Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருசுவில் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி!

Featured Replies

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

பீப்பா தார் மீசைக்காரன் விடிஞ்சால் பொழுது பட்டால் எப்பவும் பொய்தான் 😷
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து செல்வ வாழ்க்கை வாழும் மாவை சேனாதிராசா:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் படுகொலையாளி விடுதலை; அமெரிக்கா கடும் கண்டனம்!

சர்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவை பொதுமன்னிப்பில் கோத்தபாய விடுதலை செய்தமைக்கு எதிரான கண்டனத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“இலங்கையின் உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த குற்றவாளியான சர்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவை பொது மன்னிப்பில் விடுதலை செய்தமையானது ஆழ்ந்த கவலை அளிக்கிறது.இது இலங்கையின் நேர்மை,கடமை,நல்லிணக்கத்துக்கு புறம்பான ஒரு விடயம்” என்று தங்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது இராஜாங்க அமைச்சு.

Screenshot_20200328-193036-1.jpg?189db0&
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் அவருக்கு அவரே பொது மன்னிப்பு வழங்கி கொள்ள போறார்.. அதற்கு இலங்கை யாப்பில் இடமுண்டா.. ரெல் மீ..😢

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரமும் அதன் கீழ் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் வழிநடத்தலில் இயங்கும் நீதித்துறையும் தமிழினத்துக்கு நீதி நியாமான தீர்வுகள் எதனையும் எப்போதும் முன்வைக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம்.

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கடைசியில் அவருக்கு அவரே பொது மன்னிப்பு வழங்கி கொள்ள போறார்.. அதற்கு இலங்கை யாப்பில் இடமுண்டா.. ரெல் மீ..😢

அவர்தான் எந்த குற்றமும் செய்யவில்லையே 🙄

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இந்த மாங்காய் மடையனுக்கு மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் பனாகொடை முகாமில் புனர்வாழ்வு வழங்க கோரி ஐனாதிபதிக்கு எல்லா மக்களும் இணைந்து வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர்

இருவரும் பெண் குழந்தைகள். இருவரும் இலங்கை நாட்டு குழந்தைகள்.

ஒரு குழந்தைக்கு தன் தந்தையின் அரவணைப்பை பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னொரு குழந்தைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஏனெனில் அக் குழந்தை தமிழ் குழந்தை.

இத் தமிழ் குழந்தைக்கு தாயும் இல்லை. எனவே தந்தையின் அரவணைப்பு கண்டிப்பாக தேவை.

ஆனாலும் இரக்கம் காட்ட மறுக்கும் இந்த சிங்கள இனவெறி ஆட்சிகளில் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என எப்படி நம்புவது?

(முகநூல்) 

12 hours ago, ampanai said:

ஆனாலும் இரக்கம் காட்ட மறுக்கும் இந்த சிங்கள இனவெறி ஆட்சிகளில் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என எப்படி நம்புவது?

எக்காலத்திலையும் கிடைக்காது!
தமிழ் மக்களுக்கு வேற தீர்வு தான் நடைமுறைச் சாத்தியம்.

உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம்

K.-Thurairajasingam.jpg

சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்கு இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிருசுவில் படுகொலை தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டவரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சிறுவர், சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் மிருசுவிலில் வன்கொலை செய்யப்பட்டார்கள். உடலங்கள் மலக்குழியில் இட்டு மறைக்கப்பட்டன.

இது தொடர்பாக லெப்டினன் கேணல் சுனில் ரட்நாயக்க உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அதில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதோடு சுனில் ரட்நாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலே மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த மேற்படி குற்றவாளி இலங்கை ஜனாதிபதியால் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நமது நாடு உட்பட மொத்த உலகும் கொரோனா வைரஸ் பீதியிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே இச்செய்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாகும்.

 சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் இந்த விடுதலை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ வீரராக இருந்து இராணுவ சிற்றதிகாரியாகப் பதவியுயர்ந்து பின்னர் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தவர்.

