Jump to content

குளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Nathamuni said:

கனடா பக்கம், ஊருக்கு போய் வர்ற ஆக்கள் பைக்கில போட்டு, 10, 20 கிலோ எண்டு கொண்டு வர தொடங்கீட்டினம். அங்கையே, சின்ன பாக்குல பொதி செய்து கொண்டு வருகினம். கடைக்கு ஸ்ட்ராயிட் டெலிவரி.

முதலில் இணைப்புக்கு நன்றி.
அடுத்து இப்படியானவற்றை கொண்டுவரும் போது சுங்க திணைக்களகத்தில் பிரச்சனை இல்லையோ?
இங்கு இல்லை என்று சொல்லி பிடிபட்டால் கணனியில் பதிந்துவிடுவார்கள்.அப்புறம் என்ன எங்கே போய்வந்து இறங்கினாலும் தடவி போட்டுத் தான் விடுவார்கள்.

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Amazon இல், ebay இல் கறிவேப்பிலைக் கன்று, விதைகள் எல்லாம் விற்கிறார்கள்.

ஓ ... நான் அறிந்திருக்கவில்லை, நன்றி சுமே தரவிற்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, உடையார் said:

ஓ ... நான் அறிந்திருக்கவில்லை, நன்றி சுமே தரவிற்கு

அமேசனில்   விற்பனையாளர் சைனா வாக இருந்தால் தவிர்ப்பது நல்லது லொக் டவுன் தொடங்கையில் வாங்கி போட்டது இன்னும் முளைவிடவில்லை .அதே பெங்களூரில் இருந்து ஒருவர்  ஒரு கிழமையில் இங்கு வந்தது பரவாயில்லை மறுபடியும் முயட்சி பண்ண ஒருமாதம் ஆகும் என்கிறார்கள் .

eபே வாங்கி அனுபவமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் இணைப்புக்கு நன்றி.
அடுத்து இப்படியானவற்றை கொண்டுவரும் போது சுங்க திணைக்களகத்தில் பிரச்சனை இல்லையோ?
இங்கு இல்லை என்று சொல்லி பிடிபட்டால் கணனியில் பதிந்துவிடுவார்கள்.அப்புறம் என்ன எங்கே போய்வந்து இறங்கினாலும் தடவி போட்டுத் தான் விடுவார்கள்.

இங்கு நாய்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள், காசுத்தாள் மோப்பம் பிடிக்க பழக்கி வைத்திருக்கிறார்கள்.

அதுக்கு, கருவேற்பில்லை மணம் பிடிக்காது போலை கிடக்குது. 

நீங்கள் இரண்டு பிளேன் பிடிக்கோணும். இங்கே கொழும்பிலை ஏறினா, லண்டன் தானே.

இலங்கையில் செக்யூரிட்டி ஸ்கேனிங்கில் கேட்டிருக்கிறார்கள்.

அரோகரா, லண்டனில கோயில் திருவிழாவுக்கு என்று சொல்லிக் கொண்டே வந்து விட்டாராம்.  

அதுமட்டுமா, ஊர் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி,   எல்லாமே வருகுதே. 

உடன் மீன் சட்ட ரீதியா வருகுது என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

இங்கு கறி  வேப்பிலையை கொண்ரோல் பண்ணுவது Port health authorities https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports இவையளுக்கு ஆக்கள் குறைவு வேலை கூட இவர்கள் eu பிப் செக்கப் செய்வதுக்கு அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கே ஒழுங்கா தெரியாது ஏன்  கறி  வேப்பிலை கொண்ரோல் (தடை  அல்ல ) என்று .செக்கப்புக்கு போனால் 95வீதம் ரிஜெக்ட் பண்ணுவினம் . இந்த கேவலத்தில் ஏர்போர்ட் காஸ்ட்மஸ்க்கு என்ன விளங்கும் ? நாலு உடுப்பும் மிகுதி இரண்டு பெட்டி  நாப்பது கிலோ கறிவேப்பிலை என்றால் சந்தேகப்பட்டு மாட்டுப்படுபவைதான் உண்டு கொஞ்சமாய் கொண்டுவரும்போது கும்பலில் கோவிந்தா என்று உள்ளே வந்திடும் . இதைவிட டோவரில்  நிக்கும் கஸ்டம்ஸ் அவைக்கு பியர் அற்ககோல் சிகரெட் ஆள் கடத்தல்தான் முக்கியம் .இவ்வளவு கூத்தையும்  பார்த்து வெறுத்து போன Port health இரண்டுவருடத்துக்கு முன் கறிவேப்பிலை செக்கப் இல்லாமல் கொண்டுவந்து வித்தால்  1000 பவுன் தண்டம் என்று நோட்டிஸ் அடித்து விட்டு பார்த்தினம் காரியம் நடக்கணுமே   நம்ம சனத்தை  பற்றி தெரியும்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Amazon இல், ebay இல் கறிவேப்பிலைக் கன்று, விதைகள் எல்லாம் விற்கிறார்கள்.

