Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரவசனம் பேசிய சுமந்திரனும் மஹிந்தவை சந்தித்ததும் பெட்டிப்பாம்பாகியதன் பின்னணி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்தவாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். ஆனால் தற்போது பெட்டிப்பாம்புபோல் அடங்கியுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

பிரதமரை சந்தித்த பின்னர் சுமந்திரன் இவ்வாறு அடங்கியிருப்பதன் காரணம் என்ன? இதன் பின்னணியில் ‘மெகா டீல்’ இருக்கிறதா என மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும் கலந்துரையாடவே பிரதமரை சந்தித்ததாக கூட்டமைப்பு கூறிவருகின்றது. நல்லாட்சியின்போது கூட்டமைப்பு வசமே எதிர்க்கட்சி பதவி இருந்தது. ரணிலை வழிநடத்தும் வல்லமையும் இருந்தது. எனவே, அந்தகாலகட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஏன் குரல் எழுப்பவில்லை, அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை?

கடந்த ஆட்சியின்போது கூட்டமைப்பு சுகபோகம் அனுபவித்தது. இனிவரும் ஆட்சியிலும் அத்தகையதொரு சுகபோகத்தை அனுபவிக்கவா முயற்சி எடுக்கப்படுகின்றது?

அதேபோல் மலையகத்திலுள்ள அரசியல்வாதிகளும் சுயநல அரசியல் நடத்துகின்றனர். 1000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அறிவித்தனர். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. 5000 ரூபா கொடுப்பனவிலும் தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. ஏனையோர் அடித்து விரட்டப்படுகின்றனர்.” – என்றார்.

https://www.pagetamil.com/122538/

1 hour ago, பெருமாள் said:

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

மகிந்த பெட்டி கொடுத்திருப்பார்.
இவை அதுக்குள்ள சுருண்டு படுத்திருப்பீனும். 
சுமந்திரன் என்றா கொக்கா என்ன?

 இந்தப்பெரியசாமி என்பவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளைவிட , இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் பிரச்சினை பற்றி பேசி இருப்பாரா இருந்திருந்தால் அதட்கு ஒரு பெறுமதி இருந்திருக்கும்। டிவி களில் பார்த்தால் தெரியும் மலையக மக்கள் அரசு கொடுக்கும் 5000 ரூபாயை பெற்றுக்கொள்ள எவ்வளவு போராட வேண்டி இருக்குதென்று। அவர்களின் வாழ்வாதாரமே இப்போது பூச்சியத்துக்கு வந்திருக்கிறது। இதைப்பற்றி எல்லாம் பேச வக்கில்லை , எதை எதையோ பேசுகிறார்। அதாவது இவர்களுடைய அரசியலே இன்னும் பூச்சியத்தில்தான் இருக்கிறது। எனவே மற்றவர்களைப்பற்றி பேசும்போது தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்।

சுமந்திரன் ராஜபக்சக்களை கும்பிடட்டும், பணப்பெட்டி வாங்கட்டும் , இன்னும் நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்களோ அதை செய்யட்டும்। அதை வடக்கு மக்கள் வருகிற தேர்தலில் தீர்மானிப்பார்கள்। நல்ல பழமொழிகள் இருக்கின்றன , அதை எழுதினால் உங்களுக்கு விளங்குமோ தெரியவில்லை । நான் எழுதின தமிழாவது விளங்கினாள் சரி। 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kali said:

மகிந்த பெட்டி கொடுத்திருப்பார்.
இவை அதுக்குள்ள சுருண்டு படுத்திருப்பீனும். 
சுமந்திரன் என்றா கொக்கா என்ன?

