Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2020 at 04:36, Kapithan said:

ஒரு திரியில் குமாரசாமியர் ""நீர் ஊரில் என்ன சாதி"" என்று கேட்டிருந்தாரே அப்போது நீங்களெல்லோரும் எங்கே ஓடி ஒழிந்தீர்கள் 

 கபித்தான்!   வேறெங்காவது இதை கேள்விப்பட்டிருந்தால் நான் நம்பியிருக்கவே மாட்டேன். வம்புக்கு விதண்டாவாதம் பண்ணுபவர்களுடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை. இது ஊறிப்போன ஒரு எண்ணம். குமாரசாமி அப்படி கேட்டு எழுதியிருந்தால் நிர்வாகம் அதை அனுமதிக்காது தூக்கி இருக்கலாம். அனுமதித்ததென்றால் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது: சாதியும், சமயமும் முக்கியமான இடத்தில் அது தவிர்த்துதான் நாம் கருத்து எழுத முடியும். நான் எந்த மதவாதமும் பேசவில்லை. ஒருவரது இயலாமையில் பங்கெடுக்காது இழிவு படுத்தியது பற்றியும், சில தவறான கருத்துக்களுக்கும் விளக்கம் கொடுத்தேன். ஆனால் இது வெறும் மதவாதமாக திசை மாறிப்  பல பேரை காயப்படுத்தும் அளவுக்கு போய்க் கொண்டிருக்குது. பலபேர் கூடி நின்னு போடும் கூச்சலில் உங்களின் தனித்த குரலால் எந்த மாற்றமும் நிகழாது. அது கொரோனாவாலும் முடியாது. நன்றி வணக்கம். 

  • Replies 149
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் என்ன மாதிரி ? நீங்களும் உங்கள் பக்கம் பிழை என்று தெரிந்து,நீங்கள் எழுதுவது மட்டும் தான் சரி என்று நினைக்கிறீர்கள் பாருங்கள் அது பிழையில்லையா?
1) உங்களைப் போல ஆட்களுடன் தேவையில்லாமல் கருத்து எழுதி பயன் இல்லை என்பதால் தான் பலர் ஒதுங்கிப் போயினம்.

2) ஊருக்கு போகும் போதே தெரிந்தே  நாட்டுக்குள் குரோனாவை கொண்டு போன போதகரையும் அங்கு நின்று 1,2 நிமிடங்கள் சாமி கும்பிட்ட மக்களையும் ஒரே தராசில் வைக்கிறீர்கள் ....அங்க நிக்கிறிர்கள் .

3) நீங்கள் கிறிஸ்தவர் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்...இதை நாங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை...தவிர,  நீங்கள் இந்துவாக /அல்லேலுயாவாக அல்லது நாத்தீகனாய் இருந்தால்  கூட ( 4) எங்கள் கருத்து இது தான் 

1)அவர்கள் பயன் இல்லை என்று ஒதுங்கவில்லை. தோலுரித்துக் காட்டப்பட்டுவிடுவோம் என்கின்ற பயத்தில் குதிக்கால் பிடறியில்  அடிபட ஓடுகின்றனர்.😂

2) அடக் கடவுளே, மிகச் சாதாரணமாக இரு வரியில்  எழுதப்பட்ட ஒரு பின்னூட்டத்தைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத ஆட்களா நீங்கள். 🤥 இது முதலே தெரிந்திருந்தால் நான் இவ்வளவு காட்டமாக நின்றிருக்க மாட்டேனே. 🤧 . என்னை மன்னித்துவிடுங்கள் அக்கா 😭😭

3) நீங்கள் பிரதேசவாதம் பேசாத, பார்க்காத, சாதி பார்க்காத அல்லது பேசாத , மதத் துவாசமில்லாத ஆட்கள் என்று நீங்கள் சொல்லும்போது நாங்கள் நம்புகிறோம் அல்லவா . 😂 அதுபோல் நான் கிறீத்துவன் என்று  கூறும்போது நீங்களும் நம்பித்தானாக வேண்டும். வேறு வழியில்லை.😎

