Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று இன்று சற்றுமுன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இதன்படி 9ம் திகதி முதல் ஆரம்பிக்க இருந்த 2ம் தவணை விடுமுறை நாளை (05) ஆரம்பிக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து பீதி அடைய வேண்டாம், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அவர் பொது மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/நாட்டின்-அனைத்து-பாடசாலை/

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பகாவில்.. கொரோனா என்றால்.. எதுக்கு நாடு பூராவும் பாடசாலைகளை மூட வேண்டும்.

எதிலும் பொய் பித்தலாட்டம்.. இதுவே சிங்களவர்களின் வாடிக்கையாகிவிட்டது. கொரோனா அபாயம் சொறீலங்காவில் பலமாக உள்ளது. அதை மறைத்து மகிந்த கோத்தா கும்பல் ஆடிய ஆட்டத்தின் விளைவு மிக விரைவில் வெளி வரும். 

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இரண்டாவதாக இருக்கும் சிறிலங்கா முதலாமிடத்தை நோக்கி செல்கிறது. ஆனாப்பட்ட நியூசிலாந்து எல்லாம்  எந்த மூலைக்கு??🙂

  • கருத்துக்கள உறவுகள்

நாளை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பிப்பதாக சொன்னார்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டவர்களுடைய கொண்டாட்டங்களினாலும்
அதன் விளைவாக மாணவர்கள் மூலம் பாடசாலைகள் பலவற்றிலும் கொரோனாத் தொற்று இன்றைய நிலைமையில் மோசமாக இருக்கின்றது.
பாடசாலைகள் சில வாரங்கள் கூடுதலாக மூடப்படுவது கொரோனாவைக் குறைப்பதற்கு வழி செய்யாலாம்.
இலங்கை அரசு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

தனிப்பட்டவர்களுடைய கொண்டாட்டங்களினாலும்
அதன் விளைவாக மாணவர்கள் மூலம் பாடசாலைகள் பலவற்றிலும் கொரோனாத் தொற்று இன்றைய நிலைமையில் மோசமாக இருக்கின்றது.
பாடசாலைகள் சில வாரங்கள் கூடுதலாக மூடப்படுவது கொரோனாவைக் குறைப்பதற்கு வழி செய்யாலாம்.
இலங்கை அரசு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.

உண்மைதான்.

இலங்கை போன்ற மருத்துவ ஆளணி வளம், படுக்கைகள், வெண்டிலேட்டர் போன்ற இதர சாதனங்கள் குறைவான நாட்டில் வரமுன் காப்பதே ஒரே வழியாக இருக்கும். தொற்று பெருகினால் கட்டு படுத்தல், நோய் பராமரிப்பு கஸ்டமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாளை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பிப்பதாக சொன்னார்களே. 

வாயிலை அல்வா 

பிழையான முடிவுகளை எடுத்து செல்கிறது கோத்தா அரசு என்கிறம் யார் கேட்டார்கள் இன்று அந்த மாணவர்கள் நிலை ?

உயர்தர பரீட்சை   அடுத்த கிழமை என்பதாக தான் திட்டமிடப்பட்டிருந்தது..

15 hours ago, nedukkalapoovan said:

ஹம்பகாவில்.. கொரோனா என்றால்.. எதுக்கு நாடு பூராவும் பாடசாலைகளை மூட வேண்டும்.

எதிலும் பொய் பித்தலாட்டம்.. இதுவே சிங்களவர்களின் வாடிக்கையாகிவிட்டது. கொரோனா அபாயம் சொறீலங்காவில் பலமாக உள்ளது. அதை மறைத்து மகிந்த கோத்தா கும்பல் ஆடிய ஆட்டத்தின் விளைவு மிக விரைவில் வெளி வரும். 

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

 ஆபத்து எல்லா இடத்திலும் இருக்கிறது; ஆனால் கொரனாவை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயற்ப்டது என்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.