மகிந்த சிவாஜி படத்தில் வரும் பொஸ் மாதிரி ரூம் போட்டு அடி உதை விழும் என்று அண்ணருக்கு தெரியும் ரணிலிடமும் , மைத்திரியிடமும் விட்ட சவுண்ட் இங்க விடேலாது அதான்  பொட்டி பாம்பா அடங்கிட்டார்

95688509_10158041812504277_1985686058091675648_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmIu_XV0C1PaxN1W0n65wKNF5anTJNNf3kqmeOKgzBJG4aaeh8J2FbWobXd3gsgJp0&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=89707adcb3843428779dd06b5df748e4&oe=5ED98126

Edited by தனிக்காட்டு ராஜா

அரசியல் தீர்வில்லையென்றால் அரசியலைவிட்டு வெளியேறுவேன் என்று மக்களை ஏமாற்றித் திரிந்த சுமந்திரன் தற்போது தனக்கும் தான் புதிதாக கண்டுபிடித்த பெண்மணிகளுக்கும் அமைச்சு பதவி கிடைக்குமா எனத் தேடித் திரிவதாக தெரிகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

95688509_10158041812504277_1985686058091675648_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmIu_XV0C1PaxN1W0n65wKNF5anTJNNf3kqmeOKgzBJG4aaeh8J2FbWobXd3gsgJp0&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=89707adcb3843428779dd06b5df748e4&oe=5ED98126

மகிந்த சால்வைக்கு மச் பண்ணுற மாதிரி விலை கூடின  மாஸ்க் போட்டிருக்கிறார்.
எங்கடை இரண்டு பேரும் ஆஸ்பத்திரியிலை சும்மா குடுக்கிறதை போட்டிருக்கினம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இருந்தாலும் ஒரு காலத்தில்(77களில்) கம்பீர நடையும் கம்பீர பேச்சுக்களுடன் நேரில் கண்ட சம்பந்தன் ஐயாவை இப்போது நோய்வாய்ப்பட்டு கூனிக்குறுகி நிற்பதை பார்க்க ஏனோ உள் மனம் வேதனை அடைகின்றது.:(
காலங்கள், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் ,நடவடிக்கைகள் மாறினாலும் இவரால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு வருமா என்ற எதிர்பார்ப்புகள் இன்னும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

95688509_10158041812504277_1985686058091675648_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmIu_XV0C1PaxN1W0n65wKNF5anTJNNf3kqmeOKgzBJG4aaeh8J2FbWobXd3gsgJp0&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=89707adcb3843428779dd06b5df748e4&oe=5ED98126

மகிந்த சால்வைக்கு மச் பண்ணுற மாதிரி விலை கூடின  மாஸ்க் போட்டிருக்கிறார்.
எங்கடை இரண்டு பேரும் ஆஸ்பத்திரியிலை சும்மா குடுக்கிறதை போட்டிருக்கினம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இருந்தாலும் ஒரு காலத்தில்(77களில்) கம்பீர நடையும் கம்பீர பேச்சுக்களுடன் நேரில் கண்ட சம்பந்தன் ஐயாவை இப்போது நோய்வாய்ப்பட்டு கூனிக்குறுகி நிற்பதை பார்க்க ஏனோ உள் மனம் வேதனை அடைகின்றது.:(
காலங்கள், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் ,நடவடிக்கைகள் மாறினாலும் இவரால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு வருமா என்ற எதிர்பார்ப்புகள் இன்னும் இருக்கின்றது.

காணாமல் போன கனவுகள்: இலவு காத்த ...

முயல் பிடிக்கிற....மூஞ்சையை,  முகத்தில் பார்க்கத் தெரியும் என்பார்கள்.
"இலவு காத்த கிளி"  போல ... ஏமாற்றம் அடையாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டியை வாங்கியதும் சம்பந்தனின் பாம்பு (சுமந்திரன்) அடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

,நடவடிக்கைகள் மாறினாலும் இவரால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு வருமா என்ற எதிர்பார்ப்புகள் இன்னும் இருக்கின்றது.

இன்னுமா.....?   ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு.  அந்தாள்  சொல்லுவார்: ஏனையா ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இதை சொல்லியிருக்க கூடாதா? இப்ப வந்து சொல்லிறியே உனக்கு அறிவு இருக்கா? நானே நடக்க எனக்கு  ஒரு உதவி தேவைப்படும்போது, நீ என்னிடம் உதவி கேக்கலாமா? எனக்கு எந்த வகையில் உன்னால் உதவ முடியும் என்று யோசி என்பார். 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா :ஐசே சம்பந்தன் உமக்கு தெரியும்தானே சிறிலங்கா இப்ப இறையாமையுடைய நாடு இல்லை..இதை வெளிநாட்டுக்காரன்கள் பகுதி பகுதியா குத்தகைக்கு எடுத்து போட்டாங்கள் இதை நான் எங்கன்ட சன‌த்திட்ட சொல்ல முடியாது...

