக் கூடிய நிலையில் தான் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால்.. எம்மவர்களுக்கு அவற்றில் அனுமதி என்பது பெரும் வெட்டிப் பெருமை ஆகும். 

எனவே எம்மவர்கள்.. இந்தப் போலியான வெட்டிப் பெருமையை கைவிட்டு.. எல்லோரையும் சமனாக.. மதிக்கக் கற்றுக் கொண்டால்.. எத்தனையோ சமூகத் தடைகள் தானே நீங்கும். திருமணங்களில் வரும் தடைகள் கூட. 

இங்கு சிலர் தாமும் அரைகுறையாக விளங்கி மற்றவர்களுக்கு விளக்கிறம் என்ற போர்வையில்.. மீண்டும் மீண்டும் போலி வெட்டிப் பெருமைகளை நிலைநிறுத்துவதை நாங்கள் கருத்துக்களால் எதிர்க்கிறோம்.. எதிர்ப்போம். 

Edited by nedukkalapoovan

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா யூனிகளும் திறமானதே என்பது, தரமான யூனிக்கு போகாதவர்கள் தம்மை தாமே தேற்றிக்கொள்ள உதவக்கூடும்.

ஆனால் அந்த கார்டியன் ஆர்டிகிலில் மாணவன் சொன்னது போல, நாம் மேலும் மேலும் எமது எதிர்கால மாணவச் செல்வங்களை முதன் நிலை யூனிகளுக்கு அனுப்ப எம்மால் முடியுமானதை செய்வதே எமது இனத்தை உய்விக்கும் வழி.

இங்கே நான் எழுதியவற்றுக்கான காரணமே, எமது மக்களில் பலர் மொழி ஆளுமை அதிகம் அற்றவர்கள், தம்மை எல்லாம் அறிந்தவர்களாக பீற்றிக் கொள்பவர்கள் சொல்வதை நம்பி நாளைக்கு பிள்ளைகளை கிரமர் ஸ்கூலுக்கு அல்லது ஆக்ஸ்பிரிஜ்ஜுக்கு அனுப்பாமல் இருக்க கூடாது.

மக்களே,

கேம்பிரிஜ் ஆக்ஸ்போர்ட்டில் படிப்பதை விட வேறு இடங்களில், அதுவும் open university எனும் திறந்த பலகலையில் படிப்பது திறம் என்பதை போல் எழுதுபவர்கள் தம்மை தாமே தேற்றிக்கொள்ள எழுதுகிறார்கள்.

அதை செவிமடுத்து உங்கள பிள்ளைகள under achievers ஆக்கி விடாதீர்கள். கேம்பிரிஜ் போனால்தான் வாழ்கை, கிரமர் ஸ்கூல் போனால்தான் வாழ்கை என்றில்லை.

ஆனால் திறமையிருத்தும் குருட்டு வழிகாட்டலகளால் எமது பிள்ளைகள் வாய்புக்களை தவறவிடல் ஆகாது.

படிபுக்கும் வெட்டி பெருமைக்கும் சம்பந்தமே இல்லை. கடைநிலை IT தகமைகளை கூட பி எச் டி ரேஞ்சுக்கு தம்பட்டம் அடிப்பவர்கள், கேபிரிஜ் ஆக்ஸ்போர்ட் போவது வெட்டி பெருமை என எழுதுவது, கபட நாடகம்.

ஈன்ற பொழுதினில் பெருதுவப்பாள் தன் மகவை சான்றோன் எனகேட்டதாய் என்கிறான் வள்ளுவன்.

இந்த உவப்பு, தமக்கு இல்லையே என்ற கடுப்பில் சிலர் எழுதும் எழுத்துகளால் உங்கள் உண்மையான பெருமிதம், வெட்டி பந்தா என்று ஆகாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே..

ஆக்ஸ்பிரிஷ் என்பது தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் பணம் கட்டிப் படிக்கும்.. பணக்காரப் பிள்ளைகளுக்கு என்று இருக்கும் நிலையை மாற்றி.. சாதாரண அரச பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சம வாய்ப்பை ஆக்ஸ்பிரிஷ் அளிக்கனும் என்ற கருத்துக்களோடு இயங்கும் மாணவர்கள் எங்கே.. அவர்களின் உயர்ந்த எண்ணங்களை தமக்கு வசதியாக மாற்றிச் சொல்லி.. போலி பெருமை வளர்க்க.. ஆக்ஸ்பிரிஷ்சுக்கு போகச் சொல்பவர்கள் எங்கே.

திறமைகள் இருந்தும்.. போட்டிச் சூழலுக்கு தம்மை தயார் படுத்துவோர் தவிர.. மற்றோர் ஆக்ஸ்பிரிஷ் போவது கடினம் என்றாக்கப்பட்டுள்ள நிலையில்.. ஆக்ஸ்பிரிஷ் விருப்புக் காட்டி.. உங்கள் மீது ஏமாற்றங்களை திணிப்பவர்கள் தொடர்பில் கவனமாக இருங்கள். ஆக்ஸ்பிரிஷ் 5 தேர்வுகளில்.. ஒன்றாக அமையலாம் என்பதே நடைமுறை யதார்த்தம். அதைக்கூடத் தெரிந்து கொள்ளாமல்.. சிலர் அதிகப்பிரசிங்கித்தனமாக அளந்து திரிவதை வைத்து இவர்களை நன்கு இனங்கண்டு கொள்ளுங்கள்.

இங்கிலாந்து திறந்த பல்கலைக்கழகம்.. பிரித்தானிய.. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய பங்காளிகளில் ஒன்று என்பதை அறிந்து கொண்டு.. அதனூடாக.. விண்வெளி ஆய்வில்,.. எம் இனத்தவர்கள் ஈடுபட வாய்ப்புக் கிட்டுமா என்று கூடப் பார்க்கலாம்.. பாவிக்கலாம். கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் சரியாகப் பயன்படுத்துவதை விடுத்து.. போட்டிச் சூழலுக்குள்.. வெட்டிப் பெருமைச் சூழலுக்குள்.. போலிய பெருத்த விம்பங்களுக்குள் பிள்ளைகளை கூட்டிச் சென்று அவர்கள் மீது தாங்கள் சுமக்க முடியாத சுமைகளை பிள்ளைகள் மீது திணிக்கும் தமிழ் பெற்றோர் தொடர்பில் பிள்ளைகள் கூடிய கவனம் செலுத்துவது மிக மிக அவசியம்.

