Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Nathamuni said:

கேட்டுக்கொண்டிருந்த சிங்களவர்.... அது ஒண்டும் பிரச்னை இல்லை.... எண்டு போனை போட்டு.... பேசி விட்டு... நாளைக்கு இந்த இடத்துக்கு போய்... இந்த ஆபிசரை பாருங்கோ என்று சொல்லி விட்டு... போகும் போது.... ஒரு விஸ்கி போத்தலுடன் போங்கோ என்று கண்ணடித்தார்.....

மறு நாளே அலுவல் முடிந்தது.

விஸ்கி போத்தல்கள் கொஞ்சம் வேலை செய்யும்தான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது 

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/5/2020 at 06:51, nedukkalapoovan said:

மிகவும் நல்ல விடயங்கள். எனக்குத்தெரிந்த ஒரு பத்திரிகையாளர் நண்பி நிறய குடும்பங்களை சந்தித்து பேட்டி எடுத்து பத்திரிககைகள் மற்றும் humans of Jaffna என்று முகநூலிலும் நிறய போட்டிருந்தவ. அத்துடன் எமது பிள்ளைகளுக்கு ஆங்கிலம்  படிக்க, Professional development , personal development , வெளிநாடுகளில் எவ்வாறு scholarship எடுத்து படிப்பது என்பனவும் பிரயோசனமாக இருக்கும். கைதடியில் அழகான ஒரு Siddha Teaching Hospital hospital இருக்கு. அங்கு போய்  நிறைய மூலிகைகளின் படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். அது Government subsidized hospital . நன்றாக பராமரிக்கிறார்கள். ஆனால் எமது சனம்  ஒண்டும் அங்க போய் தமது நிறய நோய்களுக்கு  நிரந்தர தெரிவு காணாமல் ஆஸ்பத்திரியில் போய் தற்காலிக நிவாரணம் தரும் மருந்துகளையே எடுக்கிறார்கள். இப்படி யாரும் போகாவிட்டால் விரைவில் மூடி விடுவார்கள். அத்துடன் வடக்கில் தொடங்கப்படும் இவ்வாறான முயற்சிகள் பெரிய அளவில் தொடங்கப்படுவதில்லை. அல்லது போதிய ஆதரவு மக்களிடம் இருந்து கிடைப்பதில்லை. அதனால் பெரிய அளவில் அவைகள் வளருவதும் இல்லை நிலைப்பதும்  இல்லை. எனக்கு இப்படி ஒரு விருப்பம் இருப்பதால் இவற்றை பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன். சரசாலை  பறவைகள் சரணாலயம் நிறைய பறவைகள் வந்து தாங்கும் இடம். அதனை மேலும் பெருப்பிக்கலாம் . மன்னார்  வங்காலை சரணாலயமும் பெரிய நிலப்பரப்பில் இருக்கு. ஆனால்  கவனிப்பு இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

பிக்பாக்கெட் காரன் போல இருக்கிறது.

ஏனய்யா தமிழனாக இருக்க வேண்டும். இவர்களுடன் எக்காரணம் கொண்டும் சிங்களத்தில் பேசக் கூடாது. 

மீசை இல்லாமல், ஆங்கிலத்தில் பேசுங்கள்.... தள்ளி நின்று கொள்வார்கள்.

நான் கொழும்பில் இருந்த படியால் இவர்களை அறிவேன்.

நீங்களும் போனைப் எடுத்து, உங்கள் நண்பர் ஒரு போலீஸ் அதிகாரியின் பேசுவது போல, இங்கே ஒரு பிக்பாக்கெட் காரன் மாட்டி விடடான். உடனே வாருங்கள் என்று பிளேட்டினை மாத்திப்போடிருந்தால், நழுவி ஓடி இருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

இதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......!   🤔

எலி போல நான் டெஸ்டிங் செய்கிறேன் அண்ண மீதமானவர்கள் கவனமாக செயற்பட்டால் நல்லது 

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதெல்லாம் ஒரு விஷயமே இல்லை 😃

ஹாஹா  சும்மா பகிடிக்கு எழுதினன் யாழ் உறவுகளை காண்பதில் மகிழ்ச்சி அதுவும் ஊரில என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

சும்மா வயித்தெரிச்சலை ஏன் கிளப்புறியள் 😌

4 hours ago, சுவைப்பிரியன் said:

இதை வச்சே 10 கதை எழுதலாம்.

