Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கொரோனாவை எதிர்த்து போராட களமிறங்கும் இந்திய இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனாவை எதிர்த்து போராட களமிறங்கும் இந்திய இராணுவம்

Report us Murali 51 minutes ago

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதவும் வகையில் இந்திய இராணுவம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுணர்களுக்கு தொற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுவதற்காக 14 பேர் கொண்ட இந்திய இராணுவ குழு கடந்த மாதம் மாலைதீவுக்கு அனுப்பப்பட்டது.

அத்துடன், இந்த மாத ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா 15 பேர் கொண்ட இராணுவக் குழுவை குவைத்துக்கு அனுப்பியது.

இந்நிலையிலேயே, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும் உதவி வழங்குவதற்கான இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அணிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் 15ம் திகதி இடம்பெற்றிருந்த ஒரு காணொளி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சார்க் பிராந்தியத்தில் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கூட்டு மூலோபாயத்தை வகுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/special/01/244094

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரெளடிதான். 😜😜

இது என்ன அநியாயமாக இருக்குது। வேணுமெண்டால் பங்களாதேஷ், பூட்டன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உதவி செய்யட்டும்। இலங்கைக்கு இவர்கள் வர தேவையே இல்லை। இங்கு வந்தால் இந்த நோய் அதிகரிக்குமே தவிர குறையாது। அது சரி உங்கள் நாட்டில் நிலைமை எப்படி?

வைத்தியனே உன்னையே நீ குணமாக்கிக்கொள்।

2 hours ago, பெருமாள் said:

இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய இராணுவத்தின் மருத்துவ பிரிவு என கூறப்பட்டிருக்க வேண்டும்? 

இல்லை உண்மையை சொல்ல வேண்டும்.

வருவது சீனாவை முந்த என்று அதற்கு இந்த 'மனிதாபிமானம்' ஒரு முகமூடி என்று. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரிடமும் பிச்சை எடுத்தால், பிச்சை போடுவோர் எல்லோரும் முதலாளி பிச்சைக்காரனுக்கு. அதுசரி. உலகிலேயே கொரோனவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாட்டுக்கு ஏன் உதவி? அதுவும் இராணுவ உதவி. சுகாதார, வைத்திய உதவி அல்லவா தேவைப்படும்? இராணுவத்தையும், ஆயுதங்களையும் கொடுத்துப் பழகி  ஊறிப்போனதால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.  இதற்கும் அந்த வகையில் உதவலாம் என்று நினைத்திருப்பார் பெரியண்ணை. சீனாக்காரன் வரமுதல்  இடத்தைப் பிடிக்கிற யோசனை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இராணுவத்தை அனுப்ப இந்தியா தீர்மானம்?

இலங்கை உள்ளிட்ட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இந்திய இராணுவத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வுகூடங்களை அமைப்பதற்காகவும், உள்ளுர் நிபுணர்களிற்கு கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காகவும் கடந்த மாதம் இந்தியா 14 பேர் கொண்ட இராணுவ குழுவை இந்தியா அங்கு அனுப்பியுள்ளது.

இதேபோன்று இந்தியா குவைத்திற்கும் 15 பேர் கொண்ட இந்திய இராணுவ குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

மேலும், பிராந்தியத்தில் உள்ள நேசநாடுகள் கொரோனா வைரசினை எதிர்த்து போராடுவதற்கு உதவும் இந்தியாவின் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிற்கு இந்திய இராணுவத்தின் தனித்தனி குழுக்களை அனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.

சார்க் நாடுகள் கொரோனாவை எதிர்த்துப்போராடுவதற்கான பொதுவான கட்டமைப்பின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

மார்ச் மாதம் இந்திய பிரதமர் சார்க் பிராந்தியத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கான பொதுவான தந்திரோபாயத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு, கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்காக அவசர நிதியமொன்றை உருவாக்கும் யோசனையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கை-உள்ளிட்ட-தெற்காச-2/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இராணுவத்தை அனுப்ப இந்தியா தீர்மானம்?