உடையார்,

கொத்தமல்லிக்கீரை விதையில் இரண்டு ரகம் இருக்கு அதில் கீரைக்கான நாத்திவிதைகள் கிடைப்பதி மிகவும் கஸ்ரமாக உள்ளது எனது பக்கத்துத் தோட்டக்காரன் வங்காளி அவன் கடையும் வைத்திருக்கிறான் கொத்தமல்லிக் கீரையை கோடைகாலத்தில் தானே உண்டாக்கி விற்பனைசெய்கிறான் அனனிட்டை கீரைக்கான நாத்துவிதைகளைக் கேட்டால் கோதாரிவிழுவான் தருகிறான் இல்லை கடையில் வங்கினால் ஒரு சின்ன கடதாசிப் பையில் எண்ணி இருபத்து ஐந்து விதையை அடைத்து ஒரு யுரோக்குமேல் விலைவைக்கிறான். இங்கு ஒரு தமிழர் கடைவைத்திருக்கிறார் அவர் ஒரேயடியாக் கேட்டபடி வேரோடு கொத்தமல்லிக்கீரை தனக்கு வேணும் என காரணம் தய்லாந்துக்காரரின் உணவில் கொத்தமல்லியை வேரோடுதான் பாவிப்பார்கள், கிலோ அறு ரூப்பக்கு வாங்குகிறேன் தா எண்டால் விதைக்கு எங்க போறது !

உங்களால் நிறைய பகொத்தமல்லிக்கீரை பயிரிட முடியுமாகில் நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தாய்லாந்துக்காரர் அதிகம் பொருள் வாங்கும் கடைகளில்  கேட்டுப்பார்த்துவிட்டு கொஞ்சம் கூடுதலாக பயிரிட்டால் நல்லவிலைக்குக் கொடுக்கலாம் .

தவிர பெருமெடுப்பில் ஒரேயடியாச் செய்யாது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம்.

நீங்கள் வாழும் நாட்டில் பெரிய அளவில் கொத்தமல்லிக்கீரை நாத்துவிதை இருந்தால் கிடைக்கும் இடத்தின்  தகவல்தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Nathamuni said:

இங்கு நாய்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள், காசுத்தாள் மோப்பம் பிடிக்க பழக்கி வைத்திருக்கிறார்கள்.

இப்ப சோமாலி சாப்பிடும் மிரா  எனும் போதை குழையையும் நாய் மோப்பம்  பிடிக்க பழக்கி   இருக்கினம் இன்னும் சில நாடுகளில் அது தடை பண்ண வில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

இங்கு கறி  வேப்பிலையை கொண்ரோல் பண்ணுவது Port health authorities https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports இவையளுக்கு ஆக்கள் குறைவு வேலை கூட இவர்கள் eu பிப் செக்கப் செய்வதுக்கு அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கே ஒழுங்கா தெரியாது ஏன்  கறி  வேப்பிலை கொண்ரோல் (தடை  அல்ல ) என்று .செக்கப்புக்கு போனால் 95வீதம் ரிஜெக்ட் பண்ணுவினம் . இந்த கேவலத்தில் ஏர்போர்ட் காஸ்ட்மஸ்க்கு என்ன விளங்கும் ? நாலு உடுப்பும் மிகுதி இரண்டு பெட்டி  நாப்பது கிலோ கறிவேப்பிலை என்றால் சந்தேகப்பட்டு மாட்டுப்படுபவைதான் உண்டு கொஞ்சமாய் கொண்டுவரும்போது கும்பலில் கோவிந்தா என்று உள்ளே வந்திடும் . இதைவிட டோவரில்  நிக்கும் கஸ்டம்ஸ் அவைக்கு பியர் அற்ககோல் சிகரெட் ஆள் கடத்தல்தான் முக்கியம் .இவ்வளவு கூத்தையும்  பார்த்து வெறுத்து போன Port health இரண்டுவருடத்துக்கு முன் கறிவேப்பிலை செக்கப் இல்லாமல் கொண்டுவந்து வித்தால்  1000 பவுன் தண்டம் என்று நோட்டிஸ் அடித்து விட்டு பார்த்தினம் காரியம் நடக்கணுமே   நம்ம சனத்தை  பற்றி தெரியும்தானே ?

