Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, goshan_che said:

Quality of life (டிரைவர், வேலையாள், சனத்திடம் மரியாதை, சிறப்பு அதிதி அழைப்புகள் என) நல்லாய் இருந்தாலும், சம்பளத்தை ஒப்பிட்டோ, அல்லது பிள்ளைகள் எதிர் காலத்தை நினைத்தோ, ஊரில் என்னிடம் இங்கே வருவதை பற்றி வினவிய டாக்டர்கள் அதிகம்.

Quality of Life உள்ள வைத்தியர்கள் யாரும் விரும்பி வெளியில் செல்வதில்லை.

எல்லா வைத்தியர்களும்,  Quality of Life மனிதர்களாக, இலங்கையிலோ, இங்கிலாந்திலோ இல்லை.

அப்படி வந்தவர்கள், மீண்டும் சென்றால் அவர்களின் நிலை பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கு நீண்ட நாள் செல்லும்.  அதனால் போவதில்லை.

Edited by மாங்குயில்

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply

எப்பிடித்தான் எந்தப்பக்கத்தால கதைச்சாலும் முடிவு கிடைக்காது.... வா மச்சி ஒரு தம் இழுத்து கொஞ்சம் டென்சனைக்குறைப்பம்........

HeartyVelvetyAnnelida-size_restricted.gi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

அனைத்தும் சரி ஆனால் ஏன் படித்தவர்களிடம் தன்னம்பிக்கை மிகவும் குறைவாகவிருக்கின்றது?

இது திரிக்கு சம்பந்தமில்லா கேள்வி ஆனாலும் தோன்றியது

தொடர் தோல்விகள், மனைவி, பிள்ளைகள் பிரச்சனை, சமூகத்தால் ஏற்படும் அழுத்தங்கள்,  எதிர்பார்த்தது கிடைக்காமை, இன்னும் பல புறக் காரணிகள் -  படித்த மனிதனை மேலும் மேலும் பலவீனமாக்கி, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது.

படிக்காத மேதைகள், இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டாலும், தனது தோல்விகளை நினைத்து, சிந்திப்பதில்லை. அவர்கள் அடுத்த வேளை சோற்றைப்பற்றி, மட்டும் சிந்திப்பவர்கள். இதனால், அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்.

இறை நம்பிக்கை, மனிதனிடம் எப்போது குன்றி விடுகிறதோ, அப்போது தன்னம்பிக்கையும் குறையும் -  இது எனது நம்பிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎

இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎

இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

தாத்தா இந்த‌ திரிக்குள்ள‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று என‌க்கு சுத்த‌மாய் தெரியாது , அது தான் பேசாம‌ ந‌ல்ல‌ பிள்ளை ஆட்ட‌ம் இருக்கிறேன் /

விருந்துன‌ரா வ‌ந்த‌ ந‌ம்ம‌ ஆதியே ரென்ச‌னில‌ சிக‌ரேட் ப‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂👨‍👩‍👧‍👧😡
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎

இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பையன்26 said:

தாத்தா இந்த‌ திரிக்குள்ள‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று என‌க்கு சுத்த‌மாய் தெரியாது , அது தான் பேசாம‌ ந‌ல்ல‌ பிள்ளை ஆட்ட‌ம் இருக்கிறேன் /

விருந்துன‌ரா வ‌ந்த‌ ந‌ம்ம‌ ஆதியே ரென்ச‌னில‌ சிக‌ரேட் ப‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் 😁

ஒரு சில இடங்களிலை  விசயம் தெரியாமல் இருக்கிறதுதான் நல்லது...ஆரோக்கியமானதும் கூட...😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

நீங்கள் சொல்லுறது சரிதான்...எண்டாலும்........😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎

இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

 நானும் ஒவ்வொரு முறையும் போகலாம் எண்டு பார்த்தா ஆளாளுக்கு ஒரு கேள்வி, ஒரு கருத்து. இப்ப கடைசியா -நீங்கள்😂

ஆனா நீங்கள் எல்லாரும் முறுகினாலும் சுமே அன்ரி ஹப்பி.

