Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நில்மினி நல்ல பயனுள்ள ஆலோசனைகள், தொடருங்கள்

  • Like 1
  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

வணக்கம்
எனக்கு ஆதரட்ரீஸ் எனும் மூட்டு வியாதியால் 6-8 வருடமாக பிரச்சனை.கடந்த இரு வருடங்களுக்கு முன் விரல்கள் கொஞ்சம் வளையத் தொடங்கியது.

மகள் கட்டாயம் மருந்தெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விரலில் தொடங்கி கை கால் எல்லாம் குறண்டும் என்று பயமுறுத்தவே டாக்ரடம் போனேன்.
இரத்த சோதனையில் ஆதரட்ரீஸ் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தும் குளிசைகள் தந்தார்.தந்த குளிசை பிறிரிசோன் Prednisone 2.5 mg விடிய ஒன்று இரவு என்று என்று போடச் சொன்னார்.

மகளின் யோசனையின்படி நோ குறையும் வரை ஒவ்வொன்றும் பின்னர் ஒன்றுவிட்ட ஒரு நாளுக்குமாக எடுக்கிறேன்.ஒருகிழமைக்கு எடுக்காவிட்டால் திரும்பவும் மூட்டுகள் நோவும் கை வீங்கும்.
 மூன்று மாதத்துக்கொரு தடவை ஈரல் இருக்கா ஒழுங்கா இருக்கா என்று இரத்த சோதனை வேற.
மிகவும் பாரதூரமான குளிசை எங்கே போய் முடியுதோ?

  • Sad 1
Posted
On 14/3/2020 at 06:38, nilmini said:

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு (

மிகமிகமிக நல்ல பதிவு. ஆனா இது மட்டும் டவுட். 

எங்கள் (தமிழர்) பரம்பரையே அரிசி சாப்பிட்டு சுகதேகியா 90, 100 வயதுவரை வாழ்ந்த பரம்பரை. 
அரிசி, உருளைக்கிழங்கு கூடாது என்கிறது மேலைநாட்டு மருத்துவ, வியாபார அரசியல் என நான் நினைக்கிறன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 6/4/2020 at 19:54, ஈழப்பிரியன் said:

வணக்கம்
எனக்கு ஆதரட்ரீஸ் எனும் மூட்டு வியாதியால் 6-8 வருடமாக பிரச்சனை.கடந்த இரு வருடங்களுக்கு முன் விரல்கள் கொஞ்சம் வளையத் தொடங்கியது.

மகள் கட்டாயம் மருந்தெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விரலில் தொடங்கி கை கால் எல்லாம் குறண்டும் என்று பயமுறுத்தவே டாக்ரடம் போனேன்.
இரத்த சோதனையில் ஆதரட்ரீஸ் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தும் குளிசைகள் தந்தார்.தந்த குளிசை பிறிரிசோன் Prednisone 2.5 mg விடிய ஒன்று இரவு என்று என்று போடச் சொன்னார்.

மகளின் யோசனையின்படி நோ குறையும் வரை ஒவ்வொன்றும் பின்னர் ஒன்றுவிட்ட ஒரு நாளுக்குமாக எடுக்கிறேன்.ஒருகிழமைக்கு எடுக்காவிட்டால் திரும்பவும் மூட்டுகள் நோவும் கை வீங்கும்.
 மூன்று மாதத்துக்கொரு தடவை ஈரல் இருக்கா ஒழுங்கா இருக்கா என்று இரத்த சோதனை வேற.
மிகவும் பாரதூரமான குளிசை எங்கே போய் முடியுதோ?

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

Edited by nilmini
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kali said:

மிகமிகமிக நல்ல பதிவு. ஆனா இது மட்டும் டவுட். 

எங்கள் (தமிழர்) பரம்பரையே அரிசி சாப்பிட்டு சுகதேகியா 90, 100 வயதுவரை வாழ்ந்த பரம்பரை. 
அரிசி, உருளைக்கிழங்கு கூடாது என்கிறது மேலைநாட்டு மருத்துவ, வியாபார அரசியல் என நான் நினைக்கிறன். 

