Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CV.jpg

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலில், விடுதலைப் புலிகள் அமைப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.வி., விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம் என்றும் இதற்கு விடுதலைப் புலிகளை குறை சொல்வதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை ஏன் பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைத் தவிர்த்து அப்பாவி மக்களை கொலை செய்தனரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என கூறிய சி.வி.விக்னேஸ்வரன்,  பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும் இராணுவமே அவர்களை கொலை செய்தது எனவும் கூறியுள்ளார்.

மேலும் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் மயானத்தில் ஏன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டீர்கள் என  கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், அந்த இடத்திற்குச் சென்று மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் அதனாலேயே தாம் அங்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/முள்ளிவாய்க்காலில்-இறந்/

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் விக்கினேசுவரன், அவரை வெள்ளைவான் ஏற்றத் தவறினாலும், எங்கள் கள்ள வாக்கால் வந்தவர்களைக்கொண்டு ஏற்றிவிடுவார்களோ என்று கலக்கமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

பாவம் விக்கினேசுவரன், அவரை வெள்ளைவான் ஏற்றத் தவறினாலும், எங்கள் கள்ள வாக்கால் வந்தவர்களைக்கொண்டு ஏற்றிவிடுவார்களோ என்று கலக்கமாக இருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களுக்கு அழிவைத் தவிர வேறு தலைவிதியே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? உங்கள் விருப்பம் நிறைவேறும் போல தான் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடுடைச்சு இறங்கப்போறான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2020 at 12:00, satan said:

வீடுடைச்சு இறங்கப்போறான்.

பயமே மனிதர்களை உலகில் மனிதத்தோடு வாழவைக்க முயல்கிறது.அதேநேரம் பயமே பலரை அடிமைகளாகவும் ஆக்கிவைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2020 at 13:44, தமிழ் சிறி said:

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இல்லை, இது தவறு. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த , சாதி வெறியும், அந்தஸ்த்துவெறியும், மதவெறியும், இனவெறியும் பிடித்த, பிரபாகரன் எனும் பயங்கரவாதியின் பின்னால் சென்றவர்கள் தான். ஆகவே அவர்கள் கொல்லப்படதில் தவறேதும் இல்லை.

கொல்லப்பட்டவர்கள் போக மீதமிருந்த யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்க இனவாதிகளையும், சாதிவெறிபிடித்தவர்களையும் ஒரே வரிசையில் நிறுத்திப் பிச்சையெடுக்கவைத்தார்கள் இனவெறியோ, மதவெறியோ சிறிதும் அற்ற சிங்களவர்கள்.

ஆகவே இனவழிப்பு யுத்தம் உண்மையிலேயே யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்கத்தை அழிப்பதற்காகவும், மீதமானோரை இழிவுபடுத்தவும் நடத்தப்பட்டதென்று நான் உண்மையாக நம்புகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இல்லை, இது தவறு. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த , சாதி வெறியும், அந்தஸ்த்துவெறியும், மதவெறியும், இனவெறியும் பிடித்த, பிரபாகரன் எனும் பயங்கரவாதியின் பின்னால் சென்றவர்கள் தான். ஆகவே அவர்கள் கொல்லப்படதில் தவறேதும் இல்லை.

கொல்லப்பட்டவர்கள் போக மீதமிருந்த யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்க இனவாதிகளையும், சாதிவெறிபிடித்தவர்களையும் ஒரே வரிசையில் நிறுத்திப் பிச்சையெடுக்கவைத்தார்கள் இனவெறியோ, மதவெறியோ சிறிதும் அற்ற சிங்களவர்கள்.

ஆகவே இனவழிப்பு யுத்தம் உண்மையிலேயே யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்கத்தை அழிப்பதற்காகவும், மீதமானோரை இழிவுபடுத்தவும் நடத்தப்பட்டதென்று நான் உண்மையாக நம்புகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

ரகு , ஏன் இந்த கொலை வெறி??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இல்லை, இது தவறு. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த , சாதி வெறியும், அந்தஸ்த்துவெறியும், மதவெறியும், இனவெறியும் பிடித்த, பிரபாகரன் எனும் பயங்கரவாதியின் பின்னால் சென்றவர்கள் தான். ஆகவே அவர்கள் கொல்லப்படதில் தவறேதும் இல்லை.