கறிவேப்பிலை பிளேனிலை தானே வருகுது. இடையே போடப்படட  தடைக்கு முக்கிய காரணம், பிரெஷ் ஆக இருக்கோணும் என்று அவர்கள் அடித்த ஸ்பிரேயில் இருந்த கெமிக்கல். 

health authorities பொறுத்தவரையில், ஸ்பிரே விசயம் விளங்காது தானே. ஆகவே, வந்த ஒரு சாப்பாட்டு பொருளில் கெமிக்கல் இருக்குது என்று தடை செய்தார்கள்.

நம்மவர்கள், கீரைக்கூடைக்குள், மறைத்து, கறிவேப்பிலை கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்க தொடங்கினார்கள்.

தடை பண்ணியாச்சு.... அரசாங்கம் நமக்கு நன்மை தானே செய்கிறது என்ற புரிதலே இல்லாமலே அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

இப்போது தடை இல்லை. ஆனாலும் கடைக்காரர்கள் ஏறின விலையினை குறைக்காமல், தடை இருப்பதாகவே காட்டிக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மேசைக்கு கீழே, மறைத்து வைத்து, எடுத்து தருவதாக பாவனை செய்தார்கள். இப்போது சாதாரணமாகவே பரப்பி வைத்திருக்கிறார்கள். 

என்ன, இந்த விலை என்றால், தடை பண்ணி இருக்குதெல்லோ என்பார்கள், எம்மை முட்டாள்களாக நினைத்துக் கொண்டே.

தடை செய்திருந்தால், எப்படி விக்கிறீர்கள், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்தால் பிரச்சனை இல்லையோ என்றால் அசடு வழிவார்கள். உண்மையான தடை இருந்தால், பைன் கட்டி மாளாது. இவர்கள் பொய் சொல்லி விலை கூட்டி வியாபாரம் செய்கிறார்கள்.

ஊர்ல மீன் மார்க்கெடில தந்திரம் ஒன்று செய்வார்கள். மீனை பார்த்து, விலை கூடுதலா இருக்கே என்று யோசித்துக் கொண்டிருக்கேக்க, வியாபாரியின் நண்பர் பக்கத்தில் வந்து, காசை நீட்டிக்கொண்டே விலை கேட்ப்பார். வியாபாரி.... 'இவர் தம்பி கேட்டிருக்கிறார்... பொறுங்கோ' என்பார்... கேட்டவரோ, எடுக்கிறியாலோ... அல்லது நான் எடுக்கலாமோ எண்டுவார்... நாமும் கூடின காசைக் கொடுத்து... வாங்கிக் கொண்டு போய்... வீட்டில வாங்கி கட்டுவம்.

அது போல தான் இந்த தந்திரமும்.

இந்தியா, இலங்கையில் வருவதற்கு தான் தடை என்று வைத்துக் கொண்டாலும், டொமினிக்கன் குடியரசு, கனடா போன்ற நாடுகளில் இருந்து வர தடை இல்லை.

ஆகவே இவர்கள், தமது அதிக விலைக்கு, காரணம் ஒன்றை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Elugnajiru said:

உடையார்,

கொத்தமல்லிக்கீரை விதையில் இரண்டு ரகம் இருக்கு அதில் கீரைக்கான நாத்திவிதைகள் கிடைப்பதி மிகவும் கஸ்ரமாக உள்ளது எனது பக்கத்துத் தோட்டக்காரன் வங்காளி அவன் கடையும் வைத்திருக்கிறான் கொத்தமல்லிக் கீரையை கோடைகாலத்தில் தானே உண்டாக்கி விற்பனைசெய்கிறான் அனனிட்டை கீரைக்கான நாத்துவிதைகளைக் கேட்டால் கோதாரிவிழுவான் தருகிறான் இல்லை கடையில் வங்கினால் ஒரு சின்ன கடதாசிப் பையில் எண்ணி இருபத்து ஐந்து விதையை அடைத்து ஒரு யுரோக்குமேல் விலைவைக்கிறான். இங்கு ஒரு தமிழர் கடைவைத்திருக்கிறார் அவர் ஒரேயடியாக் கேட்டபடி வேரோடு கொத்தமல்லிக்கீரை தனக்கு வேணும் என காரணம் தய்லாந்துக்காரரின் உணவில் கொத்தமல்லியை வேரோடுதான் பாவிப்பார்கள், கிலோ அறு ரூப்பக்கு வாங்குகிறேன் தா எண்டால் விதைக்கு எங்க போறது !

உங்களால் நிறைய பகொத்தமல்லிக்கீரை பயிரிட முடியுமாகில் நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தாய்லாந்துக்காரர் அதிகம் பொருள் வாங்கும் கடைகளில்  கேட்டுப்பார்த்துவிட்டு கொஞ்சம் கூடுதலாக பயிரிட்டால் நல்லவிலைக்குக் கொடுக்கலாம் .

தவிர பெருமெடுப்பில் ஒரேயடியாச் செய்யாது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம்.

நீங்கள் வாழும் நாட்டில் பெரிய அளவில் கொத்தமல்லிக்கீரை நாத்துவிதை இருந்தால் கிடைக்கும் இடத்தின்  தகவல்தரவும்.

கொத்தமல்லி ஏன் அவனிடம் வாங்குகிறீர்கள். வீட்டில் கறிக்குப் போடும் மல்லியை இரண்டாக உடைத்தது நிலத்திலோ அல்லது சாடிகளிலோ வைத்தால் மூன்று நாட்களில் வளர ஆரம்பிக்கும்.

13 minutes ago, Nathamuni said:

கறிவேப்பிலை பிளேனிலை தானே வருகுது. இடையே போடப்படட  தடைக்கு முக்கிய காரணம், பிரெஷ் ஆக இருக்கோணும் என்று அவர்கள் அடித்த ஸ்பிரேயில் இருந்த கெமிக்கல். 

அவர்களை பொறுத்தவரையில், ஸ்பிரே விசயம் விளங்காது தானே. ஆகவே, வந்த ஒரு சாப்பாட்டு பொருளில் கெமிக்கல் இருக்குது என்று தடை செய்தார்கள்.

நம்மவர்கள், கீரைக்கூடைக்குள், மறைத்து, கறிவேப்பிலை கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்க தொடங்கினார்கள்.

தடை பண்ணியாச்சு.... அரசாங்கம் நமக்கு நன்மை தானே செய்கிறது என்ற புரிதலே இல்லாமலே அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

இப்போது தடை இல்லை. ஆனாலும் கடைக்காரர்கள் ஏறின விலையினை குறைக்காமல், தடை இருப்பதாகவே காட்டிக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மேசைக்கு கீழே, மறைத்து வைத்து, எடுத்து தருவதாக பாவனை செய்தார்கள். இப்போது சாதாரணமாகவே பரப்பி வைத்திருக்கிறார்கள். 

என்ன, இந்த விலை என்றால், தடை பண்ணி இருக்குதெல்லோ என்பார்கள், எம்மை முட்டாள்களாக நினைத்துக் கொண்டே. தடை செய்திருந்தால், எப்படி விக்கிறீர்கள், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்தால் பிரச்சனை இல்லையோ என்றால் அசடு வழிவார்கள். உண்மையான தடை இருந்தால், பைன் கட்டி மாளாது. இவர்கள் பொய் சொல்லி விலை கூட்டி வியாபாரம் செய்கிறார்கள்.

ஊர்ல மீன் மார்க்கெடில தந்திரம் ஒன்று செய்வார்கள். மீனை பார்த்து, விலை கூடுதலா இருக்கே என்று யோசித்துக் கொண்டிருக்கேக்க, வியாபாரியின் நண்பர் பக்கத்தில் வந்து, காசை நீட்டிக்கொண்டே விலை கேட்ப்பார். வியாபாரி.... இவர் தம்பி கேட்டிருக்கிறார்... பொறுங்கோ என்பார்... கேட்டவரோ, எடுக்கிறியாலோ... அல்லது நான் எடுக்கலாமோ எண்டுவார்... நாமும் கூடின காசைக் கொடுத்து... வாங்கிக் கொண்டு போய்... வீட்டில வாங்கி காடுவம்.

