Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடையும் அபாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடைவதற்கான அபாய நிலைமை உருவாகும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கலாநிதி என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

“கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் என தங்களை அடையாளப்படுத்தியுள்ள போலி கும்பலொன்றின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இறக்குமதி செய்யும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடவுள்ளார்.

உண்மையில், இது எந்த விதத்திலும் நாட்டுக்கு நன்மை பயக்காத ஒரு விடயமாகும். ஏனெனில்,  இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பின் பின்னணியில் மறைமுகமாக பாரிய  குளறுபடிகள் உள்ளன.

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என கூறிக்கொண்டுள்ள இந்த கும்பல் பாம் எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து சந்தைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது.

‘பொல் குருட்ட’  என்ற தேங்காயின்ஒரு பகுதியை பயன்படுத்தி அதனுடன் எண்ணெய்த்தன்மையான பதார்த்தமொன்றை கலந்து பாம் எண்ணெய்யுடன்  கலவை செய்து விற்பனை செய்வதே இந்த மோசடிக் கும்பலின்  கள்ளத்தனமாகும். 

இதனால் பாவனையாளர்களுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்காது போகும்” என்றார்.

இந்த நடவடிக்கையினால் சந்தையில் தேங்காய்  ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை அதிகரிக்கும் அபாய நிலை உருவாகும் என நுகர்வோர்  உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/91642

  • Replies 56
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஏற்கனவே தேங்காய் கள்ளர் எக்கச்சக்கம்.....தேங்காய் விலை கூடுது எண்டவுடனை கள்ளர் சும்மாய் இருக்காங்கள்..... எனி என்ரை தென்னந்தோப்புகளுக்கு  வாச்சர் வைக்க வேணும்.😁

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இட்டலிக்கு தக்காளி சட்னி சாப்பிட வேண்டியான் .😢

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 வாச்சர் வைக்க வேணும்

இப்போ காவற்காரர்கள்தான் கொள்ளை அடிக்கினமாம், தென்னந்தோப்புக்குள்ள வேறு ஏதும் தொழில் நடைபெறாமலும் காவல் போடுங்கோ சாமியோவ்!

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தக்காளி சட்னி சாப்பிட வேண்டியான்

அடுத்து தக்காளிக்குத்தான் விலையேற்றமாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

இப்போ காவற்காரர்கள்தான் கொள்ளை அடிக்கினமாம், தென்னந்தோப்புக்குள்ள வேறு ஏதும் தொழில் நடைபெறாமலும் காவல் போடுங்கோ சாமியோவ்!

அடுத்து தக்காளிக்குத்தான் விலையேற்றமாம். 

இவ்வளவுகாலமும் காவல்காரர் எண்டால் சொந்தக்காரர்தான் .இனிமேல் புறத்தியாரரைத்தான் வைக்கவேணும்....😁

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவுகாலமும் காவல்காரர் எண்டால் சொந்தக்காரர்தான் .இனிமேல் புறத்தியாரரைத்தான் வைக்கவேணும்....😁

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, satan said:

வாழ்த்துக்கள்.

வாறதும் இனி வராது எண்டதை அழகாய் சொல்லியிருக்கிறியள். tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவுகாலமும் காவல்காரர் எண்டால் சொந்தக்காரர்தான் .இனிமேல் புறத்தியாரரைத்தான் வைக்கவேணும்....😁

இங்கிருந்து பார்க்க கூடியது போல் கமரா பூட்டி விடுங்க நீங்களே காவல்காரர் ஆகிடலாம் .😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

இங்கிருந்து பார்க்க கூடியது போல் கமரா பூட்டி விடுங்க நீங்களே காவல்காரர் ஆகிடலாம் .😀

என்ன பெருமாள் நீங்கள்?  😁
எங்களைப்போலை அட்டவதானி சந்ததியள்தான் அங்கையும் இருக்குதுகள். ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் கமரா பூட்டினாலும் சுழிப்பாங்கள் சுழியங்கள். சற்றலைட்டை தென்னங்காணிக்கு மேலை எவி விடாலும் சுழிப்பாங்கள். tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2020 at 20:30, குமாரசாமி said:

 ஏற்கனவே தேங்காய் கள்ளர் எக்கச்சக்கம்.....தேங்காய் விலை கூடுது எண்டவுடனை கள்ளர் சும்மாய் இருக்காங்கள்..... எனி என்ரை தென்னந்தோப்புகளுக்கு  வாச்சர் வைக்க வேணும்.😁