மேலை  நாட்டவர்களும் இப்போது எமது உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அரிசி வகைகள், அரிசிமா, தேங்காய் எண்ணெய் , எமது வாசனை திரவியங்கள்  , மளிகை வகைகள் எல்லாமே நல்லது என்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இப்போது உடற்பயிற்சி குறைந்து விட்டது, சாப்பாடுகளும் முந்தி மாதிரி இல்லாமல் Genetic engineering ஆல் மாத்தின உணவுகளாக இருக்கு. முன்னோர் அரிசி வகை மற்றுமின்றி நிறைய தானியங்கள், மூலிகைகைகள் என்று சாப்பிட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. அதனால் தான் உடலுக்கு உடனே சீனியை குடுக்கவல்ல அரிசியை விட்டு  புரதம், கொழுப்பை சாப்பிட்டால் அதில் இருந்து சக்தியை எடுக்க நேரமாகும் , சேமிக்கப்படவும் மாட்டுது (புரதம்)

Edited by nilmini
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, nilmini said:

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

வணக்கம் நில்மினி.
உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி.
ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய மருந்துகளைத் தான் போட்டு நோவை குறைத்து வந்தேன்.ஆனால் ஒரு நாள் போடாவிட்டால் அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்குப் பின் நோகத் தொடங்கிவிடும்.
சன்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் நேஸ் பிறைக்ரிசனராக (Nurse Practitioner)இருப்பதால் இப்படி இப்படி செய் என்று சொல்லுவா.
அவவின் ஆலோசனைப்படி சீரோயிட் மருந்தை ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு எடுக்கிறேன்.அதையும் முடிந்தால் குறைக்கச் சொல்லுவா.அதைவிட குறைக்கும் போது மணிக்கட்டு முழங்கை தோள்முட்டு மிகவும் வலியாக இருக்கும்.
வீட்டில் இதனால் ஒரே அன்புப் பிரச்சனை.மனைவி இந்த மருந்து எடுக்கக் கூடாது.
மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா?
அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா?
டாக்ரரிடம் கேட்டால் இது கூடாது தான் ஆனாலும் இதுக்கு மிஞ்சி போகாமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்.வயது 64 ஆகிறது.வயதுக்கேற்ற பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும்.
கிழமையில் 3-4 நாட்கள் நடப்பேன்.வேறு உடற் பயிற்சி இல்லை.
உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி.

அத்துடன் Leflunomide 20 mg உம் எடுக்கிறேன்.இதன் தொழிற்பாடு என்ன?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2020 at 13:04, nochchi said:

ஒரு மருத்துவத்துறையில் முனைவராக இருந்தவாறு களஉறவுகளின் வினாக்களுக்கு விடை ஆலோசனை என்று அற்புதமாகச் செயலாற்றும் உங்களுக்கு எனது வணக்கத்தையும் வாழ்த்தையும் பதிவுசெய்கின்றேன்.
நில்மினி அவர்களே!

களத்தில் உங்கள் பணி தொடரட்டும்.

மிகவும் நன்றி. இன்னும் நிறைய மருத்துவ ஆலோசனைகளை பகிரலாம் என்று இருக்கிறேன் 

On 6/4/2020 at 18:47, உடையார் said:

 நில்மினி நல்ல பயனுள்ள ஆலோசனைகள், தொடருங்கள்

வணக்கம் உடையார். மிக்க நன்றி.

On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

இன்றுதான் உங்கள் கேள்வியை பார்த்தேன். யாரவது கேள்வி போட்டால் அல்லது பதில் அளித்தால் noticing இல் தெரியும் என்று நினைத்தேன்.  இதற்கு பதில் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். முடிந்ததும் பதிவிடுகிறேன் . 

On 6/4/2020 at 18:23, பாலபத்ர ஓணாண்டி said:

டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால்

1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..?

2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!?

நன்றி டாக்டர்..._

இன்றுதான் இந்த கேள்வியை பார்த்தேன். நிச்சயம் இரண்டு நாற்களுக்குள் பதில் பதிவிடுகிறேன் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

அல்லது பார்த்துவிட்டு இங்க வேலையில யாராவது மண்டையை குழப்பி மறந்து விட்டேனோ தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

Posted
11 hours ago, nilmini said:

மேலை  நாட்டவர்களும் இப்போது எமது உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அரிசி வகைகள், அரிசிமா, தேங்காய் எண்ணெய் , எமது வாசனை திரவியங்கள்  , மளிகை வகைகள் எல்லாமே நல்லது என்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இப்போது உடற்பயிற்சி குறைந்து விட்டது, சாப்பாடுகளும் முந்தி மாதிரி இல்லாமல் Genetic engineering ஆல் மாத்தின உணவுகளாக இருக்கு. முன்னோர் அரிசி வகை மற்றுமின்றி நிறைய தானியங்கள், மூலிகைகைகள் என்று சாப்பிட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. அதனால் தான் உடலுக்கு உடனே சீனியை குடுக்கவல்ல அரிசியை விட்டு  புரதம், கொழுப்பை சாப்பிட்டால் அதில் இருந்து சக்தியை எடுக்க நேரமாகும் , சேமிக்கப்படவும் மாட்டுது (புரதம்)