அது போல தான் இந்த தந்திரமும்.

இந்தியா, இலங்கையில் வருவதற்கு தான் தடை என்று வைத்துக் கொண்டாலும், டொமினிக்கன் குடியரசு, கனடா போன்ற நாடுகளில் இருந்து வர தடை இல்லை.

ஆகவே இவர்கள், தமது அதிக விலைக்கு, காரணம் ஒன்றை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது பெருமாள்.

எதுக்கும் என்னிடம் ஓடர் தாறவை தாங்கோ. இரண்டு மாதங்களில் கன்று தருகிறேன்.😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்தமல்லி ஏன் அவனிடம் வாங்குகிறீர்கள். வீட்டில் கர்க்குப் போடும் மல்லியை இரண்டாக உடைத்தது நிலத்திலோ அல்லது சாடிகளிலோ வைத்தால் மூன்று நாட்களில் வளர ஆரம்பிக்கும்.

காய்ந்த மல்லியை, இரண்டாக  உடைத்து போடுவதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

காய்ந்த மல்லியை, இரண்டாக  உடைத்து போடுவதா?

ஆமா அதுதான் விரைவில் வளரும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, உடையார் said:

ஆமா அதுதான் விரைவில் வளரும் 

இப்ப உடைச்சுக் கொண்டெல்லே நிக்கிறன் 😎

8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்தமல்லி ஏன் அவனிடம் வாங்குகிறீர்கள். வீட்டில் கர்க்குப் போடும் மல்லியை இரண்டாக உடைத்தது நிலத்திலோ அல்லது சாடிகளிலோ வைத்தால் மூன்று நாட்களில் வளர ஆரம்பிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: plant, tree, flower, outdoor and nature

என் வீட்டது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Elugnajiru said:

உடையார்,

கொத்தமல்லிக்கீரை விதையில் இரண்டு ரகம் இருக்கு அதில் கீரைக்கான நாத்திவிதைகள் கிடைப்பதி மிகவும் கஸ்ரமாக உள்ளது எனது பக்கத்துத் தோட்டக்காரன் வங்காளி அவன் கடையும் வைத்திருக்கிறான் கொத்தமல்லிக் கீரையை கோடைகாலத்தில் தானே உண்டாக்கி விற்பனைசெய்கிறான் அனனிட்டை கீரைக்கான நாத்துவிதைகளைக் கேட்டால் கோதாரிவிழுவான் தருகிறான் இல்லை கடையில் வங்கினால் ஒரு சின்ன கடதாசிப் பையில் எண்ணி இருபத்து ஐந்து விதையை அடைத்து ஒரு யுரோக்குமேல் விலைவைக்கிறான். இங்கு ஒரு தமிழர் கடைவைத்திருக்கிறார் அவர் ஒரேயடியாக் கேட்டபடி வேரோடு கொத்தமல்லிக்கீரை தனக்கு வேணும் என காரணம் தய்லாந்துக்காரரின் உணவில் கொத்தமல்லியை வேரோடுதான் பாவிப்பார்கள், கிலோ அறு ரூப்பக்கு வாங்குகிறேன் தா எண்டால் விதைக்கு எங்க போறது !

உங்களால் நிறைய பகொத்தமல்லிக்கீரை பயிரிட முடியுமாகில் நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தாய்லாந்துக்காரர் அதிகம் பொருள் வாங்கும் கடைகளில்  கேட்டுப்பார்த்துவிட்டு கொஞ்சம் கூடுதலாக பயிரிட்டால் நல்லவிலைக்குக் கொடுக்கலாம் .

தவிர பெருமெடுப்பில் ஒரேயடியாச் செய்யாது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம்.

நீங்கள் வாழும் நாட்டில் பெரிய அளவில் கொத்தமல்லிக்கீரை நாத்துவிதை இருந்தால் கிடைக்கும் இடத்தின்  தகவல்தரவும்.

