Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11420-1-696x320.png

சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இன அழிப்பு அரசு அதைத் தாமாகச் செய்ய வாய்ப்பில்லை.

தமிழ் சிவில் அமைப்புக்களும்/ தமிழ் மக்களும் இதை ஒரு கோரிக்கையாக சிறீலங்கா அரசிடம் முன் வைக்க வேண்டும்.

அவர் ஒரு நோய்க்காவியாக செயற்பட்டது மட்டுமல்ல தனது மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளின் வழி நின்று மருத்துவ விஞ்ஞானத்திற்கு/ பகுத்தறிவுக்கு ஒப்பாத அழைப்புக்களினூடாக தொடர் மனிதப் பேரழிவுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

இது மதப் பிரச்சினை அல்ல – மனிதம் தொடர்பானது.

இன அழிப்பிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள போராடும் இனத்தின் வாழ்வு மீது தொடுக்கப்படும் போர் இது.

கொரோனாவால் உலகமே பேரபாயத்தில் இருக்கும் சூழலில் இவரது உள் நுழைவு பெரும் மனிதப் பேரழிவுக்கு வழி கோலலாம்.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கும் இவர் போன்றவர்களை சிறையில் தள்ளுவதே பொருத்தமானதாகும்.

குறைந்தது இனி தாயகத்திற்குள் நுழையவாவது அனுமதிக்கக் கூடாது.

WWW.VELICHAVEEDU.COM

  • Replies 95
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

என்னைப் பொறுத்தவரை இந்தக் கட்டுரை சகல பாவங்களையும் செய்தவனுக்கு பின்னர் பாவ மன்னிப்பு வழங்குவதுபோல் உள்ளது. அல்லது சகலவிதமான சட்டவிரோத செயல்களையும் செய்துபோட்டு மக்காவுக்கு போய் வந்தால் சரி என்ற மன நிலைக்கு ஈடானதாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.

உண்மையில் இவர்போன்ற பொறுப்பற்றவர்களை உள்ளே வரவிட்டு கைது செய்து மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதற்கு குடியகல்வு குடிவரவுச்  சட்டமும், தேசத் துரோகச் (?) சட்டமும் துணையாகலாம்.  😡

எதுக்கும் ஞானசார தேரருக்கு ஒரு போன் கோல் போட்டால் போதும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மகிந்தருக்கு விசயம் போய், மனிசன் கொதில இருந்ததா கேள்வி. 

உன்தாள் மட்டுமில்லை.... சவூதி ஷேக்குகளும், பணத்தை எறிந்து, ஹிஸ்புல்லா, அதாவுல்லா, றிசாட்டினை வளைத்து சும்மா சாரத்தோட திரிஞ்ச காக்காமாரை, வாகபியலாக்கி, குண்டு வைக்கிற அளவுக்கு கிளப்பி கடைசீல கோத்தாவை ஜனாதிபதி ஆகின்ற நிலைக்கு கொண்டு வந்துட்டார்கள்.

5 hours ago, பெருமாள் said:

அவர் ஒரு நோய்க்காவியாக செயற்பட்டது மட்டுமல்ல தனது மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளின் வழி நின்று மருத்துவ விஞ்ஞானத்திற்கு/ பகுத்தறிவுக்கு ஒப்பாத அழைப்புக்களினூடாக தொடர் மனிதப் பேரழிவுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

இவரை விடாவிட்டால் என்ன ... இன்னொருவரை அனுப்பி வைப்பார்கள் 😉

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா, மன்னார், கிழக்கில் சுமுக நிலை நீடிக்க யாழில் மட்டும் நீடிக்கும் ஊரடங்குக்கு இவர் தான் காரணம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இவரை விடாவிட்டால் என்ன ... இன்னொருவரை அனுப்பி வைப்பார்கள் 😉

யார் அனுப்பி வைப்பார்கள்? இவரா? இந்த அல்லேலுயா சபையே இவர்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

மகிந்தருக்கு விசயம் போய், மனிசன் கொதில இருந்ததா கேள்வி. 

