Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவித்தார் சந்திரசேகர்- விஜய் விசேட அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ.சி. அதிரடி | vijay  makkal iyakkam change to political party - S.A.Chandrasekar Interview–  News18 Tamil

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவித்தார் சந்திரசேகர்- விஜய் விசேட அறிக்கை

விஜய் மக்கள் இயக்கமானது ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாக மாற்றப்படுவதாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

அத்துடன், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் தந்தையின் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து நடிகர் விஜய் இன்று அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இன்று எனது தந்தை ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.

இந்நிலையில், அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லையென திட்டவட்டமாக எனது இரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

மேலும், என்னுடைய இரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சியில் பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.

மேலும், எனது பெயரையோ புகைப்படத்தையோ, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/விஜய்-மக்கள்-இயக்கத்தை-க/

 

Image may contain: 1 person, text that says '#BIGNEWS 05 NOV 2020 NEWS TAMIL BREAKING அரசியல் கட்சி: நடிகர் விஜய் மறுப்பு! "என் தந்தை ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; ரசிகர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம்!" நடிகர் விஜய் NEWS 7 FOLLOW US ON TACTV@ "TCCL NETWORK 147 056 207 SCV AAADHAR AKSHAYA 036 191 071 JAK VKDIGITAL 105 082 026 AMNe 109 TATA TAT Die 059 1546 783 SUN 051 NEWS TARIN AppStore'

  • கருத்துக்கள உறவுகள்

அவுரங்கசீப் - ஷாஜகான் கதைய விடவா ?

26 minutes ago, தமிழ் சிறி said:

எனது பெயரையோ புகைப்படத்தையோ, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

samayam-tamil.jpg ☺️ .. 😊

அரசியலில்  அப்பாவிற்கும் பிள்ளைக்கும் முட்டி கொள்ள போகிறது . .😢

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கட்சி: அப்பாவுடன் மோதும் விஜய்

spacer.png

 

அரசியல் கட்சி தொடர்பாக நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பான விண்ணப்பத்தில் கட்சியின் தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் விஜய்யின் தாயார் ஷோபா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். எனினும், அரசியல் கட்சி தனது சொந்த முயற்சி எனவும், விஜய்க்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

ஏற்கனவே நவம்பர் 2ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் அப்பாவின் ஆதரவாளர்களை நீக்கிய விஜய்என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “தன் மக்கள் இயக்கத்தில் அதிகம் தலையிடுகிறார், தனக்கென சில நிர்வாகிகளை வைத்துக் கொண்டு அவர்களை தன் இஷ்டத்துக்குச் செயல்பட வைக்கிறார் என்று அப்பா மீது விஜய்க்கு கோபம் இருந்தது. இந்த லாக்டெளனில்கூட அதிகமாக அப்பாவுடன் அவர் தொடர்புகொள்ளவில்லை. நலம் விசாரிப்பதோடு சரி. இப்போது பாஜக தொடர்பு பிரச்சினையால் அப்பா மீதான கோபம் எல்லாமே சேர்ந்துகொண்டுள்ளது.

இதன் விளைவாக, மக்கள் இயக்கத்தில் இருக்கும் தனது அப்பா எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர்களை அவர்கள் வகிக்கும் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்குமாறு மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டார். அவரும் அவ்வாறே செய்திருக்கிறார். இந்த நிகழ்வுகள் சந்திரசேகருக்கு அதிகமான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகர் ஆதரவாளர்களும், இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும் சந்திரசேகரைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் சந்திரசேகர், ‘அப்பா பிள்ளை உறவைப் பிரிச்சதே புதுச்சேரி புஸ்ஸி ஆனந்துதான். விஜய் அரசியலுக்கு வருவதற்குத் தடைபோடுவதும் ஆனந்துதான்’ என்று கூறியிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் இதுபற்றி அதிகமாக பேசப்பட, புஸ்ஸி ஆனந்தும் இதுபற்றியெல்லாம் விஜய்யிடம் கூறியுள்ளார்.

