Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

Featured Replies

On 15/5/2020 at 15:40, nunavilan said:

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

கூட்டமைப்பின் பேச்சாளராக கூவித் திரியும் சுமந்திரன் ஒரு பத்திரிகையாளரைக் கூட கையாள வக்கிலாதவர் என்டு சம்பந்தன் அறிவித்துள்ளார்.

இந்த லட்ச்சணத்தில இந்த மனுஷன் இதுவரை எப்பிடியெல்லாம் ஏமாந்திருக்கும் என்டு சொல்லத் தேவையில்லை.

சொறிலங்கா சிங்கள அரசு தமிழரை ஏமாற்றி திட்டமிட்ட தமிழின அழிப்பையும் வன்முறைகளையும்  சில தசாப்தங்களா தொடர்ச்சியாக முன்னெடுத்த போது,

அவ்வப்போது ஏற்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தாது ஏமாற்றிய பின்னர்,

சொறிலங்கா அரசு தமிழர்களுக்கு எந்தவொரு நீதி நியாயத்தையும் எக்காலத்திலும் வழங்காது என்று உறுதியாக தெரிந்த பின்னர்,

சிங்கள அரசுகள் செய்த இனக்கலவரங்களை மறைத்து.

சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகளை மறைத்து,

தமிழர்களுக்கு சாதகமாக ஏற்படும் சர்வதேச ஆதரவுகளை குழப்பி,  

தமிழர் பக்க நியாயங்களை மறைத்து,

சிங்கள அரசின் மோசமான போர்க்குற்றங்களை மறைத்து,

சுயலாபங்களையும், திருட்டு சலுகைகளையும், சொகுசு வாழ்க்கைகளையும் பெற்றுக்கொண்டு,

ஜனநாயக வேடமணிந்து ஈனப் பிழைப்பு நடத்திய/நடத்தும் சில மிக மோசமான அரசியல்வாதிகளை வரிசைப்படுத்தினால்

  • நீலன் திருச்செல்வம்
  • லக்ஷ்மன் கதிர்காமர்
  • டக்ளஸ் தேவானந்தா
  • சித்தார்த்தன்
  • இராஜவரோதயம் சம்பந்தன்
  • ஆனந்தசங்கரி
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  

8 hours ago, கற்பகதரு said:

சுமந்திரன் அரசியலுக்கு வந்து பத்து வருடங்கள். அரசியல் சட்டத்தில் மாற்றங்களை செய்து தமிழ் மக்களின் குறைபாடுகளை தீர்க்க எடுக்கப்பட்ட எவரது முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை.  2015 வரை ஆட்சியில் இருந்த அரசு போர் வெற்றி காரணமாக அரசியல் தீர்வை கருத்தில் கொள்ள மறுத்தது. அதற்கு பின்னான 5 வருடங்களே சுமந்திரன் அரசியல் தீர்வுக்கு முயன்ற காலம்.

சுமந்திரனின் முயற்சிக்கு பெருமளவில் தடையாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன. அவரால் கலைக்கப்பட்ட அரசு சுமந்திரனின் முயற்சிக்கு ஆதரவாக இருந்ததால் சுமந்திரன் உச்ச நீதிமன்றம் சென்று ஆட்சியை மீண்டும் கொண்டுவந்தார். ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் முயற்சி மீண்டும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை. தனது முயற்சியை தோற்கடித்தவர்களையே தன்னுடைய திட்டத்தை செயற்படுத்தும் பங்காளிகளாக்க முயற்சிக்கிறார்.

 இவர் பல சிறு சிறு மாற்றங்களை செய்ய முயலும் ஒருவராக இருந்தால் சில வெற்றி பெற்ற மாற்றங்களை காட்டக்கூடியதாக இருந்திருக்கும். இவர் ஒரே ஒரு மாற்றத்துக்கே முயற்சிக்கிறார். அது ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு. கடந்த 70 வருங்களாக பலரும் முயன்று தோற்றுப்போன ஒரு முயற்சி இது. வேறு சட்டத்துறை அரசியல் மற்றும் சமுகவியல் தலைவர்களான, விக்னேஸ்வரன், குருபரன் குமாரவடிவேல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் அரசியல் தீர்வுக்கான முயற்சியில் ஈடுபட விரும்பாததற்கு காரணம் அது வெற்றிபெறாது என கருதுவதாக இருக்கலாம். சுமந்திரனும் மற்றவர்களை போல இந்த முயற்சியை கைவிட்டு ஒதுங்கிவிட வேண்டும் என்றா கருதுகிறீர்கள்? வேறு பலரும் அரசியல் தீர்வுதிட்டத்தை முன்வைக்கலாம், அதற்கு சுமந்திரன் தடையாக இல்லை. ஆனால் இவர் தவிர எவருமே முயற்சிக்கவில்லையே? இவரையும் ஒதுங்கிவிடு என்று சொன்னால் அரசியல் தீர்வுக்கு எவருமே முயற்சிக்க கூடாதென்றா சொல்கிறீர்கள்? 

அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை. உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை. எல்லோரும் நூற்றுக்கு நூறு சரியாக யாருமே இருக்க மாடடார்கள். ஆனால் இங்கு கருத்து எழுதுபவர்கள் சுமந்திரன் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். எனவே அவர்கள் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல நடிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

சுமத்திரன் பத்து வருட காலமாய் அரசியற் தீர்வுக்கு முயற்சி செய்கிறார் என்று சொல்கிறீர்கள் ...அது என்ன தீர்வு/எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்பது  தான் எனது கேள்வி?...அவர்  முயற்சிப்பதை பிழை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் என்ன முயற்சிக்கிறார் என்பதே மக்களுக்கு தெரியவில்லை .
முக்கியமான தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டிக்கு செல்பவர் பொறுப்பாக பேட்டி கொடுக்க வேண்டாமா?...பத்திரிகையாளர் எதிர்மறையான கேள்விகள் தான் கேட்பார்கள்...இவர்கள் தான் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் ...அதையே சமாளிக்க முடியாமல் சம்மந்தரை கொண்டுவித்து கேள்வி கேட்டவரையே குற்றம் பிடிப்பது சின்ன பிள்ளைத்தனமாய் உள்ளது🙂

காலங்காலமாய் இவரை மாதிரி அரசியல்வாதிகளது முக்கிய பணி காலத்தை இழுத்தடிப்பது ஒரு மாதிரி சம்மந்தர்  தன்ட  காலத்தை கடத்தி விட்டார் ...இனி சும் அந்த பணியை தொடர்ந்து செய்வார் என்று நான் நம்பிறன் 

  • கருத்துக்கள உறவுகள்

 சுமந்திரன், சிங்களத்தை சர்வதேசத்திடம் இருந்து  காப்பாற்றுவதற்கு உழைத்ததில், ஒரு வீதம் தானும் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, சர்வதேசத்திடம்  எடுத்துச் செல்வதில், சொல்வதில் சரியாக செயற்படவில்லையே.

4 minutes ago, ரதி said:

அரசியல்வாதிகளது முக்கிய பணி காலத்தை இழுத்தடிப்பது ஒரு மாதிரி சம்மந்தர்  தன்ட  காலத்தை கடத்தி விட்டார் ...இனி சும் அந்த பணியை தொடர்ந்து செய்வார் என்று நான் நம்பிறன் 

சில சட்டத்தரணிகளும் தங்கள் ஆயுள் முடியும் வரை தங்கள் கட்ச்சிக்காரரை இழுத்தடித்து, அரை குறையாய் விட்டு சென்ற சம்பவங்களும்  உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

சுமத்திரன் பத்து வருட காலமாய் அரசியற் தீர்வுக்கு முயற்சி செய்கிறார் என்று சொல்கிறீர்கள் ...அது என்ன தீர்வு/எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்பது  தான் எனது கேள்வி?...அவர்  முயற்சிப்பதை பிழை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் என்ன முயற்சிக்கிறார் என்பதே மக்களுக்கு தெரியவில்லை .

On 15/5/2020 at 17:43, கற்பகதரு said:
  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • லக்மன் கதிர்காமர்
  • நீலன் திருச்செல்வம்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்

இவர்கள் முழு இலங்கையையும் அங்குவாழும் தமிழர் தமது நாடாக கொண்டு மதிப்புடன் வாழ உழைத்தவர்கள் - சுமேந்திரனும் அவர்கள் வரிசையில் ஒருவர். இவர்களின் அணுகுமுறை அரசியல்/ சட்டவாக்க அணுகுமுறை. பொதுசன ஆதரவில் இவர்களின் முயற்சிகள் தங்கியிருக்கவில்லை. இலங்கை அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டு அதனூடாக மாற்றங்களை செய்வதே இவர்களின் அணுகுமுறை.

