Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் அரசு, சுதந்திரத்தினை பறிகொடுத்து 500 வருட நினைவு 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட  500 வருட நினைவு.

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு.  யாழ்ப்பாண அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்டஆண்டு 1520

அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய  நான்கு ராஜிஜங்கள் இருந்தன.

யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக (கோட்டை, சீதாவாக்கை, ராய்கம) பிரித்து பதவிக்கு அமர்ந்த அவனது மூன்று மகன்மாருக்கு இடையே நடந்த போராடங்களினால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள்.

தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது. 

இடையே வடக்கே மக்கள் வாழாத அல்லது குறைவான மக்களைக் கொண்ட தீவுக்கூடங்களை பிடித்துக் கொண்டனர் போர்த்துக்கேயர். இதனூடாக, தென் இந்திய உதவி தடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ராஜ்யம் மடக்கப்பட, போர்த்துகேயர்களுக்கு இசைந்து போகவேண்டி வர, தமது பொம்மை அரசரை 1520 அளவில் பதவி ஏற வைத்தனர். அந்த அரசரின் பேரன் சங்கிலியன் அரசனாகி  முரண்டு பிடித்த போது, போரிட்டு அவனைக் கொன்று நேரடி ஆளுமைக்கு கொண்டு வந்தனர்.

சிலர் இந்த சங்கிலி மன்னனை போரில் வீழ்த்தி அதன் பின்னான நேரடி ஆட்சியே போர்த்துக்கேயர் ஆதிக்கம் தொடங்கி காலம் என்று தவறாக சொல்கின்றனர்.

Meegaaman Fort (1660) on Delft (Neduntheevu) Island, Sri Lanka ...

சிதைந்த போர்த்துக்கேயர் கோட்டை, நெடுந்தீவு

இதேபோலவே கோடடையின் அரசனான (கொல்லப்பட்ட விஜயபாகுவின் ஒரு மகன்) மன்னர் புவனேகபாகுவை அந்தப்புரத்தில் உப்பரிகையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அறிவித்து, (மேலிருந்து ஒரு போர்த்துகேயனால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்பட்ட) பின்னர் அவனது பேரனை, கிறிஸ்தவனாக்கி (டொன் யுவான் தர்மபால) பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக.

இந்த 2020ம் ஆண்டு, இந்த யாழ்ப்பாண ராஜ்யம் தனது சுதந்திரத்தினை பறிகொடுத்த 500 வது வருட நிறைவு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க இனம்புரியாத கவலை மனதில் எழுந்தது உண்மைதான். விடுதலையடைய நமது இனம் இன்னும் தகுதியடையவில்லை என்பததென்னமோ  அதைவிட உண்மை. ☹️

இதை இங்கே இணைத்ததற்கு நாதத்ஸ்கு நன்றி.👍

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள், அது நிர்மாணிக்கப் பட்ட... 
தமது... 500´வது, 600´வது  வருடங்களை நினைவு கூரும்  போது,
அதனைப்  பார்த்து... இனம் புரியாத மகிழ்ச்சி, அந்நியராகிய எமக்கும் ஏற்படும்.

யாழ்ப்பாண அரசு,  தனது  பிடியை இழந்து 500 வருடமாகிய நாளை நினைக்கும் போது...
நீண்ட  பெரு மூச்சுத்தான்...  வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட ஆண்டு 1520.

அப்ப மண்டியிட்டது தான் இன்னும் எழும்பவேயில்லை.
அதுவே பழகியும் போச்சு.
பேசாமல் வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

 விடுதலையடைய நமது இனம் இன்னும் தகுதியடையவில்லை என்பததென்னமோ  அதைவிட உண்மை. ☹️

ஓஓஓ அப்படியும் ஓன்று இருக்கோ?இது என்ன பதவி  உயர்வோ அல்லது பதவியா தகுதி பார்த்து கொடுப்பதற்கு.....புரிகின்றது தங்களது  மனப்பான்மை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள், அது நிர்மாணிக்கப் பட்ட... 
தமது... 500´வது, 600´வது  வருடங்களை நினைவு கூரும்  போது,
அதனைப்  பார்த்து... இனம் புரியாத மகிழ்ச்சி, அந்நியராகிய எமக்கும் ஏற்படும்.