 

அதற்கு விஜய், ‘இதுக்காக நீங்க ஃபீல் பண்ணாதீங்க. அப்பாவோட தொடர்பில் இருப்பவர்கள் வேறு யார் யார்னு பாருங்க. அவர்களையும் நீக்கிவிடலாம். மேலும் நீக்கப்பட்டவர்கள் அப்பாவை வைத்து ஏதாவது நிகழ்ச்சி செய்ய ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க. அதைத் தடுக்கணும். அதனால் என் படத்தையோ, கொடியையோ நீக்கப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன் படுத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்னு ஒரு எச்சரிக்கை அறிக்கையை தயார் பண்ணுங்க’ என்பதுவரை சொல்லியிருக்கிறார் விஜய்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

spacer.png

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், “இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” ” எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் தன்னை கட்டுப்படுத்தாது என்ற நடிகர் விஜய், “எனது ரசிகர்கள், என் தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ அல்லது கட்சிப் பணியாற்றவோ வேண்டாம். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “என் பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார் விஜய்.

கட்சி விவகாரம் தொடர்பாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், மகன் விஜய்க்கும் நேரடியாக மோதல் உருவாகி இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.

 

 

https://minnambalam.com/politics/2020/11/05/40/vijay-political-party-sa-chandrasekar-explain

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரசேகர் பலவருடங்களுக்கு முன்பே போட்ட பிளான்.... இவ்வளவுகாலமும் அடக்கி வாசித்து கொண்டிருந்தவர்.....விஜய் ஒன்றும் விரல் சூப்புகின்ற பையனல்ல ...... இருவருக்கும் அரசியல் நெளிவு சுளிவு எல்லாம் நன்றாகத் தெரியும்.....மகனின் தொழிலுக்கோ சொத்துக்கோ சேதாரம் வரக்கூடாது, அதேசமயம் கட்சியும் பதிவு செய்யவேண்டும். மிகச்சரியாக காய் நகர்த்துகிறார்......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

சந்திரசேகர் பலவருடங்களுக்கு முன்பே போட்ட பிளான்.... இவ்வளவுகாலமும் அடக்கி வாசித்து கொண்டிருந்தவர்.....விஜய் ஒன்றும் விரல் சூப்புகின்ற பையனல்ல ...... இருவருக்கும் அரசியல் நெளிவு சுளிவு எல்லாம் நன்றாகத் தெரியும்.....மகனின் தொழிலுக்கோ சொத்துக்கோ சேதாரம் வரக்கூடாது, அதேசமயம் கட்சியும் பதிவு செய்யவேண்டும். மிகச்சரியாக காய் நகர்த்துகிறார்......!   🤔

இது கூர் பார்க்கும் வேலை

அப்புறம் ரத்தங்கள்  ஒட்டிக்கொண்டன என்று நன்றி வணக்கம்  போடுவார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்கும் சமயத்தில்.... எங்களது கட்சியின்  ஆதரவு  உங்களுத்தான் என்று,

பெரிய கட்சிகளுடன்... “டீல்” போட்டாலே, 500 கோடி, 1000 கோடி என்று சுளையாக... சம்பாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால முதல்வர் விஜைய் வாழ்க.😀

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- Vijay-கும் Vijay அப்பா SAC-கும் என்ன பிரச்சனை ? 

 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலம் போல் அப்பனும் மகனும் நினைக்கினம் .திமுக இனிமேல் தலையெடுக்க வழியில்லை அந்த கப்பில் கிடாய் வெட்டி விளையாட வருகினம் .

(திமுக வராது என்ற உண்மையை சொன்னால் சிலருக்கு கசக்கும் உண்மையை சொல்வதில் தப்பில்லை )

 

 

 

 

9

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் காய் நகர்த்தல் தான் இந்த விஜயின் கட்சி ஆரம்பம், விரைவில் தெரியும், நடிகைகளை பலரை உள் இழுத்தார்கள், இப்ப ரஜனி  விலகிவிட்டார், கிடைத்த துரும்பு விஜய், விஜய்க்கும் பாஜகவிற்கும் இடையில் பல பிரச்சனைகளிருந்திருக்கு, பேரரசை வைத்து இந்த பேரம் / அழுத்தம்  நடந்திருக்கலாம் ஒரு கட்சியை தொடங்கி தமக்கு ஆதரவு தர சொல்லி,

ராதிகா, மீர மிதுன், சரத்.... இனி தொடரும்

11 minutes ago, உடையார் said:

பாஜகவின் காய் நகர்த்தல் தான் இந்த விஜயின் கட்சி ஆரம்பம், விரைவில் தெரியும், நடிகைகளை பலரை உள் இழுத்தார்கள், 

ராதிகா, மீர மிதுன், சரத்.... இனி தொடரும்

ஸ்றீ ரெட்டி, கும்தாஜ், ஷகீலா ஆகியோர் கூட பா.ஜ.க வில் இணைகிறார்கள் என செய்தி வருகின்றது.

