Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

Aug 08, 20200

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளராக கட்சியின் செயலாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-9/

  • Replies 129
  • Views 10.6k
  • Created
  • Last Reply

40000 சவப்பெட்டி புகழ் கஜேந்திரனா? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் தோற்ற குதிரை கஜேந்திரன் பின்கதவால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகின்றார்!

11 வருடங்களுக்குப் பின்னர் ராஜதந்திரப் பாஸ்போர்ட் எடுத்து, கொரோனா வைரஸ் சிக்கலையும் தாண்டி மேற்கு நாடுகளுக்கும், கனடா, அவுஸ்திரேலியாவுக்கும் பயணிக்கவுள்ளார். கடந்தமுறை பாராளுமன்றம் செல்லாமல் அவுஸ்திரேலியாவில் (?) அரசியல் பயிற்சிப்பட்டறைகளில் பல மாதங்கள் இருந்தவர் என்று நினைக்கின்றேன். இம்முறை எந்த நாட்டில் தங்கப் போகின்றார் என்று பார்ப்போம்!

Just now, tulpen said:

40000 சவப்பெட்டி புகழ் கஜேந்திரனா? 😂

அவரேதான்.

வன்னியிலும் கிழக்கிலும் மக்கள் முன்னணியை வலுவாக்க யாழில் தோற்ற குதிரை கஜேந்திரனால்தான் முடியும் என்று முழங்காவில் கிளிநொச்சிக்குள் இருப்பதே அறியாத கஜேந்திரகுமாரின் தேசியப்பட்டியல் தெரிவு! கஜேந்திரகுமார் முடிவை எடுத்திருப்பாரா அல்லது முன்னணிக்கு ஸ்பொன்ஸர் பண்ணிய புலம்பெயர் அமைப்புக்களின் முடிவா என்று தெரியவில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத அம்பாறையில் இருந்து ஒருவரையும் தெரிவி செய்யவில்லை என்று பார்த்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் தான். த.தே.ம.மு தன்னை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்து இருந்திருக்க வேண்டும்.

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

குதிரை கஜேந்திரன் 

எந்த வகையான விமர்சனம் இது? ஆதாரம்???

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

கைஏந்திலகுமார் தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

ஒரு தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை எடுத்தவர். கஜேந்திரன் என்னத்தை நாசப்படுத்தியவர்? 

உங்களுக்கு தமிழ் எழுத வராதா?? அல்லது நக்கலா??

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக, இன்று இரவு 9.30 மணியளவில் முன்னணியின் பொதுக்குழு கூடியது. இக்குழுவில் 8 மாவட்டங்களின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ,மற்றும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலில் அனைத்து மாவட்டப் பிரதிநிதிகள், மத்தியகுழு உறுப்பினர்களின் பேராதரவுடன், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களை தேசியப் பட்டியலூடாக நியமித்து பாராளுமன்றம் அனுப்புவதென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னி. மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி தனது பணிகளை செல்வராசா கஜேந்திரன் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக நாளை பத்திரிகையாளர் மாநாடொன்று நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலதிக தகவல்களை நாளைக்கு அறியத்தருகிறோம்.
7 minutes ago, nunavilan said:

ஒரு தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை எடுத்தவர். கஜேந்திரன் என்னத்தை நாசப்படுத்தியவர்? 

உங்களுக்கு தமிழ் எழுத வராதா?? அல்லது நக்கலா??

தமிழ் மக்களின் பிரதி நிதியாக பாராளுமன்றம் சென்றவர் 40000 சவப்பெட்டிகளை வடக்கில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது அவரை அனுப்பிய மக்களுக்கு பெருமை தரும் விடயமா?  போராடிய புலிகளையே கொச்சைப்படுத்திய விடயம் அல்லவா!

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பொறாமை.

கஜேந்திரகுமார் & கஜேந்திரன் இருவரும் பாராளுமன்றம் செல்வதையிட்டு

  • கருத்துக்கள உறவுகள்

Quote

தமிழ் மக்களின் பிரதி நிதியாக பாராளுமன்றம் சென்றவர் 40000 சவப்பெட்டிகளை வடக்கில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது அவரை அனுப்பிய மக்களுக்கு பெருமை தரும் விடயமா? 

