Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லெமன் சாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெமன் இல்  வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)DSC-3370.jpgDSC-3372.jpgDSC-3374.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்கம்மா  செய்முறை?

செய்முறை இருக்கும் எண்டு எட்டி எட்டிப்பார்த்தால், படத்தை மட்டும் போடு கடுப்பேத்தறார் மை லார்ட் 🤨

அது சரி, லெமன் சாதத்துக்கு முட்டை சலாட்ட? 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எங்கம்மா  செய்முறை?

செய்முறை இருக்கும் எண்டு எட்டி எட்டிப்பார்த்தால், படத்தை மட்டும் போடு கடுப்பேத்தறார் மை லார்ட் 🤨

அது சரி, லெமன் சாதத்துக்கு முட்டை சலாட்ட? 

முதலில் சோறை அவித்து வடித்து வைக்கவேண்டும். (அல்லது ரைஸ் குக்கர். சோறு குழையக்கூடாது) முதலில் லெமன் தோலை காரட் scraper ஆல் சுரண்டி வைத்துக்கொண்டு பிறகு லெமன் ஜூசையும் எடுத்து இரண்டுயும் ஒன்றாக கலந்து வைக்கவும். பிறகு ஒரு பார சட்டியில் கடுகு, பெருங்காயம், வெடித்து, கருவேப்பிலை, கடலை பருப்பு/ கஜூ/கடலை/ சேர்த்து பொரித்து, நிறைய மஞ்சள் தூள் (organic நல்லது) சேர்த்து, 3 செத்தல் மிளகாய் சேர்த்து , கடைசியில் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி லெமன் கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு 2 அல்லது 3 நிமிடம் அவித்து விட்டு அடுப்பை நிப்பாட்டி விட்டு சோறை சேர்க்கவும். வெந்தயம் வறுத்த பவுடர் இருந்தால் அதையும்  தாளிப்புக்குள் சேர்க்கலாம்முட்டை  அவித்து மிளகு போட்டிருக்கு. எல்லாம் வைரஸ் பயத்திலதான். முட்டையும் நோய் எதிர்ப்புக்கு நல்லது. உருளை கிழங்கு செய்முறை இப்ப போடுகிறேன் 

மஞ்சள் உருளை கிழங்கை அவித்து ( நான் பெரிய துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் வைப்பேன். எனது நண்பி ஒருத்தி முழு உருளை கிழங்கை பிரஷர் குக்கரில் அவித்து அவித்த மணம் வரும்போது நிப்பாட்டுவா, சிலர் கிழங்குகளை அப்படியே மைக்ரோ வேவ் அவனில் plate இல் வைத்து ஒரு பக்கம் 3 நிமிடம் மற்ற பக்கம் திருப்பி 3 நிமிடம் என்று வைப்பதை பார்த்திருக்கிறேன்). தோலை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் கடுகு பெருஞ்சீரகம் நல்லெண்ணெயில் வெடித்து, கருவேப்பிலை, ரம்பை சேர்த்து, பிறகு வெங்காயம், செத்தல் மிளகாய், scrape பண்ணிய இஞ்சி உள்ளி கொஞ்சம்  சேர்த்து எல்லாம் ஓரளவு பொரிந்து கொண்டு வர 1 தக்காளியை மெல்லிதாக வெட்டி அதையும் போட்டு உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இப்ப கொஞ்சம் யாழ்ப்பாண தூள், தனித்தூள் ( பாபா மீன் மசாலை தூள் இருந்தால் அதையும் சேர்க்கலாம்) அதற்குள் போட்டு  கலந்து விட்டு வெட்டி உருளை துண்டுகளை போடலாம். விரும்பினால் பால் விடலாம். கடைசியில் பெருஞ்சீரகத்தூள் சேர்க்கவும். தக்காளி போட்டால் தேசிக்காய் புளி தேவை இல்லை.  எண்ணெய்  கூட விட்டு தக்காளியும் சேர்த்தால் பால் தேவை இல்லை.

Edited by nilmini
text

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

எங்கம்மா  செய்முறை?

செய்முறை இருக்கும் எண்டு எட்டி எட்டிப்பார்த்தால், படத்தை மட்டும் போடு கடுப்பேத்தறார் மை லார்ட் 🤨

அது சரி, லெமன் சாதத்துக்கு முட்டை சலாட்ட? 

உங்க ஊர் தானே?
கந்தர்மட சங்கத்தில் சேர்க்கலாமே?
சிறியை போல உங்களுக்கும் சொந்தமோ தெரியாது.

