Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்?- சரத்வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தத்தில் உள்ள பாதகமான உட்பிரிவுகள் அகற்றப்படும் – சரத் வீரசேகர  | Athavan News

சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்?- சரத்வீரசேகர

மாகாண சபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற யோசனை தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்கு கிடைத்துள்ளது.

அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர்.

மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன.

மாகாணசபைகளை இல்லாமல் செய்வது என தீர்மானிக்கப்பட்டால் நாட்டை ருகுணு, மாயா, பிகிட்டி என்ற மூன்று மகாணங்களாக பிரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக புதிய மாகாணசபைகள் தெரிவு செய்யப்படாத நிலையில் மாகாண சபை முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மாகாண-சபைகளை-சிங்கள-வரலா/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்?- சரத்வீரசே

வடகிழக்கை சிங்கள பகுதிகளுடன் இணைத்துவிட்டால் சிங்கள முதலமைச்சர் வருவாரோ?

இவ்வளவு  தூரம் நீங்கள் பின்னோக்கி சிந்திக்கின்றதென்றால் தமிழர் ராஜ்ஜியத்தை  தந்திட்டு உங்கடை ராஜ்ஜியங்களை நீங்களே நடத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே உங்கள் உடைகளையும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னோக்கிப்ய்(?) போய் கோவணத்துடன் திரிந்தால் இன்னும் சிறப்பு.. 😜

  • கருத்துக்கள உறவுகள்

70%மும் சேர்ந்து கோத்தாவை ஜனாதிபதியாக கொண்டுவரும்போதே தெரியும் நமது கதை சீக்கிரம் முடிந்து விடுமென்று...நாம் ஏற்கனவே கோவணத்துடன் நிற்பவர்கள் ,எனவே பெரிய இழப்பில்லை 
நஸிரிஸ்த்தான்,கிழக்கிஸ்தான்  கனவோடு ஒருகூட்டம் இருக்கு அவர்களின் நிலைமை தான் படு பரிதாபம் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொஞ்சம் இந்தியாவுக்கு பயமிருக்கு போல தெரிகின்றது

10 hours ago, ஈழப்பிரியன் said:

வடகிழக்கை சிங்கள பகுதிகளுடன் இணைத்துவிட்டால் சிங்கள முதலமைச்சர் வருவாரோ?

சீ சீ ...பிள்ளையானை ரஜரட்டை க்கு இரண்டு மாதம் முதலமைச்சராக்கி சர்வதேசத்திற்கு பிலிம் காட்டுவினம்...அதை சர்வதேசம் நம்பிடும்...பிறகு சிங்களவரை முதலமைச்சராக்கிவிடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஹிந்திய தூதரகத்திடம் இருந்து அழைப்பாணை பிறபிக்கப்பட்டது செய்தி.

இவை நன் எனது தொடர்புகள் மூலம் அறிந்தவை.

ஹிந்திய தூதரகம் இவருக்கு கலகச் சட்டத்தை வாசித்தது (read riot act). இவர் வாய் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

ஓரிரு நாட்களில் சிறிசேனவுக்கும்  அழைப்பாணை பிறபிக்கப்பட்டது. துகில் உரியும் (dressing down) வகையில் அறிவுறுத்தல் இருந்தது.

இதை 13 திரியிலும் பதிவிடுகிறேன்.

குறிப்பு: இவற்றை நான் நேரடி பிரசன்னம் ஆகி, கேட்டறிந்து தீரவிசாரித்து அறிந்ததல்ல.  

On 23/9/2020 at 00:19, Kadancha said:

இவருக்கு ஹிந்திய தூதரகத்திடம் இருந்து அழைப்பாணை பிறபிக்கப்பட்டது செய்தி.

இவை நன் எனது தொடர்புகள் மூலம் அறிந்தவை.

நன்றி தகவலுக்கு. இனிவரும் காலங்களின் நடைமுறையில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் 

On 22/9/2020 at 11:39, அக்னியஷ்த்ரா said:

70%மும் சேர்ந்து கோத்தாவை ஜனாதிபதியாக கொண்டுவரும்போதே தெரியும் நமது கதை சீக்கிரம் முடிந்து விடுமென்று...நாம் ஏற்கனவே கோவணத்துடன் நிற்பவர்கள் ,எனவே பெரிய இழப்பில்லை 
நஸிரிஸ்த்தான்,கிழக்கிஸ்தான்  கனவோடு ஒருகூட்டம் இருக்கு அவர்களின் நிலைமை தான் படு பரிதாபம் 

ஏன் கோவனத்துடன் நின்றாலும். இன்னும் மானம் ரோஷம் செத்துவிடவில்லை. ஒன்றாக போராடினால் உலகை திரும்பி பார்க்க வைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செண்பகம் said:

ஏன் கோவனத்துடன் நின்றாலும். இன்னும் மானம் ரோஷம் செத்துவிடவில்லை. ஒன்றாக போராடினால் உலகை திரும்பி பார்க்க வைக்கலாம்

கவனம்....பார்த்து 
உங்களுடன் கூட இருந்து போராடிக்கொண்டிருந்தவைகளை இடைவேளையில் காணக்கிடைக்காது 
கிடைத்த கப்பில் சிங்களவனுடன் சேர்ந்து திரும்ப உங்களுக்கே ஆப்படிப்பினம்...  

