Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

Featured Replies

(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவா்கள் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவே ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளாா்.

இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,

அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தாவடியில் 163 குடும்பங்கள் மற்றும் காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 20 பேரும் உள்ளடங்கலாக 319 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும், மன்னாா் மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மாவட்டத்தில் 8 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும் என மாகாணத்தில் 346 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.

இம் மாதம் 6ம் திகதிவரை இவா்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நடைமுறையில் இருக்கும். இதுவரையில் தனிமைப்படுத்தலில் உள்ள எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனவே 6ம் திகதியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவாா்கள்.

https://www.virakesari.lk/article/79037

  • Replies 81
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியாருக்கு, திருப்பி வரேக்க தான் எங்கயோ நல்லா வைரசு கவ்வீட்டுது போல கிடக்குது...

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

இம் மாதம் 6ம் திகதிவரை இவா்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நடைமுறையில் இருக்கும். இதுவரையில் தனிமைப்படுத்தலில் உள்ள எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனவே 6ம் திகதியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவாா்கள்.

உண்மையாக, அரசியல் சாயம் இல்லாமல் இருக்கட்டும் இந்த மருத்துவ பணிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ampanai said:

உண்மையாக, அரசியல் சாயம் இல்லாமல் இருக்கட்டும் இந்த மருத்துவ பணிகள். 

இவர்களை இன்னுமொரு இரண்டு கிழமை வைத்திருத்தல் தகும். 🙂

  • தொடங்கியவர்

முன்னர் வந்த ஒரு செய்தியில் ஆளுநர் கூறி இருந்தார் இந்த போதனைகளில் காவல்துறையும் சம்பந்தம் .. பிறகு ஒரு சத்தத்தையும் காணவில்லை. 

மருத்துவர் மீது கூட எந்த அழுத்தமும் இல்லை என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போதகருக்கு வேறு ஒரு நோய் கனகாலமாக இருக்காம். அதற்கான மருத்துவச்சி சான்றிதழுடன் தான் இலங்கைக்கு வந்தவராம். இலங்கைக்கு வரும்போது கொரோனா தொற்று இல்லையாம். சுவிசில் மதம்மாறிய ஒருவர் கூறிய தகவல். இப்ப அவர் குணமடைகிறாராம். உந்த ஊடகங்கள் தான் சும்மா எழுதவேணுமென்று கதை பரப்பி இன்னும் அது முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுவிசில் மதம்மாறிய ஒருவர் கூறிய தகவல். இப்ப அவர் குணமடைகிறாராம். உந்த ஊடகங்கள் தான் சும்மா எழுதவேணுமென்று கதை பரப்பி இன்னும் அது முடியவில்லை.

🤥

பாஸ்டர் ஐயா தான் கொண்டு போயிருக்கிறார்.

யாருக்கு பரவவில்லையோ அவர்களுக்கு உடல் பிறபொருள் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்திருக்கும், உந்த பாதிரியார் ஐயாவிலும் பார்க்க...

சும்மா, அவரிண்ட ஆட்களிண்ட கதையை நம்பக்கூடாது. பொரிச்ச மீன் துடிக்குது எண்டுவினம் பாருங்கோ. 🤨

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பாதிரியாருக்கு, திருப்பி வரேக்க தான் எங்கயோ நல்லா வைரசு கவ்வீட்டுது போல கிடக்குது...

1 hour ago, Nathamuni said:

🤥

பாஸ்டர் ஐயா தான் கொண்டு போயிருக்கிறார்.

யாருக்கு பரவவில்லையோ அவர்களுக்கு உடல் பிறபொருள் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்திருக்கும், உந்த பாதிரியார் ஐயாவிலும் பார்க்க...

சும்மா, அவரிண்ட ஆட்களிண்ட கதையை நம்பக்கூடாது. பொரிச்ச மீன் துடிக்குது எண்டுவினம் பாருங்கோ. 🤨

நாதமுனி, போதகரை பாதிரி என்பது, சாமியாரை ஐயர் என்பது போலாகும். 😄 விசயம் தெரியாத ஆள் என்று கண்டவுடன் உங்களையும் மதம் மாற்ற முயற்சித்து கொரனா முதல் வௌவால் 🦇 வரை எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டி, உங்களிடம் உள்ள மற்ற எல்லாவற்றையும் (கோவணம் உட்பட) உருவிக் கொண்டு போய் விடுவார்கள். கவனம். நாளுக்கு நாலு முறை “ஜெய் நித்தியானந்தம்” சொல்லுங்கள், கொஞ்சமாவது பாதுகாப்பு கிடைக்கும்.:100_pray:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போதகருக்கு வேறு ஒரு நோய் கனகாலமாக இருக்காம். அதற்கான மருத்துவச்சி சான்றிதழுடன் தான் இலங்கைக்கு வந்தவராம். இலங்கைக்கு வரும்போது கொரோனா தொற்று இல்லையாம். சுவிசில் மதம்மாறிய ஒருவர் கூறிய தகவல். இப்ப அவர் குணமடைகிறாராம். உந்த ஊடகங்கள் தான் சும்மா எழுதவேணுமென்று கதை பரப்பி இன்னும் அது முடியவில்லை.