Elugnajiru  நான் Bunnings இல் வாங்கி சிறிய அளவில் தான் வளர்க்கின்றேன், பெரிய அளவில் இதுவரை யோசித்ததில்லை, அத்துடன் வியாபாரம் எனக்கு ஒத்து வராது கேட்ட விலைக்கு கொடுத்திடுவேன்😀,

நீங்கள் சொன்னமாதிரி இதற்கு நல்ல கேள்வியுண்டு சந்தையில், இத்தாலிக்காரரும் கூட உபயோகின்றவர்கள் இதை.

 இங்கு நண்பர்களிடம் விசாரித்துவிட்டு உங்களிற்கு தனிமடல் அனுப்புகின்றேன்.

நானும் வேரை கிரைன்டரில் போட்டு அரைத்து பாவிகின்றனான் எறிவதில்லை, நல்ல சத்து வேரில்தான் .

11 minutes ago, Nathamuni said:

இப்ப உடைச்சுக் கொண்டெல்லே நிக்கிறன் 😎

சிரிப்பு பச்சை முடிந்துவிட்டது😀, ஆனா நல்ல முயற்சி👍

ஒரு சப்பாத்திக்கட்டையை எடுத்து உருட்டினால் எல்லாம் உடைத்துவிடும்

மெதுவாக உருட்டனும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 hour ago, Nathamuni said:

இங்கு நாய்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள், காசுத்தாள் மோப்பம் பிடிக்க பழக்கி வைத்திருக்கிறார்கள்.

அதுக்கு, கருவேற்பில்லை மணம் பிடிக்காது போலை கிடக்குது. 

நீங்கள் இரண்டு பிளேன் பிடிக்கோணும். இங்கே கொழும்பிலை ஏறினா, லண்டன் தானே.

இலங்கையில் செக்யூரிட்டி ஸ்கேனிங்கில் கேட்டிருக்கிறார்கள்.

அரோகரா, லண்டனில கோயில் திருவிழாவுக்கு என்று சொல்லிக் கொண்டே வந்து விட்டாராம்.  

அதுமட்டுமா, ஊர் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி,   எல்லாமே வருகுதே. 

உடன் மீன் சட்ட ரீதியா வருகுது என்று நினைக்கிறேன். 

உடன் மீன் 

அல்லது  உயிர்க்கோழி  என்றால்  என்னவோ?????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த ஐந்து வருடமாகவே நான் இந்தக் கொத்தமல்லியுடன் அக்கப்பொர் சொல்லி மாளாது, 

இந்தமுறை ஒரு கைபார்ப்பம் எண்டு பாத்தி எல்லாம் போட்டு தொடங்கி விதச்சவுடன் காலநிலைக்கு என்ன பிரச்சனையோ தெரியாது இரவில குளிர் கூடிவிடும் முளைவருகிறநேரத்தில் குளிர் பட்டுதென்றால் ஒரு மில்லிமீற்றர்கூட வளராது ஆனால் அது வளருதோ இல்லையோ அதனது காலத்துக்குப் பூக்கவேணும் காய்க்கவேணும் நானும் அது வளருது என காத்துக்கொண்டு இருக்க சின்னதாக ஒரு இலை இரண்டு இலை வைத்துவிட்டுப் பூக்க ஆரம்பித்துவிடும் (நான் சொல்வது நாங்கள் வீடுகளில் இரசம் வைக்க வாங்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை நன் விதைச்சது) இலைக்கான கொத்தமல்லி விதையை பக்கத்து வங்காளி ஊரில இருந்து கொண்டுவந்து வளர்த்துவிட்டு என்னை ஒரு சொறிநாய் பார்க்கிறமாதிரிப் பார்ப்பான். இரத்தக் கொதிப்பு ஏறுமா ஏறாதா நீங்களே தீர்மானியுங்கள்.  ஆனால் நேசறியளில் விக்கும் சின்ன பக்கற்றுகள் கட்டுபடியாகாது எண்ணிப்பார்த்தால் ஆகக்குறைந்தது இருபத்து ஐந்து மல்லி தேறாது.

ஒரு பயிரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது காலநிலையும் சூரிய வெளிச்சமும்தான் தவிர ஒரு பயில் நாத்துநட்டு முளைச்சு இத்தனை நாதளுக்குள் பூத்துக் காய்கவேண்டுமென்பது அதனுடைய மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் விதி காலநிலையால் வளரும் தன்மை இல்லாதுவிட்டால் அது பூக்காது என்பதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

உடன் மீன் 

அல்லது  உயிர்க்கோழி  என்றால்  என்னவோ?????