இராணுவத்தினர் ஒவ்வொருவரும் இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், கடமையின் போதும் அல்லது முகாமில் இருக்கும் போதும் வரம்பு மீறிச் செயற்படுமிடத்து இராணுவச் சட்டத்தின் மூலமாகவே அவ்வாறு செயற்பட்டவருக்குத் தண்டனை வழங்குகின்ற நடைமுறையும் உண்டு.

அந்த நடைமுறை சுனில் ரட்நாயக்க உட்பட ஏனைய ஐந்து பேர் தொடர்பாகவும் கையாளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அது கையாளப்படாதமையினால், அதையும் மீறி உயர்நீதிமன்றம் வரை சென்று கையாளப்பட்ட விடயமாகும்.

இவ்விடயங்கள் போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறைகள் பொருத்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைகின்றன.

ஒட்டுமொத்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தனது சர்வதேசம் தழுவிய செயற்பாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தாமதியாது செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியையே இந்த கொலையாளி விடுதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான, வெளிப்படையான தாக்குதல்கள் இடம்பெறும். உலகமெல்லாம் மிகக் கொடுமையான ஒரு நோய் தொடர்பாக கவனம் செலுத்தியும், இயல்பான இயங்குநிலை இல்லாத நிலையிலும் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையிலே ஜனாதிபதியின் செயற்பாடானது மிகவும் கொடுமையானதும், பயங்கரமானதுமாகும்.

இன்னொருவகையில் உலகப் பிறழ்நிலையை சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்காக இச் செயற்பாடு அமைகின்றது. இச் சூழ்நிலையிலே மனித உரிமை ஆணையமும் ஐக்கியநாடுகள் சபையும் இவ்விடயம் தொடர்பில் விரைந்து செயற்படுவது இன்றியமையாததொன்றாகும் என்று தெரிவித்தார்.

http://athavannews.com/உலகப்-பிறழ்நிலையை-சாதகமா/

படுகொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்கும் துணிச்சலை வழங்கியது கூட்டமைப்பே - சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே அப்பாவி மக்களை படுகொலை செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்குமளவிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் துணிகரமாகச் செயற்படுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபாயவின் செயற்பாடு இலங்கை நீதித்துறைக்கு விழுந்த பேரிடியாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிவசக்தி ஆனந்தன், இறமையின் பெயரால் குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கினை உடன் கைவிட்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிருசுவிலில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட எண்மரின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக இலங்கை நீதித்துறைக் கட்டமைப்பின் உயரிய இரண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த சுனில் ரத்தநாயக்க என்ற முன்னாள் இராணுவ வீரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நடைபெற்ற இறுதிப்போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவற்றுக்கான நீதியைக் கோரும் செயற்பாட்டில் பத்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

அவ்வாறிருக்கையில் 2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முன் கூட்டமைப்பு வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக வடகிழக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். எனினும் மக்கள் வழங்கிய ஆணைக்கு நேரெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்தது.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே என்பது குறிப்பிடப்படாத நிலையிலும், இனப்படுகொலையே நடந்தது என்பது சுட்டிக்காட்டப்படாத நிலையிலும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை கூட்டமைப்பு ஆதரித்தது.

அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கமே இணை அனுசரணை வழங்கும் அளவிற்கு பொறுப்புக்கூறல் தொடர்பிலான தீர்மானத்தின் பரிந்துரைகளை மலினப்படுத்துவதற்கும் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது.

இந்தவிடயங்களை நாம் அக்காலத்தில் கூட்டமைப்பினுள்ளேயே சுட்டிக்காட்டியபோது அவற்றை முழுமையாக மறுதலித்திருந்ததோடு அதன் பின்னர் தலா இரண்டு வருடங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகசாத்தினையும் எமது எதிர்ப்புக்களையும் கடந்து பெற்றுக்கொடுத்திருந்தது.

 

அப்போதைய ஆட்சியாளர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலிருந்து தேனிலவு காலத்தில் உறவுகள் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட விட்டுக்கொடுப்புக்களால் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதற்கான பேரம்பேசல்கள் முற்றாக கைநழுவிச் சென்றன.

