Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நாங்களும் உங்கட பக்கம் தான். அதே பூச்சியத்தில் இருந்து இரண்டான பக்கம் தான்.

வந்து சைக்கிளில் ஏறுங்கோ ஒண்டா விழக்குவம். 😁

Edited by முதல்வன்

  • Replies 129
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

அண்ணே நாங்களும் உங்கட பக்கம் தான். அதே பூச்சியத்தில் இருந்து இரண்டான பக்கம் தான்.

🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு பிள்ளையான் மேல் உள்ள காண்டு தெரிகிறது ...

காண்டு எண்டால், கொஞ்ச நஞ்சம் இல்லை, அக்கா.

உள்ள இருந்தே வெண்டு போட்டார். 

இந்த கத்து கத்தி, சுத்தி வந்த அம்மான் கவுண்டு போனார்.

தேசிய பட்டியலில வாற மாதிரி, ஏதும் சிலமன்....?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மீரா ,ஒரு செய்தி தெரியாமல் கதைக்க கூடாது ... அடுத்தவர்கள் சொல்லும் போது தேடிப் பார்க்க வேண்டும் ...கஜேந்திரன்  போன தடவை பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கும் போது ஓரிரு  தடவை தான் பார்லிமென்ட் போனவர்...அங்கு போய் நித்திரை கொண்ட போட்டோவும் அந்த நேரம் வந்திருந்தது ...வெளிநாட்டுக்கு போய் அங்கேயே இருக்க வெளிக்கிட மகிந்தா வைபோசாய் கூப்பிட்டு எடுத்தவர்...அது தொடர்பான செய்திகள் யாழிலும் இருக்கு …  கூட்டமைப்பின் கட்டுக் கதை இல்லை .உண்மையிலேயே நடந்த கதை ...அநேகமாய் எல்லோருக்கும் தெரிந்த கதை 
 
பரவாயில்லை கஜேந்திரன் இரண்டு நாள் பாராளுமன்றம் போய் ஒருநாள் நித்திரை கொண்டிருக்கிறார் மற்றைய நாள் 40,000 விடயத்தை கதைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

மக்கள் தம் தலைமைகளை  நம்பி வாக்களித்து மீட்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் காதிருக்க, வாங்கி செருகிக் கொண்டு பின்பக்கத்தால் போனதுமல்லாமல் தேடி வந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காமல் செருக்கு காட்டியபடியால்: தாங்களே தரகர் இல்லாமல் தமக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டு வாக்களித்துள்ளார்கள், வாங்கியதற்கு துரோகம் செய்யவில்லை. இது யாரின் தவறு? ஆனால் சிங்களவன் தந்திரசாலி. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுறான். நாங்கள் அழுகிறோம், அல்லது ஆடுகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

குதிரையோடி: அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிடம் கூறிய விஷயத்தில் ஒரு சதவீதம் கூட சரியாக வந்திருக்காது..ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் ஆதாரம் இல்லாமல் ஒருவரின் வாய்பேச்சை எப்படி நம்பமுடியும்?

நிற்க.. அப்படி குதிரையோடித்தான் கஜன் வந்திருந்தால் கூட, நன்றாக படித்த அப்புகாத்துகள் மட்டும் மக்களுக்கு நல்லதைதான் இவ்வளவுகாலமும் செய்தார்களா? நான் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என விரும்பியிருந்தேன். அவர்களுக்கு இது ஒரு நல்லபாடம்.. இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.. இல்லாவிடில் அடுத்த முறை டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் மேலும் அதிக ஆசனங்களை கிடைக்கும். 

மேலும், கஜன் ஆரம்பத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளை அள்ளி வழங்கியிருந்திருக்கலாம், ஆனால் இந்த 11 வருட கால அரசியல்வாழ்க்கை இன்றைய சூழ்நிலை அவரை மாற்றியிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...

இன்னொரு விடயம்: ரதி, உங்களுக்கு, கஜனைப்பற்றி கூறியவர்கள் முழு உண்மையையும் கூறினார்களா? எந்த சமயத்தில் அப்படி நடந்தது என்று? ராகிங் சமயத்தில், எங்களுடைய Juniorசிடம் இந்த மாதிரி notes எழுத கொடுப்பதும் பின்பு எங்களுடைய notes/assignment மற்றும் புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்து உதவுவதும் வழமை.மேலும் கஜன் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுதே பல நெருக்கடிகளை சந்தித்தமையால், பல  விரிவுரைகளை தவறவிட்ட சந்தர்ப்பங்களும் அதிகம், ஆகையால் நண்பர்களிடம், Juniorsசிடம் உதவிகளை கேட்டிருக்கலாம். “வெருட்டி” என்பது too much!!