On 16/5/2020 at 01:04, கற்பகதரு said:

மக்களின் ஏகோபித்த விருப்பை பெற்றவர்களால் மக்களுக்கு தேவையன அரசியல்மற்றத்தை த்தரமுடியுமா? எங்கள் வரலாறு இல்லை என்றே சொல்கிறது. இந்த சிக்கலான பிரச்சினையை கையாளும் முறையையும் அதனுள் அடங்கியுள்ள சட்ட, அரசியல், சமுக மற்றும் தனிமனித உளவியல் நுட்பங்களை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு பெரும்பலானோருக்கு இவைபற்றிய ஆழமான அறிவு இல்லை.

.......

மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுத்தான் மாற்றங்கள ஏற்படுத்த வேண்டும் என்றால் மக்களை நன்கு கவரக்கூடிய கூடியவர்களே மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறோம். தமிழ் மக்களை கவரும் சக்திபடைத்த அரசியல்வாதிகள் பலர்  வந்து போனார்கள் ஆனால் மாற்றம் வரவில்லை, ஏன் தெரியுமா? சமயம் பரப்பி பணம் திரட்டும் சுவிசேச திருடர்களும் கள்ளச்சாமியார்களும் போல இந்த அரசிய்வாதிகளும்,  மக்களை கவரும் கலையிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் - அரசியல் சட்டத்தில் இந்த அரசியல்வாதிகளுக்கு அறிவு பூச்சயம். அரசியல் சட்டத்தில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மக்களை கவரும் கலையில் அறிவு பூச்சியம். சுமேந்திரனுக்கோ அந்த அறிவு பூச்சியத்துக்கு கீழே.

ஆகவே இதுவரை காலமும் இருந்தது போல முதலில் மக்களை கவரத்தக்கவராக இருக்கட்டும், பிறகு அரசியல் மாற்றத்தை கொண்டுவருகிறாரா என்று பார்க்கலாம் என்று தொடர்ந்தால் எந்த மாற்றமும் வராது.

பெருமளவு மக்களை கவரத்தக்கவர்கள் தான் அரசியலில் ஈடுபட்டு அரசியல் தீர்வை கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை தீர்வு தரத்தக்க தலைமை சாத்தியம் இல்லை. மக்களை கவரும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசியல் தீர்வை திட்டமிட்டு, ஒப்பந்தம் உருவாக்கி பலரையும் சம்மதிக்க வைத்து அதை நிரந்தரமான தீர்வாக நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை. இவ்வாறான ஆற்றலுள்ளவர்களாலேயே தீர்வை கொண்டுவர முடியும்.

ரதி,

இந்த களத்தில் நான் பெருமளவு மதிப்பு வைத்திருக்கும் சிலருள் நீங்கள் முக்கியமானவர். அதற்கு காரணம் உங்கள் சிறப்பான ஆய்வுத்திறனும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றலும் வித்தியாசமான கருத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து சொல்லும் போக்கும் ஆகும்.

உங்களுக்கே இலங்கையில் அரசியல்தீர்வு பற்றிய அண்மைக்கால முயற்சிகளும் அதில் சுமந்திரனின் பங்கும் புரிவதற்கு கடினமான விடயமாக இருக்கிறது. சாதாரண பொதுமக்களுக்கு எப்படி புரியும்? முன்னைய அரசு அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஆலோசனைகளை கோரிய போது, நான் கூட அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஒரு திட்டத்தை தயாரித்து சிங்கள மொழியிலும் மொழி பெயர்த்து, ஆங்கிலம், தமிழ், சிங்களத்தில், ஒருவர் மூலமாக யாழ்., கச்சேரியில் அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். இந்த அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளில் சுமந்திரனே தமிழர் மத்தியில் இருந்து பங்குபற்றுபவர்.

நான் ஏற்கனவே சொன்னது போல, பெருமளவு பொது மக்களுக்கு இதை   புரியக்கூடிய அறிவில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த முயற்சி முடியும் வரை, தாம் ஆயுதப்போரில் தோற்றதன்மூலம் அனைத்தையும் இழந்துவிட்டதை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு தீர்வு வரும். இல்லையானால், ஆட்சியாளர் வழங்குவதை வாங்கிக்கொண்டு வாழவேண்டியது தான்.

