Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேலம் கந்தம்பட்டியில் உள்ள வீட்டில் 74 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டி பெட்டியில் அவரது குடும்பம் 24 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள வீட்டில் 73 வயது முதியவர் பாலசுப்ரமணியம், அவரது சகோதரர் சரவணன், அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சரவணன், ஒரு குளிர் பெட்டியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி ஒரு பெட்டியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த வைத்த ஊழியர்கள், மறுதினம் அதை பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.

இந்த நிலையில், மறுதினம் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

இது குறித்து சரவணனின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, "அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்" என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய செல்பேசியிலேயே பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். "பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே" என்றும் அந்த குடும்பத்திடம் கூறிய ஊழியர்கள், அவர்களாகவே காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு அவசரஊர்தி வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், "பெரியவருக்கு உயிர் உள்ளது. ஐஸ் பெட்டியில் அவர் 24 மணி நேரம் உயிருடன் இருந்ததே ஆச்சரியமான விஷயம்" என்று கூறினர்.

பெரியவர்

பட மூலாதாரம், FB

காவல்துறை ஆணையாளர் விளக்கம்

அதிர்ச்சியடைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமாரிடம் பிபிசி கேட்டபோது, பாலசுப்ரமணியத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அலட்சியமாக முதியவரை கையாண்டது தொடர்பாகவும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 238, 336 ஆகியவற்றின் கீழ் உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவரது உடல்நிலை மோசமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் மீண்டும் அவரை வீட்டுக்கே அவரது குடும்பத்தினர் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை ஆணையர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்ரமணியத்தின் சகோதரர் சரவணன் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஆணையாளர் செந்தில் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

உடல் நலன் சரியில்லை என்ற காரணத்துக்காக 74 வயது முதியவரை ஐஸ் பெட்டியில் வைத்து அவரது உயிர் பிரிவதற்காக காத்திருந்த குடும்பத்தினரின் செயல் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த பெரியவர் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த காட்சிகளும், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்து, மனிதாபிமானமின்றி அந்த குடும்பத்தினர் செயல்பட்டுள்ளதாகக் கூறி தங்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முதியோர் பாதுகாப்பு சிறப்புத் திட்டம் என்ன சொல்கிறது?

வீட்டில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர், தங்களுக்கு உதவி தேவைப்படும் சூழல் எழுந்தால் அவர்களுக்கு உதவ சிறப்புத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் தனியாக இருக்கும் முதியோர்கள் மாரடைப்பு போன்ற நோயினால் தீடீரென்று பாதிக்கப்படும் போது உதவிக்கு ஆள் இல்லாமல் மடிந்து போகும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு காவல்துறையினரே வீடு தேடிச் சென்று உதவி செய்யும் ஒரு சிறப்புத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.

இதேபோல, செல்பேசியில் எண்-2 ஐ அழுத்தினால் அருகே உள்ள காவல் நிலைய தொலைபேசி ஒலிக்கும். உடனே தொலைபேசியில் பேசும் காவலர்களிடம் தங்களுக்கான உதவியை முதியோர் கேட்டுப் பெறலாம். தேவைப்பட்டால் வீட்டுக்கே அழைத்து தேவையான உதவிகளை பெறலாம். ஆபத்தான நேரத்தில் கூட செல்பேன். எண்.2 -ஐ அழுத்தி போலீசாரை உதவிக்கு கூப்பிடலாம். ஆனால், களத்தில் இந்த சேவைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.https://www.bbc.com/tamil/54539968

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேலத்தில் உயிருடன் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

சேலம் கந்தம்பட்டியில் உள்ள வீட்டில் 74 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டி பெட்டியில் அவரது குடும்பம் அடைத்து வைக்கப்படிருப்பது குறித்து தெரியவந்த சூரமங்கலம் காவல்துறையினர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

