Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அனைவரும்,வெளிநாட்டுப் பணத்தை, இலங்கையில் வைப்பிலிட முடியும்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bank-Ac-720x450.jpg

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அனைவரும்,வெளிநாட்டுப் பணத்தை, இலங்கையில் வைப்பிலிட முடியும்…

நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது விசேட வைப்புக் கணக்கு என பெயரிடப்பட்டுள்ளது. புதிய கணக்கு தற்காலிக அல்லது நிலையான வைப்புகளை செய்யக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும் இலங்கையர்களுக்கும் இரட்டை பிராஜா உரிமையுள்ளவர்களுக்கும் ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்களுக்கும் இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளில் தாபிக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நிதியங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளுக்கும் மற்றும் இலங்கையின் அபிவிருத்தியை விரும்பும் எந்த ஒருவருக்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் விசேட வைப்புக் கணக்கை திறக்க முடியும்.

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை வகுப்பு அமைச்சினால் ஏப்ரல் 08ஆம் திகதி அரசாங்கத்தின் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் புதிய வைப்பு சம்பந்தமான சட்டதிட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வெளியே வெளிநாட்டு பண வைப்பு அல்லது முதலீட்டை பேணி வரும் அனைத்து இலங்கை வர்த்தக சமூகத்திற்கும், கம்பனி உரிமையாளர்களுக்கும் இலங்கையின் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் தமது வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி தம்மிடமுள்ள நிதியங்களின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்ப முடியும்.

புதிய கணக்கில் வைப்பிலிடக் கூடிய பணத்தின் அளவுக்கு ஆகக்குறைந்த எல்லை இல்லை. வைப்பொன்றுக்கான குறைந்த காலம் 06 மாதங்களாகும். சாதாரண வெளிநாட்டு பண வைப்புக்கு வழங்கப்படும் வட்டியைப் பார்க்கிலும் அதிக வட்டி வீதம் வைப்புகளுக்கான தவணை முடிவில் வழங்கப்படும். அந்த வகையில் 06மாத விசேட வைப்புக் கணக்கிற்கு 1வீதமும் 12 மாத வைப்பொன்றுக்கு 2வீதமும் அதிக வட்டி உரித்தாகும். வைப்புகளின் தவணை முடிவில் அதிலுள்ள பணத்தை தடையின்றி வேறு நிதிக்கு மாற்றுவதற்கும் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி உள்ளது.

அனைத்து வைப்புகளும் வரி மற்றும் அந்நியச் செலாவணி சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். வைப்புகளுக்கு வங்கியின் இரகசிய ஏற்பாடுகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கணக்கு உரிமையாளர்களுக்கு கிடைக்கும் அதிக நன்மைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் 2020 வரவு செலவுத்திட்ட ஆவணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர், யூரோ, ஸ்டர்லின் பவுன், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், சுவீடன் குரோனர், சுவிஸ் பிராங்க், கனடா டொலர், ஹொங்கொங் டொலர், ஜப்பான் யென், டென்மார்க் குரோனர், நோர்வே குரோனர், சீன ரென்மின்பி மற்றும் நியூசிலாந்து டொலர் என்பன விசேட கணக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் பணங்களாகும்.

விசேட வைப்புக் கணக்கு குறித்த மேலதிக விபரங்களை ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி அல்லது இலங்கையின் தூதுவராலயங்களின் இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். கொவிட் 19 நிவாரண, சமூகப் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு இலங்கையின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கையை-பூர்வீகமாகக்-கொ/

  • கருத்துக்கள உறவுகள்

“வைப்புகளின் தவணை முடிவில் அதிலுள்ள பணத்தை தடையின்றி வேறு நிதிக்கு மாற்றுவதற்கும் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி உள்ளது.”

இது சாத்தியமான ஒன்றாக இருக்குமா தெரியவில்லை.. இலங்கையிலிருந்து பணத்தை வெளியே கொண்டு செல்வதற்கான வரைமுறையில் அதிக மாற்றம் வரமாட்டாது.. மறைமுகமான சில நிபந்தனைகளை விதிக்கலாம்.

இலங்கையில் Capital Transactions Rupee Account(General Instructions Circular No: 1284/2018) என்றும் Personal Foreign Currency Account(General Instructions Circular No: 1279/2018) என்றும் இலங்கைப்பிரஜைகள், இரட்டைகுடியுரிமை பெற்றவர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போன்றோருக்காக இந்த இரண்டு புதிய வங்கிகணக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்(2018 காலப்பகுதி எனநினைக்கிறேன்). இந்த இரண்டு புதியகணக்குகளின் நோக்கம் இலங்கையில் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்க, ஆனாலும் வருடத்திற்கு     அமெரிக்க டொலர்கள் $30,000 மட்டுமே அனுமதிபெற்று வெளிநாடுகளுக்கு கொண்டுவரலாம். 

