Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

ஐயா,

சிறிதரனை விட்டுவிட்டு இவரை மட்டும் ஏன் இலக்கு வைக்கிறீர்கள் 😀

பதில் இல்லை என்ன 🤥

ஸ்ரீதரன் புலிகளை திட்டவில்லை போராட்டத்தை கொச்சை படுத்தவில்லை போர்க்குற்ற விசாரணையை முடக்கவில்லை போதுமா ?

  • Replies 123
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

ஸ்ரீதரன் புலிகளை திட்டவில்லை போராட்டத்தை கொச்சை படுத்தவில்லை போர்க்குற்ற விசாரணையை முடக்கவில்லை போதுமா ?

ஆனால் நீங்கள் சுமந்திரனை கள்ளவாக்கு போட்டு வென்றவரென்றல்லோ ஏசுகிறீர்கள்.  வாக்கு மோசடி செய்தவர் என்று ஏசுவீர்களானால் சிறீதரனைத்தான்  ஏசவேண்டும்.

சுமந்திரன் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டாரென்று நீங்கள் அதனைக் காரணமாகக் கூறி விமர்சியுங்கள். அதுதான் நியாயம் அதுதான் நீதி (😀)

அதுசரி ,

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஒரு தமிழ் அரசியல்வாதியை உங்களால் காட்ட முடியுமா அல்லது இலங்கை நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் எடுத்த ஒருவரால் தமிழ்த் தேசியம் கதைக்க முடியுமா 🤥

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை நடைமுறைப்படுவது நீண்டகால நடைமுறை.  அத்தனை வாக்கெண்ணும் உத்தியோகஸ்தரையும் ஏமாற்றுவது கடினமாக இருக்கும். தவறு நடந்துருந்தால் உடனடியாக கண்டு பிடிக்கலாம்  என்பதாலேயே அக்கோரிக்கைக்கான உரிமை  உள்ளது.  அதுவும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்சசியில் நிச்சயமாக வாக்கெண்ணும் இடத்தில் கமரா வசதி இருந்திருக்கும். சுந்திரனின் அரசியலில் எனக்கும் முழுமையான உடன்பாடு இல்லை. ஆனால் குறிப்பிடளவு மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

துல்பன் நீங்கள் சொல்லுவது கட்சிக்கு விழும் வாக்குகள்.அதனை மாற்ற முடியாது.பிடிபடலாம்.

ஆனால் விருப்பு வாக்குகள்
மூன்று பேருக்கு தனியாக
இரண்டு பேருக்கு தனியாக
ஒருவருக்கு போட்டது தனியாக
இப்படி புள்ளடி போட்டவைகளை தனித்தனியாக வைக்கிறார்கள்.இப்போ உத்தியோகப்பற்றற்ற முறையில் முடிவுகள் தெரியும்.
மேலிடத்திலிருந்தோ வேறு வழிகளிலோ அழுத்தம் வந்து கீழே உள்ளவரை மேலே தள்ள வேண்டும் என்றால்
2 புள்ளடிகள்
1 புள்ளடி போட்ட
வாக்கு சீட்டுகளை எடுத்து குறித்த நபருக்கு புள்ளடி போட்டிருக்காது விட்டால்தேவையான அளவு புள்ளடி குறித்த நபருக்கு போடலாம்.
இது இந்த தேர்தல் முறையில் உள்ள பெரிய ஓட்டை.
அதற்காக சுமந்திரன் விடயத்திலும் இப்படி நடந்ததாக கூறவில்லை.

எல்லாம் முடிந்த பின்பே முடிவை உத்தியோகமாக அறிவிக்கிறார்கள்.

இப்போது கோட்டுக்கு உடனே போனால் என்ன 10 நாள் கழித்து போனால் என்ன 1000 தடவை எண்ணினாலும் எல்லாமே அவர்கள் சொன்ன முடிவு பக்காவாக இருக்கும்.

1 minute ago, ஈழப்பிரியன் said:

இப்போது கோட்டுக்கு உடனே போனால் என்ன 10 நாள் கழித்து போனால் என்ன 1000 தடவை எண்ணினாலும் எல்லாமே அவர்கள் சொன்ன முடிவு பக்காவாக 

இதைத்தான்  நானும் சொல்கிறன்  எத்தனை தரம் எண்ணினாலும் வந்த முடிவு தான் வரும்; இந்த விஷயம் இவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தைரியமாக நீதி மன்றத்துக்கு போகலாம், மீண்டும் எண்ணலாம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

இதைத்தான்  நானும் சொல்கிறன்  எத்தனை தரம் எண்ணினாலும் வந்த முடிவு தான் வரும்; இந்த விஷயம் இவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தைரியமாக நீதி மன்றத்துக்கு போகலாம், மீண்டும் எண்ணலாம் என்கிறார்கள்.