முதியவருக்கு நேற்று மாலை உடல்நிலை பாதிப்பு தீவிரமாகி வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், "சிகிச்சைக்காக முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மயக்கநிலையில் இருந்தார். அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், சிடி ஸ்கேன் பரிசோதனையில் வலிப்பு நோய் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அவரின் ரத்த பரிசோதனையிலும் எந்த பாதிப்புகளும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், நீண்ட காலமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை நேற்று மாலை மோசமடைந்தது. வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தோம், இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். எத்தனை மணி நேரம் அவர் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்த தெளிவான தகவல்களை பெறமுடியவில்லை," என தெரிவித்தார்.

என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள வீட்டில் 74 வயது முதியவர் பாலசுப்ரமணியம், அவரது சகோதரர் சரவணன், அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சரவணன், ஒரு குளிர் பெட்டியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி ஒரு பெட்டியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த வைத்த ஊழியர்கள், மறுதினம் அதை பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.

குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர்

பட மூலாதாரம், Facebook

இந்த நிலையில், மறுதினம் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

இது குறித்து சரவணனின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, "அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்" என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய செல்பேசியிலேயே பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். "பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே" என்றும் அந்த குடும்பத்திடம் கூறிய ஊழியர்கள், அவர்களாகவே காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமாரிடம் பிபிசி கேட்டபோது, "பாலசுப்ரமணியத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அலட்சியமாக முதியவரை கையாண்டது தொடர்பாகவும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 287, 336 ஆகியவற்றின் கீழ் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பாலசுப்ரமணியம் உயிரிழந்ததையடுத்து சந்தேகத்திற்குரிய மரணம் என்ற அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 174 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

முதியவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தபின்னர், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் முதியவர் மீட்கப்பட்ட தினத்தன்று பேசிய ஆணையர் செந்தில் குமார் , "பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் இறந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் அந்த முதியவரை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து ஐஸ் பெட்டியில் வைக்க குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்." என தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/india-54565103

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் நாட்டில் நடப்பது வழக்கம். முழு இந்தியாவிலும் நடக்கிறதோ தெரியவில்லை. 

அதாவது முதியவர்களையோ, அல்லது நோய்வாய் பட்டு, விபத்து போன்ற காரணங்களால் படுத்த படுக்கையாகவோ இருப்பவர்களை, இப்படியாக, அதாவது இயற்கையான மரணம் போல தோற்றம் ஏற்படுத்தி, கொலை  செய்வது.

முழுக் குடும்பமும் இதில் ஈடுபடுவதால், போலீஸ் இற்கு ஒரு சாட்சிகளும் இல்லை, வெளியே தெரிய வந்தாலும்.

இதை பற்றி ஓர் படமும் அண்மையில் வெளிவந்தது (வாட்ச் மன் ஆக இருப்பவர் விபத்தினால் படுத்த படுக்கை ஆகி மகனும், அவர் மனைவியும் சேர்ந்து கொலை செய்ய, அவர் முன்பு வாழ்ந்த சகோதரியின் குடும்பம் அதை வெளி கொண்டு வந்து, போலீஸ் மூலமாக நீதி தேடுவது).

இப்படியான கொலைக்கு, ஓர் பெயரும் உண்டு , மறந்து விட்டது.    

14 minutes ago, பிழம்பு said:

"பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் இறந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் அந்த முதியவரை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து ஐஸ் பெட்டியில் வைக்க குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்." என தெரிவித்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இது தமிழ் நாட்டில் நடப்பது வழக்கம். முழு இந்தியாவிலும் நடக்கிறதோ தெரியவில்லை. 

அதாவது முதியவர்களையோ, அல்லது நோய்வாய் பட்டு, விபத்து போன்ற காரணங்களால் படுத்த படுக்கையாகவோ இருப்பவர்களை, இப்படியாக, அதாவது இயற்கையான மரணம் போல தோற்றம் ஏற்படுத்தி, கொலை  செய்வது.