இந்த இரண்டு கணக்குகளையும் மீளாய்வு செய்து, அவற்றிற்கு சில புதிய அம்சங்களை சேர்த்து இந்த விசேட வங்கிக்கணக்கை அறிமுகம் செய்கிறார்கள் என நினைக்கிறேன். 

ஆகையால்தான், “வைப்புகளின் தவணை முடிவில் அதிலுள்ள பணத்தை தடையின்றி வேறு நிதிக்கு மாற்றுவதற்கும் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி உள்ளது.” என்பதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது.

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

இது ஆட்சியில் இருக்கும் சிங்கள-பௌத்த மிலேச்ச போர்க்குற்றவாளிகளின் பல நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையாக தெரிகிறது.  

இது சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகள் தாம் கொள்ளையடித்த பெருமளவு பணத்தை இடம்மாற்ற உதவும்.

அதே நேரம் ஏமாந்த புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை நயவஞ்சகமாக கொள்ளையடிக்கும் திட்டமாகவும் இருக்கும்.

தமிழர்கள் இது போன்ற சதிவலைகளில் சிக்காமல் இருப்பதே விவேகமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 வடக்கு கிழக்கில் சிறிய நடுத்தர கைத்தொழிகள் புலம்பெயர்ந்தவர்களாலும், புலம்பெயர்ந்தவர்களின் அனுசரனையுடனும் நடைபெறுகிறது, எதிர்காலத்திலும் இதற்கான தேவை உள்ளது. அப்படியானவர்கள் இப்படியான வங்கி கணக்குகளை அவற்றை பற்றி அதன் நன்மைதீமை பற்றி தெரிந்து அறிவுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தினால் பயன்பெறுவது எங்கள் சமூகமும்தான்.

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2020 at 11:09, தமிழ் சிறி said:

கொவிட் 19 நிவாரண, சமூகப் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு இலங்கையின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

என்னதான் கூவி கூவி அழைத்தாலும் வெளிநாட்டிலும் அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப அவர்களே இப்போ லொக் றவுனில் இருக்கினம்.

wZfadf.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

On 12/4/2020 at 01:39, தமிழ் சிறி said:

நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும் இலங்கையர்களுக்கும் இரட்டை பிராஜா உரிமையுள்ளவர்களுக்கும் ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்களுக்கும் இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளில் தாபிக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நிதியங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளுக்கும் மற்றும் இலங்கையின் அபிவிருத்தியை விரும்பும் எந்த ஒருவருக்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் விசேட வைப்புக் கணக்கை திறக்க முடியும்.

திடீர் அக்கறை? - காரணம் பணம் தேவை, அதிலும் அந்நிய செலவாணி 

இலக்கு வைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள் ? யுத்த காலத்தில் பல நூறு மில்லியன்களை ( ரூபாய்களை) சுருட்டியது சிங்களம். ஆக, மீண்டும் ஏமாறாமல் இருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2020 at 09:47, பிரபா சிதம்பரநாதன் said:

வைப்புகளின் தவணை முடிவில் அதிலுள்ள பணத்தை தடையின்றி வேறு நிதிக்கு மாற்றுவதற்கும் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி உள்ளது.” என்பதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது.

எனது உறவினர் ஒருவர் துபாயில் வேலை செய்த போது  Non Resident Foreign  currency Account அமெரிக்க டொலரில் இலங்கயில் வைத்திருந்தார். அவர் கனடாவில் குடியேறிய பின் அந்த கணக்கில் இருந்த பெரும் தொகையை பிரச்சனை இல்லஈமல் கனடாவுக்கு பெற்று கொண்டார்.
இலங்கைக்கு அடிக்கடி வந்து போகும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற தமிழர்கள் ரூபாவில் கணக்கு திறக்க விரும்பியும்  இலங்கை குடியுரிமை இல்லாததால் திறக்க முடியாமல் இருந்தது.  அவர்களுக்கு Capital Transactions Rupee Account உதவியாக இருக்கும்.

17 hours ago, ampanai said:

திடீர் அக்கறை? - காரணம் பணம் தேவை, அதிலும் அந்நிய செலவாணி 

இலக்கு வைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள் ? யுத்த காலத்தில் பல நூறு மில்லியன்களை ( ரூபாய்களை) சுருட்டியது சிங்களம். ஆக, மீண்டும் ஏமாறாமல் இருக்கவேண்டும். 