ஆக்ஸ்பிரிஷ் பட்டங்கள் சிலவற்றின் வேலைத் தகமை பற்றாக்குறை.. மற்றும்.. year in industry போன்றவை இல்லாத நிலை.. இருப்பின்.. அவை ஆக்ஸ்பிரிஷ் என்பதற்காக தெரிவு செய்யப்படக் கூடாது. உங்களின் எதிர்கால வேலை வாய்ப்புக்கு வசதியான.. கொடுப்பனவுடன் கூடிய.. year in industry மூலம் வேலைத் தகமை அளிக்கும் பல்கலைக்கழகப் பட்டங்களை தெரிவு செய்வது.. ஆக்ஸ்பிரிஷ் வெட்டிப் பெருமைக்கு அப்பால்.. நடைமுறை வாழ்வில்.. விரைந்து துறைசார் தொழில் பெற விரைந்து உதவும்.

கிரமர் ஸ்கூல் தேர்வு என்று மூன்று மாதங்களுக்கு 1000 இருந்து 10,000 பவுன்ஸ்களை மாணவர்களை தயார்படுத்த என்று வாக்கி பெருகும்.. தமிழ் ஆட்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். கிரமர் ஸ்கூலுக்கு சுயமான தயார்ப்படுத்தலே அவசியம். அங்கிருக்கும் போட்டிச் சூழலை எதிர்கொள்ள. எனவே.. பெற்றோரின்.. பிற வெளியாரின் வெட்டிப் பெருமைக்கான தூண்டுதலின் பெயரில்.. கிரமர் ஸ்கூலை தெரிவு செய்யாமல்.. தனித்திறமையை இனங்கண்டு... அதன் பால் சுய தயார்ப்படுத்தல் மூலம்.. நடைமுறைப் பரீட்சைகளில் தேர்வு பெற்று போட்டிச் சூழலை சந்திக்க தயார் நிலைக்கு தம்மை தக்க வைக்கக் கூடிய மாணவர்கள்.. கிரமர் ஸ்கூலை நாடிப் படிக்கலாம். ஆனால்.. அதனால் பெருமை கொள்ள வேண்டாம். கல்விக்குரிய அந்தச் சூழலையும் பாவித்துப் பயனடையுங்கள் அது தவறில்லை. அதற்காக அரச பள்ளிங்கள் தரம் தாழ்ந்தவை அங்கு படிப்போர் தரமற்றோர் என்ற தற்பெருமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அவர்களும் திறமை சாலிகளே. 

எனவே மாணவர்களே.. வழிகாட்டுகிறோம் என்ற போர்வையில்.. உங்களை எம்மவர்கள் சிலர் தாம் மூழ்கிக்கிடக்கும் வெட்டி பெருமைச் சகதிக்குள் தள்ளிவிட முயலலாம். அந்த வகையில்.. உங்களுக்கு எது உரியது.. தேவை என்பதை தீர்மானிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு தெரிவுகளை உங்களது ஆக்கி முன்னேறிச் செல்லுங்கள். அடுத்தவன் உளறிக்கிட்டே கிடக்கட்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாரும் அரச பள்ளிகளில் படிப்பது குறைவு என்றோ, அல்லது எனைய யூனிகளில் படிப்பது குறைவு என்றோ எழுதவில்லை.

ஆனால் வளங்கள் மட்டுப்பட்ட உலகில், அதிக வளங்கள் இருக்கும் பள்ளிகளை, யூனிகளை தேடிப்போவதில் ஒரு தவறும் இல்லை.

இதில் எந்த வெட்டிப் பெருமையும் இல்லை. 

இதை வெட்டி பந்தா என்பவர்கள் தம்மை விட, தம் இனத்தில் இருந்து யாரும் மேலே போய்விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம் உள்ளவர்களாகவே இருக்க முடியும்.

#தமிழ் நண்டு

எல்லாருக்கும் கேம்பிரிட்ஜ் சரிவராது, உங்கள் பிண்ணனி உங்களை கீழே அமிழ்தலாம். இதை மீறி வர முடியுமா பாருங்கள், இல்லை என்றால் வேறு ஒரு தெரிவை எடுங்கள் ஆனால் தமிழ் நண்டுகளின் கதையை கேட்டு முயலாமலே விட்டு விடாதீர்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் சரியாகப் பயன்படுத்துவதை விடுத்து.. போட்டிச் சூழலுக்குள்.. வெட்டிப் பெருமைச் சூழலுக்குள்.. போலிய பெருத்த விம்பங்களுக்குள் பிள்ளைகளை கூட்டிச் சென்று அவர்கள் மீது தாங்கள் சுமக்க முடியாத சுமைகளை பிள்ளைகள் மீது திணிக்கும் தமிழ் பெற்றோர் தொடர்பில் பிள்ளைகள் கூடிய கவனம் செலுத்துவது மிக மிக அவசியம்.

இந்தக் கருத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.. மாணவர்களே. 

சும்மா.. நண்டு.. இறால்.. கணவாய் என்று தங்களின் குணவியல்புகளை ஒப்பிப்பவர்களை இட்டு.. கிஞ்சிதமும்.. கவனம் செலுத்தத் தேவையில்லை. 