உங்களுக்கு விளங்குது 😂

4 hours ago, குமாரசாமி said:

சரி உசுப்பேத்தியாச்சா? அக்காவின்ரை 10 நாள் நித்திரை கெட்டுது போ......:(

அக்காவா ??????   😀😀

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எலி போல நான் டெஸ்டிங் செய்கிறேன் அண்ண மீதமானவர்கள் கவனமாக செயற்பட்டால் நல்லது 

ஹாஹா  சும்மா பகிடிக்கு எழுதினன் யாழ் உறவுகளை காண்பதில் மகிழ்ச்சி அதுவும் ஊரில என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி

🤓

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/5/2020 at 15:19, nedukkalapoovan said:

இப்படியான சூழலில்.. நிச்சயம் வெளிநாட்டில் இருந்து போகும் உணர்வாளர்களுக்கு கோபம் அடக்கமுடியாத அளவுக்கு எழும்.. கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.. ஊரில் இருக்க வேண்டின். ஏனெனில்.. எமது கோபத்தை அவர்கள் உணரும் வழிக்குக் காட்ட அங்கு நியாயமான வழியில்லை.. இப்போ. 

இப்படியான சந்தர்ப்பங்களில் எமது மண்ணிலேயே நாம் இரண்டாம் தர குடிமகனாக உணரவேண்டி இருக்கும். இப்படியான சந்தர்ப்ப சூழ் நிலைகளில் நான் என்னையே ஆறுதல் படுத்திக்கொள்வேன் . எல்லாம் ஒரு வட்டம். இன்றைக்கு அவன் காட்டில் மழை . 

21 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அநேகமாக காசு களவெடுக்கத்தான் அப்படி நிண்டிருப்பான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/5/2020 at 07:55, குமாரசாமி said:

அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.

ஆ இது நீங்களா உங்கடை தங்கச்சியா எழுதியது?
வழமையில் ரதியிடமிருந்தே இப்படியான கேள்விகள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன் பக்கம்

E948-F84-F-85-A1-4-E75-8-DE8-119-F6-E1-B

பின் பக்கம்

90347-DC1-1-D54-465-D-AE4-C-E89-A1-AF4-B
மேலே உள்ளது தான் எனது வீடு.95 இல் நடந்த சண்டையின் போது மிகுந்த சேதாரமடைந்தது.முக்கியமான சில வேலைகளை செய்து வைத்தேன்.அந்த நேரம் மாமா(மனைவியின் தகப்பனார்)இருந்தபடியால் பணத்தை அனுப்பி செய்யக் கூடியதாக இருந்தது.இப்போ அவர் இல்லை.
             2015 17என்று இரு தடவைகள் 70 நாட்கள் விடுமுறையில் போய் நின்றேன்.வீடு வளவைப் பார்க்க கண்கள் குளமாகின.17 இல் வீடு திருத்தவென்றே போனேன்.சரியான ஆக்களை பிடிக்க முடிவில்லை.நான் நின்று செய்யுமாப் போல செய்ய ஆளுமில்லை.
              ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஈழப்பிரியன் said:

emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள்.

அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள்.

நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை.

ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது.

அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்)

எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை.

இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே....

சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை  திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை.

இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். 

அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது?

அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள்  கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

9 hours ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

ஒரிஜினல் பேரிலை இருந்து கொண்டு, துணிவா குடும்ப விசயங்களை, பிடுங்குப்பாடுகளை எழுதுறதோ?

கடவுளே இனி என்ன பிரச்னை வரப்போகுதோ தெரியவில்லை. புதுசா உறுப்பினர்கள் ஆக சேர்ந்து.... ஆச்சோ, போச்சோ....அப்படியே, இப்படியே.... நாங்கள் வாசிக்க மாட்டம்... எங்களுக்கு தெரிய வராது எண்டு சும்மா எழுதுவதோ.... 40 லட்ச்சத்துக்கோ தந்தனியளோ? 

