Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முருகர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மௌனம் ஏன்? -வேலுமணி

கறுப்பர் கூட்டம் என்ற யு ட்யூப் சேனலில் முருகன் உள்ளிட்ட இந்து மதத்தினரின் வழிபாட்டுக்குரிய தெய்வங்களை இழித்துப் பழித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஜூலை 18 ஆம் தேதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“தேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும். கோவில் கோவிலாக  படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும்.  அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட்ட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின், உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன? இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும்  தொடர்பு உள்ளதாக சந்தேகங்கள் எழுப்பபடுவதாலா!? அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது முருகன் அவமதிப்பு தொடர்பாக திமுக கண்டித்திருக்கிறது, திமுக தலைவரும் கண்டித்திருக்கிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார். முருகன் அவமதிப்பு விவகாரத்தை பெரிதுபடுத்தி திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க ஒருபக்கம் பாஜக முயற்சிக்கும் நிலையில்... இதில் பாஜகவை முந்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்று அதிமுகவினர் முடிவெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் வேலுமணி, திமுக தலைவரை நோக்கி கேள்விகள் கேட்டிருக்கிறார்.

“கறுப்பர் கூட்டம் யு ட்யூப் சேனலோடு தொடர்பில் இருக்கிறவர்கள் திமுகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்தனர் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து அது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர். முருகன் விவகாரத்தை பாஜக விட்டாலும் அதிமுக விடாது” என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.

https://minnambalam.com/politics/2020/07/19/27/god-murugar-karupar-koottam-velumani-stalin

  • Replies 54
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானமுள்ள பகுதறிவுள்ள எந்த மனிதனும் மற்றவனின் மத நம்பிகையில் மூக்கை நுளைக்க மாட்டான் நீ கிறிஸ்தவமோ முஸ்லிமோ இந்துவோ சைவமோ எதுவாக இருந்தாலும்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டம் யாரென்று எவருக்காவது தெரியுமா?🤔

கூகிளில் தேடினால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பானவர்கள் என்று காட்டுகின்றது. யூரியூப் சனலை நடாத்துபவர் முன்னர் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் என்றும் பின்னர் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாரென்றும், ஆனால் திமுகவுக்கு ஆதாரவாகப் பிரச்சாரம் செய்தார் என்றும் குழப்பமான தகவல்கள் உள்ளன.

முருகனை இழிவுபடுத்தியதை தமது அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க.வும் இப்போது அதிமுகவும், திமுகவை தாக்க பயன்படுத்துகின்றன. அது கட்சி அரசியலின் இயல்புதானே. 

யாழில் இதுவும் பகுத்தறிவு ருல்பனுக்கும் சைவர்களான (ஆரிய இந்து என்று சொன்னால்  ஒரே நேரத்தில் இந்துத்துவா ஆகவும் தமிழ்த் தேசியவாதியாகவும் இருக்கமுடியாதல்லவா!) உடையாருக்கும் உள்ள கருத்துமோதலாக இருக்கின்றது. 

இன்னும் மோதல் நீள முதல் கறுப்பர் கூட்டம் பற்றி ஒரு விளக்கத்தை இருவரில் ஒருவராவது சொல்லுங்கள். அவர்களைப் பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

7 minutes ago, உடையார் said:

மானமுள்ள பகுதறிவுள்ள எந்த மனிதனும் மற்றவனின் மத நம்பிகையில் மூக்கை நுளைக்க மாட்டான் நீ கிறிஸ்தவமோ முஸ்லிமோ இந்துவோ சைவமோ எதுவாக இருந்தாலும்

மதம் என்ற போர்வையில் சமுதாய முன்னேற்றத்தை மழுங்கடிக்கும் மூட நம்பிக்கைகளைக் காவித் திரிய உள்ள சுதந்திரத்தை விட அதிலுள்ள நன்மை தீமைகளை அறிவியல் ஆதாரங்களுடன் மறிதலிக்கும் உரிமை பகுத்து அறியும் சிந்தனையுள்ள அனைவருக்கும் உண்டு.

16 minutes ago, கிருபன் said:

கறுப்பர் கூட்டம் யாரென்று எவருக்காவது தெரியுமா?🤔

கூகிளில் தேடினால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பானவர்கள் என்று காட்டுகின்றது. யூரியூப் சனலை நடாத்துபவர் முன்னர் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் என்றும் பின்னர் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாரென்றும், ஆனால் திமுகவுக்கு ஆதாரவாகப் பிரச்சாரம் செய்தார் என்றும் குழப்பமான தகவல்கள் உள்ளன.