எத்தனையோ கொடூரங்களை செய்தவர்கள், வெளியே தாம் திருந்திவிட்டதாகவும், மக்களுக்கு சேவை செய்யபோவதாகவும் கூறும்பொழுது, உண்மையிலேயே பலகாலம் கஷ்டப்பட்டு கிடைத்த பதவியை கஜன் நன்றாக பயன்படுத்துவர் என நம்புகிறேன்..

கஜனுக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி. 
 
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.

சந்தர்ப்பமே இல்லை. too late. இவர்கள் இல்லாமல் தங்கள் தேவையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை மக்கள் இவர்கள் வழியிலேயே தெரிந்து கொண்டார்கள். இனி அவர்கள் பாத்துக்கொள்வார்கள்.  வேதனை!மக்களை சோரம் போக, விலை போனதுகள் வற்புறுத்தி தள்ளி விட்டார்கள் இனி நட்டமடையப்போவது கள்ள, ஏமாற்றுக்கார  அரசியல்வாதிகளே. 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் சையிக்கிள் பற்றி வரிச்சு விரிச்சு எதிர்கால 
அரசியல் ராசிபலன் குருபெயர்ச்சி எழுதியவர்கள் மனங்கள் குறுகுறுக்க 
தொடங்கிவிட்டது ......... எனக்கு யார் என்ன எழுதினார்கள் என்பது இப்போதும் 
ஞாபகம் இருக்கிறது.

இவர்கள் இருவரும் பாரளுமன்றம் போவதால் (இத இனி மாற்ற முடியாது)
ஆதலால் அது பாராளுமன்றம் இல்லை என்று வாதிட கூடிய அளவில்கூட சிலர் இருக்கிறார்கள்.

இதுக்குள்ளே அப்ப அப்ப தமிழர்களின் நலன் சார்ந்தும் பேசுவார்களாம் 
நாம் உன்னிப்பாக கேட்டு அந்த பெரிய மனசை பாராட்டவேண்டும்.

குடும்பி சண்டைகளில் இப்போ எனக்கு ஈடுபாடு இல்லை 
தேவையற்று விவாதத்தை திசை திருப்பினால் விட்டு விட்டு விலகி செல்வதே 
இப்போது செய்துவருகிறேன்.

இவர்கள் இருவரும் பாராளுமன்றம் செல்வது எனக்கு இரட்டிடை மகிழ்ச்சி 
காரணம் வளர்ந்துவரும் தலைமுறைக்கு ஒரு செய்தியை அறுத்து உறுத்தி சொல்லி 
போகிறார்கள். விடா முயற்சி உன்னை ஒருபோதும் கைவிடாது என்பதே அது. 
இது அரசியலுக்கு மட்டுமே பொருந்தும் என்று இல்லை ... பொருளாதார நிலைமைக்கு 
போராடுபவர்கள்  ... கல்வி மேன்மைக்கு போராடுபவர்கள் யாராக இருந்தாலும் 
இவர்களை உதாரணம் கொள்ளலாம்.

ஐந்துவருடம் கடந்து இவர்கள் என்ன புடுங்கினார்கள்? என்று ஒரு கேள்வியுடன் 
ஒரு கூட்டம் வரும். இவர்கள் இனி வீதியில் போவதற்கே நாலு பக்கமும் பார்த்துதான் 
போகவேண்டும் என்பதுதான் கோத்தா ஜனாதிபதியாக இருக்கும் இலங்கையின் நிலை 
இது சாதாரண தமிழ் இரத்தம் ஓடுபவனுக்கு புரியும் ஏனெனில் தமிழ் இரத்தம் எங்கு எங்கு 
எல்லாம் சிந்தியதோ அப்போதெல்லாம் அந்த வலியை இந்த இரத்த அணு புரிந்திருக்கும். 