அப்போதுதான் பிடிபட்டு, கரை கொண்டுவரப்பட்ட உயிர் இல்லாத மீன்,  உடன் மீன்  என்று அழைக்கப்படும். ஆங்கிலத்தில் பிரெஷ் பிஷ் என்போம்.

கொல்லப்படுவதக்கு தயாராக இருக்கும், அப்போதுதான் சந்தைக்கு போய் வாங்கிக் கொண்டுவந்த கோழி உயிர்க்கோழி  எனப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, தமிழ் சிறி said:

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

நான் எழுதியது போல்தான் தமிழ் கடைகளில் எழுதி இருந்தார்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Nathamuni said:

அப்போதுதான் பிடிபட்டு, கரை கொண்டுவரப்பட்ட உயிர் இல்லாத மீன்,  உடன் மீன்  என்று அழைக்கப்படும். ஆங்கிலத்தில் பிரெஷ் பிஷ் என்போம்.

கொல்லப்படுவதக்கு தயாராக இருக்கும், அப்போதுதான் சந்தைக்கு போய் வாங்கிக் கொண்டுவந்த கோழி உயிர்க்கோழி  எனப்படும்.

இது உண்மைத்தமிழா?

பேச்சுத்தமிழா?

காரணத்தமிழா ஐயனே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

இது உண்மைத்தமிழா?

பேச்சுத்தமிழா?

காரணத்தமிழா ஐயனே??

காரணத்தமிழ் என்பேன் ஐயனே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறியை அடுப்பில் வைத்து விட்டு பின்னால போய் மரத்தில பிடுங்கி போடுறதையும் இந்த திரியையும் யோசிக்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, தமிழ் சிறி said:

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

கதிர்வேல்பிள்ளை எண்டு மாத்தாத வரைக்கும் சந்தோசம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 “கறிவேம்பு இலை என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது

கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்
 
Contents

கறிவேப்பிலை:

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன.

இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். தூக்கி எரியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன. தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்து இந்தச் செடியை வளர்ப்பதற்கென்று தனியாக எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. ஒருமுறை நட்டு வைத்தால் அதன் பழங்கள் பழுத்துக் கீழே விழுவதினால் எண்ணற்ற செடிகள் வளர்ந்து விடுகின்றன. கறிவேப்பிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமாகப் பயிர் செய்யப்ப்படுகிறது. அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் அனைத்து தோட்டங்களிலும் கறிவேப்பிலை மரம் நீங்காத இடத்தினைப் பெற்று இருக்கிறது. நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் கறிவேப்பிலை சாதாரணமாகக் கிடைக்கின்றது. வீடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்களின் நுனிக் கிளைகளைப் பறித்துப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் புதர்செடியாகவே காணப்படுகின்றன. கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.

தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.

வாசித்ததிருந்து..

https://www.medlife.com/blog/ta/12-health-benefits-curry-leaves-kariveppilai-payankal/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

கறிவேப்பிலை பிளேனிலை தானே வருகுது. இடையே போடப்படட  தடைக்கு முக்கிய காரணம், பிரெஷ் ஆக இருக்கோணும் என்று அவர்கள் அடித்த ஸ்பிரேயில் இருந்த கெமிக்கல். 

health authorities பொறுத்தவரையில், ஸ்பிரே விசயம் விளங்காது தானே. ஆகவே, வந்த ஒரு சாப்பாட்டு பொருளில் கெமிக்கல் இருக்குது என்று தடை செய்தார்கள்.

நம்மவர்கள், கீரைக்கூடைக்குள், மறைத்து, கறிவேப்பிலை கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்க தொடங்கினார்கள்.

தடை பண்ணியாச்சு.... அரசாங்கம் நமக்கு நன்மை தானே செய்கிறது என்ற புரிதலே இல்லாமலே அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

இப்போது தடை இல்லை. ஆனாலும் கடைக்காரர்கள் ஏறின விலையினை குறைக்காமல், தடை இருப்பதாகவே காட்டிக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மேசைக்கு கீழே, மறைத்து வைத்து, எடுத்து தருவதாக பாவனை செய்தார்கள். இப்போது சாதாரணமாகவே பரப்பி வைத்திருக்கிறார்கள். 

