Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.

September 26, 2020

spacer.png

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர் ஒருவருடன் இடம்பெற்ற முதலாவது காணொளி கலந்துரையாடல் இதுவாகும்.

வலய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென, இந்திய வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமுத்திர பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் இந்தியாவிற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இதன்போது இணக்கம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு தேவைகளுக்கும் அமைய தற்போது அமுல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2020/150897/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயமானது 🤔

 

😂😂😂😂😂😂

 

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது சட்டத்திருத்தை அமுல் படுத்த இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில், அதை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என இலங்கையிடம் பிரதமர்  இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இந்தப் பேச்சுக்கள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல்  முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்ஷவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் மோடி,  இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துவதாக  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் கூறும்போது, “இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்” என்றார்.

இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனான பௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டாலர்கள் உதவி அறிவித்தார்.

 

http://www.ilakku.org/13-ஆவது-சட்டத்திருத்தை-அமு/

 
1 hour ago, உடையார் said:

இலங்கையுடனான பௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டாலர்கள் உதவி அறிவித்தார்.

நீங்கள் நல்லா காசு கொடுத்து பௌத்தத்தை உசுப்பேத்துங்கோ. எந்த பௌத்த பேரினவாதம் இப்ப உங்களின்டரை கழுத்தை  சுற்றி கயிறு போடுறதோ அதே பேரினவாதத்தை இன்னும் எண்ணை  ஊத்தி வளர்கின்ற செயல் தான் இது. பௌத்தகயாவுக்கு உல்லாசம் வந்துவிட்டு சீனாவுக்கு தான் விசுவாசமே இலங்கை இருக்கும். உங்களுக்கு ஐ நா பாதுகாப்பு சபையில் நிரந்தர சீற்றும் இல்லை.


அதே நேரம் உங்கடை சனம் பொறியியல், ம் பி எ படித்துப்போட்டு இப்ப கிடங்கு வெட்டீனம். அல்லாட்டில் எப்ப பைடன் வந்து தங்களுக்கு அமெரிக்கவிலை வேலை தருவார் எண்டு கனவுக்கானட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

அரசியலமைப்புக்கான 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துவதாக  தெரிவித்துள்ளார்.

தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற மாதிரி பெரிய அதிகாரங்கள் எல்லாம் அந்த கண்ணாம்ப்பூச்சி பதின்மூன்றாந் திருத்தச் சட்டத்தில் ஒன்றும் இல்லை இருந்தாலும், அதற்கு மேல் போய் தமிழர் அதிகாரங்களை கேட்காமல் இருப்பதற்காக ஏதோ அதைக்கொடுத்துவிட்டால் தமிழீழம் மலர்ந்துவிடும் என்பதுபோல் பிகு காட்டிவிட்டு எந்த பிரயோசனமுமில்லாத அந்த திருத்தச்சட்டத்தை இந்தியாவின் வற்புறுத்தலால் கொடுப்பதுபோல் கொடுக்க கூடும். அதோடு  இந்தியாவும் இலங்கையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்னும்   பெருமிதத்தோடு அடங்கிவிடும். அதிலிருக்கும் சில அதிகாரங்களையும் பறிக்கும் இன்னொரு சட்டத்தை இயற்றி, மாற்றி செயற்படுத்துவார்கள். அதோடு எல்லாம் நிறைவு. சிங்களவன் எவ்வளவு மோசக்காரன் என்பதை எம்மால் அன்றி  வேறு யாராலும் விளங்கிக்கொள்ள முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 வது திருத்தம் குறித்த மோடியின் கருத்திற்கு இலங்கை உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை- சண்டே டைம்ஸ்

Rajeevan ArasaratnamSeptember 27, 2020

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளிற்கு இலங்கை உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை.
நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை தமிழ் மக்களின் ஐக்கிய இலங்கைக்குள்ளான சமத்துவம் நீதி கௌரவம் குறித்த அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அவர்களது நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13வது திருத்தம் குறித்த விடயங்கள் குறிப்பிடப்படவில்லை.மாறாக இந்திய அறிக்கை போன்று இரு நாடுகளின் தலைவர்களும் ஆராய்ந்த பரந்துபட்ட விடயங்கள் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதி கடலில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை குறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என பிரதமர் வெள்ளிக்கிழமை வடபகுதி மீனவர்களிடம் தெரிவித்த போதிலும் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இருநாட்டு மீனவர்கள் தொடர்புபட்ட விடயங்களுக் வழமையான கலந்தாலோசனைகள் இருதரப்புஅதிகாரிகள் ஊடாக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://thinakkural.lk/article/72842