சம்பந்தன்: அனே.. அப்பேட்மிழ்கட்டி  பவ்னே மாத்தாயா

மகிந்தா : அப்பே மினிசு என்று சொல்லாதையுங்கோ .லங்காவே மினிசு பவ் ...இப்ப இருக்கிற ஒரே வழி முடியுமான வரை எங்கன்ட வங்கி கண‌க்கை கூடுறதுதான்

சுமத்திரன்: மகிந்தா மாத்தையா சொல்லுரதுதான் சரி சம்பந்தன் அண்ணே..
இப்படி சிரிலங்காவை ஒர் இக்கட்டான் நிலைக்கு கொண்டு வந்தமைக்கு யார் காரணம் 
மூவரும் ஒரே குரலில்
பிரபாகரன்,கொட்டி ,கொட்டி பிரபாகரன்

தமிழ் சிங்கள மக்கள் ....அவையள் சொல்லுறதிலயும் உண்மையிருக்குமோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, தமிழ் சிறி said:

காணாமல் போன கனவுகள்: இலவு காத்த ...

முயல் பிடிக்கிற....மூஞ்சையை,  முகத்தில் பார்க்கத் தெரியும் என்பார்கள்.
"இலவு காத்த கிளி"  போல ... ஏமாற்றம் அடையாதீர்கள்.

இந்த யாழ் களத்துக்குள் இருக்கும் பல உறவுகளுடன் என்னால் /உங்களால் அரசியல் ரீதியாக ஒருமித்து நிற்க முடியவில்லை. இன்றும் பல புடுங்குப்பாடுகள்.:(
சம்பந்தரின் அரசியல் நடவடிக்கையில் எனக்கு ஈடுபாடில்லை. சில வேளைகளில் இது சம்பந்தரின் கடைசி முயற்சியாகவும் இருக்கலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினர் தோல்வி முகத்தை மறைக்கவே பிரதமரை சந்தித்தனர்

IMG-20200509-WA0003.jpg?189db0&189db0

 

எமது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட்-19 எனும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து இன்னமும் முற்றாக விடுபடாத நிலைமையில் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதென்பது பொருத்தமானதொன்று அல்ல இருப்பினும் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களும், அவர் சார்ந்த பொதுஜன பெரமுன கட்சியினரும், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், சில பங்காளிக் கட்சியினரும் பொதுத் தேர்தலை கட்டாயமாக நடத்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்துடனும் இருக்கின்றார்கள்”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சி துணைத் தேசிய அமைப்பாளரும், மட்டு, அம்பாறை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் தெரிவித்தார்.

