Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இங்கு இப்படி கலியாண வீடுகள் நடப்பதில்லை, அத்துடன் நான் இருக்குமிடத்தில் இதுவரை இரண்டு கல்யாணத்திற்குதான் போயுள்ளேன், அதனால் பார்க்காமல் கருத்து கூறவிரும்பவில்லை.

எனக்கும் மூன்று பிள்ளைகள், இன்னும் 7-8 வருடத்தில் செய்து வைக்கனும். தமிழரை செய்து வைக்கனும் என்பதுதான் ஆசை. ஆனா தன் பாலினத்தை கூட்டிவராதவரை யாரென்றாலும் சரி. மகன்களுக்கு ஊரில் உள்ள பெண்களைதான் பார்த்து செய்து வைக்கனும், பார்ப்போம்.

 

 

  • Replies 161
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

 

வவ் நன்றாக இருக்கு திருமண வீடியோ, அந்த மகிழ்ச்சியான தினத்தை திரும்ப திரும்ப எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும், மனதில் சந்தோஷம் அலை புரண்டோடும், அந்த ஒருநாள் மீண்டும் வராது, பொக்கிஷமாக பதிந்து வைத்திருகனும். நன்றி ஈழப்பிரியன் பகிர்வுக்கு.

மணமக்கள், பேரப்பிள்ளைகள் சந்தோஷமாக நீடூழி வாழ மனமார வாழ்த்துகின்றேன்.

சிறி & சுவி பதிந்த வீடியோக்கள் வேலை செய்யவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

சிறி & சுவி பதிந்த வீடியோக்கள் வேலை செய்யவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நன்றி ஈழப்பிரியன், நன்றாக இருக்கு திருமண வீடியோ, வாழ்கையின் அதி உச்ச சந்தோஷம் பிள்ளைகளை நல்லபடியாக கரையேற்றுவது, நீங்கள் இருவரையும் கரை ஏற்றிவிட்டீர்கள் பத்திரமாக, இனி அவர்கள் வாழ்கை என்றுமே மகிழ்ச்சி.

நீங்கள் கட்டுக்கோப்பாக உடம்பை வைத்துள்ளீர்கள்👍👍

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

நீங்கள் கட்டுக்கோப்பாக உடம்பை வைத்துள்ளீர்கள்👍👍

உடையார் 41 வயதிலேயே இஞ்சின் வேலை செய்தாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

நான் எழுதும் த‌மிழை பார்த்து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேலியும் கிண்ட‌லும் செய்தாலும் என் தாய் மொழி த‌மிழில் எழுதுவ‌தையே அதிக‌ம் விரும்புவேன்  

உங்களுடைய தமிழ் இனிமையானது. அதை நான் விரும்பி வாசிக்கிறேன். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் “பஸ்சங்க” என்ற சொல் மட்டும் நாம் வாழ்ந்த பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத சொல்.

கலாச்சாரம் பற்றிய உங்கள் விருப்பமே எனதும். ஸகொட்லண்ட் முதல் ஆபிரிக்கா வரை திருமணங்கள் பாரம்பரிய உடை, உணவு. பண்பாட்டின்படியே தான் இடம்பெறுகின்றன. இவை பழைமையானவை. காலம் மாறி போக, பாரம்பரியத்தை நினைவிற்கொள்ள இந்த சடங்குகள் என்றும் மாறாத பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. நாமும் இந்த பாரம்பரியத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் 41 வயதிலேயே இஞ்சின் வேலை செய்தாச்சு.

ஓ அப்படியா, அதுதான் பிள்ளைகளிடமிருந்து அன்பு கட்டளைகள் பறக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தம் மரபு, பழக்க வழக்கங்கள், (மூட நம்பிக்கைகள் தவிர்த்து) நல்ல நம்பிக்கைகளின் வழியில் தம் அடையாளங்களை வேர் பிடிக்க வைக்கும் முனைப்பு எந்த மானிட சமூகத்திலும் இருக்கும், இருக்க வேண்டும். மாற்றங்கள் ஒன்றே மாறாதவை என்பது ஏற்புடைய கருத்துதான். ஆனால் எந்த மாற்றத்தையும் கேள்வி கேட்காமல் கடந்து போவதும், வேறு வழியில்லை என்று கையறு நிலையில் ஏற்றுக் கொள்வதும் அந்த இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கேட்டினை விளைவிக்கும் என்பது என் கருத்து. பையன் அவர்கள் சமூகத்தைக் கேள்வி கேட்கிறார். நல்ல கேள்வி. பையனாய் இருக்கும் போதே கேட்பது கூடுதல் சிறப்பு ! ('பையனாய்' என்று அவர் குறித்த பெயரை வைத்துச் சொன்னேன். அவ்வளவே 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