கொல்லப்பட்டவர்கள் போக மீதமிருந்த யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்க இனவாதிகளையும், சாதிவெறிபிடித்தவர்களையும் ஒரே வரிசையில் நிறுத்திப் பிச்சையெடுக்கவைத்தார்கள் இனவெறியோ, மதவெறியோ சிறிதும் அற்ற சிங்களவர்கள்.

ஆகவே இனவழிப்பு யுத்தம் உண்மையிலேயே யாழ்ப்பாண மேட்தட்டு வர்க்கத்தை அழிப்பதற்காகவும், மீதமானோரை இழிவுபடுத்தவும் நடத்தப்பட்டதென்று நான் உண்மையாக நம்புகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றாக இருந்த ரஞ்சித்துக்கும்.... மூழையை கழுவி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

ரகு , ஏன் இந்த கொலை வெறி??

 

11 minutes ago, தமிழ் சிறி said:

நன்றாக இருந்த ரஞ்சித்துக்கும்.... மூழையை கழுவி விட்டார்கள்.

அப்படிதானே இப்ப பல திரிகள் உலாவுகின்றன, இதைவிட எப்படி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Eppothum Thamizhan said:

ரகு , ஏன் இந்த கொலை வெறி??

என்ன செய்வது? இப்போது இப்படித்தான் எமது தியாகங்களும், இழப்புகளும் சிலரால் பார்க்கப்படுகின்றன.

 

30 minutes ago, தமிழ் சிறி said:

நன்றாக இருந்த ரஞ்சித்துக்கும்.... மூழையை கழுவி விட்டார்கள்.

இல்லை சிறி, இதைவிட மிகக் கேவலமாக எமது மக்களின் அழிவை இதேகளத்தில் இன்று ஒருவர் நியாயப்படுத்தினார், அதைக் குறிப்பிடவே இப்படி எழுதினேன்.

17 minutes ago, உடையார் said:

 

அப்படிதானே இப்ப பல திரிகள் உலாவுகின்றன, இதைவிட எப்படி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியும் 

உண்மை, பிரபாகரனையும் தேசியத்தையும் நேசித்ததால்  அப்பாவிகள் கொல்லப்பட்ட பின்பும் சிலரால் விஷமத்தனமாக பிரதேசவாத சாயம்பூசியும், சாதிபிரித்தும், வர்க்கவேறுபாடு காட்டியும் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணத்தால் இழிவுபடுத்தப்பட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு விக்கினேஸ்வரனை பிடிப்பதில்லை.

சிங்களவனுடன் கெஞ்ச வேண்டியதில்லை. அவர்களுக்கு ஒரு வரலாறு இல்லை. 6ம் நூறாண்டுக்கு முன்னர் சிங்களம் இல்லை.

கந்தரோடை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமல்ல, தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடம். 

பௌத்தம் தமிழர் மதமாக இருந்ததுக்கு சான்றுகள், மணிமேகலை, சிலப்பதிகாரம். அவர்களிடம் அதுவும் இல்லை. பொய் பித்தலாட்டத்துடன் கூடிய மகாவம்சம்.

இதனை ஐயா பேசியதால் தான், மாயையில் இருந்த சிங்களவர்கள், தமக்கு வரலாறு இல்லை, ஆண் சிங்கத்துக்கும், மனித பெண்ணுக்கும் நாம் பிறந்தோம் என்று சுத்தும் மகாவம்சம் போலி என உணர்ந்து, வரலாறு தேடி, இராவணனை சிங்களவன் ஆக்க முனைகின்றனர்.

சிங்களவர்கள் இவர் மீது பயப்படும் ஒரே விடயம்,  இவர் அடிக்கடி சொல்லும், தமிழரின் 'சுஜ நிர்ணய உரிமை'.

வடக்கு, கிழக்கு ஒருபோதுமே சிங்களவர்களின் ஆளுமைக்கு கீழ் இல்லாமல் இருந்ததால், தமிழர் நிலத்தினை, பிரித்தானியர்கள் தந்து விட்டு போனார்கள் என்ற ஒரே காரணத்துக்காக உரிமை கொண்டாட முடியாது.

இந்த வகையிலேயே, கிழக்கு திமோர், குடி ஒப்பம் மூலம் சுதந்திரம் அடைந்தது.

