Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமத்து வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து  வீடு

 

         சாய்வு நாற்காலியில்  சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள்  ராசம்மா டீச்சர்  , மாலை மங்குவதற்கு  சூரியன் தன  கதிர்களை  மெல்ல  இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம்  கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி  விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் ,     உதவியாக இருக்கும்  .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர்  விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள்.  பின் மேசை  விள க்கினையும் . கண்ணடியை துடைத்து  மேசையின் ந டுப்பகுதியில்  வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின்  மகள்  எடடாம்     வகுப்பு படிக்கிறாள்  வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு  படித்து இரவு துணையாக  இருந்து காலையில் செல்வாள்.  இவள் வீடு வாயில் படலையில்  நின்று கூப்பிடடால்  .கேட்க்கும்  தூரம் தான் .  தியாகு  மிகவும் விசுவாசமானவன்  அவன் . மனைவியும்  சமையல் முடித்து   பிள்ளைகள்  இருவரும் பாடசாலைக்கு சென்ற பின் ராசம்மா  டீச்சர் வீட்டில் வந்து  சமையல் பாத்திரம் தொட க்கம் , துணி துவைப்பது வரை   செய்து கொடுப்பாள் .

 

 ராசம்மா  டீச்சர் இளைப்பாறிய  பின்  . இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் இறந்து விட  படடனத்தில் இருக்கும் மகன் தன்னிடம் வரும்படி  எத்தனையோ முறை கேட்டுக் கொண்டாலும் ராசம்மா மறுத்து வி ட டாள் . வருடமொருமுறையாவது பிள்ளைகளையு ம்  கூட்டி வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போனால் காணும்  என்பாள் . கிராமத்து சூழ் நிலையிலே பிறந்து வளர்ந்து வாழ்க்கை படடவள். மகன் பிறந்த பின் சில வருடங்கள்  படிப்பிக்க போகாமல் விட்டு  அவன் வளர்த்தும் தன மாமியாரிடம் விட்டு   கல்வி ஒரு கொடை  அதை சிறார்களுக்கு கற்பிப்பது  பெரும் புண்ணியம்  எனும் கணவனின்  விருப்புக்கேற்ப  பாடசாலை  அருகாமையில் இருந்ததால்  சென்று படிப்பித்து  வந்தாள் . எல்லாம் கனவு போலாகியாது அவளுக்கு  அவளும் ஓய்வு பெற்று   பல வருடங்களாகி விட்ட்து வயதும்  ஆகி விட்ட்து .  சில தடவை மகனின் வீட்டுக்கு சென்ற போதும அங்கு மனம்  நிலை கொள்ள வில்லை .  வாகன இரைச்சலும்  காலையில்  எழுந்து  கணவன் மனைவி வேலைக்கு ஓடுவதும் , குழந்தைகளை ஆட்டொவில் பள்ளிக்கு அனுப்புவதும் ஒரு எந்திர த்தனமான  வாழ்க்கை . தனியாக இருக்க  மகனும் விரு ம்ப வில்லை .. அம்மாவின் விருப்பின் படியே இருக்கட்டும்  என  விட்டு விடடான் .

 

காலம் தன் வழியே  பயணித்துக்  கொண்டு இருந்தது .சிறுமி  குமுதாவும்  உயர்கல்வி  கற்று  பல்கலைக்கு சென்றுவிடடாள் . ராசம்மா பல வாறு யோசிக்க தொடங்கினாள் . மீண்டும்  தனக்கு உதவியாக  சிறு குழந்தையுடன்  கைவிடட  தனித்து நின்ற  தேவகியை   வேலைக்கு அமர்த்தி பொருட்கள் களஞ்சிய படுத்தும்   அறையை சகல வசதிகளுடன் ஒதுக்கி கொடுத்து  வீட்டொடு வைத்துக் கொண்டாள் .  மீண்டும் மகன் தன்னிடம் வரும் படி அவற்புறுத்தவே ,   காலையில் குயிலின்  கூவ லோடு எழும் இன்ப மும்   சுற்றிவர மாமரங்களும் தோடை பலா    என பயன் தரும்  மரங்களும் காலப்போக்கில் கவனிப்பாரற்று அழிந்து விடும்  .  காலையில் தரிசிக்கும் முருகன் கோவில்  ,  செவ்வாய் வெள்ளி விரதநாட்களில் காக்கைக்கு உணவளித்து  உண்ணும் மன நிறைவு   இவற்றை அவள் இழந்து மகனுடன் செல்ல தயாரில்லை .   என மறுத்து விடடாள்.  