முருகனை இழிவுபடுத்தியதை தமது அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க.வும் இப்போது அதிமுகவும், திமுகவை தாக்க பயன்படுத்துகின்றன. அது கட்சி அரசியலின் இயல்புதானே. 

யாழில் இதுவும் பகுத்தறிவு ருல்பனுக்கும் சைவர்களான (ஆரிய இந்து என்று சொன்னால்  ஒரே நேரத்தில் இந்துத்துவா ஆகவும் தமிழ்த் தேசியவாதியாகவும் இருக்கமுடியாதல்லவா!) உடையாருக்கும் உள்ள கருத்துமோதலாக இருக்கின்றது. 

இன்னும் மோதல் நீள முதல் கறுப்பர் கூட்டம் பற்றி ஒரு விளக்கத்தை இருவரில் ஒருவராவது சொல்லுங்கள். அவர்களைப் பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

கறுப்பர் கூட்டத்தின் வீடியோ ஒன்றில் தான் ஆர். எஸ். எஸ் இல் முன்பு இருந்தாதாக அவர் தெரிவித்திருந்த‍தை கேட்டேன்.  ஆர் எஸ் எஸ் இல் இருந்ததால் அவர்களின் புராணங்களில் உள்ள ஆபாசங்களை விளக்க ஆபாச புராணம் என்ற தொடரை நடத்துவதாக அவர் தெரிவித்தார். அதை விட அவர்களை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 

எனது கருத்து யாராவது மூட நம்பிக்கைகளை பற்றியோ கடவுள் பற்றியோ விமர்சித்தால் கடவுள் நம்பிகையாளருக்கு வரும் தலைகால் தெரியாத கோபத்தை பற்றி தான்.

கடவுளே இந்த  பிரபஞ்சத்தையும் மனிதர்களையும் படைத்து காத்து வருகிறான் என்று கூறும் இவர்கள் கடவுளை விமர்சித்தவனை கடவுள் பார்த்து கொள்வான் என்று விடுவது தானே கடவுள் நம்பிக்கையின் அடையாளம். 

கடவுள் எல்லாம் வல்லவர் என்று கூறும் இவர்கள் சாத்திரத்தையும், மூடநம்பிக்கள்ளையும் நம்புவது முரண்பாடு அல்லவா? ஒன்றில் கடவுளை நம்ப வேண்டும் அல்லது சோதிடத்தை நம்பவேண்டும்.  சோதிடத்தில் எல்லாம் தீர்மானிக்கபட்டுவிடுவது என்றால் கடவுள்  என்பவர் எதற்காக?  இதை கேட்டால் ஆன்மீகவாதிகளுக்கு தலைக்கு மேல் சன்னதம் ஆடும் அளவுக்கு கோபம் வருகிறது. ஆன்மீகம் மன அமைதி கொடுக்கும் என்று வேறு கூறுகிறார்கள். ஆனால் அதிக கோபபபடுவது இவர்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்

கறுப்பர் கூட்டம்
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய குற்றச்சாட்டில், ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல்மீது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த சேனலைச் சேர்ந்தவர்கள் சிலர் கந்த சஷ்டி வரிகளைத் திரித்து, ஆபாசமாகக் கருத்துகளைக் கூறியது உலகம் முழுவதும் வாழும் இந்து சமயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்

சுரேந்தர் நடராஜன் என்பவர் ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். தொடக்கத்தில், தான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததாகவும், அவர்களின் கொள்கை பிடிக்காமல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும் கூறிக்கொள்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலைத் தொடங்கிய சுரேந்தரின் வீடியோக்கள் இந்து மதக் கடவுள்களையும், இந்து புராணங்களையும் விமர்சிக்கும் நோக்கத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ‘ஆபாச புராணம்’ என்கிற தலைப்பில், கந்த சஷ்டி கவசத்தில் வரும் பாடல் வரிகளான ‘சேரிள முலைமார் திருவேல் காக்க...’ என்ற வரிகளைத் திரித்து, ஆபாசமாக சுரேந்தர் பேசியிருப்பது அதிர் வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சுரேந்தர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார். அவர் இது குறித்துக் கூறுகையில், “பாரதியார் ‘வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா’ என்றார். பாரதியார் ஆபாசக் கவிஞரா? இறந்த தன் தாயை எரியூட்டும்போது ‘கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்றார் பட்டினத்தார். அது ஆபாசமா? சமீபகாலமாக இந்துமதக் கடவுளர்களையும், உணர்வுகளையும் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதை எந்த அரசியல் கட்சிகளும் கண்டிக்காதது வேதனை யளிக்கிறது. இந்த விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளைக் கைது செய்ய வலியுறுத்த வேண்டிய பா.ஜ.க., `வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துவோம்’ என அறிவிக்கிறது. ஆனால், சாமானிய இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது” என்றார்.

கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், “மைசூர் அரண்மனையில் அமைச்சராக இருந்த பால தேவராய சுவாமிகளால் சென்னிமலை முருகன் கோயிலில் பாடப்பெற்ற பாடல்கள்தான் ‘கந்த சஷ்டி கவசம்.’ கோடிக்கணக்கான இந்துக்களின் வீடுகளில் தினமும் ஒலிக்கும் திருப்பாடல் இது. இதைக் கொச்சைப்படுத்துவதை, பெயரிலேயே முருகன் பெயரைத் தாங்கி நிற்கும் ‘பழனிசாமி’ அரசு வேடிக்கை பார்க்கிறது” என்றார் கோபமாக.

திரைப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், “பொதுவாகவே, ‘நமக்கு மேல் கடவுள் இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’ என்று சமுதாயத்தில் பயம் ஏற்பட்டால்தான், நெறியோடு வாழும் முறை உருவாகும். இதற்குக் கடவுள் நம்பிக்கை அவசியம். `கறுப்பர் கூட்டம்’ போன்ற சில குழப்பவாதிகள் பகுத்தறிவு என்ற போர்வையில், அந்த பயத்தையே சிதைத்துவருகிறார்கள்” என்றார்.

விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கியுள்ள `கறுப்பர் கூட்டம்’ அமைப்பு, கறுப்பர் கூட்டத்திலுள்ள அனைத்து உறுப்பினர் களும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.

அர்ஜூன் சம்பத், லட்சுமி ராமகிருஷ்ணன், புரட்சிக் கவிதாசன்

அர்ஜூன் சம்பத், லட்சுமி ராமகிருஷ்ணன், புரட்சிக் கவிதாசன்

இது குறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ.க-வின் தமிழக துணைத் தலைவர்களில் ஒருவருமான புரட்சிக் கவிதாசன் கூறுகையில், “திருப்பரங் குன்றத்தில், திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்து முருகன் தம்பதியரை மறுவீடு அழைத்து வரும்போது, தேவேந்திர குல வேளாளர் வீட்டுக்குத்தான் அழைத்து வருவார்கள். பழனி தைப்பூசத் திருவிழாவை தொடங்கிவைத்து, முதல் மண்டகப்படி செய்வதே தேவேந்திர குல வேளாளர்கள் தான். எல்லாத் தரப்பு மக்களின் தெய்வமான முருகனை இழிவாகப் பேசிவிட்டு, ‘நாங்கள் பட்டியல் சமூகத்தினர்’ என்று கூறுவது கண்டிக்கத்தக்கது” என்றார் சூடாக. 

கந்த சஷ்டி கவச விவகாரத்தில் முன்ஜாமீன் கேட்டு சுரேந்தர், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றிய செந்தில்வாசன் என்பவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. 

சுரேந்தரைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் தரப்பில் விளக்கமளித்தால், வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் aberration.in என்கிற இணைய தளம் மூலம் தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் பங்காற்றியிருக்கிறாராம். இதை பா.ஜ.க-வினர் தோண்டியெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

https://www.vikatan.com/social-affairs/controversy/karuppar-koottam-youtube-channel-controversial-vedio-about-kandha-sasti-kavasam-song

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கறுப்பர் கூட்டம் யாரென்று எவருக்காவது தெரியுமா?🤔

கூகிளில் தேடினால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பானவர்கள் என்று காட்டுகின்றது. யூரியூப் சனலை நடாத்துபவர் முன்னர் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் என்றும் பின்னர் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாரென்றும், ஆனால் திமுகவுக்கு ஆதாரவாகப் பிரச்சாரம் செய்தார் என்றும் குழப்பமான தகவல்கள் உள்ளன.

முருகனை இழிவுபடுத்தியதை தமது அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க.வும் இப்போது அதிமுகவும், திமுகவை தாக்க பயன்படுத்துகின்றன. அது கட்சி அரசியலின் இயல்புதானே. 