அமைதிப்படை 2 என்று பெயரிட்டு அனுப்பினால் மக்கள் மாலையிட்டு வரவேற்பார்கள். :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிராந்தியத்தில் உள்ள நேசநாடுகள் கொரோனா வைரசினை எதிர்த்து போராடுவதற்கு உதவும்

அமைதி என்று வந்து அழிவை ஏற்படுத்தினவை, இப்போ போர் என்று வரபோகினமாம்.  எதுக்கெடுத்தாலும் போர். ஏன் கொரோனா வைரசுக்கெதிரான சுகாதார உதவி என்று சொன்னால் பொருந்தாதோ? ராணுவத்தை அனுப்புவதால் போர் என்று அழைக்கினம் போல.  இதை விட்டு வெளியே வரமுடியாது இவர்களால். நேசநாடுகள் எதிர்த்து போர் என்று வாசித்து  பயந்து போனேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இச் செய்தியை இலங்கை மறுத்திருப்பதாக தெரிகிறது.

12 hours ago, பெருமாள் said:

இலங்கையில் கொரோனாவை எதிர்த்து போராட களமிறங்கும் இந்திய இராணுவம்

மூஞ்சூறு தான் போக வழியில்லை ஆனா விளக்குமாற்றையும் தூக்கிச்சாம்!

மூஞ்சூறு தான் போக வழியில்லை ஆனா விளக்குமாற்றையும் தூக்கிச்சாம்!

சொரணை கெட்ட இந்தியன்! இவங்களை விரும்பி வரவேற்க உலகில எந்த நாடும் முன்வராது.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த என்கின்ற நாட்டின் உண்மையான தலைவர்களிடம் இந்திய விடயத்தை மறைப்பது ஆபத்து. 

தேவை என்றால் பொதுபல சீனாவையும் 🙂  இறக்கலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அஸ்கிரிய மற்றும் மல்வத்த என்கின்ற நாட்டின் உண்மையான தலைவர்களிடம் இந்திய விடயத்தை மறைப்பது ஆபத்து. 

தேவை என்றால் பொதுபல சீனாவையும் 🙂  இறக்கலாம் 
 

 உயர்ந்த நகைச்சுவை உணர்வு உமக்கு 👍

10 hours ago, Kapithan said:

 உயர்ந்த நகைச்சுவை உணர்வு உமக்கு 👍

அதிலும் இராணுவ சுவை அதிகம் 🙂 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக இந்திய ராணுவம் கொண்டுவந்த ஆயுதங்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

On 21/4/2020 at 16:12, பெருமாள் said:

இலங்கையில் கொரோனாவை எதிர்த்து போராட களமிறங்கும் இந்திய இராணுவம்

 

No need to deploy military from other countries to SL to fight coronavirus: Defence Secretary
Says Sri Lankan military and Police can handle coronavirus threat effectively

There was no necessity to seek assistance from other countries to deploy their military to contain the spread of coronavirus in Sri Lanka, Defence Secretary Maj.Gen. (Retd) Kamal Gunaratne said.

He said Sri Lankan Tri-Forces and the Police had already proved their capabilities in containing the spread of coronavirus.

“Our military has already shown their expertise and professionalism in handling the emergency situation created under coronavirus threat,” he said.

The Defence Secretary said Sri Lanka would set an example to other countries, which were battling with coronavirus, on how a country could use its intelligence agencies with the military and health authorities effectively to control the spread of the highly infectious virus.

“Sri Lanka’s intelligence agencies have been used to trace people who are closely associated with coronavirus positive patients and also their whereabouts to direct them to the 14-days quarantine process,” he said.

The Defence Secretary referring to the recent news which said that Indian Army would be deployed in Sri Lanka to support country’s effort to control the spread coronavirus, he said there was no such dialogue had been taken place between the two nations.

http://www.dailymirror.lk/top_story/No-need-to-deploy-military-from-other-countries-to-SL-to-fight-coronavirus-Defence-Secretary/155-187027

  • கருத்துக்கள உறவுகள்

சீன இராணுவமும்  கொரோனாவுடன் போராட என்று இலங்கையில் இறங்கினால், கோத்தா திண்டாடப் போறாரே. கடனுக்கு அவகாசம் கேட்டதற்கே இந்தியா இப்பிடி உதவ முன்வந்திருக்கு. அவன் சும்மா இருப்பானா? தன் பங்குக்கு அவனும் களமிறங்க யோசிப்பான். 

20 hours ago, ampanai said:

தேவை என்றால் பொதுபல சீனாவையும் 🙂  இறக்கலாம் 

ஹிந்தியனால் நிதி உதவி குடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பொதுபல சேனை ஹிந்தியனுக்கு ஆப்பு இறுக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.