Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, closeup
Image may contain: 2 people, people standing, tree and outdoor
Image may contain: 1 person
Image may contain: 2 people, people standing
பாண்டியன் சுந்தரம் is with Vinoth Pandian and Mani Kandan.
 
"நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"
அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்!

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவுகச்சியா கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி ப்ரேம் ரஞ்சன் கன்வார். இவரது பகுதியில் விவசாயிகள் மிகப் பலரும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இருவருமே கூட ஒரு வாழை விவசாயி தான். அடிக்கடி வெள்ளம் பாதிக்கப்படும் பகுதி இது என்பதால் இளம் வாழைக் கன்றுகள் தண்ணீர் தேங்கி அழுகிப் போவது ஆண்டுதோறும் தொடர்கதையாகவே நடந்து வந்தது. அடிக்கடி பெருமளவில் சூறைக் காற்றும் இங்கு வீசும். இதனால் பெரிய மரங்கள் காற்றில் வீழ்ந்து போக விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே என்றும் இருந்து வந்தது. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் ஏழ்மையிலும் சோகத்திலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

ப்ரேம் ரஞ்சன் மகன் கோபால் சிறுவயது முதலே ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டு பள்ளிப் படிப்போடு புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வந்தார்.வாழை விவசாயிகளின் துயர் துடைக்க ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார் கோபால்.
துள்சிபூரிலுள்ள மாடல் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற கோபால், 2013-2014-இல் 'வாழை பயோசெல்' கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு இன்ஸ்பையர்டு விருது கிடைத்தது. அந்த ஆண்டும் வழக்கம்போல் அவரது கிராமத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.அப்போது கண்ணீர்க் கடலில் மூழ்கித் திளைத்த வாழை விவசாயிகளுக்குக் கைகொடுத்தது கோபாலின் கண்டுபிடிப்பு.

வெள்ளத்தால் அழிந்து போன இளம் வாழைக் கன்றுகளின் உயிர்த் திசுக்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பெரிய மரங்களை மீண்டும் இளமையாக்கி அதிக மகசூலைத் தரும் யுக்தி ஒன்றைத் தனது நுண்அறிவு, வேளாண் அனுபவம் மூலம் உருவாக்கி வாழை சாகுபடியில் புரட்சி செய்தார் கோபால். இந்தத் தொழில் நுட்பத்துக்குதான் 'வாழை பயோசெல்' எனப் பெயரிடப்பட்டது.

பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு தன்னால் படிக்கவைக்க இயலாது என்று கோபாலின் தந்தையும் விவசாயியுமான பிரேமரஞ்சன் குமார் கூறினார். ஆனால், கோபால் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அரசின் உதவித்தொகை பெற்று படிப்பதற்கான மற்றும் கண்டுபிடிப்புகளை தொடர்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்தார். 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் பிரதமர் மோடியை சந்தித்தார் கோபால்.

இதன் மூலம் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷனுக்கு அனுப்பப்பட்டார் கோபால். அங்குதான் ஆறு புதிய கண்டுபிடிப்புகளை அவர் சாத்தியமாக்கினார்.

இவருடைய நுண்ணறிவு மற்றும் தொழில் நுட்பம் குறித்து அமெரிக்க "நாசா" கழகத்துக்குத் தெரிய வர 3 முறை இவருக்குப் பணியாற்ற வாய்ப்பளித்து, அழைத்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். இது போன்று இதுவரை 8 நாடுகள் இவரை தொடர்பு கொண்டு அழைப்புகளை விடுத்தன. அவற்றையும் இவர் புறக்கணித்து விட்டார். "நான் கோடீஸ்வரன் ஆவது முக்கியமல்ல, எனக்கு இந்திய விவசாயிகள்தான் முக்கியம். எனது தொழில் நுட்பம் குறித்து இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது. இந்திய அளவில் விவசாயிகளின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன். விவசாயத்தில் ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள் தங்கள் பகுதி விவசாய பிரச்னைகளை புரிந்து கொண்டு என்னிடம் பகிர்ந்தால் எனது கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாட்டுக்கு உதவுவேன்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த தன்னலமற்ற வாலிபர்.

19 வயது இளம் விஞ்ஞானி கோபால், 'நாசா' மூன்று முறை வழங்கிய ஆய்வுப்பணி வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டதோடு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பையும் நிராகரித்துவிட்டார். இந்த மறுப்புகளுக்கு அவர் கூறும் ஒற்றைக் காரணம்:"தாய்நாட்டில் சேவைபுரிவதே என் லட்சியம்."

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 100 குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற மகத்தான குறிக்கோளை மனதில் கொண்டிருக்கிறார் கோபால். இதற்கான பணிகளை 2019-இல் தொடங்கியும் விட்டார்.

