Jump to content

கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் தொடர்பான சர்ச்சை: தனது வெற்றியை மகிழ்ச்சியாக அனுபவிக்க இயலாத நிலையில் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-டி.பி.எஸ்.ஜெயராஜ்-

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் அதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான சசிகலா ரவிராஜுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விருப்பு வாக்குகளை ‘களவாடியதன்’ மூலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்றாரா?’. இந்தக் கேள்விக்கான ஒரு சொல் பதில் இல்லை என்பதேயாகும். இருந்தாலும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தையும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் 2020 பாராளுமன்றத் தேர்தல் சசிகலாவின் விருப்பு வாக்குகளை தனக்கு அனுகூலமான முறையில் சுமந்திரன் ‘மாற்றியிருந்தார்’ என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிறைந்ததாக இருந்தன.

b5468353fcc956d901765df7c60afc54_XL.jpg

மேலும், மாவட்டம் ஒன்றின் பிரதான வாக்கு எண்ணும் நிலையத்தை ஆக்கிரமித்து வாக்குப் பெட்டிகளை அபகரிக்க முயன்ற ஒரு கும்பலை விரட்டியடிப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்பட்ட இலங்கை தேர்தல் வரலாற்றின் முதல் சம்பவமாகவும் அது அமைந்தது. சுமந்திரனை தவறான முறையில் குற்றம்சாட்டி மலினப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் சுயநல அரசியல் சக்திகளினால் யாழ்ப்பாண தேர்தல் சம்பவங்கள் தவறான வகையிலும் அவதூறான வகையிலும் ஊதி பெருப்பிக்கப்பட்டு இன்னமும் திரிபுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே இந்தக் கட்டுரை யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் அமைந்திருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் உண்மையில் நடந்தது என்ன? அல்லது நடவாதது என்ன? என்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரு முயற்சியாக வடக்கு தேர்தல் சர்ச்சை குறித்து கவனம் செலுத்துகின்றது. பண்பு விழுமியங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்ற, (Post Truth) மாற்று உண்மைகள் (Alternative Facts) என்ற பதங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். சுமந்திரனின் விடயத்திலும் கூட ‘வாக்கு திருட்டு சதி’ என்ற நகைப்புக்கிடமான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு சான்றுகளை முன்வைக்க முயற்சிக்கும். எது உண்மை என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் எவ்வாறு அவரது சொந்த கட்சிக்குள் இருக்கும் பல்வேறு நபர்களினாலும் வெளியிலுள்ளவர்களினாலும் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார் என்பது பற்றி முன்னைய சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன். தனித்தனியாக செயற்படுகின்ற வெவ்வேறு வகையான இந்த சக்திகள் சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் ஐக்கியப்பட்டு செயற்பட்டன. இருந்தாலும், சுமந்திரன் வெற்றிப் பெற்றார். 

சுமந்திரனும் அவரது சகா சிவஞானம் சிறிதரனும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பதை சுமந்திரனின் எதிரிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் புரிந்து கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனை பாதுகாத்து அவரை எதிர்ப்பவர்களை கண்டனம் செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனேயாவார். அந்த ‘குற்றத்தை’ செய்ததற்காக சிறிதரனும் கூட சுமந்திரனுடன் சேர்ந்து கூட்டமைப்பின் இன்னொரு முன்னாள் எம்.பி.யான சரவணபவனுக்கு சொந்தமான பத்திரிகைகளினால் தாக்கப்பட்டார்.

சுமந்திரனும் சிறிதரனும் சரவணபவனும் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள். சிறிதரனும் சுமந்திரனும் முறையிட்டபோது தமிழரசுக் கட்சியின் தலைவரான சோமசுந்தரம் மாவை சேனாதிராஜா, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவை சேனாதிராஜாவும் கூட யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். அவரை சரவணபவனின் பத்திரிகைகள் ஆதரித்தன. மறுபுறத்தில் சுமந்திரனும் சிறிதரனும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூட்டாகவே தங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். விருப்பு வாக்குகளுக்கான கூட்டமைப்பின் உட்கட்சி போட்டாபோட்டி பிரதானமாக இரு இரட்டையர்களுக்கிடையிலானதாக – அதாவது சுமந்திரன் - சிறிதரன் எதிர் சேனாதிராஜா – சரவணபவன் - இருந்தது.

 

சுமந்திரன் சிறிதரன் இரட்டையர்கள்

சுமந்திரன்  - சிறிதரன் இரட்டையர்கள் தேர்தலில் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்று தெளிவாக தெரிய வந்ததும் இருவருக்கும் வாக்களிக்கக்கூடாது என்று மக்களை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் பெருமளவில் அச்சிடப்பட்டு தேர்தல் தினத்துக்கு முதல்நாள் இரவும்பகலும் பரவலாக விநியோகிக்கப்பட்டன. இது சிறிதரனும் சுமந்திரனும் தோற்க வேண்டும் என்று விரும்பிய கூட்டமைப்புக்குள் இருந்தவர்களினால் முன்னெடுக்கப்பட்ட விரக்தியின் விளிம்பிலான நடவடிக்கையாகும். அந்த பிரசுரங்கள் அச்சிடப்பட்ட அச்சகம் எது என்பதும் அதை விநியோகித்தவர்கள் யார் என்பதும் யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்.

 இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான ஏழு ஆசனங்களில் மூன்று அல்லது நான்கு ஆசனங்களை மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் என்பது ஆகஸ்ட் 5 வாக்களிப்பின் போக்குகள் உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளிக்காட்டின. வெற்றிப்பெறக் கூடியவர்கள் சிறிதரன், சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் அல்லது சசிகலா ரவிராஜ் என்பதும் புரிய வந்தது. சரவணபவனும் சேனாதிராஜாவும் பற்றி அது விடயத்தில் பேசப்படவில்லை.

சுமந்திரனின் வெற்றி நெருங்கிவந்த நிலையில், அதை ‘சட்டவிரோதமானதாக்குவதற்கு’ மேலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பெருமளவு வளங்களை கொண்ட கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்கென 10 - 15 பேர் அடங்கிய ஒரு குழுவை முன்னதாக நியமித்திருந்தார். அவர்களது கடமை, சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக தொலைபேசி மூலம் செய்திகளை அனுப்புவதும் இணையத்தில் வெளியிடுவதுமேயாகும். 

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் அந்த குழுவுக்கு கொடுக்கப்பட்ட பணி சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பு வாக்குகளில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்றும் சித்தார்த்தனை முந்துவதற்கு சுமந்திரன் வாக்குகளை திருடிவிட்டார் என்றும் தகவல்களை பரப்புவதேயாகும். இந்த தவறான தகவல்கள் மிகவும் ஒருங்கிணைந்த முறையில் பரவலாக பரப்பப்பட்டன. வதந்திகள் அதிவேகமாக பரவ ஆரம்பித்தன. 

சித்தார்த்தனிடமிருந்து சுமந்திரன் வாக்குகளை திருடி வி. தர்மலிங்கத்தின் மகனுக்கு தோல்வியை கொண்டு வந்துவிட்டார் என்ற கதை எங்கும்; பரவலாகியது. சித்தார்த்தன் புளொட்டின் தலைவராக இருக்கின்ற போதிலும், அவரது தந்தையார் காலஞ்சென்ற தர்மலிங்கம் தமிழரசுக் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1960 தொடக்கம் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

எம்.கே.சிவாஜிலிங்கம், 2020 பாராளுமன்றத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டார். ‘ஐயோ எங்கட தர்மலிங்கம் அண்ணரின்ட மகன் சித்தார்த்தனை சுமந்திரன் கள்ள வாக்கெடுத்து தோற்கடிச்சிட்டான்’ என்று சிவாஜிலிங்கம் பகிரங்கமாகவே கூச்சலிட்டு மாரடிக்க தொடங்கினார். அவரது ஒப்பாரி பாசாங்கு தனமானதும் விசித்திரமானதுமாகும். தர்மலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் 1985 செப்டெம்பர் 2ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (ரெலோ) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் சிவாஜிலிங்கம் ரெலோவின் ஒரு சிரேஷ்ட தலைவராக இருந்தார்.