4) எப்போது தொடக்கம் ரதி அக்கா எல்லோரையும் பிரதிநிதித்துவம் செய்யத் தொடங்கினீர்கள். Retainer agreement எல்லாம்   sign பண்ணியாச்சா ? 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 கபித்தான்!   வேறெங்காவது இதை கேள்விப்பட்டிருந்தால் நான் நம்பியிருக்கவே மாட்டேன். வம்புக்கு விதண்டாவாதம் பண்ணுபவர்களுடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை. இது ஊறிப்போன ஒரு எண்ணம். குமாரசாமி அப்படி கேட்டு எழுதியிருந்தால் நிர்வாகம் அதை அனுமதிக்காது தூக்கி இருக்கலாம். அனுமதித்ததென்றால் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது: சாதியும், சமயமும் முக்கியமான இடத்தில் அது தவிர்த்துதான் நாம் கருத்து எழுத முடியும். நான் எந்த மதவாதமும் பேசவில்லை. ஒருவரது இயலாமையில் பங்கெடுக்காது இழிவு படுத்தியது பற்றியும், சில தவறான கருத்துக்களுக்கும் விளக்கம் கொடுத்தேன். ஆனால் இது வெறும் மதவாதமாக திசை மாறிப்  பல பேரை காயப்படுத்தும் அளவுக்கு போய்க் கொண்டிருக்குது.  பலபேர் கூடி நின்னு போடும் கூச்சலில் உங்களின் தனித்த குரலால் எந்த மாற்றமும் நிகழாது. அது கொரோனாவாலும் முடியாது. நன்றி வணக்கம். 

Saran ,

வெளிநாடுகளில் இனவெறுப்பை கக்கும் ரெளடிகளுக்கு எதிராக   (Racism ) கோபத்தை வெளிக்காட்டாமல் வெறுமனே வாயைப் பொத்திக்கொண்டா போகிறோம் ? இல்லையே. 😀

ஆக இவர்களெல்லாம் உள்ளூர்          தானே. குரலைக் கொஞ்சம் உரத்துக் கொடுத்தாலே போதும்  தானாக அடங்குவார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தால் வெட்டியாட முடியாவிட்டால், சிலர்  ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சனைகளை கொண்டு வந்து சக மனிதனை அவமானப் படுத்துவது எதிர்பாராத ஒன்று.  என்னைப்பொறுத்தவரையில் அது அவர்களுக்குரிய இடமாகத்தான் தெரிகிறது. சொல்ல வந்ததை சொல்லி விட்டு நகருவோம். இந்தத் திரியில் சில நல்ல எழுத்தாளர்களின் பக்குவத்தையும் கண்டேன். சிலரின் அடாவடி நிஞாயங்களையும் கண்டேன். கிறிஸ்தவத்துக்காக வாதாடும் பலர் கிறிஸ்தவர்கள் இல்லை. அதேபோல் சைவத்துக்காக வாதிடுவோரும் சைவரும் இல்லை. நிஞாயத்துக்காகவும், தாம் தான் பெரிது என்றும் வாதாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

உண்மையில் நான் கிரீத்துவர்களுக்காக வாதாடவில்லை. எனது இனத்தைச் சேர்ந்த, நொந்துபோயுள்ள சக மனிதருக்காக சற்றுக் குரல் கொடுக்கிறேன். மதமாறிய காரணத்தால்  இழிவுபடுத்தப்படும் மனிதர்களுக்காக வாதாடுகிறேன். அவர்களின் துயர் துடைக்கப்படும்போது மத மாற்றம் நடைபெறும் தேவை குறையும் என்று சொல்கிறேன்.

மத மாற்றத்திற்கு சந்தர்ப்பமுள்ள எளிய சைவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுங்கள் என்று கூறுகிறேன்.  