இதுவரை 8 சிறுவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றிருக்கும் கோபால், தற்போது டேராடூனில் உள்ள அரசு கிராஃபிக் ஈரா இன்ஸ்டிட்யூட்டின் சோதனைக் கூடத்தில் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். ஜார்கண்டில் ஒரு பரிசோதனைக் கூடம் அமைத்து, அங்கு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தற்போது, உலகின் 30 ஸ்டார்ட்-அப் விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்கிறார் கோபால். அபுதாபியில் 2020 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள உலகின் மிகப் பெரிய அறிவியல் கண்காட்சியில் தலைமை உரையாற்றப் போகிறவர்களில் அவரும் ஒருவர். அந்தக் கண்காட்சியில் உலக அளவில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

வாழைப்பழச் சாறு மூலம் ஹேர் டை உருவாக்குவது, காகிதக் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது முதலானவை கோபாலின் தனித்துவமான கண்டுபிடிப்புகள்.

5000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தரக்கூடிய 'ஜி ஸ்டார் பவுடர்', 50 ஆயிரம் வால்ட் மின்சாரத்தை சேமிக்கக் கூடிய 'ஹைட்ரோ எலக்ட்ரிக் பயோ செல்', சூரிய சக்தியையும் காற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட 'சோலார் மைல்' எனும் இவரது கண்டுபிடிப்பு மூலம் காற்று 2 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால்கூட மின்சாரத்தை சேமிக்க முடியும்.

இவரது கண்டுபிடிப்புகளில் 'கோபாலசகா' மிகவும் கவனத்துக்குரியது. இது அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படக்கூடிய ரேடியேஷனை குறைக்கவல்லது. அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படும் ரேடியேஷன் நூறு ஆண்டுகளுக்கு தாக்கத்தைத் தரும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் அணு ஆயுத ரேடியேஷனை இந்தக் கண்டுப்பிடிப்பின் மூலம் அகற்றிடலாம்.

டயப்பர் தயாரிப்புகள், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், டிஷ்யூ பேப்பர், ஹேர் டை என பல விதங்களில் பலன் தருகிறது இவரது 'பனானா நானோ ஃபைபர் அண்ட் கிறிஸ்டல்' கண்டுபிடிப்பு.

ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்தச் சூழ்நிலையில் இருந்து, தன் அறிவாற்றலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ள கோபாலின் ஒற்றை மந்திரச் சொல் இதுதான்:"நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"

கற்ற கல்வியையும் பெற்ற அறிவையும் தன் தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்போர்
எல்லையில் கடுங்குளிரில் இத்தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு இணையாகச் சொல்லலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"
அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்!

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமை.வாழத்துக்கள்.

7 minutes ago, ஈழப்பிரியன் said:

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

நிச்சயமாக இருக்காது.திறமை மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

மிக மிக அருமை.வாழத்துக்கள்.

நிச்சயமாக இருக்காது.திறமை மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

சுவை
இவர் ஒரு பிராமணராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி.

இல்லாவிட்டால் பல இடங்களில் இவரை தட்டிக் கழிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

மேற்குலகின் அபிவிருத்தி development (இவரின் பிரத்தியேக துறையில்), ஒழுங்கு discipline  போன்றவற்றை பெறுவதினூடாக / கற்பதனூடாக  தனது மக்களுக்கு மிக அதிகமாகவே இவரால் உதவ முடியும். 

(கட்டுரையில் முக்கியமான பல விடயங்கள் தவறவிடப்பட்டுள்ளதாகப் படுகிறது)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்தச் சூழ்நிலையில் இருந்து, தன் அறிவாற்றலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ள கோபாலின்

8 hours ago, சுவைப்பிரியன் said:

மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

மேட்ற்குலகு இப்படி இருப்பவர் தனது திறமை, விட முயதர்சி, உழைப்பு மூலம் சமூகம் மற்றும் நாட்டிற்கு சேவைசெய்வதை வரவேற்படகுடன், அவரின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், அவரின் உழைப்பை அர்ப்பணித்து சேவை செய்யுமாறு அவரை ஒரு போதுமே எதிர்பார்க்காது.

கிந்தியாவில், எத்தனையோ பண முதலைகள் அர்ப்பணிப்பை செய்யாது, ஊழல்களில் தோய்ந்து இருக்கும் போது, வசதியில் குறைவான ஒருவரை அர்பணிக்குமாறு எதிர்பார்ப்பது சமூக குறைபாடு என்று தான் கருத வேண்டி இருக்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில பேர் அவரை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தங்களை மாதிரி அடிமையாய் வைத்திருக்க பாக்கினம்😉 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கே சில பேர் அவரை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தங்களை மாதிரி அடிமையாய் வைத்திருக்க பாக்கினம்😉 
 
நீங்கள் எதற்குள் அடங்குகிறீர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

நீங்கள் எதற்குள் அடங்குகிறீர்கள் 😀

நானும் உங்களை மாதிரி அடிமை தான் ...ஆனால் இன்னொரு அடிமையை உருவாக்க விரும்பவில்லை 😅

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நானும் உங்களை மாதிரி அடிமை தான் ...ஆனால் இன்னொரு அடிமையை உருவாக்க விரும்பவில்லை 😅

யலோ அக்கா !