 

சிவாஜிலிங்கத்தின் ஒப்பாரி

சுமந்திரனின் தந்திரத்தின் மூலமாக தான் தோற்கடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி, சித்தார்த்தன் உடனடியாகவே தனது ஆதரவாளர்களுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விரைந்தோடி வருமளவுக்கு அவரை பாதித்தது. ஐந்தாவது இடத்திலிருந்த சுமந்திரன் தன்னை பதிலீடு செய்துவிட்டதாக கேள்விப்பட்டதாக அவர் அங்கிருந்த ஆட்களுக்கு கூறினார். பிரதம தெரிவத்தாட்சி அலுவலர் மகேசனுடன் பேசுவதற்காக சித்தார்த்தன் வாக்கெண்ணும் நிலையத்துக்குள் சென்றார். 

இந்த வேளையில் தர்மலிங்கத்தின் மகனிடமிருந்து வெற்றியை சுமந்திரன் அபகரித்துவிட்டார் என்று சிவாஜிலிங்கத்தின் ஒப்பாரி தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், யாருமே அவரது ரெலோ ஏன் தர்மலிங்கத்தின் உயிரை பறித்தது என்று சிவாஜிலிங்கத்தை கேட்கவில்லை. பிரதம தெரிவத்தாட்சி அலுவலருடன் மறுவாக்கு எண்ணிக்கை பற்றி சித்தார்த்தன் பேசியபோது, அவர் அளித்த பதில் புளொட் தலைவருக்கு திருப்தியை கொடுத்திருப்பது போன்று தோன்றியது. உடனடியாக அவர் அந்த இடத்திலிருந்து சந்தோஷமாக வெளியேறிவிட்டார்.

sasi.jpg

அதற்கு பிறகு 2008ஆம் ஆண்டில் கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜின் மனைவி திருமதி சசிகலா ரவிராஜ் இலக்காக மாறினார். தனது கணவரினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆதரவு தளத்தைக் கொண்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதியிலிருந்து கிடைக்கப்பெறும் வாக்குகளிலேயே சசிகலா பிரதானமாக தங்கியிருந்தார். 

சசிகலாவின் தேர்தல் பிரசாரங்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனினாலேயே கணிசமானளவு கையாளப்பட்டு வந்தது. அவர் சுமந்திரனுக்கு மிகவும் நெருக்கமான சட்டத்தரணியாவார். சயந்தன் மூன்று பேருக்காக (சசிகலா ரவிராஜ், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா) பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.

சாவகச்சேரியிலிருந்து கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை சசிகலாவை விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் மத்தியில் முன்கூட்டியே முன்னுக்கு தள்ளியது. ஒரு கட்டத்தில் அவர் முன்னிலையிலிருந்த மூன்று வேட்பாளர்களில் ஒருவராக இருந்தார். பல்கலைக்கழக பட்டதாரியான சசிகலா கொழும்பின் முன்னணி மகளிர் கல்லூரியொன்றில் ஆசிரியராக பணியாற்றியவர். 

இத்தகைய பின்புலம் இருந்தபோதிலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையுடன் பரிச்சயம் இல்லாதவராகவே அவர் இருந்தார். அதனால் முதல் மூன்று பேருக்குள் அவர் இருப்பதாக கூறி உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிலர் அவரை பாராட்டியபோது தனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக அவர் தவறாக எண்ணினார். ஆனால், உண்மை நிலை அதுவல்ல.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வெவ்வேறு இடங்களில் வாக்குசீட்டுகள் எண்ணப்பட்டு உறுதிப்படுத்தப்படுவது தெரிந்ததே. அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டு வெவ்வேறு வாக்களிப்பு பிரிவுகளிலும் சகல கட்சிகளையும் சேர்ந்த வாக்காளர்களின் முகவர்களினால் இணக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவுகள் இறுதி செய்யப்படும். பிறகு வாக்குப்பெட்டிகள் தேர்தல் மாவட்டத்தின் பிரதான வாக்கெண்ணும் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. அந்த நேரத்தில் மாவட்ட மட்டத்தில் எண்ணிக்கை விபரங்கள் பட்டியலிடப்படுகின்றன. கிடைக்கின்ற எண்ணிக்கை விபரங்கள் மீள பரிசீலிக்கப்படுவது மாத்திரமே இங்கு நடைபெறும்.

 ஒவ்வொரு வேட்பாளரும் பெறுகின்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் வருகின்ற விபரங்களை கணக்கிலெடுக்கும்போது கூடி குறையும். வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளின் நிரல் ஒழுங்கு எவர் எந்த தேர்தல் பிரிவிலிருந்து கூடுதலான ஆதரவை பெறுகிறார் என்பதை பொறுத்து மாற்றமடையும். யார்யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்ற விபரம் கடுமையாக மாற்றமடையலாம். பிரதம தெரிவத்தாட்சி அலுவலரினால் இறுதியாக அறிவிக்கப்படுகின்ற முடிவு மாத்திரமே உத்தியோகபூர்வமானது. 

 

சசிகலா ரவிராஜ் 

துரதிர்ஷ்டவசமாக திருமதி சசிகலா ரவிராஜ் விடயத்தில் நடந்தது என்னவென்றாலும், விருப்பு வாக்குகளில் தான் முன்னிலையில் நிற்பதாக கிடைத்த உத்தியோகபூர்வமற்ற தகவல் பெரும்பாலும் இறுதியானதாக இருக்கும் என்று அவர் நினைத்ததேயாகும். தான் வெற்றிப் பெற்றுவிட்டதாகவே அவர் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வரும்போது நிலைமை மாறலாம் என்று அவர் சிந்திக்கவில்லை. 

சித்தார்த்தனை சுமந்திரன் பதிலீடு செய்துவிட்டார் என்ற தவறான தகவலை பரப்பிய அதே பிரகிருதிகள் இப்போது சசிகலா ஏமாற்றப்பட்டுவிட்டார் என்றும் அவர் தனது ஆசனத்தை துறப்பதற்கு சுமந்திரன் நிர்ப்பந்தித்து விட்டார் என்றும் புதிய வதந்திகளை பரப்பினார்கள். முடிவுகள் அறிவிக்கப்படவுமில்லை. வெற்றியாளர் என்று யாரும் பிரகடனப்படுத்தப்படவுமில்லை. ஆனால், வதந்திகள் வேகமாக பரவிக் கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் சசிகலாவின் பிரதம வாக்கு எண்ணிக்கை முகவர் சயந்தனுக்கு சுமந்திரன் சசிகலாவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்துவிட்டார் என்ற தகவல் தொலைபேசி அழைப்பொன்றின்மூலம் வந்தது. அந்த நேரத்தில் சயந்தன் சசிகலாவுக்கு அருகாமையில்தான் அமர்ந்திருந்தார் ‘அவரிடமே கேளுங்கள்’ என்று அந்த தொலைபேசியை சசிகலாவுக்கு சயந்தன் கொடுத்தார். சசிகலா அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் அது வதந்தி என்றும் நிராகரித்தார். அதனால் சற்று குழப்பமடைந்த சசிகலா மற்றவர்களுடன் தொலைபேசியில் பேச ஆரம்பித்தார். 

