Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கொரோனா பரவ சுவிஸ் மத போதகரே காரணம்! சவேந்திர சில்வா

Featured Replies

வடக்கில் கொரோனா பரவுவதற்கு சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால் தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை தாம் நம்பத் தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் யாராவது ஒருவருக்குக் கொரோனா ஏற்பட்டாலும் அங்குள்ள ஏனையோருக்கும் பரவும் நிலை காணப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்றன.

இராணுவத்தினர் இதனை நடத்துவதனால், இராணுவத்தினர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் இருப்பதனாலும், இப்படியான குற்றச்சாட்டுக்கள் வரும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் பொறுப்பு இராணுவ அதிகாரிகளை ஆராயப் பணித்துள்ளேன்.

அத்துடன் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/security/01/243787?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அவல் கிடைச்சாச்சு 😃😄

8 hours ago, போல் said:

வடக்கில் கொரோனா பரவுவதற்கு சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆம், வெற்றியை மட்டுமே காணும், காட்டும் "வீரர்கள்" நீங்கள். 

தோல்விகளை எல்லாம் இன்னொருவன் தலையில் மட்டுமே காணலாம். 

அண்மையில் சுவிஸில் இருந்து பூணூல் போட்ட போதகர்  ஒருவர் இலங்கை சென்று இனப்படுகொலையாளர் எல்லோரையும் சந்தித்து அவர்களை வாழ்த்திய செய்தியை படங்களுடன்  முக நூலில் பகிர்ந்திருந்தார்கள். போதகர்கள் என்றால் ஆபத்தானவர்கள் தான் போலுள்ளது. 

இது காஸ்மீரில் : 71,000 மக்களுக்கு ஒரு வெண்டிலேட்டர் உள்ளது; 39,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் உள்ளார்; 9 பேருக்கு ஒரு ராணுவ வீரர் உள்ளார்.

தமிழீழத்திலும் நிலைமை இவ்வாறு இல்லை இதைவிட மோசமாக இருக்கும். 

இதுவும் கடந்து போகும் என்று நாம் விட்டுவிடப்போகிறோம்.

9 hours ago, போல் said:

அத்துடன், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால் தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை தாம் நம்பத் தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சொறிலங்கா போர்குற்றவாளிகளின் சதி திட்டத்தை அவரே போட்டு உடைச்சிட்டார்!

சுவிஸ் பாதிரியார் சற்குணராசா ஜேசுவிடம் வாருங்கள் கொரோனா வராது என்று சொல்லி மக்களை ஏமாற்றி அழைத்து இப்ப பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட செய்திட்டார்.

முதல்ல இவரின் மதமாற்ற வியாபாரத்துக்கு ஆதரவா இருந்த கோஷ்டியும் இப்ப டியூனை மாத்தி பஞ்சப்பாட்டு பாடிகிட்டு இருக்காங்க.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

அண்மையில் சுவிஸில் இருந்து பூணூல் போட்ட போதகர்  ஒருவர் இலங்கை சென்று இனப்படுகொலையாளர் எல்லோரையும் சந்தித்து அவர்களை வாழ்த்திய செய்தியை படங்களுடன்  முக நூலில் பகிர்ந்திருந்தார்கள். போதகர்கள் என்றால் ஆபத்தானவர்கள் தான் போலுள்ளது. 

ஒரு வேளை கோத்தாவை மதம் மாற்றப்போகிறார் என்னவோ ஹிஹிஹி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால் தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை தாம் நம்பத் தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு என்று தானே கொண்டு சென்றீர்கள்?  பின். ஏன் ஒன்றாக்கினீர்கள்? ஒன்றாக்கி தேர்தல் பிரச்சாரம் செய்தீர்களோ?

16 hours ago, போல் said:

இராணுவத்தினர் இதனை நடத்துவதனால், இராணுவத்தினர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் இருப்பதனாலும், இப்படியான குற்றச்சாட்டுக்கள் வரும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

நீங்கள் எதிர் பார்க்கலாம், பசுத்தோல் பார்க்கலாம். அதற்குப் பின்னால் இருக்கும் கோர முகத்தின் பயங்கரங்களை  அனுபவிப்பவர்கள்  நாங்கள். 

மீண்டும் கோகிலா । தொடர் 3 । தொடருங்கள் உங்கள் தொடர் கதையை।

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

On 19/4/2020 at 05:47, தனிக்காட்டு ராஜா said:

ஒரு வேளை கோத்தாவை மதம் மாற்றப்போகிறார் என்னவோ ஹிஹிஹி

மனுஷன் பொதுபல சேனையை வைச்சு சேர்ச்களை தாக்கினவர். லேசுல மாறமாட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொரோனா பரவ நான் காரணம் இல்லை! சுவிஸ் போதகர்

Report us Gokulan 2 hours ago

யாழில் கொரோனா பரவ தான் காரணம் இல்லை என யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என கூறப்படும், சுவிஸ் போதகர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கை தேசத்திற்கு நானும் எனது சபையாரும் அநேக தரம் வந்து போகின்றோம்.

அதற்கு காரணம் என்னவென்றால் நானும் எனது சபையார் யாவரும் இலங்கை தேசத்தையும் இலங்கை மக்களையும் அதிகமாக நேசிக்கின்றோம்.

அதிகமாக உபவாசத்தோடு கூட சபை மக்களாய் சேர்ந்து இலங்கைக்காக இலங்கை மக்களுக்காக பிரார்த்தனைகளை முன்னெடுத்திருக்கிறோம்.

அதேபோல தான் கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதி கொழும்பு விமான நிலையத்தில் நானும், என்னுடைய மனைவியுமாக வந்து இறங்கினோம்.

வியாதிகளை கண்டறியும் கருவிகள் ஊடாக நாம் சென்றோம். எங்களுக்கு ஒரு வியாதியும் அங்கே இருக்கவில்லை.

நாங்கள் வந்த காரியங்களை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கே எல்லா வழிப்பாட்டு தலங்களிலும் வழிபாடுகள் நடந்தன.

அதேபோல் எங்களுடைய சபையிலும் வழிபாடுகளை நாங்கள் நடத்தினோம். அங்கே எல்லாரும் வரவில்லை. அருகிலிருந்த குறிப்பிட்ட சிலரே வந்திருந்தனர்.

நாங்கள் எங்களுடைய ஆராதனையை எந்த செய்தி தாளிலும் விளம்பரம் செய்யவில்லை. சாதாரணமாய் ஆராதனை நடத்தினோம்.

சீக்கிரமாக ஆராதனையை முடித்து விட்டு சீக்கிரமாக அனைவரையும் அனுப்பி விட்டு நான் கொழும்புக்கு கிளம்பி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள விடயம் காணொளியில்,

https://www.tamilwin.com/community/01/244001?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதுதானே வேணாங்கிறது.

ஒரு பொறுப்புள்ள மனிதன் இவ்வாறு தனது பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்க மாட்டான். 

தென் கொரியாவில் மதபோதகர் தனது சமய நிறுவனத்தின் செயலுக்கு மன்னிப்புக் கேட்ட தோரணையும்,  எங்களவரின் செயகுக்கும் உள்ள வேறுபாட்டை இங்கே துல்லியமாகக் காணலாம். 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.