யாழில் இதுவும் பகுத்தறிவு ருல்பனுக்கும் சைவர்களான (ஆரிய இந்து என்று சொன்னால்  ஒரே நேரத்தில் இந்துத்துவா ஆகவும் தமிழ்த் தேசியவாதியாகவும் இருக்கமுடியாதல்லவா!) உடையாருக்கும் உள்ள கருத்துமோதலாக இருக்கின்றது. 

இன்னும் மோதல் நீள முதல் கறுப்பர் கூட்டம் பற்றி ஒரு விளக்கத்தை இருவரில் ஒருவராவது சொல்லுங்கள். அவர்களைப் பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

இவர்களின் சில வீடியோகள் முன்பு பார்த்துளேன், இவர்கள் பொதுவாக RSS ஐ target பண்ணுபவர்கள், முன்பு RSS இல் இருந்து வெளியேறியவர்களை பேட்டி கண்டு வெளியிட்ட வீடியோ ஒன்று சிறப்பாக இருந்தது. திராவிட இயக்கங்களுடன் முக்கியமாக திமுக தொடர்பில் உள்ளார்கள் என்று தெரிகிறது. சில காலங்களுக்கு முன்பு வந்த இந்த விடியோவை வைத்து இப்போது பிரச்னை கிளப்புவதில் இருந்து இதன் பின்புலம்  சந்தேகமாக உள்ளது. இதை சங்கிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது, ஆனால் இந்த ஒரு விடீயோவை வைத்து சங்கிகளின் குயுக்திக்கு தமிழ் இயக்கங்களும் சேர்ந்து தாளம் போடுவது சகிக்க முடியாமல் உள்ளது.  எங்கே என்று பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அதற்கு நாங்களும் சேர்ந்து துணை போகிறோம். தமிழ் இயக்கங்கள் பிஜேபி ஆதரவு இயக்கங்களாக வளர்ந்து வருவது எங்களுக்கு நல்லதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

அதற்கு நாங்களும் சேர்ந்து துணை போகிறோம். தமிழ் இயக்கங்கள் பிஜேபி ஆதரவு இயக்கங்களாக வளர்ந்து வருவது எங்களுக்கு நல்லதல்ல.

கறுப்பர் கூட்டம் யாரென்று இந்தத் திரியைப் பார்க்கும் வரை தெரிந்திருக்கவில்லை. ஈழத்து   சைவர்கள் இந்துத்துவா சங்கிகளுக்கு துணைபோவதென்றால் மறவன்புலவு சச்சியரோடு சேரலாம். அவர்தான் இப்ப ஈழத்தில் சங்கிகளின் முகவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கறுப்பர் கூட்டம் யாரென்று இந்தத் திரியைப் பார்க்கும் வரை தெரிந்திருக்கவில்லை.

எனக்கு கறுப்பர் கூட்டம் என்று ஒன்று இருப்பதே இப்போது தான் வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழத்து பாரதீக ஜனதா கட்சி உறுப்பினர்களினால் தெரியவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு கறுப்பர் கூட்டம் என்று ஒன்று இருப்பதே இப்போது தான் வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழத்து பாரதீக ஜனதா கட்சி உறுப்பினர்களினால் தெரியவந்தது.

உண்மையாகத்தான் கூறுகிறீர்களா அல்லது தமாஸாகக் கூறுகிறீர்களா ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகிறீர்களா அல்லது தமாஸாகக் கூறுகிறீர்களா ?

கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை என்ற பதிவை யாழ்களத்தில் படிக்கும் வரை கறுப்பர் கூட்டம் என்று ஒன்று இருப்பது  எனக்கு உண்மையிலேயே தெரியாது.

7 hours ago, tulpen said:

கடவுள் எல்லாம் வல்லவர் என்று கூறும் இவர்கள் சாத்திரத்தையும், மூடநம்பிக்கள்ளையும் நம்புவது முரண்பாடு அல்லவா? ஒன்றில் கடவுளை நம்ப வேண்டும் அல்லது சோதிடத்தை நம்பவேண்டும்.  சோதிடத்தில் எல்லாம் தீர்மானிக்கபட்டுவிடுவது என்றால் கடவுள்  என்பவர் எதற்காக?  இதை கேட்டால் ஆன்மீகவாதிகளுக்கு தலைக்கு மேல் சன்னதம் ஆடும் அளவுக்கு கோபம் வருகிறது. ஆன்மீகம் மன அமைதி கொடுக்கும் என்று வேறு கூறுகிறார்கள். ஆனால் அதிக கோபபபடுவது இவர்கள் தான். 