கனடிய சிட்டிசன் பாஜவில் சேர வழி ஏதும் இருந்தால் நல்லா இருக்கும்.

Edited by நிழலி
பெயர் குழப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

ஷ்ரேயா ஷெட்டி, கும்தாஜ், ஷகீலா ஆகியோர் கூட பா.ஜ.க வில் இணைகிறார்கள் என செய்தி வருகின்றது.

கனடிய சிட்டிசன் பாஜவில் சேர வழி ஏதும் இருந்தால் நல்லா இருக்கும்.

எதற்கும் கேட்டுவிட்டு சொல்கின்றேன்,

பாஜகவில் இணைந்து தான் சேவையாற்ற வேண்டுமென்றில்லை, வேறு வழிகள் இருக்கு😁

Edited by உடையார்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா... கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், 
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் நான் விலகிட்டேன் என்றார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/06194515/2039783/Vijay-mother-support-to-him.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார்.

 

5 minutes ago, உடையார் said:

விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் நான் விலகிட்டேன் என்றார்.

இருப்பது ஒரே மகன் . !முதல்வராக ஆக்கி பார்ப்பதில் தவறில்லை . அவர் ஒத்துக்கொள்ள வேனுமல்லொ.? 

சரி ஆரம்பித்து போட்டாகி விட்டது .. 

" அகில கிந்திய தளபதி விசய் மக்கள் இயக்கம் " 

"விசய்" என்பது வெற்றியை குறிக்கும் எனது மகனை அல்ல என்டு ஒரு அறிக்கை விட்டு இடத்தை காலி செய்யுங்களேன் .! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் நான் விலகிட்டேன் என்றார்.

 

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இருப்பது ஒரே மகன் . !முதல்வராக ஆக்கி பார்ப்பதில் தவறில்லை . அவர் ஒத்துக்கொள்ள வேனுமல்லொ.? 

கட்சி ஆரம்பித்து.... ஒரு நாள் கூட ஆகவில்லை.

அதற்குள் கட்சி... பிளவு பட்டதை  “கின்னஸ்” உலக சாதனை நிறுவனத்துக்கு சொல்லி விடுங்கோப்பா...  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

 

கட்சி ஆரம்பித்து.... ஒரு நாள் கூட ஆகவில்லை.

அதற்குள் கட்சி... பிளவு பட்டதை  “கின்னஸ்” உலக சாதனை நிறுவனத்துக்கு சொல்லி விடுங்கோப்பா...  😂

deepa-1547298219-1551782718.jpg

☺️..😊 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

deepa-1547298219-1551782718.jpg

☺️..😊 

அட... நம்ம, தீபாம்மாவும்... கின்னஸ் போட்டியில் இருக்கிறார்.  :grin:

இவர்களுக்கு... எதிரிகள், வீட்டுக்குள்ளேயே... இருக்கிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

deepa-1547298219-1551782718.jpg

☺️..😊 

தோழர் அரசியலில் நீங்கள் எங்கேயோ நிக்கிறீர்கள்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையத்தை நாடத் தயாராகும் விஜய்... சட்ட ஆலோசனையில் எஸ்.ஏ.சி!

விஜய்

விஜய்

``டெல்லி தேர்தல் கமிஷனிடம் விஜய் மனுக் கொடுக்க ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய். தனது பெயரை அனுமதியில்லாமல் எஸ்.ஏ.சி. பயன்படுத்தியதாக சொல்லப்போகிறார்'' என்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கடசியைப் பதிவு செய்தார். கட்சியின் புதிய தலைவராக திருச்சி பத்மநாபன், பொருளாளர் பதவியில் மனைவி ஷோபா ஆகியோரை நியமித்தார். இதுதொடர்பான தகவல் வெளியானதுமே, பொருளார் பதவியில் இருந்து விலகுவதாக ஷோபா அறிவித்தார்.