நீங்கள் ஒரு  007 ரகசியப்பொலிஸ் படை ஆரம்பிக்கலாமே 😁

Agent 007 GIF - Herunterladen & Teilen auf PHONEKY

  • தொடங்கியவர்

Corona Virus 🦠: Iran, India, Malaysiaவில் பரவ மத நிகழ்வுகள் காரணமா?

மத கூட்டங்களுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு?

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ampanai said:

Corona Virus 🦠: Iran, India, Malaysiaவில் பரவ மத நிகழ்வுகள் காரணமா?

மத கூட்டங்களுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு?

கொறோனா பரவாயில்லை மத நோயோடு ஒப்பிடும்போது. மத நோய் பரவியபோது உலகம் முழுவதும் எத்தனை கோடிப்பேர் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். 

கொறோனா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.

ஆனால் என்ன, கோறோனாவைப் பார்த்து எல்லா மதத்தினரும் துண்டைக் காணோம் துணியைக்  காணோம் என ஓடும்போது சிரிப்புத்தான் வருகிறது.😂

  • தொடங்கியவர்
31 minutes ago, Kapithan said:

ஆனால் என்ன, கோறோனாவைப் பார்த்து எல்லா மதத்தினரும் துண்டைக் காணோம் துணியைக்  காணோம் என ஓடும்போது சிரிப்புத்தான் வருகிறது.😂

மத வழிபாட்டு தலங்களைதான் விட்டு ஓடுகிறார்கள் என சொல்ல வந்தீர்கள் என எண்ணுகிறேன்  🤩

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

யாருக்கு பரவவில்லையோ அவர்களுக்கு உடல் பிறபொருள் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்திருக்கும், உந்த பாதிரியார் ஐயாவிலும் பார்க்க...

இன்னும் ஆறு நாள் இருக்குத்தானே அதுக்கிடையிலை ஏன் குதிக்கினம் பாதிக்கப்படவில்லை என்றால் மிக மிக நல்லது ஆனால் காவிகளாக இருந்தால் கதை கந்தல் இன்னும் இந்த கொரோனோவின்  இயல்புகளை ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு மாதிரி சொல்லுகினம் நேற்று  வரை காற்றில்  பரவாது என்றவர்கள் இன்றைய அமெரிக்க தேடுபவர்கள் வாதம்  இல்லை கொரனோ  நோயாளி இருந்த இடத்தில் பல நாட்களின் பின் அதே இடத்து காற்றில்  கொர்னோ வலிமையுடன் காணப்படுகிறதாம் இப்படி பலவாறு குழப்பகரமான தரவுகளின் அடிப்படையில் நாங்கள் வாதம்  புரிவது முட்டாள் தனமாக போய்  விடும் . இங்கு ஒருபக்கம் அல்லோயாவை திட்டினாள்  தங்கடை  மதத்தை  ஏன்  திட்டுறாய் என்று என்று கொள்ளுபாடு அல்லுலோயா விசர் கூட்டமும் உண்மையான கிறிஸ்தவமும் எப்போதில் இருந்து ஒண்டானது  என்று எனக்கு விளங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

மத வழிபாட்டு தலங்களைதான் விட்டு ஓடுகிறார்கள் என சொல்ல வந்தீர்கள் என எண்ணுகிறேன்  🤩

உண்மைதான். மதவேறுபாடின்றி சகல மதத்தினரும் ஓடி ஒழிவது இதற்குத்தான். காலத்திற்குக்காலம் இவ்வாறான பய உணர்வு சகலருக்கும் மத வேறுபாடின்றி ஏற்பட்டு  மனிதரை ஒன்றுபடுத்துமானால் நன்மையோ என தோன்றுகிறது🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

நேற்று  வரை காற்றில்  பரவாது என்றவர்கள் இன்றைய அமெரிக்க தேடுபவர்கள் வாதம்  இல்லை கொரனோ  நோயாளி இருந்த இடத்தில் பல நாட்களின் பின் அதே இடத்து காற்றில்  கொர்னோ வலிமையுடன் காணப்படுகிறதாம் 