முதலே கலியாண  வீடியோ பார்த்துவிட்டேன். மிகவும் அழகான நிகழ்வு. என்ர ரெண்டு பெடியளும் யாரை கொண்டு வரப்போறாங்களோ தெரியவில்லை. மூத்தவர் இலங்கை அல்லது இந்தியாவாக இருக்கலாம்.  இரண்டாவது வெள்ளையை கொண்டு வருவார் போல கிடக்கு. இருவரும் இன்னும் ஒருவரையும் பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை இருவரும் சந்தோசமாக, நிம்மதியாக இருந்தால் சரி . கலியாண வாழ்க்கை பிழைத்தால் வாழ்க்கை கஸ்டம் . நல்ல ஒரு மாமியாக , அப்பம்மாவாக இருக்க விரும்புகிறேன். என்ன எழுதி வச்சிருக்கு எண்டு பாப்பம் . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

கலாச்சாரம் பற்றிய உங்கள் விருப்பமே எனதும். ஸகொட்லண்ட் முதல் ஆபிரிக்கா வரை திருமணங்கள் பாரம்பரிய உடை, உணவு. பண்பாட்டின்படியே தான் இடம்பெறுகின்றன. இவை பழைமையானவை. காலம் மாறி போக, பாரம்பரியத்தை நினைவிற்கொள்ள இந்த சடங்குகள் என்றும் மாறாத பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. நாமும் இந்த பாரம்பரியத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

சரியாக சொன்னீர்கள், கற்பகதரு.  நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இன்றைய திருமண நிகழ்வுகள் பற்றிய உங்கள் ஆதங்கத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. உங்கள் தரப்பு நியாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், எனது மகள் சோம.அழகு வேறு இணையத்தில் எப்போதோ அங்கத நடையில் (sarcastic) வரைந்த கட்டுரையின் இணைப்பு

http://puthu.thinnai.com/?p=34480

அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும். 

சுப. சோமசுந்தரம் அவர்களே.... தகப்பன் எட்டடி  பாய்ந்தால்...
குட்டி... பதினாறு அடி  பாயும் என்பதற்கேற்ப....
உங்கள் மகள்... திருமணத்தைப் பற்றி அழகாக எழுதியுள்ளார்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎-‎06‎-‎2020 at 01:49, பையன்26 said:

வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே 🙏 நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , 

🙏

 

சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌ நிக‌ழ்வு , தமிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் நட‌ந்த‌ திருமண‌ங்க‌ள் , மாப்பிளைக்கு பால த‌லைக்கு வைத்து குளிப்பாட்டி ம‌ன‌வ‌ரையில்  உக்கார‌ வைத்து திரும‌ண‌ பெண்ண‌ அமைதியாய் கூட்டி வ‌ந்து மாப்பிளைக்கு ப‌க்க‌த்தில்  உக்கார‌ வைத்து ஆலாத்தி எடுத்து பிற‌க்கு கோயிலில் வைத்து தாலி க‌ட்டுவ‌து தான் ஊர் திரும‌ண‌ முறை ,

புல‌ம்பெயர் நாட்டு திரும‌ண‌ம் மாப்பிளை ம‌ன‌வ‌ரையில் இருப்பார் , திரும‌ண‌ பெண்ண‌ பார்த்தா அவாவின் தோழிக‌ளுட‌ன் ஆட்ட‌த்துட‌ன் வ‌ருவா மாப்பிளையிட‌ம் 😁

ஏன் இந்த திடிர் மாற்ற‌ங்க‌ள் குறுகிய‌ காலங்க‌ளில் 😉

 

கால‌ங்க‌ள் போக‌ போக‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வை போல‌ த‌மிழ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ளும் புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் 😉

 

 

 