யாழ்ப்பாண அரசு,  தனது  பிடியை இழந்து 500 வருடமாகிய நாளை நினைக்கும் போது...
நீண்ட  பெரு மூச்சுத்தான்...  வருகின்றது.

இதே நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஓஓஓ அப்படியும் ஓன்று இருக்கோ?இது என்ன பதவி  உயர்வோ அல்லது பதவியா தகுதி பார்த்து கொடுப்பதற்கு.....புரிகின்றது தங்களது  மனப்பான்மை

புத்தா 🌞

என்னுடைய மனப்பான்மை ஒரு பக்கம் இருக்கட்டும். 

எங்கள் இனம் விடுதலைக்கு தகுதியடைந்து விட்டதா ? 🤔

நேரடியாகவே கூறலாம் அதில் தவறொன்றுமில்லையே 😀

6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப மண்டியிட்டது தான் இன்னும் எழும்பவேயில்லை.
அதுவே பழகியும் போச்சு.

பேசாமல் வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம்.

நான் தங்களை வழி மொழிகிறேன் 👍(கிரகிக்கக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை எப்போதுமே காச்சல் மருந்துமாதிரி. கசக்கும். ஆனால் குணப்படுத்து 😀. ஈழப்பிரியன் சுயபச்சாதாபத்தில் கூறினாலும் உண்மையும் அதுதான்)

11 hours ago, Nathamuni said:

தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது.

தமிழக - தமிழீழ அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்புக்கள் மீண்டும் இந்த தொப்புள்கொடி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

அன்றிருந்த அந்த உறவை இல்லாமல் போனதற்கு ஒரு காரணம் இந்தியா என்ற ஒரு நாடு உருவானது. இருந்தாலும், அதையும் தாண்டி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

Edited by ampanai
Spelling error

11 hours ago, Nathamuni said:

யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக (கோட்டை, சீதாவாக்கை, ராய்கம) பிரித்து பதவிக்கு அமர்ந்த அவனது மூன்று மகன்மாருக்கு இடையே நடந்த போராடங்களினால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள்.

மீண்டும் கொதி நிலையை உருவாக்கி....
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்தை பரிகொடுத்தோம் என்று சொல்ல முடியாது. 

நாம் தமிழர் எப்பவும் மத்தவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க விரும்புவோம். ஆகவே நாங்களாவே விட்டுகொடுக்கின்றேம் என்பதே சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ampanai said:

மீண்டும் கொதி நிலையை உருவாக்கி....
 
அம்பனை, சரியாக சொன்னீர்கள்.

பாருங்கள், வரலாறு குறித்து எழுதுபவர்கள், அது மீண்டும் திரும்பும் என்ற பதத்தினை அடிக்கடி பாவிப்பார்கள். (History will repeat, itself)

தந்தை விஜயபாகுவை கொன்ற அவனது மூன்று மகன்கள் போலவே, தமிழர்களை கொன்றழித்த, சகோதரர்கள் இன்று இலங்கையில் அதிகாரத்தில் இருக்கிறார்கள். வெகுவிரைவில் இது பெரும் மோதலாக வெடிக்கும்.

இந்த கோரோனோ பிரச்சனை, பெரும் பொருளாதார தலைவலியாக மாறப்போகின்றது. இதனை, போர்த்துக்கேயர் போலவே சீனா பயன்படுத்திக் கொள்ளப்போகின்றது.

மறுபுறமாக, இந்தியாவுக்கு, அமெரிக்காவுக்கு வேறு வழி இருக்காது.

அப்போது வாசல்கள் திறக்கலாம்.... நம்புவோம். 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, colomban said:

சுதந்திரத்தை பரிகொடுத்தோம் என்று சொல்ல முடியாது. 

நாம் தமிழர் எப்பவும் மத்தவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க விரும்புவோம். ஆகவே நாங்களாவே விட்டுகொடுக்கின்றேம் என்பதே சரி

டொன் யுவான் தர்மபால, போத்துக்கேயரால் தள்ளி விழுத்தி கொல்லப்படுமளவுக்கு காலில் விழுந்து நெருக்கம் காட்டிய அவனது தந்தை புவனேகபாகு.... பற்றி சொல்கிறீர்கள் போலும். 

சிங்களவர்களா? தமிழர்களா?

சங்கிலியனும், பண்டாரவன்னியனும் பிரபாகரனும் போரில் வீழ்ந்தவர்கள்....