இந்த சுமந்திரனின் முயற்சியை நாம் அறிந்து, புரிந்து அங்கிகரித்தால் தான் அவர் தொடரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், இந்த முயற்சி தோற்றுவிட்டது என்றே முடிவுக்கு வரவேண்டும். சிங்கள நாட்டில் ஏதோ தருவதை வாங்கிக்கொண்டு வாழ வேண்டியதே நிலை.

17 hours ago, கற்பகதரு said:

சாதாரணமாண பொதுமக்கள் 

On 17/5/2020 at 20:20, கற்பகதரு said:

நல்ல கருது எழுதி இருந்தீர்கள். இப்போது பொதுவாக அரசியல்வாதிகளும் , சில இணையதள போராளிகளும் சுமந்திரன் என்ன சொல்கிறார் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதாவது சொன்னால், செய்தால் கப்சிப்பென்று இருப்பார்கள். எதாவது தவறி ஒன்று வந்தால் போதும் இவர்களுக்கு மெல்லுவதட்கு. மற்றப்படி பார்த்தித்தீர்கள் என்றால் இந்த அரசியல்வாதிகள் எல்லாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருப்பார்கள். அவர்களின் எந்த செய்தியும் வராது. இல்லாவிடடாள் தமிழ் மக்களின் கல்லறை தேவைப்படும். அப்பொழுது கொஞ்சம் வெளியில் வந்து சத்தம் போடுவார்கள். அது முடிந்தவுடன் மீண்டும் ஆழ்ந்த தூக்கம்.

சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அப்படி துவைப்படவிட்ட்தால் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றப்படி எல்லாம் வேற்று கோஷங்கள்தான். 

தமிழினப் படுகொலைக்கு நீதி நியாயம் கிடைப்பதை தாமதப்படுத்துவதில், குழப்பி அடிப்பதில், தமிழினக் கொலைகாரர்களுக்கு சார்பாக நடப்பதில் சுமந்திரனின் பங்களிப்பு 10 வருடங்களை தாண்டி வீறுநடை போடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 20:43, கற்பகதரு said:

ஆழமாக சிந்தித்து எழுதும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர் - நல்ல பதிவு. ஆனால் எனது பார்வையில் இந்த வரிசை வித்தியாசமானது:

  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • லக்மன் கதிர்காமர்
  • நீலன் திருச்செல்வம்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்

இவர்கள் முழு இலங்கையையும் அங்குவாழும் தமிழர் தமது நாடாக கொண்டு மதிப்புடன் வாழ உழைத்தவர்கள் - சுமேந்திரனும் அவர்கள் வரிசையில் ஒருவர். இவர்களின் அணுகுமுறை அரசியல்/ சட்டவாக்க அணுகுமுறை. பொதுசன ஆதரவில் இவர்களின் முயற்சிகள் தங்கியிருக்கவில்லை. இலங்கை அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டு அதனூடாக மாற்றங்களை செய்வதே இவர்களின் அணுகுமுறை.

அதாவது இவர்கள் தமிழர் சிங்களவர் இரு பகுதியினருக்கும் இடையே மத்தியஸ்தம் வகிப்பவர்களாகக் கொள்ளலாமா ? 🤔

ஆம் என்றால் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இவர்களுக்கு உள்ள தகுதி என்ன ? 🤔

SJVக்கு ஏன் இதற்குள் வரவில்லை ? 🤔

ஒவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா ?  🤔இல்லையென்றால் ஏன் முயற்சி வெற்றிபெறவில்லை ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2020 at 01:24, கிருபன் said:

உங்கள் வரிசை technocrats ஆன கொழும்பு உயர் குழாம் (elite) தமிழர்களின் வரிசையாக இருக்கின்றது! இவர்கள் பொதுசன ஆதரவில் தங்கியிருக்காமல் உயார் குழாம் உறவுகளுடன் அரசியல் மாற்றங்களைச் செய்ய முனைந்தவர்கள். ஆனால் தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்புடன் இருக்கவில்லை. 