வழமையில் இது சிங்களப் பகுதிலே தலைவலி.
இம்முறை எமக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

இதைத்தான்  நானும் சொல்கிறன்  எத்தனை தரம் எண்ணினாலும் வந்த முடிவு தான் வரும்; இந்த விஷயம் இவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தைரியமாக நீதி மன்றத்துக்கு போகலாம், மீண்டும் எண்ணலாம் என்கிறார்கள்.

ஆக,

மாற்றம் செய்ய முடியாத விடயத்திற்காகவா இத்தனை களேபரம். ☹️

சுமந்திரனை மட்டுமல்ல, யாரைத்தானும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதைத் தவிர்த்திருந்தாலே தேவையற்ற வாதங்களைத் தவிர்த்திருக்கலாம். 😏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

ஆக,

மாற்றம் செய்ய முடியாத விடயத்திற்காகவா இத்தனை களேபரம். ☹️

சுமந்திரனை மட்டுமல்ல, யாரைத்தானும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதைத் தவிர்த்திருந்தாலே தேவையற்ற வாதங்களைத் தவிர்த்திருக்கலாம். 😏

என்னதான் குத்தி முறிந்தாலும் கள்ளவாக்கு சுமத்திரனுக்கு எதிரான கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கும் கவலைப்படாதீங்க .

கள்ளன் களவு செய்துவிட்டு கள்ளன் என்று கூறினால் கேஸ் போடுவாராம் .

7 minutes ago, Kapithan said:

ஆக,

மாற்றம் செய்ய முடியாத விடயத்திற்காகவா இத்தனை களேபரம். ☹️

சுமந்திரனை மட்டுமல்ல, யாரைத்தானும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதைத் தவிர்த்திருந்தாலே தேவையற்ற வாதங்களைத் தவிர்த்திருக்கலாம். 😏

சுமந்திரன் தோற்க வேண்டும் என்பது  பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு; அப்படிப்பட்டவர் வெல்ல எல்லாருக்கும் ஒரு ஏமாற்றம் அதனால் தான் இவ்வளவு கலோபரம். இவரது வாக்கு வங்கியே  53,000 இல் இருந்து 23,000 குறைந்திருக்கிறது என்றால் இவரை ஏதோ ஹீரோ போல் கொண்டாடுபவர்கள் ஏன் என்பதை விளக்கினால் பிரியோசனமாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

என்னதான் குத்தி முறிந்தாலும் கள்ளவாக்கு சுமத்திரனுக்கு எதிரான கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கும் கவலைப்படாதீங்க .

கள்ளன் களவு செய்துவிட்டு கள்ளன் என்று கூறினால் கேஸ் போடுவாராம் .

எதிரான கருத்துக்களை தாராளமாகக் கூறுங்கள். அதில் பிழை கூற முடியாது. தாராளமாக கருத்தாடலாம். ஆனால் தரம் தாழ்த்தி இழிவுபடுத்தினால் எதிர்வாதத்தை எதிர்கொள்ளவெண்டியேற்படும். 😀

10 minutes ago, Dash said:

சுமந்திரன் தோற்க வேண்டும் என்பது  பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு; அப்படிப்பட்டவர் வெல்ல எல்லாருக்கும் ஒரு ஏமாற்றம் அதனால் தான் இவ்வளவு கலோபரம். இவரது வாக்கு வங்கியே  53,000 இல் இருந்து 23,000 குறைந்திருக்கிறது என்றால் இவரை ஏதோ ஹீரோ போல் கொண்டாடுபவர்கள் ஏன் என்பதை விளக்கினால் பிரியோசனமாய் இருக்கும்.

இவரை வெற்றியாளர் போல் கொண்டாடவில்லை.