என்ன, இந்த விலை என்றால், தடை பண்ணி இருக்குதெல்லோ என்பார்கள், எம்மை முட்டாள்களாக நினைத்துக் கொண்டே.

தடை செய்திருந்தால், எப்படி விக்கிறீர்கள், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்தால் பிரச்சனை இல்லையோ என்றால் அசடு வழிவார்கள். உண்மையான தடை இருந்தால், பைன் கட்டி மாளாது. இவர்கள் பொய் சொல்லி விலை கூட்டி வியாபாரம் செய்கிறார்கள்.

ஊர்ல மீன் மார்க்கெடில தந்திரம் ஒன்று செய்வார்கள். மீனை பார்த்து, விலை கூடுதலா இருக்கே என்று யோசித்துக் கொண்டிருக்கேக்க, வியாபாரியின் நண்பர் பக்கத்தில் வந்து, காசை நீட்டிக்கொண்டே விலை கேட்ப்பார். வியாபாரி.... 'இவர் தம்பி கேட்டிருக்கிறார்... பொறுங்கோ' என்பார்... கேட்டவரோ, எடுக்கிறியாலோ... அல்லது நான் எடுக்கலாமோ எண்டுவார்... நாமும் கூடின காசைக் கொடுத்து... வாங்கிக் கொண்டு போய்... வீட்டில வாங்கி கட்டுவம்.

அது போல தான் இந்த தந்திரமும்.

இந்தியா, இலங்கையில் வருவதற்கு தான் தடை என்று வைத்துக் கொண்டாலும், டொமினிக்கன் குடியரசு, கனடா போன்ற நாடுகளில் இருந்து வர தடை இல்லை.

ஆகவே இவர்கள், தமது அதிக விலைக்கு, காரணம் ஒன்றை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது பெருமாள்.

அதிக போட்டி கூடின பகுதி அது சின்ன ஒரு இடைவெளி என்றாலும் யாராவது  ஒன்று இறக்கி விலை குறைய குடுத்து மற்ற சாமானுக்களை  கொஞ்சம் கூட்டி லாபம் பார்த்திடுவார்கள். Port health authorities எப்ப போன் அடித்து கேட்டாலும் கிளி பிள்ளை போல் தடை  இல்லை பிப் செக்கிங் செய்யணும் என்பார்கள் அங்குதான் ஏழரை சனி நின்று உருஆடும் .அந்த செக்கிங்  பொருளின் எடைக்கு  உள்ளவாறு பணம் சராசரி 800 பவுண்டு வரும் நீங்கள்  கொண்டுவரும் பொருள் பிழைத்து விட்டது என்றால் கட்டிய காசு திரும்ப வராது .அந்த செக்கிங்கில் நிக்கிறவை அநேகமானவை ஆறாம் வகுப்பு பாஸ் பண்ணாத கூட்டம் சொல்லவும் வேண்டுமா ரிசெல்ட்  என்னவாகும் என்று ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, விவசாயி விக் said:

நைட்ரைட், பொஸ்பரஸ், பொஸ்பேட் அவர்களது மா, புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள்.  நைட்ரஜனை போட்டால் தண்ணியை உறிஞ்சி மாடாக தாவரம் வளர்ந்து இயற்கை எதிர்ப்பு சக்தியை இழந்துவிடும்.  பின் பூச்சி, பூஞ்சணம் பிடிக்க தொடங்கிவிடும்.

உங்கட ஆசை கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சது.  இப்போது கிழக்கில் ஒரு திட்டம் வகுத்து வருகிறோம்.  சரி வந்தால் உங்களுடன் பகிர்கிறேன்.

விவசாயியர்; வடக்கு, கிழக்கு எண்டு ஒரே திட்டமாதான் கிடக்குது.

வேளாண்மை விடிஞ்சா வீடு வந்து சேரணுமே.

முக்கியமாக ஒரு விசயத்தை மறக்காதீங்கோ. நம்ம தமிழ்சனத்திடையே, words of mouth சந்தைப்படுத்துதல், மட்டுமே வெற்றி கரமானது. affiliate marketing என்ற நவீன சந்தைபடுத்தல் முறையை பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.