இலங்கையில் உள்ள கள்வர்களை நீங்கள் இன்னும் அறியவில்லை நேற்று என்ற மாமாவின் வளவில் தேங்காய களவெடுத்ததும் இல்லாமல் மட்டையை மட்டும் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள் இங்க 80 ருபா விலை 

ஆனால் எங்கள் வளவில் கடற்படை பறிச்சு விற்கிறாங்கள் அவங்கள் சமையலுக்கும் எடுக்கிறார்கள் எல்லாம் சுனாமி செஞ்ச வேலை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சந்தோசம்.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சந்தோசம்.....🤣

இதில் சந்தோசம் உங்களுக்கு வரலாம் எனென்றால் கொஞ்சம் நகர்த்துங்கள் முகாமை என்று சொன்னாலே 10 அடி மேலதிகமாக பிடிக்கிறார்கள் 

ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ அல்லது வேறு ஏதாவது செய்தாலோ என்ன நடக்கும் என்பத ஊகித்துக்கொள்ளுங்கள் அல்லது வெளிநாட்டில் நாலுபேரை வச்சி ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதையும் நினச்சு பார்க்கணும் இது தெரியாமல் இங்க இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் வேற பழைய பல்லவிய பாடிக்கொண்டு  எங்களை (என்னை) ஏதோ தேச விரோத சக்தி போல பார்க்கிறார்கள் ஜாதார்த்தத்தை சொன்னால் 

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் எண்டதும்தான் நினைவுவருகுது

பூநகரியில் எண்பதுகளுக்கு முன்பு அந்த இடத்தை வெட்டுக்காடு என அழைப்பார்கள் அது எங்கினைக்க எண்டால் சங்குப்பிட்டிப்பாலம் கழிஞ்சு கொஞ்சத்தூரம் மன்னார்பக்கம் போனால் வரும் உள்ளகப் பிரதேசம் யாழ்ப்பாணத்தில இருந்துபோனால் வலதுபக்கம் உள்வாங்கிய பிரதேசம். 

பின்னாளி இந்த இடத்தைத்தான் இராணுவம் ஆக்கிரமித்திருந்தது அதன் பின் ஒப்பிரேசன் தவளைப்பாச்சலில் தமிழர் கைக்குவந்தது. பின்னாளில் அங்குபோனவர்கள் கூறிய விபரத்தின்படி நீச்சல்குளமும் இருந்தது.

அதப்பிரதேசத்தில் பிளாக்கர் தோட்டம் எனும் பெயரில் கிட்டத்தட்ட நாநூறு ஏக்கர் காணி அது யாருக்குச் சொந்தமெண்டால் பலாலிவீதியிலிருந்து ஆஸ்பத்திரியடி வேம்படி நோக்கிப்போகும்போது வரும் ரெயில்வேக் குரோசிங்குக்கு அடுதத வலது பக்கம் வரும் வீட்டில் டொக்ரர் பிளாக் தோல் வியாதிகளுக்கான வைத்திய நிபுணர் என ஒருத்தர் நான் சின்ன வயதில் கண்ட அந்த பிளாகின் சொந்தக்காரரது சொந்தமானதுதான் அந்தத் தென்னந்தோட்டம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு அந்தத் தோட்டத்தை விற்பதாகக் கேள்விப்பட்டு நான் யாழில்கூட இதுபற்றி எழுதியிருந்தேன் விசுகர்கூட எல்லாரும் சேர்ந்து வாங்கி அத்தோட்டத்தைப் பராமரிக்கலாம் என கூறியது நினைவிருக்கு.

அத்தோட்டத்தைக் கொழும்பில் வசிக்கும் ஒரு கொக்குவிலைச் சேர்ந்தவர் வாங்கி வடக்கின் வசந்தம் திட்டத்தின்மூலமும் தென்னை அபிவிருத்திச் சபையின் கடன் திட்டத்தின்மூலமும் பிடிக்கிற ஆதளைபிடித்து இப்போ திருத்தி பிள்ளைகளாக வைத்த தென்னை இப்போ காய்க்க வெளிக்கிட்டுது போன முற நான் போகும்போது அங்கு போயிருந்தேன் இளநிகூடப் பறித்துக்குடித்திருந்தேன்.

பனை ராச பயிர் தென்னை தேவ பயிர்

ஆடிப்பிடுங்கள் என ஒரு தேங்காய் பறிக்கும் முறைவரும் அப்போது பணம்தான்.

