Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

 

டூரிங் டாக்கீஸின் (Touring Talkies) அமைப்புகள்..

53433064.jpg  

m_id_381242_maharashtra_touring_talkies.jpg?w=660

53433066.jpg

GaneshThiraiArangam_650_new2.jpg

GaneshThiraiArangam_750Main.jpg?itok=YGEOOAcx

1_16a0822e7e2.1878989_3436951993_16a0822e7e2_medium.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது, இப்படித்தான் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து ரசித்தேன்..!

அது ஒரு கனாக் காலம், இனி திரும்ப வராது..🙄

boy.jpg

 

டூரிங் டாக்கீஸ் (Touring Talkies) என்பது ஊருக்கு வெளியே மக்களின் குடியிருப்புகளுக்கு அப்பால், காலி நிலத்தில் மூங்கில் கம்புகளும், பனைமர தூண்களும், தென்னங் கீற்று கிடுகுகளின் அடுக்குகளால் வேயப்பட்டு உருவாக்கப்படும் கொட்டகையாகும். இக்கொட்டகையை சுற்றி தெப்பை தட்டிகளால் வேலி அமைத்திருப்பார்கள்.

உள்ளே உட்கார்ந்து படம் பார்க்க,

'தரை டிக்கட்' என்பது ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள்.

அடுத்தது 'பெஞ்ச் டிக்கட்' என்பது மரத்தால் ஆன நீளமான இருக்கைகள் உள்ள பகுதியாகும்.

அடுத்தது 'சேர் டிக்கட்' என்பது முதல் வகுப்பு மாதிரி, உயரமாக மேடை அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

கொட்டகை அமைக்கப்பட்ட பின், வருவாய் துறை, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் வந்து சோதனை செய்துவிட்டு, இயங்க அனுமதி அளிப்பார்கள்

இதற்கு 'டூரிங் டாக்கீஸ்' என பெயர் வரக் காரணம், இந்த கொட்டகை அமைப்பிற்கு ஆயுட்காலம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இயங்க அரசு அனுமதி அளிக்கும். அடுத்து இயங்க வேண்டுமெனில், கொட்டகையை முற்றிலும் பிரித்துவிட்டு புது மூங்கில், கிடுகுகளைக்கொண்டு வேய்ந்து அனுமதிக்கு மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டும்.

மழையிலும், வெயிலிலும் தொடர்ந்து இயங்குவதால் இதன் ஆயுட்காலம் கம்மி. மேலும் எளிதில் தீ பிடித்து பலத்த உயிர் சேதங்களும் ஏற்படுவதுண்டு. ஆகவே இவற்றை ஊருக்கு வெளியே தள்ளி திறந்த வெளியில் தான் அமைக்க அரசு அனுமதி அளிக்கும்.

பின்னர் காலம் செல்ல செல்ல, பரிணாம வளர்ச்சி பெற்று, மூங்கில், கிடுகளுக்கு பதில், நீளமான சவுக்கு கட்டைகள், மற்றும் மெல்லிய ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைக் கொண்டு 'டூரிங் டாக்கீஸ்'கள் அமைக்கப்பட்டன.

நிலையில்லாமல், அடிக்கடி இடம் விட்டு இடம் மாறுவதாலும், முற்றிலும் பிரிக்கப்பட்டு திரும்ப கொட்டகை அமைக்கப்படுவதாலும் இவற்றுக்கு "டூரிங் டாக்கீஸ்" (Touring Talkies) என பெயர் வந்தது.

 

நிலையான கட்டிடங்களில் இயங்கும் திரையரங்குகளின் அமைப்பே வேறு.

Omaha-Theater.jpg

தெளிவுபடுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..! 😎

நன்றி.

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • Replies 101
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

படத்தை திரையிடும் தொழில்நுட்பம் ஒரே மாதிரியானதாக தெரிகிறதே 
அல்லது ஏதும் வித்தியாசம் இருக்கிறதா?

1950 முதல் 70 களில் வரை திரையில் காண்பிக்கும் ஒளிப்பட கருவிகளில் "கார்பன் ஆர்க் (Carbon Arc)" முறையில் மின்சாரம் மூலமாக குச்சிகளை எரித்து அதில் வெளிப்படும் வெள்ளை ஒளியில் ஃபிலிம் சுருளை ஓடவிட்டு படம் காண்பித்தார்கள்.