சிங்களவரை நம்பி, கிழக்கினை இணைக்க விட மாட்டொம் என்று சன்னதம் கொண்டாடிய ஹிஸ்புல்லா, லோக்கல் தமிழ் இஸ்லாமியரை, சவூதி பணம் வாங்கி வகாபிகளாக மாத்தி, சவூதியுடன் இணைத்து விட்டார் என கோபம் கொண்டுள்ள மக்களால் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். 

ஆகவே, முஸ்லிம்கள் ஆக இல்லாமல், இஸ்லாமிய தமிழர்கள் என்ற உண்மையினை கருத்தில் கொண்டால், தான் அவர்களுக்கும் வாழ்வு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கந்தரோடை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமல்ல, தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடம். பௌத்தம் தமிழர் மதமாக இருந்ததுக்கு சான்றுகள், மணிமேகலை, சிலப்பதிகாரம்.

நாதமுனி,

நீங்கள் எழுதும் வரலாறு பற்றிய விடயங்கள் உங்கள் ஆழமான அறிவை காட்டி நிற்கின்றன.

சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் திருக்குறள் களப்பிரர்கள் காலத்திலேயே இயற்றப்பட்டனவென்றும் இந்த காலம் தமிழகத்தின் இருண்டகாலம் என்றும் இந்த காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ம் நூற்றாண்டு வரையானது என்றும் அறியக்கிடைத்தது. இது பற்றி நீங்கள் அறிந்துள்ளதை  பகிர்ந்து கொள்வீர்களா?

https://ta.m.wikipedia.org/wiki/களப்பிரர்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

 

11 hours ago, Eppothum Thamizhan said:

ரகு , ஏன் இந்த கொலை வெறி??

 

11 hours ago, தமிழ் சிறி said:

நன்றாக இருந்த ரஞ்சித்துக்கும்.... மூழையை கழுவி விட்டார்கள்.

அப்படிதானே இப்ப பல திரிகள் உலாவுகின்றன, இதைவிட எப்படி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியும் 

 

அடுத்தவர் சொல்ல முதல் நாங்களே சொல்லிவிட்டால் 

சொல்ல வருபவர் கொஞ்சம் தயங்கலாம்.
வந்த வேலை முடிந்ததென்றும் திரும்பலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

அப்படிதானே இப்ப பல திரிகள் உலாவுகின்றன, இதைவிட எப்படி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியும் 

 

16 hours ago, ரஞ்சித் said:

இல்லை சிறி, இதைவிட மிகக் கேவலமாக எமது மக்களின் அழிவை இதேகளத்தில் இன்று ஒருவர் நியாயப்படுத்தினார், அதைக் குறிப்பிடவே இப்படி எழுதினேன்.

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்தவர் சொல்ல முதல் நாங்களே சொல்லிவிட்டால் 

சொல்ல வருபவர் கொஞ்சம் தயங்கலாம்.
வந்த வேலை முடிந்ததென்றும் திரும்பலாம்.

அட... நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். :)
வந்தவர்கள் வேலையை.. நீங்களே இலகுவாக முடித்து விட்டால், 
கருத்து எழுத... நாக்கை 😛 தொங்கப்  போட்டுக் கொண்டு வந்தவருக்கு...
ஒரு, மாதிரி இருக்குமே... 😎
பரவாயில்லை... இருந்திட்டுப் போகட்டுமே... :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்

அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. தேசிய தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு இலக்குகளாக மாறு முன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள்.1958 இல் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளே சிறுவனாக இருந்த பிரபாகரனின் மனதை மாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சி.வி.விக்னேஸ்வரன் இதை தெரிவித்துள்ளார்.இதில் ‘புலிகளை அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பயங்கரவாத இயக்கமாகவே தரப்படுத்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையை உருவாக்கினார்கள். பெண்களை மனித குண்டுகளாக மாற்றினர். சிறுவர்களை போர் வீரர்கள் ஆக்கினர். இரு தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரை கொலை செய்தனர். இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

Big Deals Buy Books online புத்தகங்கள் வீட்டில் இருந்து வாங்க அழுத்துங்கள் !