தமிழர்களைப் பிரிக்கும் எதற்கும் துணை போகேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளவாக்கு சுமத்திரன் என்று அடியெடுத்துக் கொடுத்தவர்கள்  சுமத்திரனுக்கும் சேர்த்து வீட்டுச்சின்னத்தில் வாக்களித்த மக்கள்தான்.சுமத்திரன் பேசாமல் இருந்திருக்கலாம். தேவை இல்லாமல் அறிக்கை விட்டு இப்ப எல்லோரும் அதை ஒரு பிரபலமான பட்டமாக  ஆக மாற்றி விட்டார்கள்.கள்ள வாக்கு கோடத் தீர்மானித்து விட்டால் சும்மா போடமாட்டார்கள்.வாக்க்குச்சிட்டுக்களில் 1 அல்லது 2 பேருக்கு வாக்களித்தவர்கின் வாக்குச்சிட்டில் இரவிரவாக வாக்கைப்போட்டுஎண்ணுவார்கள்.இரவு 2 மணிவரைக்கம் வெளியில் வராதசுமத்திரன் டீல் முடிந்து வெற்றி என்றுஅவருடையமுகவர்களினால்அறிவிக்கப்ப்டபின்புதான்வாக்குஎண்ணும்இடத்துக்குவந்துள்ளார்.அவர்பலதொகுதிகளில்தான்1ம்இடம்அல்லது2வதுஇடத்தில் இருந்ததாகச் சொல்கிறார்.அப்படி இருந்தும் மானிப்பாய் தொகுதிக்கான வாக்குள் எண்ணி முடியவில்லை அதால்தான் தாமதம் என்கிறார்.அந்த நேரத்தில்  வெளியில் மானிப்பாய் னெ;று விட்டு உள்ளே கிளிநொச்சித் தொகுதி வாக்குச்சீட்டுகளில் போடப்படாத வாக்ககளைப் போட்டிருக்கலாம்.சொந்தத் தொகுதியில் கோடடை வி;டவர் எப்படி அதுவும் சித்தார்த்தனின் தொகுதியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றார்?இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கை என்றே கருதலாம்.  சிறிலங்காவின் அதிக வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளெல்லாம் பலமணி நேரங்களுக்கு முன்னே எண்ணி முடித்து விட்டனர். மானிப்பாய் தொகுதிக்கு மட்டும் ஏன் இவ.வளவு நேரமானது.வாக்குகளை மீள எண்ணாமல் யாழ்மாவட்டத்தில் மறுவாக்குப் பதிவு நடாத்த தயாரா?Pமத்திரனுக்கு இந்த் தேர்தலில் எந்தச் சுத்துமாத்து விட்டாவது வெல்றி முக்கியம். இல்லாவிட்டால் அவரது அரசியல் முடிந்து விடும் ஆகவே எந்த எல்லைக்கும் போவதற்கு அவரும் அவரின் ஆதரவாளர்களும் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும.

  • கருத்துக்கள உறவுகள்

13 minutes ago, புலவர் said:

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Dash said:

என்ன ஆச்சர்யம் என்றால் இலங்கையில் ஜனநாயகம் புகைப்பது போல நீதி மன்றம் போகலாம் என்கின்றனர். அங்கு போனால் மட்டும் ராஜபக்‌ஷ குடும்பம் தலையிடாமல் இருக்குமா இல்லை நீதி வழங்கிய நீதிபதியை மாற்றி தமக்கு தேவையான தீர்ப்பை பெற்றிருப்பார்கள்.

அந்தத் துணிவுதான் இந்தச் சவாலுக்கு காரணம்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

இனி அங்கே இருந்த உத்தியோகத்தர்கள் வெளியே வந்து சொன்னாலத் தான் உண்டு.

குற்றம் புரிந்தவருக்கு உடந்தை என்கிற குற்றச்சா ட்டோடு வேலையும் பறிமுதல், யாராவது முன்வருவார்களா? வந்தாலும் பொய்தான் கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆனால் தரம் தாழ்த்தி இழிவுபடுத்தினால் எதிர்வாதத்தை எதிர்கொள்ளவெண்டியேற்படும். 😀

உங்களின் நடுநிலைமை எல்லார்மேலும் காட்டப்படவில்லையே கபித்தான், ஒரு குறிப்பிட்டவர் மேற்தானே காட்டுகிறீர்கள். அதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உங்களின் நடுநிலைமை எல்லார்மேலும் காட்டப்படவில்லையே கபித்தான், ஒரு குறிப்பிட்டவர் மேற்தானே காட்டுகிறீர்கள். அதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். 

