Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்து மூன்று தினங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம் முன்னோர்கள் கூறியவற்றில் அந்த 3 யையும் கடைப்பிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்

  • Replies 89
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 4:45 PM, MEERA said:

அம்மாள் வருத்தம் வந்தால் எப்படி இருந்தோமோ அவ்வாறான ஓர் ஒழுங்கை கடைப்பிடித்தாலே இதை முற்றாக குணமாக்கலாம்.

நம் முன்னோர்கள் கூறிய,

செருப்புடன் வீட்டிற்குள் சொல்லாதே

வெளியே சென்று வந்தால் கால் கழுவி குளித்து ஆடைகளை தோய்

எலுமிச்சையை கரைத்து குடி

இன்று உலகமே இதைதான் செய்கிறது.

இன்று உலகமே இதை செய்யவில்லையே!
வெளியே சென்று வந்தால் கொரோனாவால் தமது நாட்டு அரசுகளின் வேண்டுகோள் படி கைகளை நன்றாக சோப்போட்டு கழுவி கொள்கிறார்கள்.கை குலுக்குதலை தவிர்த்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இன்று உலகமே இதை செய்யவில்லையே!
வெளியே சென்று வந்தால் கொரோனாவால் தமது நாட்டு அரசுகளின் வேண்டுகோள் படி கைகளை நன்றாக சோப்போட்டு கழுவி கொள்கிறார்கள்.கை குலுக்குதலை தவிர்த்துள்ளார்கள்.

சட்டம் போட்டு தான் சொல்லவேண்டும் உங்களை போன்றவர்களுக்கு.

நம் முன்னோர் அன்பில் செய்கையில் உணர்த்தினார்கள். 

கை கொடுத்து கட்டிப்பிடித்து முத்தம் பரிமாறியவர்கள் தலை தெறிக்க ஓடுகிறார்கள்🤣🤣🤣

சென்ற வாரம் வாரம் பிள்ளை பெற்றவர்கள் வெளியே சில நாட்கள் செல்லவேண்டாம் என்றும் கண்டிப்பாக பிறந்த குழந்தைகளை வெளியே எடுத்து செல்ல வேண்டாம் எனவும் வைத்தியசாலையில் கூறி உள்ளனர். 

இதைதான் நம் முன்னோர் 30 நாட்கள் தாயுக்கும் சேயிக்கும் பாதுகாப்பளிக்க துடக்கு என்றார்கள்.

முன்னர்  இப்படியான  தொற்று நோய்கள் ஏற்பட்டால்  மக்களை வெளிசெல்ல அனுமதிக்க மாட்டார்கள், இன்று சட்டம் போட்டு LOCKDOWN. 

7 hours ago, MEERA said:

இதில்  என்ன புதுமையை கண்டுவிட்டீர்கள். இந்த உலகம் தோன்றி மனிதகுலம்  உருவான நாளில் இருந்து தமது அறிவுக்கு ஏற்ப அவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே வந்துள்ளார்கள். பேரிடர் வந்த காலங்களிலும் மாத்திரமல்ல சாதாரண வாழ்விலும்   தம்மை காக்க தமக்கு தெரிந்த வழிமுறைகளை பின்பற்றியதுடன்அந்த அறிவை தொடர்ந்து மேம்படுத்தியே வந்துள்ளனர். மழை, குளிர், வெப்பம் ஆகியவற்றில் இருந்து  உலகம் முழுவதும. இருந்த மக்கள் தம்மை பாதுகாத்தே வந்துள்ளார்கள். இன்றும் அதையே செய்கிறார்கள். 

அந்த வகையில் தற்போதைய அரசாங்கங்கள் தற்காலிகமாக ஏற்பட்ட இந்த இடரில் இருந்து தமது மக்களைப் பாதுகாக்க பல்வேறு சிறப்பு நடைமுறைகளை செய்து வருகிறார்கள். மக்களும் தமது அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களை ஏற்று அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த நோயின் ஆபத்து நீங்கிய பின்னர் மக்கள் மீண்டும் தமது வழமையான வாழ்விற்கு திரும்புவார்கள். தமது அன்புக்கு உரியவரகளை கண்டவுடன் கைகுலுக்கியும் ஆரத்தழுவியும் தமது அன்பை தெரிவிக்கத் தான்  போகிறார்கள். அது தான் மனித நாகரீகம். மழை நின்ற பின்னரும் குடை பிடிக்கும் சில மூடர்கள் இருக்கவே செய்வார்கள்.  ஆனால் அவர்களின் சொல்லை எந்த அறிவுள்ள  மனிதனும் அவர்களைச்  செவிமடுக்கப்போவதில்லை . 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

கை கொடுத்து கட்டிப்பிடித்து முத்தம் பரிமாறியவர்கள் தலை தெறிக்க ஓடுகிறார்கள்🤣🤣🤣

நம் முன்னோர் மட்டுமல்ல எல்லா இன முன்னோர்களும் பட்டறிவு மூலம் நோய் நொடிகளிலிருந்து தப்ப வழிவகைகளைக் கண்டார்கள். சில வேலை செய்தன; பல வேலை செய்யவில்லை. தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என்பது உலகில் மற்ற முன்னேறிய இனங்கள் எப்படி வாழ்ந்தன என்பது பற்றிய புரிதல் இல்லாமையால்தான். 

