Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் உயிரிழந்தாலும் பரவாயில்லை, எவனை கொலை செய்தாவது போரை முடியுங்கள் என  மஹிந்த கூறினார் 

 எப்படி சுடப்பட்டார் பாலச்சந்திரன்? போர்த்திக் கொண்டிருந்த சாரத்தில்  குழப்பம்: சரத்பொன்சேகா | LankaSee

பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினார்.

இவ்விடயத்தை மறுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, “பிரபாகரனின் மனைவி விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அவரது மூத்த மகன் விடுதலைப் புலிகளின் கேணல் தர அதிகாரி.  அவரது மகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். அவரது இளைய மகன் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தை படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

2009 இல் ஊடகங்களில் பரப்பப்பட்ட படத்தில் பிரபாகரனின் இளைய மகன் சாரம் அணிந்தபடி காணப்பட்டார். அவருக்கு அருகில் சீருடையுடன் சிலர் இருந்தார்கள்.

அந்த சீருடையைக் கவனித்தால், இந்திய படையின் காட்டு நடவடிக்கை படையணியின் உடையை போலிருப்பது தெரியும். செல்வராசா கஜேந்திரன் தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/பிரபாகரனின்-இளைய-மகனை-இர/

 

#############   #############   #################

 

எப்படி சுடப்பட்டார் பாலச்சந்திரன்? போர்த்திக் கொண்டிருந்த சாரத்தில் குழப்பம்: சரத்பொன்சேகா

 

பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன். என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…..

யாரை கொலை செய்தாவது போரை முடி என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த போதிலும் 2 இலட்சம் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் சவாலில் களமிறங்கி னோம். ஆனால் போர் வெற்றியை தனதாக்கிக் கொள்வதற்காக என்னையும் மீறி கனிஷ்ட நிலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கட்டளையிட்டார்.

இதனால் தான் போர் குற்றப் பிரச்சினைகளும் வெள் ளைக் கொடி விவகாரமும் ஏற்பட்டது

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செவ்வி பின்வருமாறு, இறுதிக்கட்ட போர் தொடர்பில் பாராளு மன்ற உரையில் குற்றச்சாட்டுக்கள் சிலவற் றை முன் வைத்தீர்கள். உண்மையில் போரின் இறுதி தருணங்களில் நடந்தது என்ன?

இறுதிக்கட்ட போர் தொடர்பில் நான் குற்றச்சாட்டுக்களை செய்யவில்லை. மே மாதம் 11 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 17 ஆம் திகதி வரையில் நான் நாட்டில் இருக்க வில்லை.

இதனை பெரிய ஒரு விடயமாக காண்பித்து அப்போதைய ஆட்சியாளரும் அவரது பாதுகாப்பு செயலாளரும் இறுதிக்கட்ட போரை அவர்கள் முன்னெடுத்ததாக வெளிப்படுத்த முற்பட்டனர்.

ஆனால் ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் புது மாத்தளனை கைப்பற்றியதன் பின்னர் விடுதலை புலிகள் களப்பு மற்றும் கடல் பகுதிற்குள் ஒன்றரை கிலோமீற்றர் அகலம் மற்றும் 15 கிலோ மீற்றர் வரை நீளமான நிலப்பரப்பிற்குள் சிறைப்பட்டனர்.

இதன் பின்னர் உண்மையில் அந்த போரை ஜெனரல் தர அதிகாரிகள் நெறிப்படுத்த வேண்டிய தேவை காணப்படவில்லை.

சாஜன்ட் மற்றும் கோப் ரல் தரத்திலானவர்களே போரை முடிவிற்கு கொண்டு வந்தனர். நாட்டில் நான் இல்லை என்பதற்காக ராஜபக் ஷர்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை என நான் குறிப்பிட்டேன். இதன் பின்னர் வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பாக நான் கூறினேன்.

நடேசன் மற்றும் புலித்தேவன் போன்றவர்கள் சரணடைய வந்த போது கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறு தான் பரந்தளவில் பேசப்பட்டது. ஊடகங்களிலும் கூறப்பட்டது, நானும் கேள்விப்பட்டேன். எனவே தான் இது தொடர்பில் உரிய வகையில் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என நான் கூறுகின்றேன்.

ஏனென்றால் சரணடைபவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் செய்யக் கூடாது என நான் கட்டளையிட்டிருந்தேன். அவ்வாறு சரணடைய வருபவர்களை பொறுப்பேற்று பாதுகாக்க வேண்டும் என்பதை நான் தெளிவாகவே கட்டளையிட்டிருந்தேன்.

இதனடிப்படையில் தான் சரணடைந்த 12 ஆயிரம் பேரை பொறுப்பேற்று பாதுகாத்தோம். புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோருக்கு சரணடைய வேண்டிய தேவை காணப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.

சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருடன் இது குறித்து பேசப்பட்டு பின்னர் அவர்கள் பஷில் ராஜபக் ஷவுடன் இவர்களின் சரணடைவு தொடர்பில் பேசியுள்ளனர். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் புலிதேவன் மற்றும் நடேசன் சரணடைய வந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது.