ஆனால் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான். ☹️

ஆனால் என் சக மணிதன் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் இழிவு படுத்தப்படுவதை சகிக்க முடியாது. 😡

  • கருத்துக்கள உறவுகள்

ம் என்னத்தை சொல்வது. காலத்துக்கு காலம் காட்சிகள் மாறுகின்றன.

ஈழம்24/7 எனும் பெயரில் ஒரு தளத்தில் இப்படி ஒரு செய்தி.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!

ஏதோ நெருடுகின்றது.

ஆட்களை வடிகட்டி பகுப்பு செய்ய தொடங்கினால் இன்னும் எவ்வளவோ சரக்குகள் வெளியில் வரும்.

மனதில் உள்ளவிடயங்களை உள்ளே வைத்து வேகவிடாமல் வெளியில் பகிர்ந்துகொள்வது நல்லவிசயமே ஒரு வகையில்.

On 16/4/2020 at 04:54, Eppothum Thamizhan said:

கிறீஸ்தவன் என்ன பௌத்தன், இஸ்லாமியன் எல்லோருமே சைவசமயத்தவனை விமர்சிக்கலாம் ஆனால் ஒன்றுக்கும் உதவாத அல்லுலோயா கூட்டங்களுக்கு அந்த தகுதியில்லை!!

அது என்ன அல்லேலூயா கூடடம்। அரோகரா கூடடம் இருக்கலாம், அல்லாஹு அக்பர் கூடடம் இருக்கலாம் , சாது சாது கூடடம் இருக்கலாம் அல்லேலூயா கூடடம் இருக்க கூடாதோ?

எமது கத்தோலிக்க சமயத்திலும் இப்போது அல்லேலூயா கூட்டம் இல்லாமல் இல்லை। எமது பாதர்மார் அநேகமாக இதைத்தான் பாவிக்கிறார்கள்। அது சரி நீங்கள் யார் அவர்களை குற்றம் சாட்டுவதட்கு?

சொன்னவன் சொன்னானாம் கேடடவனுக்கு மதி இல்லயாம்நீங்கள் எல்லாம் மதி இல்லாமல் திரிவதால்தான் அவர்கள் உங்களிடம் வருகிறார்கள்

நீங்கள் இந்த திரியில் எழுதுவதால் ஒரு மயிரும் புடுங்கப்போவதில்லை। அவர்கள் இன்னும் வேகம் எடுப்பார்கள் ஒழிய உங்களைப்போல ஓடி ஒழிய மாடடார்கள்।

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

நீங்கள் இந்த திரியில் எழுதுவதால் ஒரு மயிரும் புடுங்கப்போவதில்லை। அவர்கள் இன்னும் வேகம் எடுப்பார்கள் ஒழிய உங்களைப்போல ஓடி ஒழிய மாடடார்கள்।

அதே.

4 hours ago, Vankalayan said:

அது என்ன அல்லேலூயா கூடடம்। அரோகரா கூடடம் இருக்கலாம், அல்லாஹு அக்பர் கூடடம் இருக்கலாம் , சாது சாது கூடடம் இருக்கலாம் அல்லேலூயா கூடடம் இருக்க கூடாதோ?

எமது கத்தோலிக்க சமயத்திலும் இப்போது அல்லேலூயா கூட்டம் இல்லாமல் இல்லை। எமது பாதர்மார் அநேகமாக இதைத்தான் பாவிக்கிறார்கள்। அது சரி நீங்கள் யார் அவர்களை குற்றம் சாட்டுவதட்கு?

