Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

எல்லாரும் எல்லாத் திரியிலும் கருத்து எழுதும் உரிமை இருக்குது...ஆனால் சிலது சில வேளை , பேரை குறிப்பிட்டு எழுதும் போது அதற்கு காரணம் இருக்கு ....அவர் ஏன் இதற்கு பதில் எழுதவில்லை ...அவருக்குத் தெரியும்.
அநேகமானவர்கள் உங்கள் மனநிலையில் தான் இருக்கிறார்கள்...எங்களை அழித்த சிங்களவர்கள் இப்படியாவது சாகட்டும் என்று தான் நினைக்கிறார்கள் ...ஊரில் பிரபல்யமான ஒரு டொக்டர் கூட  ஆமிக்கு கொரோனா வந்தது மகிழ்ச்சி  என்று பதிந்திருந்தார்...வாசித்ததும் அப்படியே சொக்காயிட்டேன்:shocked:
 

அக்கோய்,

பெயர் குறிப்பிட்ட, குறிப்பிடாத....இன்னோரன்ன... புலுடா எல்லாம் என்னிடம் வேண்டாம். 😜

அவன் செய்த அநீதிக்கு  தண்டனை கிடைக்க வேண்டும். அது கோறோனாவாக இருந்தாலென்ன குறோனாவாக இருந்தாலென்ன அல்லது எலிக் காச்சலாக இருக்கலாம் அல்லது பூனைக் காச்சலாக இருந்துவிட்டே போகட்டும். ஆனால் சிங்களத்திற்கும், காட்டிக் கொடுத்தோர் கூட்டிக் கொடுத்தோர், அவர்கள் யாராக இருந்தாலும், இந்தியா உட்பட, தண்டனை அனுபவித்துத்தானாக வேண்டும். 😡

""அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்"" என்பதில் தமிழர்களுக்கு அசையாத நம்பிக்கையுண்டு. 🙂

(அதனால்தான் நீங்கள் அச்சமுறுகிறீர்களோ 🤔)

உங்களுக்கான கேள்வி: (Direct answer please )

1) சிங்களம், இந்தியா, காட்டிக் கொடுத்தோர், கூட்டிக் கொடுத்தோர் தண்டிக்கப்பட வேண்டுமா ?

பதில்: ஆம் / இல்லை

இதில் உங்கள் பதில் என்ன ?

(உங்களை இக்கட்டில் மாட்டிவிடும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் நீங்கள் அடிக்கடி சொக்காகிறீர்கள் அதனால் முள்ளை முள்ளால் [Shock ஐ Shock ஆல்] எடுப்போமென்கின்ற முயற்சிதான் இது 😎)

  • Replies 82
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையினர்; 4 இராணுவத்தினர்

SLN-coronavirus-300x199.jpgகொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக நேற்று இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட 4 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய ஆறு பேரும் கடற்படையினருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எனவும் தெரிவிக்கபபடுகின்றது.

இதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 619 ஆக அதிகரித்திருக்கின்றது

http://thinakkural.lk/article/39681

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா!

இலங்கையில் நேற்று (28) மட்டும் 31 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 21 பேர் கடற்படை வீரர்கள் என்பதுடன், 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என்றும், நால்வர் இராணுவ வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை மொத்தமாக 222 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 478 ஆக காணப்படுகிறது.

 

https://newuthayan.com/நேற்று-மட்டும்-கடற்படைய-3/

போர்வீரர்கள் அற்ற மன்னர், மகாராணி மற்றும் அமைச்சர்கள்

 

Assignment #5 – Chess Due: 1:15pm on Friday, May 17th

http://static.dailymirror.lk/assets/uploads/image_a31c5579df.jpg

  • கருத்துக்கள உறவுகள்

CH04272020_1-3.jpg

கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையினர்!

கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இவர்களில் 136 பேர் முழுயாக குணமடைந்துள்ளதுடன், 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

http://athavannews.com/கொரோனா-தொற்றுக்குள்ளான-30/

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று: 22 பேர் கடற்படையினர்

SLN-coronavirus-300x199.jpgஇலங்கையில் நேற்று மட்டும் 30 கோரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் 22 பேர் கடற்படையினர்.

இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக நேற்றிரவு அதிகரித்தது.

http://thinakkural.lk/article/39815

இலங்கையில் அதிகளவு போதைப்பொருள் 
அவை பெரும்பாலும் வருவது கடல் வழியாக 

அதில் சிங்கள கடற்படை அதிகம் 'கமிஷன்' எடுப்பது
பத்துப்பேரை விட்டால் ஒருவரை ( காசு தாராதவரை) படம் போட்டு பீலா காட்டுவது 

இதில் சில கரடிப்படை அங்கத்தவர்களும் பாவனையாளர்கள் ஆகி இருப்பார்கள்  
ஊழலால் உடல் பலவீனமாகி கொவிட் 19ம் தாக்க ... ஆடிபோயுள்ளது இந்த கொலைப்படை  

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎04‎-‎2020 at 21:08, Kapithan said:

அக்கோய்,

பெயர் குறிப்பிட்ட, குறிப்பிடாத....இன்னோரன்ன... புலுடா எல்லாம் என்னிடம் வேண்டாம். 😜

அவன் செய்த அநீதிக்கு  தண்டனை கிடைக்க வேண்டும். அது கோறோனாவாக இருந்தாலென்ன குறோனாவாக இருந்தாலென்ன அல்லது எலிக் காச்சலாக இருக்கலாம் அல்லது பூனைக் காச்சலாக இருந்துவிட்டே போகட்டும். ஆனால் சிங்களத்திற்கும், காட்டிக் கொடுத்தோர் கூட்டிக் கொடுத்தோர், அவர்கள் யாராக இருந்தாலும், இந்தியா உட்பட, தண்டனை அனுபவித்துத்தானாக வேண்டும். 😡

""அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்"" என்பதில் தமிழர்களுக்கு அசையாத நம்பிக்கையுண்டு. 🙂

(அதனால்தான் நீங்கள் அச்சமுறுகிறீர்களோ 🤔)

உங்களுக்கான கேள்வி: (Direct answer please )

1) சிங்களம், இந்தியா, காட்டிக் கொடுத்தோர், கூட்டிக் கொடுத்தோர் தண்டிக்கப்பட வேண்டுமா ?

பதில்: ஆம் / இல்லை

இதில் உங்கள் பதில் என்ன ?

(உங்களை இக்கட்டில் மாட்டிவிடும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் நீங்கள் அடிக்கடி சொக்காகிறீர்கள் அதனால் முள்ளை முள்ளால் [Shock ஐ Shock ஆல்] எடுப்போமென்கின்ற முயற்சிதான் இது 😎)

நான் எங்கே புலுடா விட்டேன்? ...முதலில் இருந்து எத்தனை தரம் திரும்ப ,திரும்ப எழுதுறது...உங்களுக்கு நிறைய நேரம் இருந்தால் போய் குத்துக் கரணம் போடுங்கோ...என்ர உசிரை வாங்க வேண்டாம்.
1) எம்மை அழித்தவர்கள் , அதனை  முன் நின்று நடத்தியவர்கள் , துணை நின்ற நாடுகள்  எல்லாம் அழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம் . முக்கியமாய் இந்தியா துண்டு ,துண்டாய் சிதற வேண்டும் ஆனால் ,
இந்த படை வீரர்கள் வெறும் அம்புகள் மட்டுமே ....எய்தவன் ,சனாதிபதி ,பிரதமர் ,அமைச்சர்கள் முதலானவர்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் இருக்கும் போது , வெறும் பணத்திற்காய் சண்டை பிடித்த படையினர் சாவதில் எந்த வித நியாயமில்லை என்பது என் கருத்து 
நாளைக்கே நாங்கள் பலமானவர்களாய் இருந்து கொண்டு  படை வீரர்களை கொண்டு எம்மை அழித்தவர்களை அழிக்க முடியும்...ஏன் என்றால் அவர்கள் பணத்திற்காய் தான் வேலை செய்பவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

நான் எங்கே புலுடா விட்டேன்? ...முதலில் இருந்து எத்தனை தரம் திரும்ப ,திரும்ப எழுதுறது...உங்களுக்கு நிறைய நேரம் இருந்தால் போய் குத்துக் கரணம் போடுங்கோ...என்ர உசிரை வாங்க வேண்டாம்.
1) எம்மை அழித்தவர்கள் , அதனை  முன் நின்று நடத்தியவர்கள் , துணை நின்ற நாடுகள்  எல்லாம் அழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம் . முக்கியமாய் இந்தியா துண்டு ,துண்டாய் சிதற வேண்டும் ஆனால் ,
இந்த படை வீரர்கள் வெறும் அம்புகள் மட்டுமே ....எய்தவன் ,சனாதிபதி ,பிரதமர் ,அமைச்சர்கள் முதலானவர்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் இருக்கும் போது , வெறும் பணத்திற்காய் சண்டை பிடித்த படையினர் சாவதில் எந்த வித நியாயமில்லை என்பது என் கருத்து 
நாளைக்கே நாங்கள் பலமானவர்களாய் இருந்து கொண்டு  படை வீரர்களை கொண்டு எம்மை அழித்தவர்களை அழிக்க முடியும்...ஏன் என்றால் அவர்கள் பணத்திற்காய் தான் வேலை செய்பவர்கள் 