காற்றில் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனினும், ஒருவர் தும்மும், இருமும் போது வேகமாக வெளியேறும் திரவத்துகள்களுடன் அடுத்தவர் மூக்கினுள் புகுந்து கொள்ளும். இது காற்றில் பரவினாலும் திரவத்துகள்கள் சிதறுண்டு போவதால் குறித்த நேரத்தினுள் அடுத்தவர் மூக்கினுள் போக முன்னர் அழிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

https://www.dailymail.co.uk/news/article-8171521/Coronavirus-does-spread-air-lingers-rooms-long-patients-left-study.html

இங்கு மொழி பெயர்த்தால் எப்படி வருமென்பது உங்களுக்கு தெரியும் இப்போதைக்கு வேணாம் .

ஏனென்றால் உலகில் பாம்புக்கடியில்  இறப்பவர்  40 விகிதம் பேர்தான் விஷமேறி மிகுதி 60 வீதமும் பயத்தினால் செத்துப்போவது உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

அதுதான் 2 மீட்டர் இடைவெளி விடுமாறும், நெருக்கமாக பயணிப்பதனையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அரசு சொல்கிறது.

அதவேளை வதந்திகள் அதிகமாக உள்ளன.

அறையின் தட்ப வெப்ப நிலையினைப் பொறுத்தது. ஈரலிப்பான கைப்பிடிகளில், ஈரலிப்பான (அப்போதுதான் டாய்லெட்டில் இருந்து கழுவிவிட்டு வந்த)  கைகுலுக்குதலில், இருந்து அடுத்தவருக்கு பரவும் என்பதால் தான் மாஸ்க்கும் போட்டு, கையினை கழுவ சொல்கிறார்கள். அந்த கையினை முகத்தில் வைக்க வேண்டாம் என்கிறார்கள்.

மற்றும்படி, இந்த ஆய்வுகள் ஒரு வியாபாரம். நாமும் ஏதோ ஆய்வு செய்கிறோம் என்று காட்டுபவர்களும் உண்டு.

இவ்வாறு செய்து, பல தர்மஸ்தாபங்களில் இருந்தும், அரசிடம் இருந்தும் தொடர் ஆய்வுக்கு என பணம் பெற்றுக் கொள்ள முடியும்.   

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதுதான் 2 மீட்டர் இடைவெளி விடுமாறும், நெருக்கமாக பயணிப்பதனையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அரசு சொல்கிறது.

அதவேளை வதந்திகள் அதிகமாக உள்ளன.

அறையின் தட்ப வெப்ப நிலையினைப் பொறுத்தது. ஈரலிப்பான கைப்பிடிகளில், ஈரலிப்பான (அப்போதுதான் டாய்லெட்டில் இருந்து கழுவிவிட்டு வந்த)  கைகுலுக்குதலில், இருந்து அடுத்தவருக்கு பரவும் என்பதால் தான் மாஸ்க்கும் போட்டு, கையினை கழுவ சொல்கிறார்கள்.

மற்றும்படி, இந்த ஆய்வுகள் ஒரு வியாபாரம். நாமும் ஏதோ ஆய்வு செய்கிறோம் என்று காட்டுபவர்களும் உண்டு.

இவ்வாறு செய்து, பல தர்மஸ்தாபங்களில் இருந்தும், அரசிடம் இருந்தும் தொடர் ஆய்வுக்கு என பணம் பெற்றுக் கொள்ள முடியும்.   

இருக்கலாம் .

அந்த சந்தேகம் நிறையவே உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இருக்கலாம் .

அந்த சந்தேகம் நிறையவே உள்ளது .

மனிதரின் கண்ணுக்கு தெரியாத விந்தணு, அது இருக்கும் திரவத்தில் மட்டுமே உயிர்வாழும். 

அதவேளை, மனித விந்துவும், முட்டையும் மிகவும் குளிரான வெப்பநிலையில் பல ஆண்டுகாலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். வெப்பத்தில் அவ்வாறு இருக்க முடியாது. 

இயற்கை தந்த வரங்களில் ஒன்று, இந்த நோய் கிருமிகள் சுவாசிக்கும் காற்றில் இல்லாதது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

மற்றும்படி, இந்த ஆய்வுகள் ஒரு வியாபாரம். நாமும் ஏதோ ஆய்வு செய்கிறோம் என்று காட்டுபவர்களும் உண்டு.

https://www.pattayamail.com/health/uv-disinfection-tunnel-set-up-to-fight-coronavirus-covid-19-in-khonkaen-thailand-292192

நீங்கள்  சொல்வது பொருந்தி போகின்றது .