என்ன கத இது.... உங்களுக்கு எங்க காணி, வீடு இருந்தது.. சொல்லங்கோ பார்ப்பம்... இது எண்ட பூட்டன்... மலேசியன் பெஞ்சனியர் தந்தது.... எண்டு வந்து நிக்காம இருந்தால் சந்தோசம்.... 😎🤑

என்ன சாமியார்.... நான் சொல்லுறது சரியே? 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Nathamuni said:

பிக்பாக்கெட் காரன் போல இருக்கிறது.

ஏனய்யா தமிழனாக இருக்க வேண்டும். இவர்களுடன் எக்காரணம் கொண்டும் சிங்களத்தில் பேசக் கூடாது. 

மீசை இல்லாமல், ஆங்கிலத்தில் பேசுங்கள்.... தள்ளி நின்று கொள்வார்கள்.

நான் கொழும்பில் இருந்த படியால் இவர்களை அறிவேன்.

நீங்களும் போனைப் எடுத்து, உங்கள் நண்பர் ஒரு போலீஸ் அதிகாரியின் பேசுவது போல, இங்கே ஒரு பிக்பாக்கெட் காரன் மாட்டி விடடான். உடனே வாருங்கள் என்று பிளேட்டினை மாத்திப்போடிருந்தால், நழுவி ஓடி இருப்பான்.

4 hours ago, nilmini said:

இப்படியான சந்தர்ப்பங்களில் எமது மண்ணிலேயே நாம் இரண்டாம் தர குடிமகனாக உணரவேண்டி இருக்கும். இப்படியான சந்தர்ப்ப சூழ் நிலைகளில் நான் என்னையே ஆறுதல் படுத்திக்கொள்வேன் . எல்லாம் ஒரு வட்டம். இன்றைக்கு அவன் காட்டில் மழை . 

மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அநேகமாக காசு களவெடுக்கத்தான் அப்படி நிண்டிருப்பான் 

நான் இருந்த மனநிலையோ வேறு, இரு மகன்களுக்கு Dehiwala  யில் நின்றபோது டெங்கு வந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்திருந்தேன், இரவு பகல் நான் தான் வைத்தியசாலையில், இடையில் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தபோதுதான் இந்த தள்ளு முள்ளு,

நான் களைப்படைந்திருந்ததை கவனித்து நீங்கள் சொன்னமாதிரி பிட்பக்கட் அடிக்க வந்திருக்கலாம். என் பிழை சிங்களத்தில் கதைத்தது. ஆங்கிலத்தில் கதைத்திருக்கனும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, உடையார் said:

இந்தமாதிரி கேசுகளுக்கு ஆங்கிலம்தான் சரி. தமிழர்களிலும் பார்க்க சிங்களவர் தான் ஆங்கிலத்தை கண்டு நடுங்குவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Nathamuni said:

emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள்.

அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள்.

நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை.

ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது.

அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்)

எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை.

இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே....

சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை  திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை.

இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். 

அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது?

அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
 
நன்றி நாதம்.
இலங்கைக்கு போக முதலே இருந்த எண்ணம் வேறு இரு தடவை போனபின் இருக்கும் எண்ணம் வேறு.
ஐரோப்பாவிலிருந்து இலங்கை போவது போல அமெரிக்காவிலிருந்து போக முடியாது.பயணம் செய்யும் நேரமே ஆளை கொன்றுவிடும்.
       இன்னும் கொஞ்ச காலத்துக்கிடையில் வீடு திருத்தாவிட்டால் இடித்து தான் கட்ட வேண்டும்.

Posted
On 6/5/2020 at 22:40, Kapithan said:

1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ☹️)

தவறு நிகழக் கூடிய இடங்கள்.

உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி

1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர்.

2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம்.

3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை

எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிறேன். தவறுகளிருப்பின் விடயமறிந்தவர்கள் தாராளமாகத் திருத்தலாம்.  😀

வதிவிட உரிமையைப் பெற இரண்டு வழிகளுண்டு.