 

7eIaiedj0jyWScpgqDLk6VYuOXUQ7pDl92L3X0XlJxaI55L8ddQGLEuDfhTwCRLQU9iBa5iPPwVmQ6HbYqxdic3NdrtHH0XmMP1SBMxF  029_USA_Endres_Carbon%2520arc_profile.jpg

 

s-l400.jpg       VictorianCollections-large.jpg

 

இப்பொழுது லேசர் ஒளியில் 4K துல்லியத்தில் திரையில் காண்பிக்கும் டிஜிட்டல் ஒளிப்பட கருவிகள் சாதாரணமாக கிடைக்கின்றன.

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

அனுபவத்தை, தெரிந்தவற்றை பகிர்ந்தேன்..! உங்கள் கருத்திற்கு நன்றி.

சாராய போத்தலா..? கு.சா. அவர்களின் கூட்டாளியா..? (புதியவரா..? முதியவரா..?) :shocked::)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 03:27, Maruthankerny said:

 

இந்த Mere Sapno Ki Rani.. பாடல் 1969 ஆண்டு வெளிவந்த Aradhana பட பாடல்..

எனது தந்தைக்கு பிடித்தமான படம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பாடலைக்கேட்கும் பொழுதெல்லாம்.. எனது தந்தை கூறிய சிரிக்கும் சம்பவமே நினைவிற்கு வரும்.. இப்பொழுதும் கூறுவார்..

ஆரம்பத்தில் எனது தந்தை வேலைபார்த்து வந்தது மட்டக்களப்பில், வாரக்கடைசியில் அல்லது மாதக்கடைசியில்தான் யாழ்ப்பாணம் வருவார்.. அப்படி வரும் சமயங்களில் முன்பு இருவரும் பின்பு என்னையும் கூட்டிக்கொண்டு திரையரங்குகளிற்கு படம் பார்க்க போவார்கள்..

என்ன படங்களுக்கு, எத்தனை படங்களுக்கு என்பதெல்லாம் அதிகம் நினைவில் இல்லை.. ஆனால் நிறம் மாறாத பூக்கள் வந்த சமயம் எனக்கு 3வயது.. வழமைபோல என்னையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்க போனார்கள், படம் முடிந்து வெளியே வந்தபோது என்னை காணவில்லையாம்..😱..நான் அப்பா என நினைத்து இன்னொருவரின் கையைபிடித்து கொண்டு வெளியே வந்துவிட்டேனாம்.. நல்ல காலம், நான் அதிக தூரம் போயிருக்கவில்லை என்பதால் உடனே கண்டுபிடித்துவிட்டார்களாம்.. 

இப்பொழுதும் இதைகூறி சிரிப்பார்... அந்த நேரத்தில் இப்படி சிரித்திருக்கமாட்டார்கள்..

இப்பொழுது அம்மாவும் காலமாகிவிட்டதால் பல பழைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு அலாதிப்பிரியம்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாடசாலைக்கு போகும் போது  ஒரு தேவாலயத்தை கடந்து தான் போக வேண்டும். 
(அட இவனும் பள்ளிக்கூடம் போனவனாம் எண்டு நக்கல் பார்வை பார்க்கிறவையள் மன்னிக்கணும்)
நான் வேறு மதத்தவனாய் இருந்தாலும் தேவாலயத்தை கடந்து செல்லும் போது வேண்டுதல் இருக்கோ இல்லையோ என்னையறியாமல் நெஞ்சில் கைவைத்து நடந்த படியே பிரார்த்திப்பது வழமை.தேவாலயத்தில் வருடாந்த பெருவிழா மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளில் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புவார்கள். அதில் ஈஸ்டர் பண்டிகையும் களைகட்டும்.அந்த நேரத்தில் ஒலிபரப்பாகும் இந்தப்பாடல் என் மனதில் ஆழப்பதிந்த பாடல்.
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் அந்த தேவாலயம்,எனக்கு ரியூசன் தந்த ரீச்சர், எனது கிறிஸ்தவ நண்பர்கள்,எனது கொசப்பு கூட்டம் எல்லாம் நினைவலைகளாக வந்து போகும்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு தேடுங்கள் ... 