எது எங்கு எப்போது அவசியமோ அதை சாத்தியமாக்க முனையுங்கள்.. மாணவர்களே.. அதுதான் வளர்ச்சிக்கு முக்கியம். உங்கள் பெற்றோரும்.. தமிழ் அங்கிள் ஆன்ரிமாரும் திணிக்கக் கூடிய.. வெட்டிப் பெருமைகளை.. பொறாமைகளை.. போலி விம்பங்களை.. ஒருபோதும் கவனத்தில் கொள்ளாதீர்கள். புறக்கணித்துச் செல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு இழுக்கும் கவனம்😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விளக்கம்

ரதி நான் தளத்துக்கு வராமல் இருப்பது கோசனின் நடவடிக்கை தான் காரணம் என்று கூறி இருந்தார்.

நான் தளத்தில் இருந்து சிலகாலங்கள் ஒதுங்கி இருப்பதற்கு காரணம், கோசன், தன்னை அறிவுஜீவியாக காட்டுவதில், அதிக ஆர்வம் காட்டினாலும், அவரது, இந்த ஆர்வத்தினால், அவரது criminal wastage of time எனும் ஒரு பழக்கம் எனக்கும் வைரஸ் ஆக பரவி விடுமோ என்று பயந்தேன். அதனாலே ஒதுங்கிக் கொண்டேன்.

நான் இந்த தளத்துக்கு வந்த இரண்டாம் நாளில், கோமகன் என்பவரால், bully பண்ணப்பட்டேன். விசுகு வந்து ஆதரவு தந்தார். அதன் பின்னர் பனம் காட்டு நரியானேன். ஆகவே கோசனால் தான் நான் வருவதில்லை என்பது தவறு.

ஒதுங்கி இருந்த,  இந்த கால அவகாசத்தில் கிடைத்த நேரத்தில், 5 வருட காலமாக மனதில் இருந்த புத்தகங்கள் இரண்டை முடித்து விட்டேன். முதலாவது கடந்த மாதம் அமேசானிலும், அடுத்தது நேற்று எடிட் பண்ணவும் அனுப்பி விட்டேன்.

தவிர, மூன்று இணைய தளங்களையும் நானே படித்தறிந்து உருவாக்கினேன். எனது இணைய தள முயல்வுகளுக்கு உதவும் என்பதால் டிஜிட்டல் மீடியா தொடர்பில் பல பாடத்திட்டங்களை கற்றுக்கொண்டேன்.

ஆகவே நண்பர்களுக்கு சொல்வது, உங்கள் ஓய்வு நேரங்களில் யாழுக்கு வாருங்கள். ஊறுகாய் மாதிரி பயன்படுத்துங்கள், சோறு போல பயன்படுத்தி, இங்கேயே பாயை போட்டு படுத்து விடாதீர்கள். நிர்வாகமும் அவ்வாறு எதிர்பார்ப்பதில்லை, அவர்களும் அப்படி செய்வதில்லை.

இரண்டு வகையினரே நேரத்தினை அதிகம் இங்கே செலவழிக்க முடியும். ஒன்று ஓய்வு பெற்று இருப்பவர்கள். அடுத்தது பணத்தினை வங்கியில் போட்டு வைத்து வட்டியில் வாழ்க்கை ஓட்டுபவர்கள்.

ஏனையோர் தயவு செய்து நேரத்தினை அளவாக செலவழியுங்கள். காலம் பொன் போன்றது அல்ல, உயர் போன்றது. போனால் திரும்பாது. உங்கள் மேன்மைக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதனை மறவாதீர்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

1. நான் அறிவுஜீவியாக காட்டி கொள்ள முனைவதில்லை. ஆனால் அப்படி உங்களுக்கு தெரிந்தால் அது பற்றி நான் கவலைப்படப் போவதுமில்லை.

என்னை பொறுத்தவரை தவறான தரவுகளை யார் தந்தாலும், அவை தவறு என தெரிந்தால் அதை சுட்டி காட்டி விடுவேன். ஹரோ ஒன் த ஹிள் முதல் பல விடயங்களில் நீங்கள் தந்த தவறான தரவுகளை, சரியான ஆதாரங்களுடன் சுட்டி கட்டினேனே ஒழிய வேறு எதுவும் நான் உங்களை இம்சை செய்ததில்லை.

அதே போல் நீங்கள் சரியான தரவுகளை நீங்கள் சொன்ன இடத்து, அதை ஆமோதித்தும் இருக்கிறேன்.

அது மட்டும் அல்லாமல் என் தரவுகள் பிழை என சுட்டி காட்டப்பட்ட இடத்து அவற்றை சரிசெய்து மன்னிப்பும் கேட்டிருக்கிறேன்.

(போல் எனது தமிழ் மொழி பெயர்ப்பை தவறு என சுட்டி காட்டி எழுதுயபோது நான் விசனம் அடைந்து, போல் தன்னை அறிவாளியாக காட்டி கொள்ள முனைகிறார் என கூப்பாடு போடவில்லை, அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டேன்).

நான் பொத்தாம் பொதுவில் எழுதுவதில்லை. என் அறிவுக்கு சரி எனும் தகவல்களையே எழுதுகிறேன். 

பிழைக்கும் போது ஏற்றும் கொள்கிறேன். 

எனவேதான் இதை இட்டு நான் டென்சன் ஆவதில்லை.

2. நீங்கள் என்னால் போகவில்லை என்ற மட்டில் திருப்தி. ரதி சொன்ன போது நான் கூட என்னால்தான் போனீர்களாக்கும் என நினத்தேன். ஆனால் இந்த அபாண்டத்தில் இருந்து என்னை மீட்டமைக்கு நன்றி.

3. நேரவிரயம் பற்றி நீங்கள் கூறியது 100% உண்மை. 

4. கண்டது சந்தோசம்.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: என்னை போல நேரவிரயம் செய்ய கூடாது என்ற படிப்பினையை என்னை பார்த்து பெற்று கொண்டதாக பொருள் பட எழுதியுள்ளீர்கள்.

இந்த படிப்பினை காரணமாக ஒதுங்கி இருந்தமையால் நீங்கள் பலவற்றை செய்ய முடிந்ததாயும் எழுதி இருந்தீர்கள்.