1) 2.5 மில்லியன் ரூபாய்களை வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் (?) நீண்டகால வைப்பிலிடல். 

2) கல்வி அடிப்படையிலான அனுமதி

இரட்டை பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு யாருக்கும் சொல்லாமல் காணி வாங்கி உங்கள் பெயரில் எழுதலாம் பிறகு காணியைக்காட்டி இலகுவாக பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு நல்ல சட்டதரணி இலங்கையில பிடித்தால் சரி ஆண்கள் நல்லம் பெண் சட்டதரணிகள் கடிதம் எழுதவே 15000 ரூபா கேட்கினம் வெளிநாட்டுக்காரன் தானே 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

ஒரிஜினல் பேரிலை இருந்து கொண்டு, துணிவா குடும்ப விசயங்களை, பிடுங்குப்பாடுகளை எழுதுறதோ?

கடவுளே இனி என்ன பிரச்னை வரப்போகுதோ தெரியவில்லை. புதுசா உறுப்பினர்கள் ஆக சேர்ந்து.... ஆச்சோ, போச்சோ....அப்படியே, இப்படியே.... நாங்கள் வாசிக்க மாட்டம்... எங்களுக்கு தெரிய வராது எண்டு சும்மா எழுதுவதோ.... 40 லட்ச்சத்துக்கோ தந்தனியளோ? 

என்ன கத இது.... உங்களுக்கு எங்க காணி, வீடு இருந்தது.. சொல்லங்கோ பார்ப்பம்... இது எண்ட பூட்டன்... மலேசியன் பெஞ்சனியர் தந்தது.... எண்டு வந்து நிக்காம இருந்தால் சந்தோசம்.... 😎🤑

என்ன சாமியார்.... நான் சொல்லுறது சரியே? 
 
நான் பொய் எழுதாதபடியால் பயப்படேல்லை

11 hours ago, ஈழப்பிரியன் said:

முன் பக்கம்

E948-F84-F-85-A1-4-E75-8-DE8-119-F6-E1-B

பின் பக்கம்

90347-DC1-1-D54-465-D-AE4-C-E89-A1-AF4-B
மேலே உள்ளது தான் எனது வீடு.95 இல் நடந்த சண்டையின் போது மிகுந்த சேதாரமடைந்தது.முக்கியமான சில வேலைகளை செய்து வைத்தேன்.அந்த நேரம் மாமா(மனைவியின் தகப்பனார்)இருந்தபடியால் பணத்தை அனுப்பி செய்யக் கூடியதாக இருந்தது.இப்போ அவர் இல்லை.
             2015 17என்று இரு தடவைகள் 70 நாட்கள் விடுமுறையில் போய் நின்றேன்.வீடு வளவைப் பார்க்க கண்கள் குளமாகின.17 இல் வீடு திருத்தவென்றே போனேன்.சரியான ஆக்களை பிடிக்க முடிவில்லை.நான் நின்று செய்யுமாப் போல செய்ய ஆளுமில்லை.
              ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

உங்களுக்கு அங்கே போய்  இருக்க ஐடியா இருக்கோ அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் பொய் எழுதாதபடியால் பயப்படேல்லை

பொய் சுடாது...

உண்மையாயின். பொது வெளியே பகிராதீர்கள்.

நான் ஒரு உண்மையை சொன்னால், சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், யாழ் ஆ... நான் கேள்விப்படவேயில்லை... என்னது யாழ்ப்பாணம் பத்தினதோ எண்டு கதை விட.... நாதமுனியெண்டு.... என்றே தொடங்க மாட்டினம்....

உங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆகவே உண்மையை சொல்கிறேன் என்று பொது வெளியே குடும்ப கதையினை சொல்லாதீர்கள்....

சரிதானே அக்கா... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஈழப்பிரியன் said:

 ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.

Posted
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

பிற்காலத்தில் போய் வாழ்றதுக்கு நல்ல இடம். 
அங்கேயே போய் இருந்தால்  6 - 12 மாதத்துக்குள்ள சோலையா மாத்திடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு அங்கே போய்  இருக்க ஐடியா இருக்கோ அண்ணா

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nilmini said:

நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.