எளிய சுகாதார முறைகளை எல்லோரும் கைக்கொள்கின்றார்கள். சாதாரண மக்களை அவற்றை பின்பற்ற வைக்க அம்மாள் வருத்தம் என்று ஒரு வெருட்டல் வைத்தார்கள். 

கொரோனா வைரஸை பெரியம்மை, சின்னம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததுபோல புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதன் மூலம்தான் எதிர்காலத்தில் இல்லாமல் செய்யமுடியும். வீட்டுக்குள் இருக்கும் சமூக விலகல் என்பது தொற்றுப்பரவலை குறைத்து வைத்தியசேவைகளின் நெருக்கடியை குறைக்கவே ஒழிய கொரோனாவை முற்றாக ஒழிக்க அல்ல!

இறுதியாக,

தமிழர்கள், சிங்களவர்கள், இந்தியர்கள் கைலாகு கொடுக்காமல் கைகூப்பி வணக்கம் சொல்வதுபோல், சீனர்களும் கைலாகு கொடுப்பதில்லை. தாய்வான் ஜனாதிபதி பாரம்பரிய முறையில் சனல்4 Jon Snowக்கு வணக்கம் சொல்வதைப் பாருங்கள்.

03.05_%E7%B8%BD%E7%B5%B1%E6%8E%A5%E8%A6%

Taiwanese president Tsai Ing-wen demonstrating social distancing through use of a traditional Chinese greeting (fist & palm) instead of shaking hands in response to the COVID-19 pandemic.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நன்றி கிருபன், நான் தமிழன் மட்டும்தான் என்று குறிப்பிட்டிருக்கிறேனா???

எம் கண் முன்னே நம் முன்னோர்கள் பின்பற்றியதை குறிப்பிடுகிறேன்.

வணக்கம் சொல்லுதல் தமிழனின் பண்பாடு மட்டுமல்ல, அதை வட இந்தியர்களும் சிங்களவர்களும் செய்கிறார்கள்.

இங்கு நான் கூறுவது நம் முன்னோர்களின் பட்டறிவை அல்லது ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கைகளை...

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

நான் தமிழன் மட்டும்தான் என்று குறிப்பிட்டிருக்கிறேனா???

இல்லை. 

Quote

தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என்பது உலகில் மற்ற முன்னேறிய இனங்கள் எப்படி வாழ்ந்தன என்பது பற்றிய புரிதல் இல்லாமையால்தான். 

இது “தமிழேண்டா!” என்று காலரைத் தூக்கிவிடும் ஏழாம் அறிவுள்ளவர்களுக்கு. 😜

41 minutes ago, MEERA said:

வணக்கம் சொல்லுதல் தமிழனின் பண்பாடு மட்டுமல்ல, அதை வட இந்தியர்களும் சிங்களவர்களும் செய்கிறார்கள்.

வணக்கம் என்று சொல்வது தமிழர் பண்பாடு என று கூறப்படுகிறது. ஆனால் இலங்கையில் நான் வாழும் காலத்தில் மேடையில் மைக் முன்னால் நின்ற பேச்சாளரைத் தவிர நடைமுறை வாழ்வில் அண்டை வீட்டாரைக்  கண்டவுடன்  கூட வணக்கம் சொல்லும் நடைமுறையை காணவில்லை. 

மனிதரை மனிதர் சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் நடைமுறையை நான் முதல் முதல. கண்டது ஐரோப்பாவில் தான். 

இன்று கூட தாயகத்தில் சந்திப்பின் போது வணக்கம் சொல்லுபவரோ கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு நன்றி கூறுபவர்ரோ ஐரோப்பாவில் வாழும் தமிழராக தான் இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

மனிதரை மனிதர் சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் நடைமுறையை நான் முதல் முதல. கண்டது ஐரோப்பாவில் தான். 

லண்டனில் கதை வேறு இந்த காரில் இருந்து சொல்லுவினம் அங்கை சோறு முறைச்சு  பார்க்குது என்று சொல்லுவினம் அடுத்த காரிலும் இதே போல் சோத்து  கூட்டம் வெறிச்ச்சு பார்க்கினம் எண்டு குசு குசுப்பினம் வெள்ளைக்கும் காப்பிலிக்கும் சிரிச்சு கொண்டு கையை காட்டி வழி  விட்டு குடுப்பினம் .

முன்னோடியாய் இருப்பம்  என்று சிரிச்சுக்கொண்டு வணக்கம் சொன்னால் பயித்தியத்தை பார்ப்பது போல் மேலும் கீழும் பார்ப்பினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

வணக்கம் என்று சொல்வது தமிழர் பண்பாடு என று கூறப்படுகிறது. ஆனால் இலங்கையில் நான் வாழும் காலத்தில் மேடையில் மைக் முன்னால் நின்ற பேச்சாளரைத் தவிர நடைமுறை வாழ்வில் அண்டை வீட்டாரைக்  கண்டவுடன்  கூட வணக்கம் சொல்லும் நடைமுறையை காணவில்லை. 