 தற்போது  அவளுக்கு  சற்று  எதிர்காலத்தின்  முதுமையை   நோக்கிய ஒரு பய உணர்வு ....அன்று  வழக்கம் போல்   எழுந்து   காலை க்    கடன் முடித்து  உணவுண்டு  முடித்தவள் , தேவகியை  கடைத்தெருவுக்கு  மீன் வகை  வாங்கி  வர  அனுப்பினாள்.  பின்  மணிச் சத்தம் கேட்டு வாயிற் கதவை  நோக்கியவள்  .தபாற்காரன்  வந்திருந்தான்.  அவளது கணவனின் அக்காவின் கடைசி  மகளுக்கு ..பெண் குழந்தை பிறந்த சேதி யோடு  .கூடிய கடித மொன்றுடன்  . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் .  மதிய உணவு முடித்து ...சற்று ஓய்வெடுக்க எண்ணிய  அவள் மேசை மீது  கடிதமெழுதும் நோட்டுப் புத்தகத்தை  எடுத்துக் கொண்டு  மகனுக்கு ஒரு மடல் வரைந்தாள் .

 

அன்புள்ள  மாதவன் , ஜீவிதா மற்றும் பேரப்பிள்ளைகள் அறிவது ...

     முருகன் துணையால்  நான் நலமே உள்ளேன்  நீங்களும் அவ்வாறே இருக்க எல்லாம் வல்ல முருகன் துணை புரிவார் . . தேவகி வீட்டு வேளைகளில் ஒத்தா சையாக இருப்பதால்  நிம்மதியாய் இருக்கிறேன்   பெரிய மாமியின் மகள்   கெளசல்யாவுக்கு   பெண் குழந்தை  பிறந்துள்ளதாக மாமி கடி தம் போட்டிருந்தார் . என்  பேரப்பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்களா ?  அங்கு வெயில்  எப்படி  இங்கு மரங்கள் சூழ இருப்பதால் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது .  இம்முறை  பள்ளி விடுமுறைக்கு  என்னைப்பார்க்க வருவீர்களா ?  வெள்ளைச்சியும்,கொம்பாளும் ஒரே  நேரத்தில் கன்று  போட்டிருக் கு . இரண்டு  நாகு கன் றுகளும்  வீட்டு முற்றத்தில்துள்ளித் திரிந்து ...விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்  வீட்டில் தாராளமாக பால்  கிடைக்கிறது . என் பேரப்பிள்ளைகளைத்  தான் நினைப்பேன் . வீட்டுத்தேவைக்கு எடுத்து போக மீதியை   வறிய பள்ளிப்பிள்ளைகள்  மூவர் வந்து  மாலை வேளைகளில் எடுத்து செல்வார்கள். அயலில் எல்லோரிடமும்  பால் மாடுகள் இருக்கின்றன . அதனால்  ஒருவருக்கும் கொடுக்க முடியவில்லை . வறிய  பிள்ளைகள்  பசியாறட்டும் போகும் வழிக்கு புண்ணியமாகும் என எண்ணிக் கொள்வேன்.

அடுத்து மகனே  உனக்கு நான் உங்களுடன் வந்து தங்கவில்லை என குறையாக இருக்கலாம்  யோசித்து பார் பரபரப்பான இந்த  காலத்தில்  குழந்தைகளின் படிப்பு உன் வேலை வீடு செலவு என்று உனக்கே நேரம் இல்லாத போது என்னை கவனிக்க கஷ்டமாய் இருக்கும் .  நான் நடமாடித்திரியும் வரை என சுய தேவைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இருக்கும் வரை நீ பிறந்து வாழ்ந்த இந்த வீட்டிலிருக்கவே விரும்புகிறேன் . நான் உயிருடன் இருக்கும் வரை இதை விற்கவோ ..வேறு தேவைக்கோ  எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.   என் சுயம் இழந்து ... மறதி கண்டு ...என்னை இன்னொருவர் துணையோடு தான் வாழ வேண்டிய நிலைமை வந்தால் ...எனது இளைப்பாற்றுச் சம்பள பணம்  சேமிப்பில் இருக்கிறது . அது உனதும்   எனதுமான   இணைந்த வைப்புக் கணக்கில் இருக்கிறது அதை எடுத்து உன்  தேவைகளை செய் . என்னை ஒரு கண்ணியமாக நடத்தும்  முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு ...இதை என் கடைசி ஆசையாக நிறை வேற்றுவாய் என்பதில் நம்பிக்கை உண்டு .