எனவே இது குறித்து கட்டாயமாக விசாரணை செய்யப்பட வேண்டும். யாராவது தவறான கட்டளையை வழங்கினார்களா? அவ்வாறு வழங்கியிருந்தால் ஏன் வழங்கினார்கள்?

என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். போரின் இறுதி ஒரு வார கால பகுதியில் நீங்கள் நாட்டில் இருக்க வில்லை என்று கூறியுள்ளீர்கள். அவ்வாறாயின் இறுதிக்கட்டப் போரை முன்னெடுப்பது தொடர்பில் இராணுவத்திற்கு கட்டளையிட்டது யார்?

மே மாதம் 11 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 17 ஆம் திகதி இரவு 9 மணி வரை நான் நாட்டில் இருக்கவில்லை. ஆனால் இராணுவத்திற்கு கட்டளையிட்டது நான் . எனது கட்டளையின் கீழ் போரை நெறிப்படுத்திய அதிகாரிகள் என்னுடன் சீனாவிற்கு சென்றிருந்தனர்.

புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான வரைபு படங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்து சென்றிருந்தோம்.

ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் களத்தில் இருந்த தளபதிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தேவையான ஆலோசனை களை வழங்கினேன். கொழும்பில் இருந்து எவ்வாறு போரை நெறிப்படுத்தினேனோ அதேபோன்று சீனாவில் இருந்தும் நெறிப்படுத்தினேன்.

கொழும்பு – சீனா என்று எனக்கு வேறுபடவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே மாதம் 19 ஆம் திகதி வரை உயிருடன் இருந்ததாக நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். அதனை எவ்வாறு உறுதிப்படக் கூறினீர்கள் ?

மே மாதம் 19 ஆம் திகதி வரை போர் இடம்பெற்றது. உயிருடன் இருந்து கொண்டு அவர் எமக்கு எதிரான போரை முன்னெடுத்தார். 19 ஆம் திகதி போர் முடிந்த பின்னர் தான் நந்திக்கடல் களப்பில் வடக்கு மூலையில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது. அதாவது 19 ஆம் திகதி பகல் 11 மணியளவில் தான் போர் முடிந்து விட்டது.

பிரபாகரனின் சடலம் கிடைத்து விட்டது என அங்கிருந்து எனக்கு தகவல் கிடைத்தது. ஆகவே பிரபாகரன் இறுதி வரை களத்தில் இருந்து போர் செய்தமையை என்னால் உறுதிப்படக் கூற முடியும்.

19 ஆம் திகதி 11 மணியளவில் தான் பிரபாகரன் களத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பம் மற்றும் அவரது இளைய மகன் உயிரிழப்பு தொடர்பில் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றது…..

பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன்.

balachandran_02.jpg

ஒரு படத்தில் சாரம் ஒன்றை போர்த்திக் கொண்டு பங்கரில் இருப்பது போன்று உள்ளது. அந்த பங்கரை இராணுவத்தினது என்று கூற முடியாது. ஏனென்றால் அந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளும் பங்கரில் தான் இருந்தனர். பிரபாகரனின் மகன் கைது செய்யப்பட்டிருந்தால் அவ்வாறு பங்கரில் இருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.

குறைந்தபட்சம் வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றிற்காவது கொண்டு வந்திருப்போம்.

இராணுவ நடவடிக்கைகளின் போது முன்னிலையில் இருந்து போரிடுபவர்கள் தான் இவ்வாறு பங்கர்களில் இருப்பார்கள். எனவே நிலைப்பாடு யாதெனில் அது விடுதலைப் புலிகளின் பங்கர். அதில் தான் இளைய மகன் இருந்துள்ளார்.

ஏனென்றால் விடுதலை புலிகளின் தலைவர்களும் பங்கர்களில் தான் இருந்தனர். அவர் போர்த்திக் கொண்டிருந்த சாரம் கூட அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் ஒன்று. அவ்வாறான சரங்கள் முகாம்களில் இல்லை. இராணுவத்திடமும் இல்லை.

எனவே பிஸ்கட் ஒன்றை சாப்பிட்டு கொண்டு அந்த பங்கரில் இருக்கின்றமை இதிலிருந்து வெளி ப்படுகின்றது. அவர்கள் இறுதியில் பங்கர்களில் தான் இருந்தனர். அவரது குடும்பமும் கூட இருந்து இருக்கலாம். பிரபாகரனும் இருந்து இருக்கலாம்.

மற்றப் புகைபடத்தில் துப்பாக்கி சூடுபட்டு கீழே கிடந்தார். எனவே எப்படி சுடப்பட்டார்?

எங்கு வைத்து சுடப்பட் டார்? என்பது தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது. உதாரணமாக 16 ஆம் திகதி இரவு நந்திக்கடல் களப்பை சுற்றி மூன்று பாதுகாப்பு வலயங்களை நான் போட்டிருந்தேன்.

விடுதலை புலிகள் இந்த பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு முல்லைத்தீவு காட்டுக் குள் செல்வதற்கு முற்பட்டனர். முதலாவது பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது உயிரிழந்தவர்களின் சுமார் 75 சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் போது சில சடலங்களை எம்மால் எடுக்க முடியாமல் போயிருக்கலாம். களப்பில் விழுந்திருக்கலாம்.