அதை விட  தமிழ் மக்களை விற்பவர்கள் பற்றி ஒரு வரியையும் நீங்கள் எழுத கானவில்லையே ஏன்?

இதே பாராளுமன்றத்தில் கெகலிய றம்புக்கல கூறிய இனவாத கருத்துக்கு கஜேந்திரன் கூறிய கருத்து பிழையாக உங்களுக்கு தெரிகிறதோ??

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிழலி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத அம்பாறையில் இருந்து ஒருவரையும் தெரிவி செய்யவில்லை என்று பார்த்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் தான். த.தே.ம.மு தன்னை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்து இருந்திருக்க வேண்டும்.

ஏன் ??

கிழக்கு மக்கள் அவர்களுக்கு பெருமளவில் வாக்களிக்கவில்லையே, தேசியப்பட்டியல் கிடைத்ததே கூடுதலான வடக்கு வாக்குகளால்.

6 minutes ago, tulpen said:

தமிழ் மக்களின் பிரதி நிதியாக பாராளுமன்றம் சென்றவர் 40000 சவப்பெட்டிகளை வடக்கில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது அவரை அனுப்பிய மக்களுக்கு பெருமை தரும் விடயமா?  போராடிய புலிகளையே கொச்சைப்படுத்திய விடயம் அல்லவா!

நிச்சயமாக இல்லை. அந்த நேரத்தில் அரசியல் துறையினர் & படைத்துறை பேச்சாளர் வெளியிட்ட அறிக்கைகளை பார்க்கவில்லையா?

அந்த நேரத்தில் அது சரி

18 minutes ago, nunavilan said:

அதை விட  தமிழ் மக்களை விற்பவர்கள் பற்றி ஒரு வரியையும் நீங்கள் எழுத கானவில்லையே ஏன்?

இதே பாராளுமன்றத்தில் கெகலிய றம்புக்கல கூறிய இனவாத கருத்துக்கு கஜேந்திரன் கூறிய கருத்து பிழையாக உங்களுக்கு தெரிகிறதோ??

நுணா, தமிழ் மக்களை விற்றவர்கள் என்று தனிப்பட எவரும் இல்லை. 1950 களில் இருந்து அரசியல் செய்த, போராட்டம் தொடர்காக முடிவுகளை எடுத்த எல்லோருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. தனிப்பட எவரையும் கூற முடியாது.

பாராளுமன்றத்தில் இவ்வாறு தமிழ் பிரதிநிதி வன்முறை பேச்சை பேசும் போது அதை சர்வதேசரீதியில் எமக்கு எதிராக பாவிக்கும் வல்லமை ஶ்ரீலங்கா அரசிற்கு உள்ளது என்று தெரிந்தும் அவ்வாறு முட்டாள்தனமாக கஜேந்திரன்  பேசியதை நீங்கள் ஆதரிப்பது விந்தையாக உள்ளது.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னரையும் செல்வராஜா கஜேந்திரனையும் இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாகவே ஒன்றுக்கும் இயலாதவர்கள் கட்டுக்காசு எடுக்கவும் லாயக்கில்லாதவர்கள் டக்ளஸ் ஒரு கூட்டத்தில் நேரடியாகவே யாரையோ பார்த்துக் அந்தக் குதிரைகயேந்திரா எனக்கூறியதுபோல விமர்சனம் செய்கிறார்கள்.

அவர்களது அரசியல் பயணம் மிக நீளமானது விட்டுக்கொடுப்பெளகள் எதுவுமற்றது செல்வராஜா கஜேந்திரன் தான் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கத் தகுதியில்லை என உணர்ந்திருப்பாராக இருந்தால் சுமந்திரனுடன் இணைந்து ஒரு பிரதேச சபை அங்கத்தவர் பதவியுடன் கன்னைத் திருப்திப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் காலாகாலமாக ஒரு கட்சியின் அங்கத்தவராகவும் இல்லை சுமந்திரனது புலிநீக்க அரசியிலில் முதல் பலியானது இவர்தான் 