 ஒன்று சொல்ல மறந்து விடடேன் . கார் கார தியாகுவின்  பெண்ணுக்கு  நகரத்தில் ஒரு வேலை கிடைக்க  உதவி செய்வாயா?  நன்றாக படித்து இரண்டு டிகிரி ..வாங்கி உள்ளாள் .அதுகள் உன்னை குழந்தையாக  வீட்டுக்கு கொண்டு வந்த காலத்தில் இருந்து    கைக்குள்ள இருந்து  சேவை செய்ததுகள்  அந்த பெண் தலை  நிமிர்ந்தால் அதுகளின்  சீவியம்   மேம் படும் ...மீண்டும்   குடும்பத்தையும் உன்னையும் பாது காக்க .முருக கடவுளை வேண்டி நிற்கிறேன் 

.இப்படிக்கு ..  பாசமுள்ள அம்மா ...கண்கள் பனித்தன 

 

வாரங்கள் மாதங்களாகி  பள்ளிக்கு கூட விடுமுறையும் வந்தது . ஒரு ஞாயிறு காலை வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட்து ...மகன் மருமகள் பேர ப் பிள்ளைகளோடு வந்திருந்தான் .ராசம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .. பேத்தி நன்றாக வளர்ந்து  ரடடை ஜ டை  போட்டு இருந்தாள். பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது . பேரன்  தேவகி பையனோடு  கிளி பார்க்க மாமரத் தடிக்கு  சென்று விடடான் .  .அவர்கள் குளித்து முடிந்ததும்  காலை ஆகாரத்தை நிறைவு செய்தார்கள் . ராசம்மா மதிய  உணவுக்கு என்ன செய்வது என்று  ..எண்ணிக் கொண்டு  இருக்கையில் .". மாமி   எங்களுக்கு  கடையில் வாங்கும் கோழி  சலித்து விட்ட்து . ஊர் கோழி  சமைப்போமா  என மருமகள் ஜீவிதா ..கேட்டுக் கொண்டே குசினிக்குள் நுழைத்தாள். அவளும் கூட மாட உதவி செய்து   சமையலை ஒப்பேற்றறினார்கள்.   பல கதைகளும் கதைத்த பின் ..... மத்திய உணவு  சுடச் சுட கோழிக் கறியும்   தோடடத்து   பிஞ்சு வெள்ளைக்கத்தரிக் கறியும்  மற்றும் பல உணவுகளுடன்  நிறைந்தது .  நாட்கள் ஓடி  வாரங்களானது  ராசம்மா மிகவும் யோசனையுடன் காணப்படடாள் . ..மறு நாள் பயணம் .  இரவு உணவு முடித்துக் கொண்டு ...படுக்கைக்கு சென்றார்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரை   அதிகாலை மூன்று மணி யளவில் அம்மாவின் அறையில் ...விளக்கு எரிந்து கொண்டிருந்ததை பார்த்த மகன் ..  உள் சென்று   பார்த்த போது ஒரு வகை விக்கல் ..எடுத்துக் கொண்டிருந்தார் ராசம்மா ...அருகில் சென்று  கையை பற்றியவர் ....கை துவண்டு போவதைக் கண்டு ...அதிர்ச்சி அடைந்தார் . தேவகி ஓடிச்சென்று ....கார் கார தியாகுவை அழைத்து வந்து ..வைத்திய சாலை சென்ற போது அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்து விடடார் . தன்  கடைசிக் கால  ஆசைகளை  விருப்பங்களை  நிறைவேற்றிக் கொண்ட திருப்தியில் ராசம்மா ஆழ்ந்த நித்திரையில் ....

.முதியவர்களை அவர்கள் விருப்ப படி ...ஓய்வாக அமைதியான  சூழலில் வாழ விடுங்கள் . பணத்தைக் கட்டி முதியோர் இல்லங்களில் தள்ளி விட்டு  கடமை முடித்தேன்  என  வாழாதீ ர்கள் .மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்  ஆடு மாடு தோட்ட்ம்  வயல்  வெளி  என ...வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாலு  சுவர் கொண்ட கூட்டுக்குள் வாழ்வது வீட்டுச் சிறை போல  தனித்து விடப்பட்டது போல உணர்வார்கள்.  தனிமையம் ஏக்கமும் அவ்ர்களைக் கொல்லாமல்  கொள்ளும் . யார் வருவார்கள் தன்னைப் பார்க்க என்று மனம் எங்கும். முடிந்த வரை முதியோர் இல்லம் தவிர்த்து  எஞ்சிய காலத்தை வாழ வையுங்கள். 

 