இனி யாழில் அங்கயன் ஒரு சாதாரண தென்னை வைத்தால் மாடு வைத்திருப்பவன் எல்லோருமே 
கொஞ்சம் கவனம் கொள்வான் தன மாடு அங்காள பக்கம் போகாது பார்த்துக்கொள்வான்.
இவர்கள் ஒரு தென்னை வைத்தால் எத்தனை மாடு குறுக்க பாயும் என்பது சாதாரண ஆறறிவு உள்ள 
தமிழனுக்கு புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

அப்படி என்றால் டக்கிளஸின் கட்சிக்கும்,அங்கஜனின் கட்சிக்கும், யாழ் மாவட்டத்தில் அதிக பிரதிநிதிகள் கிடைத்திருக்க வேண்டும் ....அதைவிடுத்து தீவிர  தமிழ்தேசிய  பிரதிநிதியை தெரிவுசெய்துள்ளார்கள்...
தமிழ் மக்கள் கூட்டமைப்பினருக்கு பாடம் புட்டியிருக்கின்றனர் .... தமிழ் தேசியத்துக்கு அல்ல..

கோரானா தாக்கம் சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டு சென்று உள்ளது...இந்த நிலையில் அபிவிருத்திக்கு பணம் வருவது கடினம்...சீனாவும் இனிமேல் அதிக பணத்தை கொடுக்குமோ தெரியவில்லை.

 145 எம்பிக்களை கவனித்த பின்பு தான் நம்ம அரசு சார் தமிழ் எம்பிக்களை  கவனிக்க விரும்புவார்கள்...
தமிழ்தேசசியம் தோல்வியடைந்துவிட்டது...பிரபாகரன் மண்ணிலயே  வெற்றியடைந்து விட்டோம் என பிரச்சார்ம் செய்ய நல்ல வாய்ப்பு இன்னும் 5 வருடத்த்திற்கு....

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் படிக்கும் காலங்களில் நடந்ததாக கூறப்படும், ஆதாரமற்ற செய்திகளை...
மீண்டும் கூறுவதன் மூலம்...  அவர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வை,
இங்கு கொட்டுகின்றார்கள்  போலுள்ளது.

கஜேந்திரன்... இந்தப் பதினோரு வருட காலத்தில்,
மக்களிடம்... குறிப்பாக இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்திய...
விழிப்புணர்வுகளை, நிகழ்ச்சி அரங்குகளை கேள்விப் பட்டிருந்தால் 
அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள்.

9 hours ago, nedukkalapoovan said:

உங்கள் கருத்தில் வன்னித் தலைமை என்பதில் இருந்து நீங்கள் இவர் மீது சுமத்தும் குற்றம் எவ்வகையது என்பது புலனாகிறது.

வன்னிக்கு போக முதலே தேசிய தலைமை தமிழீழமெங்கும் இருந்தது தங்களுக்குத் தெரியாது போலும்.

கஜேந்திரனின் தெரிவு.. பல எட்டப்பர்களுக்கு.. திகட்டத்தான் செய்யும். அதற்காக தமிழ் தேசியப் பெரு விருப்பை புறக்கணிக்க முடியாது.

கஜேந்திரனின் தெரிவு.. சரியானதே. 

கள்ளவாக்கு.. அரச வாக்கு.. கூட்டிக்கழிப்பு வாக்குகளை விட.. நேர்மையாக.. தோற்றாலும் தேவையின் நிமித்தம் இவர் நியமிக்கப்படுவது அவசியமே.  அதுவும் இனப்படுகொலை சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சி மீண்டும் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில்.. தமிழர் தேசம்.. தற்காக்க வேண்டிய நடவடிக்கைகள் பல தீவிரமாவும் அவசரமாகவு முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சர்வதேச மனித உரிமைகள் போர்க் குற்ற விசாரணை அமைப்புக்களோடு ஒருங்கிணைந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அன்றி.. கோத்தா தலைமையிலான மகிந்த கூட்ட சிங்கள பெளத்த பேரினவாத பூதம் தமிழ் தேசத்தை உண்டு ஏப்பம் விடும் நிலைக்கு நாமே வழிவகுத்துக் கொடுத்ததாகும். 

அண்ணை, நீங்கள் எங்க இருக்கிறியள் யாழ்ப்பாணத்தில 1996க்குப் பிறகு புலிகள் இல்லை. (இருந்த 607 பேர் என நினைக்கிறேன், காட்டிக்கொடுத்து தான் கொல்லப்பட்டனர். ) வன்னித்தலைமை என்பது கயேந்திரனே சொன்ன பதம்தான். வன்னியில இருந்து தகவல் வரும் என சொல்லுவார்.   