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

வடபகுதி கடலில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை குறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என பிரதமர் வெள்ளிக்கிழமை வடபகுதி மீனவர்களிடம் தெரிவித்த போதிலும் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இருநாட்டு மீனவர்கள் தொடர்புபட்ட விடயங்களுக் வழமையான கலந்தாலோசனைகள் இருதரப்புஅதிகாரிகள் ஊடாக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்கு மக்கள் குறித்து சிங்களத் தலைமைகளுக்கு எப்போதுமே அக்கறை இருந்ததில்லை எனியும் இருக்கப் போவதில்லை.

ஆனால்.. மக்கள் தான் சிங்களக் கூலிகளின் பசப்புவார்த்தைகளுக்கு அடிக்கடி மயங்கி விடுகின்றனர்.

மேலும்.. டக்கி போன்ற சூளைமேட்டு கொலைகாரர்கள்.. தமிழகத்துடன் நேரடியாக இந்த விடயத்தைப் பேசி தீர்க்க முடியாது.

விடுதலைப்புலிகள் காலத்தில் மிகவும் சுமூகமாக இருந்த தமிழக மீனவர்கள்.. வடக்குக் கிழக்கு மீனவர்கள் உறவு 2009 க்குப் பின் மிகவும் சீர்குலைக்கப்படும் வகையில்.. சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளும் செயற்படுவதோடு.. ஹிந்திய தரப்பிலும் தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ தொடர்கிறது.

சரியான தரப்புக்கள் இதய சுத்தியோடும் இரு தரப்பு விட்டுக்கொடுப்புகளோடும் பேசின்.. இந்தப் பிரச்சனைக்கு பிரச்சனை இருக்கு என்று தெரியாமலே தீர்வு தேட முடியும். காரணம் கரையின் இக்கரையிலும் அக்கரையிலும் இருப்பது தொப்புள் கொடி உறவுகள். இடையில் எதற்கு சிங்களவன்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரமாதித்தனும் 13ம் சரத்து கதையும் 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! ஒரே கதையை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாயே.இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் சொல்லப் போகிறாய் என்று எள்ளி நகையாடியது.நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேளு என்று மன்னனுக்கு கதை சொல்லத் தொடங்கியது வேதாளம்.வேதாளம் கதை சொல்லிக் கொண்டே இருந்தது மன்னனும் கேண்டுக் கொண்டே இருக்கிறான்.கதை முடிவில் வேதாளம்  மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் அடிக்கடி மன்னன் வந்து கீழே இறக்குவதனால் அது சீனா பக்கமாக போய் ஓடி ஒளித்துக்கொண்டது.விக்கிரமாதித்தன் கதை மீண்டும் தொடங்குமா என்பது தெரியாது.ஓடி ஒளிந்திருக்கும் வேதாளத்தை யாரும் நெருங்காமல் இந்து சமுத்திரத்தில் இருந்து  ட்ரகன் (dragon)பாதுகாப்பாக காத்து வருகிறது. விக்கிரமாதித்தனுக்கு ரகனுக்கும் இடையில் இது மாத்திரம் இன்றி வேறும் பல பிரச்சினைகள் இருப்பதால் இருவருக்கும் இடையில் யுத்தம் மீளுமா தெரியாது.கதை வேறு திசையில் போகுமா என்பதை இருந்து பார்ப்போம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்க.. 1987 இல் 13 என்ற அரைகுறையை.. எம்மவரிடம் திணிந்தது இந்த ஹிந்தியா.

அப்போது அதில் ஒன்றுமே இல்லை ஆனால்..ஹிந்தியாவுக்காக ஏற்றுக் கொள்கின்றோம்.. என்றனர் எம் சட்டாம்பிகள்.. அதோடு இலவச இணைப்பாக வந்த... பொதுமன்னிப்புக்காக ஏற்றுக் கொண்டனர் ஒட்டுக்குழுக்கள்.