இன்னும் சொல்வதானால், கண்டிய அரசின் கடைசி மன்னன் தமிழன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கூட போரில் வீழ்ந்தான். காட்டிக்கொடுத்த துரோகி சிங்களவன் பிலிமத்தலாவ.

மண்டியிடா மானம், தலை வணங்கா வீரம் அது தமிழன் மாண்பு

ஆனாலும் நம்பிக் கெட்டான் தமிழன் என்பதே உண்மை.

1948 சுதந்திரத்தில், சிங்களவனை நம்பி, பிரிட்டிஷ்காரன் சுதந்திரத்தினை அவனிடம் கொடுக்கும் போது நம்பி இருந்து விட்டான்.

பண்டாரவாணியனுக்கு ஒரு காக்கை வன்னியன் 
விக்கிரம ராசசிங்கனுக்கு ஒரு பிலிமத்தலாவை 
பிரபாகரனுக்கு ஒரு கருணா

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, colomban said:

சுதந்திரத்தை பரிகொடுத்தோம் என்று சொல்ல முடியாது. 

நாம் தமிழர் எப்பவும் மத்தவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க விரும்புவோம். ஆகவே நாங்களாவே விட்டுகொடுக்கின்றேம் என்பதே சரி

தமிழனின் மனநிலையை தெளிவாக அடையாளம் கண்டுள்ளீர்கள். கல்லெறிக்கு தயாராக  இருங்கள். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

தமிழனின் மனநிலையை தெளிவாக அடையாளம் கண்டுள்ளீர்கள். கல்லெறிக்கு தயாராக  இருங்கள். 😂

நீங்களுமா? 🙄

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

நீங்களுமா? 🙄

எல்லாம் சுய கழிவிரக்கம்தான். இயலாமை, கோபம், தன்னிலை வெறுப்பு, ஆற்றாமை எல்லாம் ஒருங்கே சேர்ந்து வெளிக்காட்டியுள்ளேன்.

மற்றும்படி எனக்கென்ன, வெளிநாட்டில் நிலத்திலும் காலூன்றாமல், யதார்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல்  கிடந்து தவிக்க விருப்பமா ? 😢

பகலில் ஒரு மெல்லிய ரீசேட், ஒரு டெனிம் ரவுசர், காலில் முள்ளு, முள்ளு டி எஸ் ஐ செருப்பும் சைக்கிளும்,  இரவில் கோரைப் புற் பாய், சிரிய தலையணை, ஒரு சறம் மற்றும் ஒரு யன்னலோரம். இதை தவறவிட்டு நான் படும் தவிப்பு எனக்கு மட்டும்தான் புரியும்🤧

13 hours ago, Nathamuni said:

பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக.

இன்றுள்ள சிங்கள தலைமைகளும் பொம்மைகளே என குறிப்பிட்ட சிங்கள மக்களும் சிறிய அரசியல் தலைமைகளும் நம்புகின்றன. 

1 hour ago, Nathamuni said:

இந்த கோரோனோ பிரச்சனை, பெரும் பொருளாதார தலைவலியாக மாறப்போகின்றது. இதனை, போர்த்துக்கேயர் போலவே சீனா பயன்படுத்திக் கொள்ளப்போகின்றது.

மறுபுறமாக, இந்தியாவுக்கு, அமெரிக்காவுக்கு வேறு வழி இருக்காது.

அப்போது வாசல்கள் திறக்கலாம்.... நம்புவோம். 

உலக பொருளாதாரம் காரணமாக அரசியல் எல்லைகள் மாறும். 

அப்பொழுது, அதை இலாவகமாக செயற்படுத்தி எமது இலட்சியத்தை அடையக்கூடிய தலைமைகள் எமக்குள் இருந்தால் மட்டுமே விடியல் சாத்தியம். தலைமைகளை இனம்கண்டு உருவாக்குதலே மக்கள் பணி.  