நமது மொழியும் இனமும் மிக மிக பழைமையானவற்றுள் ஒன்று . நீங்கள் எமது பாரம்பரிய முறைமை என்று சொல்லும் விடயங்கள் நடைமுறைக்கு வரமுதல் ( என்ன ஒரு 1000  அல்லது 2000 ஆண்டுகாலம் முன்னர் ) இருந்த நடை முறைகளும் எமது பாரம்பரியமாக இருந்து தான் போயின . சமகாலங்களில் எம்மவரிடையேயே நடந்தேறிய புலம்பெயர்வு கனதி மிக்கது .. மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வந்து சேர்க்கும் தன்மையது ..
அண்மையில் எமது மூத்த புதல்வியின் திருமணத்தின் போது, கன்னிகாதானம் எனும் நடைமுறையை செய்வதில் எமது இளைய புதல்விக்கு உடன்பாடில்லை . அப்படி எனின்   மணமகனை தானம் செய்வதாகவும் ஒரு சடங்கு தேவையில்லையா என்பது அவளின் வாதம் ; புது தலை முறை - புதிய சிந்தனைகள் - வளர்ச்சியின் படிகள் .. நல்லவை எடுப்போம் , அல்லவை தவிர்ப்போம் , வளர்ச்சி காண்போம் ...   

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

 ('பையனாய்' என்று அவர் குறித்த பெயரை வைத்துச் சொன்னேன். அவ்வளவே 😀

ஆளும் இன்னமும் பையன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 10:49, பையன்26 said:

யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் உங்க‌ள் ப‌தில‌ தாரால‌மாய் எழுத‌லாம் , இத‌ ப‌ற்றி கொஞ்ச‌ம் விவாதிப்போம் உற‌வுக‌ளே 

பைய‌ன்26 

 

இவைதான் எனது கருத்துக்கள் தம்பி 

புலம் பெயர்ந்து செல்வதென்பது சொந்த இடங்களை விட்டு போவது மட்டும் அல்லாமல் எமது கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் பலவற்றையும் விட்டு செல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகமுதல் வீட்டில் இருக்கும்வரை எம்மைப்போலவே எல்லாவற்றயும் செய்து, சாப்பிட்டு, தமிழும் கதைத்துக்கொண்டு இருப்பார்கள். பள்ளிக்கூடம் போக துடங்க நிலைமை மாறத்துடங்கும் . அதற்கு நடுவில் நாங்கள் வேலையில் பிஸியாகிவிட நிலைமை இன்னும் மாறும். தாய் வீட்டில் இருந்து மற்றும் தாத்தா பாட்டி யாரும் இருந்து , தமிழ், சமயம் என்று சொல்லிக்குடுத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். ஆனால் இது நிறைய பேருக்கு சரிவராது.

வெளிநாட்டில் பிறந்து வளரும் பிள்ளைகளை ஊரில் நாங்கள்  வளர்வது போல் வளர நினைப்பது பிழை. அத்துடன் இப்ப ஊர் பிள்ளைகள் எம்மை மாதிரி இல்லை.அங்கும் நிறைய மாற்றங்கள். நாங்கள் இரண்டு மகன்மாரையும் அடிக்கடி இலங்கை, இந்தியா என்று கூட்டிப்போய் சொந்தம், கோயில் என்று காட்டி வந்தோம். சரஸ்வதி பூசை என்றால் , மச்சம் சாப்பிடாமல், பின்னேரம்தேவாரம் பாடி  சாமி கும்பிட வேண்டும். முடிந்த நேரங்களில் எல்லாம் கோயிலுக்கு போவது. சிறு வயதில் நாங்கள் இருக்கும் இடத்தில பகவத் கீதை வகுப்புகளுக்கு போய் பஜனைகளும் படித்ததனால்  இப்பவும்  கிழமையில் இரு நாட்கள் பகவத் கீதை , பஜனை படிப்பார்கள். அடிக்கடி இருவருடனும் எமது கலாச்சாரம், சமயம் பற்றி கதைப்பேன். இருவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள். சில தமிழ் படங்களும் பாப்போம். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தமக்கு முடிந்ததை பிள்ளைகளுக்கு செய்து காட்டி வந்தால் அவர்கள் பெரியவர்களாகி நாம் இல்லாத காலத்தில் அதனை பெரிதாக எண்ணி  மதிப்பார்கள்.