இதற்கு பதிலளித்த அவர்,’கெப்பட்டிபொல திசாவயை பிரிட்டிஸார் ஆபத்தான கிரிமினல் என்று தரப்படுத்தினார்கள். ஆனால் நாம் அவரை தேசிய ஹீரோவாக கருதுகிறோம் ஏன்?பிரிட்டிஸார் நாட்டுக்குள்ளே நுழைந்தவர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள், எமது வளங்களை சூறையாடியவர்கள். எமது வணக்கத் தலங்களை அழித்தவர்கள், எமது காணிகளை கைப்பற்றியவர்கள். எனவே கெப்பெட்டிபொல உயர்குடியை சேர்ந்தவராக இருந்த போதும் ஊவா கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து பிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டார்.அவரை நாம் ஹீரோ என்கிறோம். ஆனால் பயங்கரவாதி என்ற சொல்லின் அர்த்தம் பிரிட்டிஸாருக்கு தெரிந்திருந்தால் அவர்கள் கெப்பிட்டிபொலவை அவ்வாறுதான் அழைத்திருப்பார்கள்.புலிகள் இயக்கத்தில் சிறந்த அறிவுசாலிகள் இருந்தனர். படிப்பை தொடர முடிந்திருந்தால் அவர்கள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள்.பிரபாகரனை மாற்றியது என்ன? 1958 இல் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளே சிறுவனாக இருந்த பிரபாகரனின் மனதை மாற்றின. அதன் பிறகும் சிங்கள பெரும்பான்மையினரால் இழைக்கப்பட்ட பல கொடுமைகளை கேள்வியுற்ற பிரபாகரன் வன்முறைப் பதிலே இதற்கு தகுந்த தேவை என நம்பினார்.1961 அளவில் இராணுவம் வடக்குக்கு அனுப்பப்பட்டது.

கேர்ணல் உடுகமவின் கீழ் என்று நினைக்கிறேன். அப்போதைய அரசாங்கங்கள் செய்த தவறுகளுக்கு அமைதியாக தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தமைக்காகவே இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. அரசாங்கத்தின் கைக்கூலியாக அப்போது இயங்கிய பஸ்தியாம்பிள்ளையை புலிகள் கொன்றனர்.அமெரிக்காவை விட்டு விடுங்கள். அரசாங்கமல்லவா? சட்ட மா அதிபர் அல்லவா? இவ்வாறு பயங்கரவாதி என்று தரப்படுத்தியது. அரசாங்கம் இவ்வாறு கூறியதை பின்பற்றியே வெளிநாடுகளும் வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்தன.புலிகள் இழைத்த தவறுகளைப் பற்றி கூறுகிறீர்களே. அரசாங்கமும் அரச படைகளும் இழைத்த தவறுகளை மறந்து விட்டுப் பேசுகிறீர்கள்.அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. தேசிய தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு இலக்குகளாக மாறு முன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள்.ஒரு தரப்பினரை பயங்கரவாதிகள் என்று கூறு முன் மறுதரப்பு இழைத்த குற்றங்களை பாருங்கள். அவர்கள்தான் மிகப் பெரிய பயங்கரவாதிகள் என்று கூறினார்.

https://veiyil.com/vikki-08-09-2020/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள்... விக்கி ஐயா. 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்

Hindia - பயங்கரவாத சொறி சிங்களத்தின்  பயங்கரவாத அம்மா. 

UK -  பயங்கரவாத சொறி சிங்களத்தின் பயங்கரவாத அப்பா.
 
US - பயங்கரவாத சொறி சிங்களத்தின் பயங்கரவாத அம்மாவின் பயங்கரவாத உள்ளங்கவர் கள்வன்.

EU - பயங்கரவாத சொறி சிங்களத்தின் பயங்கரவாத மாமா.

ICG - பயங்கரவாத சொறி சிங்களத்தின்   பயங்கரவாத மேற்கு பிரசங்கிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

சிலருக்கு விக்கினேஸ்வரனை பிடிப்பதில்லை.

சிங்களவனுடன் கெஞ்ச வேண்டியதில்லை. அவர்களுக்கு ஒரு வரலாறு இல்லை. 6ம் நூறாண்டுக்கு முன்னர் சிங்களம் இல்லை.

 

16 hours ago, கற்பகதரு said:

சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் திருக்குறள் களப்பிரர்கள் காலத்திலேயே இயற்றப்பட்டனவென்றும் இந்த காலம் தமிழகத்தின் இருண்டகாலம் என்றும் இந்த காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ம் நூற்றாண்டு வரையானது என்றும் அறியக்கிடைத்தது. இது பற்றி நீங்கள் அறிந்துள்ளதை  பகிர்ந்து கொள்வீர்களா?