நில்மினி சொன்னா நம்பமாட்டீங்க எமது வளவுக்கு பெயரே தோப்பு.

போய் இருக்காவிட்டாலும் வீடு திருத்தியே ஆகவேண்டும்.இதற்காக பலருடனும் கதைத்தேன்.வெளிநாட்டினர் என்று தெரிந்தவுடன் மனச்சாட்சி இன்றிய விலைகள்.
சரி செய்த வேலைகளைப் பார்த்தா சொதப்பல்.
நீங்கள் நல்லதொரு கட்டடக்காரரை பிடித்திருப்பதாக சொன்னீர்கள்.இவை பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமென எண்ணியுள்ளேன்.

6 hours ago, Kali said:

பிற்காலத்தில் போய் வாழ்றதுக்கு நல்ல இடம். 
அங்கேயே போய் இருந்தால்  6 - 12 மாதத்துக்குள்ள சோலையா மாத்திடலாம். 

காளி இரண்டு தோணியில் பயணம் செய்த மாதிரி தான் எனது நிலை.

இலங்கைக்கு போக முதல் இரட்டை பிரஜாவுரிமை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அங்கே இரு தடவை போய் வந்த பின் அந்த எண்ணமே இல்லை.(எப்பவும் மாறலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

நில்மினி சொன்னா நம்பமாட்டீங்க எமது வளவுக்கு பெயரே தோப்பு.

போய் இருக்காவிட்டாலும் வீடு திருத்தியே ஆகவேண்டும்.இதற்காக பலருடனும் கதைத்தேன்.வெளிநாட்டினர் என்று தெரிந்தவுடன் மனச்சாட்சி இன்றிய விலைகள்.
சரி செய்த வேலைகளைப் பார்த்தா சொதப்பல்.
நீங்கள் நல்லதொரு கட்டடக்காரரை பிடித்திருப்பதாக சொன்னீர்கள்.இவை பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமென எண்ணியுள்ளேன்.

என்ன செய்வது அண்ணா ? அநேகமான வீட்டில் இருக்கும் மரங்களையுமே பராமரிக்க ஆட்களுக்கு பஞ்சி. எமது வீட்டில் பாக்கு , மா, கொய்யா, தென்னை எல்லாவற்றயும் வெட்டி போட்டார்கள். திரும்ப செய்யலாம் தானே? Dwarf சாதி மரங்கள் நடலாம். நான் ஒரு Agriculture officer உடன் கதைத்து வைத்திருக்கிறேன். வீடு கட்டு engineer அவரே Design , plan , building பொறுப்புக்களை எடுத்துள்ளார். இப்ப curfew வுக்கு பிறகு என்னும் வேலை தொடங்கவில்லை. முதல் கட்ட வேலைகள் 1 மாதத்துக்குள் செய்யலாம் என்கிறார். அதை பார்த்துவிட்டு உங்களுக்கு recommend விளக்கமாக எழுதுகிறேன்   விளக்குகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

அண்ணா வீட்டை வடிவாகத் திருத்திவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுங்கள்.நான் எனக்கு விரும்பிய மரங்கள் நாட்டு சோலையாக்கினதுமாகும்.😃 வீடும் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் இடையிடையில்வந்து தாங்கிப் போகலாம். அதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா வீட்டை வடிவாகத் திருத்திவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுங்கள்.நான் எனக்கு விரும்பிய மரங்கள் நாட்டு சோலையாக்கினதுமாகும்.😃 வீடும் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் இடையிடையில்வந்து தாங்கிப் போகலாம். அதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

கந்தர்மடப்பக்கம்....

அது நல்ல ஐடியா..... வீட்டினை திருத்தி.... வாடகைக்கு கொடுப்பது.... இடையிடையே போய் வந்தால் சரி....

ஆனால் சொந்தக்காரர்களை அமர்த்தாமல், ஓரளவு தெரிந்தவர்களை வைத்து உங்களுக்கும் ஒரு ரூமை அட்டாச் பாத்ரூமுடன் கட்டினால் நல்லது. (lawyer மூலம் அக்ரீமெண்ட் போடணும் )

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய பிரச்னை.... sewage  சிஸ்டம் இன்னும் இல்லை. எப்ப வருமோ தெரியாது. அதுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐடியா இருப்பதாக தெரியவில்லை.