சூட்டுக் காயங்களுடன் சிலரை தூக்கியும் சென்றிருக்கலாம். அந்த இடத் தில் பிரபாகரனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இருந்தார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. பாதுகாப்பு வலயங்களை உடைத்து கொண்டு பிரபாகரனின் குடும்பத்தினருடன் முல்லைத்தீவு காட்டிற்குள் செல்வதற்கே விடுதலை புலிகளின் போராளிகள் முற்பட்டனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இளைய மகன் துப்பாக்கி சூட்டிற்கு இல க்காகியும் இருக்கலாம்.

எனவே அந்த புகைப்படங்கள் இராணுவ முகாம் ஒன்றில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூற இயலாது. உயிரிழந்திருக்கலாம். அவ்வாறான படங்களை எடுக்கவும் முடியும் .ஆனால் அந்த படங்கள் உண்மை என்றால் பாதுகாப்பு வலயங்களை உடைக்க முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருக்கலாம்.

ஏனென்றால் பாதுகாப்பு வலயங்களை உடைத்துக் கொண்டு முன்னோக்கி நகர முற்படுகையில், அதாவது 17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் போது இடம்பெற்ற போர் 17 ஆம் திகதி இரவு 2.30 மணியிலிருந்து மறுநாள் அதாவது 18 ஆம் திகதி பகல் 1 மணி வரை நீடித்தது. இங்கு தான் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். பிரபாகரனும் இந்த இடத்தில் இருந்து தான் போர் நீடித்ததன் காரணமாக அங்கிருந்து வட திசையை நோக்கி செல்ல முற்பட்டிருப்பார். எனவே அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழந்திருக்கலாம்.

விடுதலை புலிகளின் வேறு தலைவர்கள் சரணடைவது தொடர்பில் அரசியல் தரப்புகளுடன் தொடர்புகொண்டு உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா ? 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர். அதற்கு முன்னர் சரணடைவது தொடர்பில் பேசப்படவில்லை.

சரணடைவது தொடர்பில் எம்முடன் யாரும் தொடர்புக்கொள்ளவும் இல்லை. போர் நிறுத்தம் கேட்ட போது நாங்கள் வேண்டாம் என்று கூறியும், மஹிந்த ராஜபக் ஷ போர் நிறுத்தத்தை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வழங்கினார்.

இந்த போர் நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு பிரபாகரன் முல்லைத்தீவில் எனது பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதன் போது 5 கிலோ மீற்றர் வரை பின் சென்று ஒரு மாதிரி நிலையை நாங்கள் தக்க வைத்துக் கொண்டோம். இதனை தவிர சரணடைவது தொடர்பில் என்னுடன் யாரும் பேச வில்லை. ஆனால் பஷில் ராஜபக் ஷவுடன் கலந்துரையாடப்பட்டதாக தகவல் உள்ளது.

எனவே இதனுடன் மேலும் தொடர்புபட்ட சர்வதேச தரப்புகள் ஒரு கட்டத்தில் வெளியில் வந்து கூறுவார்கள். விடுதலை புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள். இந்த பணம் எப்போது வழங்கப்பட்டது?

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதே விடுதலை புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. தமிழ் மக்களை வாக்களிக்க விடாது பிரபாகரன் தடுத்தார்.

ஒருவர் மாத்திரமே வாக்களித்தார். அவரது கைகளும் வெட்டப்பட்டது. வாக்களிப்பதை தடுப்பதற்காகவே பிரபாகரனுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

பஷில் ராஜபக் ஷ விடுதலை புலிகளுக்கு பணம் வழங்கியமை தொடர்பில் எனக்கு கூறினார். 200 மில்லியன் ரூபா வழங்கியுள்ளனர். இந்த பணம் எதற்காக வழங்கப்பட்டது? தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுப்பதற்கு கைமாறாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என பிரபாகரனிடம் இவர்கள் கேட்டுள்ளனர். கடற் புலிகளுக்கு தேவையான படகுகள் மலேசியாவில் உள்ளன.

அதனை பெற்றுக் கொள்ள 2 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது. அதற்கு தேவையான பணத்தை தருமாறு பிரபாகரன் கேட்டுள்ளார். இதனடிப்படையிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என கூறினாலும் அவற்றை நான் பதிவு செய்ய வில்லை.

ஆனால் அப்போதைய இராணுவ தளபதி என்ற வகையில் எனக்கு நினைவில் உள்ளது. போரின் இறுதி தருணத்தில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் எதுவும் உங்களுக்கு காணப்பட்டதா? போரின் கௌரவத்தை பெற்றுக்கொள்ளும் பேராசையில் என்னை ஓரங்கட்ட முற்பட்டனர்.

ஜகத் ஜயசூரிய வவுனியாவிற்கு பொறுப்பாக இருந்தார். இவ ருக்கு பொறுப்பளித்து விட்டு என்னை விலகியிருக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கூறினார். நல்லவேளை, நான் விலக வில்லை.

ஏனென்றால் அந்த காலப்பகுதியில் புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதிகளில் பிரபாகரன் கடும் தொடர் தாக்குதல்களை இராணுவ நிலைகள் மீது தொடுத்தார். நான் இருந்திருக்கா விட்டால் போர் தலைகீழாகி விட்டிருக்கும்.