நாம் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் ஒரு காலத்தில் தமக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் தடுமாறுவார்கள்.  எனது சகோதரர்களும், மற்ற உறவினர்களும்  தமது பிள்ளைகளுக்கு அப்படிதான் செய்கிறார்கள். அத்துடன் அவர்களுக்கு எமது சமையல் முறைகளையும் சொல்லிகொடுக்கிறேன் . மிகவும் ஆர்வமாக சமைக்கிறார்கள். நாங்கள் எல்லா அம்மாமாரும் சேர்ந்து இப்போது Google document இல் ரெசிபிக்களை  எழுதிவருகிறோம். அந்த google document எமது பிள்ளைகள் எல்லோரும் பார்த்து தமக்கு விருப்பமான ரெசிபிக்களை ஒருகாலத்தில் சமைக்கலாம். எமது உணவை அவர்கள் உண்ணுவது மட்டும் அன்றி அவர்களுக்கு சமைக்க தெரிவதும் கலாச்சாரத்தை பேணுவத்துக்கு மிகவும் முக்கியம். இதை விட அதிகமாக செய்ய எம்மால் முடியவில்லை. எனக்கு அவர்கள் எம்மை மாதிரி வாழவேண்டும் என்று தேவை இல்லை. எமது மொழி, கலாச்சாரம், சமயம் எல்லாவற்றையும் அவர்கள் வேற்று மொழிகளை காட்டிலும் பெரிதாக மதிக்க வேண்டும் என்பதில் தான் எனக்கு ஆர்வம். அது அவர்களுக்கும் தெரியும்.

சில குடும்பங்கள் தமது ஊர் ஒன்றுகூடல்கள் வைக்கிறார்கள். எமது அம்மாவின் அப்பாவின் ( ஐயா) ஊர் எழுதுமட்டுவாள் என்றபடியால் நாமும் போவதுண்டு. ஆனால் அங்கு பெரியவர்களே ஜீன்ஸை போட்டுகொண்டு ஆங்கிலம் கதைப்பார்கள். சாப்பாடு மட்டும் ஊர் சாப்பாடு. எனது தங்கையின் மகள் (14 வயது) மிகவும் தமிழ் ஆர்வம் மிக்கவர்.  போனகிழமை சந்தித்தபோது இந்த ஒன்றுகூடல் பற்றி என்னிடம் கதைத்தா . சின்னப்பிள்ளைகளுக்கு விளையாட்டுப்போட்டி வைக்கும்போது எமது பாரம்பரிய விளையாட்டுகளை தமக்கு சொல்லித்தந்து அவற்றை விளையாட வைக்கலாமே என்று அவ சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது. அம்மா, சித்திமார், மாமி எல்லோரிடமும் கேட்டு  பழைய விளையாட்டுகளை அவவுக்கு விளங்கப்படுத்தினேன். மிகவும் ஆர்வமாக கேட்டா. 

எமது பரந்து  வாழும் பெரிய குடும்பத்தில் (extended  family) எவரும் இப்படி கூத்து மாதிரி சாமத்திய வீடோ, கல்யாண வீடோ வைக்கவில்லை. நாம் எல்லோரும் குடும்பகொண்டாட்டங்களில் சந்திக்கும் போது பொழுது போக்குக்கு இந்தமாதிரி விசித்திரமான கலியாண , சாமர்த்தியவீடு விடீயோக்களை YouTube இல் பார்த்து சிரிப்போம். பிள்ளைகளும் சேர்ந்து பார்த்துவிட்டு தமது அதிருப்தியை சொல்வார்கள்.அக்காவின் மகள் பஞ்சாபி/ராஜஸ்தான் ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்த பெடியனை இரு வருடங்களுக்கு முன் கலியாணம் முடித்தபோது. எமது யாழ் முறையிலும், பஞ்சாபி முறையிலும் தான் வைத்தது. ஆனால் மணமக்களின் விருப்பப்படி மணவறை மற்றும் அலங்காரங்களை வித்தியாசமாக தான் செய்தது. மற்றம்படி கூத்துக்கள் ஒன்றும் இல்லை. Reception வெள்ளைக்காரர் மாதிரி வைத்தார்கள். அதற்கு மட்டும் எல்லோரும் ஆடிப்பாடினார்கள்.