👍

கடவுள், சோதிடம் தவிர விதி என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள். எல்லாம் விதிபடி தான் நடக்குமாம்.  முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார்கள். கொரோனா வேறு வந்து கடவுளின் பலவீனத்தை காட்டுகிறது. அதனால் தான் ஆன்மீகவாதிகளுக்கு கடுமையான கோபம் வருகிறது

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை என்ற பதிவை யாழ்களத்தில் படிக்கும் வரை கறுப்பர் கூட்டம் என்று ஒன்று இருப்பது  எனக்கு உண்மையிலேயே தெரியாது.

👍

கடவுள், சோதிடம் தவிர விதி என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள். எல்லாம் விதிபடி தான் நடக்குமாம்.  முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார்கள். கொரோனா வேறு வந்து கடவுளின் பலவீனத்தை காட்டுகிறது. அதனால் தான் ஆன்மீகவாதிகளுக்கு கடுமையான கோபம் வருகிறது

உண்மை தான். எதை காட்டி கடவுள் என்று சொன்னாலும. கும்பிட ஒரு மூடக்கூட்டம் இருக்கிறது  

பாம்பை காட்டி நாம்மமா என்றாலும. கும்பிடுவான், நாயை காட்டி வயிரவர்  என்றாலும்  கும்பிடுவான். குரங்கை காட்டி ஆஞ்சதேயர் என்றாலும்  கும்பிடுவான். 

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

மதம் என்ற போர்வையில் சமுதாய முன்னேற்றத்தை மழுங்கடிக்கும் மூட நம்பிக்கைகளைக் காவித் திரிய உள்ள சுதந்திரத்தை விட அதிலுள்ள நன்மை தீமைகளை அறிவியல் ஆதாரங்களுடன் மறிதலிக்கும் உரிமை பகுத்து அறியும் சிந்தனையுள்ள அனைவருக்கும் உண்டு.

இணையவன் நீங்கள் அந்த காணோளி பார்த்தீர்களா? அவர் என்ன அறிவியல் ரீதியாக ஆதாரங்களுடன் மறுதலித்து இருக்கின்றாரா.

வெறும் ஆபாசம் - இது தான் உங்களின் அறிவியலா? அல்லது இங்கு பதியும் சிலர் அறிவியல் ரீதியாக ஆதாரத்துடன் தான் பதிகின்றார்களா பகுத்தறிவுடன்?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டத்திற்கு முருகனையும், வேலையும் இழிவு படுத்துவதுதான் நோக்கம் - உமாகரன்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இணையவன் நீங்கள் அந்த காணோளி பார்த்தீர்களா? அவர் என்ன அறிவியல் ரீதியாக ஆதாரங்களுடன் மறுதலித்து இருக்கின்றாரா.

வெறும் ஆபாசம் - இது தான் உங்களின் அறிவியலா? அல்லது இங்கு பதியும் சிலர் அறிவியல் ரீதியாக ஆதாரத்துடன் தான் பதிகின்றார்களா பகுத்தறிவுடன்?? 

அந்த காணொளியை நான் பார்த்தேன். கந்த சஸ்டி கவசத்திலுள்ளதை வாசித்துக் காட்டி அதனை விமர்சித்திருந்தார். கந்தசஸ்டி கவசம் எழுதப்பட்ட காலம், எழுதப்பட்ட நோக்கம்(வரிக்கு வரி) குறித்த தெளிவான  புரிதல் எனக்கு இல்லாவிட்டாலும் அவர் வாசித்துக் காட்டி விமரிசனம் செய்த விடயங்கள்,  நிச்சயமாக  அவர் கூறியபடி இழிவான அல்லது தாழ்ந்த சிந்தனையுடன் எழுதப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. அவரின் ஆபாசமான விமரிசனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.☹️

ஆனால் தமிழிலும் சைவ சமயத்திலும் சான்றோர்கள் நிறைந்துள்ள தமிழ்ச் சமூகத்திலிருந்து கந்தசஸ்டி கவசம் தொடர்பாக அது எழுதப்பட்ட காலம் , சூழல், நோக்கம் தொடர்பில் எந்தவிதமான புலமைசார் விளக்கமும் வளங்கப்பட்டதாகத் தெரியவில்லை. புலமைசார்ந்த எதிர்வினையே மிகச் சரியான பதிலாக இருக்க முடியும். 