நன்றி இரதி,

ஓர் அரசாங்கத்தின் பலம் என்பது அந்த நாட்டின் படைகள்தான். ஆயுதப்படைகள், சட்டமும் ஒழுங்கும் இவை இரண்டும்தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானம் செய்வதில் அடிப்படையானவை. கோட்டாபய இராணுவத்தை முன்னிறுத்துவது இதனால்தான். அதிகாரம் பலத்திதில் இருந்துதான் பிறக்கிறது. (அந்த அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது வேறு) 👍

எப்படிப் பார்த்தாலும் முழு அழிவையும் செய்தது ஆயுதப் படைகள்தானே. இங்கே ஆயுதப்படைகளின் தலைவர் சனாதிபதி. ஆகவே தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று வரும்போது அது சனாதிபதியிலிருந்து இராணுவ முகாம் சமையல்காறர் வரை உள்ளடங்கும். 😡

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 22:08, Kapithan said:

 

அவன் செய்த அநீதிக்கு  தண்டனை கிடைக்க வேண்டும். அது கோறோனாவாக இருந்தாலென்ன குறோனாவாக இருந்தாலென்ன அல்லது எலிக் காச்சலாக இருக்கலாம் அல்லது பூனைக் காச்சலாக இருந்துவிட்டே போகட்டும். ஆனால் சிங்களத்திற்கும், காட்டிக் கொடுத்தோர் கூட்டிக் கொடுத்தோர், அவர்கள் யாராக இருந்தாலும், இந்தியா உட்பட, தண்டனை அனுபவித்துத்தானாக வேண்டும். 😡

""அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்"" என்பதில் தமிழர்களுக்கு அசையாத நம்பிக்கையுண்டு. 🙂

 

👍 எனது நிலைப்பாடும் இதுவே!!

Edited by Eppothum Thamizhan

இறுதி கட்டத்தை அடைந்த சோதனை நடவடிக்கைகள்

ஸ்ரீலங்காவில் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் கடற்படையினர் என கூறப்படுகின்றது.

அந்த வகையில் வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைத்து சிப்பாய்களின் மாதிரிகளையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது குறித்த செயற்பாடு இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 705ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142381?ref=home-imp-parsely

சுயதனிமையில் இருந்த கடற்படை வீரரொருவரின் பாட்டி மரணம்

விடுமுறையை நிறைவு செய்து மீண்டும் வெலிசர கடற்படை முகாமுக்கு வருகைத் தந்த நிலையில், கொரோனா தொற்றுள்ளாகியுள்ள கடற்படை வீரரின் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த, பெண்ணொருவர் இன்று (3) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி விடுமுறையில், அரநாயக்க பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு வருகைத் தந்த குறித்த கடற்படை வீரர், 27ஆம் திகதி மீண்டும் முகாமுக்கு வந்த நிலையில், 28ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்கள் சுயதனிமைக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே, அவரது பாட்டி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பான பரிசோதனைகளை சுகாதார தரப்பு முன்னெடுத்து வருவதுடன், இவரது சடலத்தை தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளுக்கு அமைய தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சுயதனிமையில்-இருந்த-கடற்படை-வீரரொருவரின்-பாட்டி-மரணம்/175-249637

திடீரென மயங்கி விழுந்த ஸ்ரீலங்கா கடற்படை வீரர் ஒருவர் மரணம்

தம்புள்ளை பொது கழிவறைக்கு அருகில் விழுந்து கிடந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்ததாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சிப்பாய், சுகவீனம் காரணமாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைக்கு எதிரில் இன்று விழுந்து கிடந்துள்ளார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு பின் அவரை சிலர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கொஸ்கம, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கலேவெல பல்லேபொல பிரதேசத்தை சேர்ந்த துஷார குமார ஜயசிங்க என்ற இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது பயண பொதியை தம்புள்ளை பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைக்கு வெளியில் வைத்து விட்டு, உள்ளே சென்று விட்டு வெளியில் வந்த இராணுவச் சிப்பாய், கட்டணம் அறவிடும் நபரிடம் கட்டணத்தை செலுத்தும் போது திடீரென கீழே விழுந்ததாக கட்டணம் அறிவிடும் நபர் கூறியுள்ளார்.