 

  • கருத்துக்கள உறவுகள்
 
இந்தப்படமும் பாடலும் வந்த புதிது .....அந்த நேரங்களில் கசூரினா பீச், மற்றும் கடற்கோட்டை போன்ற இடங்கள் எல்லாம் சுற்றித்திரிந்த காலங்கள் என்றும் மறக்க முடியாதவை.....!   😍
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோன்லை ஒரு காலத்திலை ருவிஸ்ட் சீசன் எண்டு அல்லோல கல்லோலப்பட்டது எல்லாருக்கும் ஞாபகத்திலை இருக்குமெண்டு நினைக்கிறன். இதை முதல் முதலாய் சிலோன்லை அறிமுகப்படுத்தினது ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள்தான். கொழும்பிலை 1978 எண்டு நினைக்கிறன். உலகசாதனைக்காக தொடர்ந்து ருவிஸ்ட் நடனமாடினவர்.ஆனால் அது உலக சாதனையாக பதியப்படேல்லை எண்டு நினைக்கிறன்.ஆனால் சிலோனிலை அது உலக சாதனைதான். :cool:
அதுக்குப்பிறகு எங்கடை யாழ்ப்பாண குஞ்சுகளும் தாங்களும் ருவிஸ்ட் நடனமாடி உலக சாதனை நிகழ்த்துவம் எண்டு ஊருக்கு ஒருத்தராய் வெளிக்கிட்டினம். கொடிகாமத்திலையும் ஒராள் ஆடி  சிலோன் சாதனை நிகழ்த்தினவர். அதுக்குப்பிறகு அவருக்கு பெரிய பாராட்டு விழாவெல்லாம் அமர்க்களமாய் நடந்தது. காசுமாலை சைக்கிள் அது இது எண்டு எக்கச்சக்கமான பரிசுப்பொருள் எல்லாம் கிடைச்சது, சாவகச்சேரி நீதவான் உட்பட பெரிய பெரிய ஜென்ரில்மேன்மார் எல்லாம் பாராட்டு விழாவுக்கு வந்து அமர்க்களப்படுத்தியிருந்தினம்.😁

இந்த பிரமாண்டத்தை பார்த்திட்டு சாவகச்சேரியிலையும் இரண்டுபேர் வைரவர் கோயிலுக்கு முன்னாலை பரீட்சார்த்த ருவிஸ்ட் டான்ஸ் ஆட வெளிக்கிட்டினம். இரண்டு நாளுக்கு மேலை ஒராளாலை ஏலாமல் போச்சுது.இதாலை இரண்டு பேருக்கும் கொழுவல் வந்துட்டுது.கடைசியிலை கைகலப்பிலை தொடங்கி காது கடிபட்டு மூக்கு கடிபட்டு விலக்கு பிடிச்சு பரீட்சார்த்த டான்ஸ் விடியப்பறம் 4மணிக்கு இனிதே நிறைவேறியதாம்.🤣

அந்த காலத்திலை ருவிஸ்ட் நடனம் எண்டால் இந்த பாட்டுத்தான்   தூள் கிளப்பும்.🕺🏾

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 03:50, ராசவன்னியன் said:


டூரிங் டாக்கீஸின் (Touring Talkies)

நிலையில்லாமல், அடிக்கடி இடம் விட்டு இடம் மாறுவதாலும், முற்றிலும் பிரிக்கப்பட்டு திரும்ப கொட்டகை அமைக்கப்படுவதாலும் இவற்றுக்கு "டூரிங் டாக்கீஸ்" (Touring Talkies) என பெயர் வந்தது.

 

நிலையான கட்டிடங்களில் இயங்கும் திரையரங்குகளின் அமைப்பே வேறு.

 

தெளிவுபடுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..! 😎

நன்றி.

மிகவும் தெளிவான விளத்தம். நேரமொதுக்கி இப்படித் தெளிவாக எழுதியமைக்கு நன்றி. எனக்கும் "டூரிங் டாக்கீஸ்" என்றால் என்ன என்ற வினா இருந்தது. வினாத் தொடுத்த பாலபத்திரருக்கும் நன்றி. மீண்டும் ராசவன்னியனாருக்கு நன்றி.

திரியை  தொடக்கி எரியவிட்டிருக்கும்  குமாரசாமி ஐயாவுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் காலங்களை மீட்டித்தருவதோடு பல்வேறு நினைவுகளையும் கொண்டுவருவது. இலங்கை வானொலியில் "பொங்கும் பூம்புனல்" காலை உற்சாகத்தைக் கரைபுரண்டோட வைப்பது. நிகழ்வுக்கான இசை. உரையாடும் உறசாகம் என்று ஒரு தனித்தவமாக இருக்கும். கள உறவுகள் பலரது அனுபவமாகவும் இருக்கும். எனக்கு இந்தப் பாடலை யூரூப்பில் கேட்கும்போது நினைவுக்குவருவது பொங்கும் பூம்புனல். 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழி க்க முடியாத இசையும் வானொலி யை

காதலித்த நாட்களும் மீண்டும் வருமா ?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

...