2020-21 இல அதிகம் கருத்து பரிமாறிய திரியா அன்ரிண்ட திரிதான் வரப்போது. 

3 பாகத்துகே 13 பக்கம். சான்சே இல்லை.

54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

புலவரே,

உப்பிடி எல்லாம் கேக்கப்படாது. 

ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் நெய் என்பதுதான் அண்ணரின்ர அடிப்படை கொள்கை, கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் 😂.

அவருக்கு இங்க சில “வெள்ளடியன்கள்” இருக்கு. அவையளை எப்பவும் தூக்கி மடியில வச்சு கொஞ்சல்தான். 

நாங்கள் வெறும் “கறுவல்”. பின்னங்காலா ஒரு எத்து 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

 நானும் ஒவ்வொரு முறையும் போகலாம் எண்டு பார்த்தா ஆளாளுக்கு ஒரு கேள்வி, ஒரு கருத்து. இப்ப கடைசியா -நீங்கள்😂

ஆனா நீங்கள் எல்லாரும் முறுகினாலும் சுமே அன்ரி ஹப்பி.

2020-21 இல அதிகம் கருத்து பரிமாறிய திரியா அன்ரிண்ட திரிதான் வரப்போது. 

3 பாகத்துகே 13 பக்கம். சான்சே இல்லை.

நானும் அதேதான் யோசிச்சனான்.அன்ரியும் கொஞ்சநாள் விடிய விடிய இதுக்கை  நிண்டு சிவராத்திரி விரதம் எல்லே பிடிச்சவ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அனைத்தும் சரி ஆனால் ஏன் படித்தவர்களிடம் தன்னம்பிக்கை மிகவும் குறைவாகவிருக்கின்றது?

இது திரிக்கு சம்பந்தமில்லா கேள்வி ஆனாலும் தோன்றியது

நீங்கள் அப்படியானவர்களைப் பற்றி கூறுகிறீர்கள் என்பதை அனுமனித்து...

அவர்கள் வாழ்க்கையைப் படிக்கவில்லை. புத்தகப் பூச்சிகளுக்கு வெளி உலகம் தெரியாது. அவர்களோடு ஒப்பிடுகையில் கோட்டை ரயில் நிலையத்தில் பெட்டி தூக்குபவர் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தப்பிப் பிழைப்பர். வெளினாடுகளில் உள்ள நம்மவர்களைக் கவனித்தீரென்றால் சிலவற்றை அவதானிக்கலாம். கல்வி அறிவு குறைந்த ஆனால்  கடின உழைப்புள்ள நம்மவர்களில் அனேகர் செல்வ வளத்தில் நிறைவாயும் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வாழ்க்கையின் வெற்றிக்கு வழி கோலியிருப்பர். ஆனால் இலங்கையில் நன்கு படித்த அனேகர் வெளினாட்டு வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியவில்லை. காரணம் அவர்களால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு Level க்கு கீள் இறங்கவோ மேல் போகவொ தெவையான வெளி உலக அணுபவங்கள் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மாங்குயில் said:

 பிரதர் கோஷான், இப்பொழுது பெரிதாக கொழும்பில் எந்த பாடசாலையில் படித்தார் என்று தராதரம் பார்த்து, வேலை வழங்குவதில்லை.

என்னுடன் நேர்முகத் தேர்விற்கு வந்தவர்களில் ஒருவர், ஆனந்தா  கல்லூரி.

இன்னொருவர், இசிபதான கல்லூரி. மற்றவர்களை விசாரிக்கவில்லை. 

நான் கொழும்பில் A/L மட்டும்தான் படித்தேன். அது முன்னணிப் பாடசாலையல்ல. 
 