நடுவுநிலமை என்ற வரையறைக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இல்லவேயில்லை. தமிழர் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்திற்கெதிராக / பலவீனப்படுத்தும் எந்த முயற்சிக்கும் எதிராக நிற்கிறேன். அவ்வளவே. எல்லை மீறும்போது கொஞ்சம் சஞ்சலம் அடைகிறேன். வேறென்ன 🤥

Edited by Kapithan

4 hours ago, Kapithan said:

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

அதாவது இவர்களின் கூற்றுப்படி தேர்தல் கடமையில் ஈடுபட அதிகாரிகள், யாழ் உதவி தேர்தல் ஆணையாளர், தேர்தல் ஆணையாளர், தேர்தல் ஆணைக்குழு, மாவடட செயலாளர், தேர்தல் கண்காணிப்பாளர்கள், கட்சிகளின் சார்பில் தேர்தலில் கடமையில் ஈடுபடடவர்கள் எல்லோருமே மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதாவது இங்கு எழுதுபவர்களும் , களவு களவு எண்டு சத்தம் போடுபவர்களும்தான் சுத்தமானவர்கள். அதாவது களவு நிரூபிக்க முடியாதபடி மேட்க்கூறிய அவ்வளவு பேரும் பேரும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சொன்னவன் சொன்னானாம் , கேடடவனுக்கு மதி இல்லயாம். இவர்களுக்கு வேறு என்னத்தை எழுதுவது.

4 hours ago, Kapithan said:

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

சுமந்திரன் வழக்கு போடடால் மேட்க்கூறிய   அத்தனை பேரும் (அதிகாரிகள்) வழக்குக்கு வர வேண்டும். நிச்சயமாக நிரூபிக்க முடியாமல் போகும். எனவே சுமந்திரன் யாருக்கே எதிராக வழக்கு போடடாரோ அவர் பத்தி சொல்லியே ஆக வேண்டும். அத்துடன் இவர்கள் யாவருக்கும் , அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சாட்டியதாகவே கருதப்படும். சுமந்திரன் நிச்சயமாக ஒரு வழக்கு போடுதல் இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இல்லாவிடடாள் எலும்பு இல்லாத நாக்கு எல்லாத்தையும் உளறிக்கொண்டுதான் இருக்கும். இந்த உளறல்களை முடிவுக்கு கொண்டுவர இதுதான் ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா.... அந்த மூன்றாவது  "சந்தேகநபர்" எங்கே....  :grin: 😂  🤣

10 hours ago, Kapithan said:

ஐயா,

சிறிதரனை விட்டுவிட்டு இவரை மட்டும் ஏன் இலக்கு வைக்கிறீர்கள் 😀

பதில் இல்லை என்ன 🤥

சிலர் எழுதுகிறார்கள் அவர் புலிகளுக்கு எதிராக பேசினார் அதனால்தான் எதிர்க்கிரோம் என்று. சில வேளைகளில் உண்மை கசக்கலாம்.

ஆனால் அதையும்விட ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதை எழுதினால் குய்யோ முய்யோ எண்டு சத்தமிடுவார்கள். அது அவர்களின் உள்ளுணர்வுக்கு தெரியும். அதை மறைத்துக்கொண்டு வேறு விதமாக எழுதுகிறார்கள். நாங்கள் இதை எல்லாம் கடந்து வந்தவர்கள். அது சுமந்திரனுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

இந்தக் கேள்விகளுக்கான பதிலை தேர்தல் திணைக்களம்தான் தர வேண்டும் 😂

கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?
சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார்.
சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு வெட்கமேயில்லாமல்  ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் .
நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும் ஒருவருக்கு இது தேவையா ?
அங்கு வோட் போட்ட மக்களிலும் பிழை இருக்கு ..விருப்பு வாக்கில் ஒன்றை மட்டும் போட்டுட்டு மிச்சத்தை போடாமல் விட்டால் உத்து தான் நடக்கும் ...அவர்களும் யாருக்கும் போடுவது என்று தெரியாமல் போடாமல் விட்டு இருப்பார்கள் ...அதையே இந்த கள்ளன்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் இப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு கள்ள வோட் போட்டு வென்றது அவமானத்திலும் அவமானம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

எங்கையப்பா.... அந்த மூன்றாவது  "சந்தேகநபர்" எங்கே....  :grin: 😂  🤣

சந்தர்ப்பம் கொடுக்கும்போதுதான் தெரிகிறது  நாம் எல்லாம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போவோம் என்று. இதில் உள்ள குப்பாடிக் கூட்டம்தான் எங்கள் தலைவர்களும் எதிர்காலத் தலைவர்களுமா ? . 😏 வெட்கக்கேடு.

