Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tasmac-1.jpg

சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

தமிழகத்தில், சென்னை மற்றும் குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து ஏனைய இடங்களில், இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் 24ஆம் திகதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதாகக் கூறி டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் கொரோனா முன்னெச்சரிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், நோய்த்தொற்று பதிப்பு அதிகம் இருப்பதன் காரணமாக சென்னையில் முழுமையாகவும் அதை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியை வலியுறுத்தி ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்குத் தடைவிதித்து, மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வயது வாரியாக மக்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அவர்களுக்கு மதுபானங்கள் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதுபானக்கடை முன்பாக 2 பொலிஸார் மற்றும் 4 ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

http://athavannews.com/சென்னையை-தவிர்த்து-தமிழக/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலீஸுக்கு ஆள்

அய்யய்யோ.. மிலிட்டரிக்கு ஆள் எடுக்கறாங்கன்னுல்ல நெனச்சேன்.. அம்புட்டும் டாஸ்மாக் கூட்டமா?

வேலூர்: ஜோலார்பேட்டையில் மிலிட்டரிக்கு ஆள் எடுப்பது போல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கிறார்கள். இந்த படம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்த கடைகள் முன்பு ஏராளமான மதுப்பிரியர்கள் கூடினர். சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

சில இடங்களில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். ஏதோ சினிமா நட்சத்திரங்களின் பட ரிலீஸ் போல் இருந்தது.

சேர் ஏற்பாடு

 

 

பட்டாசு

Read more at: https://tamil.oneindia.com/memes/netisans-shared-images-of-queue-in-tasmac-shops-384768.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் சரக்கு தேவையான அளவு இருப்பில் இருக்கு........தட்டுப்பாடு இல்லை.....தாராளமாக வாங்கிக் குடித்து தள்ளாடிக்கொண்டு செல்லலாம்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் இவ்வளவு காலமும், சந்தோஷமாக இருக்கட்டுமின்று

16 minutes ago, suvy said:

மொத்தத்தில் சரக்கு தேவையான அளவு இருப்பில் இருக்கு........தட்டுப்பாடு இல்லை.....தாராளமாக வாங்கிக் குடித்து தள்ளாடிக்கொண்டு செல்லலாம்......!  😁

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மொத்தத்தில் சரக்கு தேவையான அளவு இருப்பில் இருக்கு........தட்டுப்பாடு இல்லை.....தாராளமாக வாங்கிக் குடித்து தள்ளாடிக்கொண்டு செல்லலாம்......!  😁

 

54 minutes ago, உடையார் said:

எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் இவ்வளவு காலமும், சந்தோஷமாக இருக்கட்டுமின்று

96085099_2896959847039285_4449304918557196288_n.jpg?_nc_cat=102&_nc_sid=dbeb18&_nc_ohc=IQQG5v6f82QAX_6YAh9&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8f9167af9aab2bdd2ea1e2709c8caa19&oe=5ED98888

வாழைமரம்,  மாவிலைத் தோரணம் எல்லாம் கட்டி, 
சந்தனம் தெளித்து, பூசை செய்து... மது  விற்பனைக்கு, தயாராக உள்ள மதுக்  கடை. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

24 மணித்தியாலமும் மாதுவோடும், மனிசனோடும் இரு என்றால் எப்படி....! மதுவும் வேண்டுமல்லவா. ? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்த கடைகள் முன்பு ஏராளமான மதுப்பிரியர்கள் கூடினர். சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

தமிழின அழிப்பு திமுகவுக்கு வைக்கப்பட்ட பாரிய ஆப்பு அதுகோயிரம்  மற்றவை சும்மா ஆட்களில்லை திமுகாவின் பினாமிகளின்  பெயரில்தான் இந்தியாவின் பாரிய மது ஆலைகள் சுடலைக்கு மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தமிழனின் ஒரே சகுனி கருணாநிதியின் புத்தி ஒரு சதவீதம் கூட கிடையாது சுடாலின்க்கு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் , சிறுவர்களும்...மதுரை செல்லூர் பகுதியில்,  போராட்டம் செய்து, மதுக்கடையை பூட்டினர்.  

  • கருத்துக்கள உறவுகள்

இது வ‌ந்து கேவ‌ல‌த்தின் உச்ச‌ம் 😠

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ உற‌வுக‌ள் இன்று ம‌து க‌டைக‌ளை பூட்ட‌ சொல்லி ஆர்பாட்ட‌ம் செய்யின‌ம் , ஆனால் இவ‌ர்க‌ள் 

  • கருத்துக்கள உறவுகள்

43 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால் ‘குடி’மகன்கள் உற்சாகம்: மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

43 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால் ‘குடி’மகன்கள் உற்சாகம்: மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

 

43 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால், மதுக்கடைகளில் நேற்று ‘குடி’மகன்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட தூரம் வரிசையில் நின்று மதுபாட்டில்களை உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர்.
பதிவு: மே 08,  2020 05:45 AM
சென்னை, 
 
கொரோனா மிரட்டலுக்கு இடையே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
 
இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
 
இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 7-ந்தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர்.
 
இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன.
 
உற்சாகம்
 
வழக்கமாக மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 10 மணி நேரம் இயங்கும். ஊரடங்கு காரணமாக ‘டாஸ்மாக்’ கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
எனவே நேற்று அதிகாலை முதலே ‘டாஸ்மாக்’ கடைகளின் முன்பு ‘குடி’மகன்கள் காத்திருக்க தொடங்கினர். பல ஊர்களில் கடையை திறப்பதற்கு ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
 
மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன் வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். பணம் கொடுத்து ஒவ்வொருவராக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மதுவை முதலில் வாங்கியவர் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டது.
 
அலைமோதிய கூட்டம்
 
சில ஊர்களில் திருவிழா போன்று மதுபிரியர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
 
கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வர வேண்டும். ஆதார் அட்டை கட்டாயம், வயதுவாரியாக மது விற்பனை என்று பல்வேறு கெடுபிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் மதுப்பிரியர்களின் ஆர்ப்பரிப்பில் அவை அனைத்தும் கானல்நீராய் போயின. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ஒரே வரிசையில் மதுவுக்காக காத்து நின்றனர்.
 
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கொட்டமேடு ஆகிய பகுதிகளில் மாநாடு போன்று மதுப்பிரியர்கள் கூட்டம் காணப்பட்டது. டோக்கன் வழங்கி வரிசையில் செல்ல அனுமதித்ததாலும், மதுவை வாங்கும் ஆர்வத்தில் மதுப்பிரியர்கள், கொரோனா பற்றிய பயத்தையும், சமூக இடைவெளியையும் மறந்தனர்.
 
தள்ளுமுள்ளு
 
சில கடைகளின் முன்பு மதுப்பிரியர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள்.
 
ஒருவருக்கு ஒரு பாட்டில் (750 மி.லி.) அளவு மட்டும் சரக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், அந்த அளவை தாண்டியும் தாரள மனசுடன் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். மதுபான விலை உயர்த்தப்பட்டு இருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. மதுபிரியர்கள் தங்களுக்கு வேண்டிய அளவு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
 
சில கடைகளில் டோக்கன் வழங்கி மதுபிரியர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 5 மணிக்கு மேல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சில கடைகளில் மதுபானங்கள் 5 மணிக்கு முன்பே விற்று தீர்ந்து விட்டது. இதனால் மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இத்தனை நாட்கள் விற்பனையாகாமல் இருந்த சரக்கு அனைத்தும் ஒரே நாளில் விற்று தீர்ந்தது. மது விற்பனை தொடங்கியதையடுத்து தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனி விற்பனையும் நேற்று சூடு பிடித்தது.
 
பொதுமக்கள் எதிர்ப்பு
 
தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தஞ்சை பூக்காரத்தெரு, அம்மாப்பேட்டை அருகே உள்ள செண்பகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கோவிந்தகுடியில் உள்ள ஒரு மதுக்கடையில் கூட்டம் அலைமோதியதால் மதுக்கடைக்கு போலீசார் பூட்டு போட்டனர். மதுவாங்க வந்த வெளியூர் நபர்களின் மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
 
நாகை மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தர்மங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
 
சில கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நின்று கொண்டிருந்தவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி ஒழுங்குபடுத்தினர்.
 
கிருமி நாசினி தெளிப்பு
 
கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மது வாங்க வரிசையில் நின்றவர்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பெரும்பாக்கம், சிறுவாக்கூர், கரடிப்பாக்கம், ஜெயங்கொண்டான் ஆகிய கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
 
கோவை புறநகர் பகுதிகளில் காலை முதலே மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தண்ணீர் பாட்டில்களுடன் வந்து வரிசையில் நின்றனர்.
 
மதுக்கடை திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் கைதட்டி, விசிலடித்து தங்களது மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். ஒருசில இடங்களில் பெண் களும் வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.
 
ஒருசில இடங்களில் மது பிரியர்கள் மதுவை கையில் வாங்கியதும் கடையின் முன்பே நின்று குடித்ததை பார்க்க முடிந்தது.
 
போலீஸ் தடியடி
 
திண்டுக்கல் மாவட்டத்தில் மது வாங்க காலை 9 மணி முதலே டோக்கன் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக சில இடங்களில் மது பிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்றவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
 
கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கவில்லை.
 