கந்தர்மடத்தில் உள்ள எனது வீட்டினை, திருத்தி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு கொடுக்கும் ஐடியா.... சிங்கள மாணவிகள்.... நல்ல பாதுகாப்பான வீடுகள் தேடி அலைகிறார்கள்...

தமிழ் சிறியர் இப்ப... நாடில கை வைத்து யோசிப்பார்... ' அட நல்ல ஐடியா...'

நில்மினி.... உங்கள் ஆலடி சந்தி வீடு, சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

கந்தர்மடப்பக்கம்....

நில்மினி.... உங்கள் ஆலடி சந்தி வீடு, சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?

வணக்கம் நாதமுனி.

எனது மாமா மட்டும் தான் (தனி ஆள்) இருக்கிறார். பழைய நாற்சார வீடுதானே  என்று மடம் மாதிரி உறவினர், தெரிந்தவர் என்று எல்லோரும் மாசக்கணக்காக நின்று செல்வார்கள். இப்பதான் என்ர கைக்கு வந்திருக்கு. Vintage home மாதிரி திருத்தி அம்மம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே கொண்டுவரவேணும் என்று ஒரு ஆசை. பழைய தளபாடங்கள் யாரவது விற்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள் யாழ் உறுப்பினர்களே. கல்லுப்பாரமாக இருந்த தளபாடங்களே களவாடப்பட்டுவிட்டது .

சிங்களப்பிள்ளைகள் அதுவும் பெண் பிள்ளைகளுக்கு கொடுப்பது நல்ல யோசனை. எனக்கு Airbnb  க்கு  கொடுக்கும் ஐடியா இருக்கு. அதுக்கு மேற்பார்வை பார்க்க ஆக்கள் இருந்தால் மட்டுமே சரிவரும். ஆனால் நல்ல வருமானம் வரும். நானே சிலவேளை யோசிப்பதுண்டு. எமது வீட்டுடன் சேர்த்து எனது மச்சாள் மாரின் வீடுகளையும் Airbnd க்கு கொடுத்து பராமரித்தாலே இங்க உழைப்பதை போல வருமானம் வரும். அத்துடன் யாழில் இருந்துகொண்டு ஏதாவது சேவையும் செய்யலாம். யாழ் மருத்துக்கல்லூரியிலும் படிப்பிக்கலாம் என்று. மனம் அப்படிதான் சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

airbandb & booking.com இரண்டுமே நல்ல ஐடியா. ஆனால்.... அங்கு பொறுப்பான ஒருவர் இல்லாவிடில் யாவாரம் படுத்துவிடும்.

உதாரணமாக கெஸ்ட் வருமுன்னர் சுத்தம் செய்யவேண்டும். பொறுப்பானவர்... கலியான வீடு.... சாமத்தியவீடு.... அல்லது காச்சல்..... எண்டால் போக மாட்டார்....

கெஸ்ட்.... ரிவியூ போட்டு கதையை காலி பண்ணி விடுவார்கள்.

ஒருவர் முழு நேரமாகவும்.... இன்னோருவர் பகுதி நேரமாகவும் செய்யவேண்டும். போய் நின்று சுத்தம் செய்யும் முறைகள், கிளௌஸ் பாவனை.... வெளிநாட்டு சமையல் செய்து கொடுத்து.... எக்ஸ்ட்ரா வருமானம் பார்க்கும் வழி வகைகள் சொல்லிக் கொடுத்து வரவேண்டும்....