கயேந்திரனை தப்பாக சொல்லவில்லை தகுதியானவரை தெரிவு செய்திருக்கலாம் என்றே சொன்னேன். 

தேசியப்பட்டியலில் பேர் இல்லாவிட்டலும் தெரிவு செய்யலாம் மீரா அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கஜேந்திரன் படிக்கும் காலங்களில் நடந்ததாக கூறப்படும், ஆதாரமற்ற செய்திகளை...
மீண்டும் கூறுவதன் மூலம்...  அவர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வை,
இங்கு கொட்டுகின்றார்கள்  போலுள்ளது.

கஜேந்திரன்... இந்தப் பதினோரு வருட காலத்தில்,
மக்களிடம்... குறிப்பாக இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்திய...
விழிப்புணர்வுகளை, நிகழ்ச்சி அரங்குகளை கேள்விப் பட்டிருந்தால் 
அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள்.

தமிழ் தேசியம் என்று கத்த போகின்றார்கள்  என்ற பயம்.....இவர்கள் தேசியம் என்று கதைத்தால் கோடிகணக்கில் அரசு அபிவிருத்தி செய்த திட்டங்கள் எல்லாம் நின்று போய்வைடும் என்று பயப்படுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாழ் அரியன் said:

அண்ணை, நீங்கள் எங்க இருக்கிறியள் யாழ்ப்பாணத்தில 1996க்குப் பிறகு புலிகள் இல்லை. (இருந்த 607 பேர் என நினைக்கிறேன், காட்டிக்கொடுத்து தான் கொல்லப்பட்டனர். ) வன்னித்தலைமை என்பது கயேந்திரனே சொன்ன பதம்தான். வன்னியில இருந்து தகவல் வரும் என சொல்லுவார்.   

கயேந்திரனை தப்பாக சொல்லவில்லை தகுதியானவரை தெரிவு செய்திருக்கலாம் என்றே சொன்னேன். 

தேசியப்பட்டியலில் பேர் இல்லாவிட்டலும் தெரிவு செய்யலாம் மீரா அக்கா.

2009 வரை எத்தனையோ பேர் இருந்தார்கள். உங்களுக்கு தெரியவில்லை.

வன்னியிலிருந்து தகவல் வருவதற்கும் வன்னித்தலைமை என்பதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. அப்போது கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு வன்னியிலிருந்து தான் தகவல் வந்தது.

முன்னணியை பொறுத்தவரை கஜேந்திரகுமாரை அடுத்து கஜேந்திரனுக்கு தான் அதிக வாக்குகள். அவர் தான் வடக்கிலிருந்து கிழக்குவரை பயணம் செய்து முன்னணியை வலுப்படுத்தியவர். ஆகவே அவர் தான் பொருத்தமானவர். 

எனக்கு தெரிந்தவரை ஒவ்வொரு கட்சியும் தேசியப்பட்டியல் விபரத்தை தேர்தலுக்கு முதலே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்க வேண்டும்.

மேலும் குருபரன் நேரடி அரசியலுக்கு முகம் கொடுக்க தயங்குகிறார். இந்த தேர்தலில் அவர் வேட்பாளராகும் சந்தர்ப்பம் இருந்தும் அதை பயன்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

தமிழ் தேசியம் என்று கத்த போகின்றார்கள்  என்ற பயம்.....இவர்கள் தேசியம் என்று கதைத்தால் கோடிகணக்கில் அரசு அபிவிருத்தி செய்த திட்டங்கள் எல்லாம் நின்று போய்வைடும் என்று பயப்படுகிறார்கள்

அட பாவங்களே.... இவர்கள், குறுக்காலை... யோசிக்கிறார்கள். புத்தன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழ் தேசியம் என்று கத்த போகின்றார்கள்  என்ற பயம்.....இவர்கள் தேசியம் என்று கதைத்தால் கோடிகணக்கில் அரசு அபிவிருத்தி செய்த திட்டங்கள் எல்லாம் நின்று போய்வைடும் என்று பயப்படுகிறார்கள்