உங்கள் நேரத்துக்கும் பதிலுக்கும் நன்றிகள் 

Posted
17 hours ago, nilmini said:

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

Cortisone  எனப்படும் ஊசியும் போட்டு மாற்றப்படுகிறதாமே. அத்தோடு பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி உள்ள மசில்கள்(muscle) பலமடைய (உ+மாக முழங்கால்) உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலனை தருகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன டாக்டர் நில்மினி.

Cartilage Replacement எந்த அளவிற்கு சாத்தியமானது, வெற்றிகரமானது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, nunavilan said:

Cortisone  எனப்படும் ஊசியும் போட்டு மாற்றப்படுகிறதாமே. அத்தோடு பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி உள்ள மசில்கள்(muscle) பலமடைய (உ+மாக முழங்கால்) உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலனை தருகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன டாக்டர் நில்மினி.

Cartilage Replacement எந்த அளவிற்கு சாத்தியமானது, வெற்றிகரமானது?

Cortisone ஒரு steroid மருந்து.இது உடலில் மற்ற ஒரு இயற்கையான செய்முறைகளை நிப்பாட்டி செயற்கை முறையில் inflammation ஐயும் நோவையும் குறைக்கும். இதனால் இயற்கையான நோய் எதிர்க்கும் தன்மை குறையும். ஆனால் வேறு வழி இல்லாவிட்டால் எடுத்ததுதான் ஆக வேணும். Cartilage இரு எலும்புகளுக்கு நடுவில் உடல் முழுவதும் இருப்பதால் Cartilage replacement ஆர்தரைட்டிஸ் உள்ளவர்களுக்கு செய்ய முடியாது. Sports Injury இல் சிறு துண்டு கார்டிலேஜ் உடைந்து போனால் replace பண்ணலாம். Cartilage க்கு எலும்பு மாதிரி சொந்த ரத்த குழாய்கள் இல்லை . அதனால் தான் sports injury, Juvenile arthritis, Osteoarthritis இன் போது காயப்பட்ட Cartilage கள் ஆற முடியாமல் இறந்து போய் விடுகின்றன . Muscle /தசைகள் எலும்புடன் ஒட்டி இருப்பதால் அவற்றை massage செய்து Hot /Cold  pads வைத்தால் நோ கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

வணக்கம் குமாரசாமி அண்ணை

உங்களுக்கு எல்லாத்தசைகளிலும் நோ இருக்குதா அல்லது சில பாகங்களில் மாத்திரமா? எதாவது ஒரு குறித்த மருந்து எடுக்க துடங்கிய பின் ஏற்பட்ட நோவா? எவ்வளவு காலம் நோவுக்கு மருந்து எடுக்க வேணும் என்று சொன்னார்கள்? மருந்து எடுக்காவிட்டால் தாங்க முடியாத நோவா?  தசை நோக்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. வேறு மருந்துகளால் வந்த நோ என்றால் என்ன மருந்து என்று அறியத்தரவும். அல்லது என்னத்துக்காக தசைகள் நோகுது என்று சொல்லியிருப்பினம். அந்த பேரை அறியத்தரவும். அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் எண்டு பாப்பம்.

பொதுவாக நாம் எடுக்கும் எல்லா மருந்துகளுமே அதன் வேலை முடிந்ததும் ஈரலுக்கு சென்று செயல் இழந்து பின்பு சிறுநீரகத்துக்கு சென்று அங்கிருந்து சிறுநீர் மூலம் வெளியேறும். ஆனால் சில மருந்துகள் அதிக விளைவை ஏற்படுத்தலாம். விபரம் அறியத்தரவும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 9/4/2020 at 21:45, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி.
உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி.
ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய மருந்துகளைத் தான் போட்டு நோவை குறைத்து வந்தேன்.ஆனால் ஒரு நாள் போடாவிட்டால் அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்குப் பின் நோகத் தொடங்கிவிடும்.
சன்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் நேஸ் பிறைக்ரிசனராக (Nurse Practitioner)இருப்பதால் இப்படி இப்படி செய் என்று சொல்லுவா.
அவவின் ஆலோசனைப்படி சீரோயிட் மருந்தை ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு எடுக்கிறேன்.அதையும் முடிந்தால் குறைக்கச் சொல்லுவா.அதைவிட குறைக்கும் போது மணிக்கட்டு முழங்கை தோள்முட்டு மிகவும் வலியாக இருக்கும்.
வீட்டில் இதனால் ஒரே அன்புப் பிரச்சனை.மனைவி இந்த மருந்து எடுக்கக் கூடாது.
மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா?
அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா?
டாக்ரரிடம் கேட்டால் இது கூடாது தான் ஆனாலும் இதுக்கு மிஞ்சி போகாமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்.வயது 64 ஆகிறது.வயதுக்கேற்ற பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும்.
கிழமையில் 3-4 நாட்கள் நடப்பேன்.வேறு உடற் பயிற்சி இல்லை.
உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி.