ஜகத் ஜயசூரியவிற்கு அவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ளவோ பதில் தாக்குதலுக்கு திட்டமிடவோ முடியாது. இதனை தவிர எனக்கு வேறு அழுத்தங்கள் கொடுக்க வரவில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் என்னூடாக இல்லாமல் கனிஷ்ட நிலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

சவேந்திர சில்வா, கமல் குணரட்ன ஆகியோருடன் பாதுகாப்பு செயலாளர் தொலைபேசியில் தொடர்புக்கொண்டிருந்தார். இவ்வாறு உரையாடியமையினால் தான் வெள்ளைக்கொடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன என நான் நினைக்கின்றேன்.

பாதுகாப்பு செயலாளர் என் ஊடாக தான் கனிஷ்ட அதிகாரிகளுடன் பேசியிருக்க வேண்டும். அவர் செய்தது தவறு . ஆனால் மஹிந்த ராஜபக் ஷ 2008 ஆம் ஆண்டில் இருந்து போரை சீக்கிரம் முடித்து தருமாறு எனக்கு கூறிக்கொண்டிருந்தார்.

அவசரமாக போரை முடிவிற்கு கொண்டு வர முடியாது. பொது மக்கள் உள்ளே இருக்கின்றனர். எனவே நிதானமாக தான் போரை முன்னெடுக்க வேண்டும் என அப்போது நான் கூறினேன்.

யார் உயிரிழந்தாலும் பரவாயில்லை, எவனை கொலை செய்தாவது போரை முடியுங்கள் என மஹிந்த ராஜபக் ஷ கூறினார். பொதுமக்கள் பாதிப்புகள் தொடர்பில் உங்களால் கூற முடியுமா? பொது மக்கள் மீதான பாதிப்புகள் தொடர்பில் கூறப்படுவது போன்று பல்லாயிரம் பேர் உயிரிழக்க வில்லை. அவ்வாறு உயிரிழந்திருந்தால் அங்கு தோண்டும் போது எலும்புகள் கிடைத்திருக்கும்.

ஆனால் புதுமாத்தளன் பகுதியில் விடுதலை புலி உறுப்பினர்களை அவர்களது புலி கொடியுடன் வானத்திற்கு துப்பாக்கி பிரயோகம் செய்து புதைப்பதை கண்டோம்.

900 பேர் வரை புதைப்பதை மேலிருந்து யு வீவில் பார்த்துக் கொண்டிருந்தோம். இதனை தவிர வேறு உயிரிழந்தவர்களை புதைப்பதை நாங்கள் காண வில்லை. அதே போன்று போரின் இறுதி ஒன்றரை மாதத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியில் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

காயமடைந்தவர்களை இவ்வாறு வெளியில் கொண்டு வந்து புல்மோட்டையில் வைத்து கடற்படையிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு 350 பேர் வரை தான் கொண்டு வந்தனர். கூறுவது போன்று உயிரிழந்திருந்தால் படுகாயமடைந்தவர்கள் 2 அல்லது 3 ஆயிரம் வரையில் இருந்திருக்க வேண்டும். எனவே பாரிய இழப்பு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல.

ஆனால் போர் இடம்பெற்ற பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு சிறு காயங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. மிகவும் கவனமாக போரை முன்னெடுத்தமையினால் தான் இறுதித் தருணத்தில் 2000 இராணுவம் உயிரிழந்தது.

2008 ஆம் ஆண்டில் முழு வருடத்திலும் 2000 இராணுவமே உயிரிழந்தது. 2009 ஆம் ஆண்டு 4 மாதங்களில் 2000 பேர் உயிரிழந்தனர். கனரக ஆயுதங்கள் இதன் போது பயன்படுத்த வில்லை. நீண்ட தூரம் தாக்கக் கூடிய தன்னியக்க துப்பாக்கிகள் பயன்படுத்த வில்லை.

கவனமாக போரை முன்னெடுத்தமையினால் எமக்கு இழப்புகள் அதிகமானது. ஆனால் இறுதி போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளது….

நாங்கள் பயன்படுத்த வில்லை. அவ ர்கள் பயன்படுத்தினார்கள். சிறு ரக மோட்டார் குண்டுகளை விடுதலை புலி கள் பயன்படுத்தினார்கள். இராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டன. சிகிச்சை கள் அளித்தோம். எனது இராணுவம் அவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்த வில்லை. அவை பெற்றுக் கொள்வதும் எளிதான விடயமல்ல. எந்த நாடுகளும் அவ்வாறான ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை.

போரின் பின்னரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை….. நல்லாட்சி அரசாங்கம் அவர்களை கைவிட வில்லை. மிகவும் நட்பு ரீதியாக தமிழ் அரசியல் தலைமைத்துவங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடி வருகின்றது.

முதலமைச்சருடனும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இதனை யாரும் செய்ய வில்லை. வடக்கில் வீதிகளை அமைத்தார்கள். அதில் தான் கொள்ளையடிக்க முடியும்.