நான் இன்னும் அடிமை ஆகவில்லை. எப்போதும்போலவே நானே ராஜா 🏛 நானே மந்திரி🌙

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்படிப்புக்காவது நாசாவுக்கு போயிருக்கலாம்.
போனால் சில நேரம் திரும்பி வரமாட்டார் கூகிள் பிச்சை போல 😁

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎19‎/‎2020 at 11:27 PM, Kapithan said:

யலோ அக்கா !

நான் இன்னும் அடிமை ஆகவில்லை. எப்போதும்போலவே நானே ராஜா 🏛 நானே மந்திரி🌙

ஓகோ சொந்த பிஸ்னசோ 😄

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஓகோ சொந்த பிஸ்னசோ 😄

உண்மைதான் 😀

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் துணிவும் நாட்டுப்பற்றும் பாராட்டிடப்படவேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தமிழீழம் இருந்து.. தேசிய தலைவர் போல.. நல்ல நேர்மையான அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய.. நல்ல நிர்வாகமும்... இருந்திருந்தால்.. இவரை விடப் பல மடங்கு என் தேசத்தை நான் நேசித்திருப்பேன். சிங்கப்பூரை விட உயர்ந்து நிற்க உதவி இருப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

எங்களுக்கும் தமிழீழம் இருந்து.. தேசிய தலைவர் போல.. நல்ல நேர்மையான அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய.. நல்ல நிர்வாகமும்... இருந்திருந்தால்.. இவரை விடப் பல மடங்கு என் தேசத்தை நான் நேசித்திருப்பேன். சிங்கப்பூரை விட உயர்ந்து நிற்க உதவி இருப்பேன். 

அப்படி ஒரு தேசத்தை கட்டி எழுப்ப ஒரு உக்கிரமான போராட்டத்தை அவர் வழி நடத்திய போது ஏன் கொழும்புக்கும் பின் வெளிநாட்டுக்கும் வந்தீர்கள்?

நீங்கள் அவர் கேட்டபோது போராட போயிருக்கலாமே?

உங்களை விட திறமைசாலிகளான கேணல் சங்கர் போன்றோர், நாடு கிடைக்கும் வரை காத்திருகாமல், தம் உயர் பதவிகளை எல்லாம் துறந்து விட்டு வெளிநாடுகளில் இருந்து போய் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, அப்போது ஓ எல் மாணவனாய் இருந்த நீங்கள் ஏன் அவர்கள் படையில் சேர்வில்லை?

விடுதலை புலிகள் நீண்ட காலநோக்கில் என்னை பல்வைத்தியம் படிக்க வற்புறுத்தி கொழும்புக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்பினர், என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பிகு: இங்கே ஒரு கள உறவு, இதை வாசித்து விட்டு அவராகவே தன்னை இனம் காட்ட விரும்பினால் ஓகே, அவரின் ஒன்று விட்ட சகோதரன், ஏ எல் பரீட்சையில் 3 ஏ, 1பி எடுத்து மருத்துவ கல்லூரி அனுமதி வந்த மறுநாள் புலிகளோடு இணந்து யாழ் கோட்டை யுத்தத்தில் வீரச்சாவடைந்தார்.

இப்படி எத்தனையோ அற்புதமான அறிவாளிகளும், புத்திசாலிகளும் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தை மறந்து, போராளிகளான வராலாறு நம் எல்லாருக்கும் தெரியும்.

இப்படி கண்ணுக்கு முன் நடந்த போரில் பங்கெடுகாமல் கொழும்புக்கு பின் வெளிநாட்டுக்கு வந்த நாங்கள், தமிழ் ஈழம் என்றொரு நாடு இருந்தால் நாங்களும் வெட்டிக் கிழித்திருப்போம் என்று எழுதுவதை போல அந்த மாவீரர்களின் தியாகத்தை வேறு யாரும் கொச்சைப் படுத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 11:42 PM, goshan_che said:

உங்களை மாதிரி ஆக்கள் தப்பி ஓடி என்ன பீலாவிடுவீர்கள் என்று கண்காணிக்கவும் ஆக்கள் தேவை தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

உங்களை மாதிரி ஆக்கள் தப்பி ஓடி என்ன பீலாவிடுவீர்கள் என்று கண்காணிக்கவும் ஆக்கள் தேவை தானே. 

ஓ.. அப்ப நீங்கள் ....😜😛

(பன்மையில் இருந்ததால் நானும் வாயத் திறந்து போட்டன் 😀)

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 2:34 PM, Kapithan said:

ஓ.. அப்ப நீங்கள் ....😜😛

(பன்மையில் இருந்ததால் நானும் வாயத் திறந்து போட்டன் 😀)

சூ.. இப்படி எல்லாம் கேக்கப்படாது.

முப்படைகள், மருத்துவ பிரிவு எல்லாம் ஏற்படுத்திய பிரபாகரன், புலம்பெயர் பல்மருத்துவர் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது உங்களுக்கு தெரியாது.

தெரியாது -ஏனென்றால் அது நெடுக்குக்கும் பிரபாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.