நீங்கள் கூறுவதை நாம்நம்பத்தான் வேண்டும். ஏனெனில் நீங்கள் ஆண்குயிலா பெண் குயிலா என்று கூட எமக்குத் தெரியவில்லை.😂

ஏனெனில் எனக்கு கொழும்புப் பள்ளிகள் பற்றியும் தெரியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மாங்குயில் said:

நீங்கள் எழுதியிருப்பதை என்னால் மட்டும்தான் வாசிக்க முடியவில்லையா ???😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:

பிரதர் கோஷான்,  

எனது மச்சான்,  Hatfield University இல், இன்ஜினியரிங் படித்தவர்.  அவர் படித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது.

அவர் நேர்முகத்தேர்விற்கு சென்ற சமயம்,  Oxford  University இல் படித்த ஒருவரும், லண்டனில் பிரபலமான ஒரு University இல் படித்த ஒருவரும், நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தார்களாம்.

இவர்கள் இருவருக்கும் வேலை கிடைக்கவில்லையாம்.

எனது மச்சானுக்கும்,   Liverpool இல் உள்ள யூனிவர்சிட்டி ஒன்றில் படித்த ஒருவருக்கும் வேலை கிடைத்ததாம்.

Oxford இல் படித்தவருக்கு, ஏன் வேலை கிடைக்கவில்லை என்று பின்னாளில்தான் தெரிய வந்ததாம்.

அவருக்கு தகைமைக்கு அதிகமான தகைமை இருந்ததுதான் காரணமாம்.

That means, the candidate is over-qualified for that Post.

அளவுக்கு அதிகமான தகமை உள்ளவர்களுக்கும் வேலை கிடைக்காது என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் உங்கள் மச்சானுக்குத் தெரிந்த தமிழர்கள் இருவர் தான் அந்த நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறார்கள் போல இருக்கே. ஏனெனில் அவர்களுக்கு வேலை கிடைக்காத விடயம் உடனேயே உங்கள்  மச்சானுக்குத் தெரிந்திருக்கே. அதிலும் நேர்முகத் தேர்வில் ஏன் வேலை அவர்களுக்குத் தரவில்லை என்றும் கூடக் கூறியிருக்கிறார்கள் உங்கள் மச்சானுக்கு.🤔

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:

இங்கிலாந்தில் GP ஆக இருந்து மாரடிப்பதைவிட,  ஒருவர் MBBS ஆக இருந்தால் இலங்கையில் நன்றாக உழைக்கலாம்.

குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம் அங்கே.

என் மகளுக்கு லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்த பையன் தான் வேண்டும் என்று விளம்பரத்தில் போட் ட பின்னரும் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியராக இருக்கும் ஒருவரின் அக்கா எம்மிடம் தொடர்புகொண்டு சாதகத்தையும் வற்சப்பில் போட்டார். நான் ஏன் உங்கள் தம்பிக்கு இலங்கையில் ஏற்ற பெண் ஒருவரைப் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு தம்பிக்கு லண்டன் வர விருப்பம் என்று அவர் நேரடியாகவே கூற நான் அவர்களை நிராகரித்துவிட்டேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஆதிவாசி said:

எப்பிடித்தான் எந்தப்பக்கத்தால கதைச்சாலும் முடிவு கிடைக்காது.... வா மச்சி ஒரு தம் இழுத்து கொஞ்சம் டென்சனைக்குறைப்பம்........

HeartyVelvetyAnnelida-size_restricted.gi

என்ன சகாரா வந்து எதையும் எழுதாமல் செல்கிறீர்கள் 😂

10 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎

இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

ராத்திரி இது ரெண்டையும் வாசிச்சு நான் சிரித்த சிரிப்பில் மனிசன் கட்டிலாலை தள்ளி விழுத்தாத குறை😂😂

8 hours ago, goshan_che said:

 நானும் ஒவ்வொரு முறையும் போகலாம் எண்டு பார்த்தா ஆளாளுக்கு ஒரு கேள்வி, ஒரு கருத்து. இப்ப கடைசியா -நீங்கள்😂

ஆனா நீங்கள் எல்லாரும் முறுகினாலும் சுமே அன்ரி ஹப்பி.