உன்தாள் மட்டுமில்லை.... சவூதி ஷேக்குகளும், பணத்தை எறிந்து, ஹிஸ்புல்லா, அதாவுல்லா, றிசாட்டினை வளைத்து சும்மா சாரத்தோட திரிஞ்ச காக்காமாரை, வாகபியலாக்கி, குண்டு வைக்கிற அளவுக்கு கிளப்பி கடைசீல கோத்தாவை ஜனாதிபதி ஆகின்ற நிலைக்கு கொண்டு வந்துட்டார்கள்.

கோத்தா ஜனாதிபதியாக இருப்பதால்தான் கொரோனாவே கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிரபாகரன் ஆட்சியில் தமிழீழம் சிறந்த நிலையில் இருந்தது. சிங்கள பகுதிகள் அழிந்து போய்க்கொண்டிருந்தன. கோத்தாவின் ஆட்சியில் இலங்கை முழுவதும் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நாட்டுக்கு இராணுவ தலைவர் ஒருவரே பொருத்தமானவராக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

கோத்தா ஜனாதிபதியாக இருப்பதால்தான் கொரோனாவே கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிரபாகரன் ஆட்சியில் தமிழீழம் சிறந்த நிலையில் இருந்தது. சிங்கள பகுதிகள் அழிந்து போய்க்கொண்டிருந்தன. கோத்தாவின் ஆட்சியில் இலங்கை முழுவதும் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நாட்டுக்கு இராணுவ தலைவர் ஒருவரே பொருத்தமானவராக தெரிகிறது.

கோத்தாவிண்ட் பயத்தில அலுவல்கள் நடக்குது.

ஆனால் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கப்போகின்றது. சீனா வட்டிக்கு அள்ளி கொடுத்து, இலங்கை மாட்டிட போகின்றது.

நாட்டின் உல்லாசப்பயண துறை, ஏற்றுமதி துறை பெரும் அடி வாங்கி உள்ளது. மீள்வது மிக கடினம். 

இங்குள்ளவர்க்ளுக்கு வேலை மீண்டும் ஆரம்பித்து, பணம் கையில் புழங்கும் போது தான் ஹாலிடே குறித்து நினைப்பார்கள்.

உலகம் முழுவதும் உல்லாசப்பயண துறை பேரழிவை சந்திக்கும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாய்தொகு

தற்போது வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாயே இலங்கை பொருளாதாரத்தின் பிரதான அங்கமாகியுள்ளது. கல்வி கற்காதோர் முதல், உயர் தரம் கற்றோர் வரை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் எளிதாக தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைந்துள்ளப் படியால், பெரும்பாலானோரின் தெரிவு வெளிநாட்டு வேலை வாய்ப்பாகவே மாறி வருகின்றது. உள்நாட்டில் தொழில் புரிவோரும் அத்தொழில்கள் ஊடாக போதிய வருவாயை ஈட்ட முடியாத நிலையும், இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் விலைவாசி அதிகரிப்பிற்கு முகம் கொடுக்க முடியாத நிலையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுகமாக இலங்கை சமூகம் மாற்றமாகி வருகிறது. இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பெரும்பாலானோர் வீட்டுப் பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்தியக் கிழக்காசிய நாடுகளில் இலட்சக் கணக்காணோர் வீட்டு பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்திய கிழக்காசிய நாடுகளைத் தவிர உலகின் பலவேறு நாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக இலங்கையர் தொழில் புரிகின்றனர். இவ்வாறான வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாகவே தற்போதைய இலங்கையின் பிரதான பொருளாதாரம் ஈட்டப்படுகின்றது.

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கையின்_பொருளாதாரம்

சுவிஸ் போதகர் யாழிற்கு வந்து கொரோனாவை தமிழ் மக்களிடம் பகிர்ந்துவிட்டு பறந்து சென்றுவிட்டார்- சி.வி.

In இலங்கை     April 12, 2020 10:24 am GMT     0 Comments     1733     by : Litharsan

சுவிற்சர்லாந்தில் இருந்துவந்த பாதிரியார் யாழ்ப்பாணத்தில் பல தமிழ் மக்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பகிர்ந்துவிட்டுப் பறந்து சென்றுவிட்டார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்க்ள கொரோனாவின் பிடியில் சிக்கி மரணித்துள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள தமிழ் மக்கள் இடையே கொரோனா வைரஸ் பல இழப்புக்களைக் கொண்டுவருவது பற்றி உங்கள் கருத்தைக் கூற முடியுமா என வாரம் ஒரு கேள்வியில் கேட்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “எமது புலம்பெயர் உறவுகளில் 25 இற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளமை மனவேதனையை அளிக்கிறது. அத்துடன் பல்லாயிரக்கணக்கில் பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களாக தமிழர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழிலும் அடையாளம் கண்டுள்ளோம்.