3 hours ago, ampanai said:

தமிழக - தமிழீழ அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்புக்கள் மீண்டும் இந்த தொப்புள்கொடி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

அன்றிருந்த அந்த உறவை இல்லாமல் போனதற்கு ஒரு காரணம் இந்தியா என்ற ஒரு நாடு உருவானது. இருந்தாலும், அதையும் தாண்டி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

நல்ல கருத்து!
இந்தியா என்ட பூதம் 1947க்கு பிறகு நிலமைகளை தலைகீழா ஆக்கி வைச்சிருக்கு.
தமிழக மக்களும் யதார்த்தத்தை உணர்ந்தால் முன்னேற்றம் காணலாம்.
சீமான் போன்றாக்கள் முயன்றாலும் இன்னும் பூதத்தை சாடிக்குள் அடைக்கிற அளவுக்கு எழுச்சி வரேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

நல்ல கருத்து!
இந்தியா என்ட பூதம் 1947க்கு பிறகு நிலமைகளை தலைகீழா ஆக்கி வைச்சிருக்கு.
தமிழக மக்களும் யதார்த்தத்தை உணர்ந்தால் முன்னேற்றம் காணலாம்.
சீமான் போன்றாக்கள் முயன்றாலும் இன்னும் பூதத்தை சாடிக்குள் அடைக்கிற அளவுக்கு எழுச்சி வரேல்ல.

வரும். வரும். 👍

அன்னாள் என் வாழ்வின் இனிய பொன்னாள். 😀

எங்களுக்கு தனி நாடு கிடைக்குதோ இல்லையோ, இந்தியா என்கின்ற நாடு உலகின் வரைபடத்திலிருந்து மறைய வேண்டும் 😡

3 minutes ago, Kapithan said:

எங்களுக்கு தனி நாடு கிடைக்குதோ இல்லையோ, இந்தியா என்கின்ற நாடு உலகின் வரைபடத்திலிருந்து மறைய வேண்டும் 😡

அதுக்கு சீன நாடு தொடக்கம் பாகிஸ்தான் வரை நாடுகளும் வேறு அமைப்புக்களும் உண்டு.

ஆகவே, எமது விரலுக்கு ஏற்ப, ச்சீ, எமது வேலையை அதாவது எமது நாட்டுடன் மட்டுமே நிற்போம் !

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

அதுக்கு சீன நாடு தொடக்கம் பாகிஸ்தான் வரை நாடுகளும் வேறு அமைப்புக்களும் உண்டு.

ஆகவே, எமது விரலுக்கு ஏற்ப, ச்சீ, எமது வேலையை அதாவது எமது நாட்டுடன் மட்டுமே நிற்போம் !

என்ர ஆசயச் சொல்லவும் விடமாடீங்களாப்பா ?

இது என்ன ஞாயம். இது என்ன நீதி ? 😀

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையனை வெளியேறு என்டு போட்டு அவனுக்கு முன் போய் அவன்ர நாட்டில இருக்கிற ஆக்கள் தானே நாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

வெள்ளையனை வெளியேறு என்டு போட்டு அவனுக்கு முன் போய் அவன்ர நாட்டில இருக்கிற ஆக்கள் தானே நாங்கள்.

அவன் வந்து 300 வருசம் இருக்கலாம். நாம வந்து 30 வருசம் இருக்கிறது பிழையே.... தெரியாம தானே கேக்கிறேன் 😉

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அவன் வந்து 300 வருசம் இருக்கலாம். நாம வந்து 30 வருசம் இருக்கிறது பிழையே.... தெரியாம தானே கேக்கிறேன் 😉

நான் வந்ததைச் சொல்ல வில்லை.போனதைப்பற்றித்தான்

Edited by சுவைப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் வந்ததைச் சொல்ல வில்லை.போனதைப்பற்றித்தான்

உகாண்டா இடி அமின் அனுப்பினது போல எங்களையும் போகச்சொல்லி, சொன்னா கிளம்பிறோம்.... அதுவரைக்கும் யோசியாதிங்கோ... 😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

புத்தா 🌞

என்னுடைய மனப்பான்மை ஒரு பக்கம் இருக்கட்டும். 

எங்கள் இனம் விடுதலைக்கு தகுதியடைந்து விட்டதா ? 🤔

நேரடியாகவே கூறலாம் அதில் தவறொன்றுமில்லையே 😀

சகல இனமும் விடுதலைக்கு தகுதியுடைது.....இந்த இனம் விடுதலைக்கு தகுதியில்லை என யார் கூற முடியும்....
இன்று இன மக்களை விட வெளி சக்திகள் தான் தீர்மானிக்கின்றன விடுதலை வழங்குவதை பற்றி....வெளிசக்திகளின் நலன் கருதி நாடுகள் உருவாக்கப்பட்டன....உருவாகின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.