இங்கு இருந்து எழுதும் பல யாழ் கள உறுப்பினர்களுக்கு யாள் களம் அறிமுகமானதுக்கு முன்னமேயே கஜேந்திரன் அரசியலில் இருக்கிறார். பல விபத்துகள் மூலமான கொலை முயற்சிகளிலும் தப்பியிருக்க்கிறார். சரி தகுதியில்லாதவர் இருக்கலாம் ஏனையோர் எல்லாம்  கார்வாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமானி படித்திருக்கிறார்களா? ஏன் மாவைய காலம் காலமாக தமிழர் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் இணைந்திருப்பவர் இன்று மாவையரது த்மிழரசுக் கட்சியின் பதவிக்கே வேட்டு வருவதற்கான சூழல் வந்துவிட்டதே ஆனால் தனி ஒரு மனிதனாக பொன்னர் கஜேந்திரனுடன் 24/7 எனப் பயணம் செய்து அரசியலில் நிற்கும் அதுவும் தேர்தலில் அதிகமான ஓரளவு ஏனையவர்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் போகக்கூடாது அங்கஜன், விஜயகலா,  டக்ளஸ் சிறீதரன் போன்றோர் போகலாம் அதுதானே?

40000 சவப்பெட்டி ரெடியாக இருக்கு எனக்கூறிவிட்டு தொடர்ந்தும் தனது மண்ணில்தானே உலாவுகிறார் எம்மைப்போல் துரையப்பாவைக் கூட்டமாகக் கலைத்துக் கலைத்துச் சுட்டதாக சி ஐ டி தேடுகுது எனச்சொல்லி வெளிநாட்டுக்கு ஓடிவரவில்லையே அல்லது புலிகள் காலத்தில் பதவிபெற்று பின்பு லண்டனுக்குக் குடும்பத்துடன் ஒட்டிவந்துவிட்டு பின்பு அண்மையில் மகிந்தவினதும் கொத்தாவினதும் காலில் வீழ்ந்து கிடக்கிறாரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் (பெயர் நினைவுவரவில்லை) அவரைப்போல் இருக்கவில்லை என எதிர்பார்கிறீர்களா?

செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பகாலத்தில் அரசியலில் வளர்சி அடையாமல் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் எனும் துணிவில் பேசியிருக்கலாம் இப்போ புலிகள் இல்லாதொழிந்து பதினொரு வருடம் ஆகிவிட்டது பல அச்சுறுத்தகளுக்கு மத்தியில் ஒரு கட்சியுடன் அதன் கொள்கையுடன் ஒன்றித்துப் பயணம் செய்கிறார் சிறியர்போல்  சுமந்திரனே அடுத்த அன்ரன் பாலசிங்கம் என காலில்விழும் சரணாகதி அரசியல் செய்யவில்லை

நானும் போயிருந்தேன் தமிழசுகட்சியின் மார்டின் வீதி அலுவலகத்துக்கு,

தலைமை வர்ச்சொல்லியிருக்கு அது வந்தனாங்கள் என அங்கினைக்க இருக்கு கதிரைகளைப் பிடித்து ஒட்டாமலும் ஒட்டியும்  இருப்பார்கள் கண்களி ஒரு பதட்டம் யாரையும் அழைத்துப்பேச மாட்டார்கள் இறுதியில் சுமந்திரன் கமகட்டுக்குள்ள ஒரு சிறிய பைலுடன் வெளியால வருவார் ஒரு சிலரது பெயர்களை சொல்லி உங்களைத்தான் இந்தவிடையங்களுக்கு நியமித்திருக்கு மிச்ச ஆக்கள் விருப்பம் எண்டல் போகலாம் மற்றப்படி கையெளுத்துபோடக் கூப்பிடுவினம் நிண்டு கையெளுத்துப் போடுட்டு போங்கோ எனக் கூறிவிட்டு கரில ஏறிப்போய்விடுவார் இப்ப எண்டால் சின்ன மாற்றம் அதிரடிப்படை புடசூழ காருல ஏறிப்போய்விடுவார்.

இவர்தான் உங்கட தலைவர் அப்படித்தானே
குதிரைக்கஜேந்திரன் சிறுகச்சிறுக கட்சி வளர்த்து ஆதரவு வளர்த்து ஒரு மோட்டசிக்கிளில் ஊரெல்லாம் திருந்து தமிழ் தேசியம் பேசினால் பிடிக்காது அதுதானே.

