Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தராகி சிவராம் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தராகி சிவராம் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

IMG-c54ec6f519fc0a7fc34629d42043526f-V-960x720.jpg?189db0&189db0

 

 

2005ம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் (மாமனதர் தராகி) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா – ஏ9 வீதிக்கு அருகே போராட்டப் பந்தல் அமைத்து சுழற்சி முறையில் 1,167 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர்.

இதன்போது மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

  • IMG-7deae69b6938e290ce886cf216785680-V-1
  • IMG-c54ec6f519fc0a7fc34629d42043526f-V-1

     

     

https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை  உலகிற்கு தனது பன்முக ஆற்றல்கள் ஊடாக உலகிற்கு எடுத்து கூறிய மனிதர். இவராலேயே பலரும் ஆங்கிலத்தில் எமது தரப்பின் நியாயத்தை எழுதவும் கற்றுக்கொண்டார்கள். 

ஒரு உன்னத ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர், மாமனிதர்!

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் அச்சறுத்தலுக்கு மத்தியிலும் இவர்களுக்கு இருந்த ஊடக தாகம் 
இன்றைய விபச்சார ஊடகங்களுக்கு இல்லை 

அஞ்சலிகள்!

கொலைகாரக் கோஷ்டியில் பங்காளியான சித்தார்த்தன் இன்னமும் நல்லவனாக வலம் வருகிறான்!

மாமனிதர் சிவராமின் 15ஆவது ஆண்டு நினைவு விழா!

In இலங்கை     April 29, 2020 9:36 am GMT     0 Comments     1141     by : Litharsan

மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஊடக அமையகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக காந்திபூங்காவில் உள்ள நினைவுத் தூபியில் நிகழ்வினை நடத்தாமல் ஊடக அமையத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், ஊடகவியலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிதரன் உட்பட ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

1959ஆம் ஆண்டு ஓகஸ்ற் 11இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தனது முதல் கட்டுரையை எழுத ஆரம்பித்து தொடர்ந்து கட்டுரை எழுதி வந்ததுடன் தமிழ் பத்திரிகைகளிலும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார்.

தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த சிவராம் அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Journalist-Sivaram-15th-Years-Remembranc

Journalist-Sivaram-15th-Years-Remembranc

Journalist-Sivaram-15th-Years-Remembranc

Journalist-Sivaram-15th-Years-Remembranc

Journalist-Sivaram-15th-Years-Remembranc

Journalist-Sivaram-15th-Years-Remembranc

Journalist-Sivaram-15th-Years-Remembranc

Journalist-Sivaram-15th-Years-Remembranc

  • கருத்துக்கள உறவுகள்

தர்மரத்னம் சிவராம் : தான் மிகவும் நேசித்த நீதிக்கான போராட்டத்தில் அப்பா மரணித்தார்

April 29, 2020

sivaram.jpg

போர்ச் செய்தி ஆய்வாளரும் இருமொழி பத்திரிகையாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னோடியுமான தர்மரத்னம் சிவராம், தலைநகருக்கு அருகில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடந்த ஒன்றரை தசாப்தமாக நீதி பெற்றுக்கொடுக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது.

அவரது மூன்று பிள்ளைகள் தகப்பனான சிவராம் தொடர்பில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதிய கட்டுரை, ஜே.டி.எஸ் லங்கா (JDSLanka) இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அப்பா மரணித்து இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இன்றுவரை அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் குற்றவாளியாக காணப்படவில்லை.இது குறித்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை.எங்கள் குடும்பமும் நீதியை எதிர்பார்க்கவில்லை.அரச நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எழுதுகின்ற ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்தும் இலக்குவைக்கின்றது.

ஸ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட ஏனைய பல ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கூறாத குறைபாடு தொடர்ந்தும் நீடிக்கின்றது. எங்கள் அப்பாவின் உடல் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே வீசப்பட்டிருந்தது என்பது நாட்டின் ஊடக சுதந்திரத்தின் நிலை மற்றும் தம்முடன் உடன்படாதவர்களை மெளினிக்க செய்வதற்கு அரசு எந்த அளவிற்கும் செல்லும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

அதிஷ்டவசமாக சிவில் யுத்த காலப் பகுதியிலும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான பதிலைத் தேடும் பலரை போல் அல்லாது,  எங்கள் தந்தையின் உடலை மீட்டெடுக்க முடிந்தது.

ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றி விவாதிக்காமல், எங்களது தந்தை பற்றி பேசுவது கடினம் என்பதுடன், சாத்தியமற்றது என்றே நாங்கள் உணர்கின்றோம்.போராதனை பல்கலைகழகத்தில் கல்வி கற்ற ஒரு இளைஞனாக ஸ்ரீலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளால் எமது தந்தை பாதிக்கப்பட்டார்.

அதன்விளைவாக தனது கல்வியை இடைநிறுத்த தீர்மானித்து, ஸ்ரீலங்கா அரசினால் கட்டமைப்பு ரீதியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தக் நோக்கத்திற்காக அவர் தனது வாழ்க்கையையும் எழுத்துக்களையும் அர்ப்பணித்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம்  முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வழிமுறையை வாழும் போது அவர் கண்டிருந்தால், அவர் எவ்வளவு மனமுடைந்திருப்பார் என்பதையும் அவரது பிள்ளைகளாகிய நாம் அடிக்கடி சிந்திக்கின்றோம். ஸ்ரீலங்கா அரசால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான அட்டுழீயங்கள், அவரின் மனமுடையச் செய்திருக்கும்.

அதனால் தான் எமது தந்தைக்கு மரியாதை செலுத்துவது மாத்திரமல்லாமல், யுத்தத்தின் போது தமது உயிரை நீத்த அனைவரையும் குறிப்பாக போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் படுகாலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்கின்றோம்.

தற்போதைய தருணத்தில் எங்களது தந்தைக்கான நீதி என்பது, முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூற வேண்டும்.

ஆயுத முரண்பாட்டின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் தொடர்ந்தும் காணாமல் போயுள்ள தமது அன்புக்குரியவரிய தமிழர்களின் குடும்பங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம். தொடர்ந்து இடம்பெயர்ந்துவாழும் குடும்பங்களுக்கும் வடக்கு கிழக்கில் அரச ஒடுக்குமுறையின் கீழ் வாழும் அனைவருக்கும் நீதி அவசியம்.

அவரின் பிள்ளைகளாக நாம், எங்களை பாதுகாத்து, எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சலுகை பெற்ற வாழ்க்கையை வழங்கிய மிகவும் அன்புக்குரிய தந்தையாக அப்பாவை நாம் நினைவில் வைத்துக்கொள்கின்றோம்.

பொருளாதார ரீதியாக சிரமப்படும் தனக்கு தெரிந்த மாணவர்களுக்கு நிதி உதவிகளையும் அவர் வழங்கியுள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தை விடவும் தேவை உள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், தனது எழுத்துக்கள் மூலம் தனது மக்களின் இறையாண்மையை பாதுகாப்பது, அவரது மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்தது.

பல்வேறு உயிர்அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபின்னரும் கூட வெளிநாட்டிற்கு குடிபெயர்வதற்கு மறுத்த அவர், தனது பணிகள் ஸ்ரீலங்காவிலேயே இடம்பெறும் எனவும் வாதிட்டிருந்தார்.

பின்நோக்கி பார்க்கும் போது, மிகவும் நேசித்த விடயத்தை செய்து, அப்பா மரணித்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டம் ஒருநாள் நிதர்சனமாகும் என நம்புகின்றோம்.

வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், சிவராம்  அன்றூ சேரலாதன் 

 

http://globaltamilnews.net/2020/141892/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேனாப் போராளி சிவராமின் பெயரால் உறுதி கொள்வோம்!

கொவிட்-19 எனும் கொரோனா வைரஸின் பாதிப்புகளால் உலகிலுள்ள அனைத்து மக்களும் பெரும் நெருக்கடியினை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்களின் மானசீக குருவாக, பிரமிப்பாக, உந்துதலாக, ஊக்கியாக இருக்கின்ற தராகி சிவராமின் 15வது ஆண்டு ஞாபகார்த்த தினத்தினை நினைவு கூரவேண்டிய கட்டாயத்திலும் நாம் இருக்கிறோம் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் எல்.ரி.அதிரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று (29) சிவராமின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,

‘இலங்கையின் இன விடுதலைப் போராட்டமானது பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. இது வடக்கு கிழக்கு பிரதேசம் சார்ந்தும், தேசிய அளவிலும், சர்வதேச பூகோள ரீதியிலும் அதன் தாக்கத்தினை உணர்த்தியும், கடந்துமே நகர்ந்து வந்திருக்கிறது. நகர்ந்து கொண்டும் இருக்கிறது.