அத்துடன் Leflunomide 20 mg உம் எடுக்கிறேன்.இதன் தொழிற்பாடு என்ன?

Leflunomide 

DNA எமது உடல் கலங்கள் இரட்டிப்பாகி பழைய கலங்கள் இறக்க புது கலங்களை உருவாக்கி உடலை தொடர்ந்து சீராக்கி கொண்டு இருக்க உதவும். இந்த  DNA இரட்டிப்பாவதை மிகவும் குறைக்கும். அந்தவகையில் Leflunomide குருதியின் நோய் எதிர்க்கும் வெண்கலங்கள் பெருகாமல் குறைக்கும். ஏனென்றால் Autoimmune disease ஆனா Rheumatic ஆர்திரிடிஸ் இருப்பவர்களுக்கு இந்த வெண்கலங்கள் எலும்பு மூட்டுகளுக்குள் இருக்கும் cartilage ஐ தாக்கி அழிக்கும் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த வெண்கலங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியம்.

இந்த மருந்தை தந்து இருப்பதால் உங்களுக்கு இருப்பது Rheumatic ஆர்திரிடிஸ் ஆக இருக்கலாமோ என்று யோசிக்கிறேன். இல்லாவிட்டால் இதை எடுப்பது அனாவசியமானது

30 நிமிட நடை பயிற்சி பொதுவான உடல் நலத்துக்கு உதவும். நுரையீரலுக்கும் நல்லது .64 வயது என்பது ஒரு வயதே இல்லை. 85 வயது வரும்வரை முதுமை இல்லை.

"மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? "
மகள் சொல்வது சரி. எனக்கு வந்தால் நான் மருந்தை எடுத்து இருக்கும் மட்டும் நல்லா வாழ்ந்திட்டு போகலாம் என்று தான் நினைப்பேன். இப்போதைக்கு தைரொய்ட் பிரச்னை ஒன்றுதான். மருந்தையும் ஒழுங்காக அதிகாலையில் எடுத்து அன்னாசி smoothie யும் குடிக்க நல்ல முன்னேற்றம் தெரியுது. 

Edited by nilmini
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, nilmini said:

Leflunomide 

DNA எமது உடல் கலங்கள் இரட்டிப்பாகி பழைய காலங்கள் இறக்க புது கலங்களை உருவாக்கி உடலை தொடர்ந்து சீராக்கி கொண்டு இருக்க உதவும். இந்த  DNA இரட்டிப்பாவதை மிகவும் குறைக்கும். அந்தவகையில் Leflunomide குருதியின் நோய் எதிர்க்கும் வெண்கலங்கள் பெருகாமல் குறைக்கும். ஏனென்றால் Autoimmune disease ஆனா Rheumatic ஆர்திரிடிஸ் இருப்பவர்களுக்கு இந்த வெண்கலங்கள் எலும்பு மூட்டுகளுக்குள் இருக்கும் cartilage ஐ தாக்கி அழிக்கும் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த வெண்கலங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியம்.

இந்த மருந்தை தந்து இருப்பதால் உங்களுக்கு இருப்பது Rheumatic ஆர்திரிடிஸ் ஆக இருக்கலாமோ என்று யோசிக்கிறேன். இல்லாவிட்டால் இதை எடுப்பது அனாவசியமானது

30 நிமிட நடை பயிற்சி பொதுவான உடல் நலத்துக்கு உதவும். நுரையீரலுக்கும் நல்லது .64 வயது என்பது ஒரு வயதே இல்லை. 85 வயது வரும்வரை முதுமை இல்லை.

"மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? "
மகள் சொல்வது சரி. எனக்கு வந்தால் நான் மருந்தை எடுத்து இருக்கும் மட்டும் நல்லா வாழ்ந்திட்டு போகலாம் என்று தான் நினைப்பேன். இப்போதைக்கு தைரொய்ட் பிரச்னை ஒன்றுதான். மருந்தையும் ஒழுங்காக அதிகாலையில் எடுத்து அன்னாசி smoothie யும் குடிக்க நல்ல முன்னேற்றம் தெரியுது. 

உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.
இன்னுமொரு கேள்வி.
Prednisone2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுக்கிறேன்.ஆனால் Leflunomide20mg ஒவ்வொரு நாளும் எடுக்கிறேன்.இது பரவாயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/4/2020 at 18:23, பாலபத்ர ஓணாண்டி said:

டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால்

1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..?

2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!?

நன்றி டாக்டர்..._

அறுவை சிகிச்சை செய்யாமல் 3 விதமான முறைகள் உண்டு. Rubber band ligation, Sclerotherapy, Coagulation போன்ற சுலபமான வழிகள் . இவை ஒன்றும் வேலை செய்யாவிட்டால் அறுவை சிகிச்சை தான் செய்யவேணும். உங்களுக்கு இருக்கக்கூடிய  External hemorrhoids, internal hemorrhoids, Prolapsed hemorrhoids இவை எதுவுமே கான்சராக வருவது மிகவும் அரிதே. Polyps இருக்கா என்று Colonoscopy செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நார்ச்சத்து கூடிய உணவு வகைகள். தண்ணீர், நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சிகள் முக்கியம். sitz baths எடுப்பதும் நல்லது

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, nilmini said:

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலபத்ர ஓணாண்டியின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்......நன்றி நில்மினி உங்களின் சேவை மிகப்பெரியது ......!   💐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மிகவும் நன்றி. இது நான் மிகவும் விரும்பி செய்யும் பங்களிப்பு. உண்மைதான் . ஆங்கிலம் பேசாத நாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் உதவும். அத்துடன் எங்கும் இதே நிலை தான். சிலவேளை ஒரு சிறிய பிரச்சனைக்கு டொக்டரிடம் appointment வைத்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும். polyps எனப்படும் முளைகள் உணவுக்குழாயின் முடிவுப்பகுதியில் இருந்தால்  Colonoscopy மூலம் கண்டுபிடிப்பார்கள் . அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள் (சிலவேளை கான்செர் ஆகிவிடுமோ என்று ) மற்றபடி மூல  கான்சராக  வர 0.1% யிலும் குறைந்த சந்தர்ப்பமே இருக்கு.  சில  hemorrhoids தானே போய்விடும். ஆனால் இரத்த நாளங்கள் அதற்குள் இருந்து உறைந்துபோய்விட்டால் தானே போகாது. அப்போதுதான் நான் குறிப்பிட்ட 3 வகை விதங்களை செய்யலாமா என்று பார்ப்பார்கள். அதுவும் முடியாவிட்டால் தான் அறுவை சிகிச்சை.  Sitz bath உடன் Epsom உப்பு  வெது வெதுப்பான நீரில் கலந்து பாவிக்கலாம் 

2 hours ago, suvy said:

பாலபத்ர ஓணாண்டியின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்......நன்றி நில்மினி உங்களின் சேவை மிகப்பெரியது ......!   💐

நன்றி சுவி 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.
இன்னுமொரு கேள்வி.
Prednisone2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுக்கிறேன்.ஆனால் Leflunomide20mg ஒவ்வொரு நாளும் எடுக்கிறேன்.இது பரவாயில்லையா?

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணை 

சாதாரணமாக Leflunomide 20mg ஒவ்வொரு நாளும் தான் எடுப்பார்கள். 10mg  தான் குறைந்த டோஸ். நீங்கள் Prednisone 2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுப்பது நல்ல அறிகுறி . ஏனென்றால் இந்த மருந்து 2 mg இலிருந்து 15 mg வரை டோஸ் குடுப்பார்கள் . அதுவும் ஒவ்வொரு நாளும்.  அத்துடன் Prednisone  மருந்து ஒருநாளைக்கு இரண்டு பங்காக பிரித்து எடுக்க சொல்வார்கள். ஏனென்றால் இதன் வீரியம் இரத்தத்தில் கன நேரம் இருக்காது. இவற்றை வைத்து பார்க்கும்போது உங்களுக்கு தகுந்த நேரத்தில் diagnose பண்ணி இருப்பார்கள் போல இருக்கு. இரண்டு மருந்துமே வெள்ளை கலங்களை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. அதனால் உடல் எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய, ஈரல், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கூடிய உணவு வகைகளை நிறைய உண்ணவேண்டும். இவற்றை பற்றி இன்னொரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்