அண்ணை,

உவையள் தேசியம் தேசியம் எண்டு கதைச்சாலும்கூட, கிழக்கை வெளிக்கவைக்கவெண்டு பிள்ளையானும், கருணாவும் மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவாத்தானே இருக்கினம். ஆகவே, கிழக்கு மக்களுக்கு தேவையானதச் செய்வினம்தானே? பிறகு ஏன் தேசியம் பற்றிக் கதைக்கிற ஆட்கள் மேல காண்டா இருக்கிறியள்? அவைக்கும் உங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லையெண்டுதானே அறுத்துப்போட்டியள், பிறகு ஏன் அவையளப்பற்றி இன்னமும் கவலைப்படுறியள்? அவை தேசியம் எண்டு கத்திக் கத்தியே தங்கட காலத்தை கழிக்கட்டும், நீங்கள் கிழக்கை வெளிக்க வைக்கிற சோலியப் பாருங்கோ. உதுக்காகத்தானே எல்லாத்தையும் போட்டுவிட்டு, மன்னிப்போம், மறப்போம் , சிங்களத்தோட ஒன்றிப்போம், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் எண்டு வரும்போது போர்க்குற்ற விசாரணையும், அரசியல்த் தீர்வும் மண்ணாங்கட்டியும் .

என்ன நான் சொல்லுறது?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

அதுதானே உவங்கள் வன்னிக்காரங்ளையும், யாழ்ப்பாணியையும் ஒதுக்கி தள்ளி போட்டு அவனுகளின்ட தமிழ்தேசிய விசர்கதையும்  கணக்கில் எடுக்காமல் ....நாங்கள் கிழக்கை Las Vegas ,New york  ரெஞ்சுக்கு அபிவிருத்தி செய்ய வேணும்..

அதுக்கு நம்ம மகிந்தா  சரியான ஆள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரஞ்சித் said:

ரஞ்சித்,

மகிந்த 2/3 எடுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையில் இருக்கும் சிதறுண்ட கட்சிகளும் காரணம்.

தமிழ்த் தேசியத்தின் மீதான நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கும். ஆனால் தற்போது தமிழ்த் தேசியம் என்று சொல்லும் கூட்டமைப்பு, மக்கள் முன்னனி, மக்கள் கூட்டணி கட்சிகள் மீது துளியும் நம்பிக்கை இல்லை. இவர்களால் தேசியத்தை வலுப்படுத்த முடியாது என்பதை அடுத்த ஐந்தாண்டுகள் காட்டும்.

ஆய்வாளர் நிலாந்தனின் அலசலோடு முழுமையாக ஒத்துப்போகின்றேன்.

“வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத் தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி வாக்குகளை மறைமுகமாக தாமரை மொட்டுக்குப் பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு மைய கட்சிகளும் இணைந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குகின்றன. அப்படி என்றால் தமிழ் மக்களின் வாக்குகளின்றி ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய முடியாது. எனவே அதைத் தனிச் சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்று அழைக்கவும் முடியாது.”

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

அதுதானே உவங்கள் வன்னிக்காரங்ளையும், யாழ்ப்பாணியையும் ஒதுக்கி தள்ளி போட்டு அவனுகளின்ட தமிழ்தேசிய விசர்கதையும்  கணக்கில் எடுக்காமல் ....நாங்கள் கிழக்கை Las Vegas ,New york  ரெஞ்சுக்கு அபிவிருத்தி செய்ய வேணும்..

அதுக்கு நம்ம மகிந்தா  சரியான ஆள்

உதேதான் அண்ணை,

உந்த யாழ்ப்பாணத்து, வன்னிச் சனத்துக்கு விசர் கண்டியளோ? எங்கட தேசியத் தலைவர் மகிந்த மாத்தையாவோட ஒண்டாயிருந்தால், அவர் தன்ர பாட்டுக்கு ஏதோ ஒரு கோயிலையோ, குளத்தையோ, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பள்ளிக்குடத்தையோ கட்டிப்போட்டுப் போறார் .

அவன்ர நாடண்ணை, அவன் எங்கயும் கட்டலாம், வெட்டலாம் கண்டியளோ. உந்த மெத்தப் படிச்ச மேதாவிகளுக்கு உந்த அறுப்பொண்டும் தெரியாது, ஏதோ தேசியமாம், அரசியல் தீர்வாம்....விசர் முத்தி அலையுதுகள். 

என்ர அண்ணையும், அண்ணையின்ர சேர்வெண்ட்டும் இப்ப பாராளுமன்றம் போயினம் போல கிடக்கு. உவையளைக் கொண்டு மட்டக்களப்பிலையும், அம்பாறையிலையும் ...(.கொஞ்சம் பொறுங்கோ, அம்பாறையில நாங்கள் வெண்டிட்டமோ அண்ணை, இல்லையோ?) கசினோவையும், கிளப்பையும் கட்டிப்போட்டமெண்டால் எங்கட அண்ணையும் இனிமேல் கொழும்புக்குப் போகத் தேவையில்லை, ஊரிலையே இருந்து தேவையானதை பாத்துக்கொள்ளலாம்,  , கிழக்கில இருந்து போராடின பொடியளுக்கும் ஒரு ஆறுதலா இருக்கும். 