அந்தவகையில் ஒரு எதிர்மறை உதாரணமாகவேனும் உங்கள் முன்னேற்றதில் எனக்கும் ஒரு சிறு பங்கு உள்ளது என்பது இரெட்டிப்பு மகிழ்சி 😂

யாழுக்கு வந்திராவிட்டால், கோசானின் நேரவிரயத்தை கண்டிராவிட்டால், இந்த பட்டறிவு உங்களுக்கு வாய்தே இருக்காது அல்லவா?

#நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2020 at 10:32 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன செய்து சம்பாரிக்கிறா என்று எங்களுக்கும் சொன்னால் ........😀

அதற்கு நீங்கள் சரிவர மாட்டியள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் ஒக்ஸ்போட் /கேம்பிரிஜ்யில் படித்தவை என்பதற்காக டொக்ரர்,இன்ஜினியர்மாருக்கு மற்ற டாக்டர் ,இஞ்சினியரை விட சம்பளம் கூட கொடுப்பினமா ?

எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் பிள்ளை ஒக்ஸ்போட்டில்  கணிதம் படித்தது ...பாங்கில் மனேஞ்சராய் தான் வேலை செய்கிறா....என்ர  பிரண்ட் ஊரில் ஏ எல் கூட  படிக்காமல் வந்தவ. இங்க வந்தும் படிக்கவில்லை...ஆனால் அவவும் பாங்கில் மனேஞ்ராய் தான் வேலை செய்கிறா.

இந்த இரு யூனியிலும் படித்தவர்கள் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடியவர்களாக இருக்கலாம்...அதற்காக மற்றவர்கள் என்ன கெட்டா போனார்கள்?

தமிழாக்களை பொறுத்த வரை அவர்கள் பிள்ளைகள் ஆணாகின் சீதனத்தை கூட்டி கேட்கவும்,பெண்ணாகின் மற்றவருக்கு புழுவும் தான் பயன்படும்...மற்றப்படி ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை என்ட அனுபவத்தில் கண்டு உள்ளேன் 🤣

ரதி ஊரில் ஓலெவல் படிக்காத ஆட்கள் எல்லாம் பாங்கில் மனேஜராய் வேலை செய்யலாம் எண்டு எனக்கு இதுவரை தெரியாதே. வடிவாக் கேட்டனீங்களோ உங்கள் நண்பியிடம் மானேஜர் வேலை தானோ எண்டு. மானேஜர் ரூமையும் கிளீன் பண்ணுறன் எண்டு சொன்னது உங்களுக்கு மானேஜர் வேலை என்று கேட்டிருக்கும் எண்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 10:19 PM, nedukkalapoovan said:

நம்மவர்கள் கல்யாணப் பேச்சு என்று பலரின் மனங்களை நோகடிப்பதை தான் அதிகம் செய்கின்றனர்.

ஒருமுறை ஒரு ஆன்ரி போன் எடுத்து..

தன்ர மகள் அது படிச்சிருக்குது.. இது படிச்சிருக்குது... பி எச் டி எடுத்திருக்கிறா.. அதுஇதென்று ஒரே படிப்பு கதை தான்.

இதில.... தம்பி நீர் ஸ்ருடன்டே.. என்று ஒரு நக்கல் வேற. 

உடனே நாங்க சொன்னம்... உங்கட மகளுக்கு பார்த்து ஒரு புத்தகத்தை கட்டி வையுங்கோ என்று.

எம்மவர்கள்.. இந்தக் காலத்தில் அல்ல எந்தக் காலத்திலும் கல்யாணத்தை ஒரு முதலீடாகத் தான் பாவிக்க முனைகின்றனர்.

அது மனிதர்களை மனங்களை இணைப்பதைச் செய்ய பல இடங்களில்.. தவறிவிடுகிறது என்பதே நம்மவர் கல்யாணங்களின் யதார்த்தம். 

ஓ நீங்களும் பேசித்தான் திருமணம் செய்தீர்களா ???

கலியாணப் புரோக்கர்களுக்கு நீங்கள் ஸ்டுடென்ட் எண்டு குடுத்தபடியால்தான் என்னடா இந்த வயதிலயும் படிக்கிறார் மாப்பிளை என்று தாய் மனிசி கேட்டிருக்கும் நெடுக்ஸ்.

17 hours ago, nedukkalapoovan said:

மக்களே..

ஆக்ஸ்பிரிஷ் என்பது தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் பணம் கட்டிப் படிக்கும்.. பணக்காரப் பிள்ளைகளுக்கு என்று இருக்கும் நிலையை மாற்றி.. சாதாரண அரச பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சம வாய்ப்பை ஆக்ஸ்பிரிஷ் அளிக்கனும் என்ற கருத்துக்களோடு இயங்கும் மாணவர்கள் எங்கே.. அவர்களின் உயர்ந்த எண்ணங்களை தமக்கு வசதியாக மாற்றிச் சொல்லி.. போலி பெருமை வளர்க்க.. ஆக்ஸ்பிரிஷ்சுக்கு போகச் சொல்பவர்கள் எங்கே.

திறமைகள் இருந்தும்.. போட்டிச் சூழலுக்கு தம்மை தயார் படுத்துவோர் தவிர.. மற்றோர் ஆக்ஸ்பிரிஷ் போவது கடினம் என்றாக்கப்பட்டுள்ள நிலையில்.. ஆக்ஸ்பிரிஷ் விருப்புக் காட்டி.. உங்கள் மீது ஏமாற்றங்களை திணிப்பவர்கள் தொடர்பில் கவனமாக இருங்கள். ஆக்ஸ்பிரிஷ் 5 தேர்வுகளில்.. ஒன்றாக அமையலாம் என்பதே நடைமுறை யதார்த்தம். அதைக்கூடத் தெரிந்து கொள்ளாமல்.. சிலர் அதிகப்பிரசிங்கித்தனமாக அளந்து திரிவதை வைத்து இவர்களை நன்கு இனங்கண்டு கொள்ளுங்கள்.