இதை எல்லோரும் தயவுசெய்து  வாசியுங்கள். தெளிவு பிறக்க மிகுந்த சுருக்கமான ஆய்வு, விஞ்ஞான ஆதாரத்துடன்.  இதை கீழடி திரியிலும் பதிவு செய்து விடுகிறேன். 

 

பகுதி 1 - அறிமுகம் 

இதை எல்லோரும் தயவுசெய்து  வாசியுங்கள். தெளிவு பிறக்க மிகுந்த சுருக்கமான ஆய்வு, விஞ்ஞான ஆதாரத்துடன்.  இதை கீழடி திரியிலும் பதிவு செய்து விடுகிறேன். 

இந்த தேடுதலுக்கு ஊக்கியாக இருப்பன:

1) சமீபத்தில் ஓர் சிங்கள மேலாண்மை வாதி (இலங்கை முழுவதும் சிங்களத்துக்கே சொந்தம் என்பதையும், தமிழர் வந்தேறிகள் என்றும் சாதிப்பவர்), ஆனால் மரியாதையாக  வாதம் செய்யக் கூடியவர் மற்றும் சிங்கள அரசு சிந்தனைகளோடு, மிக உயர் அதிகாரங்கள் உள்ளவர்களோடு   நன்கு பரிச்சியம் உள்ளவர்.
      
அவர் சொன்னது,  13 ஐ கொண்டுவரும் போது, கிந்தியவிற்கு வட-கிழக்கு இணைந்திருப்பதோ அல்லது இணையாமல் இருப்பதோ என்பதில் எத விதமான அக்கறையும் காண்பிக்கவில்லை என்றும்

கொடுக்கப்படும் அதிகாரங்களின் பரம்பலையம், ஆழத்தையும் அழுங்கு பிடியாக நின்று குறைத்ததாகவும், மற்றும் அப்படி கொடுக்கப்படும் அதிகாரளின் பகிர்ந்தளிக்கப்பட்ட தன்மையில்  ஓர் தெளிவில்லாத நிலையையம் , ஆனால் அதிகாரத்தை மீள பெறுவதற்கொ, அல்லது கொடுக்காமல் வைத்திருப்பதற்கோ உறுதியனான நிலைப்பாடு இருக்குமாறு 13 ஐ  அழுங்கு பிடியாக எழுதியதாகவும் சொன்னார்.         

அவரின் வாதம் உங்களின் தலையில் - வெளிநாடுகளின் பார்வையில் - 13  ஆல்  அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்ட தோற்றப்பாட்டையும், - ஆனால் யதாரத்தத்தில் அப்படியாக அதிகாரங்கள் பகிரப்படவில்லை (nice trick, best of  both world for Sinhalese and Hindia) - என்ற மிளகாயை அரைத்ததாகவும் சொன்னார்.    

எனவே கிந்தியாவே, இலங்கைத்தீவில் சிங்களத்தின் கீழ் ஒற்றை ஆட்சி இருக்க வேண்டும் என்பதில் அழுங்கு பிடியாக இருக்கிறது.

இதனால் தான் இப்போதும், இந்து ராம் போன்றவர்கள் தீர்வு என்பது சொறி சிங்கள யாப்பின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவது.

இதுவும்  புலிகளை கிந்தியா யுத்தத்துக்கு இழுத்து சென்றதன் காரணம். 
 

2) கிந்தியா சொல்லும், இலங்கை தீவில் தமிழரின் சுதந்திர தேசம் அமைந்தால், தமிழ்  நாடு மற்றும் மாநிலங்கள்  சுதந்திரம் கேட்கும், இந்திய அரசின் நிலப்பரப்பு வெவேறு அரசுகளின் கீழ் பிரியும் நிலை உருவாகும். ஆனால் இது ஏன் பங்களாதேஷ் உருவாக்கத்தில் அல்லது அதன் பின்போ நடக்கவில்லை. இது தவிர, 2009 இல்  ஹிந்தியா இதுவரை சொல்லிவந்த, தமிழருக்கு இலங்கையில் ஏதும் நடந்தால், தமிழ் நாடி கெம்பி எழுந்து இந்திய அரசின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதும் நடக்கவில்லை.