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, puthalvan said:

நன்றி தகவலுக்கு. இனிவரும் காலங்களின் நடைமுறையில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் 

சிறிசேன கோத்தாவையும், மகிந்தாவையும் போட்டுக் கொடுத்தாளார் என்ற ஒரு விடயமும் அறிகிறேன், ஆனால், அது கோத்தா மற்றும் மகிந்தவின் எந்த விடயங்கள் பற்றியது என்பதை அறிய முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, puthalvan said:

நன்றி தகவலுக்கு. இனிவரும் காலங்களின் நடைமுறையில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் 

கடஞ்சா இப்ப 2 வருசமா யாழில் மாறி மாறி எழுதும் கதைதான் இது.

மோடி மகிந்தவுடன் கடுந் தொனியில் பேசி 13க்கு மேலே போக சொன்னார்.
கோத்த அபாயவை எச்சரிக்கும் தொனியில் பேசினார். இப்படி பல.

நானும்  முதல்ல இதுல ஏதும் மேட்டர் இருக்குமோ என யோசித்தது ஏமாந்த ஆள்தான்.

ஆனால் இப்போ எனது கேள்வி எல்லாம் 

1. கடஞ்சாவை இந்திய தூதரக ஆள் சுத்தல்ல விடுறாரா 
அல்லது 
2. கடஞ்சா எங்களை சுத்தலில் விடுறாரா என்பது மட்டுமே  

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 07:18, goshan_che said:

கடஞ்சா இப்ப 2 வருசமா யாழில் மாறி மாறி எழுதும் கதைதான் இது.

மோடி மகிந்தவுடன் கடுந் தொனியில் பேசி 13க்கு மேலே போக சொன்னார்.
கோத்த அபாயவை எச்சரிக்கும் தொனியில் பேசினார். இப்படி பல.

நானும்  முதல்ல இதுல ஏதும் மேட்டர் இருக்குமோ என யோசித்தது ஏமாந்த ஆள்தான்.

ஆனால் இப்போ எனது கேள்வி எல்லாம் 

1. கடஞ்சாவை இந்திய தூதரக ஆள் சுத்தல்ல விடுறாரா 
அல்லது 
2. கடஞ்சா எங்களை சுத்தலில் விடுறாரா என்பது மட்டுமே  

கிந்தியனை நம்பும் கூட்டம் இன்னுமிருக்கு, . திலீபனின் தியகத்துடன் கிந்தியாவின் கோர முகம் தெரிந்துவிட்டது

திலீபனின் கீதாஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

கிந்தியனை நம்பும் கூட்டம் இன்னுமிருக்கு, . திலீபனின் தியகத்துடன் கிந்தியாவின் கோர முகம் தெரிந்துவிட்டது

திலீபனின் கீதாஞ்சலி

உடையார்,

நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள். 

இப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள்.

எப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது.

உண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. 

நேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....🤦‍♂️

உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.

ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.

ஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன். 

நேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படிதான் உங்களின் பதில் வருமென தெரியும். உங்கள் வயசு பண்பு கேற்றவாறா நீங்கள் நடந்து கொண்டீர்கள், இல்லை, இழவு வீட்டில் எப்படியும் அரசியல் செய்வேன் என கங்கனம் கட்டி நின்றீர்கள், அதை மறைக்க இப்ப இந்த சப்பை பதிவு. உங்களில் இருந்த மரியாதை நேற்றுடன் செத்துவிட்டது, எந்தவொரு பண்பாளனும் இழவு வீட்டில் பிரச்சனை கொடுக்க மாட்டான்

Just now, goshan_che said:

Just now, உடையார் said:

இதில ஒரு சீண்டுதலுமில்லை, கருத்துக்கு கருத்து, இதை விளங்கி கொண்டால் சரி👍

Just now, goshan_che said:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

இதில ஒரு சீண்டுதலுமில்லை, கருத்துக்கு கருத்து, இதை விளங்கி கொண்டால் சரி👍

சரி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். உங்கள் நேரத்துக்கும் அக்கறைக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் .. ராமேஸ்வரம் , மதுரை அங்கால அந்தமான் வரை முதலாம் துட்டமுனு ஆட்சியின் கீழ் இருந்தது குறிப்பிட தக்கது..👌

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.