இங்கிலாந்து திறந்த பல்கலைக்கழகம்.. பிரித்தானிய.. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய பங்காளிகளில் ஒன்று என்பதை அறிந்து கொண்டு.. அதனூடாக.. விண்வெளி ஆய்வில்,.. எம் இனத்தவர்கள் ஈடுபட வாய்ப்புக் கிட்டுமா என்று கூடப் பார்க்கலாம்.. பாவிக்கலாம். கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் சரியாகப் பயன்படுத்துவதை விடுத்து.. போட்டிச் சூழலுக்குள்.. வெட்டிப் பெருமைச் சூழலுக்குள்.. போலிய பெருத்த விம்பங்களுக்குள் பிள்ளைகளை கூட்டிச் சென்று அவர்கள் மீது தாங்கள் சுமக்க முடியாத சுமைகளை பிள்ளைகள் மீது திணிக்கும் தமிழ் பெற்றோர் தொடர்பில் பிள்ளைகள் கூடிய கவனம் செலுத்துவது மிக மிக அவசியம்.

ஆக்ஸ்பிரிஷ் பட்டங்கள் சிலவற்றின் வேலைத் தகமை பற்றாக்குறை.. மற்றும்.. year in industry போன்றவை இல்லாத நிலை.. இருப்பின்.. அவை ஆக்ஸ்பிரிஷ் என்பதற்காக தெரிவு செய்யப்படக் கூடாது. உங்களின் எதிர்கால வேலை வாய்ப்புக்கு வசதியான.. கொடுப்பனவுடன் கூடிய.. year in industry மூலம் வேலைத் தகமை அளிக்கும் பல்கலைக்கழகப் பட்டங்களை தெரிவு செய்வது.. ஆக்ஸ்பிரிஷ் வெட்டிப் பெருமைக்கு அப்பால்.. நடைமுறை வாழ்வில்.. விரைந்து துறைசார் தொழில் பெற விரைந்து உதவும்.

கிரமர் ஸ்கூல் தேர்வு என்று மூன்று மாதங்களுக்கு 1000 இருந்து 10,000 பவுன்ஸ்களை மாணவர்களை தயார்படுத்த என்று வாக்கி பெருகும்.. தமிழ் ஆட்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். கிரமர் ஸ்கூலுக்கு சுயமான தயார்ப்படுத்தலே அவசியம். அங்கிருக்கும் போட்டிச் சூழலை எதிர்கொள்ள. எனவே.. பெற்றோரின்.. பிற வெளியாரின் வெட்டிப் பெருமைக்கான தூண்டுதலின் பெயரில்.. கிரமர் ஸ்கூலை தெரிவு செய்யாமல்.. தனித்திறமையை இனங்கண்டு... அதன் பால் சுய தயார்ப்படுத்தல் மூலம்.. நடைமுறைப் பரீட்சைகளில் தேர்வு பெற்று போட்டிச் சூழலை சந்திக்க தயார் நிலைக்கு தம்மை தக்க வைக்கக் கூடிய மாணவர்கள்.. கிரமர் ஸ்கூலை நாடிப் படிக்கலாம். ஆனால்.. அதனால் பெருமை கொள்ள வேண்டாம். கல்விக்குரிய அந்தச் சூழலையும் பாவித்துப் பயனடையுங்கள் அது தவறில்லை. அதற்காக அரச பள்ளிங்கள் தரம் தாழ்ந்தவை அங்கு படிப்போர் தரமற்றோர் என்ற தற்பெருமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அவர்களும் திறமை சாலிகளே. 

எனவே மாணவர்களே.. வழிகாட்டுகிறோம் என்ற போர்வையில்.. உங்களை எம்மவர்கள் சிலர் தாம் மூழ்கிக்கிடக்கும் வெட்டி பெருமைச் சகதிக்குள் தள்ளிவிட முயலலாம். அந்த வகையில்.. உங்களுக்கு எது உரியது.. தேவை என்பதை தீர்மானிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு தெரிவுகளை உங்களது ஆக்கி முன்னேறிச் செல்லுங்கள். அடுத்தவன் உளறிக்கிட்டே கிடக்கட்டும். 

கூல் நெடுக்ஸ் கூல். வேணுமெண்டா ஒரு ஆர்ப்பாட்ட  ஊர்வலம் ஒழுங்கு செய்யுங்கோ ஒக்ஸ்பிரிச்சுக்கு எதிரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

இப்பவே 9 பக்கம் ஓடிவிட்டதே!
இன்னுமா?
OMG.

இன்னும் 20 பக்கம் சொல்லவேண்டிய விடயங்கள் இருக்கேயண்ணா

16 hours ago, MEERA said:

அதற்கு நீங்கள் சரிவர மாட்டியள்.......

🤔😃

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி ஊரில் ஓலெவல் படிக்காத ஆட்கள் எல்லாம் பாங்கில் மனேஜராய் வேலை செய்யலாம் எண்டு எனக்கு இதுவரை தெரியாதே. வடிவாக் கேட்டனீங்களோ உங்கள் நண்பியிடம் மானேஜர் வேலை தானோ எண்டு. மானேஜர் ரூமையும் கிளீன் பண்ணுறன் எண்டு சொன்னது உங்களுக்கு மானேஜர் வேலை என்று கேட்டிருக்கும் எண்டு நினைக்கிறன்.

நான் நினைகிறேன் ரதி அக்காச்சி retail banking க்கும் investment banking க்கும் வித்யாசம் தெரியாமல் குழம்பிறா எண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் நினைகிறேன் ரதி அக்காச்சி retail banking க்கும் investment banking க்கும் வித்யாசம் தெரியாமல் குழம்பிறா எண்டு.

இருக்கும் இருக்கும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி ஊரில் ஓலெவல் படிக்காத ஆட்கள் எல்லாம் பாங்கில் மனேஜராய் வேலை செய்யலாம் எண்டு எனக்கு இதுவரை தெரியாதே. வடிவாக் கேட்டனீங்களோ உங்கள் நண்பியிடம் மானேஜர் வேலை தானோ எண்டு. மானேஜர் ரூமையும் கிளீன் பண்ணுறன் எண்டு சொன்னது உங்களுக்கு மானேஜர் வேலை என்று கேட்டிருக்கும் எண்டு நினைக்கிறன்.