2020-21 இல அதிகம் கருத்து பரிமாறிய திரியா அன்ரிண்ட திரிதான் வரப்போது. 

3 பாகத்துகே 13 பக்கம். சான்சே இல்லை.

புலவரே,

உப்பிடி எல்லாம் கேக்கப்படாது. 

ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் நெய் என்பதுதான் அண்ணரின்ர அடிப்படை கொள்கை, கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் 😂.

அவருக்கு இங்க சில “வெள்ளடியன்கள்” இருக்கு. அவையளை எப்பவும் தூக்கி மடியில வச்சு கொஞ்சல்தான். 

நாங்கள் வெறும் “கறுவல்”. பின்னங்காலா ஒரு எத்து 😂

🤗😎

hin_thanks_cs-2.jpg

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

நீங்கள் அப்படியானவர்களைப் பற்றி கூறுகிறீர்கள் என்பதை அனுமனித்து...

அவர்கள் வாழ்க்கையைப் படிக்கவில்லை. புத்தகப் பூச்சிகளுக்கு வெளி உலகம் தெரியாது. அவர்களோடு ஒப்பிடுகையில் கோட்டை ரயில் நிலையத்தில் பெட்டி தூக்குபவர் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தப்பிப் பிழைப்பர். வெளினாடுகளில் உள்ள நம்மவர்களைக் கவனித்தீரென்றால் சிலவற்றை அவதானிக்கலாம். கல்வி அறிவு குறைந்த ஆனால்  கடின உழைப்புள்ள நம்மவர்களில் அனேகர் செல்வ வளத்தில் நிறைவாயும் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வாழ்க்கையின் வெற்றிக்கு வழி கோலியிருப்பர். ஆனால் இலங்கையில் நன்கு படித்த அனேகர் வெளினாட்டு வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியவில்லை. காரணம் அவர்களால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு Level க்கு கீள் இறங்கவோ மேல் போகவொ தெவையான வெளி உலக அணுபவங்கள் இல்லை.

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் உங்கள் மச்சானுக்குத் தெரிந்த தமிழர்கள் இருவர் தான் அந்த நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறார்கள் போல இருக்கே. ஏனெனில் அவர்களுக்கு வேலை கிடைக்காத விடயம் உடனேயே உங்கள்  மச்சானுக்குத் தெரிந்திருக்கே. அதிலும் நேர்முகத் தேர்வில் ஏன் வேலை அவர்களுக்குத் தரவில்லை என்றும் கூடக் கூறியிருக்கிறார்கள் உங்கள் மச்சானுக்கு.🤔

நேர்முகத்தேர்விற்கு வந்தவர்கள் தமிழர்கள் அல்ல.

இந்த நேர்முகத்தேர்வு நடந்தது 7 வருடங்களுக்கு முன். 

எனது மச்சான், அந்த இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றுவது,  Senior Position இல்.

Engineering Field  இல் உள்ளவர்களை வழிநடத்துபவரும் அவர்தான்.  

ஆக,   Oxford University இல் படித்தவரின் நேர்முகத் தேர்வு தட்டிக் கழிக்கப்பட்டது பின்னாளில் தெரிய வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் மகளுக்கு லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்த பையன் தான் வேண்டும் என்று விளம்பரத்தில் போட் ட பின்னரும் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியராக இருக்கும் ஒருவரின் அக்கா எம்மிடம் தொடர்புகொண்டு சாதகத்தையும் வற்சப்பில் போட்டார். நான் ஏன் உங்கள் தம்பிக்கு இலங்கையில் ஏற்ற பெண் ஒருவரைப் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு தம்பிக்கு லண்டன் வர விருப்பம் என்று அவர் நேரடியாகவே கூற நான் அவர்களை நிராகரித்துவிட்டேன். 

 கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியராக இருப்பவர், புதிதாக MBBS பட்டம் பெற்றவராக இருப்பார். 

MBBS பட்டம் எடுத்தவுடன், உடனே உழைத்துக் குவிக்க முடியாது. 

அதற்கு அனுபவமும் காலமும் வேண்டும்.

MBBS  பட்டம் இலங்கையில் எடுத்தவுடன், வெளிநாட்டில் வேலை செய்வதற்கு பலர் ஆர்வம் காட்டுவர்.

Junior Doctors இற்கு, இலங்கையில் சம்பளம் குறைவு. 

UK யில் கூட,   ஆரம்ப  சம்பளம்,   28K  தானாம்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 

சட்டத்திற்கு புறம்பான  செயல்கள் செய்வது, அதிகமானோர் படித்த கூட்டம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 

எங்கேயும் எல்லாவற்றிலும் புற நடைகள் உண்டு. அவற்றை கருத்திலெடுக்க வேண்டிய தேவை இல்லை. எல்லா சமூகங்களிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

சட்டத்திற்கு புறம்பான  செயல்கள் செய்வது, அதிகமானோர் படித்த கூட்டம்தான். 

அதற்குப் பெயர் வெட்டி ஓடுவது. ஓட்டைக்குள்ளால புகுந்து வெளியே வாறது. இந்த விளையாட்டு நடைபெறும் முக்கியமான இடம் Taxation .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

தாத்தா இந்த‌ திரிக்குள்ள‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று என‌க்கு சுத்த‌மாய் தெரியாது , அது தான் பேசாம‌ ந‌ல்ல‌ பிள்ளை ஆட்ட‌ம் இருக்கிறேன் /

விருந்துன‌ரா வ‌ந்த‌ ந‌ம்ம‌ ஆதியே ரென்ச‌னில‌ சிக‌ரேட் ப‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் 😁

இப்பவே கண் தெரியாமல் வந்திட்டுதா ???🤔😃

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 

பணமீட்டுவதல்ல சகோதரி கேள்வி தன்னம்பிக்கை பற்றியது கேள்வி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணப் பேச்சு 4

கணவர்  : வணக்கம்

அவர் : கலோ யார் பேசுறீங்கள்?

கணவர்  :  நான்  உதயன் கதைக்கிறன். என்னுடைய மகளுக்கு பொருத்தமான பையனைத் தேடுறம். உங்கட மகனுக்கும் நீங்கள் பார்க்கிறதாய் என் நண்பன் குமார் உங்கள் போன் இலக்கமும் மகனின் சாதகமும் தந்தவர்.
நாங்கள் பொருத்தம் பார்த்ததில 80 %  பொருத்தம் இருக்கெண்டு சாத்திரி சொன்னவர். அதுதான் மேற்கொண்டு உங்களோட கதைப்பம் எண்டு ............

அவர் : குமாரோ ??? எந்தக் குமார்? என்னட்டை ஒரு வார்த்தையும் அவர் சொல்லேல்லை. எங்க இருக்கிறவர்?

கணவர் : கரோவில சொலிசிற்றராய் இருக்கிறார். நேற்று உங்களோட கதைச்சதெண்டு சொன்னாரே. மகளின் படமும் உங்களுக்குப் போட்டதாகச் சொன்னார்.

அவர் : ஓமோமோமோம் ஓ ஐஸீ அது நீங்கள் தானா ......உங்கடமகள் என்ன படிச்சவ?

கணவர் : சிவில் இன்ஜினியர். உங்கட மகனும் இன்ஜினியர் எண்டு சொன்னார்.