சிறப்பான வேலை.... இரண்டு மூண்டு வீடுகள் வாடைக்கு எடுத்து.... சுவியர், ஈழப்பிரியர், சுமே போல யாராவது போய் நிற்க விரும்புபவர்களின் உதவிகள் பெறுவது. தமது வீடுகளுடன் உங்களுடையதையும் கவனிப்பார்கள். அவர்களுக்கும் பொழுது போகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படைய மருத்துவர் எழுமதி எ சாந்தி (டொக்டர் அன்ரி)  இவர் திலீபன் மருத்துவமனைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றியவர்            
    • "யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது." "எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது" By  வயவையூர் அறத்தலைவன்  - 06/02/2019 1934 யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக்கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு (De facto Government) இழந்துவிட்டது. எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது என ஶ்ரீலங்கா அரசு 1996 ஆம் ஆண்டில் எண்ணி எண்ணிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தது. ஆனால் இரவுகளைப் பகல்களாக்கி உழைப்பால் தமிழீழ மருத்துவத்துறை புத்தெழுச்சி பெற்றது. வன்னிப் பெருநிலப்பரப்பில் நாங்கள் நுளம்புகளுடனும், இலையான்களுடனும்போரிட்டுக் கொண்டிருந்தோம். ஆம், மலேரியா நோயினாலும் குண்டுவீச்சாலும் பலர் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போது இன்னுமோர் அடி “வாந்திபேதி” நோயின் வடிவில் வன்னி அன்னையின் தேகமதில் வீழ்ந்தது. கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சமரில் காயமடைந்த பொது மக்கள், போராளிகள் என வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கையில் மேலிடத்திலிருந்து ஓர் அவசர கட்டளை வந்தது. 1998 ஆம் ஆண்டு கொலரா நோயின் பரவுகையைத் தடுக்கும் (Cholera Prevention) நடவடிக்கைக்காகத்தான் நாம் முள்ளிக்குளம் இரணையிலுப்பைக்குளம் பகுதிக்குச் சென்றோம். எதிர் பாராதவிதமாக இரணையிலுப்பைக்குளம் சந்தியிலிருந்த சிறிய மருத்துவமனையைப் பொறுப்பேற்க வேண்டிய கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழீழ மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் வருட மருத்துவக் கற்கையை (2nd MBBS) மட்டுமே கற்றிருந்த எங்களுக்கு மருத்துவமையைப் பார்த்துக்கொள்வது சிரமமாகவே இருந்தது. நாளுக்கு 300 இற்கு மேற்பட்ட நோயாளர் வருகைதரும் OPDயில் எல்லா நோயாளரையும் பார்வையிட்டோம். உலகிலிருந்து விரட்டப்பட்ட மலேரியாவும் ஓடிவந்து எங்கள் மண்ணில் தஞ்சம் கோரியிருந்த காலமது.(ஆபிரிக்க நாடுகளுக்கு அடுத்ததாக) ஆதலால் வெளிநோயாளர்திணைக்களத்தில் (OPD) நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஒருவாறு பகற் கடமையை முடித்துக்கொண்டு சிறிது மூச்சுவிட்டுக்கொண்டிருந்தோம். இருள் கவிந்தது, இரவுக் கடமையினைப் பொறுப்பு ஏற்க அந்தத் தொலை தூரத்துக்கு வந்து எமக்கு யாருமே ஓய்வுக்கு அனுப்பப்போவதில்லை. இனி எல்லாக் கடமையும் நாமேதான் என்று புரிந்துகொண்டோம். இரவு ஒரு நோயாளரும் வந்துவிடக்கூடாது என்று எல்லாத் தெய்வத்திடம் வேண்டிக்கொண்டோம். மூன்று பக்கமும் காடு சூழ்ந்த இந்தக் கிராமம் தமிழர்தம் எழில்மிகு தொன்மைகிராமம்! இந்த அழகிய கிராமத்துடன் இரட்டைப்பிள்ளைகள் போன்று ஒட்டியதாக காக்கையன்குளம் கிராமம் இருந்தது. இஸ்லாம் மக்களும் வாழ்ந்த அந்தக் கிராமத்தில் அவர்கள் இருக்கவில்லை. காலத்தின் கோலத்தால் அவர்கள் புத்தளம் மண்ணில் வாழவேண்டி ஏற்பட்டுவிட்டதை நினைக்க கவலையாய் இருந்தது. செட்டிக்குளம், பூவரசங்குளம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் இவ்விருவூர்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.   