On 9/4/2020 at 22:48, உடையார் said:

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

நல்ல தகவல் உடையார்.வல்லாரையை பற்றி நிறைய ஆய்வு நடக்கிறது. உங்கள் பதிவை பார்த்தபின் சில ஆய்வு கட்டுரைகளை படித்தேன். எழுதி முடித்துவிட்டு பதிவிடுகிறேன். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/4/2020 at 22:28, nilmini said:

வணக்கம் குமாரசாமி அண்ணை

உங்களுக்கு எல்லாத்தசைகளிலும் நோ இருக்குதா அல்லது சில பாகங்களில் மாத்திரமா? எதாவது ஒரு குறித்த மருந்து எடுக்க துடங்கிய பின் ஏற்பட்ட நோவா? எவ்வளவு காலம் நோவுக்கு மருந்து எடுக்க வேணும் என்று சொன்னார்கள்? மருந்து எடுக்காவிட்டால் தாங்க முடியாத நோவா?  தசை நோக்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. வேறு மருந்துகளால் வந்த நோ என்றால் என்ன மருந்து என்று அறியத்தரவும். அல்லது என்னத்துக்காக தசைகள் நோகுது என்று சொல்லியிருப்பினம். அந்த பேரை அறியத்தரவும். அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் எண்டு பாப்பம்.

பொதுவாக நாம் எடுக்கும் எல்லா மருந்துகளுமே அதன் வேலை முடிந்ததும் ஈரலுக்கு சென்று செயல் இழந்து பின்பு சிறுநீரகத்துக்கு சென்று அங்கிருந்து சிறுநீர் மூலம் வெளியேறும். ஆனால் சில மருந்துகள் அதிக விளைவை ஏற்படுத்தலாம். விபரம் அறியத்தரவும்

தசை நோவு முதுகுப்பக்கம் முழுவதும் மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் இருக்கும்.நான் எடுக்கும் மருந்து MetoHEXAL® Succ 47,5 mg ஆகும்.வாழ்க்கை முழுவதும் எடுக்க வேண்டும்.
வலியென்று டாக்டரிடம் சென்றால் வலிநிவாரண மாத்திரை தந்துள்ளார்கள். இதுவும் வாழ்க்கை முழுவதும் என நினைக்கின்றேன்.
இதுதான் அந்த வலி நிவாரண மாத்திரை.tilidin 100mg/8mg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/4/2020 at 17:32, குமாரசாமி said:

தசை நோவு முதுகுப்பக்கம் முழுவதும் மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் இருக்கும்.நான் எடுக்கும் மருந்து MetoHEXAL® Succ 47,5 mg ஆகும்.வாழ்க்கை முழுவதும் எடுக்க வேண்டும்.
வலியென்று டாக்டரிடம் சென்றால் வலிநிவாரண மாத்திரை தந்துள்ளார்கள். இதுவும் வாழ்க்கை முழுவதும் என நினைக்கின்றேன்.
இதுதான் அந்த வலி நிவாரண மாத்திரை.tilidin 100mg/8mg

இரண்டு மருந்துகளுமே  குறைந்த டோஸ் தான் எடுக்கிறீர்கள். MetoHEXAL® Succ வந்து Beta Blocker. heart ஐ வேகமாக அடிக்கவிடாமால் தடுக்கும். படிகள் ஏறும்போது அல்லது வேகமாக நடக்கும்போது களைப்பு இருக்கும். ஒரு நாளைக்கு 15 + 15 நிமிடம்  நடந்தால் நல்லது. MetoHexal எடுப்பதால் மிக மிக சில பேருக்கே தசை வலி இருக்கும். என்றபடியால் இந்த மருந்தால் தான் நோகுது என்று சொல்ல முடியாது. காலை  சாப்பாட்டுடன்  1/2 கிளாஸ் தண்ணி உடன் குடிக்கவேண்டும்.அத்துடன் வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். https://www.youtube.com/watch?v=kdLTOurs2lA

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

ஏன் அதெல்லாம் சாப்பிடப் போறீங்களா?..பாவம் விட்டு விடுங்கள் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, ரதி said:

ஏன் அதெல்லாம் சாப்பிடப் போறீங்களா?..பாவம் விட்டு விடுங்கள் 

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

Edited by குமாரசாமி

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.