இந்நிலையில் இதற்குள் அகப்பட்டு தங்கள் உயிரைக் கொடுத்த, தங்களைத் தொலைத்துக்கொண்ட தேசம் கடந்து, தேசம் விட்டுப் புலம்பெயர்ந்த ஊடகக்காரர்கள் ஏராளம். அந்த வகையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்காகவே தன்னை அனைத்து வகைகளிலும் அர்ப்பணித்த ஒருவராக சிவராம் இருக்கிறார்.

நினைவு, ஞாபகார்த்த தினங்கள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கான விளக்கங்களே இல்லாத கால கட்டமாக, ஒருவருக்கான நினைவுபடுத்தலை வெறும் காட்சிப்படுத்தலாக ஏற்படுத்திக் கொள்கின்ற நிலைமைக்கு அப்பால் நினைவை மீட்டுப்பார்க்க மட்டுமே காலம் இடம் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களே அதிகம்.

அந்த வகையில் தன்னுடைய பேனாப் போராட்ட வரலாற்றினை மிக அழுத்தமாகவும் தெளிவாகவும் பதிவு செய்துவிட்டு இலங்கையின் தலைநகரிலுள்ள நாட்டின் சட்டவாக்கத் தளத்துக்கு அருகிலேயே படுகொலையான ஊடகப் போராளியான சிவராமின் ஞாபகார்த்த தினத்தினை தங்களுடைய வீடுகளிலேயே நினைவுகூரும்படி அனைத்து தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல அவருடன் கூடி, பழகி, நினைவுகளோடு இலங்கை நாட்டில் மாத்திரமல்ல உலகின் அனைத்துப் பாகங்களிலும் வாழும் அனைவரையும் கிழக்கிலங்கை ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டிக்கொள்கிறது.

தனக்கிருந்த உயிருக்கான அச்சுறுத்தல்களை உணர்ந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாது தமிழ்த் தேசிய நலனும், அதன் எதிர்காலமுமே முக்கியமும் காலத்தின் தேவையுமாகும் என்ற தீராத விடாப்பிடியுடன் செயற்பட்ட ஒரு எழுத்தாளரை, கட்டுரையாளரை, ஊடகவியலாளரை நாம் அனைவரும் இழந்து போனது பெரும் துர்ப்பாக்கியமே.

ஆனாலும் அவருடைய நினைவு நாட்களின் ஊடாக அவர்கொண்ட, விட்டு, விதைத்துச் சென்றுள்ள காலங்காலமான வரலாற்றுப் பணியினை தனிப்பட்ட சுயநலன்களுக்காக, காட்சிப்படுத்தல்களுக்காக அல்லாமல் அவர் புகட்டிய பாதையில் தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டியதே ஒவ்வொரு மக்களதும் ஊடகக்காரர்களதும், செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களதும் கடமையாகும்.

நாட்கள் கடந்து போகின்றன அதன் நகர்வில் நாமும் போகிறோம் என்றல்லாமல் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை ஒருமித்த பலமாக தமிழ் மக்கள் அரசியல் மயப்படலின் மூலமாகவே பெற்றெடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்த சிவராமின் சிந்தனையை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான தீர்மானமான உறுதி மொழியினை எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.

தமிழர் பிரதேசங்களின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த அதன் ஒவ்வொரு நிலைமைகளையும் புரிந்திருந்த சிவராமைப்போன்ற பல்துறைப் புலமையுள்ள ஒரு ஊடகப் போராளியை இழந்துவிட்ட தமிழ் ஊடகத்துறை அதற்காகக் கவலை மட்டுமே பட்டுக் கொள்ள முடிகிறது.