இந்த தொலைபேசி கலந்துரையாடல்கள் அவரின் வெற்றிநிலை பற்றி ஒரு சஞ்சலமான நிலைமையை ஏற்படுத்தியது. அவர் அடிக்கடி பிரதம தெரிவத்தாட்சி அலுவலரிடம் சென்று இறுதி முடிவுகளை அறிவிப்பதற்கு ஏன் காலதாமதமாகிறது என்று கேட்கத் தொடங்கினார். இந்த நிகழ்வுகள் எல்லாம் நகர்ந்து கொண்டிருக்கையில், ‘களவெடுத்த வாக்குகள்’ மூலமாக சசிகலாவை சுமந்திரன் பதிலீடு செய்துவிட்டார் என்ற கதை பரவத் தொடங்கியது.

அதேவேளை, சுமந்திரன் தனது யாழ்ப்பாண வீட்டில் இருந்த வண்ணம் தனது முகவருடன் கிரமமாக தொடர்பு கொண்டு தனது நிலையை அறிந்த வண்ணம் இருந்தார். எல்லா தேர்தல் தொகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் சுமந்திரன் ஒன்றில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தில் வந்து கொண்டிருந்தார். அதனால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. 

ஒரு கட்டத்தில் சுமந்திரனின் உடுப்பிட்டி முகவர் லவண் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரும்பாலும் வாக்கெண்ணும் நடவடிக்கை முடிந்து கொண்டிருக்கிறது, விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார். பிறகு சுமந்திரன் உத்தியோகப்பூர்வ முடிவுகளை கேட்பதற்காக சயந்தனுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையத்துக்கு சென்றார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அவர் வந்து சேர்ந்தபோது வெளியே கூடியிருந்த கும்பல் கூச்சலிட்டது. ‘கள்ளன் கள்ளன்’ என்று அவர்கள் அடிக்கடி சத்தமிட்டார்கள். சுமந்திரன் வாக்குகளை களவெடுத்ததன் மூலம் வெற்றிப் பெறுகிறார் என்ற கதை பரவலாக பரவி விட்டது. அது யூடியூப், தொலைபேசி செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் உலகம் பூராகவும் பரவியது.

வெளிநாட்டிலுள்ள புலிகள் ஆதரவு சக்திகளினால் சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட மூன்று சதி முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சுமந்திரன் தனக்கு பாதுகாப்பை கோரியிருக்கவில்லை என்றபோதிலும், புலனாய்வுத் தகவல்களின் நம்பகத்தன்மை காரணமாக கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அவரின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப் படையை வழங்கின. 

வடக்கில் இயக்கச்சியில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக முன்னாள் இயக்கப் போராளி மரணமடைந்ததையடுத்து, அரச புலனாய்வு சேவையின் சிபாரிசின் பெயரில் சுமந்திரனுக்கு பாதுகாப்பு அளிக்கும் விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. சுமந்திரன் கலந்துகொண்டு பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் மீது எறிந்து கொலை செய்வதற்காகவே அந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

 

விசேட அதிரடிப்படை

அதிரடிப்படை வீரர்களில் சிலர் தங்களது வாகனங்களில் ஆயுதங்களை வைத்துவிட்டே நிராயுதபாணிகளாக யாழ்ப்பாண மத்திய கல்லூரி வளாகத்துக்குள் சுமந்திரனுடன் கூடச் சென்றனர். விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இல்லாதிருந்தால் சுமந்திரன் கும்பல்களினால் தாக்கப்பட்டிருப்பது மிகவும் சாத்தியம். சுமந்திரனும் சயந்தனும் உள்ளே சென்று பிரதம தெரிவத்தாட்சி அலுவலர் இருந்த இடத்துக்கு அப்பால் முடிவுகள் அறிவிக்கப்படும் பகுதியில் இருந்தனர். 

எந்தக் கட்டத்திலும் சுமந்திரன் மகேசனுடன் பேசவோ அல்லது வாக்கு எண்ணப்படும் பகுதிக்குள் பிரவேசிக்கவோ இல்லை. ஒரு கட்டத்தில் திருமதி சசிகலா ரவிராஜ் பிரதம தெரிவத்தாட்சி அலுவலருடன் பேசினார். முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்று அலுவலரிடம் அவர் கேட்கிறார் என்றே கருதப்பட்டது. பிறகு அவர் மீண்டும் வெளியே சென்றார்.

அதேவேளை, வெளியிலிருந்த கூட்டம் கிளர்ந்தெழுந்து சுமந்திரனுக்கு எதிராக சுலோகங்களை கிளப்பி அவரை ஒரு ‘வாக்கு கள்ளன்’ என்று சத்தம் போட்டது. சில நபர்கள் அப்போது வெளியில் நின்ற முன்னாள் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் சிறிதரனையும் தரக்குறைவாக ஏசத் தொடங்கினர். 

படிப்படியாக கூச்சல் மேலும் அதிகரிக்கவே கூடி நின்ற கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மத்திய கல்லூரி வளாகத்துக்குள் உணவுத் துண்டுகள், தண்ணீர் போத்தல்கள் மட்டுமல்ல சில கற்களும் கூட வீசப்பட்டன. சுமந்திரன் தனக்கு அனுகூலமான முறையில் விருப்பு வாக்குகளை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார் என்ற கதை மிகவேகமாக பரவியது. 

கும்பல்கள் அப்போது வாக்கு எண்ணிக்கை நிலைய வளாகத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்தது. சுமந்திரனால் செய்யப்படுவதாக கூறப்பட்ட மோசடியை தடுப்பதே அந்த கும்பலின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அது ஒரு பாரதூரமான நிலைவரமாக இருந்தது. கும்பல்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து வாக்குப் பெட்டிகளை அபகரித்திருந்தால் முழு யாழ்ப்பாண மாவட்டத்தினதும் தேர்தல் ஆபத்துக்குள்ளாகியிருக்கும். தவிரவும், அவசியமானால் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அத்தகைய தீவிர நடவடிக்கையில் இறங்கவில்லை. அத்தகைய அவசரகால நிலைமைகளை சமாளிக்க நின்று கொண்டிருந்த பொலிஸ் கலகம் அடக்கும் படையினரையும் அதிரடிப்படையினரையும் அவர் அழைத்தார். சுமந்திரன் பாதுகாப்புக்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையில் சம்பந்தப்படவில்லை. 

அவர்களினால் மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் குழப்பநிலையை அடக்கி கும்பல்களை கலைக்கக்கூடியதாக இருந்தது. ‘இறப்பர் துப்பாக்கி ரவைகளையோ கண்ணீர் புகை குண்டையோ பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை. கும்பல்கள் அரக்கபறக்க ஓடி ஒரு கணத்தில் கலைந்து விட்டனர்’ என்று சம்பவ இடத்தில் நின்று நிலைமைகளை நேரடியாக அவதானித்துக்கொண்டிருந்த ஒருவர் என்னிடம் கூறினார். 

இந்தக் குழப்பநிலைகளை உருவாக்கிய கும்பல்களில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த பிரகிருதிகள் இருந்தார்கள் என்பதை தகவல் அறிந்த பாதுகாப்பு வட்டாரம் மூலம் தெரிந்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. ஏனையவர்கள் சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர்களும் தமிழ் காங்கிரஸை ஆதரிப்பவர்களாகவும் இருந்தனர். 

கும்பல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர்களின் ஆதரவாளர்களும் இருந்ததாக அடையாளம் காணப்பட்டது மிகவும் விசித்திரமான ஒன்றாகும். அந்த கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டது இன்னொரு முக்கியமான பேர்வழி ஊர்காவற்துறை தொகுதியை சேர்ந்த கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் என்றும் அவர் கட்சியுடன் தொடர்புடைய பிரபல தமிழ் வழக்கறிஞர் ஒருவரின் கையாள் என்றும் கூறப்பட்டது.