புதுக்கோட்டை மாவட்டம் நகரப்பட்டியில் உள்ள டாஸ்மாக்கடையில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் சடையம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் மது வாங்கி சென்றார்.
 
விற்பனையாளருக்கு மாலை அணிவிப்பு
 
நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பச்சை வண்ண அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே நேற்று மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
 
அதே நேரத்தில் இந்த விதிமுறையை மீறி பச்சை வண்ண அட்டை இல்லாமல் வந்தவர்களுக்கு மது விற்றதாகவும், மது பிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மதுபானங்களை விற்றதாகவும் 2 டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
 
ராசிபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களுக்கு மதுபிரியர்கள் மலர் தூவி மாலை அணிவித்த சம்பவமும் நடைபெற்றது.
 
வேலூர் காகிதப்பட்டறையில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
பட்டாசு வெடித்து ‘கேக்’ வெட்டினர்
 
திருப்பூர் மாவட்டத்தில் குடை கொண்டு வந்தால்தான் மதுபானம் கிடைக்கும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் மதுபிரியர்கள் காலை 8 மணி முதலே குடையுடன் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு குவிந்தனர். ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு குடை வியாபாரிகள் ரூ.10-க்கு குடைகளை வாடகைக்கு விட்டனர்.
 
தாராபுரம் ரோடு கோவில் வழி அருகே புது ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு வந்த மதுபிரியர் ஒருவர், கடையை திறந்ததும் கடைக்கு முன்பு, தான் பையில் கொண்டு வந்த மலர்களை தூவினார். மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட அவர் விற்பனையாளர், மதுபிரியர்கள், காவல் பணியில் இருந்த போலீசார் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறினார்.
 
திருப்பூர் எம்.எஸ். நகரில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று காலை திறக்கப்பட்டதும் அங்கு வந்த மது பிரியர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
 
சிவப்பு கம்பளம்
 
மதுக்கடையை திறந்தது மகிழ்ச்சி என்றாலும் மதுபான கூடங்களை திறக்காதது கவலை அளிப்பதாகவும், எனவே அரசு மதுபான கூடங்களையும் திறக்க வேண்டும் என்று மது பிரியர்கள் சிலர் கூறினார்கள்.
 
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் 5 பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்று சட்டம் இருந்தாலும், மதுக்கடையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்த காட்சியை பார்க்கிற போது கொரோனாவுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வெகுண்டெழு தமிழகமே; வேறு தலைமை தேடு: டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டமாக அறிக்கை

kamal-press-release-about-tasmac-open  
 

வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு என்று டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காலகட்டத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் இன்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது தமிழக அரசு. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில், வயதுவாரியாக எத்தனை மணிக்கு வாங்கலாம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே மதுப்பிரியர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினார்கள். பல்வேறு இடங்களில் வெடி வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர். சமூக வலைதளத்தில் காலை முதலே டாஸ்மாக் கடையில் நிற்கும் மக்கள் வரிசை தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்?

ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளைத் திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது?

இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்குப் போகும், பின் அரசு நடத்தும் சாராயக் கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு.

ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என 5 வருடத்திற்கு ஏழைத் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

இன்று சொல்கிறேன்…..

இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.

அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கரோனாவை விட அதிக தமிழ் மக்களைக் கொல்லும்.

நோய் தொற்றிற்கு தப்லீக் ஜமாத்தை மட்டும் காரணம் காட்டிய பலர், கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு, ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும்.

கிராமங்கள் எங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக்கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம்.

தாங்குமா தமிழகம் ?

வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்தக் கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கி விட்டது.

அரசுக்கு ஒரு சிறு குறிப்பு :

இன்றும் தாமதமாகி விடவில்லை. நேர்மைக் குரல்களுக்குச் செவி சாய்த்தால், மக்களுக்கு இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால், நடக்கும் இந்த ஆட்சியின் முடிவு, அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது .

உண்மையில் இது யாருக்கான அரசோ?