1 hour ago, nilmini said:

முதலில் லெமன் தோலை காரட் scraper ஆல் சுரண்டி வைத்துக்கொண்டு பிறகு லெமன் ஜூசையும் எடுத்து இரண்டுயும் ஒன்றாக கலந்து வைக்கவும்

இணைப்புக்கு நன்றி.
எத்தனை லெமன் பாவிக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nilmini said:

லெமன் இல்  வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)DSC-3370.jpgDSC-3372.jpgDSC-3374.jpg

ஐயோ பாக்கவே வாயூறுதே........
எதுக்கும் நாளைக்கு தன்மையாய் சொல்லி/கேட்டுப்பாப்பம் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்க ஊர் தானே?
கந்தர்மட சங்கத்தில் சேர்க்கலாமே?
சிறியை போல உங்களுக்கும் சொந்தமோ தெரியாது.

இணைப்புக்கு நன்றி.
எத்தனை லெமன் பாவிக்கிறீர்கள்?

ஒரு கப் அரிசி போட்டு  அவித்த சோறு என்றால் 2 பெரிய லெமன் சாறும் scrape பண்ணின தோலும் வேணும் ( carrot scraper இந்த சின்ன கண்ணால் )

அப்படியா? கந்தர்மடம் என்று தெரிந்திருக்கவில்லை 

2 minutes ago, குமாரசாமி said:

ஐயோ பாக்கவே வாயூறுதே........
எதுக்கும் நாளைக்கு தன்மையாய் சொல்லி/கேட்டுப்பாப்பம் 😎

செய்வது சுகம் தானே . நீங்களே செய்து அவவுக்கும் குடுக்கலாமே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, nilmini said:

செய்வது சுகம் தானே . நீங்களே செய்து அவவுக்கும் குடுக்கலாமே ?

Bildergebnis für பார்டர் தாண்டி கைப்புள்ள

நான் பார்டர் தாண்டி கிச்சின் பக்கம் போற பழக்கம் என்னிக்கும் இருந்ததில்ல..😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nilmini said:

ஒரு கப் அரிசி போட்டு  அவித்த சோறு என்றால் 2 பெரிய லெமன் சாறும் scrape பண்ணின தோலும் வேணும் ( carrot scraper இந்த சின்ன கண்ணால் )

அப்படியா? கந்தர்மடம் என்று தெரிந்திருக்கவில்லை 

செய்வது சுகம் தானே . நீங்களே செய்து அவவுக்கும் குடுக்கலாமே ?

5 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für பார்டர் தாண்டி கைப்புள்ள

நான் பார்டர் தாண்டி கிச்சின் பக்கம் போற பழக்கம் என்னிக்கும் இருந்ததில்ல..😎

நல்ல விசயம் அவை அவையிண்ட எல்லைக்குள நிண்டிட்டா பிரச்னை குறையத்தானே 

Edited by nilmini
text

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nilmini said:

அப்படியா? கந்தர்மடம் என்று தெரிந்திருக்கவில்லை 

என்ன இப்படி சொல்றீங்க.
நாதமும் சிறியும் சேர்ந்து கந்தர்மட சங்கமே வைத்திருக்கினம்.
உங்களை எடுக்கிறார்களோ தெரியலை.எதுக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பி பாருங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன இப்படி சொல்றீங்க.
நாதமும் சிறியும் சேர்ந்து கந்தர்மட சங்கமே வைத்திருக்கினம்.
உங்களை எடுக்கிறார்களோ தெரியலை.எதுக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பி பாருங்க.

சிறியிட்ட விண்ணப்பம் எங்க இருந்து download பண்ணிறது எண்டு கேப்பம் 

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி... லெமன் சாதம் நல்ல நிறமாகவும், அழகாகவும் உள்ளது.
இதனை... இலங்கையிலோ, இங்கோ செய்து சாப்பிட்டு பார்க்கவில்லை.
விரைவில் செய்து பார்க்க... வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது.:)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன இப்படி சொல்றீங்க.
நாதமும் சிறியும் சேர்ந்து கந்தர்மட சங்கமே வைத்திருக்கினம்.
உங்களை எடுக்கிறார்களோ தெரியலை.எதுக்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பி பாருங்க.