3) கிந்தியா ஏன் புதைபொருள், தொல்பொருள் மற்றும் வரலாற்று அகழ்வாய்வு மற்றும் ஆராய்ச்சியை தமிழ் நாடு செய்ய முற்றப்படும் போது மட்டும் குறிப்பாக தடுக்கிறது. அல்லது அப்படி வந்த தொல்பொருட்களை, கிந்திய நிர்வாகத்தின் கீழேயே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது?     
  
4) வந்த ஹிந்திய ஆக்கிமிப்பு  படை, எத்தனையோ சண்டைகளிலும் அழிப்பதையே குறித்து செயற்பட்டு இருந்தாலும், மிகுந்த உயிரிழப்பை ஹிந்திய ஆக்கிமிப்பு  படைக்கு ஏற்படுத்திய யாழ் பல்கலை கழக சண்டையில், எல்லாவற்றையும் கொளுத்தி எரித்து அழித்துவிட்டு, தொல்பொருள், வரலாற்று மற்றும் மானிடவியல் நுண் பொருட்களை களவாடிச் சென்றது.

 

பகுதி 2  - விளக்கம்  

இலங்கையில் அல்லது வேறு எங்கோ தமிழை பற்றி அறிவதற்கு, முதலில் தமிழ் என்ற மொழியில் திராவிடம் என்று சொல்லோ அல்லது   யதார்த்தமான, உண்மையானோ  எண்ணக்கருவோ (idea, context), வடிவமோ ஒரு போதுமே தமிழில் இல்லை என்பதில் ஏன் என்ற தெளிவு வரலாற்று அடிப்படையில் இருக்க வேண்டும்.

இங்கு அக்கறை உள்ளோர், ஜேசு பௌத்த துறவி எனும் திரியில்,   இறுதியாக சுருக்கமாக எழுதியதை வாசிக்கவும். இதற்கு goshan_che, Justin க்கும் நான் நன்றியை தெரிவிக்க வேண்டும், ஏனெனில் அவரக்ளின் எதிர்  வாதம் இல்லாமல், நான் அறிந்தவற்றை, ஆதாரத்துடன்  திரட்டி ஒரு போதுமே பதிவிட்டு இருக்க மாட்டேன். முக்கியமானதை பலர் வாசிக்கவில்லை போலும். 

ஜேசு பௌத்த துறவி எனும் திரி: 

இத்  திரியில் சுருக்கமாக,  Dravidian எனும் சம்ஸ்கிருத  சொல்லும் , எண்ணக்கருவும் உண்மையில் abstract (அதாவது மொழிக் கூட்டதின் அடையாள கருதுகோளாக)  ஆக  அறிமுகப்படுத்தப்பட்டது ஆங்கிலேயரால். 19ம் நூற்றாண்டில்  அது ஓர் மொழிக் கூட்டத்தை இலக்கணத்தின்  அடிப்படையில் வகையீடு செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொழி கூட்டத்தில் தமிழும் ஒன்று. இந்த Dravidian (சம்ஸ்கிருத  சொல்லும் , எண்ணக்கருவும்) எனும் சொல்லும் அடையாள கருதுகோளான எண்ணக்கருவே, பின்பு, 20ம் நூற்றாண்டில்  திராவிடம் எனும் race-political  எனும் யதார்த்த பூர்வமான எண்ணக்   கருவாக விதைக்கப்பட்டது வரலாறு. 

ஆதாரம்:

The actual term Dravidian was first employed by Robert A. Caldwell, who introduced the Sanskrit word dravida (which, in a 7th-century text, obviously meant Tamil) into his epoch-making A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (1856).  - Encyclopedia Britannica