நான் எதற்காகச் சொல்லுறன் எண்டால் இப்போதும் இளவாலைப் பகுதியில் கீரிமலை வீதியில் இருநூற்று ஐம்பது பரப்பு விவசாயப்பண்ணை ஆறு குளாய்க்கிணறு தென்ன வாழை மா பலா தாரா ஆடு மாடு காடை இவைகளுடன் விற்பனைக்கு இருக்கு என அறிந்தேன் ஆனால் ஒன்று பங்கு அது இது எனப்போகாமல் தற்துணிவுடன் யாராவது வாங்கி முதலீடுசெய்தால் செழிப்புத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் சந்தோசம் உங்களுக்கு வரலாம் எனென்றால் கொஞ்சம் நகர்த்துங்கள் முகாமை என்று சொன்னாலே 10 அடி மேலதிகமாக பிடிக்கிறார்கள் 

ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ அல்லது வேறு ஏதாவது செய்தாலோ என்ன நடக்கும் என்பத ஊகித்துக்கொள்ளுங்கள் அல்லது வெளிநாட்டில் நாலுபேரை வச்சி ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதையும் நினச்சு பார்க்கணும் இது தெரியாமல் இங்க இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் வேற பழைய பல்லவிய பாடிக்கொண்டு  எங்களை (என்னை) ஏதோ தேச விரோத சக்தி போல பார்க்கிறார்கள் ஜாதார்த்தத்தை சொன்னால் 

அதைத்தான் சொல்கிறோம். உங்களால் வாய் திறக்க முடியாது. சிலுவையை நாம் சுமக்கின்றோம்.ஆதரவாய் மட்டும் இருங்கள் என.....
இல்லை நாங்கள் தான் சுமப்போம் என்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

நாங்கள் எங்கள் பிரச்சனையை நாமே........என்பவர்கள்  புலம்பெயர் தேசங்களுக்கு வந்து வீரவார்த்தைகள் பேசும் போதுதான்   ஏன் இவர்கள் புலம்பெயர் மக்களை மடையர்களாக்குகின்றார்கள் என்ற கேள்வி வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ அல்லது வேறு ஏதாவது செய்தாலோ என்ன நடக்கும் என்பத ஊகித்துக்கொள்ளுங்கள் அல்லது வெளிநாட்டில் நாலுபேரை வச்சி ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதையும் நினச்சு பார்க்கணும்

மொத்தத்தில் நாங்கள் அவனை  சார்ந்து இருந்து உதவினாலும்  சாதிக்க முடியாது, எதிர்த்து எழுந்தாலும் முடியாது. அடிமையாய் மடிவதைவிட, அடிபட்டு சாவது மேல். ஊர்ந்து போகும்  எறும்பு கூட அதைத்தான் நமக்கு சொல்லிக்கொண்டு ஊர்ந்து செல்லுது.  நமக்குத்தான் அது புரியவில்லை. சும்மா இருந்து மடிவதை விட பிறரின் உதவியோடு முயற்சிக்கலாம். நாம் புலம்பெயர்ந்தோரை குறை கூறி நம்மை நாமே தனிமைப்படுத்தும் போது, எதிரிக்கு நாமே சுலபமான வழியை சொல்லிக்கொடுக்கிறோம். அதையே சர்வதேசத்திலும் எதிரியும்,எதிரி சார்ந்தோரும் சொல்லிச் சொல்லி தம் அக்கிரமங்களை தொடர சாதகமாக்குகிறார்கள். புலம்பெயர்ந்தோரே நாட்டில் பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்கிறார்கள் நம்ம அரசியல்வாதிகள், பின் ஏன் வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள்? வெளிநாட்டு அரசியல் தலைவர்களோடு ஆலோசனை நடத்தவா அங்கு போகிறார்கள்? அரசும் புலம்பெயர்ந்தோரை முதலிட ஏன் அழைக்கவேண்டும்? எல்லாம் பிரித்தாளும், தனிமைப்படுத்தி தவிச்ச முயல் அடிக்கும்  தந்திரமே.  ஐம்பத்தி எட்டாம், எழுபதாம் ஆண்டுகளில் ஏற்பட்டஇனக்கலவரங்களும்  புலம்பெயர்ந்தவர்களாலா ஏற்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 05:53, satan said:

இதுவரை புலம்பெயர்ந்தோர் செய்தது என்ன ??  ஏதாவது மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் , முதலீடுகள் , செய்தது என்ன ஒன்று இல்லை ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம் பல நாடுகளை முதலிட சொல்கிறது இலங்கை அரசு அதில் புலம்பெயர்ந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கலாம் ( வேலைவாய்ப்பு ) அரசுக்கு வருமானம் இதைதான் அரசு யோசிக்கிறது . ஆனால் புலத்தமிழர்கள் இலங்கையில் முதலிட மாட்டார்கள் முதலிட போவதுமில்லை ஆனால்  இலங்கையில் முதலிட முடியாது பாதுகாப்புமில்லை என்பார்கள் 

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

இப்படி சொல்லும் நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்து அரசை எதிர்த்து போராட  முடியாது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடியாது சொல்லுங்கள் பார்ப்பம் ஆக இருக்கும் இடத்தில் இருந்து அல்வா மட்டும்கொடுப்பம்  சும்மா போங்க சார் பழைய புராணத்தைப் பாடமல் 

  • கருத்துக்கள உறவுகள்

121647110_1002199776964506_8090553283275803383_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=RdcCpEzWBIIAX_8NRRm&_nc_ht=scontent-frt3-2.xx&tp=7&oh=26aa5576f2fb8e93a73806c7250bf162&oe=5FAA5C52

121585750_1002199790297838_8408180181593913909_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=7YJGQp66c_8AX_lyjdH&_nc_ht=scontent-frx5-1.xx&tp=6&oh=951d7108b274807220c6a3f6d17d655c&oe=5FAD608B

தேங்காயை... அளந்து பாத்துத்தான், காசு குடுப்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரி நீக்கம்..! ரின் மீன் 200 ரூபாய், சீனி 85 ரூபாய் விலைகளையும் அறிவித்தது ஜனாதிபதி செயலகம்..

Ueinw87381hwdw.jpg

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலமை மற்றும் மக்களின் வாழ்க்கை செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பருப்பு, பொிய ரின் மீன், பொிய வெங்காயம், சீனி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. 

இதன்படி பொிய  ரின் மீன் 200 ரூபாய்க்கும், பொிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், சீனி ஒரு கிலோ 85 ரூபாய்க்கும் மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் குறித்த அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கலாக 500 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையில் பொருட்கள் வாங்கும்போது

1 கிலோ பருப்பு 150 ரூபாய்க்கும் வாங்க ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 
https://jaffnazone.com/news/20974

  • கருத்துக்கள உறவுகள்

அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் முறைப்பாடு செய்யலாம்; அரசாங்க அதிபர்!

Screenshot-2020-10-14-13-08-13-788-com-a 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்றன.எனினும் இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.எனவே அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் அதிக விலையில் விற்க பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தொலைபேசி இலக்கமான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவலைத் தர முடியும்.

பொதுமக்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை எடுப்போம்.எனவே பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://aruvi.com/article/tam/2020/10/14/17921/

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 11:23, satan said:

ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ அல்லது வேறு ஏதாவது செய்தாலோ என்ன நடக்கும் என்பத ஊகித்துக்கொள்ளுங்கள் அல்லது வெளிநாட்டில் நாலுபேரை வச்சி ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதையும் நினச்சு பார்க்கணும்

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்து அரசை எதிர்த்து போராட  முடியாது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடியாது சொல்லுங்கள் பார்ப்பம்