கும்பல் கலைந்துசென்ற பிறகு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஒருவர் தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவு மேலும் தாமதமாகும் என்று சுமந்திரனுக்கு அறிவித்தார். அதனால் சுமந்திரன் இன்னொரு வாயிலினூடாக வளாகத்தை விட்டு வெளியேறினார். அந்தப் பகுதியில் நின்ற சில நபர்கள் சுமந்திரனை கண்டதும் அவரை நோக்கி ஓடிச்சென்று ‘கள்ளன் கள்ளன்’ என்று மீண்டும் மீண்டும் சத்தம் போட்டனர். கடமையிலிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அவர்களை விரட்டி கலைத்தனர். சுமந்திரன் வீட்டுக்கு கிளம்பி உத்தியோகபூர்வ முடிவுகளின் அறிவிப்புக்காக காத்திருந்தார்.

 

எழுவரில் மூவர்

முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏழு ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் வீட்டு சின்னத்தின் கீழ் தமிழரசுக் கட்சியாக போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிதரன்(35,884), சுமந்திரன்(27,834) மற்றும் சித்தார்த்தன்(23,840) ஆகியோர் அவர்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எம்.பி.க்களாக தெரிவு செய்யப்பட்டனர். சசிகலா ரவிராஜுக்கு 23,098 வாக்குகள் கிடைத்து அவர் நான்காவதாக வந்தபோதும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. சரவணபவனும்(20,392) சேனாதிராஜாவும் (20,358) ஐந்தாவதாகவும் ஆறாவதாகவும் வந்தனர். 

பின்னர் ஊடகங்களிடம் பேசிய சுமந்திரன் பருத்தித்துறை, உடுப்பிட்டி மற்றும் நல்லூர் தொகுதிகளில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் தான் முதலாவதாக வந்ததாகவும் ஏனைய தொகுதிகள் சகலதிலும் இரண்டாவதாக வந்ததாகவும் கூறினார். சிறிதரன் பெற்ற வாக்குகளில் சுமார் இருபதாயிரம் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தை சேர்ந்ததாக இருந்த அதேவேளை, தனக்கு சுமார் 21,000 வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிடைத்ததாகவும் சுமந்திரன் கூறுகிறார். இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களினால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான வாக்குகளாகும்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து போராடி சுமந்திரன் அவருக்கு தகுதியான வெற்றியை பெற்றபோதும், அந்த வெற்றியை மகிழ்ச்சியாக அனுபவிக்க அவரால் முடியவில்லை. சசிகலா ரவிராஜ் தெரிவுசெய்யப்பட தவறிவிட்டார். அவர் எடுத்த விருப்பு வாக்குகள் மூன்றாவதாக வந்து எம்.பி.யாக தெரிவான சித்தார்த்தன் பெற்ற விருப்பு வாக்குகளையும் விட 742 வாக்குகள் குறைவானதாகும். 

வழமையாக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்கு உடனடியாகவே மேலே இருக்கின்ற வேட்பாளருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள். ஆனால், இங்கு சசிகலா முறைப்பாடு செய்தாராக இருந்தால் சித்தார்த்தனுக்கு எதிராகத்தான் அதை செய்திருக்க வேண்டும். ஆனால், சசிகலாவும் அவரது மகளும் அவரை விட 4700 வாக்குகள் கூடுதலாகப் பெற்ற சுமந்திரனையே குற்றம் சாட்டத் தொடங்கினார்கள்.

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையுடன் உண்மையில் என்ன நடந்தது என்பதை பின்வருமாறு கூறினார். கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வாக்குகளில் பெருமளவானவை வெகு முன்னதாகவே வந்துவிட்டன. இதனால் சிறிதரனும் சசிகலாவும் முன்கூட்டியே முன்னிலைக்கு வரக்கூடியதாக இருந்தது. கூட்டமைப்பின் சிறிதரன் முதலாவதாகவும் சசிகலா இரண்டாவதாகவும் 20,000 வாக்கு பெற்று முன்னிலையில் நின்றனர்.

 ஆனால் மற்ற வாக்குகள் வந்துசேரத் தொடங்கியதும் சசிகலாவின் மொத்த வாக்குகள் குறையத் தொடங்கிய அதேவேளை, சுமந்திரன் சசிகலாவை முந்திச் சென்று சிறிதரனுக்கு அடுத்ததாக வந்தார். அப்போது சசிகலா மூன்றாவது இடத்திலேயே இருந்தார். மீண்டும் கோப்பாய் மற்றும் மானிப்பாய் வாக்குகள் வந்ததும் சித்தார்த்தனின் வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கி அவர் சுமார் 700 வாக்குகளினால் சசிகலாவை முந்தினார்.

சுமந்திரன் தனது வெற்றியை அபகரித்துவிட்டார் என்ற தொனியில் சசிகலா சில கருத்துகளை வெளியிட்டார். வெற்றிப் பெற்றதற்காக தான் வாழ்த்தப்பட்டதாகவும் ஆனால் சுமந்திரன் வாக்கெடுப்பு நிலைய வளாகத்துக்குள் பிரவேசித்த பொழுது தனது வெற்றிநிலையை தான் திடீரென இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். 

லண்டனில் படித்து சட்ட பட்டதாரியான சசிகலாவின் மகள் பிரவீனா சுமந்திரனுக்கு எதிராக வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டார். அவரின் குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்று நல்ல சிந்தனையுள்ள நபர்கள் சிலர் சுட்டிக்காட்டியபோது பிரவீனா அநாவசியமான முறையில் குற்றச்சாட்டுக்கு மேலாக குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனார்.

சசிகலாவும் மகளும் அழுத காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தவறான குற்றச்சாட்டுகள் உலகம் பூராகவும் விரிவாக பிரசாரப்படுத்தப்பட்டன. அடுத்து விரைவாகவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சுமந்திரனுக்கு எதிராக பெரிய பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. சசிகலாவிடமிருந்து வாக்குகளை களவெடுத்து சுமந்திரன் வென்றுவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. காலஞ்சென்ற ரவிராஜின் நெருங்கிய உறவுக்காரி என்று கூறிக்கொண்ட ஒரு பெண்மணி, சாவகச்சேரியில் இருக்கும் அவரது சிலைக்கு முன்பாக சசிகலா எம்.பி.யாக தெரிவு செய்யப்படும் வரை தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். 

ரவிராஜின் சிலையின் முகத்தை அவர் கறுப்பு துணியால் மூடியும் இருந்தார். இன்னொரு வெட்கக்கேடான திருப்பமாக சிவாஜிலிங்கமும் அனந்தி சசிதரனும் அங்கஜன் ராமநாதனும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சுமந்திரனை கண்டிக்கவும் தொலைக்காட்சி கெமராவுடன் சசிகலா வீட்டுக்கு சென்றனர். சுமந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சசிகலாவை வலியுறுத்திய அவர்கள், தாங்கள் அதற்கான செலவுகளை பார்த்துக்கொள்வதாகவும் கூறினர். சசிகலா அது விடயத்தில் எதுவும் கூறாது இருந்துவிட்டார்.

 

முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம்

ஒருசில நாட்களுக்கு பிறகு தனது முன்னைய நிலைப்பாட்டை சசிகலா மாற்றிக்கொண்டார் போல தெரிகிறது. சுமந்திரனை தான் குற்றம் சாட்டவில்லை என்று கூறினார். விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தியதை மாத்திரமே தான் கண்டித்ததாகவும் அவர் கூறினார். சிறிதரன், சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோரை பாராட்டி சசிகலா தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் செய்தார். 

சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தின் பிரதான ஊற்றுமூலமாக விளங்கிய பிரவீனாவின் முகநூல் பக்கம் திடீரென்று செயலிழந்தது. சுமந்திரன் மீது தவறான முறையில் தாங்கள் குற்றம் சாட்டியதை ரவிராஜ் குடும்பம் புரிந்து கொண்டது போல் தெரிகிறது. இருந்தாலும் ஏற்படுத்தப்பட்ட சேதம் எளிதில் சீர்செய்யக் கூடியதல்ல. ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மிகவும் அநீதியான முறையில் சுமந்திரன் தூற்றப்பட்டார்.

மீண்டும் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்ட சுமந்திரனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் வெற்றியின் பிரகாசத்தை இல்லாமல் செய்யவும் இந்த சம்பவத்தை சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்தியிருக்கின்றன. வெற்றி பெறுவதிலிருந்து சுமந்திரனை தடுக்க தவறிய இந்த பரிதாபகரமான சக்திகள் அவரது நியாயபூர்வமான வெற்றியை சட்டப்பூர்வமற்றதாக்க கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றன.

https://www.virakesari.lk/article/88228

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி
பெரிய ஐயா சொல்லிப் போட்டார்.
எல்லாரும் நடையை கட்டுங்கோ.
ம் போங்கோ போங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வெவ்வேறு இடங்களில் வாக்குசீட்டுகள் எண்ணப்பட்டு உறுதிப்படுத்தப்படுவது தெரிந்ததே. அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டு வெவ்வேறு வாக்களிப்பு பிரிவுகளிலும் சகல கட்சிகளையும் சேர்ந்த வாக்காளர்களின் முகவர்களினால் இணக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவுகள் இறுதி செய்யப்படும். பிறகு வாக்குப்பெட்டிகள் தேர்தல் மாவட்டத்தின் பிரதான வாக்கெண்ணும் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. அந்த நேரத்தில் மாவட்ட மட்டத்தில் எண்ணிக்கை விபரங்கள் பட்டியலிடப்படுகின்றன. கிடைக்கின்ற எண்ணிக்கை விபரங்கள் மீள பரிசீலிக்கப்படுவது மாத்திரமே இங்கு நடைபெறும்

இப்படியெல்லாம் எழுத   ஒருவர்  இருக்கின்றார்.
இவர் எல்லாம் ஒரு ஆய்வாளர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்பா ...மாத்தையாவின் எழுத்திற்கு சுத்ததுமாத்தின் அடிவருடிங்களுக்கு வரும் புளங்காகித புல்லரிப்பு அப்பப்பா ..அதுசரி மாத்தையா தனது வாயாலேயே தானொரு வாக்குக்கள்ளன் என்று சொன்ன சிறீதரனின் ஸ்டேட்மண்டையே  கண்டுக்காமல்  சுத்துமாத்தோட சேர்த்து வெள்ளையடிப்பதன் நோக்கம் ...? வலு சிம்பிள் புரிஞ்சவன் பிஸ்தா, புரியாதவனுக்கு வழமை  போலவே அவியல்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 21:48, பிழம்பு said:

சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தின் பிரதான ஊற்றுமூலமாக விளங்கிய பிரவீனாவின் முகநூல் பக்கம் திடீரென்று செயலிழந்தது. சுமந்திரன் மீது தவறான முறையில் தாங்கள் குற்றம் சாட்டியதை ரவிராஜ் குடும்பம் புரிந்து கொண்டது போல் தெரிகிறது. இருந்தாலும் ஏற்படுத்தப்பட்ட சேதம் எளிதில் சீர்செய்யக் கூடியதல்ல. ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மிகவும் அநீதியான முறையில் சுமந்திரன் தூற்றப்பட்டார்.

 

பிரவீனா ரவிராஜ் தனது முகநூல் பக்கத்தை இப்போது செயலிழக்க வைத்தது எதற்காகவாம் இவரும் எதிர்காலத்தில்  பாராளுமன்ற உறுப்பினராக செல்லும் தனது தகுதியை இழந்துவிட்டார்

Link to comment
Share on other sites

2004 தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் போது விடுதலை புலிகள் தொலைபேசி மூலமே பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களை மாற்றியதாக சிவாஜிலிங்கமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குற்றம் சாட்டியதாக இந்த காணொலியில் சித்தார்த்தன் சொல்கிறாரே? இப்படி புலிகள் செய்தார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

2004 தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் போது விடுதலை புலிகள் தொலைபேசி மூலமே பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களை மாற்றியதாக சிவாஜிலிங்கமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குற்றம் சாட்டியதாக இந்த காணொலியில் சித்தார்த்தன் சொல்கிறாரே? இப்படி புலிகள் செய்தார்களா?

It's up to you...எங்களுக்கு அவசியமே இல்லை 
நம்பினீர்கள் என்றால் இவ்வளவு வீக்கான தேர்தல்  கட்டமைப்பில் சுத்துமாத்து செய்யவே முடியாது என்று கற்பனை உலகில் வாழும் அடிவருடிகள் தங்களது கனவிலிருந்து விழித்தெழுந்து யாதார்த்தை உணர வேண்டிவரும். அதாவது  உங்கள் ஆளை நீங்களே கொலரை பிடிப்பதுபோல.

இல்லை வாய்ப்பே இல்லையென்றால் புலிகளும் safe உங்கடை ஆளும் safe . என்ன பண்ணப்போறீகள் ....?