ஆனாலும் அண்ணை, உந்த தேசியம் பேசுற ரெண்டுபேரும் போறாங்களாம் எண்டு கேள்வி. உவங்கள் தேசியம் பேசி நாங்கள் கட்டுற கிளப்பைக் கெடுத்துப்போடுவாங்கள் எண்டு பயம் சாதுவா இருக்குது. ஒருக்கால், அண்ணையின்ர சேர்வண்ட் வெளியில வந்த கையோட உவங்கள போடச் சொல்ல வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

குதிரையோடி: அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிடம் கூறிய விஷயத்தில் ஒரு சதவீதம் கூட சரியாக வந்திருக்காது..ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் ஆதாரம் இல்லாமல் ஒருவரின் வாய்பேச்சை எப்படி நம்பமுடியும்?

நிற்க.. அப்படி குதிரையோடித்தான் கஜன் வந்திருந்தால் கூட, நன்றாக படித்த அப்புகாத்துகள் மட்டும் மக்களுக்கு நல்லதைதான் இவ்வளவுகாலமும் செய்தார்களா? நான் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என விரும்பியிருந்தேன். அவர்களுக்கு இது ஒரு நல்லபாடம்.. இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.. இல்லாவிடில் அடுத்த முறை டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் மேலும் அதிக ஆசனங்களை கிடைக்கும். 

மேலும், கஜன் ஆரம்பத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளை அள்ளி வழங்கியிருந்திருக்கலாம், ஆனால் இந்த 11 வருட கால அரசியல்வாழ்க்கை இன்றைய சூழ்நிலை அவரை மாற்றியிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...

இன்னொரு விடயம்: ரதி, உங்களுக்கு, கஜனைப்பற்றி கூறியவர்கள் முழு உண்மையையும் கூறினார்களா? எந்த சமயத்தில் அப்படி நடந்தது என்று? ராகிங் சமயத்தில், எங்களுடைய Juniorசிடம் இந்த மாதிரி notes எழுத கொடுப்பதும் பின்பு எங்களுடைய notes/assignment மற்றும் புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்து உதவுவதும் வழமை.மேலும் கஜன் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுதே பல நெருக்கடிகளை சந்தித்தமையால், பல  விரிவுரைகளை தவறவிட்ட சந்தர்ப்பங்களும் அதிகம், ஆகையால் நண்பர்களிடம், Juniorsசிடம் உதவிகளை கேட்டிருக்கலாம். “வெருட்டி” என்பது too much!!

எத்தனையோ கொடூரங்களை செய்தவர்கள், வெளியே தாம் திருந்திவிட்டதாகவும், மக்களுக்கு சேவை செய்யபோவதாகவும் கூறும்பொழுது, உண்மையிலேயே பலகாலம் கஷ்டப்பட்டு கிடைத்த பதவியை கஜன் நன்றாக பயன்படுத்துவர் என நம்புகிறேன்..

கஜனுக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி. 
 
படிப்பிற்கும் ,அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை ...அது தொடர்பாக நானே யாழில் நிறைய எழுதி இருக்கிறேன் ...ஏன் குதிரை என்ற பெயர் வந்தது என்று விசுகு அண்ணா கேட்டதற்கான பதிலைத் தான் நான் கொடுத்திருந்தேன் ...அவர் குதியைடியிருந்தால் என்ன/இல்லா விட்டால் எனக்கு என்ன ?...அவர் உண்மையிலேயே குதிரையோடியிருக்கா விட்டால் நீங்கள் நிரூபியுங்கள் ...நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ..நிக்க இதற்கும் , இவரது அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை.

இவரது அரசியல் தொடர்பாக நான் சொல்வதற்கு ஏதுவும் இல்லை ...நீங்கள் சொல்கின்ற மாதிரி இவர் உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்வாராக இருந்தால் அவரை நான் வரவேற்கிறேன்.