சுவிற்சர்லாந்தில் இருந்துவந்த பாதிரியார் பல தமிழ் மக்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பகிர்ந்துவிட்டுப் பறந்து சென்றுவிட்டார். அவரின் மத ரீதியான கூட்டத்திற்கு வந்தவர்களைத் தொற்றாளர்களாக்கி இன்று வடமாகாணம் நோய்த் தடுப்புக் காப்புப் பிரதேசமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் 35 வயதுடைய சீனப் பெண்ணொருவர் தென்கொரியாவுக்குச் சென்றார். அங்கு அவர் சிறு விபத்துக்கு உள்ளானார். மருத்துவர்கள் அவரின் காயங்களுக்குக் கட்டுப் போட்டுவிட்டு அவரின் இரத்தத்தைப் பரிசோதனை செய்ய விளைந்தபோது, தான் திடகாத்திரமாக இருப்பதாகக் கூறி பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து கடந்த, பெப்ரவரி 9ஆம் திகதியும் 16ஆம் திகதியும் அவர் தென்கொரியாவில் தேவாலயம் ஒன்றிற்குச் சென்றார். அதன்பின்னர் ஒரு பெரிய விடுதியில் உணவருந்தினார்.

அவர் பின்னர் கொரோனாவால் பீடிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த தேவாலயத்தில் மாத்திரம் 12 ஆயிரம் பேருக்கு அவர் தொற்றைக் கொடுத்திருந்தார். விடுதியிலும் அவரால் பலர் தொற்றுக்கு உள்ளானார்கள்.

தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட சுமார் 9 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர், அதாவது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஒரு நோயாளியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். அப்பெண்ணை தென்கொரிய நோயாளி இலக்கம் 31 என்று அழைக்கின்றார்கள்.

எனவே இந்த நோயின் பரவல் மிகவும் ஆபத்தானது. பத்து நாட்களுக்கு மேல் சுகதேகிகளாக இருந்துவிட்டு திடீரென்று நோய்க்கு ஆளாவார்கள் அந்த சுகதேகிகள்.

எமது தமிழ் புலம்பெயர் உறவுகள் குறிப்பிட்ட காலத்தின்போது தம்மைத் தனிமைப்படுத்தி வைக்கவேண்டிய அவசியத்தை நோயாளி 31இன் கதை வலியுறுத்துகின்றது.

தமிழ் ஈழப் போராட்டத்தின் போது இலட்சக் கணக்கான எம்மவரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இங்கிருந்து ஏற்கனவே எழுந்து சென்றவர்களும் எஞ்சியிருந்தவர்களுள் ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்தவர்களும் இன்று அந்தந்த நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற ஒரு புதிய கண்ணுக்குப் புலப்படாத அரக்கனுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது புலம் பெயர் உறவுகளின் உழைப்பும் விடுதலை செயற்பாடுகளும் எந்த அளவுக்கு வடகிழக்கு மக்களிடையே வேரூன்றி இருக்கின்றன என்பது தெரியாத ஒன்றல்ல. எமது தமிழ் அரசியல் கட்சிகளை உள்நாட்டு கொடையாளர்களிலும் பார்க்க புலம்பெயர் உறவுகளே நிதி கொடுத்து நிமிர்த்தி வைத்திருக்கின்றனர்.

அவர்களின் இழப்பு இங்குள்ள எம்மக்களின் இழப்பே என்று ஊகிப்பதற்கு வெகு நேரம் தேவையில்லை. புலம் பெயர்ந்தோர் இழப்பு எமது தமிழ் தேசத்தின் இழப்பு.

இந்நிலையில், தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதும் வருங்கால வாழ்வைப் புதிதாக வழி அமைத்தலுமே தற்போதைய எமது தலையாய கடன்கள்.