முழுக் குடும்பமும் இதில் ஈடுபடுவதால், போலீஸ் இற்கு ஒரு சாட்சிகளும் இல்லை, வெளியே தெரிய வந்தாலும்.

இதை பற்றி ஓர் படமும் அண்மையில் வெளிவந்தது (வாட்ச் மன் ஆக இருப்பவர் விபத்தினால் படுத்த படுக்கை ஆகி மகனும், அவர் மனைவியும் சேர்ந்து கொலை செய்ய, அவர் முன்பு வாழ்ந்த சகோதரியின் குடும்பம் அதை வெளி கொண்டு வந்து, போலீஸ் மூலமாக நீதி தேடுவது).

இப்படியான கொலைக்கு, ஓர் பெயரும் உண்டு , மறந்து விட்டது.    

பாரம் படம்,தலைக்குத்து கொலைக்கு பெயர்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆம், இதுவும் இன்னொரு படம் பார்த்துளேன். 

ஆனால் , நகைச்சுவை உடன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர்

வீட்டைப்  பார்க்க... வசதியான குடும்பம் போலுள்ளது...
அப்படியிருந்தும், தனது முதிய  சகோதரரை  கொல்லுமளவிற்கு,
இப்படியான எண்ணம் ஏன் வந்தது?

அதுகும்... ஒரு குடும்பமே சேர்ந்து,  செய்த  இந்தச் செயலை மன்னிக்கவே முடியாது.  😡

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

பெரியவர்

வீட்டைப்  பார்க்க... வசதியான குடும்பம் போலுள்ளது...
அப்படியிருந்தும், தனது முதிய  சகோதரரை  கொல்லுமளவிற்கு,
இப்படியான எண்ணம் ஏன் வந்தது?

அதுகும்... ஒரு குடும்பமே சேர்ந்து,  செய்த  இந்தச் செயலை மன்னிக்கவே முடியாது.  😡

சிறியர் ஓடுகிறவரைதான் வாழ்க்கை, ஓய்ந்துவிட்டால் அதுவே ஒரு சுமைதான்......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

சிறியர் ஓடுகிறவரைதான் வாழ்க்கை, ஓய்ந்துவிட்டால் அதுவே ஒரு சுமைதான்......!  🤔

சில வேலை யோசிப்பதுண்டு, புலிகள் போல சயனைடு (அல்லது அததற்கு ஈடான) ஏதாவது வைத்து இருக்க வேண்டும் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, suvy said:

சிறியர் ஓடுகிறவரைதான் வாழ்க்கை, ஓய்ந்துவிட்டால் அதுவே ஒரு சுமைதான்......!  🤔

அந்த பயம் எனக்கு நெடுகலும் இருக்கு.

கைகாலும் மூளையும் ஒழுங்காய் இருக்கும் வரை உயிரோடை இருந்தால் போதும் என்ரை சிவனே எண்டு அடிக்கடி கும்பிடுவது :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

சில வேலை யோசிப்பதுண்டு, புலிகள் போல சயனைடு (அல்லது அததற்கு ஈடான) ஏதாவது வைத்து இருக்க வேண்டும் என்று.

என்ன கடைஞ்சா நீங்கள் இப்படி யோசிக்கிறீங்கள்.....நீங்கள் தனக்குத்தானே செய்ய நினைப்பதைத்தான் அவரின் குடும்பத்தினர் செய்கின்றனர்....அப்ப அது சரியா.......? 

யாரும் சாக நினைத்தாலும் சாக முடியாது, சா வந்துவிட்டால்  அதிலிருந்து தப்பவும் முடியாது.....சமீபத்தில் ரதிகூட ஒரு வீடியோ இணைத்திருந்தார். சாவில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர்கள் என்று.....இந்த முதியவர் கூட ஐஸ் பெட்டியில் வைத்தும் நெடுநேரம் உயிருடன் இருந்து வெளியே வந்திருக்கிறார்........ஆனால் வீட்டுக்குள்ளே குளியலறையில் வழுக்கிவிழுந்து இறப்பவர்கள் அதிகம்.....!