இதனை கருத்தில் கொண்டு செயற்பாட்டார்களே தவிர மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கவனம் செலுத்த வில்லை. பாதுகாப்பு செயலாளர் உட்பட சூழ இருந்தவர்களும் அதற்கு ஆலோசனை வழங்க வில்லை. ஆனால் நான் போர் முடிவடைந்த பின்னர் மீள் குடியேற்றம் மற்றும் அடிப்படை தேவைகைள பூர்த்தி செய்வது தொடர்பில் திட்டம் ஒன்றை கையளித்தேன்.

அதனை பொருட்படுத்த வில்லை. விடுதலை புலிகளின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது? சிங்கள ஊடகங்கள் பல புலிகளின் தங்கங்கள் தொடர்பில் வெளிப்படுத்தின. ஆனால் அவை குறித்து இன்றும் விசாரணைகள் ஏன் முன்னெடுக்க வில்லை என எனக்கு விளங்கவில்லை. அரசாங்கம் புலிகளின் சொத்துக்கள் மற்றும் தங்கம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

நான் இராணுவ தளபதியாக இருந்த காலப்பகுதி யில் 220 கிலோ தங்கம் கிடைத்தது. ஆனால் 110 கிலோ தங்கம் தான் கிடைத்ததாக நான் சிறையில் இருந்த போது பஷில் ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். சரியாக 50 வீதத்தை எடுத்து விட்டனர்.

அதன் பின்னரும் பல இடங்களில் தங் கம் கிடைத்தது. புலிகளின் தங்கம் கொள் ளையடிக்கப்பட்டுள்ளது. அப்போது அதி காரத்தில். இருந்தவர்கள் அதற்கு பொறு ப்புக் கூற வேண்டும். விேசடமாக பாது காப்பு செயலாளர் அறிந்திருக்க வேண் டும்.

இறுதிக்கட்டப் போர் தொடர்பில் இராணு வத்திற்கு எதிராக சர்வதேச குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன ? சர்வதேசத்தில் இடம்பெயர்ந்தவர்களில் சிலர் பயங்கரவாதத்திற்கு உதவி செய் தனர்.

இவர்கள் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பெரிதாக பேசு கின்றனர். ஆனால் இராணுவம் சர்வ தேச மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு மதிப்ப ளித்து போரை முன்னெடுத்தது. மனித உரிமைகளை மீறுவதற்கு நான் திட்டங் கள் அமைக்க வில்லை.

இராணுவ நடவ டிக்கைகளின் போது கண்காணிப்பு செய் தேன், வழி நடத்தினேன். போர் வியூகங் களை வகுத்தேன் இவை அனைத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத் தியே முன்னெடுத்தேன். ஆனால் விடு தலை புலிகள் மக்களை கவசமாக பயன் படுத்தினார்கள். அதனை புலிகள் பொறு ப்பேற்க வேண்டும்.

எவ்வாறாயினும் விடு தலை புலிகளிடம் சிறைப்பட்டிருந்த 2 இலட்சம் மக்களை கடும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்டெடுத்தோம். இந்த கட்டத் தில் இராணுவ அதிகாரிகள் சாதாரண சிப்பாய்கள் கூடுதலாக உயிரிழந்தனர்.

ஆனால் மக்களை பாதுகாப்பாக மீட்டெ டுக்க முன்னுரிமை வழங்கி செயற்பட் டோம். எவ்வாறாயினும் யாராவது தவறு செய்திருந்தால் அதனை தனிப்பட்ட ரீதி யில் பொறுப்பேற்க வேண்டும். மொத்த இராணுவத்தின் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

ஆட்சியாளரும் அதனை சூழ இருந்தவர்களும் கொள்ளையடித்து பல் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் இராணுவத்திலும் ஓரிருவர் இருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை.  என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

www.lankasee.com

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"விடுதலைப்புலிகள்" பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா? முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்

6 அக்டோபர் 2020
சரத்

பட மூலாதாரம், SARATH FONSEKA FB

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவரது இளைய மகன் பிரபாகரன் பாலச்சந்திரன் வரையான குடும்பத்திலுள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதியும் எம்.பியுமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தபோது இந்த கருத்தை வெளியிட்டார். 

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். 

கஜேந்திரனின் கருத்தை அடுத்து, சபையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 

இந்த நிலையில், எஸ்.கஜேந்திரனின் கருத்து உண்மைக்கு புறம்பானது என்பதனால், அதனை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்க வேண்டும் எனவும் ஆளும் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதையடுத்து, ஒழுங்கு பிரச்சனையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ஃபொன்சேனா, பாலச்சந்திரன் கூட பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார். 

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் எனவும் சரத் ஃபொன்சேகா கூறினார். 

பாலச்சந்திரன்

பட மூலாதாரம், JDS NOFIREZONE

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இராணுவ சீருடையில் இராணுவ படையை வழிநடத்தியதாகவும், பிரபாகரனின் மனைவி புலிகளின் விநியோக பிரிவிற்கு பொறுப்பானவராக செயல்பட்டதாக சரத் ஃபொன்சேனா குறிப்பிட்டார். 

அத்துடன், பிரபாகரனின் மூத்த மகன் அந்த அமைப்பின் கர்னலாக செயல்பட்டதுடன், அவரது மகள் பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவில் மேஜராக செயற்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார். 