பள்ளிக்கூட வகுப்புகளிலை வாத்திமாருக்கு வணக்கம் சொல்லாமல் வேறை  என்னத்தை சொல்லுறவை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வணக்கம் என்று சொல்வது தமிழர் பண்பாடு என று கூறப்படுகிறது. ஆனால் இலங்கையில் நான் வாழும் காலத்தில் மேடையில் மைக் முன்னால் நின்ற பேச்சாளரைத் தவிர நடைமுறை வாழ்வில் அண்டை வீட்டாரைக்  கண்டவுடன்  கூட வணக்கம் சொல்லும் நடைமுறையை காணவில்லை. 

மனிதரை மனிதர் சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் நடைமுறையை நான் முதல் முதல. கண்டது ஐரோப்பாவில் தான். 

இன்று கூட தாயகத்தில் சந்திப்பின் போது வணக்கம் சொல்லுபவரோ கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு நன்றி கூறுபவர்ரோ ஐரோப்பாவில் வாழும் தமிழராக தான் இருப்பார். 

திரும்ப திரும்ப நம் முன்னோர்கள் என்று எழுதியும் பிரயோசனம் இல்லை.

நீங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கவில்லை..

1 hour ago, குமாரசாமி said:

பள்ளிக்கூட வகுப்புகளிலை வாத்திமாருக்கு வணக்கம் சொல்லாமல் வேறை  என்னத்தை சொல்லுறவை?

பள்ளிக்கூடங்களில் வாத்திமார்  தமக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே அது. அதே வாத்திமார் தனது சக ஆசிரியருக்கு வணக்கம் சொல்லுவதில்லை. தனது சமூக வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பதில்லை.   தெருவில் தன்னிடம்  படிக்கும் மாணவர்களைக் கண்டால்  வணக்கம் சொல்லுவதுல்லை. அதனால் பிள்ளைகளும் வளர்ந்து தமது சமூக வாழ்வில் அதை செய்வதுல்லை. வணக்கம் சொல்லும் நடைமுறையை தாயக மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஐரோப்பா/ அமெரிக்க கண்டங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 10:37 PM, tulpen said:

தீட்டை விடுங்கள் அது முட்டாள்தனமானது. மிகுதியாக  நீங்கள் கூறிய விடயங்கள்  சுத்தத்தை கடைப்பிடித்தல் என்பதை தமிழர்கள தானா உலகிற்கு அறிமுகப்படுத்தினாரகள் ? அப்படியானால் உலகில் வாழும் மற்றய இனத்தவர்கள் அசுத்தமானவர்கள?  அவ்வாறெனில்  தமிழர்கள் வாழும் இலங்கை, இந்தியா  ஆகிய நாடுகளில்  உள்ள தமிழர் நகர தெருக்களில்  சுத்தம் அறவே கடைப்பிடிக்கப்படுவதில்லையே . ஏன் ? தெருவில் கண்டபடி வெத்திலை  போட்டு துப்புவதும் பொதுகழிப்பறைகளை துப்பரவாக  வைத்திருகாமையும்   சுத்தமான செயல்களா? பிரான்ஸில் தமிழர்களின்  வர்த்தக மையமான லா சப்பல் ஒப்பீட்டு ரீதியில் பிரெஞ்சு மக்கள் வாழும் இடங்களை விட அசுத்தமாக உள்ளதே ஏன்?  இந்த வைரஸ் பிரச்சனை உலகம் முழுவதுக்குமான பொதுவான அச்சுறுத்தல்.இதனை உலக மக்களுடன் இணைந்து நாம் எதிர் கொள்ள வேண்டுமே தவிர  சும்மா பழம் வீண்  பெருமை பேசுவது அற்பத்தனமானது. 

சும்மா முட்டாள்தனமாக மேலைத்தேய நாட்டவர்களுக்கு கோடி பிடிப்பதை விடுத்து மற்றவர்கள் என்ன எதற்காக எழுதுகிறார்கள் என்பதை வாசித்து கிரகிக்க பழகுங்கள். நாம்தான் செத்தவீட்டிற்கோ (சுடலைக்கு) அல்லது கடுமையான வருத்தமுள்ளவர்களை பார்த்துவிட்டு வந்தாலோ, தலைக்கு குளிப்பது. அம்மைநோய் போன்ற வருத்தங்கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்துவது. அதைத்தான் மீரா மேலே சொல்லியது.

"அடுத்து மூன்று தினங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்" இந்த தலைப்புக்குள் சிறுதுரும்பை பிடித்து இவ்வளவு தூரம் இழுபடுவதற்கும் கொரோனா வைரஸ் பெற்றுத்தந்த நேரம் தான் காரணமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.