மேலும்,

‘ஒறுபுறம் நாட்டின் பிரதான எதிர்கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும், தமிழர், முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுத் தேர்தலை தற்பொழுது நடத்துவதென்பது முறையல்ல நாட்டில் வேகமாக பரவிவருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடாத்தலாம் என்றும் கடந்த ஒரு மாத காலமாக பாரிய இழுபறிகளும், விவாதங்களும் ஆளும்கட்சி, எதிர்கட்சிகளுக்கிடையே பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வேளையில் இலங்கைத் தேர்தல் திணைக்களமும், தேர்தல் ஆணையாளரும் உறுதியான ஒரு முடிவை எடுக்கமுடியாமல் திணரிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலை நாட்டில் நிலவும் போது கடந்த 5ம் திகதி திங்கட்கிழமை நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அழைப்பின் பெயரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனுமான சந்திப்பு ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்புக்கு முன்னர் அறிவித்ததைப் போன்று நாட்டின் எதிர்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் பிரதமரின் அழைப்பை நிராகரித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந் நிலையில் கடந்த காலங்களில் ராஜதந்திரம், இணக்க அரசியல் என்று நல்லாட்சி அரசுக்கும், ஜக்கிய தேசியக் கட்சிக்கும் நீண்ட காலமாக பலமாக முண்டு கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்தவின் அழைப்பை ஏற்று அவரது கூட்டத்தில் பங்கு பற்றியது மட்டுமின்றி பிரதமரின் இல்லத்திலும் மாலை வேளையில் ஒரு சந்திப்பையும் மேற்கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதென்பது அரசியலில் இவர்களுக்கு புதிய விடயம் அல்ல ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் இவர்கள் சந்தித்திருப்பதென்பது வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் தோல்வி முகத்தில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் ஒன்றை விரைவில் எதிர்கொள்ள இருப்பதால் மீண்டும் தங்களை நியாயமானவர்களாகக் காட்டி தம்மை வழப்படுத்திக் கொள்வதற்காகவே பிரதமருடனான இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர் என்று எம் மக்கள் கருதுகின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலின் பின் நாட்டில் மீண்டுமொரு அதிகாரம் மிக்க பொறுப்புவாய்ந்த பதவிக்கு வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கும் வாக்குறுதி விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவதோடு வெறுமனமே தங்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரதும் தேர்தல் ஆதாயம் தேடும் வெற்று வார்த்தையாக இந்த வாக்குறுதி இருக்க கூடாது என்பதையும் பிரதமர் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எமது இனவிடுதலைக்கான போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் ஆட்சிக்கு வந்த எந்த சிங்கள அரசும் தமிழ் மக்களினாலும், அரசியல் வாதிகளுடாகவும் முன் வைக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்களின் விடயம், இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு போன்ற அனைத்து விடயங்களுக்கும் நிரந்தரமான ஒரு தீர்வை கொடுக்காமல் இன்று வரை இழுத்தடிப்பு செய்து வருகின்றார்கள் என்பதும் இவர்களுக்கு அதே 11 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் முண்டு கொடுத்து வந்திருப்பது மட்டுமல்லாமல் பல முறை சிங்கள அரசு ஆட்சியமைப்பதில் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏதோ ஒரு சிங்கள தரப்பினரோடு உறுதியாக பேரம் பேசி எமது பிரச்சனைகளுக்கான ஒரு குறிப்பிட்டளவு தீர்வையாவது எம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்காமல் வெறுமனமே சோரம் போனதை அவதானிக்கமுடிந்தது.

இது மட்டுமா எமது போராட்டத்தின் இறுதியில் நடந்த இனபடுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணைகள் சர்வதேசத்தில் நடந்து கொண்டிருந்த போது இலங்கை அரசு சிக்கித்தவிர்த்த போதேல்லாம் இலங்கைக்கான காலஅவகாசத்தையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவியதும் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இவ்வாறான செயற்பாடுகளால் தான் அதில் இருந்த பல அரசியல் பிரமுகர்கள் தானாகவே வெளியேறினார்கள் என்பதும் இதனால் தமிழ் மக்கள் இவர்களை அரசியலில் இன்று தோல்வியுற்றவர்களாக பார்க்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக 04 விடயங்களை பிரதானமாக மையப்படுத்திய ஒரு மகஜரை பிரதமரிடம் கையளித்திருக்கின்றார்கள். இந்த மகஜரை பிரதமர் ஏற்றுக்கொண்டதைத் தான் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் திரு.சுமந்திரன் அவர்கள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன என்று தனது வழக்கமான பாணியில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை இவர் கூறுவது போன்று பிரதமர் ஏற்றுக் கொண்டிருந்தால் அவரே ஊடகங்களுக்கு கூறியிருக்கலாமே அல்லது எழுத்து மூலம் ஒரு கடிதத்தை கொடுத்திருக்கலாமே ஆகவே இது முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் வழமை போன்று மக்களை ஏமாற்றி தேர்தலுக்கான வாக்கை சேகரிக்கும் நடவடிக்கையே’ – என்றார். (150)

https://newuthayan.com/கூட்டமைப்பினர்-தோல்வ/

13 hours ago, குமாரசாமி said:

இந்த யாழ் களத்துக்குள் இருக்கும் பல உறவுகளுடன் என்னால் /உங்களால் அரசியல் ரீதியாக ஒருமித்து நிற்க முடியவில்லை. இன்றும் பல புடுங்குப்பாடுகள்.:(
சம்பந்தரின் அரசியல் நடவடிக்கையில் எனக்கு ஈடுபாடில்லை. சில வேளைகளில் இது சம்பந்தரின் கடைசி முயற்சியாகவும் இருக்கலாம்.😁