கொத்தாவை பிள்ளையான் கருணா டக்ளஸ் அங்கயன் ஆகியோர் கும்பிடுகிறதைவிட இன்னும் அதிகமாகக் கும்பிட்டு காலும் கழுவிட்டால் அண்ணருக்கு ஒரு தேசியப்பட்டியல் பதவி பார்சல் கூடவே அதிரடிப்படை காவலுக்கும் ஆர்டர் எனக்கூடி வாழலாம் இப்போ புலிகளது காசை அடித்தவர்கள் அடிக்காதவர்கள் அடைக்கலம் கொடுத்தவன் வசதியான மாவீரர் குடும்பம் அது இது என எல்லாத் துரோகங்களையும் தமிழர்க்கு எதிராக 2009 ல் செய்யாது களத்தில நிக்கிறான் ஒருவன் அவனை வரவேற்க வேண்டாம் நக்கல் நையாண்டி செய்யாதீர்கள். 

25 minutes ago, MEERA said:

ஏன் ??

கிழக்கு மக்கள் அவர்களுக்கு பெருமளவில் வாக்களிக்கவில்லையே, தேசியப்பட்டியல் கிடைத்ததே கூடுதலான வடக்கு வாக்குகளால்.

நிச்சயமாக இல்லை. அந்த நேரத்தில் அரசியல் துறையினர் & படைத்துறை பேச்சாளர் வெளியிட்ட அறிக்கைகளை பார்க்கவில்லையா?

அந்த நேரத்தில் அது சரி

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

நிழலி என்ன சொல்ல வருகிறார் என்றால் ஒரு விஜாளேந்திரைத் தயார் செய்து அனுபட்டாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஐந்துபேர் காணாதாம்

4 minutes ago, Elugnajiru said:

சிறப்பு.சரியானதொரு பார்வையும் சுட்டுதலுமாக உள்ளது.நன்றி!
 
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

அதை விட  தமிழ் மக்களை விற்பவர்கள் பற்றி ஒரு வரியையும் நீங்கள் எழுத கானவில்லையே ஏன்?

இதே பாராளுமன்றத்தில் கெகலிய றம்புக்கல கூறிய இனவாத கருத்துக்கு கஜேந்திரன் கூறிய கருத்து பிழையாக உங்களுக்கு தெரிகிறதோ??

அவருக்கு வரலாற்றின் சில பக்கங்கள் கிழிந்து விட்டது.

8 minutes ago, விசுகு said:

அவருக்கு வரலாற்றின் சில பக்கங்கள் கிழிந்து விட்டது.

விசுகு,  நான் எனது பல பதிவுகளில் எமது இன றய அவலநிலைக்கு  1950 களில் இருந்து அரசியல் செய்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுத்தவர்கள் எல்லோருக்கும்( ஆயுதப் போராளிகள் உட்பட)  கூட்டு பொறுப்பு உண்டு என று தெளிவாக பதிவு செய்தும் அது புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? 

எனது பார்வையில் நீங்கள் தான் செலெக்ரிவாக உங்களுக்கு பிடித்தவர்களெ தவிர்தது மற்றவர்களை மட்டும்  குற்றம் சாட்டுபவர். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

விசுகு,  நான் எனது பல பதிவுகளில் எமது இன றய அவலநிலைக்கு  1950 களில் இருந்து அரசியல் செய்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுத்தவர்கள் எல்லோருக்கும்( ஆயுதப் போராளிகள் உட்பட)  கூட்டு பொறுப்பு உண்டு என று தெளிவாக பதிவு செய்தும் அது புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? 

எனது பார்வையில் நீங்கள் தான் செலெக்ரிவாக உங்களுக்கு பிடித்தவர்களெ தவிர்தது மற்றவர்களை மட்டும்  குற்றம் சாட்டுபவர். 