15 hours ago, nedukkalapoovan said:

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

கொரொனா என்ன சிங்களவனை மட்டுமா கொல்லும்? அது தமிழனையும் கொல்லும்...அதே போல் பொருளாராத. ரீதியில் உயர்ந்த நிலையில் இருக்கும் சிங்களவனின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பை தாங்கும்..... ஆனால் ஏற்னவே வங்குரொத்து நிலையில் இருக்கும் எமது பொருளாதாரம் என்னவாகும்? 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசை  எல்லாவற்றிற்கும் ஏசுவது தவறு. இது ஒரு பிரபல ஆடை தொழில்சாலை நிறுவனம். இங்கு புங்குடுதீவிலிருந்து தமிழ் பெண்களும் வந்து வேலை செய்கின்றார்கள். அரசு எடுத்தது சரியான முடிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொற்றல், அங்கே வேலை செய்த இரு புங்குடுதீவு இளம்பெண்கள் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களோடு தொடர்பில் வந்த சிலர் பின்னர் வேறு வடபகுதி பிரதேசங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். 

நவீன தொழில் நுட்பம், பயங்கரவாத தடுப்பிற்காக மக்களைப் பின் தொடர்தல் என்று அசத்தும் சில மேற்கு நாடுகளிலேயே செய்ய இயலாத contact tracing ஐ இலங்கையில் மனித வளத்தை மட்டும் பாவித்து இதெல்லாம் நடக்கிறது. இங்க இருந்து சிங்களவர்கள் என்ன செய்தாலும் அது சொத்தை தான் என்று குற்றம் சொல்லும் ஆட்களின் புகுந்த நாட்டிலோ தொற்றும் குறைந்த பாடில்லை, பொருளாதாரமும் சாக்கடையில்!

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் சிலர் நல்லா மகிந்த கோத்தா சிங்களப் பயங்கரவாத அரசுக் கும்பலுக்கு வக்காளத்து வாங்கினம்...

ஆனால்.. பிபிசியில் பிரசுரமாகியிருக்கும்.. இந்தப் படம் சொல்லும் சேதியை உலகிற்கு..

ஆயுத முனையில்.. கொரோனாவோடு அடிபடும் ஒரே நாடு சொறீலங்கா ஆகும்..

Sri Lanka shuts schools after 'mystery' Covid case

Curfew has been imposed in the town of Divulapitiya

Image caption: Curfew has been imposed in the town of Divulapitiya

Sri Lanka has announced an early end to school terms after a factory worker in the town of Divulapitiya - on the outskirts of the capital Colombo - tested positive for Covid-19. Curfew has been imposed in the town.

The unidentified woman's daughter has since tested positive, along with at least 69 other workers at the factory.

It is unclear how the woman contracted the virus. Sri Lanka's cases of Covid-19 have been contained to specific clusters so far. The health ministry says there have been 3,471 cases and 13 deaths recorded there since March. Since then, the country has shut down the airport for commercial flights and has only been allowing in repatriated citizens - who have to spend a month in quarantine. This is the first reported case in weeks.

Officials are now conducting more tests, and have placed more than 1,000 people in quarantine. They are also attempting to trace where and how the woman may have contracted the virus.

The news sent has shockwaves through a country where life had resumed pre-pandemic normalcy. Officials have asked people to suspend all non-essential travel. Panic buying has been reported in some areas.

https://www.bbc.co.uk/news/live/world-54382914/page/2

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்வது போல கடும் ஆயுதம் தரித்த பொலிஸும் ஆமியும் தான் ஊரடங்கை அமல் படுத்துதாம்!  இப்படி செய்யாமல் மக்களை சாதாரணமாக இருக்க விட்டால் கொஞ்சம் சனம் சாகலாம் கொரனாவால, பிறகு இங்க திரும்ப வந்து "சொறிலங்கா பொறுப்பில்லாமல் மக்களைச் சாக விட்டு விட்டது" என்று தீ கக்க வசதி தான்!😎

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

ஹம்பகாவில்.. கொரோனா என்றால்.. எதுக்கு நாடு பூராவும் பாடசாலைகளை மூட வேண்டும்.