2009 க்கு முன்.. 13 ஐ தாண்டி செல்வோம்.. புலிகளை முதலில் அழிப்போம் என்றது சிங்களமும் ஹிந்தியாவும் சர்வதேசமும். அதற்கும் எம் சட்டாம்பிகள் தலையை ஆட்டினர். ஒட்டுக்குழுக்கள் வழமை போல் ஆமாப் போட்டனர்.

2020.. இல்.. புலி அழிப்பு நிறைவு. 13 இம் இல்லை.. மண்ணாங்கட்டியும் இல்லை என்கிறது சிங்களம்.. 13 தான் தரக்கூடிய அதி உச்சம்.. அதை வாங்கவே பெரிய பாடாக் கிடக்கு.. சும்மா.. வாங்கிக் கொண்டு கிடவுங்க என்கிறது ஹிந்தியம். அதற்கு எம் சட்டாம்பிகள் மெளனம்.. ஒட்டுக்குழுக்கள் வழமை போல்.. ஆமாம் ஆமாம். 

கடைசியில்..

தமிழர்கள்.. மீண்டும் தொடக்கப் புள்ளியில்.. 

அழிவுகளும்.. இழப்புகளும்.. ஆக்கிரமிப்புக்களும்.. அடக்குமுறைகளும்.. தான் தீர்வு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

கடைசியில்..

தமிழர்கள்.. மீண்டும் தொடக்கப் புள்ளியில்.. 

அழிவுகளும்.. இழப்புகளும்.. ஆக்கிரமிப்புக்களும்.. அடக்குமுறைகளும்.. தான் தீர்வு. 

அஸ்ஸலாமு அலைக்கும் நெடுக்கர். இறுதித்தீர்வை கண்டுகொண்டதற்கு பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 13 லை உவருக்கு என்ன இருக்கென்று தெரியுமோ....

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, alvayan said:

உந்த 13 லை உவருக்கு என்ன இருக்கென்று தெரியுமோ....

ஆரைக்கேட்கிறியள். மேலை சிவலிங்கத்தோடை இருக்கிறவரையோ அல்லது மோடி ஐயாவையோ??
பகிடி என்னவென்றால் ரெண்டுபேருக்கும் அதில என்ன கோதாரி இருக்கெண்டு தெரியாது. ஆனால் அடிக்கிற பீலாக்களுக்கு அளவேயில்லை.

13 வது திருத்தம் குறித்த மோடியின் கருத்திற்கு இலங்கை உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை- சண்டே டைம்ஸ்

 

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளிற்கு இலங்கை உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை.
நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை தமிழ் மக்களின் ஐக்கிய இலங்கைக்குள்ளான சமத்துவம் நீதி கௌரவம் குறித்த அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அவர்களது நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13வது திருத்தம் குறித்த விடயங்கள் குறிப்பிடப்படவில்லை.மாறாக இந்திய அறிக்கை போன்று இரு நாடுகளின் தலைவர்களும் ஆராய்ந்த பரந்துபட்ட விடயங்கள் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வடபகுதி கடலில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை குறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என பிரதமர் வெள்ளிக்கிழமை வடபகுதி மீனவர்களிடம் தெரிவித்த போதிலும் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இருநாட்டு மீனவர்கள் தொடர்புபட்ட விடயங்களுக் வழமையான கலந்தாலோசனைகள் இருதரப்புஅதிகாரிகள் ஊடாக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/72842

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ராஜபக்‌ஷ அரசு தப்ப முடியாது; சம்பந்தன்

 

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ஷ அரசு தப்பவே முடியாது.

இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான காணொலிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: –

“இலங்கையும் இந்தியாவும் ஒருமித்துச் செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். பல துறைகளில் ஒருமித்துச் செயற்படுவதற்கு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதமும் தெரிவித்திருக்கின்றார்கள். இதுவும் வரவேற்க வேண்டியவிடயம்.

விசேடமாக இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குப் பல வசதிகளை இரு நாட்டு அரசுகளும் செய்துள்ளன. அதுவும் வரவேற்க வேண்டிய விடயம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் நீதியின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் – கெளரவத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் – பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும் வலியுறுத்தலாகவும்உள்ளது.

இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய பாரதப் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் தற்போதைய அரசும் முன்னாள் அரசுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன. இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்.

அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக் கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான – உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. இதைப்பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார்.

அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, என்ன நடக்கப்போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

http://www.ilakku.org/இந்தியாவுக்குக்-கொடுத்த/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.