சில எனக்கு தெரிந்த அமைதியான பெற்றோரே தமது பிள்ளைகளின் கலியாணத்துக்கு அளவுக்கு அதிகமாக ஆடுவது, பாடுவது ஒருவரை ஒருவர் தூக்குவது என்று பார்க்கும் போது  நம்ப முடியாமல் இருக்கும். எனவே கலாசார சீரழிவுக்கு தனிப்பட்ட மனிதர்கள், குடும்பங்களின் பிழையான தெரிவுகளே காரணம்.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் - செவ்வாய் வெள்ளி தப்பாமல் கோயிலுக்கு போவதில் இருந்து, பஜனை செய்வது  , உணவு முறை , உடை என்று நாங்கள் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்ளும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான் . இடையே ஒரு வருடம் வேறொரு நாட்டிற்கு  மேற்படிப்புக்கு சென்று வந்தவன் , வரும் போது காதில் கடுக்கனுடன் வந்து இறங்கினான். தகப்பன் பஜனைக்கு போக கூப்பிட வரவில்லை என்றான் . இவ்வள்வு காலமும் வந்தனீ தானே என தகப்பன் கேட்க , இவ்வளவு காலமும் அறியாமல் இருந்து விட்டேன் என்றான் மகன். தகப்பன் இன்றைக்கும் தனியாகத் தான் கோயில் பஜனை போய் வருகிறார் .    

எங்களின் கற்றுக் கொடுக்கும் தன்மை மற்றையவர்களின்  நடவடிக்கைகளை பரிகசிப்பதில் ஆரம்பித்து , பின்னாளில் அதற்கே பலியாக வேண்டிய மாதிரி அமைந்து விடுகிறது .

பிள்ளைகளுக்கு பகுத்தறியக் கற்றுக் கொடுத்தல் நன்மை பயக்கும் . மற்றையவரின் பாரம்பரியங்களையும் கனம் பண்ணுவதற்கு பழக்கினால், எம்முடைய பாரம்பரியங்களையும் அவர்கள் கனம் பண்ணுவார்கள் .

எங்களுடைய Reception  இல் ஆட்டம் போடுவோம் , அது ஓகே , மற்றயவர்களின்  மணச்சடங்குளில் நடை பெறுவானவற்றை கூட்டமாக இருந்து பரிகசிப்போம் எனும் வரிகளை வாசிக்கும் போது மனம் எனோ இலேசாக வலிக்கின்றது ..எங்களின் பாரம்பரியம் ..ம்  ..ம்ம்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

முதலே கலியாண  வீடியோ பார்த்துவிட்டேன். மிகவும் அழகான நிகழ்வு. என்ர ரெண்டு பெடியளும் யாரை கொண்டு வரப்போறாங்களோ தெரியவில்லை. மூத்தவர் இலங்கை அல்லது இந்தியாவாக இருக்கலாம்.  இரண்டாவது வெள்ளையை கொண்டு வருவார் போல கிடக்கு. இருவரும் இன்னும் ஒருவரையும் பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை இருவரும் சந்தோசமாக, நிம்மதியாக இருந்தால் சரி . கலியாண வாழ்க்கை பிழைத்தால் வாழ்க்கை கஸ்டம் . நல்ல ஒரு மாமியாக , அப்பம்மாவாக இருக்க விரும்புகிறேன். என்ன எழுதி வச்சிருக்கு எண்டு பாப்பம் . 

உங்கள் நல்ல மனதிற்கு உங்களை போல நல்ல மருமகள்மார் தான் கிடைப்பார்கள், எண்ணம் செயல் எதுவோ, அதே நடக்கும், இயற்கையின் நியதி

பையன்,

கலாச்சாரம் என்பது ஒரு நமக்கு நாமே போடுக்கொண்ட விலங்கு, வேலி மாதிரி. காலத்துக்கேற்ற மாதிரி அதை தளர்த்தி adjust செய்வோம்.

ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகம் தங்களைப் பிரித்து வேறாக வைத்திருப்பதிலிருந்து உருவான ஒரு பழக்க வழக்கம்தான் கலாச்சாரமாக பரிமாணம் அடைந்திருக்க வேண்டும். அடிப்படையில், சாதி வேறுபாடும் ஒரு கலாச்சாரம்தானே.