இலங்கை முழுவதும் வாழும் தமிழர்கள் உரிமையுடன் வாழக்கூடிய ஓர் அரசியல் தீர்வை (அதிகாரப் பரவலாக்கம் ஊடாக) பெற்றுத்தரக்கூடிய வலுவுள்ள தலைமை தமிழர்களிடம் இல்லை. இனியும் வருமா என்பதும் சந்தேகமே.

சிங்களம் பொருளாதார வளர்ச்சியூடாக சிறுபானமையினரை தன்னுள்ளே கரைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2020 at 04:55, ரதி said:

ஊடகங்கள் தங்கள் ஊடகங்களை முன்னிலைப்படுத்துவதற்காக எக்குத் தப்பான கேள்விகளைத் தான் கேட்பார்கள்...இவர் தான் நிதானமாய் யோசித்து பதில் சொல்லி இருக்க வேணும் 
 
சம்சும் ஆளுமை உள்ளவர்களா?... நீங்கள் சொன்ன தமிழர்களை ஒரே குடைக்குள் கொண்டு வந்து அரசியல் பலத்தை காட்ட இவர்களால் முடிந்ததா? பதில் இல்லை .
கிழக்கில் பல படித்தவர்கள் அரசியலில் ஆர்வமாய் உள்ளதை காண கூடியதாய் இருக்குது ..தேர்தலிலும் நிற்கிறார்கள் ...பொறுத்திருந்து பார்ப்போம் ...மாற்றம் வருவது நல்லத்திற்கே.
வடக்கிலும் படித்தவர்கள் துணிந்து அரசியலில் ஈடுபட முன் வர வேண்டும் ..சுமத்திரனின் /கூட்டமைப்பின் வாலை பிடித்து தொங்குவதை விடுத்து தனித்து அரசியலில் முன்னேற வேண்டும் 
 
மற்றவர்களை விடுங்கள் இறந்து விட்டார்கள் ...சுமத்திரன் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? ...இவர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பேணுவதில் தப்பில்லை ...ஆனால் "அதனுடாய் மாற்றங்களை செய்வதே இவரது பாணி என்று சொல்லி உள்ளீர்கள்"... இது வரை அவர் செய்த ஏதாவது ஒரு மாற்றத்தையாவது சொல்லுங்கள் பார்ப்போம் .

உண்மையில் சுமந்திரன் மீது மக்களுக்கு உள்ள கோபம், அவர் தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கு போதிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதற்கு மேலாக இரத்தத்தைக்  கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான்.  🙂

நன்மையை யார் செய்தாலும் நன்மைதான். அது சுமந்திரனாக இருக்கலாம் கோட்டாபயவாக இருக்கலாம் அல்லது சம்பந்தனாகக் கூட இருக்கலாம் 😏

ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் 😤

On 16/5/2020 at 21:47, Vankalayan said:

அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை. உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை. எல்லோரும் நூற்றுக்கு நூறு சரியாக யாருமே இருக்க மாடடார்கள். ஆனால் இங்கு கருத்து எழுதுபவர்கள் சுமந்திரன் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். எனவே அவர்கள் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல நடிப்பார்கள். 

சுமந்திரன் நூறு விகிதமும் சரியாக இருக்க வேண்டுமென யாரும் அவரை எதிர்பார்க்கவில்லை. அவர் ட்கருத்துக்களை கூறும்போது தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்தாமலிருக்க வேண்டுகிறார்கள்.  அவ்வளவே. 😏

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2020 at 10:50, கற்பகதரு said:

ரதி,

இந்த களத்தில் நான் பெருமளவு மதிப்பு வைத்திருக்கும் சிலருள் நீங்கள் முக்கியமானவர். அதற்கு காரணம் உங்கள் சிறப்பான ஆய்வுத்திறனும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றலும் வித்தியாசமான கருத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து சொல்லும் போக்கும் ஆகும்.

உங்களுக்கே இலங்கையில் அரசியல்தீர்வு பற்றிய அண்மைக்கால முயற்சிகளும் அதில் சுமந்திரனின் பங்கும் புரிவதற்கு கடினமான விடயமாக இருக்கிறது. சாதாரண பொதுமக்களுக்கு எப்படி புரியும்? முன்னைய அரசு அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஆலோசனைகளை கோரிய போது, நான் கூட அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஒரு திட்டத்தை தயாரித்து சிங்கள மொழியிலும் மொழி பெயர்த்து, ஆங்கிலம், தமிழ், சிங்களத்தில், ஒருவர் மூலமாக யாழ்., கச்சேரியில் அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். இந்த அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளில் சுமந்திரனே தமிழர் மத்தியில் இருந்து பங்குபற்றுபவர்.