7 minutes ago, குமாரசாமி said:

அந்த பயம் எனக்கு நெடுகலும் இருக்கு.

கைகாலும் மூளையும் ஒழுங்காய் இருக்கும் வரை உயிரோடை இருந்தால் போதும் என்ரை சிவனே எண்டு அடிக்கடி கும்பிடுவது :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

என்ன கடைஞ்சா நீங்கள் இப்படி யோசிக்கிறீங்கள்.....நீங்கள் தனக்குத்தானே செய்ய நினைப்பதைத்தான் அவரின் குடும்பத்தினர் செய்கின்றனர்....அப்ப அது சரியா.......? 

நான் விரும்பி ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதும்.

அவர்கள் செய்வது தங்களின் வாழ்க்கையில் பொறுப்பை வேண்டா வெறுப்பாக அகற்றுவதத்திற்காக; இற ப்பவர் இன்னமும் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நான் விரும்பி ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதும்.

அவர்கள் செய்வது தங்களின் வாழ்க்கையில் பொறுப்பை வேண்டா வெறுப்பாக அகற்றுவதத்திற்காக; இற ப்பவர் இன்னமும் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போதும்.

4 hours ago, Kadancha said:

சில வேலை யோசிப்பதுண்டு, புலிகள் போல சயனைடு (அல்லது அததற்கு ஈடான) ஏதாவது வைத்து இருக்க வேண்டும் என்று.

உங்களை போலவே எனது எண்ண ஓட்டமும். 

என்னிடம் கைவசம் சில ஐடியாக்கள் உண்டு🤣. ஆனால் இங்கே எழுதினால் பிரச்ச்சனை ஆகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

என்னிடம் கைவசம் சில ஐடியாக்கள் உண்டு🤣. ஆனால் இங்கே எழுதினால் பிரச்ச்சனை ஆகி விடும்.

ஆம், அந்த நேரத்தில் கை, கால்  வழங்க கூடியதாக இருக்க வேண்டும், வாய் திறக்க கூடியதாக இருக்க வேண்டும் , அட யோசிக்க கூடிய நிலையில் கூட இருக்க வேண்டும் என்று பலவாறு, ஓய்வாக இருந்து சிந்தித்து, இதை வேறு ஒரு நிறுவனத்துடன் கருணை கொள்ளை உடன் படிக்காய் போட்டு வைத்திருப்பம் என்கிறால், வாயைத் திறந்து ஆம் என்று சொல்லக் கொடிய நிலையில் இருக்க வேண்டும்.

சரி, மூளையின் வரும் சிக்கனல்களை வைத்து வேறு யாரும் முடிவு எடுக்கலாம் என்றாலும்,அது சட்ட அடிப்படியில் அங்கீகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

.....

என்று இப்படி பல சிந்தனைகள்.      

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Kadancha said:

நான் விரும்பி ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதும்.

அவர்கள் செய்வது தங்களின் வாழ்க்கையில் பொறுப்பை வேண்டா வெறுப்பாக அகற்றுவதத்திற்காக; இற ப்பவர் இன்னமும் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போதும்.

கருணைக்கொலை சில நாடுகளில் சட்டபூர்வமாக இருக்கின்றது என நினைக்கின்றேன். 
ஜெர்மனியில் நூற்றுக்கு மேற்பட்ட இரகசிய கருணைக்கொலை செய்த தாதியர் ஒருவர் கம்பி எண்ணுகிறார். இருந்தாலும் ஐஞ்சை பத்தை கையுக்கை வைச்சால்  எல்லாம் சுபமாய் முடிக்கலாமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கருணைக்கொலை சில நாடுகளில் சட்டபூர்வமாக இருக்கின்றது என நினைக்கின்றேன்.