தமிழ்த் தேசியவாதத்தினுடைய தேவை, போதாமைகள், சிக்கல்ககள் பற்றிய சிந்தனைகளுடன் செயற்பட்டிருந்த சிவராம் போன்ற பேனா பிடித்த போராளிகள் தமிழ் ஊடகத்துறைக்குக் கிடைக்குமா என்ற கவலை இன்னும் தொடர்கிறது.

தேசியம் என்பதில் முக்கியமான கூர்மையான அங்கமாக ஊடகங்களும் ஊடகங்களின் பணிகளும் அமைவதே இன்றைய தகவல் யுகத்தில் தேசிய மட்டத்திலான, சர்வதேச தளங்களிலான மூலோபாயத்தின் கட்டமைப்புக்கு உதவும் என்ற சிந்தனை கொண்ட சிவராம் தமிழ் ஊடகத்துறை அவ்வாறானதொரு நிலையை எட்டிப்பிடிக்கவேண்டும் என்று கனவு கண்டிருந்தார். அதற்கான பணிப் பங்களப்பினைச் செய்தார். நாம் எதனைச் செய்தோம் என்று ஒவ்வொருவரும் இந் நாளில் கேள்விகளைத் தொடுத்துக் கொள்வோம்.

ஒவ்வொருவரும் கால ஓட்டத்தின் ஊடு பயணித்து காலமாற்றங்களினால் கற்பிக்கப்பட்டே வழிநடத்தப்படுகிறார்கள் என்ற வகையில் சிவராம் கற்றுக் கொடுத்த பாடங்களினுடாக சிவராம் பற்றிய ஒட்டுமொத்த புரிதலையும், பார்வையையும் தெளிவாக்கிக் கொண்டு பயணிப்போம் என்று இந்த ஞாபகார்த்த தினத்தில் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்.’ – என்றார்.

 

https://newuthayan.com/பேனாப்-போராளி-சிவராமி/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்........!    

Dharmaretnam Sivaram: 'Appa died doing what he loved most'

This year marks the 15th anniversary of our father’s death and to this day, no one has been convicted for his murder. We are not surprised by this and neither is our family looking for justice. The Sri Lankan state has and continues to target journalists who write a counter narrative to the state's propaganda. There continues to be a lack of accountability for many other journalists who have disappeared, been assaulted, or murdered in Sri Lanka. The fact that our Appa’s body was dumped in close proximity to the Sri Lankan Parliament was in itself a stark reminder about the state of media freedom in the country and the extent to which the state would go to silence someone who disagrees with their discourse.

Thankfully, we were able to recover our father’s body and have some closure; unlike the many people who continue to search for answers about their loved ones who have gone missing during and after the civil war.

We feel that it is both difficult and impossible to talk about our father without discussing the struggle of the Tamil people living in Sri Lanka. As a young man studying at Perdaniya University, our father was impacted by the pogroms against the Tamil population in Sri Lanka. As a result, he decided to discontinue his education and committed himself to fight for the liberation of the Tamil people who were being structurally oppressed by the Sri Lankan state. He went on to dedicate his life and writings towards this cause.

As his children, we also often think about how shattered he would have been if he had lived to witness the way the armed struggle for the liberation of the Tamil people ended in the Mulivaikal Massacre. The horrible atrocities committed against the thousands of Tamil people by the Sri Lankan state would have broken him.

That is why we feel the need to not only pay homage to our father but also to commemorate all who have lost their lives during the war, especially the thousands of Tamil people who were massacred during the end of the war in Mulivaikal. Justice for our father at this time would be holding the Sri Lankan state accountable for the war crimes committed during the Mulivaikal Massacre. Justice and accountability is needed for the Tamil families whose loved ones surrendered to the army during the final phase of the armed conflict and continue to be missing. Justice is needed for families who continue to live in displacement and all those who live under state oppression in the Northern and Eastern provinces.

http://www.jdslanka.org/index.php/analysis-reviews/reflections/944-dharmaratnam-sivaram-appa-died-doing-what-he-loved-most

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் துரோகியாகிருப்பார்  இறந்த படியால் தியாகியாகிட்டார். 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

 

இவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் துரோகியாகிருப்பார்  இறந்த படியால் தியாகியாகிட்டார். 

 

துரோகிக்கு அஞ்சலிகள்.....தியாகிக்கு வீரவணக்கம்....இது சரியா?