ஐயாவின் கடைசி காலம்। இறுதி மூச்சு வரைக்கும் ஐயா எதாவது நடக்குதா எண்ட ஒரு நப்பாசைதான்।

என்னைப்பொறுத்தவரிக்கும் ராஜபக்சேக்களின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு நல்லது(அரசியல் தீர்வு) எதாவது நடப்பதென்பது மிகவும் அரிது। அப்படி இவர்களின் ஆட்ச்சியில் நடந்தால் அது ஒரு மாற்றமுடியாத தீர்வாக இருக்கும்। ஆனால் ரணில் ஆட்சியில் தீர்வு கிடைத்தாலும் அது நிச்சயமாக நிலையான தீர்வாக இருக்காது , அதை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்।

இப்போது இவர்கள் ராஜபக்சக்களை சந்தித்தட்கே சிங்கள தீவிரவாதிகள் கண்டனத்தை தெரிவிக்க தொடங்கிவிடடார்கள்। எனவே தமிழர்களின் தீர்வு என்பது இலகுவான விடயமில்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:


இப்படி சிரிலங்காவை ஒர் இக்கட்டான் நிலைக்கு கொண்டு வந்தமைக்கு யார் காரணம் 
மூவரும் ஒரே குரலில்
பிரபாகரன்,கொட்டி ,கொட்டி பிரபாகரன்

தமிழ் சிங்கள மக்கள் ....அவையள் சொல்லுறதிலயும் உண்மையிருக்குமோ

நீங்கள் இங்கே இதை நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். இலங்கையின் பொருளாதாரத்தை மீளமுடியாத அழிவுப்பாதைக்கு மாற்றியதை விடுதலைப்புலிகளின் மிக வெற்றிகரமான நடவடிக்கையாக கொள்ளலாம். இறுதிப்போரின் பின் எரித்திரியாவில் தனியார் விமானநிலையத்தில் விடுதலைப்புலிகளின் பல விமானங்கள் தரித்து நிற்பதாக Sunday Times செய்தி வெளியிட்டு இருந்தது. இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அந்த விமானங்களை தேடிச்சென்ற போது அவை பறந்து மறைந்து விட்டன. இது பற்றி கோத்தபாயா கவலை அடைந்து Sunday Times செய்தி காரணமாகவே தாம் விமானங்களை கைப்பற்ற முடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த எரித்திரியா, எத்தியோப்பியாவில் இருந்து சில பத்து ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நாடாகும். எப்படி இந்த பிரிவினை சாத்தியமானது? முள்ளிவாய்க்காலுக்கு பின்னான இலங்கையின் பொருளாதாரம் போல எத்தியோப்பியாவின் பொருளாதாரமும் வேகமாக சரிந்து போய் இராணுவத்தை வைத்து சாப்பாடு போடக்கூட பணமில்லாத நிலை உருவானது. எரித்திரியாவையும் கட்டிப்பிடித்துக்கொண்டு போக பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. எத்தியோப்பியா தானாகவே முன்வந்து நீங்கள் பிரிந்து போவதே எங்களுக்கும் பயனுள்ளது என்று சொல்லி முழு அங்கிகீரத்துடன் எரித்திரியாவை தனி நாடாக்கியது.

50 minutes ago, Vankalayan said:

ஐயாவின் கடைசி காலம்। இறுதி மூச்சு வரைக்கும் ஐயா எதாவது நடக்குதா எண்ட ஒரு நப்பாசைதான்।

என்னைப்பொறுத்தவரிக்கும் ராஜபக்சேக்களின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு நல்லது(அரசியல் தீர்வு) எதாவது நடப்பதென்பது மிகவும் அரிது। அப்படி இவர்களின் ஆட்ச்சியில் நடந்தால் அது ஒரு மாற்றமுடியாத தீர்வாக இருக்கும்। ஆனால் ரணில் ஆட்சியில் தீர்வு கிடைத்தாலும் அது நிச்சயமாக நிலையான தீர்வாக இருக்காது , அதை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்।