உண்மையிலேயே மாவை போன்ற இத்துப் போனவர்களை விட இவர்கள் வந்தது சந்தோசம் ...மக்கள் இவர்களை நம்பி வோட் போட்டு இருக்கிறார்கள் ...அந்த நம்பிக்கை காக்க வேண்டியது இவர்கள் பொறுப்பு 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

ஆனாலும் அண்ணை, உந்த தேசியம் பேசுற ரெண்டுபேரும் போறாங்களாம் எண்டு கேள்வி. உவங்கள் தேசியம் பேசி நாங்கள் கட்டுற கிளப்பைக் கெடுத்துப்போடுவாங்கள் எண்டு பயம் சாதுவா இருக்குது. ஒருக்கால், அண்ணையின்ர சேர்வண்ட் வெளியில வந்த கையோட உவங்கள போடச் சொல்ல வேணும்.

ஜெயிலுக்க போடவேணும் ....போடவேணும் என்ற உடன் நான் பொட்டை நினைத்திட்டன் ....வன்முறை கூடாது என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மக்கள் இவர்களை நம்பி வோட் போட்டு இருக்கிறார்கள் ...அந்த நம்பிக்கை காக்க வேண்டியது இவர்கள் பொறுப்பு 

2004 இல் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர் கஜேந்திரன். அப்படி அள்ளிப்போட்ட மக்கள் அதன் பின்னர் அவரை எந்தவொரு தேர்தலிலும் தெரிவு செய்யவில்லை. கஜேந்திரன் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போயிருந்தால் அதை நான் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை.

புலிகளின் நீட்சியாக அவரைக் கருதும் புலம்பெயர்ந்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் போவதை நியாயப்படுத்துகின்றனர்.

ஆனால் சுமந்திரன் தோற்று தேசியப்பட்டியல் மூலம் போயிருந்தால், அல்லது மாவைக்குக் தேசியப்பட்டியலைக் கொடுத்திருந்தால் எகிறியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

உண்மை அதை சொன்னால் நாங்கள் தேசியத்தின் எதிரி 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

2004 இல் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர் கஜேந்திரன். அப்படி அள்ளிப்போட்ட மக்கள் அதன் பின்னர் அவரை எந்தவொரு தேர்தலிலும் தெரிவு செய்யவில்லை. கஜேந்திரன் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போயிருந்தால் அதை நான் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை.

புலிகளின் நீட்சியாக அவரைக் கருதும் புலம்பெயர்ந்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் போவதை நியாயப்படுத்துகின்றனர்.

ஆனால் சுமந்திரன் தோற்று தேசியப்பட்டியல் மூலம் போயிருந்தால், அல்லது மாவைக்குக் தேசியப்பட்டியலைக் கொடுத்திருந்தால் எகிறியிருப்பார்கள்.

உண்மைதான்,

என்னைப்பொறுத்தவரையில் கஜேந்திரனும், கஜேந்திரக்குமாரும் பேசுவது சரியாகத் தோன்றுகிறது. அதனால் நேரடியாகத் தேர்தலிலோ அல்லது தேசியப்பட்டியல் மூலமோ பாராளுமன்றாம் போவது சரியென்று தோன்றுகிறது. ஒருமுறை போய் வந்து ஒன்று செய்யவில்லையென்றால், நீங்கள் கூறும் அதே மாவைகளும், சுமந்திரன்களும் இன்றுவரை செய்தது போர்க்குற்ற விசாரணைக்குக் கால அவகாசம் கொடுத்ததும், ரணிலின் அரசை தக்கவைக்கப் பாடுபட்டதும்தானே? இவர்கள் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போய் வேறு என்ன செய்தார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

தமிழ்த் தேசியமும், தாயகமும், சுயநிர்ணய உரிமையும் புலிகளுக்கான தேவைகள் மட்டும்தான் என்று நீங்கள் நினைத்தால் நான் அதற்குப் பொறுப்பல்ல. என்னைப்பொறுத்தவரை அது தமிழ்த்தேசிய இனத்தின் கோரிக்கைகள். ஆகவேதான் உங்களுக்கு கஜேந்திரக்குமாரும், கஜேந்திரனும் பேசுவது புலிகளின் தொடர்ச்சியாகத் தெரிகிறது. அதனை புலம்பெயர் தமிழர் என்னும் இலங்கைக்குச் சம்பந்தமில்லாத வேற்றுக்கிரகவாசிகள் பேசும்போது உங்களுக்குக் கோபம் வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறும் அதே மாவைகளும், சுமந்திரன்களும் இன்றுவரை செய்தது போர்க்குற்ற விசாரணைக்குக் கால அவகாசம் கொடுத்ததும், ரணிலின் அரசை தக்கவைக்கப் பாடுபட்டதும்தானே? இவர்கள் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போய் வேறு என்ன செய்தார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