9 hours ago, ரதி said:

 

இவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் துரோகியாகிருப்பார்  இறந்த படியால் தியாகியாகிட்டார். 

 

எதை வைத்து அப்படி சொல்லுகிறீர்கள்? போராட்ட காலத்தில் கருணாவையும் , பிரபாகரனையும் ஒற்றுமைப்படுத்துவதிலும் போராட்டம் வீணாகிவிடக்கூடாது என்பதிலும் படுபடடவர்। தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை தமிழிலும் , ஆங்கிலத்திலும் உலகுக்கு வெளிப்படுத்தியவர்। தமிழ் மக்களால் நேசிக்கப்படடவர்। இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு அந்த நேரத்தில் ஏட்படட மிக பெரிய இழப்பு। 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

எதை வைத்து அப்படி சொல்லுகிறீர்கள்? போராட்ட காலத்தில் கருணாவையும் , பிரபாகரனையும் ஒற்றுமைப்படுத்துவதிலும் போராட்டம் வீணாகிவிடக்கூடாது என்பதிலும் படுபடடவர்। தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை தமிழிலும் , ஆங்கிலத்திலும் உலகுக்கு வெளிப்படுத்தியவர்। தமிழ் மக்களால் நேசிக்கப்படடவர்। இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு அந்த நேரத்தில் ஏட்படட மிக பெரிய இழப்பு। 

கருணாவுக்கு பின் இருந்து பிரதேசவாதத்தை ஊட்டி அவரை பிரிந்து போக வைத்தவர்களில் இவர் ,ராஜன் சத்திய மூர்த்தி போன்றோர் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதோ?
தான் தப்புவதற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும் புலிகளையும் ,கருணாவையும் சேர்த்து வைக்க வெளிக்கிட்டால் நாங்கள் அவர் நல்லவர் என்று நம்பிடுவமாக்கும்.
இவற்ற வரலாற்றை எடுத்து பார்த்தால் எத்தனை பேரை சுழிச்சு வந்திருப்பார் என்று தெரியும்.
மற்றவைகளை சுழிச்ச மாதிரி தலைவரையும் ,கருணாவையும் சுழிக்க வெளிக்கிட்டார்...மண்ணோடு ,மண்ணாகிப் போயிட்டார் 
ஆத்மா சாந்தியடையட்டும் 

 

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கியின் பிள்ளைகளான வைஷ்ணவி சிவராம்| வைதேகி சிவராம் | அன்ட்ரூ சேரலாதன் தர்மரட்னம் ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த தந்தையின் 15ம் ஆண்டு நினைவஞ்சலியின் தமிழாக்கம்!

இந்த ஆண்டு எங்கள் தந்தையின் மரணத்தின் பதினைந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இன்றுவரை, அவரது கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. இதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை, எங்கள் குடும்பம் அவர்களிடம் இருந்து எந்த நீதியையும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு எதிராக உண்மை நிலைமைகளை எழுதும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

இலங்கையில் காணாமல் போன, தாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்கள் குறித்த பொறுப்புக்கூறல் பற்றிய கவனக்குறைவு இன்றுவரை இலங்கையில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

கொலை செய்யப்பட்ட எங்களது தந்தையின் உடல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே காணப்பட்டதென்பது இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் நிலை மற்றும் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு உடன்படாத ஒருவரை மௌனிக்க வைக்க இலங்கை அரசு எந்த அளவிற்கு செல்லும் என்பது பற்றிய ஒரு தெளிவான நினைவூட்டலாகும்.

உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றித் தொடர்ந்து பதில்களைத் தேடும் பலரைப் போலல்லாமல்; எங்கள் தந்தையின் உடலை மீட்டெடுக்க முடிந்தமைக்கும், மேலும் சில உண்மைகளை அறிய முடிந்தமைக்குமாக நாங்கள் நன்றியுள்ளவர்கள்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்கள் தந்தையைப் பற்றிப் பேசுவதென்பது கடினமானதும், சாத்தியமற்றதுமானதும் என்பதை நாங்கள் உணர்கிறோம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு இளைஞனாக, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளால் எங்கள் தந்தை பெரிதும் துயரப்பட்டார்.