இதன் காரணமாகவே கடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ராஜபக்க்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அச்சமின்றி ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்காக அறிவித்ததோடு ஜனநாயகத்தினை மறுதலிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது.

கடந்தகாலத்தை போன்றதான ராஜபக்க்ஷவினரின் ஜனநாயக மறுதலிப்புச் செயற்பாடுகள் தற்போது ஒன்று இரண்டு அல்ல எண்மரை கொடூரமாக படுகொலைசெய்த வழக்கில் இந்த நாட்டின் உயர் நீதிமன்றமே குற்றவாளியாக தீர்ப்பளித்த முன்னாள் இராணுவ வீரருக்கு ஒருவருடம் நிறைவடைவதற்குள் துணிச்சலாக பொதுமன்னிப்பளிக்கும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது.

ஆகவே சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரங்களை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்துவதற்குரிய ஏதுநிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களாக தமிழ் மக்களின் ஆணையை நிராகரித்து சுயலாப அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் இனப்படுகொலை நடந்தது என்பதையோ, சர்வதேச விசாரணை முடிவடையவில்லை என்பதையோ கூறுவதற்கு திராணியற்று அதற்கு நேரெதிரான கருத்துக்களை முன்வைத்து விவாதம் செய்துகொண்டிருப்பவர்கள் இருக்கும் வரையில் ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளே தொடரப்போகின்றன.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தின் மத்தியிலும் நாடாளவிய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் 84தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளன.

எனவே சர்வதேச தரப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் ஆட்சியாளர்களின் போக்கு தெளிவாக புலப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறைகளில் வாடும் உறவுகளுக்காக உடன் தலையீடுகளை செய்யவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78951

கோத்தாவின் பொதுமன்னிப்புக்கு எதிராக விரைவில் இரு வழக்குகள் தாக்கல் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவிராஜா

 

மிருசுவிலில் எண்மர் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதான எதிரியான முன்னாள் இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக இரு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவிராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் மரணதண்டனை அளிக்கப்பட்ட பிரதான எதிரி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பான செய்தியை வெளியிட்ட அரச ஊடகமொன்று, நல்லாட்சி அரசின் காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள், மேற்குலக நாடுகள் மற்றும் தமிழ் புலம்பெயர் தரப்பினர் ஆகியோரை திருப்திப்படுத்தவதற்காக இராணுவ வீரர்களை இலக்கு வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றான மிருசுவில் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்துள்ளது சுட்டியுள்ளது இத்தகைய பிரதிபலிப்பானது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அவமதிப்பதாக உள்ளது. 

ஆகவே அவ்விடயத்தினை குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று எதிர்வரும் நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இதேவேளை, அரசியலமைப்பில் காணப்படுகின்ற அதிகாரத்தினை ஜனாதிபதி தவறாக பயன்படுத்திமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று சட்டத்தரணி தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78946

படுகொலை குற்றவாளிக்கு பொது மன்னிப்பளிக்கும் துணிச்சலை ராஜபக்க்ஷ அரசிற்கு வழங்கியது கூட்டமைப்பே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே அப்பாவி மக்களை படுகொலை செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்குமளவிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் துணிகரமாகச் செயற்படுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடு இலங்கை நீதித்துறைக்கு விழுந்த பேரிடியாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இறமையின் பெயரால் குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கினை உடன் கைவிட்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிருசுவிலில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட எண்மரின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக இலங்கை நீதித்துறைக் கட்டமைப்பின் உயரிய இரண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த சுனில் ரத்தநாயக்க என்ற முன்னாள் இராணுவ வீரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நடைபெற்ற இறுதிப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவற்றுக்கான நீதியைக் கோரும் செயற்பாட்டில் பத்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

அவ்வாறிருக்கையில் 2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முன் கூட்டமைப்பு வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக வடகிழக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். எனினும் மக்கள் வழங்கிய ஆணைக்கு நேரெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்தது.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே என்பது குறிப்பிடப்படாத நிலையிலும், இனப்படுகொலையே நடந்தது என்பது சுட்டிக்காட்டப்படாத நிலையிலும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை கூட்டமைப்பு ஆதரித்தது.

அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கமே இணை அனுசரணை வழங்கும் அளவிற்கு பொறுப்புக்கூறல் தொடர்பிலான தீர்மானத்தின் பரிந்துரைகளை மலினப்படுத்துவதற்கும் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது.

இந்தவிடயங்களை நாம் அக்காலத்தில் கூட்டமைப்பினுள்ளேயே சுட்டிக்காட்டியபோது அவற்றை முழுமையாக மறுதலித்திருந்ததோடு அதன் பின்னர் தலா இரண்டு வருடங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகசாத்தினையும் எமது எதிர்ப்புக்களையும் கடந்து பெற்றுக்கொடுத்திருந்தது.

அப்போதைய ஆட்சியாளர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலிருந்து தேனிலவு காலத்தில் உறவுகள் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட விட்டுக்கொடுப்புக்களால் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதற்கான பேரம்பேசல்கள் முற்றாக கைநழுவிச் சென்றன.

இதன் காரணமாகவே கடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ராஜபக்க்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அச்சமின்றி ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்காக அறிவித்ததோடு ஜனநாயகத்தினை மறுதலிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது.

கடந்த காலத்தை போன்றதான ராஜபக்க்ஷவினரின் ஜனநாயக மறுதலிப்புச் செயற்பாடுகள் தற்போது ஒன்று இரண்டு அல்ல எண்மரை கொடூரமாக படுகொலைசெய்த வழக்கில் இந்த நாட்டின் உயர் நீதிமன்றமே குற்றவாளியாக தீர்ப்பளித்த முன்னாள் இராணுவ வீரருக்கு ஒருவருடம் நிறைவடைவதற்குள் துணிச்சலாக பொதுமன்னிப்பளிக்கும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது.

ஆகவே சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரங்களை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்துவதற்குரிய ஏதுநிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களாக தமிழ் மக்களின் ஆணையை நிராகரித்து சுயலாப அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் இனப்படுகொலை நடந்தது என்பதையோ, சர்வதேச விசாரணை முடிவடையவில்லை என்பதையோ கூறுவதற்கு திராணியற்று அதற்கு நேரெதிரான கருத்துக்களை முன்வைத்து விவாதம் செய்துகொண்டிருப்பவர்கள் இருக்கும் வரையில் ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளே தொடரப்போகின்றன.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் பரவல் அச்சத்தின் மத்தியிலும் நாடாளவிய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் 84தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளன.

எனவே சர்வதேச தரப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் ஆட்சியாளர்களின் போக்கு தெளிவாக புலப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறைகளில் வாடும் உறவுகளுக்காக உடன் தலையீடுகளை செய்யவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140167

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா.? தமிழ் சிவில் சமூகம்.

sl-army-crime.jpg

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை குறித்த பொது மன்னிப்பு எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை இராணுவத்தின் கஜபா அணியைச் சேர்ந்த சுனில் ரத்நாயக்க, கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி ஐந்து வயதுச் சிறுவன் உட்பட தமிழர்கள் எண்மரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருந்தார்.

Tamil-Civil-Society-Forum.jpg

சுனில் ரத்னாயக்க இந்தக் குற்றத்திற்காக 2015ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அவையத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தீர்ப்பிற்கு எதிராக அவர் செய்த மேன்முறையீடு, ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வினால் 2019ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

சுனில் ரத்நாயக்கவிற்கு எதிராக இலங்கை நீதித்துறை வழங்கியிருந்த தீர்ப்பு விதிவிலக்கான ஒன்றாகும். கிருசாந்தி குமாரசாமி கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குத் தவிர்ந்து இராணுவ வீரர் ஒருவர் தமிழர்களுக்கு எதிராக இழைத்த கொடுமை தொடர்பாக குற்றவாளியாக இனங்காணப்பட்டமை இந்தவொரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே ஆகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே விசாரணைகளைத் திசை திருப்பல், அரசாங்கம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரசியல் விருப்பின்மையால் இத்தகைய வழக்குகள் குற்றவாளிகளை அடையாளம் காணுவதோ தண்டிப்பதோ இல்லை.