ஈழப்பிரியன்.... நில்மினி, எங்கள் சங்கத்துக்கு வந்தால், 
அவவுக்கு.... மாதர் சங்கத் தலைவி, பதவி கொடுக்கப்படும்.  :grin:

5 hours ago, nilmini said:

சிறியிட்ட விண்ணப்பம் எங்க இருந்து download பண்ணிறது எண்டு கேப்பம் 

Bildergebnis für sri lanka 20 rupee note

நில்மினி, கந்தர்மட சந்தியிலுள்ள... தேத்தண்ணி கடையில்,
20 ரூபா கொடுத்தால்...அங்கத்தவருக்கான, விண்ணப்பப் படிவம் தருவார்கள்.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

நல்லாத் தான் இருக்கு.

கறியைப் பார்த்தா சோயா மாதிரி இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

சும்மா அந்த மாதிரி லெமன் சாதம். கொக்கு தான் . லப்டொப்பில ஏன்ட சாப்பாடும்   தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நல்லாத் தான் இருக்கு.

கறியைப் பார்த்தா சோயா மாதிரி இருக்கு.

எப்ப உங்கட லெமன் சாதம் அரங்கேற்றம்? 

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாங்கள் புளியோதரை என்று கூறுவோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

எப்ப உங்கட லெமன் சாதம் அரங்கேற்றம்? 

கொஞ்சம் பொறுங்க.
மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

சாமானுகள் கொஞ்சம் வாங்க வேண்டும்.போகலாமா விடுவமா என்றிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லாத் தான் இருக்கு.

கறியைப் பார்த்தா சோயா மாதிரி இருக்கு.

அது பாருங்கோ வாட்டின ஜேர்மன் பண்டி இறைச்சிக்கறி.யாழ்ப்பாண முறைப்படி சமைக்கப்பட்டது.😎

Bildergebnis für kassler selber machen

German Smoked Pork Kassler

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

ரொம்ப நல்லா இருக்கு..!

(நான் 2254763-1.jpg பற்றி சொன்னேன்..!! :))

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இதை நாங்கள் புளியோதரை என்று கூறுவோம்

புளியோதரை பழப்புளியில் செய்வதல்லோ ? இது லெமன் .

11 minutes ago, குமாரசாமி said:

அது பாருங்கோ வாட்டின ஜேர்மன் பண்டி இறைச்சிக்கறி.யாழ்ப்பாண முறைப்படி சமைக்கப்பட்டது.😎

Bildergebnis für kassler selber machen

German Smoked Pork Kassler

இது என்ன புது கொம்பினேஷன் ? முந்தி மாதிரி என்றால் நானும் செய்திருப்பேன். ஆனால் இறைச்சி எல்லாம் விட்டு கன  காலம் 

18 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்க.
மலிந்தா சந்தைக்கு வரும் தானே.

சாமானுகள் கொஞ்சம் வாங்க வேண்டும்.போகலாமா விடுவமா என்றிருக்கிறேன்.

நானும் யோசிச்சு யோசிச்சு கடைசியில் கடைக்கு போனதுதான். எப்ப எங்க முடியப்போகுதோ தெரியவில்லை இந்த  கொரோனோ 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nilmini said:
1 hour ago, colomban said:

இதை நாங்கள் புளியோதரை என்று கூறுவோம்

புளியோதரை பழப்புளியில் செய்வதல்லோ ? இது லெமன்

ஆமா கொழும்பான் இதே மாதிரி தான் நிறைய பழப்புளி விடுவார்கள்.
முன்னர் தூரப் பயணங்களுக்கு செய்து கொண்டு போவார்கள்.

47 minutes ago, குமாரசாமி said:

அது பாருங்கோ வாட்டின ஜேர்மன் பண்டி இறைச்சிக்கறி.யாழ்ப்பாண முறைப்படி சமைக்கப்பட்டது.😎

Bildergebnis für kassler selber machen

German Smoked Pork Kassler

ஐயா
என்ன பூனூல் எல்லாம் கழட்டியாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்

லெமன் ரைஸ் எனக்கு பிடிக்கும் ...அதை விட  புளியோதரை பிடிக்கும் ...இணைப்பிற்கு நன்றி 

8 hours ago, குமாரசாமி said:

குமாரசாமியா கொக்கா? 😎

image.jpg

image.jpg

அண்ணி செய்திருப்பா 😋

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போடர் தான்ட மாட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா
என்ன பூனூல் எல்லாம் கழட்டியாச்சோ?

நோ...நோ.....அதொண்டுமில்லை. உந்த கொரோனாவாலை  குடும்பம் ஒரு குடைக்கு கீழை வந்துட்டுதெல்லோ....அதுதான் பிள்ளை பேரப்பிள்ளையளுக்கு பிடிக்குமெண்டு...எனக்கும் ஒரு சொட்டு..😁

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ..😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.