பிற எதிர்வினைகள் அனைத்தும் கோபத்தின் வெளிப்பாடே தவிர அறிவுசார்/ துறைசார் விளக்கம் அல்ல. ☹️

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: கறுப்பர் கூட்ட காட்டு மிராண்டி களை கண்டித்து ஆர்ப்பாட்டம் பல்லடம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2020 at 20:47, விளங்க நினைப்பவன் said:

எனக்கு கறுப்பர் கூட்டம் என்று ஒன்று இருப்பதே இப்போது தான் வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழத்து பாரதீக ஜனதா கட்சி உறுப்பினர்களினால் தெரியவந்தது.

உங்கடை கதையைப் பார்த்தா கறுப்பர் கூட்டம் உலகின் ஆதி இனம் எண்ணுவியள் போல.😃

On 19/7/2020 at 21:00, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகிறீர்களா அல்லது தமாஸாகக் கூறுகிறீர்களா ? 🤔

உங்களுக்கு கனகாலமா அவையைத் தெரியும் போல 😃🤣

On 19/7/2020 at 13:27, கிருபன் said:

கறுப்பர் கூட்டம் யாரென்று எவருக்காவது தெரியுமா?🤔

கூகிளில் தேடினால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பானவர்கள் என்று காட்டுகின்றது. யூரியூப் சனலை நடாத்துபவர் முன்னர் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் என்றும் பின்னர் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாரென்றும், ஆனால் திமுகவுக்கு ஆதாரவாகப் பிரச்சாரம் செய்தார் என்றும் குழப்பமான தகவல்கள் உள்ளன.

முருகனை இழிவுபடுத்தியதை தமது அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க.வும் இப்போது அதிமுகவும், திமுகவை தாக்க பயன்படுத்துகின்றன. அது கட்சி அரசியலின் இயல்புதானே. 

யாழில் இதுவும் பகுத்தறிவு ருல்பனுக்கும் சைவர்களான (ஆரிய இந்து என்று சொன்னால்  ஒரே நேரத்தில் இந்துத்துவா ஆகவும் தமிழ்த் தேசியவாதியாகவும் இருக்கமுடியாதல்லவா!) உடையாருக்கும் உள்ள கருத்துமோதலாக இருக்கின்றது. 

இன்னும் மோதல் நீள முதல் கறுப்பர் கூட்டம் பற்றி ஒரு விளக்கத்தை இருவரில் ஒருவராவது சொல்லுங்கள். அவர்களைப் பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

தெரிஞ்சு வச்சு என்ன செய்யப்போறியள் கிருபன்????? 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தெரிஞ்சு வச்சு என்ன செய்யப்போறியள் கிருபன்????? 😀

வலதுசாரி பாஸிஸ்டுக்களா, அல்லது இடதுசாரி போராளிகளா, அல்லது பிழைப்புவாதிகளா, அல்லது திரிபுவாதிகளா,  அல்லது இணையப் போராளிகளா, அல்லது லைக்குகள் சேர்க்கும் கூட்டமா என்று ஒரு ஆராய்சிக்கட்டுரை எழுதலாம் என்றுதான்😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கடை கதையைப் பார்த்தா கறுப்பர் கூட்டம் உலகின் ஆதி இனம் எண்ணுவியள் போல.

நான் சொன்னது கறுப்பர் கூட்டம் என்று யுரியுப் தமிழில் வந்த கறுப்பர் கூட்டத்தை.
உலகின் ஆதி இனம் யாழ்பாணம் தொடங்கி அவுஸ்ரோலியாவரை வாழ்ந்த ஆதி இனம் நாங்கள் தானே 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்ட கந்தனுக்கு அரோகரா என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது.

ரஜினி போட்ட ஒரே டுவிட்.... இந்திய அளவில் டிரெண்டான கந்தனுக்கு அரோகரா

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா, ராஜ் கிரண், லாரன்ஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.... ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே,  கந்தனுக்கு அரோகரா"  என பதிவிட்டுள்ளார்.

இந்த டுவிட்டை கந்தனுக்கு அரோகரா என்கிற ஹேஷ்டேக்குடன் ரஜினி பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/22140615/1725499/Rajinikanth-tweet-national-level-trending-on-twitter.vpf

கந்தனுக்கு அரோகரா...எல்லா மதமும் சம்மதமே...: கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்

கந்தனுக்கு அரோகரா...எல்லா மதமும் சம்மதமே...: கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/07/22120309/1725463/Actor-Rajinikanth-Condemns-karuppar-Koottam.vpf

  • கருத்துக்கள உறவுகள்

சிறை இருக்கும், கறுப்பர் கூட்டத்தினை, செவ்வேல் காக்க..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.