அடுத்த ஆறு மாதங்களில் இப்படியான uv  கூண்டுகளை தெருவெங்கும் பார்க்கலாம்  வேறு வழியில்லை .

p087xkfv.jpg

https://www.bbc.com/future/article/20200327-can-you-kill-coronavirus-with-uv-light

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

An advisory by the World Health Organization (WHO) also stated that UV lamps should not be used as a disinfectant for the coronavirus as UV radiation can cause skin irritation.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

இன்னும் ஆறு நாள் இருக்குத்தானே அதுக்கிடையிலை ஏன் குதிக்கினம் பாதிக்கப்படவில்லை என்றால் மிக மிக நல்லது ஆனால் காவிகளாக இருந்தால் கதை கந்தல் இன்னும் இந்த கொரோனோவின்  இயல்புகளை ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு மாதிரி சொல்லுகினம் நேற்று  வரை காற்றில்  பரவாது என்றவர்கள் இன்றைய அமெரிக்க தேடுபவர்கள் வாதம்  இல்லை கொரனோ  நோயாளி இருந்த இடத்தில் பல நாட்களின் பின் அதே இடத்து காற்றில்  கொர்னோ வலிமையுடன் காணப்படுகிறதாம் இப்படி பலவாறு குழப்பகரமான தரவுகளின் அடிப்படையில் நாங்கள் வாதம்  புரிவது முட்டாள் தனமாக போய்  விடும் . இங்கு ஒருபக்கம் அல்லோயாவை திட்டினாள்  தங்கடை  மதத்தை  ஏன்  திட்டுறாய் என்று என்று கொள்ளுபாடு அல்லுலோயா விசர் கூட்டமும் உண்மையான கிறிஸ்தவமும் எப்போதில் இருந்து ஒண்டானது  என்று எனக்கு விளங்கவில்லை .

ஐயா பெருமாள்,

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

சரியாகக் கவனித்தீர்களானால், உள ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ரவர்கள்தான் சமயம் மாறுவதில் அதிகமானோர்.  அவர்கள் வெளினாடுகளிலும் இருக்கின்றனர், ஈழத்திலுமிருக்கின்றனர். அவர்களிடையே சாதி, சமய, பிரதேச வேறுபாடு ஏதுமில்லை.

அவர்களுக்கான தேவைகளை(உடல், உள, சமூக, பொருளாதார) சிறிதளவேனும் பூர்த்தி செய்யாமல் அல்லது உதவ முனையாமல் அவர்களை அசிங்கப்படுத்துதல் அறிவுபூர்வமான செயலா ?

நலிவுற்றவர்களை இழிவுபடுத்தும்போது (சோற்றுக்கு , பணத்திற்கு சோரம் போனவர்கள் என) நான் ஆற்றாமையால் எனது அதிருப்தியை கொஞ்சம் காரமாக , நக்கலாக வெளிக்காட்டுகிறேன். மற்றும்படி எனது எழுத்துக்களில் எந்த சமயத்தவரையும் இழிவுபடுத்தி நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்.

எப்போது மத மாற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமக கருத்தாடல் தொடங்குகிறதொ அங்கு நானும் மிகப் பண்பாக எனது கருத்துக்களை முன்வைப்பேன்.

சுபம் 😀.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

An advisory by the World Health Organization (WHO) also stated that UV lamps should not be used as a disinfectant for the coronavirus as UV radiation can cause skin irritation.

இந்த who  கதையை கிழக்கு ஆசியா பக்கம் யார்கேட்க்கிறார்கள் அவங்க பாட்டுக்கு uv  கூண்டுகளை அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் .

5 minutes ago, Kapithan said:

ஐயா பெருமாள்,

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

சரியாகக் கவனித்தீர்களானால், உள ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ரவர்கள்தான் சமயம் மாறுவதில் அதிகமானோர்.  அவர்கள் வெளினாடுகளிலும் இருக்கின்றனர், ஈழத்திலுமிருக்கின்றனர். அவர்களிடையே சாதி, சமய, பிரதேச வேறுபாடு ஏதுமில்லை.

அவர்களுக்கான தேவைகளை(உடல், உள, சமூக, பொருளாதார) சிறிதளவேனும் பூர்த்தி செய்யாமல் அல்லது உதவ முனையாமல் அவர்களை அசிங்கப்படுத்துதல் அறிவுபூர்வமான செயலா ?