பி .கு :பிறகு ஒவ்வொருத்தரா(சம்மு, சித்தார்த்தன்,,கள்ளவாக்கு சிறிதரன்,மாவை, கூவை) எல்லாம் மொள்ளமாரிகளா என்று தூக்கி கொண்டு வரதீங்கோ உங்கடை ஆளைப்போல் மொத்த கூத்தமைப்பே கடைந்தெடுத்த மொள்ளமாரிகள் தான் என்றபடியால்  எல்லோருக்கும் ஒரே படியால் தான் அளவை     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொய் உண்மை போல் தெரியணும் என்றால் கொஞ்ச உண்மைகளும் கலந்து இருக்கணும் டி பி ஸ் இந்த கட்டுரை அந்த கொஞ்ச உண்மைகளையும் காணவில்லை முன்னைய புலி கட்டுரைகள் அப்படித்தான் இது மகா கேவலம் கள்ளவாக்கு சுமத்திரனின் சொந்தகாரர் பாவம் பொய்யை உண்மையாக்க படாத பாடு படுகிறார் .சும்மின் செல்வாக்கால் திரும்பவும் சொறிலங்கா வரலாம் என்று நினைக்கிறார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி பி எஸ் தனது சகலனை எப்பவும் விட்டுக்கொடுக்கமாட்டார் தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது பக்கத்திலும்(பொதுமக்கள் தரப்பில்) யுத்தத்திற்கு கொடுத்த முன்னுரிமையை சமாதானத்திற்குக்/பேச்சுவார்த்தைக்குக் கொடுக்கவில்லை எனத் தோன்றுகிறது.  2005 பேச்சுவார்த்தை முறிவடைந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்திற்கு முன்னுரிமை கொடுக்கும்படி இருபகுதிப்  பொதுமக்களும் போராடியிருந்தால் நாட்டின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.  🥲😥😥
    • Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 10:59 AM   தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலின்  இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது இது ஒரு இனப்படுகொலை என பலர் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் யுத்தசூன்யவலயத்தில் கண்மூடித்தனமான குண்டுவீச்சினை மேற்கொண்டது படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்தாயகப்பகுதிகளான வடக்குகிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடரும் ஒடுக்குமுறைகளை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பிரிட்டன் தெளிவான எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திரமான வெளிப்படையான ஜனநாயக சமூகத்தில் மக்கள் நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடமுடியாது சுதந்திரமான நியாயமான ஜனநாயகத்தில் நீங்க்ள இதனை செய்யவேண்டும் என கொல்பேர்ன் தெரிவித்துள்ளார். ஓவ்வொருவருடமும் நாங்கள் இதனை கேள்விப்படுகின்றோம் நினைவேந்தல் குழப்ப்படுவது குறித்த கதைகளை கேட்கின்றோம் மக்கள் காரணமில்லாமல் கைதுசெய்யப்படுகின்றனர் இதன் காரணமாக இதனை நிறுத்தவேண்டும் என்ற வலுவான செய்தியை பிரிட்டன் தெரிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2009 இல் இடம்பெற்ற சம்பவங்களை இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்வதற்கான தேவை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இதற்கான முயற்சிகளில்  தானும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். tamil guardian https://www.virakesari.lk/article/183220
    • கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்   11 MAY, 2024 | 06:56 PM   கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.  வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர். இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.  https://www.virakesari.lk/article/183271
    • 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில்  இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வானது எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 03.00 மணி வரை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் நினைவேந்தல் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி நடைபெறும் குருதிக்கொடையில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/blood-donation-jaffna-uni-mullivaikal-memorial-1715440182
    • இரானில் இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராளியை பூட்டிய வேனுக்குள் காவல்படை என்ன செய்தது? பிபிசி புலனாய்வு பட மூலாதாரம்,ATASH SHAKARAMI படக்குறிப்பு,இரானில் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் போது நிக்கா காணாமல் போன போது அவருக்கு வயது 16. கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ட்ரம் ஹில், ஐடா மில்லர் & மைக்கேல் சிம்கின் பதவி, பிபிசி ஐ இன்வஸ்டிகேஷன்ஸ் 11 மே 2024, 13:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இரானின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் மூன்று ஆண்களால் பதின்பருவ பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் இரான் பாதுகாப்புப் படையினரால் எழுதப்பட்டதாகக் கசிந்த ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 இல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது காணாமல் போன 16 வயது பெண் நிக்கா ஷகராமிக்கு என்ன நடந்தது என்பது இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நிக்கா தற்கொலை செய்து கொண்டதாக அரசாங்கம் கூறியது. இந்த ஆவண அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை குறித்து இரானின் அரசாங்கம் மற்றும் அதன் புரட்சிகர காவல் படையிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. "மிகவும் ரகசியமானது" எனக் குறிப்பிடப்பட்ட இந்த ஆவண அறிக்கையில் நிக்கா ஷகராமி வழக்கில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) மேற்கொண்ட விசாரணை குறித்து சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நிக்காவை கொன்றவர்களின் பெயர்களும் உண்மையை மறைக்க முயன்ற மூத்த தளபதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், அன்று என்ன நடந்தது, நிக்கா எப்படி கொல்லப்பட்டார் என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்ட தகவல்கள் மனதை உலுக்குகிறது. போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் நிக்காவை தடுத்து நிறுத்தி, ரகசிய வேனுக்கு இழுத்துச் சென்றனர். காவலர்களில் ஒருவர் நிக்காவை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார். நிக்காவுக்கு கைவிலங்கிடப்பட்டு இருந்தாலும், காவலர்களுக்கு எதிராக கால்களை உதைத்தும் கூச்சலிட்டும் தன் எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களை எதிர்த்துப் போராடியதால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் நிக்காவை தடியால் அடித்துள்ளனர். நிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அடித்து துன்புறுத்தினோம் என காவலர்கள் விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் நம்பகத்தன்மை உடையதா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. காரணம், ஏராளமான போலியான இரானிய ஆவணங்கள் புழக்கத்தில் உள்ளன. எனவே பிபிசி, இந்த ஆவணத்தில் இருக்கும் தகவல்களை, பல ஆதாரங்களை ஒப்பிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் பல மாதங்கள் சரிபார்த்தது. எங்கள் விரிவான விசாரணைகளுக்குப் பிறகு எங்கள் கைக்குக் கிடைத்துள்ள இந்த ஆவணங்கள் பதின்பருவ பெண் நிக்காவுக்கு நடந்தவற்றை விவரிக்கின்றன என்பதை உறுதி செய்தோம்.   நிக்காவை கண்காணித்த பாதுகாப்புப் படை பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,நிக்கா தனது சகோதரி ஐடா உடன் இருந்த புகைப்படம். நிக்கா ஷகராமி காணாமல் போனது முதல் மரணித்த தகவல் வரை பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அவரது புகைப்படம் இரானில் சுதந்திரத்திற்காக பெண்கள் நடத்திய போராட்டத்தின் முகமாக மாறியது. 2022 இல் இலையுதிர் காலத்தில் இரான் முழுவதும் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். ”கட்டாய ஹிஜாப்” தொடர்பான கடுமையான விதிகளால் கோபமடைந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். `பெண், வாழ்க்கை, சுதந்திரம்’ என்ற இயக்கம் சில நாட்களுக்கு முன்பு 22 வயது பெண் மாசா அமினியின் மரணத்தால் வெகுண்டெழுந்தது. 