Dravidian என்பது, அதாவது திராவிடம் என்று தமிழில் இப்பொது உள்ளது, முழுமையாக தமிழ் கருத்தாகவும், பதமாகவும்  என்பது ஏனையோரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய  தேவை உள்ள (அதாவது, இந்திய அரசு அமைக்கப்படும்  போது மற்ற இனத்தவரின் இறைமையை இந்திய அரசுக்குள் சேர்ப்பதற்கான  (pooling sovereignty) நியாயாதிக்கத்துக்கான எதிர்ப்பை தவிர்ப்பதற்கு) அம்பேத்காரின் மறுதலிப்பான  திராவிடம் என்பது தமிழ் கருத்தும் சொல்லும் அல்ல என்பதையம்  மற்றும் தமிழின், தமிழர்களின் (சமஸ்கிருதத்தில் Dravidians) பிரசன்ன தொடர்ச்சியின்     விளக்கம்:     

https://www.forwardpress.in/2017/09/dr-ambedkar-on-asuras/#_edn8

"What is important here is that ‘Dravida’ is not an original word. It is the Sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’, when imported into Sanskrit, became ‘Damilla’ and later on Damilla became Dravida. The word ‘Dravida’ is the name of the language of the people and does not denote the race of the people.

அடையக் கூடிய முடிவு:

திராவிடம் எனும் தமிழ் சொல்லோ அல்லது யதார்த்தமான தமிழ்  எண்ணக்கருவோ இல்லை. ஆங்கிலேயர்  அறிமுகபடுத்திய  சமஸ்கிருதத்தில் உள்ள தமிழுக்கான Dravidian எனும் சொல்லையும், எண்ணக்கருவையும், தமிழி மயப்படுத்தியதே (சொல்லாக, race மற்றும் அரசியல் எண்ணக்கருவாக) திராவிடம் எனும் தமிழ் சொல்லும், எண்ணக்கருவும்.    

சமஸ்கிருதத்தில் உள்ள (தமிழுக்கான) Dravidian என்பதற்கான நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ் (மொழியும், எண்ணக்கருவும், அதாவது idea, context) மற்றும் தமிழின் மற்றும்  தமிழர்  எனும் சொற்கள் ஆகும்.       

அந்த திரியில் (ஜேசு பௌத்த துறவி), தமிழை 7000 வருடங்கள் வரை ஏன் பின்தள்ளலாம் என்பதற்கான விளக்கம், விஞ்ஞான ஆதாரத்துடன் இருக்கிறது.  இது இப்பொது ஆய்வாளர்கள் proto-dravidian (அதாவது proto-tamil) ஆக இருக்கும் என்று ஆய்வு செய்ய எத்தனிக்கும் காலப்பகுதியுடன் ஒத்து வருகிறது.

விஞ்ஞான ஆதாரம்: 

https://royalsocietypublishing.org/doi/10.1098/rsos.171504#d3e475


ஆய்வாளரின் இப்போதைய ஆய்வின் முனைப்பு: 

https://scroll.in/article/936432/what-was-harappas-language-the-answer-remains-the-missing-piece-of-indians-ancestry-puzzle

"Historians and archaeologists have so far overwhelmingly backed up the idea that the language underlying the Harappan script was Proto-Dravidian, but the inability to break the code has left the question hanging, without a final resolution." 

இந்த விஞ்ஞான ஆய்வு சொல்வது, சமஸ்கிருத Dravidian (அதாவது தமிழ் கருதுகோளும், எண்ணக்கருவும்), முதலில் வடக்கு-Dravidian, கிழக்கு-Dravidian, மேற்கு-Dravidian, தெற்கு-Dravidian என்று பிரிந்ததாக. பின்பு தெற்கு-Dravidian, இரண்டாக பிரிந்ததாக.     

இவ்வளவு கால தொடர்ச்சி தமிழுக்கு (சமஸ்கிருத Dravidian) இருக்கும் என்பது குறிப்பது எதுவாயின், இப்பொது இந்தோ-ஆரிய மொழிகாலை தாய் மொழியாக  கொண்டவர்கள் (சிங்களமும் இதில் ஒன்று) எல்லோரும், ஓர் காலத்தில் தமிழேயே அவர்களின் மொழியாக (தமிழின் தொன்மையில் இருந்தே   அந்தந்த காலப் பகுதியிலும், அந்தந்த இந்தோ-ஆரியன் மொழி தோன்றிய காலத்திலும்) கொண்டிருந்தார்கள் என்பது. 

ஏனெனில், இவ்வளவு கால தமிழின் தொடர்ச்சி என்பது, ஆரியர் மற்றும் ஆரிய மொழி வருகை தமிழிற்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் என்பதும் (அந்த நேரத்தில் தமிழ் உரிய மொழி வடிவம் எடுத்து விட்டது), ஆரிய மொழி விருத்தி அடைந்த அந்தந்த காலப் பகுதியில் (அதாவது proto-aryan, aryan, proto-sanskirit, sanskirit, then modernisation), வெவ்வேறு பிரதேசங்களுக்கு வந்த போது, தமிழுக்கு ஏற்ப்படுத்திய கலப்பும், தாக்கமுமே இந்த இந்தோ-ஆரிய மொழிகளும், இனங்களும்.