சொன்னவன் சொன்னானாம் கேடடவனுக்கு மதி இல்லயாம்நீங்கள் எல்லாம் மதி இல்லாமல் திரிவதால்தான் அவர்கள் உங்களிடம் வருகிறார்கள்

நீங்கள் இந்த திரியில் எழுதுவதால் ஒரு மயிரும் புடுங்கப்போவதில்லை। அவர்கள் இன்னும் வேகம் எடுப்பார்கள் ஒழிய உங்களைப்போல ஓடி ஒழிய மாடடார்கள்।

மதம் என்பது மனித பலவீனங்கள் என ற மூலப்பொருளை வைத்து தயாரிக்கப்பட்ட விற்பனைப் பண்டம். அது அரோகரா கும்பல்களாக இருக்கலாம், அல்லோயா கும்பல்களாக இருக்கலாம், அல்லாகு அக்பர் கும்பல்களாக இருக்கலாம் . எதுவாக அருந்தாலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. 

மக்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க  தொடங்க வேண்டும். பொழுது போக்காக நாலு பேரை சந்தித்து ஜாலியாக இருக்க வேண்டுமென்றால்  கோவிலுக்கு போகலாம். கடவுள் எமக்கு ஏதோ வெட்டி புடுங்கும் என்று நம்புவதை தவிர்த்தால் இவ்வாறான பிரச்சனைகள் எழாது. எந்த கடவுள்களாலும் எமக்கு ஒன்றும் வெட்டிப்புடுங்க முடியாது. நாம் உழைத்தால் தான் எமக்கும் வாழ்வு. எம்மை நம்பி இருக்கும் அந்த கடவுள்களுக்கும் வாழ்வு. 

  • கருத்துக்கள உறவுகள்

அல்லேலூயா என்றால் படைத்தவனுக்கு புகழ் என்று அர்த்தம். அதற்கு அவர் தகுதி உள்ளவர். நாம் கூற கடமைப்பட்டுள்ளோம். நம்மை  நன்றாக படைத்ததற்கு, நோயில்லாமல், தொழிலோடு, நல்ல உறவுகளோடு இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் நன்றி உள்ளவர்களாக பழக்கப்பட்டால் அது புரியும். நாம் மற்றவர்களிடம் இருந்து நன்றியை எதிர்பார்ப்போம். நாம் நன்றி சொல்ல விரும்ப மாட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் போகுதா சரிசரி போகட்டும்.

38 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்னும் போகுதா சரிசரி போகட்டும்.

இன்னும் போகும். அப்படி போகேல்லை எண்டா அடுத்த தியேட்டருக்கு போறது தானே. எடுத்த ரிக்கற் அடுத்த தியேட்டருக்கும் செல்லும். பொப்கோர்ன்  தான் வாங்க வேண்டி இருக்கும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இன்னும் போகுதா சரிசரி போகட்டும்.

அன்பே சிவம்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Vankalayan said:

அது என்ன அல்லேலூயா கூடடம்। அரோகரா கூடடம் இருக்கலாம், அல்லாஹு அக்பர் கூடடம் இருக்கலாம் , சாது சாது கூடடம் இருக்கலாம் அல்லேலூயா கூடடம் இருக்க கூடாதோ?

எமது கத்தோலிக்க சமயத்திலும் இப்போது அல்லேலூயா கூட்டம் இல்லாமல் இல்லை। எமது பாதர்மார் அநேகமாக இதைத்தான் பாவிக்கிறார்கள்। அது சரி நீங்கள் யார் அவர்களை குற்றம் சாட்டுவதட்கு?

சொன்னவன் சொன்னானாம் கேடடவனுக்கு மதி இல்லயாம்நீங்கள் எல்லாம் மதி இல்லாமல் திரிவதால்தான் அவர்கள் உங்களிடம் வருகிறார்கள்

நீங்கள் இந்த திரியில் எழுதுவதால் ஒரு மயிரும் புடுங்கப்போவதில்லை। அவர்கள் இன்னும் வேகம் எடுப்பார்கள் ஒழிய உங்களைப்போல ஓடி ஒழிய மாடடார்கள்।

அல்லுலோயா கூட்டம் என்றதும் உங்களுக்கு என் மூக்கு வியர்க்கிறது! நீங்கள்தான் சுவிஸ் போதகரின்  (இவர் போன்ற அல்லுலோயா கூட்டங்களின்) ஸ்ரீலங்கன் ஏஜெண்ட்  போல கிடக்கிது! எவ்வளவு கமிஷன் கிடக்குது நண்பரே??