ஆதியில், இல்ல, (one point in time in the graph) ஒரு கட்டத்தில் மஞ்சள் துண்டும் நூலும்தானே தாலி. அது எப்படி உடம்புக்கு ஒவ்வாத உலோகமாக மாறியது. அதுக்கு எப்படி adjust பண்ணினோம்.

அப்பவும் யாரோ ஒரு பையன் கவலைப் பட்டிருப்பார்தான். யாரும் கண்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தமிழில் ஓதி கட்டிய தாலிக்கு, எங்கிருந்தோ வந்த ( நானில்ல, இப்ப இது எண்ட பேரில்ல) சமஸ்கிருதத்துக்கும், பிராமணிக்குமாக எவ்வாறு கலாச்சாரத்தைத் தளர்த்திக் கொண்டோம். அப்பவும் ஒரு பையன் அழுதிருப்பான். யாரும் கண்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

கோயிலுக்கோ, கலியாணத்துக்கோ இல்ல ஒரு கூட்டத்துக்கோ போனால், பார்க்கவே கூச்சமாயிருக்குது, சாமிக்கும் நமக்கும் இடையில, கலாச்சார உடையில் மாற்றத்துக்கு எப்படி adjust பண்ணுகிறோம். அப்பவும் ஒரு பையன் அழுகிறானே. யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். 

இப்பவும் யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

ஏனென்றால் அவர்கள் தான் பெரும்பான்மை (majority). ஜனநாயகம் என்று நாம ஒதுங்க வேண்டியதுதான்.

 

இன்னுமொன்று,

கலாச்சாரத்தின்ர கரு ( core ) மாறாமல் அப்படியே தானிருக்கும்.

தேருக்கு சோடனைப் பொருட்களும், சோடிக்கும் விதமும் மாறலாம், தேர் என்ற ஒன்று மாறாமலேயிருக்கும்.

நாளைக்கு அடிக்கிற வேறொரு கலாச்சார காத்தில சோடனைப் பொருள் பறந்திடும். வேறொன்று வந்து ஒட் டிக்கொள்ளும்.

கறிக்கு புதிசு புதிசா என்ன போட்டு சமைத்தாலும் கறியென்று ஒன்று இருந்து கொண்டேயிருக்கும். அத நினைச்சு சமாதானமடையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

 

எனக்கும் மூன்று பிள்ளைகள், இன்னும் 7-8 வருடத்தில் செய்து வைக்கனும். தமிழரை செய்து வைக்கனும் என்பதுதான் ஆசை. ஆனா தன் பாலினத்தை கூட்டிவராதவரை யாரென்றாலும் சரி. மகன்களுக்கு ஊரில் உள்ள பெண்களைதான் பார்த்து செய்து வைக்கனும், பார்ப்போம்.

 

ஊரில் இருந்து பெண்ணெடுப்பது / ஆணெடுப்பது  மிகவும் நல்ல விடயம். அப்படி செய்யும் போது இவர்களுக்கு நாம் உதவி செய்து இவர்களை தூக்கி விடுகின்றோம் என்ற மனப்பான்மையை / உயர்வு நவிற்சியை அவர்களுடன் தொடர்பாடும் போது  மறந்தும் போய் மனதில் வைக்காதீர்கள் . அவர்களை  (புலம் பெயர்ந்த ) உள்ளூரில் கொண்டிருந்தால் என்ன மாதிரி நடத்துவீர்களோ அந்த மாதிரி சமமாக நடத்துங்கள் .    எனக்கு தெரிந்த சில  குடும்பங்களில் இந்த விடயத்தினால் பெரும் பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன ( தமிழ் , சிங்கள குடும்பங்கள் இரண்டிலுமே ) ...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சாமானியன் said:

ஊரில் இருந்து பெண்ணெடுப்பது / ஆணெடுப்பது  மிகவும் நல்ல விடயம். அப்படி செய்யும் போது இவர்களுக்கு நாம் உதவி செய்து இவர்களை தூக்கி விடுகின்றோம் என்ற மனப்பான்மையை / உயர்வு நவிற்சியை அவர்களுடன் தொடர்பாடும் போது  மறந்தும் போய் மனதில் வைக்காதீர்கள் . அவர்களை  (புலம் பெயர்ந்த ) உள்ளூரில் கொண்டிருந்தால் என்ன மாதிரி நடத்துவீர்களோ அந்த மாதிரி சமமாக நடத்துங்கள் .    எனக்கு தெரிந்த சில  குடும்பங்களில் இந்த விடயத்தினால் பெரும் பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன ( தமிழ் , சிங்கள குடும்பங்கள் இரண்டிலுமே ) ...