ஆம், இருக்கிறது. 

பல நாடுகளில், கொலையை குறிப்பிட்ட நபர் விரும் ஏற்கிறார் என்று நீதி மன்றம் அந்த நேரத்தில்  அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

உயிலில் எழுதி வைத்தாலும், நீதி மன்றம் அதை ஏற்காது. 

ஏனெனில், சட்டத்தில் சாதாரண உணர்ச்சிகள் (அதாவது ஐம்புலன்களை கொண்டு) மூலமாக அறிந்ததே, வழங்குவதே சாட்சி ஆகும்.

 இப்பொது இந்த electronic, cyber space என்பதன் தாக்கம் வாழ்க்கையில்  தவிர்க்க முடியதால், அவற்றுக்காக மட்டும் சட்டங்கள் ஆக்கப்பட்டு, மனித உயிர் தொடர்பு படத விடயங்களில், அந்த சாட்சிகளை நீதி மன்றங்கள் பரிசீலித்து (witness admissibility)  ஏற்றுக்கொள்கின்றன. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Kadancha said:

பெரும்பாலும் மாற்ற முடியாத புற்று நோய்களுக்கு மட்டுமே கருணைக்கொலை சட்டம் அனுமதிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பளையா பிறந்தால் சாகுமட்டும் உழைக்கணும் படுக்கையில் என்று விழுகிறமோ அன்று மட்டும் கொஞ்சம் விசேடமாக சாப்பாடுகள் கேட்டு  வாங்கி சாப்பிட்டு விட்டு சிறு புன்னகையுடன்  அடுத்தநாள் விடியக்கூடாது நமக்கு மட்டும் என்ற கொள்கை .

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 14:43, Kadancha said:

இது தமிழ் நாட்டில் நடப்பது வழக்கம். முழு இந்தியாவிலும் நடக்கிறதோ தெரியவில்லை. 

அதாவது முதியவர்களையோ, அல்லது நோய்வாய் பட்டு, விபத்து போன்ற காரணங்களால் படுத்த படுக்கையாகவோ இருப்பவர்களை, இப்படியாக, அதாவது இயற்கையான மரணம் போல தோற்றம் ஏற்படுத்தி, கொலை  செய்வது.

இப்படியான கொலைக்கு, ஓர் பெயரும் உண்டு , மறந்து விட்டது.    

தலைக்கு ஊத்துவது என்று பெயர். இந்த தலைப்பில் நடக்கும் கொலைகள் குறித்து, தமிழக வார இதழ் ஒன்றில் கட்டுரை வந்தது.

வயதானவர்களை, மருத்துவ செலவு கட்டுப்படியாகாத குடும்பங்களில் இது சாதாரணமாக நடக்கின்றது என்று எழுதினார்கள். அவரை குளிப்பாட்டி, நல்ல உணவு கொடுத்து, அத்துடன் விஷம் கலந்த பாயாசத்தினை கொடுத்து கதையினை முடிப்பது.

பாயசம் கொடுக்கும் முன்னர், சாராயம் கொடுத்து விடுவார்கள் என்றும் எழுதி இருந்தார்கள்.

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Nathamuni said:

தலைக்கு ஊத்துவது என்று பெயர். இந்த தலைப்பில் நடக்கும் கொலைகள் குறித்து, தமிழக வார இதழ் ஒன்றில் கட்டுரை வந்தது.

வயதானவர்களை, மருத்துவ செலவு கட்டுப்படியாகாத குடும்பங்களில் இது சாதாரணமாக நடக்கின்றது என்று எழுதினார்கள். அவரை குளிப்பாட்டி, நல்ல உணவு கொடுத்து, அத்துடன் விஷம் கலந்த பாயாசத்தினை கொடுத்து கதையினை முடிப்பது.

பாயசம் கொடுக்கும் முன்னர், சாராயம் கொடுத்து விடுவார்கள் என்றும் எழுதி இருந்தார்கள்.