அந்த காலத்திலை ருவிஸ்ட் நடனம் எண்டால் இந்த பாட்டுத்தான்   தூள் கிளப்பும்.🕺🏾

 

எனது கல்லூரி நாட்களில் போனியம்(BoneyM, அபா(AbbA), டினா சார்ல்ஸ்(Tina Charles), டோன்ன சம்மர்(Donna Summer) போன்ற பாடகர்களின் பாடல்கள் மிகப் பிரபலம். விடுதிகளில் மாலையில் இவர்களின் பாடல்கள் அடிக்கடி ஒலிப்பரப்பப்படும்.

கு.சா..,

பழைய கல்லூரி நினைவுகளை தூண்டிவிட்டீர்கள், இனி எனது கணணியில் நான் சேமித்து வைத்துள்ள அக்கால பாடல்களுடன் தான் இன்றைய இரவு தூக்கம்..! :innocent:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

காலத்தால் அழி க்க முடியாத இசையும் வானொலி யை

காதலித்த நாட்களும் மீண்டும் வருமா ?

தொலைத்தோமா ? இழந்தோமா? பிரித்தறிய முடியாத விதியா?

  • கருத்துக்கள உறவுகள்

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, ராசவன்னியன் said:

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

Record Broken Record GIF - Record BrokenRecord Vinyl GIFs

Vadivelu Introduction Comedy Scene || Ayya Movie || Vaathiyar ...

Bird

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஒருதலை காதலியின் நினைவும் ஊர் கோவிலும்😀

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 16:46, பிரபா சிதம்பரநாதன் said:

 

இந்த பாடலைக்கேட்கும் பொழுதெல்லாம்.. எனது தந்தை கூறிய சிரிக்கும் சம்பவமே நினைவிற்கு வரும்.. இப்பொழுதும் கூறுவார்..

ஆரம்பத்தில் எனது தந்தை வேலைபார்த்து வந்தது மட்டக்களப்பில், வாரக்கடைசியில் அல்லது மாதக்கடைசியில்தான் யாழ்ப்பாணம் வருவார்.. அப்படி வரும் சமயங்களில் முன்பு இருவரும் பின்பு என்னையும் கூட்டிக்கொண்டு திரையரங்குகளிற்கு படம் பார்க்க போவார்கள்..

என்ன படங்களுக்கு, எத்தனை படங்களுக்கு என்பதெல்லாம் அதிகம் நினைவில் இல்லை.. ஆனால் நிறம் மாறாத பூக்கள் வந்த சமயம் எனக்கு 3வயது.. வழமைபோல என்னையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்க போனார்கள், படம் முடிந்து வெளியே வந்தபோது என்னை காணவில்லையாம்..😱..நான் அப்பா என நினைத்து இன்னொருவரின் கையைபிடித்து கொண்டு வெளியே வந்துவிட்டேனாம்.. நல்ல காலம், நான் அதிக தூரம் போயிருக்கவில்லை என்பதால் உடனே கண்டுபிடித்துவிட்டார்களாம்.. 

இப்பொழுதும் இதைகூறி சிரிப்பார்... அந்த நேரத்தில் இப்படி சிரித்திருக்கமாட்டார்கள்..

இப்பொழுது அம்மாவும் காலமாகிவிட்டதால் பல பழைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு அலாதிப்பிரியம்.. 

அட!! பாடலைக்காணவில்லை.. நிறம் மாறாத பூக்கள் படம் பார்க்க திரையரங்குற்கு சென்றபோதுதான் இப்படி நடந்தது.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

ஊசியை மாத்துங்க சார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் விக்னா ரியூட்டரிலை படிக்கிறதுக்கு வசுவிலைதான் போய் வாறனான். அப்ப போற வழியிலை ஒரு கிளி வசுவிலை ஏறி வருவா. கிளி விக்னாவிலை தான் ரியூசன் எடுக்கிறவ....ஆனால் அவ என்ரை கிளாஸ் இல்லை....