இந்த சமஸ்கிருத  Dravidian என்பது தமிழில் தமிழ் எனும் மொழியும், எண்ணக்கருவும் என்பதை ஏற்றுக் கொண்டால், தற்போதைய saarc நாடுகள் ஒன்றிலுமே இப்போதிருக்கும் மக்களுக்கு indigenous ancestral உரிமை இல்லாமல் போகிறது. இதுவே இந்திய அரசின் தமிழர்களுக்கு சுதந்திர தேசம் அமைவதில் உள்ள கிலிக்கான முதல் காரணம். ஏனெனில் இந்திய அரசும், சொறி (சிங்கள) அரசும் கட்டப்பட்டு இருப்பது, Dravidian (அதாவது திராவிடம் என்று தமிழ் மயமாக்கப்பட்ட சமஸ்கிருத Dravidian) என்ற கருதுகோள் மற்றும் எண்ணக்கருவும் கருவும், ஆரிய கருதுகோள் மற்றும் எண்ணக்கருவும் கலந்து Indo-Airyan எனும் ருதுகோள் மற்றும் எண்ணக்கருவும் உருவாக்கத்தில் கட்டப்பட்டு இருப்பது. 

இந்த Dravidian என்ற கருப்பொருளை western linguists and historians அறிமுகப்படுத்துவது, தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும் மறுப்பதற்கும்,  Dravidian என்ற ஊற்று மொழியில் இருந்து தமிழ் உட்பட பல்வேறு மொழிகள் உருவாகியது என்ற நிலையை ஆக்குவதற்கும், அதன் மூலம் இந்தோ-ஆரிய மொழிகள், இனங்கள் தொன்மையை தமிழர்கள் அல்ல அது Dravidians (அதாவது தமிழ் இல் இருந்து வேறுபட்ட, தமிழர்கள் அல்ல) மற்றும் ஆரியன் கலந்த எனும் மக்கள் கூட்டமாகும் என்பதை வரலாற்று மற்றும் மானிடவியல் அடிப்படையில் தாபிப்பதத்திற்கும்.     

இதில் இன்னுமொரு வரலாற்று குறிப்பு வழி முனைப்பும் இருக்கிறது. அதாவது எந்த தொன்மை கால குடியில் இருந்து ஆரம்பத்தில் Dravidian (அதாவது தமிழ் ) உருவானதோ, ஏனெனில், proto-dravidian (proto-tamil) உருவாதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முதலே அந்த தொன்மை கால குடி இப்போதைய சார்க் நாடுகளின் நிலப் பரப்பில் வாழ்ந்து கொண்டு இருந்தது, அந்த தொன்மை குடியில் ஆரம்ப காலத்தில், அதன் பின் பல ஆயிரம் வருடங்களுக்கு பின்பும்  proto-Dravidian (அதாவது proto-தமிழ்) இருக்கவில்லை, அந்தக் குடிக்கும், இப்பொது இலங்கையில் வேடுவர்களாக உள்ளவர்களுக்கும் நிச்சயம்  கலப்பு இருந்து இருக்கும்.  
  
இது ஓரளவு சிக்கலான ஆய்வாகும்

இதை மறுப்பதற்கு, இரு வழிகள் உண்டு.

1.  Dravidian (சமஸ்கிருதத்தில்) என்பதும் தமிழ் (தமிழில்) என்பதும் ஒன்றல்ல, வேறு வேறு அடையாளமும், கருத்தும் உள்ள  சொற்கள் என்பதற்கான ஆதாரம்.

2. ஆக குறைந்தது, Dravidian எனும் மொழியை எவராவது இது தான் Dravidian  என்ற மொழியாகும் என்று அடையாளம் காட்டினால், அந்த ஆய்வில் சொல்லப்பட்ட 4500 வருடங்களிலும் குறைகிறது தமிழின் தொன்மை.      ஏனெனில், வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள்,  இது தான் proto-dravidian என்று ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் உள்ளார்கள். 

Edited by Kadancha
amend

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.