முதலில் நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் அல்ல. எனினும் பாராளுமன்றத்திற்கு நித்திரை கொள்ளப் போகின்றவர்கள், ஒழுங்காக விவாதங்களில் பேசவராதவர்கள் போவதைவிட கொஞ்சம் விசயங்கள் தெரிந்தவர்கள் (எந்தக் கட்சியாக இருந்தாலும்) போவது ஜனநாயகத்திற்கு நல்லது என்று கருதுகின்றேன்.

கூட்டமைப்பு சொந்தமாக சிந்தித்து செயற்படுவது கிடையாது என்பதை யாழில் பல வருடங்களாக எழுதியிருக்கின்றேன். ஒன்றில் அவர்கள் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சிநிரலின்படி செயற்படுவார்கள். அல்லது இந்தியாவின் சொல்கேட்டு நடப்பார்கள். மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷகளைவிட அவர்களைக் கையாள்பவர்கள்தான் கூட்டமைப்புக்கு முக்கியம்.

சுமந்திரன் இந்தியாவையும் பெரிதாக நாடவில்லை. தனது கொழும்பு நட்பு வட்டம் ஊடாக gentleman agreement மூலம் ரணிலிடம் இருந்து தீர்வு ஒன்றைப் பெறலாம் என்று நம்பி ஏமாந்தார். நல்லாட்சிக்கு முண்டுகொடுத்ததும், ஜெனீவாவில் போர்க்குற்ற விசாரணைக்கு கால அவகாசத்திற்கு ஒப்புக்கொண்டதும் இப்படியான பேரம்பேசலின் விட்டுக்கொடுப்புக்கள். கண்ட பலன் பூச்சியம். அதை நேர்மையாக மக்கள் முன் சொல்லி தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவும் இல்லை. தவறுகளைத் திருத்தவும் முனையவில்லை. எனவே, கூட்டமைப்பு தோல்வியடைந்ததில் வியப்பில்லை (அவர்கள் சரியாக 10 ஆசனங்கள் எடுப்பார்கள் என்றும் கணித்திருந்தேன்!)

நாங்கள் விரும்புகின்றோமா இல்லையோ, வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதிப்படுத்தும் 18-20 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றக் கதிரைகளில் இருக்கத்தான் போகின்றார்கள். அவர்கள் அரசியல் தீர்வு ஒன்றுக்கு முனைவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.

2/3 பெரும்பான்மை உள்ள அரசை மேற்கு நாடுகள் அரவணைத்துதான் செல்லும். எனவே, மேற்கு நாடுகளை வைத்து அழுத்தம் கொடுக்கவும் முடியாது!

அடுத்த ஐந்தாண்டுகளில் போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற எதற்கும் பொறுப்புக்கூறாமலும், தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்காமலும் இலங்கை நடந்துகொள்ளும். அத்தோடு இராணுவத்தின் தலையீடு அரசியலிலும், அரச சேவைகளிலும் இருக்கும். உதிரிகளாக இருக்கும்  தமிழ் கட்சிகள் இந்த நெருக்கடிக்குள் நெளிவு, சுழிவுகளோடு ஓடப்பழகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

2004 இல் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர் கஜேந்திரன். அப்படி அள்ளிப்போட்ட மக்கள் அதன் பின்னர் அவரை எந்தவொரு தேர்தலிலும் தெரிவு செய்யவில்லை. கஜேந்திரன் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போயிருந்தால் அதை நான் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை.

புலிகளின் நீட்சியாக அவரைக் கருதும் புலம்பெயர்ந்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் போவதை நியாயப்படுத்துகின்றனர்.

ஆனால் சுமந்திரன் தோற்று தேசியப்பட்டியல் மூலம் போயிருந்தால், அல்லது மாவைக்குக் தேசியப்பட்டியலைக் கொடுத்திருந்தால் எகிறியிருப்பார்கள்.

ஜி, கஜேந்திரன் இம்முறை பெற்ற வாக்குகள் 24,794 மணிவண்ணன் பெற்றது 22,741. அவர்களுக்கு ஓர் ஆதரவு தளம் உருவாகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.