இறக்கும் நிலையில் இருந்த பெற்றோரை இறுதியாய்  பார்க்க ஆசையாய் வந்தவர்களை சிறையிலடைத்ததும், குறித்த நாட்டு தூதரகங்கள் தலையிட்டு விடுவித்ததும் நீங்கள் அறியாமலிருக்கலாம், உதாரணத்துக்கு நீங்களும் தெரிந்த ஒன்று குமார் குணரட்ணம். போராளிகள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இப்படியான முதல்  பதிவை போட்டிருக்க மாட்டீர்கள் நாட்டில் என்ன அசம்பாவிதம் நடந்தாலும் கேட்டுக்கேள்வியில்லாமல் அடைக்கப்படுகிறார்கள். எந்நேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். தேவையேற்படும்போது புலிகளை மீள உருவாக்குகிறார்கள் என குற்றம் சுமத்துகிறார்கள். விடுதலைப் போர் நிறைவுற்றபின்  தன்காணியைப் பார்க்க வந்தவர் உயிரோடு திரும்பவில்லை. நீங்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப இருவேறு கதை கூறுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அவர் கட்சி மாறிவிட்டார் என்பது தெரியவில்லையா? பழைய புராணம் என்று எமது அவலங்களைக் கூறும்போதே அவரின் இன்றைய நிலைப்பாடு தெரிந்திருக்கவேண்டாமோ? அவர் ஆதரிக்கும் துரோகிகளை நியாயப்படுத்தும் ஒரே வழி அரசை ஆதரிப்பதுதான். ஆகவே அதைச் செய்கிறார். இன்னும் சிறிதுகாலம் இருந்துபாருங்கள், இலங்கையில் தமிழருக்கென்று பிரச்சினையில்லை, இருந்ததெல்லாம் புலிப்பயங்கரவாதிகளின் பிரச்சினைதான், அதனையும் எமது தலைவர் மகிந்த அவர்கள்  தளபதி கருணாவைக் கொண்டு அழித்துவிட்டார், வாழ்த்துக்கள் கருணா அம்மான், வாழ்த்துக்கள் பிள்ளையான் என்று சொல்லாவிட்டால். 

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு சிலர் பயந்தமாதிரி படம் காட்டி எஜமானருக்கு எதிர்ப்பு கிளம்பாதபடி பார்த்துக்கொள்வார்கள், வேறு சிலர் பயமுறுத்தி எதிர்ப்பை தடுப்பார்கள், இன்னொரு சிலர் சலுகைகளை காட்டி அணிதிரட்டுவர், ஒருவகையினர் தேசியம் பேசி கருத்துக்களை வெளியிட்டு எல்லோரின் அபிமானத்தை பெற்றபின், நசுக்காக எஜமானுக்கு ஆதரவாக கருத்திடுவார்கள், நீங்கள் கவனியாமல் இருந்தால் பலமாக அதுதான் சரி என வாதிடுவார்கள். இல்லை எதிர்க்கருத்து இட்டீர்களென்றால் ஹி.... ஹி.... உங்களுக்கு பகிடி தெரியாதா? என்று கேள்வி கேட்டு, ஏதோ பெரிய நகைச்சுவை வெளியிட்டமாதிரி நழுவுவார்கள். இப்படி எத்தனையை கடந்து வந்துவிட்டோம் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 07:16, தனிக்காட்டு ராஜா said:

இதுவரை புலம்பெயர்ந்தோர் செய்தது என்ன ??  ஏதாவது மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் , முதலீடுகள் , செய்தது என்ன ஒன்று இல்லை ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம் பல நாடுகளை முதலிட சொல்கிறது இலங்கை அரசு அதில் புலம்பெயர்ந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கலாம் ( வேலைவாய்ப்பு ) அரசுக்கு வருமானம் இதைதான் அரசு யோசிக்கிறது . ஆனால் புலத்தமிழர்கள் இலங்கையில் முதலிட மாட்டார்கள் முதலிட போவதுமில்லை ஆனால்  இலங்கையில் முதலிட முடியாது பாதுகாப்புமில்லை என்பார்கள் 

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

இப்படி சொல்லும் நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்து அரசை எதிர்த்து போராட  முடியாது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடியாது சொல்லுங்கள் பார்ப்பம் ஆக இருக்கும் இடத்தில் இருந்து அல்வா மட்டும்கொடுப்பம்  சும்மா போங்க சார் பழைய புராணத்தைப் பாடமல் 

சாட்டையடி

  • கருத்துக்கள உறவுகள்

இனி தனியை புறக்கனிக்க வேணும்.தனி இனி நீங்கள் தனியதான்.😀

  • கருத்துக்கள உறவுகள்

அஹிம்சை, ஆர்ப்பாட்டம், ஆயுதம் எல்லாம் தோற்று நீதி மறுக்கப்பட்டு குரல்வளை நெரிக்கப்படட நிலையில், அனாதரவாய் உதவி வேண்டி தவிக்கும் எம்மைப் பார்த்து ஆர்ப்பாட்டம் செய்ய வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கும் தனியைப்பார்த்து, பரிதாபப்படுவதா? அல்லது ஏளனம் செய்வதா? என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது, அவருக்கு  தமிழர் ஏமாற்றப்பட்டதும் தெரியவில்லை, சிங்களவனின் தந்திரமும் புரியவில்லை. அவர் ஒரு பச்சைக் குழந்தை, அவரை விட்டு விடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.