அவர் :  ஓமோம் மகன் இப்ப திரீ இயேர்சா வேலை பார்க்கிறார். சலரி இயேளி  58 தவுசண்ட்.  உங்கட மகளும் வேலைபார்க்கிறாவோ அல்லது ...........

கணவர் : அவவும் இரண்டு வருடங்களா வேலை செய்யிறா.

அவர் : எவ்வளவு சம்பளம் எடுப்பா. ஒரு போர்ட்டி எடுப்பாவே ???

கணவர் : 38  தான் எடுக்கிறா. போகப் போகக் கூடும். நாங்கள் நேர்ல ஒருக்கா சந்திச்சுக் கதைப்பமா?

அவர் : உங்கட மகளை எனக்கும் மனிசிக்கும் நல்லாய் பிடிச்சுது. மகனிட்டை நாளைக்குத்தான் காட்டவேணும்.

கணவர் : சரி அவரிட்டைக் காட்டீற்று பிடிச்சிது எண்டா  சொல்லுங்கோ. மேற்கொண்டு நேர்ல கதைப்பம்.

அவர் : பொறுங்கோ தம்பி அவசரப்படாதேங்கோ. இன்னுமொரு விஷயம் கேட்கவேணும்.

கணவர் : சொல்லுங்கோ

அவர் : எவ்வளவு சீதனம் தருவியள் எண்டு சொன்னால் மேற்கொண்டு கதைப்பம்.

கணவர் : சீதனமோ ?? யாருக்கு சீதனம்??

அவர் : நாங்கள் மகனை நாலு வருசம் சொந்தக் காசில படிப்பிச்சனாங்கள் தம்பி.

கணவர் : நாங்களும் தான் எங்கட பிள்ளையைப் படிப்பிச்சு விட்டிருக்கிறம்.

அவர் : உங்களுக்குத் சீதனம் தர விருப்பம் இல்லை எண்டால் நீங்கள் வேறை ஆரையன் பாருங்கோ.

கணவர் : சீதனம் தந்து உங்கட மகனுக்கு கட்டுறநேரம் என்ற மகளை ஒரு கழுதைக்கு கட்டிவைக்கலாம்.

டொங் - கணவர் போனை அடித்து வைக்கும் சத்தம் குசினிவரை கேட்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ணக்கம் சுமே

சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்

“கல்யாணம் பேசட்டோ” இன்றைய நாளில் பேசப்படவேண்டிய விவாதிக்க வேண்டிய விடயம்.

இந்த தலைப்பில் எழுத முற்படும்போது “திருமணம் அவசியமா” என்ற கருத்து என்னுள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இக்கேள்வி எனக்குள் எழுவதற்கான காரணங்கள் பல அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

முதலில் திருமணம் பேசுதல் என்பது ஒரு ஆணோ பெண்ணோ தம்மை தம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் திறமையற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் பெற்றோரால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆக பெற்றோரால் சுட்டிக்காட்டப்படும் வரன்களுக்குள் முடக்கப்பட்டதாகவே அந்த ஆண், பெண் இருவருக்குமான கனவு குறுக்கப்படுகிறது. பெற்றோரால் இந்த பரந்த வெளியில் விரிந்து பயணிக்கமுடியாது. புலம் பெயர்ந்து வாழும் பிள்ளைகளால் முடியும், ஆனால் அவர்களுக்கான அனுமதி பெற்றோர் தமக்குள் வகுத்திருக்கும் எல்லை மீறிப் போனால் மாத்திரமே கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிலைக்குள் தத்தளிக்கும் பிள்ளைகள் அதிகம். பெற்றோரை மீறுவதா இல்லை தமக்கான எல்லைகளை பெற்றோர் சமூகத்திற்கு ஏற்ப மட்டுப்படுத்திக் கொள்வதா என்பதில் இருதலை கொல்லியாக தடுமாறி தோற்றுப்போனவர்களும் உண்டு. வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆக திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் குடும்ப, சமூக வாழ்விற்கேற்ப மாறுபடும்.