'மாசா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி, போலீஸ் காவலில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார்.’ என்று ஐ.நா உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. நிக்காவின் வழக்கில், போராட்டத்திலிருந்து காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது உடல் சவக்கிடங்கில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், இரான் அதிகாரிகள் நிக்காவின் மரணம் போராட்டத்தின் போது ஏற்பட்டது என்று கூறி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்தனர். செப்டம்பர் 20 அன்று மாலை, நிக்கா காணாமல் போவதற்கு சற்று முன்பு, மத்திய தெஹ்ரானில் உள்ள லாலே பூங்காவிற்கு அருகில், குப்பைத்தொட்டி பக்கத்தில் நின்றபடி ஹிஜாப்களுக்கு தீ வைத்துப் போராட்டம் நடத்தியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரைச் சுற்றியிருந்த மற்றவர்கள் இரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி-யைக் குறிப்பிட்டு "சர்வாதிகாரி ஒழிக" என்று கோஷமிட்டனர். அந்த நேரத்தில் நிக்கா தான் கண்காணிக்கப்படுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. போராட்டம் தொடங்கியதில் இருந்தே பாதுகாப்புப் படையினர் நிக்காவை கண்காணித்ததாக ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது.   அறிக்கையில் இருப்பது என்ன? இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தலைமைத் தளபதியின் கூற்றுப்படி, போராட்டத்தை பல ரகசிய பாதுகாப்புப் பிரிவுகள் கண்காணித்தன. அந்த குழுக்களுடனான விரிவான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த ஆவணத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரகசிய பாதுகாப்பு குழுக்களில் ஒன்றுதான் டீம் 12. நிக்காவின் வழக்கத்திற்கு மாறான நடத்தை, அவரது மொபைல் ஃபோனுக்கு திரும்பத் திரும்ப வந்த அழைப்புகள் என அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே, `இந்த பதின்வயது பெண் தான் போராட்டத்தைத் தலைமை தாங்குகிறார்’ என பாதுகாப்புப் படை எண்ணியது. நிக்கா உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் தலைவர்களில் ஒருவரா என்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவரை போராட்டக் களத்துக்குள் அனுப்பி, போராளியாக நடிக்க வைத்தனர். பின்னர், அறிக்கையின்படி, அந்த காவலர் அவரை கைது செய்ய தனது குழுவை அழைத்தார். ஆனால் நிக்கா அந்த சமயத்தில் தப்பி விட்டார். பாதுகாப்புப் படையினரால் தான் துரத்தப்படுவதாக நிக்கா அன்றிரவு தனது நண்பருக்கு அலைபேசியில் தெரிவித்ததாக அவரது அத்தை பிபிசி பாரசீகத்திடம் கூறியிருந்தார். ஒரு மணிநேர தீவிரத் தேடுதல் பணிக்கு பின்னர், நிக்காவை அவர்கள் கைது செய்ததாக அறிக்கை கூறுகிறது. அவர் அக்குழுவின் ஃப்ரீசர் பொருந்திய ஒரு வாகனத்துக்குள் அடைக்கப்பட்டார். வாகனத்துக்கு முன்புறம் ஓட்டுநருடன் ”டீம் 12” குழுவின் தலைவர் மோர்டேசா ஜலீல் அமர்ந்து கொண்டார். அராஷ் கல்ஹோர், சதேக் மொன்ஜாசி மற்றும் பெஹ்ரூஸ் சதேகி ஆகிய அக்குழுவின் காவலாளிகள் மூன்று பேருடன் நிக்கா வாகனத்தின் பின்பகுதியில் இருந்தார். ”டீம் 12” குழு நிக்காவை எங்கு அழைத்துச் செல்வது என்று தெரியாமல் வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்கள் அருகில் இருந்த ஒரு தற்காலிக போலீஸ் முகாமில் விட முயற்சித்தார்கள். ஆனால் அங்கு போராளிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எனவே அவர்கள் 35 நிமிட பயண தூரத்தில் உள்ள போராட்ட தடுப்பு மையத்திற்குத் கொண்டு செல்ல திட்டமிட்டனர், அந்த தடுப்பு நிலைய தளபதி ஆரம்பத்தில் நிக்காவை அனுமதிக்க ஒப்புக்கொண்டாலும் பின்னர் மறுத்துவிட்டார். அந்த தளபதி புலனாய்வு விசாரணையின் போது கூறிய தகவல்களாக அறிக்கையில் , `நிக்கா என்ற பெண் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டார். தடுப்பு நிலையத்தில் ஏற்கனவே பல பெண் போராளிகளை பிடித்து வைத்திருக்கிறோம். நிக்கா இங்கு அழைத்து வரப்பட்டால் போராளிகளை தூண்டி, கோஷமிட வைப்பார், எனவே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.   ’நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்’ பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை - கோப்புப்படம் தலைவர் மோர்டேசா ஜலீல் மீண்டும் தனது IRGC தலைமையகத்தை ஆலோசனைக்காக தொடர்பு கொண்டதாக அறிக்கை கூறுகிறது. நிக்காவை தெஹ்ரானின் மோசமான எவின் சிறைச்சாலைக்கு அனுப்புமாறு உத்தரவு கிடைத்துள்ளது. அங்கு பயணிக்கும் சமயத்தில், வழியில், வாகனத்தின் இருண்ட பின்புறப் பெட்டியிலிருந்து சத்தம் கேட்கத் தொடங்கியது என்கிறார் மோர்டேசா. அவர் கேட்ட சத்தம் எதனால் வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நிக்காவைக் காவலில் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து ஆவணம் செய்யப்பட்ட தகவல்கள் வாயிலாக அங்கு நடந்தது விவரிக்கப்பட்டது. மூவரில் ஒருவரான பெஹ்ரூஸ் சதேகி விசாரணையில் கொடுத்த தகவலின்படி, “தடுப்பு மையத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டவுடன், நிக்கா திட்டவும் கத்தவும் தொடங்கினார். அராஷ் கல்ஹோர் தன் காலுறைகளால் அவளது வாயை அடைத்தார், ஆனால் அவர் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். பிறகு சதேக் [மோன்ஜாசி] அவரை வாகனத்தில் இருந்த ஃப்ரீஸர் பெட்டி மீது கிடத்தி, அவர் மீது ஏறி அமர்ந்தார். நிக்கா அமைதியானார்" என்று அவர் புலனாய்வாளர்களிடம் கூறினார். "என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் திட்ட ஆரம்பித்தார், அங்கு இருட்டாக இருந்ததால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை, எனக்கு தாக்கிக் கொள்ளும் சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது." என்றார். அதன் பின்னர் அராஷ் கல்ஹோர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. படக்குறிப்பு,இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து) அராஷ் கல்ஹோர் ”எனது ஃபோன் டார்ச்சை ஆன் செய்து பார்த்த போது, சதேக் மொன்ஜாசி ’நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்’. அதன் பிறகு நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம்” என்று விவரித்தார். "அதன் பின்னர் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை... ஆனால் நிக்காவை தாக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் கைகளால் அடிக்கவும், கால்களால் உதைக்கவும் தொடங்கினேன், நான் எங்கள் குழுவினரைத் தாக்குகிறேனா அல்லது நிக்காவை தாக்குகிறேனா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது.” என்றார். ஆனால் அராஷ் கல்ஹோரின் கூற்றுக்கு சதேக் மோன்ஜாசி முரண்பட்டார். “தொழில்முறை பொறாமையால் அவர் அப்படி சொல்கிறார். நிக்கா கால்சட்டைக்குள் நான் கை வைக்கவில்லை.” என்றார். ஆனால் நிக்கா மீது அமர்ந்து அவரின் பின்புறத்தை தொட்டபோது அவர் "பாலியல் உணர்வு" அடைந்ததை மறுக்க முடியாது என்று புலனாய்வு விசாரணையில் ஒப்புக்கொண்டார். நிக்கா எரிச்சல் ஆகி, அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த போதிலும் - தன் மீது அமர்ந்திருந்த காவலாளியை நகங்களால் கீறியிருக்கிறார். தன் உடலை உலுக்கி காவலாளியை கீழே விழ செய்திருக்கிறார்.   