இவற்றையெல்லாம் இரசித்து கொண்டாடி மகிழ்கிறது வெளிநாடுகளில் நாகரீகமடைந்தவர்களாக தங்களைக் கூறிக்கொள்ளும் ஒரு பெரும் மக்கள் கூட்டம். 😏

எவ்வளவுதான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது என்று காரணமில்லாமலா கூறினார்கள் ☹️

எங்கள் அடுத்த தலைமுறைகளாவது தங்கள் குளத்தை ஆள அகலமாக வெட்டிப் பெருப்பிக்கட்டும்.  ☹️

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?
சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார்.
சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு வெட்கமேயில்லாமல்  ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் .
நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும் ஒருவருக்கு இது தேவையா ?
அங்கு வோட் போட்ட மக்களிலும் பிழை இருக்கு ..விருப்பு வாக்கில் ஒன்றை மட்டும் போட்டுட்டு மிச்சத்தை போடாமல் விட்டால் உத்து தான் நடக்கும் ...அவர்களும் யாருக்கும் போடுவது என்று தெரியாமல் போடாமல் விட்டு இருப்பார்கள் ...அதையே இந்த கள்ளன்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் இப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு கள்ள வோட் போட்டு வென்றது அவமானத்திலும் அவமானம்

ரதி, பச்சை முடிஞ்சுது, நாளைக்கு போடிறன்! இதையே நான் நாசூக்காய் சொன்னால் நிர்வாகம் அதை தங்கள் சார்பானவர்களுக்காக வெட்டுகிறார்கள்! இப்படியே போனால் கொஞ்ச காலத்தில் மோகனுக்கு ஆப்புத்தான்??

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

கற்பிதன் , நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?

இந்த கேள்விக்கு சிவாஜிலிங்கம் வழங்கிய சட்டரீதியான சுமந்திரனுக்கு ஆதரவான பதிலை, சசிகலா, அனந்தி, அங்கஜன், சிவாஜிலிங்கம்  ஆகியோர் சசிகலா வீட்டில் இருந்து உரையாடும் காணொளியில் நீங்களும் கேட்டு மகிழலாம்.😀 சிவாஜி சட்டக்கல்லூரியில் படித்தவர். சட்ட அறிவை வைத்து பொலிஸ், இராணுவம், நாலாம் மாடியை எல்லாம் சிங்களத்திலேயே தலை சுற்ற வைப்பவர்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

ரதி, பச்சை முடிஞ்சுது, நாளைக்கு போடிறன்! இதையே நான் நாசூக்காய் சொன்னால் நிர்வாகம் அதை தங்கள் சார்பானவர்களுக்காக வெட்டுகிறார்கள்! இப்படியே போனால் கொஞ்ச காலத்தில் மோகனுக்கு ஆப்புத்தான்??

மோகன் அண்ணாவை... நினைக்கத்தான், பாவமாயிருக்கு. :grin: 
அப்பாவி மனுசனை, போட்டு... "சிப்பிலி"  ஆட்டுறாங்கள்.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் செவ்வி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ரதி, பச்சை முடிஞ்சுது, நாளைக்கு போடிறன்! இதையே நான் நாசூக்காய் சொன்னால் நிர்வாகம் அதை தங்கள் சார்பானவர்களுக்காக வெட்டுகிறார்கள்! இப்படியே போனால் கொஞ்ச காலத்தில் மோகனுக்கு ஆப்புத்தான்??

மறக்காமல் போட்டுடணும் சரியா😀

1 hour ago, கற்பகதரு said:

இந்த கேள்விக்கு சிவாஜிலிங்கம் வழங்கிய சட்டரீதியான சுமந்திரனுக்கு ஆதரவான பதிலை, சசிகலா, அனந்தி, அங்கஜன், சிவாஜிலிங்கம்  ஆகியோர் சசிகலா வீட்டில் இருந்து உரையாடும் காணொளியில் நீங்களும் கேட்டு மகிழலாம்.😀 சிவாஜி சட்டக்கல்லூரியில் படித்தவர். சட்ட அறிவை வைத்து பொலிஸ், இராணுவம், நாலாம் மாடியை எல்லாம் சிங்களத்திலேயே தலை சுற்ற வைப்பவர்.

நான் இன்னும் வீடியோவை முழுமையாய் பார்க்கவில்லை....பார்த்திட்டு வந்து எழுதுறன்  
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.