அதை யாழ் களம் அறியும்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

நேற்றைய தினம் ஒரு ஊடகத்திலே கிழக்கைச் சேர்ந்து இருவரது உரையாடலிலும் இந்த விடயம் ஆழமாக முன்வைக்கப்பட்டது. அப்படியொரு முடிவெடுத்திருந்தால் மாற்றமொன்றை நோக்கி நகர்ந்திருக்கும். முன்னணியை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கலாம். யாழ்த் தலைமைகள் (இப்படியெழுதுவதைத் தவிர்க்க வேண்டும்) என்ற பார்வையிலும் பிரதேசவாதத்தை வளர்ப்போருக்கும் ஊக்குவிப்போருக்கும் ஒரு சாட்டையடியாகவும் இருந்திருக்கும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவழக்கொன்றில் சிக்கி, நாலு வருடமாக உள்ளே இருக்கும் பிள்ளையான் எம்பி ஆகலாம்.... கஜேந்திரன் ஆவதில் சிலர் குத்தி முறிவதேன்? கஜேந்திரன் ராணுவத்தால் உயிர் ஆபத்துக்குரிய சில தருணங்களில் கூட, போராடி உள்ளார். அனைத்துக்கும் மேலாக, போனமுறை தோல்வி அடைந்தும் தலைமையுடன் கொள்கைக்காக தோலுக்கு, தோலாக நின்று போராடி உள்ளார்.

இதிலுள்ள விடயம் என்னவென்றால், அடுத்த தேர்தலில் மீண்டும் வெல்ல, உண்மையாகவே கடுமையாக உழைக்க வேண்டும். இந்த நிலைமை இல்லாததால் தான் கூட்டமைப்பு தும்புத்தடி நிறுத்தப்பட்டால் கூட வெல்லும் என்று நினைக்க வைத்த சோம்பல் நிலைக்கு போனது. 

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

Edited by Nathamuni

31 minutes ago, Elugnajiru said:

நிழலி என்ன சொல்ல வருகிறார் என்றால் ஒரு விஜாளேந்திரைத் தயார் செய்து அனுபட்டாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஐந்துபேர் காணாதாம்

நிழலி என்ன சொல்ல வருகிறார் என்றால் ஒரு விஜாளேந்திரைத் தயார் செய்து அனுபட்டாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஐந்துபேர் காணாதாம்

ஒரு தடவைக்கு இரு தடவைகள் நீங்கள் மினக்கெட்டு எழுதியிருக்கின்றீர்கள் என்று நானும் நான் எழுதியிருப்பதை திருப்பி திருப்பி வாசித்துப் பார்த்தால், நான் நீங்கள் குறிப்பிட்டவாறு எழுதியிருக்கவில்லையே.. உங்கள் கண்களுக்கு மட்டும் இப்படி தெரிவது அதிசயம் தான்.

மற்றது, வியாழேந்திரன் பொதுசன பெரமுனவில் நின்று வென்றும் விட்டார். 3 இல் இரண்டுக்கு ஏற்கனவே அவரும் உள்ளெடுக்கப்பட்டு விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்துக்கு கொடுத்தாலும் சைக்கிள் கட்சி நிலைத்து நிற்க வாழ்ய்ப்பில்லை மக்கள் சில கட்சிகளை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் இவர்கள் காலூன்றி அம் மக்கள் மனதை வெல்ல நாட்கள் ஏன் பல வருடங்கள் எடுக்கலாம் 

தற்போது பிள்ளையான் வென்றுள்ளதால் இனிவரும் காலங்களில் அவர்கள் அரசியல் பணி இருந்ததை விட பலமடங்காகலாம் அதானால் கூட்டமைப்புக்கே இன்னும் பின்னடைவு காத்திருக்கும் போது ஏன் சொல்கிறேன் என்றால் பல ஆண்டுகளாக ஐக்கியமாக இருந்த மக்கள் தற்போது  விலக ஆரம்பித்துள்ளார்கள் கூட்டமைப்பால் ஒரு குண்டூசியை கூட கிழக்கு மாகாணத்தில் நகர்த்த முடியாது என அறிந்து கொள்கிறார்கள் 

இப்படி இருக்க சைக்கிள் கட்சி காலூன்ற நாட்கள் எடுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

முன்னாள் தமிழ்நெற் ஊடகவியலாளர், முன்னாள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்,   கருணா பிளவின் பின் இலண்டனுக்கு அகதியாக வந்து, நாடு கடந்த அரசின் பிரதிநிதியாக “தெரிவு” செய்யப்பட்டவர், இந்தத் தேர்தலில் மட்டக்களப்பில் மகிந்த மாத்தயாவின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.