நீங்களும் இந்த திரிகளில் வந்து அல்லுலோயா கூட்டங்களுக்காக குத்தி முறிவதால் யாரும் ஒரு பொருட்டாக எடுக்கப்போவதும் இல்லை!!

இனியும் இந்த அல்லுலோயா கூட்டங்கள் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று ஊரில் உள்ளவர்களுக்கு நல்லாவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

எந்த கடவுள்களாலும் எமக்கு ஒன்றும் வெட்டிப்புடுங்க முடியாது. நாம் உழைத்தால் தான் எமக்கும் வாழ்வு. எம்மை நம்பி இருக்கும் அந்த கடவுள்களுக்கும் வாழ்வு. 

சரியான உண்மை. இது தான் திருக்குறளும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்றது.
நாங்கள் கஷ்டப்பட்டு படித்து வேலை எடுத்து செய்து கொண்டு ஏன் இறைவனுக்கு நன்றி சொல்லி கூலி கொடுக்க வேண்டும் 😭

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

கடவுள் எமக்கு ஏதோ வெட்டி புடுங்கும் என்று நம்புவதை தவிர்த்தால்

இந்தத் திமிருக்கும், அறிவு, விஞ்ஞானம் என்று அலைபவர்களுக்கும் வைத்தான்  வேட்டு. 

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நாங்கள் கஷ்டப்பட்டு படித்து வேலை எடுத்து செய்து கொண்டு ஏன் இறைவனுக்கு நன்றி சொல்லி கூலி கொடுக்க வேண்டும்

சுவாசிக்கும் காற்றுக்கு விலை கொடுத்தீரோ? ஒளி தரும் சூரியனுக்கு காசு கொடுத்தீரோ? உமது ஆரோக்கியத்திற்கு, அறிவுக்கு. அவர் யாரிடமும் நன்றி, கூலி கேட்கவில்லையே. விரும்பினால் செய்யும். விரும்பாவிட்டால் விடும். அது உமது பெருந்தன்மையைப் பொறுத்தது.

"இருவினையும் சேரா, இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." 

என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் கண்டீரோ?

10 hours ago, Eppothum Thamizhan said:

அல்லுலோயா கூட்டம் என்றதும் உங்களுக்கு என் மூக்கு வியர்க்கிறது! நீங்கள்தான் சுவிஸ் போதகரின்  (இவர் போன்ற அல்லுலோயா கூட்டங்களின்) ஸ்ரீலங்கன் ஏஜெண்ட்  போல கிடக்கிது! எவ்வளவு கமிஷன் கிடக்குது நண்பரே??

நீங்களும் இந்த திரிகளில் வந்து அல்லுலோயா கூட்டங்களுக்காக குத்தி முறிவதால் யாரும் ஒரு பொருட்டாக எடுக்கப்போவதும் இல்லை!!

இனியும் இந்த அல்லுலோயா கூட்டங்கள் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று ஊரில் உள்ளவர்களுக்கு நல்லாவே தெரியும்.

சொன்னவன் சொன்னானாம் கெடடவனுக்கு மதி இல்லயாம்।  உங்களை போல பணத்துக்காக ஓடித்திரிபவர்கள் நாங்கள் இல்லை। உங்களைப்போல மதி இல்லாமல் திரிபவர்களும் இல்லை। அரோகரா।

Just now, satan said:

இந்தத் திமிருக்கும், அறிவு, விஞ்ஞானம் என்று அலைபவர்களுக்கும் வைத்தான்  வேட்டு. 

சுவாசிக்கும் காற்றுக்கு விலை கொடுத்தீரோ? ஒளி தரும் சூரியனுக்கு காசு கொடுத்தீரோ? உமது ஆரோக்கியத்திற்கு, அறிவுக்கு. அவர் யாரிடமும் நன்றி, கூலி கேட்கவில்லையே. விரும்பினால் செய்யும். விரும்பாவிட்டால் விடும். அது உமது பெருந்தன்மையைப் பொறுத்தது.