இதன் விளைவாக, அவர் தனது கல்வியை நிறுத்த முடிவுசெய்து, இலங்கை அரசால் கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் தனது வாழ்க்கையையும் எழுத்துக்களையும் இந்த நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடிவடைந்த வழியைக் காண அவர் வாழ்ந்திருந்தால் அவர் எவ்வளவு சிதைந்திருப்பார் என்பதையும் அவரது பிள்ளைகளாகிய நாங்கள் அடிக்கடி சிந்தித்துப் பார்க்கின்றோம். இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எதிராக அங்கு நிகழ்த்தப்பட்ட கொடூரமான அட்டூழியங்கள் அவரை உடைத்துப் போட்டிருக்கும்.

அதனால்தான், எங்கள் தந்தைக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், போரின்போது உயிரிழந்த அனைவரையும், குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர வேண்டிய அவசியத்தையும் நாங்கள் உணர்கிறோம்.

இந்த நேரத்தில் கொலையுண்ட எங்களது தந்தைக்கான நீதி என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்கள் குறித்த நீதியும், பொறுப்புக்கூறலும் அந்த இளைஞர்கள் மீது அன்பு வைத்துள்ள அவர்களது குடும்பங்களுக்குத் தேவையானது.

இடம்பெயர்வுகளில் தொடர்ந்து வாழும் குடும்பங்களுக்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசின் ஒடுக்குமுறையின் கீழ் வாழும் அனைவருக்கும் முறையான நீதி தேவையானதாகும்.

எங்களைப் பாதுகாத்து, எங்களுக்கு அடைக்கலம் தந்ததோடு மேலும் சிறப்பான வாழ்க்கையை எங்களுக்கு வழங்கிய மிகவும் அன்பான தந்தையாக எங்களது தந்தையை அவரது குழந்தைகளாகிய நாம் நினைவில் கொள்கிறோம்.

அவர் வாழ்ந்த காலத்தில் தனக்குத் தெரிய வந்த போதெல்லாம் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். இருப்பினும், அவரது குடும்பத்தை விடவும், உதவி தேவைப்படுபவர்களை ஆதரிப்பதும், தனது எழுத்தின் மூலம் தனது தமிழ் மக்களின் இறையாண்மையைக் காப்பதும் அவரது மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்தது. பல உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட பின்னரும் அவர் வெளிநாடு செல்ல மறுத்து, தனது பணியும், சேவையும் இலங்கையில் இருப்பதாகவே உறுதியாக வாதிட்டார்.

இவற்றையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது, அப்பா தான் மிகவும் ஆழமாக நேசித்ததைச் செய்து அதற்காகத் தனது உயிரைக் கொடுத்தார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம்.

(ந.முரளிதரன்)

Image may contain: 1 person, eyeglasses and closeup
 
 
 
16 hours ago, ரதி said:

கருணாவுக்கு பின் இருந்து பிரதேசவாதத்தை ஊட்டி அவரை பிரிந்து போக வைத்தவர்களில் இவர் ,ராஜன் சத்திய மூர்த்தி போன்றோர் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதோ?
தான் தப்புவதற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும் புலிகளையும் ,கருணாவையும் சேர்த்து வைக்க வெளிக்கிட்டால் நாங்கள் அவர் நல்லவர் என்று நம்பிடுவமாக்கும்.
இவற்ற வரலாற்றை எடுத்து பார்த்தால் எத்தனை பேரை சுழிச்சு வந்திருப்பார் என்று தெரியும்.
மற்றவைகளை சுழிச்ச மாதிரி தலைவரையும் ,கருணாவையும் சுழிக்க வெளிக்கிட்டார்...மண்ணோடு ,மண்ணாகிப் போயிட்டார் 
ஆத்மா சாந்தியடையட்டும் 

 

ராஜன் சத்தியமூர்த்தியை அறிவேன்। இவர் சிங்கள கட்சிகளை பிரதிநிதிப்படுத்திய ஒரு நபராக காணப்படடர்। சிவராமைபற்றி அவ்வளவாக எனக்கு தெரியாவிடடாலும் அவருடைய பத்திரிகை எழுத்துக்களில் அப்படி பிழையாக எதையும் காணவில்லை। இருந்தாலும் நீங்கள் அறிந்த அளவுக்கு எனக்கு அவரைப்பற்றி தெரியவில்லை। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.