நான் முதல் பந்தியில் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை .

உங்களை பொறுத்த வரை உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்...நீங்கள் மட்டும் தான் உலகில் அறிவுள்ளவர் ,உங்களிடம் மட்டும் தான் பணம் இருக்கு ...உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாட்டி அல்லது கேள்விப்பட்டு இருக்காட்டில் அப்படி நடந்தே இருக்காது ...உங்களுடன் இதில் குத்தி முறிய நேரம் இல்லை...நன்றி வணக்கம்.

1 hour ago, goshan_che said:

நான் நினைகிறேன் ரதி அக்காச்சி retail banking க்கும் investment banking க்கும் வித்யாசம் தெரியாமல் குழம்பிறா எண்டு.

மேலே சுமோக்கு எழுதிய பதில் உங்களுக்கும் சேர்த்து தான் ....உங்கள மாதிரி எனக்கு அறிவில்லை தான் அண்ணா ஒத்துக்கிறேன்...ஆனால் இன்வெஸ்ட்மென்ட் பாங்குக்கும்,ரீடேல் பாங்குக்கும்  வித்தியாசம் தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லை ...உங்களுடன் கருத்தாடுவதே நேர விரயம் ...நன்றி ...வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

நான் முதல் பந்தியில் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை .

உங்களை பொறுத்த வரை உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்...நீங்கள் மட்டும் தான் உலகில் அறிவுள்ளவர் ,உங்களிடம் மட்டும் தான் பணம் இருக்கு ...உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாட்டி அல்லது கேள்விப்பட்டு இருக்காட்டில் அப்படி நடந்தே இருக்காது ...உங்களுடன் இதில் குத்தி முறிய நேரம் இல்லை...நன்றி வணக்கம்.

மேலே சுமோக்கு எழுதிய பதில் உங்களுக்கும் சேர்த்து தான் ....உங்கள மாதிரி எனக்கு அறிவில்லை தான் அண்ணா ஒத்துக்கிறேன்...ஆனால் இன்வெஸ்ட்மென்ட் பாங்குக்கும்,ரீடேல் பாங்குக்கும்  வித்தியாசம் தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லை ...உங்களுடன் கருத்தாடுவதே நேர விரயம் ...நன்றி ...வணக்கம் 

அண்ணாவா.....

இதென்ன காலக் கொடுமை சரவணா😂

உங்களுக்கு தெரியாமல் இருக்கும் என பொருள் பட எழுதியமைக்கு மன்னிகவும். சும்மா பகிடியா எழுதியது.🙏🏾

ஆனால் நீங்கள் சொன்ன மாரி கேம்பிரிஜ்ஜில் படித்த ஒருவர் ரீடெயில் பாங்கில் மனேஜராய் இருப்பது நடக்க கூடியதுதான்.

வாழ்கை சொன்ன வழியில் போவதில்லை, பள்ளியில், high flyer ஆக இருந்த பலர் யூனியில், வேலையில் எந்த சுரத்தும் இன்றி, அதிகம் பளு இல்லா வேலையை பார்த்த படி ஒதுங்கி போவது கூட வழமைதான்.

இளவரசனாக பிறந்த புத்தர் துறவியாகியது போல. இவ்வாறான தனிமனித உதாரணங்களை வைத்து பல்கலைகளின் தரத்தை ஒப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

ஒரு விளக்கம்

ரதி நான் தளத்துக்கு வராமல் இருப்பது கோசனின் நடவடிக்கை தான் காரணம் என்று கூறி இருந்தார்.

நான் தளத்தில் இருந்து சிலகாலங்கள் ஒதுங்கி இருப்பதற்கு காரணம், கோசன், தன்னை அறிவுஜீவியாக காட்டுவதில், அதிக ஆர்வம் காட்டினாலும், அவரது, இந்த ஆர்வத்தினால், அவரது criminal wastage of time எனும் ஒரு பழக்கம் எனக்கும் வைரஸ் ஆக பரவி விடுமோ என்று பயந்தேன். அதனாலே ஒதுங்கிக் கொண்டேன்.

நான் இந்த தளத்துக்கு வந்த இரண்டாம் நாளில், கோமகன் என்பவரால், bully பண்ணப்பட்டேன். விசுகு வந்து ஆதரவு தந்தார். அதன் பின்னர் பனம் காட்டு நரியானேன். ஆகவே கோசனால் தான் நான் வருவதில்லை என்பது தவறு.

ஒதுங்கி இருந்த,  இந்த கால அவகாசத்தில் கிடைத்த நேரத்தில், 5 வருட காலமாக மனதில் இருந்த புத்தகங்கள் இரண்டை முடித்து விட்டேன். முதலாவது கடந்த மாதம் அமேசானிலும், அடுத்தது நேற்று எடிட் பண்ணவும் அனுப்பி விட்டேன்.

தவிர, மூன்று இணைய தளங்களையும் நானே படித்தறிந்து உருவாக்கினேன். எனது இணைய தள முயல்வுகளுக்கு உதவும் என்பதால் டிஜிட்டல் மீடியா தொடர்பில் பல பாடத்திட்டங்களை கற்றுக்கொண்டேன்.

ஆகவே நண்பர்களுக்கு சொல்வது, உங்கள் ஓய்வு நேரங்களில் யாழுக்கு வாருங்கள். ஊறுகாய் மாதிரி பயன்படுத்துங்கள், சோறு போல பயன்படுத்தி, இங்கேயே பாயை போட்டு படுத்து விடாதீர்கள். நிர்வாகமும் அவ்வாறு எதிர்பார்ப்பதில்லை, அவர்களும் அப்படி செய்வதில்லை.

இரண்டு வகையினரே நேரத்தினை அதிகம் இங்கே செலவழிக்க முடியும். ஒன்று ஓய்வு பெற்று இருப்பவர்கள். அடுத்தது பணத்தினை வங்கியில் போட்டு வைத்து வட்டியில் வாழ்க்கை ஓட்டுபவர்கள்.