இப்பிடியே காலம் போய்க்கொண்டிருக்கேக்கை கிளி என்னை பார்த்து புன்னைகைக்கிறதும் பதிலுக்கு நானும் அப்பிடியே பல்லு தெரியாமல் புன்னகையை பூக்க விடுறதுமாய் வசு ஓடிக்கொண்டேயிருக்கும். ஒரு நாள் வசுவிலை இட வசதியில்லாதாலை கிளி எனக்கு பக்கத்திலை இருக்க வேண்டி வந்திட்டுது.

அதுக்கு பிறகு கலோ சொல்ல வெளிக்கிட்டு...கதைக்க வெளிக்கிட்டு....ஊர் விசாரிச்சு...அப்பிடியே அவரை தெரியுமோ இவரை தெரியுமோ எண்டு கதையள் பெரிசாகி கடைசியிலை  ஒரு நாள் காணாட்டில் கண்ணுக்கு பாக்கிறதெல்லாம் பாலைவனம் மாதிரி தெரிய வெளிக்கிட்டுது.

இப்பிடியே மாதங்கள் ஓடிக்கொண்டிருக்கேக்கை படிப்பும் முடிவுக்கு வந்து வந்திட்டுது. அதுக்கு பிறகு எப்ப சந்திப்பம் எண்டு நான் கேட்க அடுத்த கிழமை சுபாஸ் கூல்பாரிலை சந்திப்பம் அதுவும் ரியூசனுக்கு வாற மாதிரியே வந்து சந்திப்பம் எண்டு முடிவெடுத்தம்.😄

அதே மாதிரி அடுத்த கிழமையும் வந்தது. அதே வசு அதே நேரம் ஆனால் நாங்கள் போற இடம் விக்னா இல்லை சுபாஸ் கூல்பார்.... சரி உள்ளுக்கு போட்டம் என்ன ஓடர் பண்ணுவம் எண்டால் நான் கோலா எண்டன்.. கிளி ஐஸ் ஓடர் பண்ணப்போறன் எண்டா.அப்ப நானும் ஐஸ்தான் எண்டு பல்லை காட்டிக்கொண்டு ஓடர் பண்ணினம்..கன கதையள் கதைச்சுக்கொண்டே ஐஸ்சை காலி பண்ணீட்டம் நிறைய கதைக்க வேணும் போல இருந்துது. நேரமும் இருந்தது.படத்துக்கு போவமோ எண்டன்.மறு வார்த்தையே இல்லாமல் ஓம் போவம் எண்டு பதில் வர பக்கத்து தியேட்டருக்கை மட்டு மட்டு நேரத்துக்கை ஓடிப் போய் ஒளிஞ்சு கொண்டோம்.சிறு நிமிடங்களிலேயே படம் ஓடத்தொடங்கியதால் அடிக்கடி முகத்தை பார்த்துக்கொண்டோமே தவிர பேச சந்தர்ப்பமே வரவில்லை. சுபாஸ் கூல்பாரிலையே இருந்திருக்கலாம் போல் இருந்தது.ஆனால் இரண்டு பேரின்ரை கை விரல்களும் அடிக்கடி சுகம் விசாரித்து கொண்டே இருந்தது.படமும் ஓரிரு இடத்தில் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்ததாலை எங்களுக்கும்....😍
படமும் ஒருவாறு முடிந்தது.நேரமும் பிந்தி விட்டது.

வீட்டில் தேடுவினம் எண்ட பயம் இருவருக்கும் வர இருவரும் பிரிந்தே சென்று ஒரே வசுவில் ஏறினம். கனக்க கதைக்கேல்லை. இனி எப்ப சந்திப்பம் எண்டு நான் கேட்க......ஒரு மாதம் கழித்து ஒரு திகதி குறிச்சம்.

ஆனால் அந்த திகதிக்கு அந்த கிளி வரவேயில்லை.குறிப்பிட்ட ஊருக்கு போய் பார்த்தேன்.வீட்டை கண்டு பிடிக்க முடியவில்லை.விசாரிக்க பயமாக இருந்தது. அப்படியே என்ரை நிலைமையும் தலைகிழாகிட்டுது.....கிளி எங்கிருந்தாலும் வாழ்க.

மனதுக்கு கவலையாக இருந்தாலும் வாழ்க்கை எனும் பாதையில் இதுவும் ஒரு சம்பவம் என கடந்து போகின்றேன்.அந்த படத்தில் எந்த பாடலைக்கேட்டாலும் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்த  உணர்சிகள் வரும்.