எஸ்.ஏ.சி
 
எஸ்.ஏ.சி

நவம்பர் 12-ம் தேதியன்று எஸ்.ஏ.சி-யின் புதிய கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பத்மநாபன் சமூக வலைதளங்களில் பேசிய பேச்சு, திடீர் திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. ``போலீஸ் மூலம் டார்ச்சர் அதிகமாகிவிட்டது. பத்து போலீஸார் என் வீட்டுக்கு வந்து தேடிவிட்டுப்போனார்கள். எந்த வழக்கும் என் மீது இல்லை. புஸ்ஸி ஆனந்த் தரும் டார்ச்சர்தான் என்று நினைக்கிறேன். எனது உயிருக்கோ, எனக்கோ ஏதாவது ஆனால் அதற்கு புஸ்ஸி ஆனந்த்தான் காரணம்'' என்று பேச, எஸ்.ஏ.சி தரப்பினர் ஏக டென்ஷனில் இருக்கிறார்கள்.

 
 

விஜய் அருகில் இருக்கும் மக்கள் இயக்க மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்தான் உள்ளடி பாலிடிக்ஸ் செய்வதாக எஸ்.ஏ.சி. வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். அவர் இயக்கிவரும் சினிமா படப்பிடிப்புகளைக் கவனிக்க சில நாள்கள் சென்றுவிட்டார். நவம்பர் 13-ம் தேதியன்று திரும்பி வருகிறார். படபிடிப்புகளுக்கு இடையே, அனைத்து இந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளரும், சினிமா டைரக்டருமான எம்.ஜி.ஆர். நம்பியிடம் போனில் ஆலோசனை நடத்தி வந்தார் எஸ்.ஏ.சி.

`எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ரசிகர்கள் அந்தக் கட்சியில் இணையக்கூடாது’ என்று விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தார். திருச்சி மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜய் சொல்லும் வழியில் செல்வதாக எஸ்.ஏ.சி-க்கு எதிராகத் தீர்மானம் போட்டனர். வேறு சில மாவட்டங்களும் இதே பாணியில் எஸ்.ஏ.சி-க்கு எதிராக தீர்மானம் போட ரெடியானநேரத்தில், விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்
 
விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்

ஏற்கெனவே, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட லெவலில் புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க லிஸ்ட் ரெடியாகி வைத்திருந்தார் புஸ்ஸி ஆனந்த். அந்த லிஸ்டை நவம்பர் 11-ம் தேதியன்று நடிகர் விஜய் அறிவித்தார். பல மாவட்டங்களுக்கு இளைஞர் அணித் தலைவர், தொண்டர் அணித் தலைவர், மாணவர் அணித் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு பிரமுகர்களை நியமித்துள்ளார். இந்த குழப்பமான நேரத்தில் விஜய்யின் இந்த நியமனம் எஸ்.ஏ.சி-க்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

தந்தையா, புஸ்ஸி ஆனந்தா என்கிற விவகாரத்தில் விஜய்யை பொறுத்தவரையில், புஸ்ஸு ஆனந்த்தை ஆதரிப்பதாக தெரிகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தை எஸ.ஏ.சி. விடுவதாக இல்லை.

நம்மிடம் எஸ்.ஏ.சி. தரப்பினர் கூறும்போது, ``புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் புஸ்ஸி ஆனந்த்தின் ஆதரவாளர்கள்தான் அதிகம் பதவி பெற்றிருக்கிறார்கள். எஸ்.ஏ.சி-யின் ஆதரவாளர்களைப் புறக்கணித்துள்ளனர். ஒரிரு நாளில் எஸ்.ஏ.சி. படபிடிப்பை முடித்து வர இருக்கிறார். அவர் வந்ததும், இதற்குத் தக்க பதிலடி தரப்படும். பத்மநாபன், பொருளாளர் ஷோபா இருவரையும் நீக்கிவிட்டு புதிய இருவரை நியமிக்க இருக்கிறார் எஸ்.ஏ.சி’’ என்கிறார்கள்.

விஜய் தரப்பினரிடம் கேட்டபோது, ``டெல்லி தேர்தல் கமிஷனிடம் விஜய் மனுக் கொடுக்க ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய். தனது பெயரை அனுமதியில்லாமல் எஸ்.ஏ.சி. பயன்படுத்தியதாக சொல்லப்போகிறார்'' என்கிறார்கள்.

விஜய் இப்படி செய்தால், தேர்தல் கமிஷன் தரப்பில் எஸ்.ஏ.சி-யிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிகிறது. அதற்குத் தகுந்த விளக்கத்தை சட்டப்படி கொடுக்க எஸ்.ஏ.சி தரப்பிலும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

https://www.vikatan.com/news/politics/vijay-vs-sac-politics-getting-new-turn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.