அதான் நடக்குது!

மோட்டுத் தமிழர் இதுக்குள்ள சிக்குப்படலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனது உறவினர் ஒருவர் துபாயில் வேலை செய்த போது  Non Resident Foreign  currency Account அமெரிக்க டொலரில் இலங்கயில் வைத்திருந்தார். அவர் கனடாவில் குடியேறிய பின் அந்த கணக்கில் இருந்த பெரும் தொகையை பிரச்சனை இல்லஈமல் கனடாவுக்கு பெற்று கொண்டார்.
இலங்கைக்கு அடிக்கடி வந்து போகும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற தமிழர்கள் ரூபாவில் கணக்கு திறக்க விரும்பியும்  இலங்கை குடியுரிமை இல்லாததால் திறக்க முடியாமல் இருந்தது.  அவர்களுக்கு Capital Transactions Rupee Account உதவியாக இருக்கும்.

இப்பொழுது NRFC கணக்குகளை இந்த Personal Foreign Currency Accountற்குள் கொண்டுவந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்..

large.7748E8A4-629A-44AE-BE0C-CB14D1DB834E.jpeg.05783cfbe60d2294e50ff8dc694a0dfc.jpeg

உங்களது உறவினர், இலங்கை மத்திய வங்கியின் அனுமதிபெற்று பணத்தை எடுத்து சென்றிருக்கலாம், ஆனால் அதுவும் பின்பு US$150,000 மட்டுமே கொண்டு செல்லாலம் என கூறப்பட்டது(நான் அறிந்தவரையில்).. 

அதேபோல இந்த Capital Transactions Rupee Account அறிமுகப்படுத்தப்பட்ட போது, முதலாவது தரம் US $200,000, பின்பு வருடத்திற்கு US$30,000. மட்டுமே கொண்டு செல்லாலம் என இருந்தது.

large.56A5A39B-EC2E-4AEC-91BE-64625B5AAFA5.jpeg.7afead8311c0a0d720a98964f8cccf43.jpeg

ஆனால் அதுவும் இந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் முதலாம் தரமும் US$30,000 மட்டுமே கொண்டு செல்லாலம் என உள்ளது.  

அவர்களுடைய press releaseஐ பார்த்தீர்களானால் - Fixed Deposits only என்றுதான் உள்ளது. அதிலுள்ள நன்மை தீமைகளையும் தெரிந்து இருந்தால் நல்லது.

அதே போல நீங்கள் கூறியது போல. CTRA , வெளிநாட்டில் வதியும்  இலங்கையர், இரட்டை குடியுரிமை பெற்ற இலங்கையர், வெளிநாட்டினர் ஆனால் இலங்கை வம்சாவளி, இலங்கையில் முதலீடு செய்ய அனுமதி பெற்ற கம்பனிகளுக்காக உருவாக்கப்பட்டது..

ஆகையால் இந்த விசேட வங்கி கணக்கும் அதன் தன்மைகளும் பின்னாளில் மாற்றப்படலாம்

http://www.dfe.lk/web/images/rdevelopment/7493fcd02734123bd9345647d7230e7b-Department-of-Trade-and-Investment-Policy---Foreign-Exchange-regulations--Act-No. 12 of 2017-E.pdf

https://www.cbsl.gov.lk/en/node/7713

5 hours ago, Rajesh said:

அதான் நடக்குது!

மோட்டுத் தமிழர் இதுக்குள்ள சிக்குப்படலாம்!

இலங்கை பொருளாதாரம்  தமிழரை நம்பி இல்லை. அதே போல் தமிழர் மட்டுமா வெளி நாட்டில் வசிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2020 at 13:39, தமிழ் சிறி said:

அமெரிக்க டொலர், யூரோ, ஸ்டர்லின் பவுன், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், சுவீடன் குரோனர், சுவிஸ் பிராங்க், கனடா டொலர், ஹொங்கொங் டொலர், ஜப்பான் யென், டென்மார்க் குரோனர், நோர்வே குரோனர், சீன ரென்மின்பி மற்றும் நியூசிலாந்து டொலர் என்பன விசேட கணக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் பணங்களாகும்.