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

இதென்ன கோதாரி புதுக்கதையாய் கிடக்கு....நான் இப்பிடியொண்டை கேள்விப்படவேயில்லை..😲

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரி புதுக்கதையாய் கிடக்கு....நான் இப்பிடியொண்டை கேள்விப்படவேயில்லை..😲

இந்த வயதானவரின் கதையினை நம்ம முடியவில்லை.... இப்படியும் செய்வார்களா என்று சொல்கிறோம்.

ஆனால்.... .. "கிடப்பது கிடக்கட்டும்... கிழவியை தூக்கி பரணில் வை" என்பது ஒரு முதுமொழி.

இறக்க போகும் வயதான மனிதர்களை தூக்கி பரணில் வைத்து விட்டு, அவ்வப்போது இறந்து விட்டார்களா என்று செக் பண்ணிக்கொள்வது.

ஆக... இது பழைய காலத்திலேயே இருந்திருக்கிறது.

https://ta.wikipedia.org/wiki/தலைக்கு_ஊத்தல்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 ஊரில் நானும் ஒரு விடயம் கேள்விப்பட்டு   இருக்கிறேன்.  மிக வயது முதிர்ந்த ஒருவர் மரணத்துக்கு  காத்திருக்கும் நிலை வரும் போது  செம்புக்   காசை தாய்ப்பாலில் உரைத்து அந்த பாலை வாய்க்குள்  ஊற்றுவார்களாம்  நான் நினைக்கிறன் செம்பின் (செழும்பு )  நஞ்சு என்று . 

A. Palliative care is whole-person care that relieves symptoms of a disease or disorder, whether or not it can be cured. Hospice is a specific type of palliative care for people who likely have 6 months or less to live. In other words, hospice care is always palliative, but not all palliative care is hospice care.

 என்று இருக்கிறது .இறக்கும்     நிலையில் இருக்கும் ஒருவரை அப்படியே நீராகரம் 
மட்டும் கொடுத்து (திண்ம உணவு சுவாசத்துக்கு பிரச்சனையாகலாம்   ) சுத்தமாக வைத்து இருப்பார்கள் நோயாளியொரு மயக்க சோர்வு நிலையிலிருப்பார் .ஆறு மாதங்களுக்குள் அவர் பரகதியடைந்து விடுவார். 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

நீங்கள் சொல்லுவது புரிகிறது. அநேகமாக அவர்கலின் வருத்தத்தை சாட்டி, உண்மையான கொலையை இயற்கயான இறப்பாக காட்டுவது.

அப்படியானால், இங்கு மேற்கில் எம்மவரிடையே, இந்த autism பாதிப்பு மிகவும் குறைவாக தானே இருக்கிறது. இது எனது தனிப்பட்ட அவதானம் மாத்திரமே. 

ஆனாலும், வெள்ளையரில் (இப்பொது) வருவதற்கு, அவர்களின் மனதை கட்டுப்  படுத்த முடியாத வாழ்க்கை முறை என்றே கருத வேண்டி இருக்கிறது.

அதாவது, மகப்பேறு காலத்தில், தமக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்வது, சிசுவின் நலம் என்று கூட பாராமல்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிலாமதி said:

A. Palliative care is whole-person care that relieves symptoms of a disease or disorder, whether or not it can be cured. Hospice is a specific type of palliative care for people who likely have 6 months or less to live. In other words, hospice care is always palliative, but not all palliative care is hospice care.

 என்று இருக்கிறது .இறக்கும்     நிலையில் இருக்கும் ஒருவரை அப்படியே நீராகரம் 
மட்டும் கொடுத்து (திண்ம உணவு சுவாசத்துக்கு பிரச்சனையாகலாம்   ) சுத்தமாக வைத்து இருப்பார்கள் நோயாளியொரு மயக்க சோர்வு நிலையிலிருப்பார் .ஆறு மாதங்களுக்குள் அவர் பரகதியடைந்து விடுவார். 