‘நாம் போமளவும் இட்டு உண்டு இரும்’ என்று ஒளவையார் கூறியது போல் நாமும் எமது உறவுகளும் கொரோனா வைரஸ் போமளவும் முடியுமானால் மற்றையோருக்கு இட்டு நாம் வீட்டில் இருந்து உண்டு, கொரோனாவின் வெளிப் பயணத்தைத் துரிதப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சுவிஸ்-போதகர்-யாழிற்கு-வ/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த  மதம் பரப்புற அரைகுறை  கோஷ்டியளை ஊர்ச்சனம் முந்தியொருக்கால் அடிச்சு கலைச்சதிலை ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாய்தொகு

கோத்தா வந்த நேரம் சரியில்லை சொறிலங்காவனுக்கு நாதமுனி இன்றைய பிரச்னையின்  தீவிரத்தை எடுத்து சொல்ல கற்பகத்தரு எப்போவோ விக்கியில் போட்ட அரசபலசான கதையை இங்கு கொண்டுவந்து போடுறார் .

சொறிலங்காவில் விலைவாசி இப்பவே லண்டன் விலையில்தான்  கோத்தாவின் சைனா வின் மீதான பார்வை இன்னும் விலைகளை கூட்டும் ஒழிய குறையாது அதுவும் இந்த உலககோர்னோ அழிவின் பொருளாதார சரிவின் பின் எழும் நிலைமை படு  மோசமானது சொறிலங்காவின் பொருள் விலைகள் ஆகாயத்துக்கு போயிடும்  .

20 hours ago, Nathamuni said:

வவுனியா, மன்னார், கிழக்கில் சுமுக நிலை நீடிக்க யாழில் மட்டும் நீடிக்கும் ஊரடங்குக்கு இவர் தான் காரணம்...

அந்த மதம் பிடிச்சவரால் யாழில் இருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் நிலை மிக மோசமானது சில வீடுகளில் அடுப்பெரிந்ததே  ஒரு கிழமைக்கு மேலாம் இலவச பானை சாப்பிட்டு உயிரை  கையில் பிடித்துக்கொண்டு இருந்து இருக்குதுகள் .

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

வவுனியா, மன்னார், கிழக்கில் சுமுக நிலை நீடிக்க யாழில் மட்டும் நீடிக்கும் ஊரடங்குக்கு இவர் தான் காரணம்...

தமிழரை அழிப்பது என்பது ராஜபக்ஸவாக்களின் முதன்மை குறிக்கோளாகும். கொரோனா இல்லாத காலங்களிலும் நாம் தனிமைப்படுத்தப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டு,  உணவுப்பொருட்கள்  தடுக்கப்பட்டு,  பட்டினி போட்டு அழிக்கப்பட்டோம். நாங்கள் அவர்களுக்கு வாக்குபோட்டால் நிலைமை  மாறும். என்று எண்ணுவோமானால், நாமே நம்மை வலிந்து அடிமை ஆக்குகிறோம் என்பதே உண்மை. பாதிரியார் வந்து கொரோனா பரவியதால்த்தான் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை என்பதெல்லாம்: கோத்தாவின் திட்டத்தை நிறைவேற்ற அதை சரியாக பயன்படுத்துகிறார் என்பதே உண்மை. இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போராட்டம். போதகரை வைத்து அரசியல் சதுரங்கம் விளையாடுகிறார்கள். எங்களில் அநேகர் அவர்களின் எல்லைக்குள் வந்துவிட்டோம். தமிழன் வாழ வேண்டியவனா, தகுதி அற்றவனா? என்பது இந்த விளையாட்டின் முடிவு சொல்லும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

ஏன்யா உங்களுக்கு ஈவு இரக்கமே கிடையாதா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கோத்தா வந்த நேரம் சரியில்லை சொறிலங்காவனுக்கு நாதமுனி இன்றைய பிரச்னையின்  தீவிரத்தை எடுத்து சொல்ல கற்பகத்தரு எப்போவோ விக்கியில் போட்ட அரசபலசான கதையை இங்கு கொண்டுவந்து போடுறார் .

நான் போட்ட தகவலை படிக்காமலே “அரசபலசான கதை”, என்று எழுதியிருப்பதாக தெரிகிறதே? அல்லது படித்தாலும் புரியவில்லையோ?

சுருக்கமாகவும், உங்களுக்கு புரியத்தக்கதாகவும், இதோ:

இலங்கையின் பெருமளவிலான வருமானம், மத்தியகிழக்கிலும், வேறுநாடுகளிலும் வீட்டுப்பணியாளர்களாக வேலை செய்பவர்களிடம் இருந்து வருகிறது.