எதிலும் பொய் பித்தலாட்டம்.. இதுவே சிங்களவர்களின் வாடிக்கையாகிவிட்டது. கொரோனா அபாயம் சொறீலங்காவில் பலமாக உள்ளது. அதை மறைத்து மகிந்த கோத்தா கும்பல் ஆடிய ஆட்டத்தின் விளைவு மிக விரைவில் வெளி வரும். 

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

சில நாட்களாக நெஉக்கரின் கருத்தை பார்க்க எனக்கென்னமோ கைலாசாவில் இருக்கிறமாதிரித்தான் இருக்கு நாட்டு நில,ஐயே தெரியாமல் இருக்கிறார் அதற்க்காக சொன்னேன்

1 hour ago, Justin said:

நெடுக்கர் சொல்வது போல கடும் ஆயுதம் தரித்த பொலிஸும் ஆமியும் தான் ஊரடங்கை அமல் படுத்துதாம்!  இப்படி செய்யாமல் மக்களை சாதாரணமாக இருக்க விட்டால் கொஞ்சம் சனம் சாகலாம் கொரனாவால, பிறகு இங்க திரும்ப வந்து "சொறிலங்கா பொறுப்பில்லாமல் மக்களைச் சாக விட்டு விட்டது" என்று தீ கக்க வசதி தான்!😎

அவருக்கு ஊர் நிலை தெரியாது ஆளை விடுங்கள் 

19 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாளை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பிப்பதாக சொன்னார்களே. 

பரீட்சைகள் அறிவித்த திகதியில் நடக்குமென அரசு கூறியுள்ளது ஆனாலும் அது நிலயை பொறுத்து தடைப்படலாம் அல்லது பிற்போடப்படலாம் 11.10.2020 தரம் 5 மாணவர்களுக்கு புலமை பரீட்சை 12 .10.2020 உயர்த்தர பரீட்சை என 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சில நாட்களாக நெடுக்கரின் கருத்தை பார்க்க எனக்கென்னமோ கைலாசாவில் இருக்கிறமாதிரித்தான் இருக்கு நாட்டு நிலையே தெரியாமல் இருக்கிறார் அதற்காக சொன்னேன்.

எனக்கென்னவோ.. நீங்கள் எல்லாம் மகிந்த கோத்தா தரப்புக்கு யுத்த காலத்தில் பயப்பிட்ட அதே பயத்தில் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. மக்களை ஒரு பய பீதியில் வைத்திருப்பது தான் மகிந்த கோத்தாவின் சிங்களப் பேரினவாத பாசிச அரசியலாகும். அது உங்கள் கருத்தில் அப்படியே தொனிக்கிறது.

சிங்கப்பூர்.. தென்கொரியா.. ஜப்பான்.. மேலும் வறிமைக் கோட்டில் உள்ள ஆபிரிக்க நாடுகள் கொரோனாவை இராணுவம்.. ஆயுதம் இன்றி கட்டுப்படுத்தி வருகின்றன. 

மேற்கு நாடுகளில்.. இருக்கும் அதீத சமூகச் சுதந்திரம்.. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தாமதங்களை காட்டினும்.. இறப்பு வீதம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்.. இவ்வளவு சாவுகள் இருப்பினும்.. தொற்றுக்கள் இருப்பினும்.. இராணுவம்.. ஆயுதம்.. பாவிக்கப்படவில்லை.. மக்களை அச்சுறுத்த. ஆனால்.. சொறீலங்காவில்.. எடுத்ததற்கும் ஆயுதத்தை இராணுவத்தை கொண்டு திரிவது சிங்கள பேரினவாத அரச பாசிச பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. மக்களும் இந்த அடக்குமுறைக்கு அடங்கி வாழப் பழகிவிட்டனர். 

இது உங்களின் தப்பல்ல.. அரசின் தவறை உணர முடியாதபடிக்கு அவர்கள் அங்கு மக்களை அடக்கி ஆண்டு வருவதன் விளைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.