"இருவினையும் சேரா, இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." 

என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் கண்டீரோ?

satan, இந்த கொரோன வந்தும் அடங்கவில்லை। இதையும் விட ஆண்டவன் வைப்பான் பெரிய ஆப்பு இவர்களுக்கு। அப்போ திரிவார்கள் ஆப்பு இழுத்த குரங்கு மாதிரி। இப்பவே கொஞ்சம் அப்படிதான் திரிகிறார்கள்।

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொரோனாவின் கோரம் இவர்களின் கதவை தட்டவில்லை என்பதனால் இவ்வாறு சிந்திக்கிறார்கள்.   இவர்கள் நன்றி சொல்லவில்லை, கூலி கொடுக்கவில்லை  என்பதற்காக படைத்தவன்  படைத்ததை திருப்பி எடுக்கவோ, கொடுத்ததை பறித்து விடப்போவதில்லையே.  இவர்கள் செலுத்தும் நன்றியிலும், கூலியிலுந்தான் இறைவன் வாழுகிறார் என்று நினைப்பு  வேறு.

7 hours ago, satan said:

இந்தத் திமிருக்கும், அறிவு, விஞ்ஞானம் என்று அலைபவர்களுக்கும் வைத்தான். 

இவ்வாறான நோய்கள் ஏதோ இதுதான் முதல்த் தடவை அல்ல. நீங்கள் கூறிய அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கு முற்பட்ட காலத்திலேயே    பல  ஆயிரம் ஆண்டுகளாக வந்து பல மில்லியன்  கணக்கான மனிதர்களைப் பலி கொண்ட போதெல்லாம் இப்படி நீங்கள் கூறியதைப் போல்  கடவுளின் கோபம், சாத்தான், பேய், பிசாசு என்று அக்கால மக்களால் நம்பப்பட்டது.   ரோம ராஜ்யத்தில் இதைப் போன்ற கொள்ளை நோய் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது வரலாறு. அதன் பின்னர் 8 ம் 14 நூற்றாண்டுகளிலும் இதேபோல தான் 

  1675 ல் Antoni van Leeuwenhoek என்பவரால் முதல் நுணுக்குக் காட்டி (Microscope)  கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் நுண்ணுயிர்கள் குறித்த அறிவியல்  வளர்ச்சி ஏற்ப்பட்டது. பின்னர் 19 ம் நூற்றாண்டில் இவை தொடர்பான மேலதிக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாரிய வளர்ச்சி உருவானது. பரிணாம வளர்ச்சியில் எப்படி மனித இனம் உருவானதோ அது போல் உருவாகுவதே இந்த நுண்ணுயிர்களும் என்ற தெளிவு ஏற்ப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் நுண்ணுயிர்கள் மனித உடலில் ஏற்படுத்தும் நோய்களுக்கெதிராக மருந்துகள், தடுப்பூசி போன்றவற்றின் கண்டு பிடிப்புவரை சென்றது . 

கோவிட்  19 உருவான உடனேயே அது ஆய்வு செய்து அதன் தாக்கம் பற்றி  கண்டறியப்பட்டது அந்த மருத்துவ அறிவியல் வளர்சியாலேயே ஆகும். இல்லை என்றால் இப்போதும் கடவுளின் சோதனை என்றே அக்கால மனிதர்களைப் போல் இன்றய உலக மக்களுக் கருதி இருப்பர். தமது கடவுள் வியாபார விருத்திக்காக இப்போதும் இது கடவுளின் கோபம் என்று சிலர் உளறினாலும் மக்கள் அதை நம்பவில்லை.      பிளேக், மலேரியா, கொலரா, போலியோ போன்ற கொடிய நோய்களுக் கெல்லாம் மருந்து கண்டு பிடித்த அறிவியல் இதற்கும் விரைவில் கண்டு பிடிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Vankalayan said:

சொன்னவன் சொன்னானாம் கெடடவனுக்கு மதி இல்லயாம்।  உங்களை போல பணத்துக்காக ஓடித்திரிபவர்கள் நாங்கள் இல்லை। உங்களைப்போல மதி இல்லாமல் திரிபவர்களும் இல்லை। அரோகரா।

satan, இந்த கொரோன வந்தும் அடங்கவில்லை। இதையும் விட ஆண்டவன் வைப்பான் பெரிய ஆப்பு இவர்களுக்கு। அப்போ திரிவார்கள் ஆப்பு இழுத்த குரங்கு மாதிரி। இப்பவே கொஞ்சம் அப்படிதான் திரிகிறார்கள்।

8 hours ago, satan said:

இன்னும் கொரோனாவின் கோரம் இவர்களின் கதவை தட்டவில்லை என்பதனால் இவ்வாறு சிந்திக்கிறார்கள்.   இவர்கள் நன்றி சொல்லவில்லை, கூலி கொடுக்கவில்லை  என்பதற்காக படைத்தவன்  படைத்ததை திருப்பி எடுக்கவோ, கொடுத்ததை பறித்து விடப்போவதில்லையே.  இவர்கள் செலுத்தும் நன்றியிலும், கூலியிலுந்தான் இறைவன் வாழுகிறார் என்று நினைப்பு  வேறு.

சக கள உறவுக்கு கொரோனா வந்து கதவை தட்ட வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் இயேசுவின் குழந்தைகள்  😟

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சக கள உறவுக்கு கொரோனா வந்து கதவை தட்ட வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் இயேசுவின் குழந்தைகள்  😟

தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதை தவறாக விளங்கிக்கொண்ட இயேசுவின் குழந்தைகள்!!

satan, உங்களைப்போலவே  எமக்கும் மேலான ஒரு சக்தி உண்டு அதை நாம் இறைவன் என உருவகப்படுத்தி வழிபடுகிறோம் என்பதில் எனக்கு மாற்று கருத்து ஒன்றும் இல்லை. சும்மா எல்லாம் அறிவியல்தான் அதைவிட மேலானது எதுவுமில்லை என்று கூறும் ஒருசிலரே இறைவனை தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். ஒருநாள் அவர்களுக்கும் புரியும். எமக்கும் மேலான ஒரு சக்தி உண்டென்று!!!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Vankalayan said:

இந்த கொரோன வந்தும் அடங்கவில்லை। இதையும் விட ஆண்டவன் வைப்பான் பெரிய ஆப்பு இவர்களுக்கு। அப்போ திரிவார்கள் ஆப்பு இழுத்த குரங்கு மாதிரி। இப்பவே கொஞ்சம் அப்படிதான் திரிகிறார்கள்।

வன்கலயனின் நல்ல கருத்துக்களை படித்திருக்கிறேன்.

ஆனால் மதம் என்று வந்தவுடன் மதம் பரப்பும் போதகர் தரத்திற்கு வந்துவிடுகிறார்கள் இவர்கள்.

12 hours ago, Vankalayan said:

இந்த கொரோன வந்தும் அடங்கவில்லை। இதையும் விட ஆண்டவன் வைப்பான் பெரிய ஆப்பு இவர்களுக்கு। அப்போ திரிவார்கள் ஆப்பு இழுத்த குரங்கு மாதிரி।

யேசுபிரானின் அளப்பரிய கருணையே கருணை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நீங்கள் இயேசுவின் குழந்தைகள்  😟

இயேசு (ஈசா நபி) திருமணம் செய்யவில்லை என்று கிறீஸ்தவர்கள் நம்புகிறார்கள். மாறாக, அகம்மதியா முஸ்லிம்கள், ஈசா நபி (இயேசு) காஷ்மீருக்கு தப்பி வந்து திருமணம் செய்து  குழந்தை குட்டிகளுடன் நீண்டகாலம் வாழ்ந்தார் என்று நம்புகிறார்கள். அங்கு உள்ள ஒரு கல்லறையை ஈசா நபியின் கல்லறை என்று காட்டுகிறார்கள். இந்த குழந்தை குட்டிகளின் வாரிசுகள் யாழ் களத்தில் எழுதுவது பற்றி இதற்கு முதல் நான் அறியவில்லை. 