இது  “அரசபலசான கதை” என்றால், உங்களுடைய சரியான இன்றைய தகவலின்படி, இலங்கையின் பெருமளவிலான வருமானம் எதிலிருந்து வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

போர்க்காலத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேலையாட்களிடம் இருந்து வந்த பணமே முன்னிடத்தில் இருந்தது.

மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து வரும் பணம் பெரும்பாலும் வங்கிகளிடூடே வருகிறது. அவர்களுக்கு, அதாவது அரேபி முதலாளிக்கு உண்டியல் பார்டிகளிடம் போக நேரமும் இல்லை. தேவையும் இல்லை.

அதனால் அதுவே பெரிய வருமானமாக மத்திய வங்கி பினாத்துகிறது. ஆனால் உண்டியல் பார்ட்டிகள் மூலமாக, மேலை நாடுகளில் இருந்து போகும் பணம் கணக்கில் இல்லை.

போர் முடிந்த பின்னர், மெல்ல ஏறி வந்த இலங்கையின் உல்லாசப்பயணத்துறையில் இருந்து தான் பெரிய வருமானம் கிடைத்தது.  ஈஸ்டர் குண்டு வெடிப்பு பின் இது விழ, பழைய படி மத்திய கிழக்கு வருமானம் என்கிறார்கள்.

ஆனால் முக்கிய பிரச்னை என்னவென்றால், மத்திய கிழக்கிலும் கொரோன பிரச்னை இருப்பதால், அவர்களும் வேலையாட்களின் சம்பளம் கொடுக்க முன்வரவேண்டும் என்பதுதான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

ஆனால் உண்டியல் பார்ட்டிகள் மூலமாக, மேலை நாடுகளில் இருந்து போகும் பணம் கணக்கில் இல்லை.

இந்த உண்டியல் பார்ட்டிகள் மூலமாக, மேலை நாடுகளில் இருந்து போகும் பணம், யார் அனுப்பும் பணம்?  அது தொடர்ந்தும் போகுமா? குறைவடையுமா?

12 minutes ago, Nathamuni said:

.போர் முடிந்த பின்னர், மெல்ல ஏறி வந்த இலங்கையின் உல்லாசப்பயணத்துறையில் இருந்து தான் பெரிய வருமானம் கிடைத்தது.  

அது மத்தியவங்கியின் கணக்கெடுப்பில் இடம்பெறவில்லையா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

இந்த உண்டியல் பார்ட்டிகள் மூலமாக, மேலை நாடுகளில் இருந்து போகும் பணம், யார் அனுப்பும் பணம்?

அது மத்தியவங்கியின் கணக்கெடுப்பில் இடம்பெறவில்லையா?

முதலில் மேலை நாடுகளில் ஏன் உண்டியல் முதலாளி மாரை தடை செய்யாமல், regulate பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? பின்னர் எனது பதிலை தருகிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

முதலில் மேலை நாடுகளில் ஏன் உண்டியல் முதலாளி மாரை தடை செய்யாமல், regulate பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? பின்னர் எனது பதிலை தருகிறேன்.
 
இருபது வருடங்களுக்கு முதல் ஒருமுறை இந்த உண்டியலை பயன்படுத்தி இருக்கிறேன். இப்போது TransferWise, Zoon போன்றவை தான். உண்டியல் இந்த நாடுகளுக்கு புதியதோ சட்டவிரோதமானதோ அல்ல. Western Union போன்ற பாரிய நிறுவனங்கள் வழங்கும் அதே சேவையை மலிவாக வழங்கும் சிறிய வணிகர்களே உண்டியல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கற்பகதரு said:

இருபது வருடங்களுக்கு முதல் ஒருமுறை இந்த உண்டியலை பயன்படுத்தி இருக்கிறேன். இப்போது TransferWise, Zoon போன்றவை தான். உண்டியல் இந்த நாடுகளுக்கு புதியதோ சட்டவிரோதமானதோ அல்ல. Western Union போன்ற பாரிய நிறுவனங்கள் வழங்கும் அதே சேவையை மலிவாக வழங்கும் சிறிய வணிகர்களே உண்டியல்கள்.

நான் கேட்டதுக்கு பதில் தரவில்லையே ஐயா...