முற்போக்கு என்று எடுத்துக் கொண்டால் ஆணோ , பெண்ணோ தனக்கான துணையை தானே தெரிவு செய்து வாழ்வது ஆகும். அங்கு இனம்,  சாதி , மதம் , பிரதேசம், தராதரம் , சாதகம் என்பன விடை பெற்றிருக்கும். அவர்கள் திருமணம் செய்வது கூட அவர்கள் விரும்பினால் மாத்திரமே. இதில் துணை மாற்றங்கள் கூட அடிக்கடி நிகழ வாய்ப்புண்டு. இதை நமது சமூகம் மிருகவாழ்விற்குள் உள்ளடக்கிவிடும். ஆக கூடிய சுதந்திரம் என்பதை நம்மால் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தனது இனத்திற்கான வாழ்வியல் பண்பை எந்த ஒரு இனமும் அவ்வளவு சீக்கிரம் இழந்து விடாது. அந்த வகையில்தான் நாம் இன்று.,

கடந்த 3 வருடங்களாக ஒரு திருமண ஒருங்கிணைப்பாளராக பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனது அடிப்படை அநுபவத்திலிருந்தே இங்கு எழுத முற்படுகிறேன். “கல்யாணம் பேசுதல்” என்பது பெற்றோரின் விருப்பு அடிப்படையிலேயே நிகழ்கிறது. முக்கியமாக சமூக குழும ம் (சாதி) மதம், பிரதேசம், தராதரம், உத்தியோகம், சாதகம் இந்த ஆறுவகையாக எதிர்பார்ப்புகளும் நிரவப்படும்போதே பெற்றோரால் பிள்ளைகளுக்கு அவர்களுக்காக தாங்கள் தெரிவு செய்தவர்களின் படங்களைக்காட்டி உனக்குப் பிடிக்கிறதா? என்ற கேள்வியே முன்வைக்கப்படுகிறது. அங்குதான் விருப்பம் அல்லது இல்லை என்பதை பிள்ளைகளுக்கு முடிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. படத்தை மட்டுமல்லாமல் கதைக்கவும் அதன் பின்னர் முடிவெடுக்கவும் பெற்றோர் சுதந்திரம் வழங்குகிறார்கள். அதாவது தாங்கள் தீர்மானித்தவர்களுக்குள் மாத்திரமே பிள்ளைகள் தெரிவு செய்ய வேண்டும் என்று பெற்றோரின் எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையிலேயே பல வழிகளிலும் வடிகட்டி பிள்ளைகளுக்கான தெரிவுகளை மட்டுப்படுத்தி பிள்ளைகளில் திணிக்க முற்படுகிறார்கள். இக்காரணத்தாலேயே இன்றைய காலத்தில் புலம் பெயர்ந்த நமது சமூகத்தில் அதிகபடியான பிள்ளைகள் திருமணம் செய்யும் எண்ணமே குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதிலும் 83 ஆம் ஆண்டுக்கும் 90 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த பலரின் திருமணம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. பெற்றோர் பிள்ளைகளின் விருப்பிற்கேற்ற துணையைத் தெரிவு செய்வதைக்காட்டிலும் தம்முடைய விருப்பிற்கேற்ப பிள்ளைகளுக்கான துணைகளைத் தேடி தோற்றுப் போய்கொண்டிருக்கிறார்கள். 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட பிள்ளைகள் தமக்கு முன்னரானவர்களின் நிலையை உணர்ந்து தமது வாழ்வை நிர்ணயிக்கும் வலிமையை அதிகம் பெற்றிருக்கிறார்கள்.

