Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...!

Featured Replies

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

 கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது.

முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர்.

ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார்.

latest tamil news

கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2512201

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

PeacefulPaleCockatoo-size_restricted.gif

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

புரட்சி...  "தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்" 
என்ற.... பழமொழியை நீங்க கேள்விப்படவில்லையா? 
இதை...  உலகம், அனுபவித்து தான் ஆக வேண்டும். :grin:

  • தொடங்கியவர்
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

நண்பா,
ஆந்தைகள் இயற்கையாகவே வொளவால்களை சாப்பிடுமாம். 

சீனாவிற்கு ஆந்தைகளை அனுப்ப வேண்டும் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால ஒவ்வொரு நாட்டுக்காரனும்  ங்கே ன்னு  விட்டத்த பாத்துட்டு வீட்டுக்குள்ள  உக்காந்த்திருகாங்க..

மறுபடியுமா?? ஏண்டா படுத்துறீங்க ..🤦🏻‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

1 hour ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

கூப்பிட்டீங்களா எசமான்?

  • தொடங்கியவர்
1 hour ago, தமிழ் சிறி said:

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

ஆளுக்கு ஆந்த கண் போல 😅

ஆந்தைக்கு  வொளவாலையும் பிடிக்குமாம் 😐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, goshan_che said:

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

7 hours ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அங்குள்ள இறைச்சி சந்தைகளில் தேள், முயல், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்
இறைச்சி சந்தைகளில் விற்கப்படும் வவ்வால், தேள், முயல் - கோப்புப்படம்
 
வுகான்: 

சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியது. இந்த சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவர் தான் உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரிய வந்துள்ளது. 

கடந்த 3 மாதங்களாக சீனாவை உலுக்கிய இந்த வைரஸ் தற்போது மற்ற நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வகையான போக்குவரத்தும் அடியோடு முடங்கி உள்ளது.

அதே நேரம் சீனாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   ஹூபே மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் வுகான் நகரில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சீனாவில் மீண்டும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குயிலின் மற்றும் டாங்குவான் பகுதிகளில் உள்ள ஒரு இறைச்சி சந்தைகளில் நாய், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு வழங்கப்பட்டன. பாரம்பரிய மருந்தாக கருதப்படும் வவ்வால், தேள், முயல் மற்றும் தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்

https://www.maalaimalar.com/news/topnews/2020/03/31133254/1383494/Chinese-Markets-Reopen-Selling-Bats-Dogs-and-Cats.vpf

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

வன்னியர் சப்பாத்தி சாப்பிட பிளான் பண்ணுறார்........!   😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

நான் சாப்பிடுவதில்லை. சாப்பிடுபவர்களின் மேல் உள்ள  நல்லெண்ணத்தில் அதை எழுதினேன்.😁
அவையும் பாவமெல்லே:(

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் பொருளாதார வளம், கடின உழைப்பால், மலர்ந்தாலும், அடிப்படையில் 1.5 பில்லியன் சனத்தொகை. கம்யூனிஸ்ட் நாடு. அடுத்தவன்ஓடி வருவதற்கு முன்னர் கையில் கிடைத்ததை, வேகவைக்காமலே உண்ணும் கடும் பசியால் வந்த பழக்கம்.

இப்போது எதுவாக இருந்தாலும் வேக வைத்துண்ணுமாறு அரசு சொல்லிவிட்டது.

பசி வந்தால் பத்தும், கொரோணாவாவும், பறந்து போகும்.

கொரோணா தொடர்பில், இந்திய அரசின், அவசர பொறப்பற்ற நடவடிக்கைகள், பசிப்போராட்டங்களை உருவாக்கப்போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.