அவர் இராணுவச் சிப்பாய் என்பதை அறிந்த பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் 30 நிமிடங்கள் வரை அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கடுமையாக முயற்சித்துள்ளனர். அந்த இடத்திற்கு அருகில் இராணுவத்தினர் சிலரும் இருந்துள்ளனர்.

பலர் அந்த இடத்திற்கு செல்ல தயங்கிய நிலையில், இளைஞர்களும், யுவதிகள் சிலரும் இராணுவச் சிப்பாய்க்கு முதலுதவி செய்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு இளைஞர்கள் அருகில் இருந்த முச்சக்கர வண்டியில் தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142474

கடற்படை சிப்பாய் ஒருவரது தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா

மாத்தளை மாவட்டத்தில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை, யட்டவத்த செலகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு நோய் தொற்றியுள்ளது.

குறித்த பிரதேசததிலுள்ள கடற்படை சிப்பாய் ஒருவரது தாய் மற்றும் தந்தைக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

குறித்த இருவரும் இரனவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

https://www.ibctamil.com/srilanka/80/142682

கடற்படை தம்பதியின் குழந்தைக்கும் கொரோனா தொற்று

ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிசறை முகாமை சேர்ந்த கடற்படை தம்பதியின் குழந்தைக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை, கொரோனா தொற்றில் இருந்து 232 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 563பேர் வைத்திய சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடற்படை-தம்பதியின்-குழந்தைக்கும்-கொரோனா-தொற்று/175-249927

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 27 பேருக்கு கொரோனா; 24 கடற்படையினர்! இரு குடும்பத்தினர்! டுபாயிலிருந்து திரும்பியர் மற்றவர்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் என நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 27 பேரில் 24 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி இன்று காலை தெரிவித்தார்.

ஏனையவர்களில் இருவர் கடற்படைச் சிப்பாய் ஒருவரின் குடும்பத்தவர்களாவர். கடற்படைச் சிப்பாய் ஒருவரின் மனைவியும், ஒரு வயது நிரம்பிய குழந்தை ஒன்றுமே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட டுபாயிலிருந்து நேற்று அதிகாலை கொழும்பு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/40820

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நேற்று 27 பேருக்கு கொரோனா; 24 கடற்படையினர்! 

பேர - новый тренд смотреть онлайн на сайте Trendovi.ru

"கடற் படையினரின்"   பேரை,  கேட்டவுடனே...  சும்மா... அதிருதில்ல.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 22:08, Kapithan said:

அவன் செய்த அநீதிக்கு  தண்டனை கிடைக்க வேண்டும். அது கோறோனாவாக இருந்தாலென்ன குறோனாவாக இருந்தாலென்ன அல்லது எலிக் காச்சலாக இருக்கலாம் அல்லது பூனைக் காச்சலாக இருந்துவிட்டே போகட்டும். ஆனால் சிங்களத்திற்கும், காட்டிக் கொடுத்தோர் கூட்டிக் கொடுத்தோர், அவர்கள் யாராக இருந்தாலும், இந்தியா உட்பட, தண்டனை அனுபவித்துத்தானாக வேண்டும். 😡

""அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்"" என்பதில் தமிழர்களுக்கு அசையாத நம்பிக்கையுண்டு. 🙂

Bildergebnis für கடவுள் தண்டனை

இன்று இனங்காணப்பட்ட 9 பேரும் கடற்படையினர்

கொரோனா வைரஸ்  தொற்றாளர்களாக இன்று (09) இனங்காணப்பட்ட 9 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-இனங்காணப்பட்ட-9-பேரும்-கடற்படையினர்/175-249989

  • கருத்துக்கள உறவுகள்

879 கொரோனா தொற்றாளர்களில் 435 பேர் கடற்படையினர்

srilanka-navy1-300x199.jpgஇலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட 879 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 435 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவர்களைத் தவிர 10 இராணுவத்தினரும், விமானப் படை சிப்பாய் ஒருவரும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகிய 34 உறவினர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

http://thinakkural.lk/article/41499

கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை கடற்படை மறைக்கின்றதா? மறுக்கின்றது பாதுகாப்பு அமைச்சு

கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினர் குறித்த தகவல்களை கடற்படை அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளிற்கு வழங்க மறுக்கின்றனர் என வெளியாகியுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

ஏப்பிரல் 22 ம் திகதி கடற்படையை சேர்ந்த முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டதிலிருந்து கடற்படையினரிற்கான பிசிஆர் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை கடற்படைக்குள் கொரோன பரவல் தொடர்பான உண்மைநிலையை கடற்படை மூடிமறைத்துள்ளது என ஊடகங்களில் வெளியான தகவல்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளார்.srilanka-navy1-300x199.jpg
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள படையினர் மற்றும் சோதனை நடவடிக்கையினர் குறித்த தகவல்களை வெளியிடுவதில் கடற்படையினர் உட்பட முப்படையினர் கடுமையான வெளிப்படை தன்மையை பின்பற்றுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

kamal-gunawatdhana-300x175.jpg
வெலிசர கடற்படை முகாமில் நோயாளிகள் அடையாளம் காணப்பட தொடங்கியதிலிருந்து கடற்படையினர் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சோதனை முடிவுகள் உட்பட அனைத்து விடயங்களையும் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியிடமும்,சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும்,அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுகாதார சேவை இயக்குநர்கள் மற்றும் காவல்துறையினரிடமும் வழங்கிவருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.srilanka-navy-2-300x165.jpg
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் சோதனைகள் குறித்த அனைத்து தகவல்களையும் பொறுப்பான அதிகாரிகளிடமும் சுகாதாரஅதிகாரிகளிடமும் இலங்கை கடற்படையினர் பகிர்ந்துவருகின்றனர் கமால்குணரட்ண தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/41479

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

879 கொரோனா தொற்றாளர்களில் 435 பேர் கடற்படையினர்

இலங்கையில்.... கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில், 50 % மானோர் கடற் படையினர்.
மற்ற  15 வீதத்தினர் இராணுவம் என்றாலும்....
பொது மக்கள் 35 வீதத்தினர் மட்டுமே பாதிக்கப் பட்டுள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவும் 10 பேருக்கு கொரோனா! 9 கடற்படையினர்! மொத்த எண்ணிக்கை 935 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 935 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 925 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் கடற்படைச் சிப்பாய் ஒருவரின் உறவினர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை கொரோனாதொற்றால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.

http://thinakkural.lk/article/41922

உலகத்தை ஏமாற்ற சிங்களம் திட்டமிட்டு பொய்யான  தகவல்களை கூறுகிறதோ என எண்ணத்தோன்றுகின்றது. 

அதாவது, மக்களை விட 'வீரர்கள்' அதிகமாக பாதிக்கப்பட்டு, மக்களை காப்பாற்றுகிறார்கள் என்ற எண்ணப்பாட்டை மக்கள் மனங்களில் விதைக்கின்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

போர் வெற்றி விழாவிற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரு கடற்படையினருக்கு கொரோனா

11வது தேசிய வீரர்கள் நினைவுதின நிகழ்விற்கான ஒத்திகையில் கலந்துகொண்ட இரண்டு கடற்படையினருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார அவர்களுடன் தொடர்பிலிருந்த 30 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.navy-spokesmen-1-1.jpg
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இரு கடற்படை வீரர்களையும் மேலதிக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பரிசோதனை முடிவிற்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.srilanka-navy-3-300x190.jpg

கடந்த காலங்களில் முதலில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிற்கும் பின்னர் எடுக்கப்பட்ட சோதனைகளிற்கும் இடையில் முடிவுகளில் வித்தியாசமிருந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாகவே இரண்டாவது சோதனையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் தொடர்பிலிருந்த கடற்படையினரையும் தனிமைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/42447

  • கருத்துக்கள உறவுகள்

ஒலுவில் முகாமில் கொரொனா கண்டுபிடிக்கப்பட்ட 28 கடற்படையினரை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி

  • கனகராசா சரவணன்

5000-2-12-1024x473.jpgஅம்பாரை ஓலுவில் தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 28 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை மட்டக்களப்பு காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

வெலிசறை கடற்பரட முகாமைச் சேர்ந்த 80 பேரை அம்பாறை ஒலுவில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் இவர்ககளை பரிசோதனை செய்ததில் நேற்று 10 போருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை வெலிகந்தை கண்டக்காடு இராணுவ சிகிச்சை முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஏனைய கடற்படையினருக்கு பரிசோதனை மேற்கொண்ட இன்று 28 பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/42505

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.