பெற்றோர் திருமணம் பேசுவதில் தவறில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்த இனமாக இருக்கும் நாம் நம் இனத்தின் அடையாளத்தை பேணுதல் வரவேற்கவேண்டிய விடயமே ஆனால் நாமோ வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு ஒப்பாகவே உள்ளோம். பிற நாட்டவரை பிள்ளைகள் திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம்மவர்களுக்குள் பிள்ளைகள் காதலித்தால் காட்டுவதில்லை. ஏகப்பட்ட விசாரணகளூடாகவே கடக்கிறோம். அல்லது பிள்ளைகளின் மனங்களில் விசவிதைகளை நம்மை அறியாமலே திணித்துவிட்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறோம். பெற்றோர் சம்மதித்து திருமணம் செய்து கொடுத்த பிற்பாடு பிள்ளைகள் மனதில் அவர்கள் விதைத்த விசவிதைகள் இளங்குடும்பத்தில் பிரச்சனையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி விடுகின்றன.

விவாதிக்க வேண்டிய விடயத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ செல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

இத்திரியில் கல்யாணம் பேசட்டோ என்று ஆரம்பித்து தராதரத்தில் வந்து நிற்கிறோம். நமக்குள் மாற்றங்கள் சாத்தியமற்றது( இன்றைய பெற்றோர்) இந்த தலைப்பை தொடக்கிய சுமேயே பல இடங்களில் முற்போக்காக இருந்தாலும் நம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாபங்களின் எச்சத்தையும் அவரிடம் காணமுடிகிறது.

என்னுடைய அநுபவத்தில்… என்னிடம் திருமணம் பேசத் தந்தால் தங்கள் பிள்ளைக்கு வேற சாதி ஆட்களை தருகிறீர்கள் என்று என்னிடமிருந்து தம்முடைய விண்ணப்பங்களை மீளப்பெற்ற அதி உச்ச சாதிய திமிரில் என்னைக் காயப்படுத்தியர்களையும் கடந்திருக்கிறேன். தீவுப்பகுதி , மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குள் மணமக்கள் வேண்டாம் என்று நிபந்தனைகள் இட்டவர்களையும் கண்டுள்ளேன், யூனியில்கூட தராதரம் தேடுபவர்களோடும் பயணிக்கின்றேன். நம்மவர்களுக்குள் இரத்த த்தோடு ஊறிப்போனவை சாதி , மதம், பிரதேசம், தராதரம் , சாதகம் ஆக்குறைந்த பட்சம் இதில் ஏதாவது ஒன்றாகிலும் கல்யாணம் பேசும் பெற்றோரிடம் கண்டிப்பாக இருந்தே தீரும். சாதியே தேவையில்லை என்று விண்ணப்படிவத்தில் கேள்வியைச் சேர்க்காமல் விட்டேன். பதிவு செய்பவர்கள் கேள்வியைக்காணாமல் தேடிவிட்டு சொல்கிறார்கள். நாங்கள் நல்ல ஆட்கள் பாருங்கோ மற்ற ஆட்களுக்குள் எங்களுக்கு மணமகனோ மணமகளோ வேண்டாம். நானும் அப்படியா நல்ல ஆட்கள் என்றால் யார் என்று கேட்பேன். பதில் இதில் வாசிக்கும் அனைவருக்கும் விளங்கும். இந்த இடத்தில் நான் தென் தமிழீழ மக்களுக்கு மிகப்பெரிய சல்யூட் அடிக்கவேண்டும். இன்னொரு இனத்தால் அதிக துன்பத்தை அநுபவிக்கும் அவர்களுக்குள் சாதி, மதம், தராதரம், பிரதேசம் என்ற எண்ணப்பாடு மிகக்குறைவு. திருமணத்திற்குத் தகுதியான பெண் அல்லது ஆண் என்பதை மாத்திரமே எதிர்பார்க்கின்றார்கள்.

சுமே கல்யாணம் பேசட்டோ என்ற கேள்வியில் நீங்கள் பேச முற்பட்ட விடயங்களுக்கு தீர்வு கிடைக்காது. விவாத்தில் தெளிதலை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் முடிவை அடைவது மிகக்கடினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.