உதாரணமாக, குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு 2016இல் போதிய சாட்சியம் இல்லாமையால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே மிருசுவில் படுகொலைகளில் வந்த தீர்ப்பானது இலங்கை நீதி நிர்வாக முறைமை தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் செய்த அட்டூழியங்களுக்கு நீதி வழங்காது என்ற வழமைக்குப் புறம்பான ஓர் அரிய தீர்ப்பாகும்.

இந்த ஒற்றை விதிவிலக்கான உதாரணத்தைக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விட்டுவைக்க விரும்பவில்லை என்பது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற இலங்கையின் ஆளும் சிங்கள பௌத்த அரசியல் பீட சிந்தனை எவ்வளவு ஆழமானது என்பதைக் காட்டுகின்றது.

கொரோனா வைரஸ் பரவுதலுக்கான எதிரான முயற்சியில் இலங்கை அரசாங்கம், இராணுவத்தினரின் பங்களிப்பை விதந்துரைத்து பிரசாரம் மேற்கொண்டு வரும் இன்றைய சூழலில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தந்திரமானவோர் உபாயமாகும்.

கொரோனா வைரஸ் தோற்று தொடர்பாக முழு உலகமும் கவலையும் வேதனையோடும் இருக்கும் இந்த சூழலில் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது தமிழ் சமூகம் மத்தியில் எரிச்சலையும் கோபத்தையும் உண்டு பண்ணியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்களின் உணர்வுகள் தொடர்பாக கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இது வரைகாலமும் பொறுத்திருக்குமாறும் உள்ளுர் பொறிமுறைகளில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு ஆலோசனை கூறியோர் இனிமேலாவது அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீதிக்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் பொறிமுறைகள் மாத்திரமே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.vanakkamlondon.com/sl-army-crime-30-03-2020/

On 3/30/2020 at 11:17 PM, Rajesh said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே அப்பாவி மக்களை படுகொலை செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்குமளவிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் துணிகரமாகச் செயற்படுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதில் உண்மைகள் இருந்தாலும் சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் "தமிழ் அறிக்கை அரசியலால்" தமிழ் மக்கள் எதையும் பெரிதாக சாதித்துவிட முடியாது என்பதை விளங்காத மடையராக இருப்பது கவலைக்குரியது.

இவர்கள் தமிழில் அறிக்கைகளை விட்டு தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றாது, குறைந்தபட்சம் தமிழர் தரப்பு நியாயங்களையும் சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிககளின் அராஜகங்களையும் ஐநாசபை போன்ற அமைப்புக்களுக்கும், பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கும் சர்வதேசங்களுக்கும் ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக அறிவிக்கவேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள். தற்போது கூட  இருக்கும் விக்னேஸ்வரன் முன்னர் சிலகாலம் செய்த எழுத்துமூல அறிக்கைகளை சர்வதேசத்துக்கு சமர்ப்பிக்கும் நல்ல பணிகளை தொடர்ச்சியாக செய்தல் வேண்டும்.

விக்னேஸ்வரனும் தான் முன்னர் சிலகாலம் கிராமமாக செய்துவந்த எழுத்துமூல அறிக்கைகளை சர்வதேசத்துக்கு ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கும் நல்ல பணிகளை பல மாதங்களாக கைவிட்டு தமிழில் மட்டும் கேள்வி-பதில் எழுதி வெட்டியாக காலத்தைக் கடத்தி வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 உணர்ச்சி வசப்படாமல் இந்த வீடியோவை பார்த்து விட்டு எழுதுங்கள்...ஆனந்தசுதாகரனை ஏன் இன்னும் விடவில்லை என்பதற்கு காரணம் சொல்கிறார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.