நான் ஏற்கனவே சொன்னது போல, பெருமளவு பொது மக்களுக்கு இதை   புரியக்கூடிய அறிவில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த முயற்சி முடியும் வரை, தாம் ஆயுதப்போரில் தோற்றதன்மூலம் அனைத்தையும் இழந்துவிட்டதை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு தீர்வு வரும். இல்லையானால், ஆட்சியாளர் வழங்குவதை வாங்கிக்கொண்டு வாழவேண்டியது தான்.

இந்த சுமந்திரனின் முயற்சியை நாம் அறிந்து, புரிந்து அங்கிகரித்தால் தான் அவர் தொடரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், இந்த முயற்சி தோற்றுவிட்டது என்றே முடிவுக்கு வரவேண்டும். சிங்கள நாட்டில் ஏதோ தருவதை வாங்கிக்கொண்டு வாழ வேண்டியதே நிலை.

அதாவது என்ன நடக்கிறது என்று தெரியாமலே சுமந்திரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிறீர்கள். ☹️

இந்த இனம் நம்பித்தான் கெட்டது. எங்கள் அனுபவம் அப்படி ☹️

On 17/5/2020 at 01:19, Rajesh said:

சொறிலங்கா சிங்கள அரசு தமிழரை ஏமாற்றி திட்டமிட்ட தமிழின அழிப்பையும் வன்முறைகளையும்  சில தசாப்தங்களா தொடர்ச்சியாக முன்னெடுத்த போது,

அவ்வப்போது ஏற்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தாது ஏமாற்றிய பின்னர்,

சொறிலங்கா அரசு தமிழர்களுக்கு எந்தவொரு நீதி நியாயத்தையும் எக்காலத்திலும் வழங்காது என்று உறுதியாக தெரிந்த பின்னர்,

சிங்கள அரசுகள் செய்த இனக்கலவரங்களை மறைத்து.

சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகளை மறைத்து,

தமிழர்களுக்கு சாதகமாக ஏற்படும் சர்வதேச ஆதரவுகளை குழப்பி,  

தமிழர் பக்க நியாயங்களை மறைத்து,

சிங்கள அரசின் மோசமான போர்க்குற்றங்களை மறைத்து,

சுயலாபங்களையும், திருட்டு சலுகைகளையும், சொகுசு வாழ்க்கைகளையும் பெற்றுக்கொண்டு,

ஜனநாயக வேடமணிந்து ஈனப் பிழைப்பு நடத்திய/நடத்தும் சில மிக மோசமான அரசியல்வாதிகளை வரிசைப்படுத்தினால்

  • நீலன் திருச்செல்வம்
  • லக்ஷ்மன் கதிர்காமர்
  • டக்ளஸ் தேவானந்தா
  • சித்தார்த்தன்
  • இராஜவரோதயம் சம்பந்தன்
  • ஆனந்தசங்கரி
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  

முழுப் பெயர்கள்:
தர்மலிங்கம் சித்தார்த்தன்
வீரசிங்கம் ஆனந்தசங்கரி

21 hours ago, Kapithan said:

சுமந்திரன் நூறு விகிதமும் சரியாக இருக்க வேண்டுமென யாரும் அவரை எதிர்பார்க்கவில்லை. அவர் ட்கருத்துக்களை கூறும்போது தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்தாமலிருக்க வேண்டுகிறார்கள்.  அவ்வளவே. 😏

நீங்கள் அப்படி கூறினாலும் , இங்கு கருது எழுதுபவர்கள் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய கருதுக்களை பார்த்தல் அது தெரியம்.