நலிவுற்றவர்களை இழிவுபடுத்தும்போது (சோற்றுக்கு , பணத்திற்கு சோரம் போனவர்கள் என) நான் ஆற்றாமையால் எனது அதிருப்தியை கொஞ்சம் காரமாக , நக்கலாக வெளிக்காட்டுகிறேன். மற்றும்படி எனது எழுத்துக்களில் எந்த சமயத்தவரையும் இழிவுபடுத்தி நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்.

எப்போது மத மாற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமக கருத்தாடல் தொடங்குகிறதொ அங்கு நானும் மிகப் பண்பாக எனது கருத்துக்களை முன்வைப்பேன்.

சுபம் 😀.

காலையில்  கதைப்பம் இனிய இரவு உங்களுக்கும் இப்பவே லண்டன் நேரம் 2.30 ஆகிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

இந்த who  கதையை கிழக்கு ஆசியா பக்கம் யார்கேட்க்கிறார்கள் அவங்க பாட்டுக்கு uv  கூண்டுகளை அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் .

காலையில்  கதைப்பம் இனிய இரவு உங்களுக்கும் இப்பவே லண்டன் நேரம் 2.30 ஆகிட்டுது .

சுவிற் ட்றீம்ஸ் 😍

13 minutes ago, Kapithan said:

ஐயா பெருமாள்,

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

சரியாகக் கவனித்தீர்களானால், உள ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ரவர்கள்தான் சமயம் மாறுவதில் அதிகமானோர்.  அவர்கள் வெளினாடுகளிலும் இருக்கின்றனர், ஈழத்திலுமிருக்கின்றனர். அவர்களிடையே சாதி, சமய, பிரதேச வேறுபாடு ஏதுமில்லை.

அவர்களுக்கான தேவைகளை(உடல், உள, சமூக, பொருளாதார) சிறிதளவேனும் பூர்த்தி செய்யாமல் அல்லது உதவ முனையாமல் அவர்களை அசிங்கப்படுத்துதல் அறிவுபூர்வமான செயலா ?

நலிவுற்றவர்களை இழிவுபடுத்தும்போது (சோற்றுக்கு , பணத்திற்கு சோரம் போனவர்கள் என) நான் ஆற்றாமையால் எனது அதிருப்தியை கொஞ்சம் காரமாக , நக்கலாக வெளிக்காட்டுகிறேன். மற்றும்படி எனது எழுத்துக்களில் எந்த சமயத்தவரையும் இழிவுபடுத்தி நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்.

எப்போது மத மாற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமக கருத்தாடல் தொடங்குகிறதொ அங்கு நானும் மிகப் பண்பாக எனது கருத்துக்களை முன்வைப்பேன்.

சுபம் 😀.

உங்கள் கருத்தை வரவேட்கிறேன்।சில நபர்கள் கிறிஸ்தவத்தை தங்கள் நலனுக்காக வியாபாரம் செய்வதை மறுபதட்கில்லை। இந்தியாவில் ஒருவர் செய்தி கொடுக்கும்போது இந்த வருடம் மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமென்றும், மக்கள் செல்வந்தர்களாக மாறுவார்கள் என்றும் பொய் பிரசங்கம் பண்ணினார்। இப்போது என்ன நடந்துள்ளது?  எல்லாம் தலை கீழாக நடந்துகொண்டிருக்கிறது।

மக்களை ஏமாற்றி பணம் பண்ணும் கும்பல் இல்லாமல் இல்லை।அதட்காக மதவாதிகள் கிறிஸ்தவ மதத்தை தாக்கி எழுதுவதையும், வேதாகமத்தை தூக்கி எரிய வேண்டுமென்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। இது அவர்களது கிறிஸ்தவர்களுக்கு எதிரான துவேசத்தை காண்பிக்கிறது। இது நிச்சயமாக தமிழர்களை பிளவுக்குள்ளாகியிருக்கிறது। காலம்தான் அதன் விளைவுகளை எடுத்து சொல்லும்।

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற எத்தனையோ அனந்தாக்களை பற்றி எழுதலாம்। அவர்கள் தங்களது சுய லாபத்துக்காக அப்படி செய்கிறார்கள் என்று எமக்கு தெரியும்। அதட்காக நாங்கள் இந்து சமயத்தை குறை கூற வில்லை। அவர்கள் வேதத்தையோ , வணங்கவும் காரியங்ககைப்பற்றி எதுவும் கூறவில்லை।

எனவே இனி வரும் காலங்களில் சரியான கருத்துக்களை வைத்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இன்னும் அதிகரிக்கும்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.