தாய் /தந்தை மனசு தங்கம் 

நான் அறிந்த சொந்தம்

நன்றி சொல்ல போதாதையா 

 ஏழேழு ஜென்மம் 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சிறுகதை அக்கா. மனதில் எம்மைப் பற்றிய யோசனை ஓடுவதை தடுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சிறுகதை. எனது கிராமத்து வீடும் என்னை வா வா என்று அழைத்தபடிதான் உள்ளது. ஆனாலும் நெருங்கிய உறவென்று சொல்ல யாருமற்ற ஏகாந்தமான என் கிராமத்தில் எப்படி ? அங்கு சென்ற வாழலாம் என்ற நப்பாசையில்தான் குட்டிச் சுவராக உருக்குலைந்து போயிருந்த வீட்டை மீண்டும் கட்டி முடித்து போய் பாா்த்தேன். ஒரு வாரத்திலேயே ஏக்கம்தான் மிஞ்சியது. ஒரே நாட்டில் பிள்ளைகள் இருந்தால் ஓடிவந்தாவது பாா்க்கலாம். இப்போ அதுவுமில்லை. நிராசையுடன் எம் எதிர்காலம் கிராமத்துக் கனவுகளுடன்தான் முடியப்போகிறது என்ற கசப்பான உண்மையை ஜீரணிக்க முயற்சி செய்கிறேன். பாராட்டுக்கள் நிலாமதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெஸோப்பத்தோமியா சுமேரியர் , கண்மணி அக்கா உங்கள் வரவுக்கும் , கருத்துக் பகிர்வுக்கும்  .மற்றும் விருப்பு வாக்கு இடடவர்களுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி நல்லதொரு எண்ணக்கருவைத் தொட்டு எழுதி இருக்கிறீர்கள்.வாசிக்கும் போது ஏதோ உண்மையான சம்பவம் மாதிரியே இருந்தது.
பாராட்டுக்கள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா! உங்கள் "கிராமத்து வீடு"  என்னை அழவைத்து விட்டது.  வெளிநாடுகளிலும் நாலு சுவருக்குள்ளும் அடைபட்டு ஊர் நினைவோடு வாழும் பெற்றோர்கள் சிலபேரை பார்த்திருக்கிறேன்.கவலைதான்  நானும் இதுபற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்.

அவர்கள் வாழ்க வளமுடன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து வீடு என்னையும் அங்கு கூட்டிப்போனது.அன்பு ,அழகு ,பாசம் இப்படியே ஞாபகங்கள் தொலைவதில்லை.அருமையான கவிதை அக்கா 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2020 at 20:37, நிலாமதி said:

முதியவர்களை அவர்கள் விருப்ப படி ...ஓய்வாக அமைதியான  சூழலில் வாழ விடுங்கள் . பணத்தைக் கட்டி முதியோர் இல்லங்களில் தள்ளி விட்டு  கடமை முடித்தேன்  என  வாழாதீ ர்கள்

பெற்றோர்களுக்காக பிள்ளைகள் தம்மால் இயன்றவற்றை எல்லாம் செய்தாலும் முதிய வயதில் அவர்களைக் கவனிக்க எல்லோராலும் முடிவதில்லை. முன்னைய கிராமத்து வாழ்வும் இப்போது கனவாகிப் போய் பலர் இந்தக் கொரோனா காலத்தில் பிள்ளைகளின் முகத்தைக் கூட காணாமல் முதியோர் இல்லங்களில் வாடுகின்றார்கள். சிலரை ஜன்னல் ஊடாகத்தான் பார்க்கமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதையை எழுதிய... நிலாமதி அக்காவிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் வாசிக்க கிடைத்தது  நல்ல கதை அக்கா  வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

முதியோர்களின் தனிமையையும் ஏக்கங்களையும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.அன்றே வாசித்து விட்டேன் இன்றுதான் கருத்தெழுத கிடைத்திருக்கு......!   👍

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான நீரோடை போன்ற சொற்சித்திரம்.

எனக்கும் கிராமத்து வீடு அனுபவம் உண்டு. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட திருநெல்வேலி வாழ்க்கை என்றாலும், சிறியளவில் இருந்த வயல், தோட்டம் எல்லாம் விற்று முழுமையாக அரசாங்க வேலைகளில் அடிமையான குடும்பம். திருமணமான புதிதில்  புதுமணத் தம்பதியினருக்கு உறவினர் ஒருவர் வீட்டில் விருந்து என்ற முறையில் ஒரு கிராமத்திற்குச் செல்ல நேரிட்டது. ஒரு அழகான கிராமத்தில் வீடு கட்டி வார விடுமுறைகளில் பிள்ளைகளுடன் சென்று வரும் என் ஆசையை அப்போது மனைவியிடம் வெளிப்படுத்தினேன். பொதுவாக தேனிலவுக் கனவுகள் (Honey moon dreams) படுமுட்டாள்தனமாகவே இருக்கும்; அத்தோடு விட்டுவிடுவார்கள். வசதியும் வாய்ப்பும் வந்த போது நான் அக்கனவை நிறைவேற்றினேன். பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பு என்றெல்லாம் ஏற்பட்ட பின்பு வாரந்தோறும் செல்வது குறைந்தது. 

சகோதரி நிலாமதி அவர்கள் எழுதிய கதையை வாசித்த பின் நான் வலிந்து ஏற்படுத்திய என் கிராமத்து வாழ்க்கையை விரிவாகப் பின்னாளில் எழுதும் எண்ணம் தோன்றுகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.