இப்போது இவர்கள் ராஜபக்சக்களை சந்தித்தட்கே சிங்கள தீவிரவாதிகள் கண்டனத்தை தெரிவிக்க தொடங்கிவிடடார்கள்। எனவே தமிழர்களின் தீர்வு என்பது இலகுவான விடயமில்லை। 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். வயிற்றுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் மனிதர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று உலகளாவிய அளவில் தேடிப்பாருங்கள். கார்ள் மார்க்ஸ் கம்யூனிச பைபிளான Das Capital எழுதியதே எழு நாள் பட்டினியின் விளைவு. எத்தனை பத்தினிகளை பட்டினி விபச்சாரிகளாக்கி இருக்கிறது? புகழ் பெற்ற போராளிகள் பட்டினி தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கிறார்கள்.   கம்யூனிச உலகே பட்டினி கிடந்தவர்களின் ஆவேசத்தால் உருவான உலகு.   சிங்களவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. அவர்களும் மாறுவார்கள். தமிழர்களால் அவர்களுக்கு நன்மையேதும் இல்லை. பிரிவினை இரு பகுதிக்கும் நன்மையானது என்பதை புரியவைக்க பசிக்கும் வயிற்றிலும் பார்க்க சக்திகூடியது எதுவும் இல்லை.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

எதியோப்பியாவை சூழ வல்லரசுக் கனவில் மிதக்கும் நாடுகள் இருக்கவில்லை....அதனால் எரித்திரியா பிரிந்து செல்ல வசதியா போய்விட்டது...ஆனால் சிறிலங்காவின் கதை வேறு...

  • கருத்துக்கள உறவுகள்

இணங்கிச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது: மஹிந்தவுடனான சந்திப்பு குறித்து சுமந்திரன்

sumanthiran_tna_thinakkural-300x169.jpg“பிரதமரைச் சந்தித்ததை இணக்க அரசியல் என்று சொல்லக்கூடாது. இன்றைக்கு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இணங்கிச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்குமே இருக்கின்றது. ஏன் உலக நாடுகளுக்குமே இருக்கின்றது. அதை நாங்கள் பொறுப்போடு செய்கின்றோம்” எனக்கூறியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் நடந்த சந்திப்பு தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“ஏனைய விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். நாட்டில் ஒரு தீர்வு ஏற்படவேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களும் அதற்கு இணங்கி வரவேண்டும். அந்த இணக்கத்தைப் பெறுவதையும் அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு அரசோடு சேருவதையும் ஒன்றாகக் கணிக்கக்கூடாது.

இணக்க அரசியல் என்றதும் பலர் நினைப்பது டக்ளஸ் தேவானந்தாவைப் போல எந்த அமைச்சு பதவி தந்தாலும் அரசின் காலடியிலேயே போய் விழுந்து கிடப்பதென்று. அதுவல்ல நாங்கள் எதிர்பார்க்கின்ற இணக்க அரசியல்” என்றார்.

http://thinakkural.lk/article/41063

😂🤣 பின் கதவு சொல்கின்றார் 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

பிரதமரைச் சந்தித்ததை இணக்க அரசியல் என்று சொல்லக்கூடாது. இன்றைக்கு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இணங்கிச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்குமே இருக்கின்றது. ஏன் உலக நாடுகளுக்குமே இருக்கின்றது. அதை நாங்கள் பொறுப்போடு செய்கின்றோம்

60466263_1344935005646351_54720951933374

  • கருத்துக்கள உறவுகள்

95986707_3345634935471058_1572977187420635136_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=S3xGxoB6AgcAX8wbnJV&_nc_ht=scontent-frx5-1.xx&oh=146a374719a7a66d1d3f7af67b0c0f43&oe=5EDDA975

2010இல் பொன்சேகாக்கு பாடியது
2015இல் மைத்திரிக்குச் பாடியது
2019இல் சஜித்துக்கு பாடியது
2020இல் மகிந்தவிற்கு பாடப்படுகிறது

ஒரே பாட்டைத்தான் காலத்துக்கு காலம் பெயர் மாத்திப் பாடுகிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் 😊

Ravishangaran Rasanayagam

96084388_235223217751723_6388459262309302272_n.jpg?_nc_cat=106&_nc_sid=dbeb18&_nc_ohc=edHwdpectQIAX8d0Ytx&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8b5550b023233e80ef9fd9baeaca4a79&oe=5EDBC03A

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.