3 hours ago, Eppothum Thamizhan said:

சும்மா எல்லாம் அறிவியல்தான் அதைவிட மேலானது எதுவுமில்லை என்று கூறும் ஒருசிலரே இறைவனை தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். ஒருநாள் அவர்களுக்கும் புரியும். எமக்கும் மேலான ஒரு சக்தி உண்டென்று!!!

உங்களுக்கு மேலான சக்தி இருப்பதை எல்லோரும் அறிவார்கள். அறிவியலின் அரிச்சுவடியே உங்களுக்கு மேலான சக்தி இருப்பதில் தான் ஆரம்பமாகிறது. அந்த சக்தியை அறிவதை அறிவியல் என்கிறோம். 

ஆனால் அந்த சக்திக்கு இறைவன் என்று பெயரும் வைத்து, அதற்கு மூக்கும், முழியும் வாயும் வைத்து, கதைகள் பல கட்டி ஊரை பேய்க்காட்டுவதை சிலர் விரும்பவில்லை. அந்த சிலரை நீங்கள் விரும்பவில்லை என்பதை உங்கள் கருத்து காட்டுகிறது.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யேசுபிரானின் அளப்பரிய கருணையே கருணை

யூதேயாவில் ரோமர் ஆட்சிக்காலத்தில், உள்ளூர் அரசியல்வாதிகளும் மதபோதகர்களும் வியாபாரிகளும் யூதமக்களை ஏமாற்றி சுரண்டுவதை எதிர்த்த இளம் புரட்சிக்காரன் இயேசு. கோவிலில் மக்களை ஏமாற்றி வணிகம் செய்தவர்களை இடுப்புப்பட்டையால் விளாசித்தள்ளியவர் அவர். நீங்களும் அந்த வணிகர்களை போன்றவரானால்,  அவரை பின்பற்றுபவர்களிடம் இந்தவிதமான கருணையே உங்களுக்கும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

யூதேயாவில் ரோமர் ஆட்சிக்காலத்தில், உள்ளூர் அரசியல்வாதிகளும் மதபோதகர்களும் வியாபாரிகளும் யூதமக்களை ஏமாற்றி சுரண்டுவதை எதிர்த்த இளம் புரட்சிக்காரன் இயேசு. கோவிலில் மக்களை ஏமாற்றி வணிகம் செய்தவர்களை இடுப்புப்பட்டையால் விளாசித்தள்ளியவர் அவர்.

நீங்கள் சொன்னதிற்கு தலைகீழாக அல்லவா இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. யேசுவை பின்பற்றுபவர்களாக  சொல்லி கொள்பவர்கள் யேசு அற்புதங்கள் செய்வார் என்று ஆசைகாட்டி மக்களை  ஏமாற்றி வணிகம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்னதிற்கு தலைகீழாக அல்லவா இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. யேசுவை பின்பற்றுபவர்களாக  சொல்லி கொள்பவர்கள் யேசு அற்புதங்கள் செய்வார் என்று ஆசைகாட்டி மக்களை  ஏமாற்றி வணிகம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.

நல்ல தெளிவாக, யார் அவர்கள் என்று சொல்லிவிட்டீர்களே? நன்றி. இயேசுவை பின்பற்றியவர்களுள் எம்முள் வாழ்ந்த சிலர் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோனார்கள். வேறுசிலர் இன்னமும் இருக்கிறார்கள், ஆனால் பல காரணங்களுக்காக அவர்கள் மற்றவர்கள் அறியாதபடி செயல்படுகிறார்கள். 

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.