இதனால், பிரபாகரனின் குடும்பத்தில் எவரும் அப்பாவிகள் கிடையாது என சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். 

யுத்தத்தில் பிரபாகரனின் குடும்பமே நாசமாகியதாக அவர் குறிப்பிட்டார். 

எனினும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோரின் சடலங்கள் மாத்திரமே தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார். 

ஆனால் பிரபாகரனின் குடும்பத்தினர் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதை கே.பி பின்னரான ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார் என சரத் பொன்சேகா சபையில் நினைவூட்டினார். 

பிரபாகரனின் இளைய மகன் பதுங்கு குழியொன்றில் இருப்பதை போன்றதொரு புகைப்படத்தையே தாம் பின்னர் அவதானித்ததாகவும், தமிழர்கள் அணியும் சாரத்தை போன்றதொரு உடையை அவர் அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், குறித்த சிறுவன் இராணுவத்திடம் கிடைத்திருந்தால், சாரம் அணிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்காது என்பதுடன், அவர் சேர்ட் மற்றும் கால்சட்டை அணிந்திருந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும், அந்த சிறுவனிடம் இருந்த நபர் அணிந்த சீருடையானது, விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தும் ஆடை எனவும் சரத் ஃபொன்சேகா சபையில் கூறினார். 

எனவே, உண்மைகளை மூடி மறைக்க வேண்டாம் எனவும், இலங்கை இராணுவத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம் எனவும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார்.
 

https://www.bbc.com/tamil/sri-lanka-54439881

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னர் அய்யா, ரோகண விசயவீராவின் மணைவி, பிள்ளைகள் இன்னும் உயிரோட இருக்கும் ரகசியம் என்ன எண்டும் சொல்லுறது! 🤨

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

  

14 hours ago, தமிழ் சிறி said:

அந்த சீருடையைக் கவனித்தால், இந்திய படையின் காட்டு நடவடிக்கை படையணியின் உடையை போலிருப்பது தெரியும்.

இவர் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கி இருக்கிறார்..ஹிந்திய இராணுவமும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது களத்தில் இருந்துள்ளதை. 

யுத்தக்குற்றத்தில் சொரறீலங்கா இராணுவத்தோடு ஹிந்திய இராணுவமும் இணைக்கப்படுதல் அவசியமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

  

இவர் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கி இருக்கிறார்..ஹிந்திய இராணுவமும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது களத்தில் இருந்துள்ளதை. 

யுத்தக்குற்றத்தில் சொரறீலங்கா இராணுவத்தோடு ஹிந்திய இராணுவமும் இணைக்கப்படுதல் அவசியமாகும். 

நெடுக்கர், நடக்கக்கூடிய சங்கதிகளில் ஆர்வமில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

நெடுக்கர், நடக்கக்கூடிய சங்கதிகளில் ஆர்வமில்லையா?

பூமி தட்டை என்றவர்கள்.. உருண்டை என்றோரைப் பார்த்து..  நடக்கக் கூடிய சங்கதிகளில் ஆர்வமில்லையா என்றே கேட்டனர்.. இப்படி பல கேள்விகளை சவால்களை சந்தித்தே மனித இனம்.. இந்தளவுக்கு முன்னேறி வந்திருக்கிறது.. எனவே இது ஒன்றும் புதிதல்ல.

எதுவும் சாத்தியத்தில் இருந்து உருவாவதில்லை.. தேவையில் இருந்தே உருவாகிறது.

எமது தேவை எமது மக்களின் துயருக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும்... பறிக்கப்பட்ட எம் மக்களின் உரிமைகள்.. பெறப்படுவதுமே ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, கற்பகதரு said:

நெடுக்கர், நடக்கக்கூடிய சங்கதிகளில் ஆர்வமில்லையா?

தயவு செய்து ஈழத்தமிழருக்கு நடக்கக்கூடிய சங்கதி ஒன்றை கூறவும்?
கூடியிருந்து கும்மி அடிப்பது நல்ல சங்கதி அல்ல.😎

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் படுகொலை – இந்திய இராணுவத்தை குற்றம் சாட்டும் பொன்சேகா?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன் இறுதியாகக் காணப்பட்ட பதுங்கு குழியில், அவருடன் இந்திய இராணுவத்தின் சீருடை அணிந்தவர்களே காணப்பட்டனர். பிரபாகரனின் குடும்பத்தில் எவருமே அப்பாவிகள் கிடையாது. அனைவரும் பயங்கரவாதிகளே. பாலச்சந்திரன் கூட சிறுவர் படையணியில் கட்டளையிடும் அதிகாரியாக இருந்தவர்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் ஒசாமா பின்லேடனா? அல்லது 12 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட், தண்ணி கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள் பின்லேடன்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து எழுந்த சர்ச்சையின்போதே மேற்கண்டவாறு தெரிவித்த  மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்,

பாலச்சந்திரனை படுகொலை செய்தது இலங்கை ராணுவம்தான்: ஐநா அறிக்கை | Srilankan  Army Killed Balachandran - UN Report

“பிரபாகரனும் அவரின் மூத்த மகனும் கொல்லப்பட்டது மட்டுமே இராணுவத்துக்குத் தெரியும். அவர்கள் இருவரினதும் உடல்களை மட்டுமே நாம் மீட்டோம். அவரின் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கே.பி. சொல்லியுள்ளார்.

பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன் ஒரு பதுங்கு குழியில் இருக்கும் படமே இறுதியாக வெளியானது. அதில் அவருக்கு அருகில் நிற்போர் இந்திய இராணுவத்தின் சீருடையையே அணிந்திருந்தனர். இது காட்டுச் சீருடை. இதனை எமது இராணுவத்தினர் அணிவதில்லை. ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் இவ்வாறான சீருடைகளைத்தான் அணிவார்கள்.

பிரபாகரனின் மனைவிதான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் விநியோகப் பிரிவுக்குப் பொறுப்பானவர். மூத்த மகன் கேணல், மகள் பெண்கள் படைப்பிரிவின் மேஜர்.

கடைசி மகனான பாலச்சந்திரன் சிறுவர் படையணியின் கட்டளையிடும் அதிகாரி. எனவே, பிரபாகரனின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்லர். அனைவருமே பயங்கரவாதிகள்தான்.

அதேவேளை, பாலச்சந்திரன் தொடர்பாக வெளியான படத்தில் அவர் சாரத்தைப் போர்த்தியவாறு காணப்படுகின்றார். ஆனால், நாம் அவரைப் பிடித்திருந்தால் நல்ல ஆடைகளையே வழங்கியிருப்போம். எனவே, படையினரைப் பற்றி தேவையற்ற கதைகளைக் கதைக்கக் கூடாது”  என எச்சரித்தார்.

https://www.ilakku.org/our-security-forces-didnt-kill-prabhas-youngest-son/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

எதுவும் சாத்தியத்தில் இருந்து உருவாவதில்லை.. தேவையில் இருந்தே உருவாகிறது.

சாத்தியமில்லாததை சாத்தியமாக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்றதையும் சொல்லலாமே? அதற்குள் உங்களது இன்றைய தேவை நாளை தேவையற்றதானால்... உருவாகாது, இல்லையா?
 

7 hours ago, nedukkalapoovan said:

எமது தேவை எமது மக்களின் துயருக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும்... பறிக்கப்பட்ட எம் மக்களின் உரிமைகள்.. பெறப்படுவதுமே ஆகும். 

உங்களது இன்றைய தேவை சாத்தியமாக எடுக்கும் காலத்தில், இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழ்மக்களுக்கு இந்த சங்கதி தேவையற்றதாகி விடும். நீங்களும் இந்த உலகுக்கு பிரியாவிடை கொடுத்து, ஆண்டுகள் பல கடந்துவிடும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது இலங்கை ராணுவத்தால் அல்ல, மாறாக இந்திய ராணுவம் அணியும் சீருடையினை ஒத்த சீருடையினை அணிந்த ராணுவத்தினரால் என்று சொல்கிறார். ஆனால், இதில் சுட்டிக்கட்டப்படவேண்டிய விடயம் என்னவென்றால், பாலச்சந்திரன் அருகில் நிற்கும் ராணுவ வீரனின் காற்சட்டையினை ஒத்த துணியிலேயே பொன்சேக்காவும் சீருடை அணிந்திருக்கிறார். ஆக, அவரே இக்கொலையைச் செய்ததாகக் கூறமுடியும் அல்லவா? சரி, அதுவும் வேண்டாம், இந்திய ராணுவச் சீருடையினை ஒத்த சீருடைகளைப் பெற்றுக்கொள்வது அவ்வளவு கடிணமா என்ன? உலகெங்கும் உள்ள ஆயுத வர்த்தகர்களிடம் சென்று பலகோடிகளுக்கு ஆயுதம் வாங்கும் ஒரு அரசு, இந்தியச் சீருடையினை ஒத்த துணியில் தனது விசேட படைப்பிரிவொன்றிற்கு சீருடை வாங்குவதென்பது அவ்வளவு கடிணமாக இருந்திருக்காது. சரி, இவையெதுவுமேயில்லை என்றால், இந்தப் பாதக் கொலையினைச் செய்தது களத்தில் நின்ற இந்திய ராணுவம்தான் என்று இவர் சொல்ல முனைவதாகவே கருதவேண்டும், ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்திய ராணுவம் இலங்கையில் ஒரு இனக்கொலையில் பங்கெடுக்க வரும்போது தனது சீருடை, தொப்பி, ஆள் அடையாளத் தகடு என்று எல்லாவற்றையும் கொண்டுவந்தே சண்டையிட்டிருக்கும் என்று நம்புவோமாக. 

அடுத்தது, பாலச்சந்திரன் சிறுவர் படையணித் தலைவர் என்பது. இது நம்பும்படியாகவா இருக்கிறது.12 வயதுப் பாலகனே ஒரு அணிக்குத் தளபதியென்றால், அவ்வணியின் ஏனையோருக்கு எத்தனை வயதிருக்கும்? ஆகவே பாலகர்களோடுதான் தாம் சண்டையிட்டோம் என்று இவர் சொல்லவருகிறாரா? ஆசியாவின் வீரம் மிக்க ராணுவம் ஒரு குழந்தைப் படையணியோடுதான் போரிட்டு வென்றது என்று இவர் உரிமை கோருவது தனது ராணுவத்திற்கு இழுக்காக இருக்கும் என்று இவர் நினைக்கவில்லை போலும். 

ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், தாம் பாலச்சந்திரனைக் கொல்லவில்லையென்று சத்தியம் செய்யும் பொன்சேக்கா, பிறகு எதற்காக அவர் ஒரு படையணியின் கட்டளைத் தளபதியாகவிருந்தவர், அவரும் ஒரு பயங்கரவாதியே என்று சொல்ல வேண்டும்? அப்படியானால், அவர் கொல்லப்பட்டது சரிதான் என்று மறைமுகமாக நியாயப்படுத்து முயல்கிறாரா பொன்சேக்கா? இந்த லட்சணத்தில், "பாலச்சந்திரன் ஏனைய புலிகள் போல சரம்தான் முதலில் அணிந்திருந்தார், ஆனால் பின்னரே காற்சட்டைக்கு மாறினார் என்று கூறும் பொன்சேக்கா, அதுகூட புலிகளின் தளபதிகள் அணியும் காற்சட்டைதான் என்று கூறுகிறார். அவர் உங்களிடம் சரணடையவும் இல்லை, அவரை நீங்கள் அருகிலிருந்து, கைக்கெட்டும் இடைவெளியில் சுட்டுக் கொல்லவில்லையென்றால், இந்த சாரம், காற்சட்டை சங்கதியெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது எப்படி? 
 

பாலச்சந்திரனை நீங்களும் கொல்லவில்லை, தமது தலைவரின் மகனைக் கொல்லவேண்டிய தேவை புலிகளுக்கும் இருந்திருக்காது. அப்படியானால், அவரை ஒரு பங்கருக்குள் இருத்திவைத்து, சிற்றுண்டியும் கொடுத்து அருகிலே இருந்து சுட்டுக் கொன்ற அந்த மூன்றாவது சக்தியெது?

 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறவர் மடையர், தாங்கள் புத்திசாலிகள் என நினைத்து, தம்மை நிஞாயப்படுத்தி விளக்கம் கொடுக்கப்போய் மாட்டிக்கொண்டார் இந்த முட்டாள். ஆக குழந்தைகளோடும், பெண்களோடும் சண்டை போடுவதற்கு வெளிநாடுகளின் ஆயுதம், ஆலோசனை, படை இத்தியாதி கொண்டு போராடி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு  இதில வெற்றிக்களிப்பும், கோஷமும் வேறு. இவர்களின் வெட்கக்கேட்டை இவர்களோடு சேர்ந்து உழைத்த நாடுகளும் அநுபவிக்க கடவென. 

  • கருத்துக்கள உறவுகள்

கற்பிணிப் பெண்ணை ஏன் சுட்டுக்கொன்றாய்? என கேட்டால், அது ஆயுதத்தை தாங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால் சுட்டுக்கொன்றோம் என்பான். லூசுப்பயல்!

  • கருத்துக்கள உறவுகள்

பாலாய் வார்த்து, தேனாய் ஊத்தினாலும் பாம்பு கடிச்சுத்தான் கொல்லுமாம், யானை அடிச்சுத்தான் கொல்லுமாம். அதுகளுக்கு மட்டுமல்ல, அதுபோன்ற குணமுள்ள மனிதருக்கும் பொருந்தும். இந்த நச்சுப்  பாம்புக்குத்தான் தமிழர் அடிச்சு விழுந்து வாக்குப் போட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

பாலாய் வார்த்து, தேனாய் ஊத்தினாலும் பாம்பு கடிச்சுத்தான் கொல்லுமாம், யானை அடிச்சுத்தான் கொல்லுமாம். அதுகளுக்கு மட்டுமல்ல, அதுபோன்ற குணமுள்ள மனிதருக்கும் பொருந்தும். இந்த நச்சுப்  பாம்புக்குத்தான் தமிழர் அடிச்சு விழுந்து வாக்குப் போட்டார்கள்.

யாரைச் சொல்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் பாசறையில் அகப்பட்டு, அடுத்து நிகழ இருக்கும் ஆபத்தை உணராமல், துப்பாக்கிக்கு இரையாகி மடியப்போகிறேன் என்று கூட தெரியாமல்   வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பாலகனை, கட்டளை அதிகாரியென வர்ணிக்கும் குசும்பனை சொல்கிறேன். சரி, புலியின் பங்கரில் இருந்தவர் தனது சீருடையுடன் அல்லவா இருந்திருப்பார். ஸைனற் குப்பி எங்கே? அந்த நேரத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டா இருந்திருப்பார்கள்? ஏன் அந்தபாலகனை மட்டும் எடுக்க வேண்டும்? அப்படியானால் அவன் இறந்துவிடுவான் என்று புலிகள் ஏற்கெனவே  நினைத்திருந்தார்களா? ஏதோ வெளிநாடுகள் செய்து முடித்த போரை, தான் முடித்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டு, வெட்கம் கெட்ட விளக்கம் கொடுக்கிறாராம். அந்த வீரனை சொல்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.