உண்டியல்கள் சட்ட ரீதியானது தான்.

ஆனாலும், கறுப்பு பணத்தினை டீல் செய்யும் அந்த முறையினை ஏன் அனுமதித்து சட்ட ரீதியாகி வைத்துர்க்கிறார்கள் என்பதே எனது கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான் கேட்டதுக்கு பதில் தரவில்லையே ஐயா...

உண்டியல்கள் சட்ட ரீதியானது தான்.

ஆனாலும், கறுப்பு பணத்தினை டீல் செய்யும் அந்த முறையினை ஏன் அனுமதித்து சட்ட ரீதியாகி வைத்துர்க்கிறார்கள் என்பதே எனது கேள்வி?

  1. கறுப்பு பணம் என்று எதை கூறுகிறீர்கள்?
  2. உண்டியல்கள் மட்டுமா கறுப்பு பணத்தினை டீல் செய்கின்றன? வங்கிகள், பங்கு சந்தைகள், தனியார் முதலீடுகள் போன்றவை கறுப்பு பணத்தினை டீல் செய்வதில்லையா?

மக்கள் தமது கடின உழைப்பினை, வங்கிவசதிகள் குறைவாக உள்ள நாடுகளுக்கு அனுப்ப Western Union, மற்றும் உண்டியல்கள் உதவுகின்றன. சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் உண்டில்களுக்கு ஊடாகவும், Bitcoin ஊடாகவும் ஒப்பீட்டளவில் இலகுவாக இடம் பெறுகின்றன. ஆனால் பதிவு செய்யப்பட்ட வணிகங்களான உண்டியல்களின் பணப்பரிமாற்றம் அரசாங்கங்களால் கவனமாக அவதானிக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் சட்டவிரோத பணப்பரிமற்றங்களை இடம்பெற விட்டு, யார் யாருக்கு, எதற்காக, எவ்வளவு பணத்தை எத்தனை முறை அனுப்புகிறார்கள் எனபதை புலனாய்வு துறைகள் அவதானிக்கின்றன. இந்த ஆதாரங்களை வைத்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் சட்டவிரோத அமைப்புகளின் பெரும் தலைவர்களை ஆதாரங்களுடன் அமுக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

நான் கேட்டது என்னவோ, நீஙகள் சுத்தி வலைத்து சொல்வது வேறு என்னவோ..

சரி உத விட்டுட்டு, நகருவம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் .

இவ்வளவு குத்தி முறியிரம் இன்னும் காணாது காணாது என்று ஆடுகினம் இன்று லண்டனில் மதம் பரப்பிய கோஸ்ட்டிக்கு நடந்த கதை கீழ் இணைப்பில் .

நாதமுனி உங்கட இடம்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் .

இவ்வளவு குத்தி முறியிரம் இன்னும் காணாது காணாது என்று ஆடுகினம் இன்று லண்டனில் மதம் பரப்பிய கோஸ்ட்டிக்கு நடந்த கதை கீழ் இணைப்பில் .

நாதமுனி உங்கட இடம்தான் .

உதே ஊரில் என்றால்  மாமாக்கள் சிலுவையை புடுங்கி அதாலே  அடி  கொடுத்திருப்பார்கள் 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் .

இவ்வளவு குத்தி முறியிரம் இன்னும் காணாது காணாது என்று ஆடுகினம் இன்று லண்டனில் மதம் பரப்பிய கோஸ்ட்டிக்கு நடந்த கதை கீழ் இணைப்பில் .

நாதமுனி உங்கட இடம்தான் .

ஒவ்வொரு நகர சபைகளும் தங்களுக்கென உப சட்டங்களை (By law) உருவாக்கிக் கொள்ள அதிகாரமுள்ளது. அந்த சட்டங்களை மீறும்போது எச்சரிக்கப் படுகிறார்கள் அதனை உதாசீனம் செய்யும்போது கைது செய்யப்படுகிறார்கள். இங்கே கைது செய்யப்பட்டதற்கான காரணம் மதம் பரப்புதலல்ல. 🤥

எங்களுக்கு சட்டமும் தெரியாது, அதனை மீறும்போது கொடுக்கப்படும் விளக்கத்தையும் புரிந்துகொள்ள முனைவதில்லை.☹️

பொலிசார்தான் பரிதாபத்திற்குரியவர்கள்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.