Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...

போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன். 

அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து,  மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார்.

கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை...

முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்....

சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவானது அல்ல.

மேலும்... அவர்கள் வருமானம்... பரண் அமைத்து கொடுப்பது... இந்திய ரூபாயில் 5 லட்ச்சம்.... சாப்ட்வேர்... தீவனம்... பயிட்சி.. அப்புறம் ஸ்டாக்.. ஆடுகள்... கோழிகள்...  ஆக 10 லட்ச்சம் பார்த்து விடுவார்கள்.   

ஒரு 10 பேர் கிளம்பி வந்தாலே போதும். அவர்கள் பணம் பார்த்து விடுவார்கள்...

ஒரு விமானம் takeoff ஆக முதல்.... ஊர்ந்து, வேகமெடுத்து ஓடி தான்.... ஒரு ஒழுங்கு முறையில் இருக்கும்...

இவர் என்ன சொல்வது.... என்று நினைத்திருப்பார்... விழலுக்கு இறைத்த நீர்... 

அவரது அண்ணர் அண்மையில் அழைத்து.... 40 லட்ச்சம் நட்டம்... போய்.... எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக ஸ்டோக்க்கை வித்து விட்டு வந்தேன் என்றார்...

சதுரங்க வேடடை படத்தில், கதாநாயகன் நட்டி, நடராஜன் சொல்லுவார்..... ஒருவனை ஏமாத்த வேண்டும் என்றால்... அவனில் கனவை விதைத்து, ஆசையை, பேராசையை தூண்ட வேண்டும்..

பல, பல ஆண்டுகளாக, நிலத்தில், கொட்டிலில் வளர்த்த ஆடுகளை.... பரணில் வளர்க்க வேண்டும்.... என்று சொன்னால்.... நம்பி பணத்தினை போடுவதா?

இதனை ஏன் எழுதுகிறேன் என்றால்..... யாழ்ப்பாணத்தில் கூட... சில நம்மவர்கள் எடுபட்டு.... இத்தகைய இந்திய நிறுவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

இன்னும் சிலர், றால் பண்ணை என்று கிளம்புகின்றனர்...... முதலில் அது குறித்து அனுபவம் பெறவேண்டும்....

வேலையாள் வராவிடில்... றாலுக்கு என்ன தீவனம், எப்ப போடவேணும் எண்டு தெரியாவிடில்.... றால் ஸ்டாக் காலி...

அவர்களுக்கு முதல் தரக்கூடியவர்களுக்கு சொல்லக் கூடியது இதுதான். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தொடர்பான தொழிலில் உதவுங்கள். இல்லாவிடில் சிறிதாய் ஆரம்பித்து, நெளிவு சுளிவுகளை அறிந்து, பின்னர் பண்ணையினை பெருக்க சொல்லுங்கள்.

இல்லாவிடில் முதலுக்கு மோசம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள்  (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே   பரண் மேல் ஆடுகளை வளர்க்கக்  காரணமென நம்புகிறேன்.

நாட்டுப்புற இனங்களைவிட வெளிநாட்டு இனங்களுக்குத்தான் இந்த வகையான பாதிப்புகள் அதிகம்.

மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை தொட்டிருக்கும் நாதமுனிக்கு நன்றியும் பாராட்டுக்களும். 

வட புலத்தில் காளான் வளர்ப்பை ஆரம்பிக்க ஆலோசனைகள் தேவை. தெரிந்தவர்கள், விரும்பியவர்கள் ஆலோசனையை தெரிவிக்கலாம். நன்றி.

Edited by Kapithan
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு, திறந்த வெளியில் ஆடு வளர்ப்பதே நல்லது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

மழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள்  (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே   பரண் மேல் ஆடுகளை வளர்க்கக்  காரணமென நம்புகிறேன்.

35 minutes ago, உடையார் said:

நல்ல பதிவு, திறந்த வெளியில் ஆடு வளர்ப்பதே நல்லது

திறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது. 

இதுதான் காலகாலமாக நடந்து வருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.

கிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.

ஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.

அதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.

அதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.

அனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.

முக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.

ஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.

சாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந்த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.
 
Edited by Nathamuni

இந்தியாவில் யுரியுப்பில் பணம் சம்பாதிக்கும் போட்டி மோசமான நிலையை  ஏற்படுத்துகின்றது. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று  கவர்ச்சிகரமான தலைப்புகளை போட்டு வெளியிடும் காரணொளிகளால் பலர் நஷ்டமடைகின்றார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

திறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது. 

இதுதான் காலகாலமாக நடந்துவருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.

கிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.

ஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.

அதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.

அதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.

அனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.

முக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.

ஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.

சாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந்த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.
 
நீங்கள் கூறியதும் சரிதான். உண்மையில் ஆரம்பத்தில் இவ்வாறுதான் நானும்  எண்ணியிருந்தேன். 

கடந்த வருடம் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பில் , மூன்று மாவீரர்களின் வயதான பெற்றோர் இருவருக்கு என்னால் ஜமுனா பாறி ஆடுகள்  வழங்கியபோது, அங்கு எனக்கு உதவிய அலுவலரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய ஆட்டுக் கொட்டகையும் அமைத்துக் கொடுத்திருந்தேன். அவர் கூறிய காரணம் தான் ஈரலிப்பும் அதனால் ஏற்படும்  ஆடுகளின் இறப்பும். 

Edited by Kapithan
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நாமிழர் உறவு ஒருவர் தமிழ்நாட்டில் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.

அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..

அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.

ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.

மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.

மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.

அப்புறம் வயல் ஒரு எண்பது ஏக்கர் இருக்கு.. நெல்லு விதைப்பன்.

மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு. சாணம் உரமா கொட்டுது.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..

ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா. 

எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

நல்லதிரியொண்டு சந்தோசமா வாசிச்சன் நாதம். 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.

அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..

அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.

ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.

மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.

மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.

மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..

ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா. 

எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

நீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...

யாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை. 

பேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். 

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.

இந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம். 

ஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.

வாழ்த்துக்கள்.

முக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள். 

NRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.

லோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.

ஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...

லோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆகா செம ஜடியா நாதம்..  நன்றி

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

தற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account  ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

தற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account  ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.

லோக்கல் கரண்சி, எப்படியும் பணவீக்கத்தில அடிவாங்கும். வெளிநாட்டு நாணயத்துக்கு ஆபத்து இராது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் விபரமான வீடியோ.

மிகவும் யதார்த்தமான ஆலோசனைகளையும் பேச்சும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்திர ஓணாட்டி நீங்கள் எழுதியைதை & உங்கள் நீண்ட கால திட்டங்களை வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கு. என் கனவில் இது ஒன்று, இங்கு நல்ல இடமிருக்கு பண்ணை வைக்க, கொஞ்ச காலம் காத்திருக்குறேன் சந்தப்பர்த்திற்கு, பார்ப்பம் காலத்தின் பதிலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம். 

குருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி

இப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்

Border Collie Breeds

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மிகவும் பயனுள்ள இணைப்பு. நாதஸ்துக்கு நன்றி.👍

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

Edited by சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-1913 ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

Vadivelu GIFs | Tenor

என்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

Vadivelu GIFs | Tenor

என்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....!   😁

நன்றி சுவியர்.டங்கு ச்சா பிங்கர் சிப்பாயிடுச்சு.😂😆

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வதையும் கேளுங்கள். கால் ஏக்கர் நிலத்தில் தன்னிறைவான விவசாயம்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 14:48, உடையார் said:

ஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம். 

குருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி

இப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்

Border Collie Breeds

உடையார் குருவிட்சம்பழம் சுவிங்கத்த நினச்சு அத உமியுறனான். அதொரு தனி சுகம்.. பின்னெரம் நாலுமணி ஆனா ஆட்டுக்கு குழைபுடுங்க போறது.. முள்முருக்கு சீமக்கிழுவை கிழுவை பிலாக்குழை இப்பிலிப்பில் குருவிச்ச எண்டு மூங்கில்தடி இல்லாட்டி காஞ்ச தென்னோல மட்டேல குழச்சத்தகம் கட்டிக்கொண்டு குழைவெட்ட போவம்.. எங்கட ஊரில குருவிச்ச கூடுதலா மாமரத்திலதான் புடிக்கிறது.. பிறகு நொங்குபொறுக்கிவந்து அம்மம்மாட்ட குடுக்க இருந்துவெட்டுற அருவாள்ள அறுத்துதருவா நொங்ககுடிச்சுட்டு கயறக்குடுக்க சின்னன்சின்னனா அறுத்துத்தருவா கொண்டே ஆட்டுக்கு ஒரு சாக்கை விரிச்சுபோட்டு அதில போடுவம் தலய ஆட்டிஆட்டி சாப்பிடும்.. இரவு ஆட்டுக்கு நுளம்பு கடிக்கும் எண்டு நுளம்பித்திரி எல்லாம் கட்டி தொங்க விடுறனாங்கள்.

நீங்க சொன்னமாரி குட்டிய புடிச்சுக்கொண்டுபோய் கோலுக்க இல்லாட்டி வேப்பமரத்துக்கு கீழ வச்சு பஞ்சுமாரி இருக்கிற ஆட்டுக்குட்டிய தடவ அது துள்ளிதுள்ளி போகேக்க இருக்கிற சுகமே தனிதான்..

குட்டி கிடா எண்டா வம்புக்கு தலையால அதின்ர தலைக்கு இடிச்சு மல்லுக்கட்டுறனாங்கள்..

அது ஒரு கனாக்க்காலம்..

உங்கள் திட்டத்தை கைவிட்டுடாதைங்கோ. அதில இருக்கிற சந்தோசம் எதிலயும் வரா.: வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.

முக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.

உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது நண்பர் அமெரிக்காவில் இருந்து போனவர்... ஆட்டுப்பண்ணை ஒன்றை தனது பரம்பரை காணி இருக்கும் அச்சுவேலியில் வைக்க முயன்றார்.

அவருக்கு ஆரம்ப வேலைக்கு வந்த ஆக்கள் அணைவருமே வெளிநாட்டு கனவுடன் இருந்தவர்கள்.  காசை கட்டிப் போட்டு இருப்பவர்கள். ஸ்பொன்சர் பண்ணப்பட்டு இருப்பவர்கள் என்று யாருமே நம்பகத்தன்மை உள்ளவராக இருக்கவில்லை.

கடைசியில் இரு தெரிவுகள். மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது. வடக்குக்கு வெளியே போவது.

வவுணியாவில் இடம் பார்த்திருப்பதாக அண்மையில் சொன்னார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 06:43, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..

யோவ் ஓணாண் நெஞ்சை நக்கீட்டீங்க.போங்க சார்.

முயற்சிகள் வெற்றியளிக்க வாழ்த்துகிறேன்.

23 minutes ago, சுவைப்பிரியன் said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.மேன்மேலும் வளர்ச்சி பெறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுவைப்பிரியன் said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

ஆட்டிலிருந்து கோழிக்கு மாறுவதற்கான காரணத்தை கொஞ்சம் விலவாரியா எழுத ஏலுமே ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.