இதுவரை கிடைத்த தடயங்களைப் பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதைத் தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தில் கேட்டுச் சொல்லுங்கள்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்

 

https://www.hindutamil.in/news/tamilnadu/553351-kamal-press-release-about-tasmac-open-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

96168008_3507559052606782_7602230695334772736_n.jpg?_nc_cat=1&_nc_sid=8bfeb9&_nc_ohc=e0L3Bdu2Xs0AX9Dg7Z_&_nc_ht=scontent-frx5-1.xx&oh=4e82c5079e52e00f926a2c3435c249f0&oe=5ED8CF2A

 

96361746_243285066749997_5489461837764231168_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=FJqlTwvHPeIAX9l0h84&_nc_ht=scontent-frx5-1.xx&oh=39e5156438d236cc2ac0def9ae1f1a61&oe=5ED8D29E

தமிழகத்திலேயே.... நேற்று,  மதுரை சாதனை.
சென்னையை தவிர்த்து, தமிழகம் முழுவதும்... 150 கோடி ரூபாவுக்கு மது விற்பனை.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காரைக்குடியில்.... முதல் விக்கெட், வீழ்ந்த போது..😀😀😀😀😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் ஊழல் அரசியலும் சினிமாவும் கோலோச்ச வேண்டுமென்றால் மதுக்கடைகள் அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

bar.jpg

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கால், கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள், 7-ம் திகதி அன்று திறக்கப்பட்டன. இந்த நிலையில், குறித்த தினத்தில் 172 கோடி ரூபாய்க்கும், நேற்று மட்டும் 122 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக, மதுரையில், 78 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 76 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.

சென்னை மண்டலத்தில் 19 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 57  கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை இடம்பெற்றுள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-கடந்த-2-நாட்க/

 

############    ##############   ############  ############

 

romania-corona-300x198-4.jpg

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று தமிழகத்தில் மதுபான விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில் மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என இன்று அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை முதல் அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது.

இதனிடையே ஒன்லைன் மூலம் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-டாஸ்மாக்-கடை/

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே

ஐயாவுக்கு உதுகளிலை முந்திப்பிந்தி அனுபவங்கள் இருக்கோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஐயாவுக்கு உதுகளிலை முந்திப்பிந்தி அனுபவங்கள் இருக்கோ? :cool:

அவமானம் இப்படி கேட்டுப்போட்டீங்களே.ஓ மை காட்.😁

  • கருத்துக்கள உறவுகள்

 

மது உற்பத்தியாளர்கள் கைகளை சுத்தமாக்கும் 'சானிடைசர்களை' உருவாக்கலாம். 

முடிந்த இடங்களில், மின்வலை ஊடாக மதுவைவிற்பனைக்கு விடலாம்.  

 

  • கருத்துக்கள உறவுகள்

டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டால் மது வாங்க செலவிடும் பணத்தை உணவுப்பொருள் வாங்க செலவிடுவர்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

if-tasmac-shops-are-closed-people-will-spend-money-for-home  
 

மதுரை

கரோனா ஊரடங்கால் மக்கள் அனைவரும் வருமானம் இழந்து வாழ்க்கை நடத்தி வரும் சூழலில் மதுக்கடைகள் இல்லாமல் இருந்தால் மதுவுக்காக செலவிடும் பணத்தை உணவுப் பொருள்கள் வாங்க செலவு செய்வர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்கவும், டாஸ்மாக் கடையை திறப்பது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்யவும் கோரி மதுரையைச் சேர்ந்த போனிபாஸ், சி.செல்வகுமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸில் இன்று விசாரித்தனர். பின்னர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தும், ஆன்லைனில் மதுபானம் விற்க அனுமதி வழங்கியும் சென்னை உயர் நீதிமன்றம் மே 8-ல் பிறப்பித்த உத்தரவு இந்த மனுக்களுக்கும் பொருந்தும் என்றும், இந்த இரு மனுக்களையும் டாஸ்மாக் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களுடன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை திறந்ததாக அரசு கூறியுள்ளது. அது ஒரு பக்கம் நல்லதாக தெரிந்தாலும், தீமைகள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் உள்ளனர். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக செலவிடும் பணத்தை கடைகள் மூடப்பட்டிருந்தால் ஏழைகள், நடுத்தர மக்கள் வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்க பயன்படுத்துவார்கள்.

ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சிறு சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. அதி்ல் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டதால் நீதிமன்றம் ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

மனுதாரர்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுமாறு கோரவில்லை. ஊரடங்கு அமலில் இருப்பதால் கொஞ்ச நாட்களுக்கு மூடி வைக்குமாறு தான் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது எனக் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் 26 பக்க உத்தரவில் மதுவின் தீமை குறித்த ‘துஞ்சினா செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று நஞ்சுண்பார் கள்ளுண் பவர்’ என்ற திருக்குறளையும், மகாத்மா காந்தி, அம்பேத்கார் ஆகியோரின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/554006-if-tasmac-shops-are-closed-people-will-spend-money-for-home-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

96827531_3100919593292321_5729600404245708800_o.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=CMP5VPWiCjAAX-GOPeE&_nc_ht=scontent-frt3-2.xx&oh=3f818f5383c6817dd73990362e0cf21c&oe=5EE42A58

"குடி"மக்களுக்கு வெற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.