படக்குறிப்பு,இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து) நிக்காவுக்கு நடந்தது என்ன? "நிக்கா என் முகத்தின் மீது எட்டி உதைத்தார், அதனால் நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது." என்று சதேக் மோன்ஜாசி கூறியுள்ளார். வாகனத்தின் கேபினில் இருந்து, மோர்டேசா ஜலீல் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னார். வாகனத்தை நிறுத்தி பின்பக்கக் கதவை திறந்து பார்த்த போது, நிக்காவின் உயிரற்ற உடல் கிடந்தது. அவரின் முகம் மற்றும் தலையில் இருந்து ரத்தத்தை சுத்தம் செய்ததாக மோர்டேசா கூறினார். நிக்காவின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் காணப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நிக்காவின் தாய் தனது மகளை சவக்கிடங்கில் பார்த்தபோது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக சொன்னதும் மோர்டேசா சொன்னதும் ஒத்துப் போகிறது. மேலும் நிக்காவின் இறப்புச் சான்றிதழ் - அக்டோபர் 2022 இல் பிபிசி பெர்சியனால் பெறப்பட்டது - அதில் "கடினமான பொருளால் தாக்கப்பட்ட பல காயங்கள்" அவர் உடலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ”டீம் 12” தலைவர் மோர்டேசா ஜலீல், ”வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை நடத்த முயற்சிக்கவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். "நான் நிக்காவின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன், யாரிடமும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் கேட்டது ஒரே கேள்வி தான் . `அவள் மூச்சுவிடுகிறாளா’ என்றேன், அதற்கு 'இல்லை, அவள் இறந்துவிட்டாள்' என்று பெஹ்ரூஸ் சதேகி பதிலளித்தார் என்று நினைக்கிறேன்." என மோர்டேசா ஜலீல் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட சடலத்துடன், ஜலீல் மூன்றாவது முறையாக IRGC இன் தலைமையகத்தை அழைத்தார். இம்முறை, "நயீம் 16" என்ற குறியீட்டுப் பெயருடன் கூடிய மூத்த அதிகாரியிடம் பேசினார். நயீம் 16 விசாரணையில், "எங்கள் நிலையங்களில் ஏற்கனவே இறப்புகள் ஏற்பட்டிருந்தன, மேலும் அந்த இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயருவதை நான் விரும்பவில்லை. எனவே இங்கு நிக்காவின் சடலத்தைக் கொண்டு வர நான் ஒப்புக் கொள்ளவில்லை” என்றார். அவர் ஜலீலிடம் "அந்த சடலத்தை தெருவில் தூக்கி எறிந்து விடுங்கள்" என்று கூறியிருக்கிறார். தெஹ்ரானின் யாதேகர்-இ-எமாம் நெடுஞ்சாலையின் கீழ் ஒரு அமைதியான தெருவில் நிக்காவின் உடலை விட்டுச் சென்றதாக ஜலீல் குறிப்பிட்டிருக்கிறார். `வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதால் அடிதடி சூழல் ஏற்பட்டது. டீம் 12 குழுவின் தாக்குதல்கள் நிகாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது” என்று இந்த விசாரணை முடிவில் கூறப்பட்டுள்ளது. "மூன்று தடிகள் மற்றும் மூன்று டேசர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் எந்த ஆயுதத்தின் அடி அவளை மரணிக்க வைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்று அந்த அறிக்கை கூறுகிறது. நிக்காவிற்கு என்ன நடந்தது என்ற அரசாங்கத்தின் கூற்றுடன் இந்த அறிக்கை முரண்படுகிறது. அவரின் இறுதிச் சடங்கிற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவுகளை ஒளிபரப்பியது. நிக்கா ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து இறந்ததாக செய்தி வெளியிட்டது. நிக்கா ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதை போன்ற சிசிடிவி காட்சி அடங்கிய காணொளி செய்தியில் காட்டப்பட்டது, ஆனால் நிக்காவின் தாயார் பிபிசி பெர்ஷியனுக்கு ஒரு தொலைபேசி பேட்டியில் " அந்த நபர் நிக்கா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை" என்று கூறினார். பிபிசி ஆவணப்படத்தில் போராளிகளின் மரணங்கள் குறித்து அதிகாரிகள் கூற்றுகளை பற்றி விவாதிக்கையில் நஸ்ரின் ஷகராமி "அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்," என்று கூறினார்.   சகோதரி கைது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெஸ்பொல்லா அமைப்பு: கோப்புப்படம் பிபிசி ஐ (BBC Eye), இந்த விசாரணை அறிக்கையின் உண்மைத்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்தது. சில சமயங்களில், அதிகாரப்பூர்வ இரானிய ஆவணங்கள் மற்றும் இணையத்தில் புழக்கத்தில் உள்ள பிற ஆவணங்கள் கூட போலியானவை என்று கண்டறியப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த போலி ஆவணங்களில் பெரும்பாலானவை எளிதில் பொய்யானது என கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏனெனில் அந்த அறிக்கைகள் அதிகாரப்பூர்வ வடிவமைப்பில் இருந்து வேறுபடுகின்றன - பிழையான தலைப்பு, அல்லது குறிப்பிடத்தக்க இலக்கண அல்லது எழுத்துப் பிழைகளை கொண்டிருக்கின்றன. எங்கள் விசாரணையை மையப்படுத்திய ஆவணத்திலும் இதுபோன்ற சில முரண்பாடுகள் இருந்தன. உதாரணமாக, அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட "நஜா" போலீஸ் படை அந்த காலகட்டத்தில் "ஃபராஜா" என்று அழைக்கப்பட்டது. எனவே, ஆவணத்தின் உண்மைத்தன்மையை மேலும் சோதிக்க, நூற்றுக்கணக்கான முறையான ஆவணங்களை கையாண்ட அனுபவம் மிக்க முன்னாள் இரானிய உளவுத்துறை அதிகாரியிடம் கொடுத்தோம். அவர் IRGC நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். இரானில் உள்ள மூத்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ குறியீட்டைப் பயன்படுத்தி - இந்த அறிக்கை உண்மையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கை பற்றியதா என்பதை சரிபார்க்க சொன்னார். அந்த ரகசிய அறிக்கை, 2022 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான 322 பக்க வழக்கு கோப்பின் ஒரு பகுதி என்று அறிக்கையின் எண் காட்டியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 100% உறுதியாக இருக்க முடியாது என்றாலும், இது உண்மையானது என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது. IRGC-ஐ அவர் தனிப்பட்ட முறையில் அணுகியது மற்றொரு மர்மத்தை விலக்கவும் எங்களுக்கு உதவியது. நிக்காவின் உடலைத் தூக்கி எறியுமாறு குழுவிடம் கூறிய அந்த "நயீம் 16" இன் அடையாளம் தெரியவந்தது. அந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றொரு அழைப்பு மேற்கொண்டு நயீம் 16 யாரின் குறியீடு என்பதை கேட்டறிந்தார். இந்த முறை இரானின் இராணுவ அமைப்பில் உள்ள ஒருவருக்கு அழைப்பு விடுத்து. நயீம் 16 ஐஆர்ஜிசியில் பணிபுரியும் கேப்டன் முகமது ஜமானிக்கான அழைப்பு அடையாளம் என்ற தகவலை எங்களுக்கு சொன்னார். நிக்காவின் மரணம் தொடர்பான ஐந்து மணி நேர விசாரணையில் கலந்து கொண்டவர்களில் ஒருவராக அந்தப் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையை குறிப்பிட்டு, நாங்கள் ஐஆர்ஜிசி மற்றும் இரான் அரசாங்கத்திடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். அவர்கள் பதிலளிக்கவில்லை. எங்களுக்குத் தெரிந்தவரை, நிக்காவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை, அது ஏன் என்று அந்த ரகசிய ஆவணத்தை பார்த்தாலே யூகிக்க முடியும். விசாரணைக்கு வந்த டீம் 12 குழு உட்பட அனைவரின் பெயர்களும் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் பெயருக்கு அருகே, வலதுபுறம் அவர்கள் சேர்ந்த குழு: "ஹெஸ்பொலா" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரானிய துணை இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவைக் குறிக்கிறது. இது அதேபெயரில் உள்ள லெபனான் குழுவுடன் தொடர்பில்லாதது. அதன் உறுப்பினர்கள் ஐஆர்ஜிசி- ஆல் பயன்படுத்தப்படுகிறார்கள், ஆனால் சில சமயங்களில் அதன் அதிகார வரம்பிற்கு வெளியே செயல்படுகிறார்கள், இதனை அறிக்கை ஒப்புக் கொள்வது போல் தெரிகிறது: "மேற்கண்ட நபர்கள் ஹெஸ்பொலாவின் படைகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேவையான பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதற்கு அப்பால் இந்த வழக்கைப் பின்தொடர்வது சாத்தியமில்லை" என்று அது கூறுகிறது. மறுபுறம், IRGC அதிகாரி நயீம் 16, எழுத்துப்பூர்வமாக கண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் அறிக்கை கூறுகிறது. 551 எதிர்ப்பாளர்கள் இரானின் ’பெண், வாழ்க்கை, சுதந்திர’ இயக்கத்தின் போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக ஐநாவின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் கொடூரமான ஒடுக்குமுறை காரணமாக சில மாதங்களுக்குப் பிறகு போராட்டங்கள் தணிந்தன. இரானின் அறநெறிப் படையின் நடவடிக்கைகளில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது, ஆனால் இஸ்லாமிய ஆடைக் குறியீட்டின் மீறல்கள் மீதான புதிய ஒடுக்குமுறை கடந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் நிக்காவின் மூத்த சகோதரி ஐடாவும் ஒருவர். https://www.bbc.com/tamil/articles/c97z9609pv9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.