ஏனையோர் தயவு செய்து நேரத்தினை அளவாக செலவழியுங்கள். காலம் பொன் போன்றது அல்ல, உயர் போன்றது. போனால் திரும்பாது. உங்கள் மேன்மைக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதனை மறவாதீர்கள்.

நன்றி.

அப்படி என்ன புத்தகம் எழுதினீங்கள் எங்களுக்கும் சொல்றது ...வெளிப்படையாய் சொல்ல விருப்பம் இல்லாட்டில் தனி மடலில் சொல்லுங்கோ...ஆக பிகு பண்ணாமல் யாழுக்கும் இடைக்கிடையே  வாங்கோ 👍

  • கருத்துக்கள உறவுகள்

தரவுக்காக:

இங்கே சிலாகிக்கப் பட்ட பல்கலைகழகங்களினதும், இலங்கையில் பேரதெனிய,  கொழும்பு பல்கலைகளினதும் தரவரிசையை இங்கே இணைக்கிறேன். யாழ், கிழக்கு பல்கலைகளை தேடியும் கிடைக்கவில்லை.

large.BBE9BF72-7F08-49F5-8DD2-6C0EE4991477.jpeg.9708c24b2817bf2fd623ae35ec6bf2b9.jpeglarge.722C2D4B-F0CA-4500-89E5-AA57009C5D7A.jpeg.dac1f2d15ae116a9a6da83b84e0db8ff.jpeglarge.AD5C0B92-833E-4EBD-ACC2-5D8100C1F5C6.jpeg.62781b3ba2d77dbfa76126e2ce2d4f34.jpeglarge.A4D08163-B78C-4015-90FE-CA1CFA2B099F.jpeg.cb7498650bca8d319010281700d52aa3.jpeglarge.FE43AFD5-28E7-452C-929C-665930B3C851.jpeg.420c24ee00f1af38d5215a88acad9193.jpeglarge.36819315-C6FA-4590-BAC3-F735DF8CE1F0.jpeg.84dd98b21ae6fa7826f080c2ac21845c.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓ நீங்களும் பேசித்தான் திருமணம் செய்தீர்களா ???

கலியாணப் புரோக்கர்களுக்கு நீங்கள் ஸ்டுடென்ட் எண்டு குடுத்தபடியால்தான் என்னடா இந்த வயதிலயும் படிக்கிறார் மாப்பிளை என்று தாய் மனிசி கேட்டிருக்கும் நெடுக்ஸ்.

நாங்க ஒன்னும் புரோக்கரை நாடவும் இல்லை.. அவிங்களா.. ஊரில அறியப்பட்டவங்க வாயிலா வந்தாய்ங்க.. நம்மிட வாயிடம் வாங்கிக் கட்டினாய்ங்க.. போனாய்ங்க. நம்ம வாயி.. சும்மா வாயி இல்ல. அன்புக்கு அன்பு.. வன்புக்கு வன்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

இரண்டு வகையினரே நேரத்தினை அதிகம் இங்கே செலவழிக்க முடியும். ஒன்று ஓய்வு பெற்று இருப்பவர்கள். அடுத்தது பணத்தினை வங்கியில் போட்டு வைத்து வட்டியில் வாழ்க்கை ஓட்டுபவர்கள்.

ஏனையோர் தயவு செய்து நேரத்தினை அளவாக செலவழியுங்கள். காலம் பொன் போன்றது அல்ல, உயர் போன்றது. போனால் திரும்பாது. உங்கள் மேன்மைக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதனை மறவாதீர்கள்.

வணக்கம் முனி.
நீண்ட காலத்தின் பின் கண்டது மிக்க மகிழ்ச்சி.

ஊறுகாய் மாதிரியாவது யாழைத் தொட்டுக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா யாரும் எதையும் எழுதலாம்,

என்னைப் பொறுத்த வரை, சந்தர்ப்பமும் வசதியும் அமைந்தால் தமிழ் பெற்றோர் தமது பிள்ளையை ஹாவாட்டிற்கு கூட அனுப்புவார்கள்....

பிள்ளைகளும் போவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

சும்மா யாரும் எதையும் எழுதலாம்,

என்னைப் பொறுத்த வரை, சந்தர்ப்பமும் வசதியும் அமைந்தால் தமிழ் பெற்றோர் தமது பிள்ளையை ஹாவாட்டிற்கு கூட அனுப்புவார்கள்....

பிள்ளைகளும் போவார்கள்

எமது பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்ப வேண்டும். பிள்ளைகளும் போக வேண்டும். 

உலகின் தலைசிறந்த கல்விச்சாலைகளுக்கு எமது பிள்ளைகள் போவதற்குத் தகுதியுடையவர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 8:12 PM, ரதி said:

உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் ஒக்ஸ்போட் /கேம்பிரிஜ்யில் படித்தவை என்பதற்காக டொக்ரர்,இன்ஜினியர்மாருக்கு மற்ற டாக்டர் ,இஞ்சினியரை விட சம்பளம் கூட கொடுப்பினமா ?

எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் பிள்ளை ஒக்ஸ்போட்டில்  கணிதம் படித்தது ...பாங்கில் மனேஞ்சராய் தான் வேலை செய்கிறா....என்ர  பிரண்ட் ஊரில் ஏ எல் கூட  படிக்காமல் வந்தவ. இங்க வந்தும் படிக்கவில்லை...ஆனால் அவவும் பாங்கில் மனேஞ்ராய் தான் வேலை செய்கிறா.

இந்த இரு யூனியிலும் படித்தவர்கள் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடியவர்களாக இருக்கலாம்...அதற்காக மற்றவர்கள் என்ன கெட்டா போனார்கள்?