நன்றி சாமானியன். நீங்க சொன்னது மிகச் சரி 👍👍, இதனால் பிற்பாடு பிரச்சனை வரும்.

நானோ என் குடும்பமோ எல்லோரையும் மதித்து சம்மாகதான் நடத்துகின்றனாங்கள், 

நிலையற்ற வாழ்வில் யார் உயர்வு தாழ்வு. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சாமானியன் said:

ஊரில் இருந்து பெண்ணெடுப்பது / ஆணெடுப்பது  மிகவும் நல்ல விடயம். அப்படி செய்யும் போது இவர்களுக்கு நாம் உதவி செய்து இவர்களை தூக்கி விடுகின்றோம் என்ற மனப்பான்மையை / உயர்வு நவிற்சியை அவர்களுடன் தொடர்பாடும் போது  மறந்தும் போய் மனதில் வைக்காதீர்கள் . அவர்களை  (புலம் பெயர்ந்த ) உள்ளூரில் கொண்டிருந்தால் என்ன மாதிரி நடத்துவீர்களோ அந்த மாதிரி சமமாக நடத்துங்கள் .    எனக்கு தெரிந்த சில  குடும்பங்களில் இந்த விடயத்தினால் பெரும் பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன ( தமிழ் , சிங்கள குடும்பங்கள் இரண்டிலுமே ) ...

 

16 minutes ago, உடையார் said:

நன்றி சாமானியன். நீங்க சொன்னது மிகச் சரி 👍👍, இதனால் பிற்பாடு பிரச்சனை வரும்.

நானோ என் குடும்பமோ எல்லோரையும் மதித்து சம்மாகதான் நடத்துகின்றனாங்கள், 

நிலையற்ற வாழ்வில் யார் உயர்வு தாழ்வு. 

             ஊரில் காதலித்துக் கொண்டு இங்கு வந்து சாக்குப் போக்குச் சொல்லி பிரியிற மாதிரி பிரிந்து பின்னர் அங்குள்ளவரைக் கூப்பிட்ட பலரும் உள்ளனர்.
             றோசாசெடியில் சேலை காயப் போட்டு எடுக்கிற மாதிரி கவனமாக செயல்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சுப.சோமசுந்தரம் said:

http://puthu.thinnai.com/?p=34480

அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும். 

 

சோமசுந்தரம் ஐயா,

என்னிடம் ஒரு கேள்வி, (திரிக்கு சம்மந்தம் இல்லவிட்டாலும்)
 
பழைய எழுத்துக்க்களை பயன்படுத்துவது தவறா?, நான் சிலவேலை கைகலால் கடிதங்கள் எழுதும்போது இன்னும் சிறு வயது பழக்கமான அந்த பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றேன். ஏன் "வேன்டுமேன்றே பயன்படுதுகின்றார்கள்" என கூறுகின்றீர்கள்? இது ஒரு option தானே, பழையா எழுத்தில் இருக்கும் அழகு புதிய எழுத்தில் இல்லையே. 

சிறிது விளங்கப்ப்டுத்துவீர்களா?

6 hours ago, குமாரசாமி said:

பத்துப்பேரோடை குடும்பம் நடத்தீட்டு பதினோராவது ஆளை கலியாணம் கட்டுவதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் கலாச்சாரமா சார்? :cool:

அப்படி இல்லை சார். கண்டபடி எண்ணிலடங்கா கோபியரோடு கும்மாளம் கொட்ட நாம் ஒன்றும் கிருஷ்ன பரமாத்மா இல்லை.

இரண்டு பொண்டாட்டியை வருடாவருடம் கட்ட நாம் ஒன்றும் தமிழ்கடவுள் முருகன் இல்லை.

பட்டத்து ராணி என்று ஒன்றையும் அந்தப்பபுரத்தில் பல வைப்பாட்டிகளையும் வைத்திருக்க நாம் ஒன்றும்  பழைய தமிழ் மன்னர்கள் இல்லை. 