 

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு பள்ளிக் கால நினைவு ....ஏ எல் தரத்தில் இருக்கும் பொது கல்லூரி ஒன்று கூடல் . ஆண்களும் பெண்களுமான கூடடம் . சுவையான சிற்றுண்டிகளை  உண்டு முடித்த பின்  பார்சல்  பாசிங் ( Parcelpassing ) எனவும் விளையாட்டு . எனது முறை ..வருவதற்கு முன் அயலில் உள்ள மாணவனால் என் கையில் திணிக்க பட்டு விட்ட்து . பாடும் படியான  நிர்பந்தம் ..அப்போது அன்றாட  பொழுது  போக்கான வானொலியில்  அப்போது  பிரபலமான பாடல் .................. .நடுக்கமுடனும் வெட்கத்துடனும் பாடிய பாடல் ...... வான் நிலா நிலா அல்ல ...பல வருடங்களிக்கு ...பின் கனடாவில் எனது  பெளதீகவியல் ...மாஸ்டர்  , தூரத்து உறவினரை ,  சுகம் விசாரிக்க  சென்ற    போது ... அவரின்  தள்ளாடும் வயது..   என்னை அறிமுகம் செய்த போது  .. நிலா ..நிலாப் பா ட்டு படித்த  பிள்ளையா என   இது வரை நினைவில்  இருந்திருக்கிறது . 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

...ஆனால் அந்த திகதிக்கு அந்த கிளி வரவேயில்லை.குறிப்பிட்ட ஊருக்கு போய் பார்த்தேன்.வீட்டை கண்டு பிடிக்க முடியவில்லை.விசாரிக்க பயமாக இருந்தது. அப்படியே என்ரை நிலைமையும் தலைகிழாகிட்டுது.....கிளி எங்கிருந்தாலும் வாழ்க.

மனதுக்கு கவலையாக இருந்தாலும் வாழ்க்கை எனும் பாதையில் இதுவும் ஒரு சம்பவம் என கடந்து போகின்றேன்.அந்த படத்தில் எந்த பாடலைக்கேட்டாலும் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்த  உணர்சிகள் வரும்..

 

ann.jpg

 

சிங்கன் செம 'மைனர் குஞ்சா' இருந்திருப்பார் போலிருக்கே..! 🤣

  • கருத்துக்கள உறவுகள்

thangame.jpg

பாலகனாக இருக்கும்பொழுது என் ஐயா, திரையில் எனக்கு அறிமுகப்படுத்திய முதல் நகைச்சுவை காட்சி.

இந்த பாடலை பார்த்தவுடன், கிராமத்தில் குயவர்கள் இருக்கும் தெருப் பக்கம் செல்லும்போதெல்லாம் குறுகுறுப்புடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தெருவில் அடுக்கி வைத்திருக்கும் சுட்ட மண்கலங்களை தட்டிப் பார்த்து ஒலியைக் கேட்பதுண்டு.. அதில் ஒரு சந்தோசம்..!

வீட்டுக் குயவர், உள்ளிருந்து "யார்ரா அது..?" என்ற அதட்டலைக் கேட்டவுடன் ஒரே ஓட்டம் தான்..! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 11:29, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

ஓய் மரமண்டை ஓணாண்டி, 😉

சும்மா போறதில்லை. புலவர்களுக்கு சந்தோசம் வந்தால் கவிவரிகள் வரவேணுமே.

டூரிங் டாக்கீஸ் பத்தியோ, அருமையான விளக்கம் தந்த நம்ம வன்னியர் பத்தி இரண்டு வரி கவிதைல சொல்லக்கூடாதா? (பிஸி எண்டால் சுவியர் உதவி கேளுங்கோ) 😀

சரி டெண்டு கொட்டாய் எண்டால் என்ன வன்னியர்? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

...

சரி டெண்டு கொட்டாய் எண்டால் என்ன வன்னியர்? 

டூரிங் டாக்கீஸ், டெண்ட் கொட்டாய் ரெண்டுமே ஒன்னுதான் திரு.நாதமுனி.

மனைவி, துணைவி மாதிரி..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, ராசவன்னியன் said:

டூரிங் டாக்கீஸ், டெண்ட் கொட்டாய் ரெண்டுமே ஒன்னுதான் திரு.நாதமுனி.

மனைவி, துணைவி மாதிரி..! :)

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.