விசேட வைப்புக் கணக்கு குறித்த மேலதிக விபரங்களை ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி அல்லது இலங்கையின் தூதுவராலயங்களின் இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். கொவிட் 19 நிவாரண, சமூகப் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு இலங்கையின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்நாட்டில் திறைசேரி  காலி ...ஊழியர் சேம லாப நிதியம்  கொஞ்சம் கொழுத்து போய் இருக்கு 
அதிலும் ஏற்கனவே கொஞ்சம் சுரண்டியாச்சு, மேலும் சுரண்ட ஆரம்பித்தால் தனியார் துறை ஊழியர்கள் கொதித்தெழ தொடங்கிடுவார்கள், ஆனாலும் கப்ஸா கப்ராலுக்கும்  மகிந்த அப்பச்சிக்கும் கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கு, போதாக்குறைக்கு கொரோனா காட்டு காட்டு என்று காட்டியதில் மொத்தப்பொருளாதாரமும் அம்பேல் , போகிற போக்கை பார்த்தால்  கொரோனா முடிந்ததும் நாட்டுக்காக மூன்று வேளையும் விரதம் இருப்போம் என்று கோத்தா வீர உரையாற்றினாலும் ஆச்சரியமில்லை , எப்படியாவது கஷ்ட்டப்பட்டு  கிடைத்த பதவியை ஓட்ட வேண்டுமே ,கையில் வேற  ஒரு சதமும் இல்லாமல் போகப்போகுது, அதற்கு வறுக கிடைத்த வழி தான் உந்த பெசல் வங்கிக்கணக்கு , முதலையின் வாயிற்குள் கையை விடப்போறியாளா ...? தலையை விடப்போறியாளா ...?
பணத்தை மட்டும் போட்டுப்பாருங்கள் அதுக்கப்புறம் தெரியும் ,வங்கி அள்ளித்தரும் Extra 1 % வட்டியில் பூரித்து புளங்காகிதமடைந்து வட்டி பணத்தை எண்ணி முடிக்கும்முன் முதல் அபேஸ் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2020 at 04:12, Rajesh said:

அதான் நடக்குது!

மோட்டுத் தமிழர் இதுக்குள்ள சிக்குப்படலாம்!

இலங்கையில் வாழுகின்ற தமிழர்களில் மிக பெரும்பான்மையோர் தங்களது பணத்தை தலையணைக்குள்ளும் வைத்திருந்தும் வட்டிக்கு இன்னொருவரிடம் கொடுத்தும் தான் பயன் அடைகின்றனர் என்றா நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்?

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் வாழுகின்ற தமிழர்களில் மிக பெரும்பான்மையோர் தங்களது பணத்தை தலையணைக்குள்ளும் வைத்திருந்தும் வட்டிக்கு இன்னொருவரிடம் கொடுத்தும் தான் பயன் அடைகின்றனர் என்றா நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்?

விளங்கநினைப்பவரே! சரியா விளங்காதமாதிரி கேள்வி கேட்டிருக்கீங்க.

On 14/4/2020 at 03:17, Dash said:

இலங்கை பொருளாதாரம்  தமிழரை நம்பி இல்லை. அதே போல் தமிழர் மட்டுமா வெளி நாட்டில் வசிக்கின்றனர்.

ஆக குறைந்தது மலையக மக்களின் நலன்களை கூட கவனிக்க மறுக்கும் இனவாத அரசு. இலங்கையின் பொருளாதாரம் கணிசமான அளவு மலையக மக்களில் தங்கி உள்ளது. 

புலம்பெயர் சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் உதவும் மக்கள் தான். ஆனால், மகிந்த கூட்டம் பல தடவைகள் புலம்பெயர் தமிழர்களிடம் உதவிகள் கேட்டு வந்த வண்ணம் உள்ளது. 

புலம்பெயர் தமிழர் தரப்பு தம்மிடம் 10 பில்லியன்கள் அமெரிக்க பணம் உள்ளது. வடக்கு கிழக்கை மாகாண சுயாட்ச்சியை காணி, காவல் மற்றும் பொருளாதார உரிமைகளுடன் தாருங்கள் என்று கேட்டால் சிங்களம் விடுமா? ஆனால், சீனாவிற்கு கொடுக்கின்றது, நாட்டை 

  • கருத்துக்கள உறவுகள்

யாரைப் பிடித்தால் பணம் கறக்கலாம் எண்டு யோசிக்கிறாங்கய்யா.

  • கருத்துக்கள உறவுகள்

கொரானோ வைரசை விட மோசமாக ஆட்களை விழுங்கக் கூடிய பொறி....எலக்சனில் தோல்வி அடைத இரவில் 900 மில்லியன் ரூபாயை தது மடியில் சுட்டிக்கொண்டு அமெரிக்கா பறந்த பசிலைக் கொண்ட கட்சி...அவசரம்அவசரமாக அலரிமாளிகையில் கட்டு கட்டாக பணத்தை பொறுக்காமல் ஓடிய கூட்டத்தின் கட்சி...என்ன் செய்யும் என்று தெரியும்தானே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.