அதாவது இங்கு அன்பர் ஒருவர் எழுதியதுபோல , வேண்டா பொண்டாட்டி கை படடால் குற்றம், கால் படடால் குற்றம் என்பது போல. இதையும் விட மேலதிகமாக அவர்கள் வெறுக்க சில காரணம் இருந்தாலும் அதை எழுத விரும்பவில்லை. இங்கு அவருக்கு எதிராக கருது எழுதுபவர்களுக்கு விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

அதாவது என்ன நடக்கிறது என்று தெரியாமலே சுமந்திரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிறீர்கள். ☹️

On 16/5/2020 at 01:04, கற்பகதரு said:

இந்த சிக்கலான பிரச்சினையை கையாளும் முறையையும் அதனுள் அடங்கியுள்ள சட்ட, அரசியல், சமுக மற்றும் தனிமனித உளவியல் நுட்பங்களை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு பெரும்பலானோருக்கு இவைபற்றிய ஆழமான அறிவு இல்லை.

தேவையான அறிவை பெற்றுக் கொண்டால் என்ன நடக்கிறது என்று தெரியவரும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான அறிவை பெற்றுக்கொள்ளும் வசதிகள், நேரம், ஆர்வம் இல்லை.

இந்த நிலையை இன்று எமக்கு பரிச்சயமான கொரனா வைரசை கொண்டும் விளங்கப்படுத்தலாம்.

எல்லோரையும் முகமூடி போடச்சொல்கிறார்கள். போடாவிட்டால் சாவு வரும். போடாமல் சாகும் மக்கள் எனது பிரதேசத்தில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

கொரொனா வைரஸ் Angiotensin Converting Enzyme II (ACE II) Receptor ஊடக எப்படி ஒருவரை கொல்லும்  என்பதை   தெரிந்து கொண்டுதான் முகமூடி போடுவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் என்ன செய்யமுடியும்? உங்களுக்கு ஒரு பக்கம் யாழ் களத்தில் அஞ்சலி எழுதிக்கொண்டு மறுபக்கம் கொரோனா வைரசில் இருந்து தப்ப தேவையான N-Acetyl Cystine எங்கே வாங்கலாம் என்று தேடுவது தான், எனக்குள்ள ஒரே வழி, இல்லையா? எல்லாம் எல்லோருக்கும் புரியாது நண்பரே. அப்படி புரியும்வரை அழிவோம் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின்  இவ் செவ்வி தேவையற்றது. இலங்கை அரசாங்கத்துக்கு தலைவலியாய் இருப்பது பொன்னம்பலமோ, விசிக்னேஸ்வரனோ, ஹக்கீமோ அல்லது ரிஷாட்டோ இல்லை.தலைவலியாய் இருப்பது சுமந்திரனும், ரட்ணஜீவன் ஹுலும் ஆகும். அன்டன் பாலசிங்கத்துக்கு பிறகு ஆளுமையான(caliber) அரசியல் விற்பன்னர்(தலைவர் அல்ல)  சுமந்திரன்னாகும்.அன்டன் பாலசிங்கத்துக்கே தகடு வைச்சவைகள்,  சுமந்திரன் எம்மாத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

தேவையான அறிவை பெற்றுக் கொண்டால் என்ன நடக்கிறது என்று தெரியவரும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான அறிவை பெற்றுக்கொள்ளும் வசதிகள், நேரம், ஆர்வம் இல்லை.

இந்த நிலையை இன்று எமக்கு பரிச்சயமான கொரனா வைரசை கொண்டும் விளங்கப்படுத்தலாம்.

எல்லோரையும் முகமூடி போடச்சொல்கிறார்கள். போடாவிட்டால் சாவு வரும். போடாமல் சாகும் மக்கள் எனது பிரதேசத்தில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

கொரொனா வைரஸ் Angiotensin Converting Enzyme II (ACE II) Receptor ஊடக எப்படி ஒருவரை கொல்லும்  என்பதை   தெரிந்து கொண்டுதான் முகமூடி போடுவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் என்ன செய்யமுடியும்? உங்களுக்கு ஒரு பக்கம் யாழ் களத்தில் அஞ்சலி எழுதிக்கொண்டு மறுபக்கம் கொரோனா வைரசில் இருந்து தப்ப தேவையான N-Acetyl Cystine எங்கே வாங்கலாம் என்று தேடுவது தான், எனக்குள்ள ஒரே வழி, இல்லையா? எல்லாம் எல்லோருக்கும் புரியாது நண்பரே. அப்படி புரியும்வரை அழிவோம் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்  - அனுபவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு இதுதான். 🙂

நான் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். நீங்கள் அதீத நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்.😀

உங்கள் நம்பிக்கை பொய்க்காதிருக்க (வெற்றியளிக்கக்)  கடவது 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.