மேற்கில் இதை தான் செய்வார்கள். நேரடி அனுபவமும் இருக்கிறது.

கேட்டால், நோயாளி அனுபவிக்காமல், peace ஆக வைத்து இருக்கிறோம் என்பார்கள்.

அவர் உணவை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே கொடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

ஆம், அந்த நேரத்தில் கை, கால்  வழங்க கூடியதாக இருக்க வேண்டும், வாய் திறக்க கூடியதாக இருக்க வேண்டும் , அட யோசிக்க கூடிய நிலையில் கூட இருக்க வேண்டும் என்று பலவாறு, ஓய்வாக இருந்து சிந்தித்து, இதை வேறு ஒரு நிறுவனத்துடன் கருணை கொள்ளை உடன் படிக்காய் போட்டு வைத்திருப்பம் என்கிறால், வாயைத் திறந்து ஆம் என்று சொல்லக் கொடிய நிலையில் இருக்க வேண்டும்.

சரி, மூளையின் வரும் சிக்கனல்களை வைத்து வேறு யாரும் முடிவு எடுக்கலாம் என்றாலும்,அது சட்ட அடிப்படியில் அங்கீகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

.....

என்று இப்படி பல சிந்தனைகள்.      

இங்கே யூகேயில் இருந்தால் விசயம் சரிவராது. ஆக முடியாமல் போனபின், வைத்தியர்கள் palliative care என்பதாக, நோவை, நினைவை மறக்கடித்து அனுப்பி வைப்பது மட்டுமே இங்கே சட்டபடி முடியும்.

அதுவரைக்கும் இருப்பது வேண்டாம் என்ற மனநிலையில் இருப்போர்க்கு வேறு வழியில்லை.

சுபிஸ்சலாந்து போகலாம். செய்வார்கள். இதற்கென ஒரு வைத்திய(?)சாலையும் உண்டு. ஆனால் உடலில் வலு உள்ளபோது சுவிசுக்கு போக வேண்டும். இல்லாமல் தனியே போக முடியாமல் யாரும் கூட்டி கொண்டு போய் விடுவதாக உடன்பட்டாலும், அவர்கள் மீது aiding and abetting suicide சட்டம் பாயும்.

ஆகவே ஒரு வயதுக்கு பின், நிலமை படு மோசமாக முதலே எஸ் ஆவதே ஒரே வழி🤣

அப்போ இதே தைரியம் இருக்குமா? யாருக்கு தெரியும்.

பிகு: spectrum disorders பற்றி நீங்கள் சொன்னதுடன் உடன் படுகிறேன். ஊரிலும் இப்படியான பிள்ளைகள் உள்ளார்கள். ஆனால் இந்த குறைபாடு மிக மோசமாக தெரிபவர்களை மட்டும் “வலசு” என ( மோசமாக) அடையாளப்படுத்தி விட்டு, அதிக பாதிப்பு இல்லாதவர்களை, அவன் “குழப்ப, அல்லது “பிரளி” அல்லது “விறுக்கன்” என கடந்து போய் விடுவோம்.

டிஸ்லெக்சியா நோயால் பாதிக்கப்பட்ட எத்தனை எம் கூட படித்தவர்களை எமக்கு தெரியும்? எவருமில்லை. அவர்களை “மொக்கு” என கடந்து வந்து விட்டோம்.

ஆனால் இப்போ நிலமை எவ்வளவோ பரவாயில்லை. நகர் புற பெற்றாருக்காவது இந்த விளக்கங்கள் இருக்கிறது.

மகப்பேற்று காலத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்பே கூட தாய் மது எடுப்பது பிள்ளைகளை பாதிப்பது உண்மை ஆனால் இது இப்படியான விழைவை தருமா என்பதை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. 

ஆனால் ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளை ஊரில் வகை தொகையாக கொல்வதாக நான் நினைக்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.