காடு சூழ்ந்த குளங்களுடன் கூடிய கிராமம் ஆகையால், யானையடித்த காயமோ, பன்றி வெட்டிய காயமோ அல்லது பாம்புக்கடிதானே வரக்கூடும் என்று நினைத்துக்கொண்டோம். அங்கிருந்த வைத்தியசாலைப் பணியாளர்களுக்கும் எம் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அந்த நேரத்தில்தான் அங்கிருந்த மூத்த பணியாளர்(Pharmacist) (தம்பா அம்மா) கேட்டார். “உச்சத்துப் பல்லி சொல்லியது போல” எங்களுக்கு இருந்தாலும் எமை நாமே மீள்பரிசோதனை செய்ய ஏதுவாகியது அந்த ஊழியரின் கேள்வி. இரவு நேரம் பிரசவ வலியுடன் வருபவர்களை எப்படி பார்ப்பீர்கள்? “அம்புலன்ஸ் வண்டியும் இங்கில்லை!” “உழவு இயந்திரத்தில்தான் மடுவுக்கு அனுப்பவேண்டும்!” என்பதுதான் தம்பா அம்மாவின் கேள்வியும் பதிலுமாக இருந்தது. அத்துடன் எனக்கு நடுக்கம் பிடித்துவிட்டது. என் அக்காவின் வயதுடைய Dr முரளி தெளிவாகவே இருந்தார். அடுத்தநாள் அவசர அவசரமாக பகற் கடமைகளை முடித்துக்கொண்டு அவ்வூரில் இருந்த வயதான மருத்துவத்தாதி /PHM (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்) ஒருவரின் வீடு சென்று நீண்ட நேரம் கதைத்தார். வெளியே வரும் போது கையில் ஒரு “Ten Teachers”(Gynecology and Obstetrics Book) புத்தகத்துடன் வந்தார். அன்றிரவு 2.00pm மணிவரை அதை மண் எண்ணெய் விளக்கில் படித்தார். அடியேனுக்கும் மகப்பேற்றியல்(Obstetrics) தொடர்பான ஆரம்ப பாடத்தைப் படிப்பித்தார். நம்பிக்கையும் தந்தார்! சமர்களமும் இராணுவ வைத்தியசாலையுமாக நீண்ட கடின பயணம் சென்ற தமிழீழ மருத்துவத்துறையின் அங்கமான தமிழீழ மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் சமாதான காலமாகிய 2002இல் மீண்டும் தம் கற்கை நெறியை யாழில் ஆரம்பித்து நிறைவு செய்தனர். மருத்துவப் பொருட்களுடன் மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவிய காலத்தின் உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் காலம் வரை தம் பணியைத் திறம்படச் செய்தவர்களில் Dr முரளியும் ஒருவர் ஆவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் இணையில்லா மைந்தனான மருத்துவர் முரளி மகேஷ்வரன் களங்களில் மட்டுமல்ல தளங்களிலும் தன் பணிதனைச் சிறப்பாகச் செய்தவர். எல்லை கடந்த மருத்துவர் குழு(Doctors without Borders) MSF என அழைக்கப்பட்டவர்ளும் நோர்வே தலைமையில் சமாதான நாடகம் ஆடப்பட்ட காலத்திலேயே எங்கள் எல்லைகளைக்க டந்துவிட்டனர். யுத்தம் மெல்ல மெல்ல இறுக்க நிலையை அடைய, அரச வைத்தியர்களுக்கும் தட்டுப்பாடு வந்தது. “மனிதநேயம் மேலோங்கட்டும்/Let humanity Prevail” என்ற வாசகம் தாங்கி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருன் இறுதிக் காலகட்டத்தில் கப்பலில் வந்து போகும் விருந்தாளிகள் ஆகிவிட்டனர். வைத்தியசாலை கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் Dr த.சத்தியமூர்த்தி, Dr து. வரதராஜன், Dr பிரைற்றன், Dr. கதிர்ச்செல்வன், Dr பாஷ்கரன் போன்ற இன்னும் சில முக்கியமான வைத்தியக கலாநிதிகளுடன் கடமையில் இருந்தவர்.   https://vayavan.com/?p=10065
    • படைய  மருத்துவர் கிருபாகரன் (ஆயுதம் மௌனித்த பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டார்)       ' மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவர் கிருபாகரன்'
    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான்          முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.