தமிழாக்களை பொறுத்த வரை அவர்கள் பிள்ளைகள் ஆணாகின் சீதனத்தை கூட்டி கேட்கவும்,பெண்ணாகின் மற்றவருக்கு புழுவும் தான் பயன்படும்...மற்றப்படி ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை என்ட அனுபவத்தில் கண்டு உள்ளேன் 🤣

ரதி நீங்கள் கொஞ்சம் விபரம் தெரிந்தவர் என்று எண்ணினேன். ஆனால் நீங்கள் நெடுக்கை வென்றுவிடுவீர்கள் போல இருக்கே. நல்ல யூனியில் படித்தவர்களுக்கு இவர்களிலும் அதிக சம்பளம் கொடுப்பார்களா இல்லையா என்று எனக்குத்தெரியாது. ஆனால் சாதாரண யூனியில் கற்றவரும் பெயர்போன யூனியில் கற்றவரும் ஒரு இடத்தில் வேலைக்கு முயலும்போது நல்ல யூனியில் படித்தவருக்குத்தான் அவ்வேலை கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிக அதிகம். மற்றும் ஒரு உயர் பதவிகள் தலைமைப் பொறுப்புகள் எல்லாம் கூட அவர்களைத்ட்தான் தெரிவு செய்வார்கள். அது சாதாரணமாகவே உலக நியதி.

உங்கள் நண்பி அங்கும் இங்கும் படிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். அப்படியிருக்க அவர் வங்கியில் மனேஜராக இருக்கிறார் எனில் இங்குள்ள வங்கிகள் ஆட்களுக்கு வழியின்றி ஒரு படிக்காது சான்றிதழ் இல்லாத ஒருவருக்கு வேலை கொடுத்தது என்பதை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அது உங்கள் அறியாத்தனம். ஆனால் மற்றவர்களையும் விசரர் ஆக்குவது எவ்வகையில் நியாயம். உங்கள் நண்பி அங்கும் இங்கும் படிக்கவில்லை எனில் ஒன்றில் உங்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றுகிறார். அல்லது லண்டனில் எமது ஆட்களின் நிறுவனங்கள் முறையற்றதான பல கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் . அதாவது அவர்கள் நிறுவனத்தில் நீங்கள் ஒரு கோஸைப் பதித்துவிட்டு அங்கு இடைக்கிடை சென்றால்க் கூடப்போதுமாம் .ஒரு ஆண்டில் சிலது , இரண்டு ஆண்டுகளில் எல்லாம் சான்றிதழ்களை வழங்குகிறார்கள். அப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் நண்பி ஒரு சான்றிதழைக் கொடுத்துவிட்டு தன கள்ளம் பிடிபட்டுப்போய்விடும் என்று உங்களுக்கு கதை விட அதை 100 சிறுபிள்ளைபோல் நம்பிக்கொண்டுவந்து இங்கு கூறுகிறீர்கள்.

யாழில் நீங்கள் போட்டதைப் பலர் பார்த்திருந்தாலும் உங்களுக்கு எதிராக மூச்சு விடவில்லை. அத்தனை பயம் உங்களுக்கு எதிராக எழுத.☺️🤪

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 12:09 AM, Nathamuni said:

ஒரு விளக்கம்

ரதி நான் தளத்துக்கு வராமல் இருப்பது கோசனின் நடவடிக்கை தான் காரணம் என்று கூறி இருந்தார்.

நான் தளத்தில் இருந்து சிலகாலங்கள் ஒதுங்கி இருப்பதற்கு காரணம், கோசன், தன்னை அறிவுஜீவியாக காட்டுவதில், அதிக ஆர்வம் காட்டினாலும், அவரது, இந்த ஆர்வத்தினால், அவரது criminal wastage of time எனும் ஒரு பழக்கம் எனக்கும் வைரஸ் ஆக பரவி விடுமோ என்று பயந்தேன். அதனாலே ஒதுங்கிக் கொண்டேன்.

நான் இந்த தளத்துக்கு வந்த இரண்டாம் நாளில், கோமகன் என்பவரால், bully பண்ணப்பட்டேன். விசுகு வந்து ஆதரவு தந்தார். அதன் பின்னர் பனம் காட்டு நரியானேன். ஆகவே கோசனால் தான் நான் வருவதில்லை என்பது தவறு.

ஒதுங்கி இருந்த,  இந்த கால அவகாசத்தில் கிடைத்த நேரத்தில், 5 வருட காலமாக மனதில் இருந்த புத்தகங்கள் இரண்டை முடித்து விட்டேன். முதலாவது கடந்த மாதம் அமேசானிலும், அடுத்தது நேற்று எடிட் பண்ணவும் அனுப்பி விட்டேன்.

தவிர, மூன்று இணைய தளங்களையும் நானே படித்தறிந்து உருவாக்கினேன். எனது இணைய தள முயல்வுகளுக்கு உதவும் என்பதால் டிஜிட்டல் மீடியா தொடர்பில் பல பாடத்திட்டங்களை கற்றுக்கொண்டேன்.

ஆகவே நண்பர்களுக்கு சொல்வது, உங்கள் ஓய்வு நேரங்களில் யாழுக்கு வாருங்கள். ஊறுகாய் மாதிரி பயன்படுத்துங்கள், சோறு போல பயன்படுத்தி, இங்கேயே பாயை போட்டு படுத்து விடாதீர்கள். நிர்வாகமும் அவ்வாறு எதிர்பார்ப்பதில்லை, அவர்களும் அப்படி செய்வதில்லை.

இரண்டு வகையினரே நேரத்தினை அதிகம் இங்கே செலவழிக்க முடியும். ஒன்று ஓய்வு பெற்று இருப்பவர்கள். அடுத்தது பணத்தினை வங்கியில் போட்டு வைத்து வட்டியில் வாழ்க்கை ஓட்டுபவர்கள்.

ஏனையோர் தயவு செய்து நேரத்தினை அளவாக செலவழியுங்கள். காலம் பொன் போன்றது அல்ல, உயர் போன்றது. போனால் திரும்பாது. உங்கள் மேன்மைக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதனை மறவாதீர்கள்.

நன்றி.

நாகுமுனி ஜ‌யாவை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி / 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.