பெண்பிள்ளைகளை தேவதாசிகள் என்று கோவிலில் பொட்டுக்கட்டி விட்டு  பின் அவர்களை அவர்களை துஷப்பிரயோகம்  செய்யும் பார்பன இந்து கலாச்சாரத்தையும்  நாம் மாற்றி விட்டோம். 

எழு எட்டு வயதில் பிள்ளைகளுக்கு பால்ய விவாகத்தை நடத்திய, பின்னர் கணவன் இறந்த போது அவர்களை உடன்கட்டை ஏறச்சொல்லி  வற்புறுத்திய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக தீயில் போட்டு படுகொலை செய்த காட்டுமிராண்டி பார்பன இந்துக்கலாசாரத்திலும் இப்போது நாம் இல்லை. 

ஆகவே காலம் மாற பழைய காட்டுமிராண்டித்தனம் மாறி புதிய நாகரீகம் இப்படிப் புறுப்புறுப்பவர்களைத் தாண்டி ஏற்படுவது  இயற்கை நியதி. என்ன மாற்றங்களை ஏற்றுகொள்ளாத சிலர் இவ்வாறு உங்களைப் போல் புறுபுறுப்பார்கள். அவர்கள் தமக்குள்  இவ்வாறு  புறுபுறுத்துவிட்டு  தமது காலம் வர போய்சேர வேண்டியது தான். மாற்றங்ளையும் புதுமைகளையும் சமுதாயம் உள்வாங்கியே தீரும். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

சோமசுந்தரம் ஐயா,

என்னிடம் ஒரு கேள்வி, (திரிக்கு சம்மந்தம் இல்லவிட்டாலும்)
 
பழைய எழுத்துக்க்களை பயன்படுத்துவது தவறா?, நான் சிலவேலை கைகலால் கடிதங்கள் எழுதும்போது இன்னும் சிறு வயது பழக்கமான அந்த பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றேன். ஏன் "வேன்டுமேன்றே பயன்படுதுகின்றார்கள்" என கூறுகின்றீர்கள்? இது ஒரு option தானே, பழையா எழுத்தில் இருக்கும் அழகு புதிய எழுத்தில் இல்லையே. 

சிறிது விளங்கப்ப்டுத்துவீர்களா?

நீங்கள் எழுதுவது தவறில்லை. ஏனெனில் அது உங்களுக்கு ரசிக்கிறது; எழுதுகிறீர்கள். வருடங்கள் உருண்டோடும் போது, அதில் பழக்கமில்லாத இளைய தலைமுறையினருக்காக நீங்களும்  ரசனையில் சமரசம் செய்வது தேவையாகலாம். நான் அந்த இணையத்தை விமர்சித்ததற்குக் காரணம் உண்டு. அவர்கள் கொள்கையளவில் ஆரியப் பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள். ஆகவே பெரியார் சொன்ன சீர்திருத்தம் என்பதற்காகவே மாற்ற மறுக்கிறார்கள் என்பது என் கருத்து. அரசும் எழுத்துச்  சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டதால், மாற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கி விமர்சித்து இறுதியில் அதனை ஏற்றமைவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அதிலும் ஒரு பொதுத்தளத்தை உருவாக்கி நடத்துபவர்கள் பொது வழக்கத்தின்படி எழுதுவதே மக்களுக்குத் தேவையற்ற இன்னல்களைத் தவிர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

 

சிறப்பான திருமணம். பொருத்தமான இணை. ஈழப்பிரியன் அவர்கள் மகள் திருமணம் எப்போது நிகழ்ந்திருந்தாலும், இந்த யாழ் சொந்த இல்ல விழாவிற்கு இப்போது என் வாழ்த்துக்கள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளில் :

"ஒரு மனதாயினர் தோழி
இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி
பெருமனதாகி இல்லறம்  காக்கவும்
பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
ஒரு மனதாயினர் தோழி !"
    

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

நன்று .. வாழ்த்துக்கள் தோழர்..👌

20 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இன்றைய திருமண நிகழ்வுகள் பற்றிய உங்கள் ஆதங்கத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. உங்கள் தரப்பு நியாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், எனது மகள் சோம.அழகு வேறு இணையத்தில் எப்போதோ அங்கத நடையில் (sarcastic) வரைந்த கட்டுரையின் இணைப்பு

http://puthu.thinnai.com/?p=34480

அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும். 

 

புலவர் குடும்பம் சிறப்பு..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.